வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-29
146
அத்தியாயம் 29
ஹாஸ்பிட்டலுக்கு வந்த காவேரி என் மகன் எங்கே? அவனுக்கென்ன? பதறி வந்தார். பின்னே மற்றவர்களும் வந்தனர். துகிராவும், லலிதாவும் நேராக பிரதீப்பிடம் சென்றார்கள். ஆதேஷ் அப்பா ஜானுவிடம் வந்து பேச, அவள் அழுகையை கட்டுப்படுத்தி கண்ணீருடன் இருந்தாள். ஆதேஷ் மட்டும் தனியே இருந்தான். ஜானு பிரதீப்பை பார்க்க, துகிரா அவனது கையை கோர்த்து அமர்ந்திருந்தாள். அதை புரிந்து கொண்ட ஆதேஷ் தந்தை,
மருமகளே, அந்த பொண்ணு உன் அண்ணாவின் சரிபாதி. அவனுக்கு ஒன்று என்றால் அவளுக்கு கஷ்டமாக தானே இருக்கும். அதனால் தான் அண்ணாவும் அந்த பொண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். அந்த பொண்ணு எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கா..புரிஞ்சுக்கோடா என்று ஜானுவிடம் பேசினார்.
கண்கள் கலங்க ஏக்கத்துடன், இனி அண்ணாவுடன் பழைய மாதிரி பேச முடியாதா அங்கிள்? கேட்டாள். அவள் இவ்வளவு ஏங்குவாள் என்று அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
அப்படியில்லைடா. அவருக்கு நீ இல்லாம எப்படிடா? நீ அவரோட இரத்தம். உன்னை விட்டுற மாட்டார்டா.
அங்கிள் போதும். எதுவும் பேச வேண்டாம் என்று அவரது தோளில் சாய்ந்து கொண்டாள். ஜானுவை தேடிய துகிரா அவளை ஆதேஷ் அப்பாவுடன் பார்த்ததும், அவருடன் என்ன செய்கிறாள்? இவர் அடிபட்டிருக்க அங்கே என்ன செய்கிறாள்? சிந்தித்த வண்ணம் அவளை பார்த்து விட்டு, ஆதேஷை பார்த்தாள். அவன் மட்டும் தனியே இருப்பதை பார்த்து துகிரா பிரதீப்பை பார்த்தாள்.
மூவருக்கும் ஏதோ நடந்திருக்கோ? என்று லலிதாவின் கையை அழுத்தி ஆதேஷை காண்பித்தாள் துகிரா. லலிதா அவனிடம் சென்று, என்னாச்சுடா?
மாம். அமைதியா இருங்க என்று பிரதீப்பையும் ஜானுவையும் பார்த்தான். பிரதீப் துகிரா கையை இறுக்கமாக கோர்த்திருக்க ஆதேஷிற்கு கோபம் வந்தது. ஜானு அவன் அப்பா மீது சாய்ந்திருந்தாள்.
துகிரா பிரதீப் கையை எடுத்து விட்டு ஜானுவிடம் வந்து, ஜானு அடிபட்டது உன்னோட அண்ணாவுக்கு என்றாள்.
ஜானு பேசும் முன் ஆதேஷ் துகிராவிடம், இப்ப எங்க இருந்தீயோ? அங்கேயே போய் இரு. தேவையில்லாம பேசாத என்று துகிராவிடம் பல்லை கடித்துக் கொண்டு கூறி விட்டு, ஜானு அருகே அமர்ந்து அவள் கையை அவன் கையுடன் கோர்த்துக் கொண்டு பிரதீப்பை பார்த்தான். துகிராவும் லலிதாவும் ஆதேஷையே பார்த்தனர்.
என்ன செய்றான் அவன்? லலிதா கேட்க, அவன் என்னை திட்டி விட்டான் என்று துகிரா அழுவதை போல் பேச, ஜானு ஆதேஷையே பார்த்தாள். ஆதேஷ் குனிந்து ஜானு வேடிக்கைய மட்டும் பாரு என்றான் ஆதேஷ்.
என்ன மகனே? திட்டமா?
கம்முன்னு பாருங்க.
துகி, இங்க வா..என்று பிரதீப் அழைக்க, அவள் அவனருகே வந்து அமர்ந்தாள். அவள் கையை மீண்டும் கோர்த்துக் கொண்டான்.
ஜானு கோவிச்சுக்காம..கொஞ்சம் அமைதியா இருப்பாயா?
ஏன் மாமா? சோகமாக அவள் இருக்க, அவள் தோள் மீது கையை போட்டான் ஆதேஷ்.
டேய்..என்ன பண்ற? துகிரா அவனிடம் பிரதீப் கையை எடுத்து விட்டு ஓடி வந்தாள். துகிராவை முன் வைத்துக் கொண்டு,
ஜானு, உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தா என் தோள்ல சாஞ்சுக்கோ?
எதுக்கு மாமா? அவள் கேட்க, அட சொல்றேன்ல..என்று அவளது தலையை அவன் இழுத்து சாய்த்து வைத்துக் கொண்டான். அவளுக்கு சரியாக மட்டுப்படவில்லை. அவளுக்கு தேவை ஆறுதல் தானே? அவள் அவளாகவே கைகளை அவன் கைகளுக்கு இழுத்துக் கொண்டு வாகாக அவன் மார்பிலே சாய்ந்தாள். ஆதேஷ் நடிக்க ஆரம்பித்து அவனுக்குள் காதல் உணர்வு பெருக்கெடுக்க தொடங்கியது.
மகனே எனக்கு இடைஞ்சலா இருக்கு. நான் அங்கே உட்கார்ந்து கொள்கிறேன் என்று அவன் அப்பா கூற, அப்பா நீங்க தான் இடைஞ்சலா இருக்கீங்க என்றான்.
மகனே, இது ஓவர் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அவன் துகிரா முன் நிற்பதை கண்டு கொள்ளாது ஜானுவையே காதலோடு பார்த்தான். ஜானு கண்களை மூடி தூங்கவே ஆரம்பித்தாள்.
அவன் பிரதீப்பிற்கு புரிய வைக்க வேண்டும் என்று இந்த செயல்களை கையில் எடுத்தாலும் ஜானு தன்னில் சாய்ந்து தூங்குவதை பார்க்க, அவனுக்கு பிடித்திருந்தது.
துகிரா ஆதேஷை முறைக்க, நீ போகலையா? அஸ்கி வாய்சில் கேட்டான்.
அவள் பேச ஆரம்பிக்க, கத்திராத ஜானு தூங்குறா தெரியுதுல..என்று துகிராவை வெறுப்பேற்றினான். அவள் கண்கள் கலங்கியது.
போம்மா..போ..உன்னோட ஆளு வெயிட்டிங் என்றான்.
நீ ஜானுவை காதலிக்கிறியா? என்று பாவமாக கேட்டாள்.
நான் என்ன செஞ்சா உனக்கென்ன? நீ உன் வேலைய பார்த்துட்டு போ..
ஆன்ட்டி, அவன் எப்படி பேசுறான் பாருங்க என்றாள்.
அவன் எப்படிம்மா பேசுறான்? சரியா தான் பேசுறான். என்ன ஜானு பக்கத்துல இருக்க வேண்டியவங்கள விட இது நல்லா தான் இருக்கு என்றார் லலிதா. என்ன தம்பி சரி தானே? பிரதீப்பிடம் கேட்டார். அவன் அவரை முறைத்து பார்த்தான்.
சற்று நேரத்தில் ஜானு விழித்து பிரதீப்பை பார்த்தாள். இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். பின் தலையை தூக்கி ஆதேஷை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான். அணைத்தபடியே அவன் இருக்க,
மாமா..அண்ணாக்கு ஒன்றுமாகாதுல என்று கேட்டாள்.
ஒன்றுமாகாது ஜானு.
மாமா..நான் புவியை பார்த்துட்டு வாரேன் என்று எழுந்தாள். இரு முதல்ல மாமாவுக்கு என்னவென்று சொல்லட்டும்? அப்புறம் பார்க்கலாம்.
மாமா..என்னால இங்க இருக்க முடியல. கொஞ்ச நேரம் நான் வெளிய இருக்கவா?
வா..போகலாம் என்று ஆதேஷ் அவளது கையை பிடித்தான். நில்லுடா நானும் வருகிறேன் என்று அவன் அப்பாவும் எழுந்தார்.
அப்பா, நீங்க இருங்க. நான் பார்த்துக்கிறேன் என்று பிரதீப்பை பார்த்து, மாமா உன்னை வெறுப்பேற்ற எனக்கு நேரம் கிடைக்கும். ஆனால் ஜானு நீங்க அவளை அவாய்டு பண்றதில இருந்து வெளிய வரலை. அவளுடன் நான் இருக்கிறேன் என்று எண்ணியவாறு ஜானுவுடன் வெளியேறினான்.
ஆதேஷிற்கு அபி போன் செய்தான். அவன் பேசிக் கொண்டிருந்தான். அங்கே வந்தனர் குட்டி பசங்களுடன் துளசி, துருவன்.
ஜானு கண்கலங்கியவாறு, ஆம் என்று தலையசைத்தாள். அவளுடைய ப்ரெண்ட்ஸ் வந்துட்டாங்கன்னு ஆதேஷ் தள்ளி சென்று பேச, வா..துளசி என்று ஜானுவை பார்த்துக் கொண்டே உன்னோட அண்ணாவை பார்க்கலாம் என்றான்.
துரு, புவிக்கு ஏதும் தெரியாது. நீ பார்த்துக்கோ என்று ஜானு கூற,
ஜானு வேரேதும் பிரச்சனையா? அவன் கேட்டான்.
அவள் அவனுக்கு பதிலளிக்காமல் துளசி என்று அவளை அணைத்துக் கொண்டு அழுதாள். ஏதோ தவறாக உள்ளது. உள்ளே சென்றால் தெரிந்து கொள்ளலலாம் என்று மேலும் நடந்தான் துருவன்.
ஆதேஷ் ஒரு மாருதி முன் நின்று தான் பேசிக் கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த நால்வர் ஜானு, துளசி வாயில் கையை வைத்து அவர்களை தூக்கி மாருதிக்குள் போட்டனர்.
ஆதேஷை பார்த்த ஜானு, மாமா..மாமா..என்று சன்னல் கண்ணாடியை தட்டினாள். அவர்கள் அவளது கையை இறுக்கமாக பிடித்தனர். துளசி கையிலிருந்த சாவி ஒன்றை தூக்கி ஜானு பக்கம் இருந்த கண்ணாடியில் எறிந்தாள். அவர்கள் இருவரையும் உள்ளிருந்தவன் அடித்தான். வாயில் இரத்தமுடன் துளசியும் மாமா..பாரு..பாரு என்று கத்தினாள்.
தற்செயலாக திரும்பிய ஆதேஷ் அந்த கண்ணாடியில் ஜானு, துளசியை பார்த்தான். பின்னே இருக்கிறார்கள் போல என்று திரும்பி பார்த்து விட்டு, அவர்கள் அங்கே இல்லாததை கண்டு மறுபடியும் மாருதியை பார்த்தான்.
மாமா..மாமா..என்று ஜானு உதட்டசைவை பார்த்து, ஜானு..ஜானு..என்று பதட்டமாக கண்ணாடியை உற்று பார்த்தான். அவள் தன் கையை அதில் வைத்தாள். அவனும் வைக்க சட்டென மாருதி கிளம்பியது.
நிதர்சனம் உணர்ந்தவன் வேகமாக ஓடினான். இவனை பார்த்த துருவன் ஜானு துளசி இல்லாததை பார்த்து, ஏதோ பிரச்சனை என்று அங்கிருந்த பைக்கை எடுத்தான்.
ஏய்…கொடிக்கா தொக்கு, உன்னோட தொல்ல தாங்க முடியல..எங்க தான் போட்டு தொலஞ்ச என்று திட்டிக் கொண்டு ரோட்டில் தன் தோழியின் குட்டி பாக்சை தேடினான் சக்கர. அவ்வழியே வந்த மாருதியில் ஜானுவை பார்த்து,
அக்கா..ஜானு அக்காடா..என்று சக்கர சொல்ல ஆதேஷ் ஓடி வருவதை பார்த்து, டேய் அக்காவை யாரோ கடத்திட்டாங்க போலடா என்று மற்றொருவன் கூற,பைக்கில் வந்த துருவன் பிரதீப் அண்ணாவிடம் சொல்லுங்க என்று அவர்களிடம் கூறி விட்டு விரைந்து ஆதேஷையும் பைக்கில் ஏற்றி அவர்களை பின் தொடர்ந்தான். சக்கர அவனது புத்தகப்பையை அங்கேயே போட்டு விட்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினான்.
ஆதேஷ் பிரதீப்பிற்கு போன் செய்ய, அவன் கோபத்தில் எடுக்கவில்லை. மீண்டும் செய்தான். மீண்டும் அவன் எடுக்கவில்லை. மாமா..என்று பல்லை கடித்துக் கொண்டு சீக்கிரம் போ..என்று கத்தினான். ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களை தொலைத்தனர்.
அண்ணா..என்ன நடந்தது? ஜானு முகமே சரியில்லை என்று கேட்க, ஆதேஷ் அனைத்தையும் கூறி விட்டு, அர்தீஸ் இறந்ததை கூற,
அண்ணா..கண்டிப்பா அவங்க ஆளா தான் இருப்பாங்க. ஒண்ணு அவங்க வீட்டுக்கு போயிருப்பாங்க இல்லைன்னா என்று யோசித்த துருவன்,
அண்ணா..அவன் இறந்து எவ்வளவு நேரம் ஆகிறது?
ஒருமணி நேரம் இருக்கும்.
வாங்க முதல்ல அவங்க ஊருக்கு போவோம் என்று இருவரும் பைக்கில் விரைந்தனர். ஊரின் ஓர் கடையில் டீயை வாங்கி விட்டு, பேசுவது போல் விசாரித்தனர்.
அந்த பையனை ஏதோ வெளிநாட்டிற்கு அனுப்பிட்டாங்களாம். அவன் அப்பவாது திருந்துறான்னு பார்ப்போம் என்று அர்தீஸை கூற, இருவரும் திகைத்தனர்.
அண்ணா..வாங்க நாம கிளம்புவோம் என்று தள்ளி வந்தவர்கள், அண்ணா அவங்க அர்தீஸ் சாகலன்னு சொல்றாங்க? எனக்கு ஒன்றுமே புரியல.
இல்ல அவன் அங்க வைத்தே செத்துட்டான். ஏதோ கதை கட்டுறாங்க. இங்க யாரும் இல்லாத பகுதி ஏதாவது இருக்கா? என்று ஆதேஷ் கேட்டான்.
அண்ணா..அது அந்த காடு தான்.
காடா?
ஆனால் கண்டிப்பா அவங்க அடர்ந்த காட்டுக்குள்ள போயிருக்க மாட்டாங்க என்று வாங்க போகலாம் என்று இருவரும் வண்டியில் சென்றனர். அவர்கள் செல்லும் இடத்தை மெசேஜாக அனுப்பினான் ஆதேஷ் பிரதீப்பிற்கு.
சக்கர ஹாஸ்பிட்டல் வந்து, மூச்சிறைத்துக் கொண்டே பிரதீப் முன் நின்றான்.