அத்தியாயம் 28

பிரதீப்பும் அங்கு வர, மாமா என்று ஆதேஷ் அவனிடம் சென்றான். பிரதீப் பார்வை ஜானுவை தாண்டி தீனா வீட்டை ஏறிட்டது.

இரண்டு பேரும் இங்கே இருக்க..உள்ள எவனோ கருப்பு முகத்திரையிட்டு இருப்பது போல் தெரியுதே என்று பிரதீப் காலை வைக்க, அவனை தள்ளி விட்டு ஒருவன் வெளியே ஓடி வந்தான்.

மாப்பிள்ள அவனை பிடி பிரதீப் கூற, அவனுக்கு முன் ஜானு அவனை பிடித்தாள். ஆனால் அவன் தன் முகத்தை விலக்கி ஜானுவை அதிர வைத்து, ஜானு கழுத்தில் கத்தியை வைத்தான்.

என்னங்க மச்சான். நான் தனியா போக நினைச்சா. உங்க அன்பு தங்கையை நீங்களே அனுப்பி வைச்சிட்டீங்க என்றான்.

யாருடா நீ? ஆதேஷ் கேட்டான்.

நான் தான் அர்தீஸ். ஓ..நீ தான் புது மாமனா? என்ன செல்லம்,.. உனக்கு எத்தனை மாமன்? அபி இருக்கும் போது அவனுடன் சுத்துன? இப்ப இவனா?

சரி வா. நாளைக்கு நாம சுத்துவோம் என்று அவன் கூற, ஜானு கண்கள் கலங்கியது.

அவளை ஏதும் செஞ்சுடாதடா? பிரதீப் பதறினான்.

மச்சான் புவி மாதிரி நம்ம ஜானுவும் அழகு தான் என்று அவள் கையை பிடித்திருந்தவன் கையை இறக்கி இடையோடு அணைக்க, ஜானு துடித்து போனாள்.

ஏய்..கையை எடுத்திடு இல்லை செத்தடா பிரதீப் கனலாய் மாற, ஆதேஷ் ஜானுவின் அழுகையை பார்த்து, அவள் கண்களை நேராக பார்த்தான். ஜானுவும் அவனை பார்த்தாள். அவ்வப்போது மூடி திறந்தான். அவள் புரிந்து கொண்டு கண்களை மூடினாள். கீழிருந்த மண்ணை எடுத்து ஆதேஷ் வீச, அவன் ஜானுவை விட்டான். ஆதேஷ் யோசிக்காது அவளை தள்ளி இழுத்து சென்று, மாமா..என்று கத்தினான். பிரதீப்பும் அர்தீஸை பிடித்தான்.

அச்சோ..மச்சான், என்ன பிடிக்க முடியுமா? வீட்டிற்குள் ஒருவன் இருக்கான் என்றான் தெனாவட்டாய்.

எஸ்..மச்சி என்று தீனா அவன் சொன்னவனை துப்பாக்கி முனையில் முன் நிறுத்தினான்.

நீ எப்படி உள்ளே இருக்கிறாய்? அர்தீஸ் வினவினான்.

அதுசரி..இவன் நம்ம ஏரியா ஆள் போல இல்லையே? தீனா கேட்க,

நீயா? என்று பிரதீப் அர்தீஸிடம், இவனை உனக்கு எப்படி தெரியும்?

மச்சான். எங்கள உன்னால ஏதும் செய்ய முடியாது என்றான் அர்தீஸ்.

பிரதீப் அவனை தரதரவென இழுத்து, அவனருகே வந்து, நீ யார்? உன்னை அனுப்பியது யார்? கேட்டான். அவன் ஏதும் கூறாமல் இருந்தான்.

இருவரும் சேர்ந்து இருக்காங்கன்னா..இரண்டு பேரும் சேர்ந்து வேலை பாக்குறாங்க என்று மனதில் நினைத்த பிரதீப் ஜானுவை பார்க்க, ஆதேஷை அணைத்து அழுது கொண்டிருந்தாள். அவனும் அவளை அணைத்துக் கொண்டிருந்தான்.

தீனா அவர்களை பார்த்து, என்ன அண்ணா நடக்குது? கண்ணாலே கேட்டான். இவனுகள நான் பார்த்துக்கிறேன். நீ போய் பாப்பாவை பார்.

அவர்களை பார்த்து திரும்பிய ஜானு அவள் கண்களை துடைத்துக் கொண்டு, பிரதீப் அருகே வந்தாள். ஆதேஷும் அவள் பின்னே ஓடி வந்தான். அர்தீஸ் அருகே வந்து அவனை கீழே தள்ளி விட்டாள் ஜானு . தீனா கையில் இருந்த துப்பாக்கியை அவன் கண் இமைக்கும் நேரத்தில் பிடுங்கினாள்.

டேய்..உனக்கு எவ்வளவு திமிருடா. எனக்கு இது போல் சந்தர்ப்பம் தான் கிடைக்காதான்னு நினைச்சேன். நீ என் புவியை எப்படி கஷ்டப்படுத்துன  என்று துப்பாக்கியை அவன் முன் நீட்டினாள்.

ஆதேஷ் அவளை பார்த்து அதிர, ஜானும்மா வேண்டாம் என்று பிரதீப் கத்தினான்.

வேண்டாமா? ஓ..நான் கொலைகாரி ஆகிடுவேனா? என்று பிரதீப்பிடம் கேட்டுக் கொண்டே, மாமா அவனை பிடி, அவன் அசையவே கூடாது. அவன விட்டுறாத..ஆதேஷை பார்த்தாள். அவனும் அர்தீஸை பிடித்தான்.

ஏன்டா, நீங்களெல்லாம் ஆம்பளைங்களா? அவன் எத்தனை முறை புவியை கஷ்டப்படுத்தி இருக்கான் தெரியுமா? தீனாவிடம் வந்து, அவளை பள்ளி விட்டு வரும் போது, அவளது கையை பிடித்து இழுப்பான். என்னால சொல்ல முடியல..ஒரு தடவை வீட்டுக்கே போயிட்டான். அவங்க அம்மா முன்னாடியே அவளை..என்று அழுத ஜானு சொல்ல முடியாமல், இவனை இப்பவே கொல்லணும்னு தோணுது. அந்த நேரம் நானும் துருவனும் சென்றோம். துருவனுக்கும் அவனுக்கும் சரியா சண்டை போச்சு. அவனுக்கு எவ்வளவு பட்டது தெரியுமா?

அவன் செஞ்சத கூட நீங்க செய்ய யோசிச்சீங்கடா..அன்று புவியோட அம்மா, அப்பா இறந்தப்ப எத்தனை பேர் இருந்தாங்க. யாராவது அவளுக்கு துணையா வந்தாங்களா? நீங்க வந்தீங்களாடா?

தருண் அண்ணா மேமும், அந்த அக்காவும் தான் உதவினாங்க. பொண்ணுங்களுக்கு இருக்கிற தைரியம் கூட உங்களுக்கு இல்லை.

நீயெல்லாம் போலீஸ்ன்னு சொல்லாதடா? அப்பொழுது மட்டுமல்ல..அவ எத்தனை நாள் பயந்து கிட்டே இருந்தா தெரியுமா? அவங்க அம்மா கூட இருந்தாலும் அவங்களால் ஏதும் செய்யாத நிலை சரியா தூங்கவே மாட்டா. அவ்வளவு கஷ்டப்பட்டா.

உங்க வீட்டுக்கு அவ வந்தது கூட தனியா இருக்கணும்னு பயத்தால இல்லை. இந்த பரதேசிக்கு பயந்து உன்னை நம்பி தான் வந்தாள். அவளுக்கு முன்னமே உன்னை பிடிக்கும்ன்னு நினைக்கிறேன். என்னிடம் கூட அவள் சொல்லவில்லை.

சார்க்கு, உங்க பிரச்சனை தான பெரிசு? உன்னோட அம்மா கஷ்டப்பட்டது தெரியல..உன்னோட உடன் பிறப்புகள் எதுக்கு ஊருக்கு போனாங்கன்னு தெரியல? துளசி என்ன செய்றான்னு பார்த்தியா?

அவளுக்கு தவறான நட்பு கூட புரியாம பழகி இருக்கா. அவங்க அவளை ஏதாவது செஞ்சிருந்தா என்ன பண்றது? போங்கடா டேய்..என்று அவள் அண்ணனை பார்த்தாள்.

நான் உன்னிடம் நிறைய முறை ராகுலை பற்றி பேச வந்தேன். ஆனால் நான் பேச வரும் போதெல்லாம் உனக்கு வேலை வந்து விடும். நானா தான் சமாளித்தேன். ஆனால் ராகுலை அல்ல. அவன் நண்பன் துரையை. அவன் தான் போதைமருந்தை கொடுத்திருப்பான். ராகுலுக்கு என் மீது காதல். அவ்வளவு தான். ஆனால் அன்று தான் அப்படி நடந்து கொண்டான். மாமான்னு சொல்லுன்னு தொந்தரவு செய்வான். காதலை ஏற்றுக்க சொல்லுவான். ஆனால் அவன் சரியான முட்டாள். காதலிக்கும் பொண்ணை தன் நண்பன் தொந்தரவு செய்கிறான் என்று கூட தெரியாது. அவன் நண்பர்களை மூடத்தனமா நம்பினான்.

என் செய்கையை வைத்து தான் அவன் நண்பர்களுள் யாரோ போதை மருந்து கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிந்து அவர்களை காப்பாற்ற அவன் அதையும் ஏற்றுக் கொண்டான். சரியான பைத்தியக்காரன். அவனுக்கான கெட்ட பழக்கம் தான் அனைத்திற்கும் காரணம்.

இரு அண்ணன்களும் கலங்கி நின்றனர். மாமா..என்று ஆதேஷ் பக்கம் திரும்பி, உங்க மேம்க்கு ஏதோ பிரச்சனை இருக்குல? கேட்டாள்.

உனக்கு எப்படி தெரியும்?

ஹாம்..சி ஐ டி ல..சொன்னாங்க. மாமா அன்று இவனை அவங்க பார்த்த பார்வையிலே தெரிந்தது.அவங்களுக்கும் ஏதோ நடந்துள்ளது என்று. பிரச்சனை முடிஞ்சதா?

அது எப்படி முடியும்? என்று அர்தீஸிடமிருந்து பதில் வந்தது.

ஏய்..என்ன சொல்ற? ஜானு அதட்ட, அவங்க பிரச்சனை உனக்கு எப்படி தெரியும்? ஆதேஷ் கேட்டான்.

தெரியுமே தம்பி. அக்காவுக்கும் தங்கைக்கும் ஒரு நாள் இருக்கு என்றான்.

சொல்லு..என்ன திட்டம் வைச்சிருக்கீங்க? ஜானு துப்பாக்கியை நீட்ட, இந்த அழகான கைகளில் துப்பாக்கி அசிங்கமா இருக்குடா ஜானு குட்டி.

இங்க பாரு, மாமன், மச்சான், தம்பி, குட்டின்னு சொன்ன என்று அவனை நெருங்கி அவன் வாய்க்குள் துப்பாக்கியை விட்டாள் ஜானு.

தீனா கையை தட்டிக் கொண்டு, ஜானு அவனை அப்படியே கொன்னுடு. உனக்கு பிரச்சனை வராமல் நான் பார்த்துக்கிறேன்.

மாமா சார், என்ன பேசுறீங்க? என்று சினத்துடன் தீனாவை முறைத்த ஆதேஷ், ஜானு துப்பாக்கியை கீழ போடு. ஆமாம் ஜானு, கீழே போடு என்று பிரதீப்பும் கத்தினான்.

மாமா அவனை விட்டால் இன்னும் நிறைய பொண்ணுங்கள கஷ்டப்படுத்துவான் என்று ஜானு பேசிக் கொண்டிருக்கும் போதே குண்டு பாய்ந்த சத்தம் கேட்டது.

ஜானு துப்பாக்கியை கீழே விட்டு பயந்து அப்படியே அமர்ந்தாள். தீனா தன்னையே சுட்டிருக்க, ஜானு கையிலிருந்த துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. அதை அர்தீஸ் எடுத்து ஜானு மீது குறி வைக்க இடையே வந்தான் பிரதீப்.

நிமிர்ந்த ஜானு, அண்ணா என்றும் ஆதேஷ், மாமா சார் என்று இருவரிடமும் சென்றனர். அங்கே வந்து இதை பார்த்த காவலர்கள்,  அர்தீஸையும் மற்றவனையும் பிடித்து விட்டு தீனாவிடம் வந்தனர். அவன் அர்தீஸை புன்னகையுடன் பார்த்து விட்டு மெதுவாக கண்களை மூடினான்.

ஜானு அழுது கொண்டிருக்க, ஆதேஷ் செய்வதறியாது விழிக்க, மீண்டும் ஒரு துப்பாக்கி குண்டு துளைத்தது அர்தீஸை. காவலர்களில் ஒருவன். தீனாவை பிடித்த ஒருவன்.

சார்..சார்..என்று பதறினர். தீனா அவனை அவனே தான் சுட்டான். ஜானு தான் நடந்ததை கூறி தீனா மனதை வலிக்க வைத்து விட்டாளே? அவனுடைய புவியை காயப்படுத்திய அர்தீஸை கொல்ல தான் இந்த முடிவு எடுத்தான். நடத்தியும் முடித்தான்.

சார்..அவன் மீண்டும் சாரை கொல்ல வந்தான். அதான் அவனை சுட்டேன் என்றான். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருக்கிறது பாருங்கள். உண்மையிலே தீனாவை கொல்ல தான் தன்னுடைய துப்பாக்கியை எடுத்தான் அர்தீஸ். தன்னை பிடித்த காவலர்களின் கையை உதறி விட்டு தான் துப்பாக்கியை எடுத்தான். அர்தீஸ் தீனாவை பார்த்துக் கொண்டே கண்களை மூடினான்.

தீனா தன் இடப்பக்க தோள்பட்டைக்கும் மார்புக்கும் இடையே தான் சுட்டிருப்பான். பிரதீப்பிற்கு குண்டு கையில் உராசி தான் சென்றிருக்கும். ஆதேஷூம் ஜானும் தீனாவை பிடித்துக் கொண்டு அழுதனர். காவலர்களும் அவனை சூழ்ந்திருந்தனர்.

பிரதீப் எழுந்து போன் செய்து ஹாஸ்பிட்டலில் கூறினான். அனைவரும் தீனாவை தூக்க அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பிரதீப் கூறிக்கொண்டே அவன் வண்டியில் ஏறினான். அவனது வண்டியில் தீனாவை ஏற்றினார்கள்.

மாமா நான் வண்டி ஓட்டுகிறேன் என்று ஜானுவை கையில் பிடித்துக் கொண்டு, சீக்கிரம் ஏறு.. ஜானு என்று ஆதேஷ் வண்டியை செலுத்த, ஜானு அவளது ஆடையை கிழித்து பிரதீப்பிற்கு கட்டு போட்டு விட்டு,

தீனாவை பார்த்து, அண்ணா..எழுந்திரு..எழுந்திரு.. எழுந்திருடா என்று அழுது கொண்டே பிரதீப்பை பார்த்து, அண்ணா..தீனாண்ணாவுக்கு ஒன்றுமாகாதுல. அவனை முழிக்க சொல்லேன். எனக்கு பயமா இருக்கு.. அண்ணா.. சொல்லு.. சொல்லு..என்று அழுதாள். பிரதீப்பும் அழுதான்.

ஏன்டா, இப்படி பண்ண? அவனை அழிக்க வேற வழியை தேடி இருக்கலாமே?

அவர்கள் மருத்துவமனை வந்தனர். பிரதீப்பிற்கு மருந்திட்டனர். தீனாவிற்கு சிகிச்சை நடக்க வீட்டிலிருந்தவர்கள் அனைவருக்கும் விசயம் தெரிந்து வந்து கொண்டிருந்தனர்.

புவனாவிற்கு தெரியக் கூடாதுன்னு அவள் அறையிலிருந்த அக்காவிடம் அவளை தூங்க வைக்க மாத்திரை கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஆதேஷ் மீது சாய்ந்து ஜானு அழுது கொண்டிருக்க, அவன் யோசனையோடு அவளது தலையை வருடிக் கொண்டிருந்தான்.

பிரதீப் கட்டிட்டு வெளியே வந்து, அவர்களை பார்த்தபடி வந்தான். ஆதேஷும் ஜானுவும் ஒருவாறு மாமா..என்றும் அண்ணா என்றும் அழைத்தனர். அவன் அமைதியாக அமர்ந்தான்.

அண்ணா என்று ஜானு பிரதீப்பிடம் வந்தாள். இன்னும் ஏதும் சொல்லணுமாம்மா? அவன் கேட்க, கண்ணீருடன் நிமிர்ந்து அவள் அண்ணாவை பார்த்தாள். அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

மாமா..என்று ஆதேஷ் அருகே வந்தான். எங்களுக்கு இடையில நீ வராதே?

மாமா..அவளுக்கு நீங்க?

நான் தான் சொல்றேன்ல..நீ எதுவும் பேசாத. நீ சொல்லும்மா? இன்னும் எதுவும் சொல்லணுமா? கேட்க, தள்ளி அமர்ந்து கொண்டாள்.

ஆதேஷிற்கு ஜானுவை பார்க்க பாவமாக இருந்தது. அவனால் இதற்கு மேல் என்ன பேச முடியும்?

பிரதீப் ஆதேஷை பார்த்து, மாப்பிள்ள இங்க வா..அர்ஜூனுக்கு போன் செய்து, அந்த பொண்ணு வீட்ல யாராவது இருக்கணும்ன்னு சொல்லுங்க இல்லை அவங்கள அர்ஜூன் வீட்டுக்கு போக சொல்லுங்க என்றான்.

ஆதேஷ் போன் செய்து அனைத்தையும் கூற, போனை வாங்கிய அபி..மாமாகிட்ட பேசணும் என்று பிடிவாதம் செய்ய, ஆதேஷ் போனை பிரதீப்பிடம் கொடுத்தான். இருவரும் பிரதீப் முன் நெருக்கமாக இருந்ததை புரிந்து கொண்ட ஆதேஷிற்கு தனக்கு ஜானுவை பிடித்துள்ளதையும் அறிந்து கொண்டான். அவர்களும் தெரிந்து கொண்டார்களே என்ன செய்வது? என்றும் சிந்தித்தான்.

அபியிடம் பேசி விட்டு ஆதேஷை பார்த்த பிரதீப், மாப்பிள்ள இந்தா.. அவன் சிந்தனையிலே இருக்க ஜானுவும் அவனை பார்த்தாள். அண்ணா முன் ஆதேஷை அணைத்து நின்றதோ? இல்லை இப்பொழுது ஆறுதலுக்காக ஆதேஷ் மீது சாய்ந்ததையோ ஜானு பெரியதாக எண்ணவில்லை.

ஆதேஷை பிடித்து உலுக்கினான் பிரதீப். மாமா..என்று பேச வார்த்தைகள் இல்லாமல் அமைதியாக அமர்ந்தான். அவனே காதலை தற்போது தான் உணர்ந்தான். அவன் ஜானுவிடமே கூறவில்லை. அதற்குள் எப்படி பிரதீப்பிடம் கூறுவது?

ஜானு அவள் அண்ணாக்களிடம் அதிகமாக தான் பேசி விட்டோம் என்று உணர்ந்ததால் அவளும் அமைதியாக இருந்தாள். இன்னும் பிரதீப்பிடம் மனதில் இருப்பதை முழுதாக கூறவில்லையே? அவள் மனதினுள் பல போராட்டங்கள்.