அத்தியாயம் 24

ஸ்ரீ கட்டிலின் நடுவில் கால்களை நீட்டி அமர்ந்திருந்தாள். அர்ஜூன் சற்றும் சிந்திக்காது அவள் அமர்ந்திருந்த கட்டிலில் படுத்தான். அவள் பயத்துடன் விலக, அவளை அகலாது நிறுத்தியவன் அவளது கையை பிடித்துக் கொண்டான். அவனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நான் பொறுப்பற்றவனா? நான் அவங்களுக்கு நல்ல மகன் இல்லையா? எண்ணம் ஓட, ஸ்ரீ முன் அழக் கூடாது என்று அவளுக்கு முதுகு காட்டி படுத்து அவள் கையை அவனது இடுப்பில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே படுத்திருந்தான். அவன் அழுவது தெரிந்து அவளது மறுகையால் தலையை கோதி விட்டாள். அரை மணிநேரம் அர்ஜூன் அப்படியே தூங்கி விட, உள்ளே நுழைந்தனர் அகிலும் அபியும்.

அர்ஜூன் ஸ்ரீயின் கட்டிலில் இருப்பதை பார்த்து, ஸ்ரீ நாங்க அப்புறம் வாரோம் என்று அகில் கூற, சீனியர் என்று அழைத்தவள் அவன் அழுததை சம்பாஷனையில் கூறினாள்.

அழுதானா? என்று இருவரும் அர்ஜூன் முன் வர, அர்ஜூன் வேகமாக எழுந்தான்.

அர்ஜூன் நில்லு..ஸ்ரீ கூற, அவன் மீண்டும் குளியலறை பக்கம் சென்றான். அர்ஜூன் போகாதே நானும் வருவேன். நானும் நனைந்து விடுவேன் என்றாள்.

அவளை அவன் பார்த்தான். அவன் கண்கள் சிவப்பை தத்தெடுத்திருந்தது. அர்ஜூன் எதுக்குடா? அபி அருகே வந்தான்.

நோ..அபி. நான் தனியே இருக்க நினைக்கிறேன் என்றான் அர்ஜூன்.

சரி..விடு. கவின் என்னாச்சு? நீ போன் செய்யவில்லை. அவனும் போனை எடுக்க மாட்டேங்கிறான். தாரிகா எங்கே? என்று கேட்டான் அகில்.

தாரிகா எழுந்து பட்டென கதவை கோபமாக அடித்து சாத்தி விட்டு வெளியே சென்றாள்.

என்னடா இவ்வளவு கோபமா? என்னடா செஞ்சு தொலைஞ்சான் கவின்? அபி கோபப்பட,

தாரிகா அவனை பிரேக் அப் பண்ணிட்டா சீனியர் என்றாள் ஸ்ரீ.

பிரேக் அப் பா? அதிர்ந்தனர்.

ஆனா சீனியர் அவ இடத்துல வேற யாராவது இருந்தா அவனை திரும்பி கூட பார்க்க மாட்டாங்க.

அப்படி என்ன செய்தான்? அகில் கேட்டான்.

அர்ஜூன் நீயே சொல்லு என்று ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள். அவளை முறைத்து விட்டு அவன் நடந்ததை கூறி விட்டு, அவன் அம்மா திட்டம் பற்றி கூற, ஸ்ரீ உற்சாகமாக..பல்லை காட்டிக் கொண்டு, அம்மா வேற லெவல் அர்ஜூன்.

அவள் ஒத்துக் கொண்டாலா?

அவளால் எப்படி சீனியர் கவின் சீனியரை மறக்க முடியும்? நான்கு வருட காதலாயிற்றே. கண்டிப்பா ஒத்துப்பா என்று ஸ்ரீ கூற, அர்ஜூன் அவளை உற்று பார்த்தான்.

அகில் அர்ஜூன் முன் வந்து அவனை திசை திருப்பினான். அவனை பார்த்துக் கொண்டே மனதினுள் இவனுக்கும் ஸ்ரீ என்னை காதலிப்பது தெரியுமோ? சிந்தித்தான் அர்ஜூன்.

அர்ஜூன்..அப்ப தாரிகா எங்க தங்கப் போறா? அபி கேட்க, வேறெங்க..என்னோட வீட்ல தான் இருக்க போறா?

டேய்..கவினும் அங்க தான இருப்பான் அகில் கேட்க, ம்ம்..அவளும் அங்கு தான் இருக்கப் போகிறாள்.

எப்படிடா?

அர்ஜூன், காலேஷுக்கு..?

வருவா. நீயே பாரேன் என்றான் அர்ஜூன் சிறு புன்னகையுடன்.

ஸ்ரீ கண்கள் பளபளக்க அப்பா இவன் சிரிப்பதற்குள்.. அவள் நினைத்துக் கொண்டிருக்க, அர்ஜூன் அவளருகே வந்து அவளது துப்பட்டாவில் முகத்தை துடைத்து விட்டு அகிலை பார்த்துக் கொண்டே போனை எடுத்தான்.

அகில், அபி இருவரும் அதிர்ந்து அர்ஜூன், ஸ்ரீயை பார்க்க, அவளுக்கோ பழகி இருந்தாலும் சீனியர் முன் இவன் நடந்து கொண்டது படபடக்க தடுமாறினாள்.

அர்ஜூன் பார்வை அகிலிடம் கூர்மையாக அவன் அதிர்ந்ததோடு ஸ்ரீ.. ஓய்வெடு. நாங்கள் வருகிறோம் என்று அவன் வெளியேற, அபிக்கும் மீண்டும் ஓர் அதிர்வு. அர்ஜூன் செயலில் இவன் சண்டைக்கு சென்றிருக்கணுமே? அபி அர்ஜூனை பார்த்தான். பின் திரும்பி அகிலை பார்க்க, அவன் அங்கு இல்லை.

மேம்..சொன்னாங்களா அபி? அர்ஜூன் கேட்க, என்ன? என்றான் அதிர்ச்சி விலகாமல். ஸ்ரீ சங்கடமாக கட்டிலில் அமர்ந்து இருவரையும் பார்த்தாள்.

டேய்..அபி. இந்த உலகத்தில் தான் இருக்கிறாயா? அர்ஜூன் சத்தமிட,..இருக்கேன்டா அபி கூறவும் ஸ்ரீக்கு சிரிப்பு வந்தது. அவள் ஆடையை சரி செய்வதை போல் அபியை பார்த்து நகைக்க, அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான்.

அபி அருகே வந்து, பிரதீப் அண்ணா வேலையை ஆரம்பிச்சிட்டார். நாளைக்கு நீயும் ஊருக்கு வாராயா? ரெசார்ட்டை பார்க்க, புதுப்பிக்க வேண்டியவற்றை பார்க்கணும். ஆதேஷ் ஏதோ திட்டம் வைத்திருக்கானாம்.

அவனா? கேட்டான்.

ஏன்டா அவனுக்கென்ன?

சும்மா தான் கேட்டேன். உடல் முழுவதும் சரியான பின் வருகிறேன். அவங்க கிட்ட பேசுறேன். அவங்களையும் அழைச்சிட்டு போங்கடா என்றான்.

அப்படியா? அவங்க எவங்கப்பா? அர்ஜூன் கிண்டல் செய்ய,

சும்மா கேலி செய்யாதேடா. மேம் வருவாங்க என்று அவன் இன்பாவை பார்க்க சென்றான்.

அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, அர்ஜூன்..தாரி தனியே வெளியே போனால் என்றாள் ஸ்ரீ.

அவள் இவங்க ஏதாவது அவனை திட்டுவாங்கன்னு தான் வெளிய போயிருப்பா. வந்திடுவா என்று அவளிடம் பேசிக் கொண்டே கட்டிலில் வந்து அவளருகே அமர்ந்தான். ஆனால் ஏதும் பேசாமல் மேகாவிற்காக அவளுடைய சீனியரை அழைத்து பேசினான். ஸ்ரீ அவனையே பார்த்தவாறு ஏதோ சிந்தனையில் இருந்தாள். அவள் முகம் வெறுமையாக இருந்தது. முதலில் கவனிக்காத அர்ஜூன் அவளை பார்த்தும் கவனியாது போல அவளை பார்த்தான். அவன் கவனிப்பதை கண்ட ஸ்ரீ சுதாரித்து படுத்துக் கொண்டாள். அவன் பேசி விட்டு ஸ்ரீயை பார்க்க அவள் உறங்கி விட்டாள்.

அவள் அருகே படுத்தவன்..இல்லை..இது கூடாது என்று எழுந்தான். அர்ஜூன் என்று அழைத்த ஸ்ரீயை திடுக்கிட்டு பார்த்தான். ஆனால் அவள் எழுந்து நீ ஓய்வெடு. நான் ஆருவை பார்த்துட்டு வாரேன்.

இல்ல ஸ்ரீ. அவ வீட்டுக்கு கிளம்பிட்டா.

நிவி எங்கே? அவன் என்னிடம் சொல்லவில்லையே?

அவன் தாரிகாவுடன் தான் இருப்பான் என்று ஸ்ரீ.. உனக்கு அகிலை தான் பிடிக்குமா? அவன் கேட்க, ஸ்ரீக்கு யாரோ அறைந்தது போல் இருந்தது.

அவள் அர்ஜூனை பார்த்து, என்னால் எதையும் இப்பொழுது கூற முடியாது.

அப்ப..பிரச்சனை முடிந்த பின் சொல்வாயா? கேட்டவுடன் அவள் கண்கள் கலங்கியது. அர்ஜூன் நான்..என்று அவள் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.

அர்ஜூன் உன்னை தான் காதலிக்கிறேன்னு சொல்லு ஸ்ரீ என்று மனதினுள் அவன் கேட்டுக் கொண்டிருக்க, அவளுக்கு அவன் அம்மா ஸ்ரீயை பற்றி இழிவாக பேசியது நினைவு வர கண்ணீர் விட்டாள். அர்ஜூனும் மேகாவிடம் பேசியதும் ஒலித்துக் கொண்டிருக்க, அவளுக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.

ஆனால் அர்ஜூனோ, என் ஸ்ரீ தன்னிடம் காதலை கூற மாட்டாலா? என்று எண்ணினானே தவிர அவளது நிலையை யோசிக்க தவறினான்.

சொல்லு ஸ்ரீ..அகிலிடம் எப்ப சொல்லப் போற? என்று அவன் கேட்க,

அகிலிடம் சொல்லவா? நான் உன்னை தானடா காதலிக்கிறேன். அர்ஜூன் சொல்வேன். என் காதல் என் வாழ்வு முடியும் போது சொல்வேன் என்று மனதில் எண்ணினாலும் அவள் காதல் அகில் மீது என்ற வார்த்தை அவளை காயப்படுத்தியது.

அவள் முகத்தில் வியர்வை பனியாய் துளிர்க்க, அவள் பேச முடியாமல் படுத்தாள். ஸ்ரீ..என்று அர்ஜூன் அருகே வர, நோ..அர்ஜூன் என்று அவளது கையை உயர்த்தி தடுத்தவள் மௌனமாக படுத்தாள்.

ஸ்ரீ ஏதும் தப்பா கேட்டுட்டேனா? அவன் கேட்க, அவளிடம் பதிலில்லை. அவள் உதட்டை கடித்துக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.

ஸ்ரீ..எழுந்திரு..என்று அழைத்தான். அவளிடம் பதிலில்லாது இருக்க, அவள் முன் வந்தான். அவளது கண்ணீர் நனைந்திருந்த தலையணையை பார்த்து விட்டு அவளை பார்த்தான். அவள் தூங்குவது போல் இருக்க, அதற்குள்ளா தூங்கி விட்டால் என்று அருகே வந்து ஸ்ரீ..ஸ்ரீ..என்று அழைத்தான்.அவள் எழவில்லை.

பதறி அவளை தொட்டான். அவள் அசையாதிருக்க பக்கத்திலிருந்த தண்ணீரை அவள் மீது தெளித்தான். அவள் கண்கள் மெதுவாக திறந்தது. ஸ்ரீ என்று பாய்ந்து அணைத்துக் கொண்டு, சாரி ஸ்ரீ இனி உன்னிடம் இப்படி கேட்கவே மாட்டேன் என்று அழுதான்.

அவள் ஏதும் பேசாமல் இருந்தாள். ஸ்ரீ என்று அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். அர்ஜூன் என்னால் முடியாது என்றாள்.

என்ன ஸ்ரீ முடியாது?

அர்ஜூன்..என்று தயங்கிக் கொண்டு அகில் சீனியரிடம் காதலை கூற முடியாது என்றாள்.

ஏன் ஸ்ரீ?

அர்ஜூன்..நான் உன்னிடம் சொல்லணும். ஆ..ஆனா..ஆனா..என்னால முடியல என்று சோர்வாக அவன் மீது சாய்ந்து கொண்டு, நான் தூங்கவா? ப்ளீஸ் என்று கேட்டாள்.

அவன் சரி என்று தலையசைத்தான் வருத்தமுடன். அவனுக்குள் ஒரு கேள்வி, பிரச்சனை முடிந்த பின் சொல்ல மாட்டேன்னு சொல்றாலே? யோசித்தான்.

அர்ஜூன் பக்கத்திலே இருக்கிறாயா? கேட்டாள். அவன் கட்டிலில் நன்றாக அமர்ந்து சாய்ந்து கொண்டு அவளது தலையை தன் தோளில் வைத்து அவளை அணைத்தவாறு கண்ணை மூடினான். அவளும் தூக்கிப் போனாள்.

உள்ளே வந்த தாரிகாவும் நிவாஸூம் இவர்களை பார்த்து விட்டு அமைதியாக வெளியேறினார்கள்.

பிரதீப் வீட்டிற்கு வந்த அனைவரும் உள்ளே செல்ல ஜானு பிரதீப்பை பார்த்தாள். அவன் துகியிடம் ஏதோ பேசியவாறு சென்றான். ஜானு ஏதும் பேசாமல் அவளறைக்கு சென்றாள்.

துகிராவும் ஆதேஷும் சாப்பிட அமர்ந்தனர். பிரதீப் அவனறைக்கு சென்றான்.

மதிய சாப்பாட்டு நேரத்தையே தாண்டியது. அவர்களுடன் மற்றவர்களும் அமர்ந்தனர். பிரதீப் கீழிருந்து ஜானு அறையை பார்த்து விட்டு, அவளறைக்கு சென்றான்.

ஜானும்மா..சாப்பாடு எடுத்து வரவா? பிரதீப் அறையின் வெளியிருந்து கேட்டான்.

இல்லண்ணா. எனக்கு சோர்வா இருக்கு. நான் அப்புறம் சாப்பிடுகிறேன் என்று கலங்கினாள்.

பிரதீப் சென்று விட்டான். ஆனால் ஜானுவிற்கு தன் அண்ணன் ஏதோ வெகு தூரம் சென்றது போல் உணர்ந்தாள். இதுவரை செய்யவா? எடுத்து வரவான்னு கேட்கவே மாட்டான். ஆனால் இப்பொழுது என்று அழுதாள். நான் என்ன செய்வது? எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே.

ஏன்டா அண்ணா, என்னை மறந்து விடுவாயோ? ரொம்ப பயமா இருக்குடா. உன்னை விட்டா எனக்கு வேற யாருடா இருக்கா? நீ சந்தோசமா இருக்கணும்னு தான் நான் நினைத்தேன். ஆனால் இவ்வளவு கஷ்டமா இருக்குமா? என்று தேம்பி தேம்பி அழுதாள்.

அறை தட்டும் ஓசை கேட்டு கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து சென்று கதவை திறந்தாள். காவேரி நின்று கொண்டிருந்தார்.

வெகு சாதாரணமாக என்ன வேணும் சித்தி? என்று கேட்டாள்.

உள்ளே வரலாமா? என்று கேட்டு உள்ளே வந்தார்.

வாங்க என்று அவரை உட்கார வைத்தாள்.

ஜானு, அண்ணா உன்னை விட்டு விலகிற மாதிரி இருக்காடா?

இல்லையே..எப்பொழுதும் போல் தான் இருக்கிறார் சித்தி.

அந்த பொண்ணை உனக்கு பிடிச்சிருக்கா? அவர் கேட்டுக் கொண்டிருக்கும் போது கையில் உணவுடன் லலிதாவும் ஆதேஷும் வந்தனர்.

இருவரும் ஓரமாக மறைந்து நின்றனர். ஆதேஷை மறைந்து நிற்க வைத்து தானும் மறைந்து நின்றார் லலிதா.

என்ன சித்தி பேசுறீங்க? எனக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும்.

அப்புறம் ஏன்மா அழுத?

இல்ல சித்தி. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே அண்ணா மட்டும் தான். வேற யாருமே இல்லை. அண்ணா விலகிற மாதிரி இல்லை. எனக்கு தான் ஏதோ கஷ்டமா யாருமில்லாதது போல இருக்கு என்று கண்கலங்கினாள்.

நாங்க இருக்கோம்ல டா.

நீங்களா?

சித்தி முதல்ல உங்க பசங்கள பாருங்க. நீங்க சித்தப்பாவால கஷ்டப்பட்டது புரியுது. ஆனால் அதுக்காக பசங்கள விட்டுற கூடாதுல சித்தி.

தீனா அண்ணா வளர்ந்த பின் கூட உங்களுக்கு அண்ணாவிடம் சொல்ல தோணலையா? துளசியும் என்னை போல் தனியா தான் இருந்தாலா? அப்புறம் அக்கா ரெண்டு பேரையும் உங்களுக்கு பார்க்கணும்னு தோணலையா? அவங்களும் கஷ்டப்பட்டுருக்காங்க. எங்களுக்கு யாருமில்லாமல் தனியா இருந்தோம். ஆனால் உங்க பசங்களுக்கு எல்லாரும் இருந்து தனியா இருந்திருக்காங்க என்று பட்டென கேட்டாள்.

காவேரி முந்தானையால் வாயை அடைத்துக் கொண்டு அழ, சித்தி என்று அணைத்துக் கொண்டு என்னை மன்னிச்சிருங்க சித்தி. எனக்கு தோன்றியதால் கேட்டு விட்டேன். உங்களுக்கு கஷ்டமானாலும் இது தான் நிதர்சனம்.

நீங்க சரி பண்ணிடலாம்..பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். ஆனால் நான் என்ன செய்வதுன்னு தெரியல சித்தி? என்றாள் கண்கலங்கியவாறு.

அவர் கண்ணை துடைத்துக் கொண்டு, உனக்கு அண்ணா பழையவாறு இல்லைன்னு தோணுதா? அவர் கேட்க, அவள் அழ ஆரம்பித்தாள்.

அழாதடா கண்ணு. அண்ணா உன்னை மறப்பானா?

சித்தி, அண்ணா எனக்கு எதுவாக இருந்தாலும் அறைக்கு எடுத்து வந்து தான் பேசுவான். ஆனால் இன்று அவன் வேண்டுமான்னு கேட்டுட்டான் என்று அழுதாள்.

உனக்கு உடல் சுகமில்லாததால தான் சாப்பிடுறியான்னு கேட்டிருக்கான். இல்லைன்னா அவன் கொண்டு வந்திருப்பான்.

ஆனால் ஜானு கண்ணு..நீ இனியும் சாப்பாட்டை அண்ணா ஊட்டி தான் சாப்பிடணுமா? நீ வளர்ந்துட்ட. உன்னோட வேலைய நீ தான்டா பார்த்துக்கணும். பொண்ணுங்க எப்போதும் சோம்பேரியா இருக்கக் கூடாதுடா.

நீ பள்ளி முடிந்து என்ன செய்யப் போற?

என்ன சித்தி? எல்லாரும் கல்லூரிக்கு தானே செல்லுவாங்க. நானும் போவேன்.

இந்த ஊர்லயா? என்று அவர் கேட்டார்.

இல்லை சித்தி. மாமா படிக்கிற கல்லூரிக்கு தான் போவேன்.

அப்ப..இங்க அண்ணா மாதிரி. அங்க மாமா உனக்கு எல்லாமே செஞ்சி தருவானா?

மாமாவா? என்று யோசித்த ஜானு அபியை மறந்து மாமா என்று ஆதேஷை தான் கூறி இருப்பாள்.

நான் எப்படி அபி மாமாவை மறந்தேன்? அவள் சிந்திக்க, ஜானு..ஜானு..என்று உலுக்கினாள்.

என்ன அபியை வேலைக்காரனாக்க முடிவெடுத்து விட்டாயா?

இல்ல சித்தி. அபி மாமா..மாமா..என்று திணறினாள்.

என்னாச்சும்மா?

இல்ல சித்தி. நான் நானே தான் செய்து கொள்வேன்.

அது எப்படி? இங்கு வராத பழக்கம் அங்கு வரும்?

சித்தி நான் ஓய்வெடுக்கவா? அவள் கேட்க, சரிம்மா..நீ ஓய்வெடு. நான் சொன்னதை யோசித்து பார் என்று அவர் வெளியே வந்தார்.

அப்பொழுது அங்கே வந்த ஆதேஷ் அப்பா லலிதா கையிலிருந்த உணவுத்தட்டை பறித்து ஜானுவை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றார். அவர்களை பார்த்துக் கொண்டே காவேரி கீழே சென்றார்.