அத்தியாயம் 21
ஆதேஷ் தாரிகாவின் உள்ளங்கையில் கிச்சுகிச்சு மூட்டினான். கவினை பார்த்த தாரிகாவின் சிரிப்பு காணாமல் போனது. அவனுடன் ஒரு பொண்ணு.. அதுவும் அவனது தோளிலும் இடுப்பிலும் கையை போட்டு அமர்ந்திருந்தாள்.
அவன் அவர்களிடம் வந்து வண்டியை நிறுத்தி, நீ ஊருக்கு போகலையா? என்ன செஞ்சுக்கிட்டு இருக்க? என்று பல்லை கடித்தான்.
டியர்..யார் இந்த பொண்ணு? என்று அந்த பொண்ணு கேட்க, அவன் அவளை கண்டு கொள்ளாமல் நான் கேட்டதற்கு பதில் வரலை என்றான்.
தாரிகா அமைதியாக இருக்க, சீனியர் உங்களுக்கு என்ன பிரச்சனை? யோசித்து பேசுங்கள் என்றாள் துகிரா.
யோசிக்கவா? நடு ரோட்டில் என்ன செய்றீங்க? கூத்தடிக்கிற இடமா இது?
தாரிகா கண்ணில் நீர் வழிய,அந்த பொண்ணை பார்த்தாள்.
நீங்க கிளம்புங்க என்று ஆதேஷ் கத்தினான்.
நான் கிளம்பணுமா? ஏன் உங்களுக்கு தொந்தரவா இருக்கோ? கவின் கேட்க, சீனியர் அளந்து பேசுங்க என்றாள் துகிரா.
அளந்து பேசணுமா? நீங்கள் தான் என்னை பேச வைக்கிறீங்களே?
நாங்க என்ன பேச வைக்கிறோம்? ஆதேஷ் கேட்டான்.
நடுரோட்ல இப்படி தான் தொட்டு விளையாடுவீங்களா?
தாரிகா அழுதாள். தாரி நீ எதுக்கு அழுற?
அழுதே சமாளிக்கலாம்ல. அதான் அழுறாங்க மேடம்.
ரோட்டிலேயே இப்படி விளையாடுறீங்களே? நீங்க ஒரே வீட்ல தான் இருக்கீங்களா? அந்த பொண்ணு கேட்க, ஏய்..நீ ரொம்ப பேசுற என்று ஆதேஷ் சினத்துடன் அந்த பெண்ணிடம் வந்து,
நீ ஒட்டி உராசிக்கிட்டு இருக்குற நீ பேசாத என்றான் ஆதேஷ்.
ஏய்..என்ன பேசுற? என்று கவின் ஆதேஷிடம் கத்தினான்.
அவரோட அக்காவை தான் என்னோட அண்ணா கல்யாணம் செஞ்சுக்க போறாரு. எனக்கு அவர் மாமா. நாங்க எங்க வேண்டுமானாலும் போவோம். நீ எங்களையே கேள்வி கேட்கிறாயா?
ஓ..மாமான்னா என்ன வேண்டுமானாலும் செய்வீங்களோ? ஆதேஷ் கேட்க,
அஃப் கோர்ஸ். உனக்கு என்ன பிரச்சனை? அவனுக்கு முத்தம் கூட தருவேன் என்று கவின் கன்னத்தில் அந்த பொண்ணு முத்தம் கொடுக்க, கவின் வண்டியிலிருந்து இறங்கி அந்த பொண்ணை முறைத்தான்.
தாரிகா அழுது கொண்டே வேகமாக நடக்க, கவின் அவளை தடுத்து அவன் உன்னை தொட்டானே அதற்கும் இதற்கும் சரியா போச்சு என்றான்.
கவின் கன்னத்தில் ஓங்கி அறைந்த தாரிகா, என்ன பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது? அவன் என்னை தொட்டானா? என்ன நடந்ததுன்னு கேட்கவே மாட்டாயா? உன் இஷ்டத்துக்கு பேசுற? உன்னை மாதிரி நான் இல்லை. இதுவரை என்னை யாரும் தவறாக தொட்டதில்லை. நான் உன்னை தவிர யாரையும் தொடவிட்டதில்லை.
ச்சே..உன்னை போய் காதலித்தேனே? என்னை சொல்லணும் என்று அழுது கொண்டே, இனி என்னால எதையும் தாங்க முடியாது. உன்னோட பேச்சாலே என்னை சாவடிக்கிறடா. உன்னை பற்றி தெரியாத போதும் உன்னை தான் காதலிச்சேன். தெரிஞ்சும் உன்னை தான் காதலிச்சேன். ஆனால் என்னை இப்படி கேவலமா பேசுற?
அன்று உன் மேல இருந்த காதலால் கைரவ் அண்ணா வீட்டுக்கு நேரம் காலம் ஏதும் பாராமல் அவங்களை எச்சரிக்கை செய்ய தான் வீட்டிற்கு போனேன். வேற எதுக்கும் போகல. எனக்கு அண்ணா திட்டம் ஏதும் தெரியாது. ஆனால் அவங்களோட அறையில இருந்தேனான்னு கேக்குற? எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?
ஒரு வேலை அந்த மாதிரி பொண்ணா இருந்தா நான் எதுக்கு யாரையும் தேடப் போறேன்? ஆது தான் என்னை காதலித்தது தெரியுமே? அவனை பயன்படுத்தி இருப்பேன்.
தாரி..என்ன பேசுற? ஆதேஷ் கேட்க, துகிரா அதிர்ந்து நின்றாள்.
என்ன ஆது? நான் தப்பான பொண்ணா தான அவங்களுக்கு தெரியிரேன். என்னை எப்படி பேச சொல்ற?
இல்ல தாரி என்று ஆதேஷ் அவளருகே வர, நீ அங்கேயே நில்லு..போதும். எனக்கு பிடிக்கல. என்னை ரொம்ப கேவலமா பேசிட்டான் என்று கவின் அருகே வந்து அவன் சட்டையை பிடித்து அவனிடம் நெருக்கமாக வந்து கண்ணீருடன் உதடு துடிக்க வார்த்தைகள் தடுமாற ஆனால் தெளிவாக இனி நமக்குள் ஒன்றுமேயில்லை. நம்பிக்கை இல்லாத காதல் எனக்கு வேண்டாம். என் காதலை நீ கொன்னுட்ட. போதும். இனி நாம சந்திக்காம இருப்பது தான் நல்லது. லெட்ஸ் பிரேக் அப் என்று அவள் விலக, கண்கள் கலங்க கவின் அவளது கையை பிடித்தான்.
நான் சொல்றத கேளு என்று அவன் பேச அவனிடம் திரும்பி, பேசியது போதாதா? இன்னும் பேசணுமா?
நான் கோபத்தில் தான் அப்படி பேசிட்டேன். சாரிம்மா..என்றான்.
சாரியா? என்று அவனது கையை உதறி விட்டு, அன்றும் இதே சாரி தான் சொன்னீங்க? நாங்க தான் ப்ரெண்ட்ஸ்ன்னு தெளிவா சொன்னோம்ல. நீ நம்பல. என்னை நம்பல.
இனி என் கண் முன்னாடியே வராதே. எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கல. போதும்ப்பா சாமி. உங்க சவகாசமே வேண்டாம் என்று தாரிகா போனை எடுத்து,
அண்ணா, என்னை உடனே இங்கிருந்து கூட்டிட்டு போ. எனக்கு பிடிக்கல. இங்க இருக்கவே பிடிக்கல. சீக்கிரம் வா.. என்று அழுதாள்.
என்ன ஆச்சுடா? அர்ஜூன் கேட்க, சொன்னா தான் கூப்பிட வருவியா? நீ வர்றியா? இல்லை நானே கிளம்பி வருவா? சினத்துடன் கத்தி விட்டு போனை வைத்தாள்.
தாரி..சாப்பிட்டாவது வா துகி அவளிடம் வர, யாரும் என் பக்கத்தில வராதீங்க என்று அவ்விடமே அதிரும் வண்ணம் கத்தினாள்.
அங்கே கார் ஒன்று வந்தது. பிரதீப் அதிலிருந்து இறங்க தாரிகா அவரிடம் சென்று, அண்ணா..நான் கிளம்புகிறேன். இன்னொரு நாள் நம் வேலையை பார்த்துக் கொள்ளலாம் என்றாள்.
ஏன்மா திடீர்ன்னு கிளம்புற? என்று அங்கே பார்க்க, கவின் மடிந்து அமர்ந்திருந்தான்.
பிரச்சனையா? அவன் கேட்க,
அண்ணா எல்லாமே முடிஞ்சு போச்சு. இனி நான் உங்க ஊருக்கு வரவே மாட்டேன். நாம மீட் பண்ண அர்ஜூன் அண்ணாவுக்கு போன் போடுங்க. அவர் சொன்ன பின் யாரையும் பார்க்க வாரேன்.
என்னம்மா? ஒரு மாதிரி பேசுற?
கல்லூரி..அவன் கேட்க,
படிப்பா..துகியை நீங்க எப்படி படிக்க வைக்க போறீங்களோ அதே மாதிரி நானும் படிப்பை முடிச்சுக்குவேன். நான் யாரையும் பார்க்க விரும்பல.
நீங்க கிளம்புங்க..அர்ஜூன் என்னை அழைத்து செல்ல வருவான் தாரிகா கூற, அர்ஜூனிடமிருந்து பிரதீப்பிற்கு போன் வந்தது.
அர்ஜூன் எனக்கு நடந்த ஏதும் தெரியல. நீ வா..என்று கூற,
அண்ணா கேட்டா சொல்ல மாட்டிங்கிறா?
என்னிடமும் சொல்லல அர்ஜூன்.
நீ வா பார்த்துக் கொள்ளலாம் என்று போனை துண்டித்து கவினிடம் வந்து, என்ன செஞ்ச? சினத்துடன் பிரதீப் கேட்டான். அந்த பொண்ணு வேகமாக நகர்ந்து கொண்டாள்.
காரில் இருந்தவர்கள் வெளியே வந்தனர். தாரிகா நின்ற இடத்திலிருந்தே, அண்ணா எல்லாரும் உங்க வேலைகளை கவனியுங்கள். நீங்க ஜானுவை பாருங்கள். எங்களுக்குள் இனி ஏதுமில்லை. நாங்க பிரேக் அப் பண்ணிட்டோம் என்றாள்.
எழுந்த கவின், இல்லை..என்னால இதை ஒத்துக்க முடியாது. உன்னை பிரேக் அப் பண்ண முடியாது. நீ இல்லாம என்னால இருக்க முடியாது என்று அழுது கொண்டே கூறினான்.
ஜானு கவினிடம் வந்து, அண்ணா..நீங்க என்ன பேசினீங்க? கேட்டாள்.
அவன் தயங்க, அப்ப பேச கூடாததை பேசிட்டீங்க என்று அவனை முறைத்தாள்.
அக்கா வீட்டில் என் அறையில் என்னுடன் தான் இருந்தாங்க. போனதிலிருந்து அழுதுகிட்டே தான் இருந்தாங்க. ஏழு மணிக்கு தான் தூங்கவே செய்தாங்க. ஒரு மணி நேரம் தான். நீங்க பேசியது அவங்கள ரொம்ப பாதிச்சிருச்சு. நீங்க பேசியது சரியான்னு யோசிச்சீங்களா?
அவன் தாரிகாவை பார்க்க, அவள் வெறித்தவாறு அமர்ந்திருந்தாள். அதை கூட விடுங்க. இப்பவாது யோசிச்சு பேசியிருக்கலாம். என்ன பேசுனீங்களோ எனக்கு தெரியாது. அவங்க பிரேக் அப் பண்ற அளவு போயிருக்காங்கன்னா. நீங்க அந்த அளவு அவங்க மனச நோகடிச்சிட்டீங்க. இனி அவங்கள விட்டுருங்க. தொந்தரவு செய்யாதீங்க என்ற ஜானு தாரிகாவிடம்,
அக்கா..நீங்க சொன்னதை யோசிச்சேன். அதுக்கான பதிலும் கிடைச்சிருச்சு என்று அவளை அணைத்து அழாதீங்கக்கா. எதையும் மனசுல வைச்சி கஷ்டப்படாதீங்க. அவளுக்கு மட்டும் கேட்கும் படி,..அக்கா நான் மூவ் ஆன் ஆகப் போறேன். நீங்களும் முயற்சி பண்ணுங்க என்று அவளை விட்டு விலகி நின்றாள்.
தாரிகா அவளிடம், நீ நல்லா தான இருக்க?
நான் ஓ.கே தான் அக்கா.
இனி எந்த பிரச்சனையானாலும் அண்ணாவிடம் சொல்லணும். நீயா செய்கிறேன் என்று எதையும் செய்து பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதே.
ஓ.கே அக்கா.
துகிரா கவினிடம் வந்து, அவளை சிரிக்க வைக்க தான் இவ்வாறு செய்தோம் என்று கூற, கவின் தாரிகாவிடம் சென்று..
என்னை மன்னிச்சிரு ஜில்லு..ப்ளீஸ். என்னால முடியாது என்று அழுது கொண்டே கெஞ்சினான். அங்கே வந்த அவன் அக்காவும் மாமாவும் அவனிடம் வந்து, என்னடா பண்ற? கேட்டார்.
அக்கா..நான் தப்பு செய்துட்டேன். கோபத்தில் பேசக் கூடாததை பேசிட்டேன். அக்கா..அவளை போக வேண்டாம்னு சொல்லுக்கா. மாமா நீங்களாவது சொல்லுங்க மாமா என்று கதறினான்.
ப்ளீஸ்..என்னை விட்டுருங்க என்று அழுதாள் அவள்.
என்னால உன்னை விட முடியாது. இன்னும் ஒரு வாய்ப்பு மட்டும் கொடு ப்ளீஸ் என்று கெஞ்சினான். அவன் அக்காவுக்கு ரொம்ப கஷ்டமாக அவங்க தாரிகாவிடம் பேசினார்.
அவன் தப்பு செய்துட்டான்னு ஒத்துக்கிறானே? ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடும்மா. அவன் யாரிடமும் இந்த மாதிரி கெஞ்சி பார்த்ததேயில்லை என்று கலங்கினார்.
அக்கா..என்னையும் யாரும் இப்படி கேவலமா பேசியதேயில்லை. யாரு என்ன வேண்டுமானாலும் என்னை பேசட்டும். இவங்க பேசலாமா? இது முதல் முறை அல்லவே..
அக்கா, மாமா உங்கள நம்பாம தப்பா பேசினா? உங்களால் அதை தாங்க முடியுமா? அவருக்கு என்னை இரண்டு வாரமாக தான் தெரியும். எனக்கு அவரை நான்கு வருடங்களாக தெரியும்? அவரை பார்த்ததிலிருந்து காதலிக்கிறேன். அவர் என்னை பிடிக்கலைன்னு சொன்னா கூட தாங்க முடியும். ஆனா என்னை..வெறும் புகைப்படம் வைத்தும் மற்றவர் பேசுவதை வைத்தும் என்று அந்த பொண்ணை பார்த்து விட்டு, தப்பா பேசலாமா?
ராஷ்மி..இங்க வா..என்ன பேசுன? கவின் மாமா அந்த பெண்ணிடம் கேட்க,
அண்ணா..வேண்டாம். முடிஞ்சது.. முடிஞ்சதாவே போகட்டும் என்ற தாரிகா அகல்யாவிடம்,
இனி உங்க தம்பிய நான் பார்ப்பது இன்றே கடைசியா இருக்கட்டும் என்று அவள் முடித்து விட்டு கண்ணீருடன் தோய்ந்து அமர்ந்தாள். கவின் அம்மா,அப்பா,..நித்தி அப்பா அங்கே வந்தனர். தாரிகா பேசுவதை கேட்டிருப்பார்கள்.
அவர்கள் கவினை அழைத்தனர். நித்தி அப்பா அவனிடம் வந்து, விட்டுரு மாப்பிள்ள..வா போகலாம் என்று அழைத்தார். அவர் கையை உதறிய கவின், நான் உன்னை தொந்தரவு செய்யல. ஆனால் படிக்க கல்லூரிக்கு வரணும் என்றான்.
அவள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். கவினை தடுக்க சொல்லி ஜானு ஆதேஷை பார்த்து கண்காட்டினாள். அவன் அவளிடம் முடியாது என்று கை ஆட்டினான். அவள் அவனை முறைத்தாள்.
ஆதேஷ் அம்மா தாரிகாவை அழைக்க ஆன்ட்டி என்று அவரை கட்டிக் கொண்டு,
ஆன்ட்டி..நான் அம்மாவை பார்க்கணும். எனக்கு யாரும் வேண்டாம். நான் இவங்கள பாக்காமல் பேசாமல் பழகாமல் இருந்திருக்கலாம். நான் தப்பு செஞ்சுட்டேன் என்று தாரிகா மேலும் அழ, கவின் மனம் உடைந்தது. அவனும் அழுதான்.
போதும் நிறுத்துடா. ஏன்டா இப்படி பண்ண? என்று அகல்யா கவினை அடித்தாள். கவின் மாமா அவளை தடுக்க,
என் தம்பி, யாரிடமும் இப்படி பேசி பார்த்ததில்லை. ஏன்டா? ஏன்? ஏன்? மீண்டும் அவனை அடித்துக் கொண்டு கத்தினாள்.
எல்லாத்துக்கும் காரணமே இவர் மீதுள்ள கோபம் என்று அவன் அப்பாவை காட்டினான். வீட்டு பிரச்சனை, இதில் அவள் வேறு யாருடனோ நெருக்கமாக இருக்கும் புகைப்படம். அவளை காதலிப்பவனுடன் அவள் பேசுவது எனக்கு பிடிக்கலை என்று கத்தினான்.
கவின் அம்மா முன் வந்து, அவர் உன்னை என்னடா செய்தார்?
குடிச்சிட்டு உன்னிடம் சண்டை போடுறார். எப்பொழுது பார்த்தாலும் பணம் கேட்டு உயிரை வாங்குகிறார். அவர் உனக்கு நல்ல புருஷனாவும் இல்லை.எங்களுக்கு நல்ல அப்பாவாகவும் இல்லை என்று கத்தினான்.
என்னடா சொன்ன? என்று அவனை அவன் அம்மா அடித்து விட்டு, ஆமாம்டா அவர் குடிப்பார். பணம் கேட்டு தொந்தரவு செய்வார். ஆனால் எனக்கு அவர் நல்ல புருஷன் தான்டா.
நாங்க காதலிச்சு தான் திருமணம் செய்தோம். அவர் எடுக்கும் எல்லாவற்றிலும் நஷ்டம். மேலும் முயல முடியாமல் இப்படி செய்கிறார். ஆனால் என் மீது அவருக்கு இன்னும் காதல் இருக்கு. நாங்க சண்டை போடுவோம். வார்த்தைகள் தவறாது. உனக்கே தெரியும் நான் ஆண்கள் வேலை பார்க்கும் இடத்தில் தான் வேலை செய்கிறேன். ஒரு நாள் கூட நம்பாத பார்வை அவர் என்னை பார்த்ததில்லை.காதலில் முதலில் தேவை அன்பும் நம்பிக்கையும். அது இரண்டும் அவருக்கு என் மீது உள்ளது. அதற்கு மேல் அவர் எனக்கு எதுவும் செய்ய வேண்டாம்.
நானும் அவரும் சண்டை போடுவது உங்களுக்காக மட்டும் தான். உங்களுக்கென்று அவர் ஏதும் சேர்த்து வைக்கவில்லை. உங்களுடன் பழகவில்லை. நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படுவது பொறுக்க முடியாமல் தான் அவரை வேலைக்கு செல்ல சொல்லி சண்டை போடுவேன். அவரால் குடியை நிறுத்தவும் முடியல..அதுவும் பிரச்சனைக்கான காரணம் தான்.
அப்புறம் என்ன? அந்த பொண்ணு வேறு ஒருவனுடன் பேசுறது பிடிக்கல. அப்படின்னா.. அவளை கல்யாணம் செய்த பின் அவளை வெளியே விடாமல் வீட்டிற்குள் அடைத்து வைக்கப் போகிறாயா?
அந்த பொண்ணுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட. அண்ணா சொன்னப்ப அந்த பொண்ணு மேல் தான் கோபம் வந்தது. ஆனால் இப்ப தான் தெரியுது. தப்பு முழுவதும் உன்னுடையது. காதலில் பிரச்சனை வரும். இருவரும் சேர்ந்து தான் சரி செய்யணும் இல்லைன்னா உங்க காதல் மாதிரி உடைந்து தான் போகும்.
அந்த பொண்ணு உனக்கு ரெண்டாவதா வாய்ப்பு கொடுத்து தான் இங்கு இருந்திருக்கா.ஆனால் நீ அதையும் கெடுத்துட்ட.
நீ போம்மா..நல்ல பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோ..அவர் கூற, யாரும் கவின் அம்மாவிடம் இந்த வார்த்தையை எதிர்பார்க்கலை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கவின் தாரிகாவிடம் சென்று, ப்ளீஸ் தாரி..என்னை மன்னிச்சிரும்மா. நான் புரிஞ்சுக்காம இருந்துட்டேன். நீ கல்லூரிக்கு மட்டுமாவது வாம்மா. நீ என்னுடன் பேசலைன்னாலும் உன்னை பார்க்கவாது செய்வேன் என்று கெஞ்சினான்.
தாரிகாவிற்கு தாரை தாரையாய் கண்ணீர் பொழிய, அவள் இனி உன்னை பார்க்கவே மாட்டாள் என்றொரு சத்தம்.