அத்தியாயம் 16

ஜானு ஆதேஷை மனதில் திட்டியவாறு தாரிகாவையும் இழுத்துக் கொண்டு நுழைந்தது ஆதேஷ் அறையில்.

ஏய்..எங்க போறீங்க? என்று அவனும் அறைக்குள் வந்தான்.

இது என்னோட அறை. வெளிய போங்க. ஜானு வாய் முணுமுணுக்க,

எனக்கு ஒரு தேங்க்ஸ் சொல்ல கூட உனக்கு தோணலையா? மாமாவிடமிருந்து உன்னை காப்பாற்றினேன்.

உனக்கு மூளையே இல்லையா? உன்னை போய் மாமான்னு கூப்பிட சொல்றாங்க? மூளையில்லாத மாமான்னு தான் சொல்லணும் என்றாள்.

ஏய்..என்று அதட்டலாக ஆதேஷ் ஜானு அருகே வந்தான்.

அப்புறம் என்னக்கா? நான் தண்ணிக்காக கூட சமையலறைக்கு செல்ல மாட்டேன். நான் தான் அழைத்து சென்றேன் என்று அண்ணாவுக்கு  நல்லா தெரிஞ்சு போச்சு. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ?

மாமாவுக்கு தெரிஞ்சிடுச்சா?

நீ செஞ்ச மூளையில்லாத வேலையில நல்லா மாட்டிக்கிட்டேன். வேணும்னா உன்னை மூளையில்லா மாமான்னு கூப்பிடுறேன்.

என்ன சொன்ன? என்று சீற்றமாக அவன் ஜானுவை நோக்கி வர, அவள் பயந்து பின் செல்ல அவளது கையை பிடித்து அவனது விரல்களை அவள் விரல்களோடு கோர்த்து அவளது விரல்களை மடக்கி பின் நகர்த்த, அவள் வலியால் கத்துவதற்குள் அவன் மறுகையால் அவளது வாயை பொத்தினான்.

என்ன மடக்கவா? கேட்டான்.

ஆது என்ன பண்ற? அவளை விடு தாரிகா அவனை தடுத்தாள்.

பாரு தாரி. ரொம்ப பேசுறா? என்று தாரிகாவிடம் புகார் அளித்தான்.

ஜானு கையை விட்டு, நான் உனக்கு உதவ தான் எண்ணினேன். ஆனால் உன்னை பற்றி தான் எனக்கு ஏதும் தெரியாதே. அது சொதப்பி விட்டது.

நீ எதுக்கு ஆதுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த? தாரிகா கேட்டாள்.

இவள் எதையாவது உளறி தாரிகாவிற்கு கஷ்டமாகி விடக் கூடாது என்று பேச தொடங்கிய ஜானு வாயை அடைத்து தள்ளி அழைத்து சென்று, அவளிடம் எதையும் உளறி வைக்காதே. தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவா என்று அவன் உண்மையான வருத்தத்துடன் கூறினான்.

அதை பார்த்த ஜானு இப்படி ஒரு காதலா? என்று ஆதேஷை பார்த்து வியந்தாள்.

என்னடா அந்த பொண்ணை மிரட்டுறியா? என்று தாரிகா கேட்க,

இல்லக்கா..பாவம் மூளைக்கட்ட மாமாவுக்கு ஒண்ணுமே தெரியல? என்று ஆதேஷை பார்த்தாள்.

அவன் ஜானுவை விரட்ட, தாரிகா அவனை தடுத்து நீ ஏதும் யோசிக்காதே. நான் நல்லா இருக்கேன் என்று வெளியே வர இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஜானு மெதுவாக நடப்பது போல் பாவனை செய்தாள். தாரிகா அவளிடம் வரவும் திரும்பி ஆதேஷ் அறையை பார்த்தாள்.

ஜானு அறைக்குள் இருவரும் உள்ளே வந்தனர். ஜானு தாரிகாவிற்கு கட்டிலை காட்ட, இருக்கட்டும் நான் கீழே படுத்துக் கொள்கிறேன் என்றாள் தாரிகா.

கட்டில் பெரியது தான். நாம் இருவருமே படுத்துக் கொள்வோம் என்றாள் ஜானு. இருவரும் படுத்துக் கொண்டனர். ஆனால் ஜானு தூங்காமல் இருக்க, தாரிகா பேசினாள்.

உனக்கு தெரியுமா? துகிரா தவிர, ஆதுவை யாரும் இப்படி டீஸ் பண்ண மாட்டாங்க. அவனும் யாரிடமும் அதிகமா பேசவே மாட்டான். நானும் அவனை போல தான்.அதனால் தான் அவனுக்கு என்னை பிடித்து விட்டதோ? என்னமோ? அவன் கஷ்டப்படுவது எனக்கு நல்லா தெரியுது.

ஆனால் ஜானு உன்னோட அண்ணாவை உரிமையா மாமான்னு கூப்பிடுறான். அவன் இது போல் உறவுடன் இருந்ததேயில்லை. அவன் வருத்தமா இருந்தாலும் ஏதோ நல்லா இருக்குற மாதிரி தெரியுது. அவனுக்கு உன்னோட அண்ணாவை பிடிச்சிருச்சு போல.

அண்ணாவையா?

ம்ம்..அவன் நடந்து கொள்ளும் விதம் சொல்லுது. அவன் உன்னிடமும் கொஞ்சம் உரிமையா தான் நடந்துக்கிறான். இதுவரை எந்த பொண்ணும் பக்கத்தில் வந்தால் விலகிச் செல்வான். என்னிடம் கூட இடைவெளி விட்டு தான் இருப்பான். அவன் உன்னிடம் சண்டை போட்டது. அதுவும் இப்பொழுது செய்த செயல் எனக்கே, இவன் ஆது தானா? என்று சிந்திக்க வைத்தது.

உங்களை மாமா ரொம்ப காதலிக்கிறாங்க? நீங்க ஏன் ரெண்டாவது வாய்ப்பு கொடுக்கக் கூடாது?

மாமாவா? அப்புறம் ஏன் அவன் முன் அழைக்க மாட்டிக்கிற?

அவர் முன் வந்தால் மாமான்னு வர மாட்டிங்குது என்றாள் ஜானு. தாரிகா அவளை வியந்து பார்த்துக் கொண்டு மாமான்னு சொல்ற, அவர்ன்னு சொல்ற? கேட்டாள்.

தெரியலையே? தானா வருது. நீங்க பேச்சை மாத்தாதீங்க?

என்னால முடியாதே. காதல் ஒருமுறை தான் வரும். அதை நம்மை விட்டு போக வைப்பது நம் உடலிலிருந்து உயிரை பிரிப்பது போன்றது. எனக்கு எப்போதும் கவின் சீனியர் தான் என் காதல்.

ஆனால் அண்ணா ரொம்ப பேசிட்டாரே?

அழுகையை கட்டுப்படுத்திய தாரிகா, ஆமா பேசக்கூடாததை பேசி விட்டார். எனக்கு ரொம்ப வலிக்குது என்று அழுதாள் தாரிகா. ஜானு அவளை அணைத்து சாரிக்கா..நான் வேற நினைவு படுத்தி விட்டேன்.

அக்கா..அப்ப அண்ணாவிடம் பேசி விடுவீங்களா?

என் காதலை வைத்து அவருக்கு என்னோட வலியை புரிய வைக்கப் போகிறேன்.

எப்பொழுது பேசுவீங்க?

அவர் மனசுல என்னை பற்றிய தவறான எண்ணமே வராம இருந்தா. நான் பேசிடுவேன்.

அக்கா..அப்ப மாமா? என்று ஆதேஷை கேட்டாள்.

அவனுக்கு என்ன பொண்ணா கிடைக்காது? அழகாக இருக்கான். பிடிச்சிருந்தா உயிரா இருப்பான். நீ சொன்ன மாதிரி மூளையில்லாமல் இல்லை. அவனும் நல்லா படிப்பான். அவன் அம்மா நிறைய பிஸினஸ் வைச்சிருக்காங்க. எல்லாத்திலும் அவன் பெஸ்ட். நல்ல பொண்ணா கிடைப்பா. ஆனால் அம்மா உழைப்பு அனைத்தையும் அவன் தான் பார்த்துக்கப் போறான்.

ஆன்ட்டியிடம் பேசி இருக்கேன். ஆனால் அவங்க வேலையை பற்றி தெரியாது என்றாள் ஜானு.

அவங்க கம்பெனி பெயரை சொல்லி நீ கூகுல்ள சர்ச் பண்ணி பாரு என்றாள்.

நான் மாமாவுக்கு ரெண்டாவது வாய்ப்பு ஏற்படுத்தி தர தான் அழைத்து வந்தேன் என்றாள் தாரிகாவை பார்த்துக் கொண்டே.

வாட்? என்றாள் தாரிகா.

சாரிக்கா..என்னை சுற்றி இருக்கிறவங்க கஷ்டப்பட்டா எனக்கு பிடிக்காது. அதனால் தான் இப்படி செய்து விட்டேன் என்று தாரிகா கையை பிடித்தாள்.

அவனுக்கு தெரியுமா?

தெரியும். மாமாவிடம் சொல்லாம தான் அழைத்து வந்தேன் என்று அவள் செய்ததை கூறினாள்.இப்பொழுது மாமா இதை சொல்லக் கூடாதுன்னு தான் சொன்னாங்க. நீங்க கஷ்டப்படுவீங்கன்னு சொன்னாங்க.

உனக்கு உன் மாமாவை எவ்வளவு பிடிக்கும்?

எனக்கு மாமாவையா? என்று ஆதேஷை என்று ஜானு யோசிக்க, தாரிகா அபியை கேட்டாள்.

எனக்கு இப்பொழுது தானே தெரியும் என்றாள்.

இப்பொழுது தான் தெரியுமா? என்று ஜானுவை பார்த்தாள்.

ஆமாம். நேற்று தானே வந்தாங்க என்றான்.

நகைத்துக் கொண்டு நான் உன் அபி மாமாவை பற்றி கேட்டேன் என்றாள் நக்கலாக.

அபி மாமாவா? என்று இழுத்து விட்டு, ம்ம்..ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றாள்.

உன்னோட அபி மாமாவை வேற யாராவது காதலிச்சா நீ ஏத்துப்பாயா?

என்ன சொல்றீங்க? என்று அழுவது போல் கேட்டாள்.

சும்மா தான் கேட்டேன் விட்டால் அழுது விடுவாய் போல.

ஆமாம். என்னால் மாமாவை விட்டு இருக்க முடியாது என்றாள் ஜானு.

அப்படியா? உன்னோட மாமாவிடம் இன்று பேசினாயா?

அச்சோ..ரெண்டு நாளா மாமாவிடம் பேசலையே என்று போனை எடுக்க சென்றவளை தடுத்து, நீ உன்னோட மாமாவை காதலிச்சா பேசாம இருக்க முடியாது. இத்தனைக்கும் நீங்க எந்த சண்டையும் போடல..என்றாள் தாரிகா.

என்ன சொல்றீங்க?

நீ காதலிக்கிறவங்களை பார்க்காமல் பேசாமல் இருப்பது முடியாத காரியம். ஆனால் நீ அபி சீனியரிடம் சரியாக பேசுவது கூட இல்லை போலவே. இது எப்படி காதலாகும்?

நீ உன்னோட மாமாவை பார்த்து எத்தனை நாளாகிறது?

ஒரு வாரம் இருக்கும் என்றாள்.

அது என்ன இருக்கும்? இத்தனை நாள் ஆகிறது என்று அடித்து கூற வேண்டும் என்று தாரிகா மணியை பார்த்து, அவள் கவினை சந்தித்து எவ்வளவு நேரமாகிறது என்று சரியாக கூறினாள்.

இப்ப பாரேன் என்று அர்ஜூனுக்கு போன் செய்து, அண்ணா ஸ்ரீயும் நீயும் சந்தித்து எத்தனை வருடமாகிறது? என்று கேட்டாள்.

எதுக்கு திடீர்ன்னு கேக்குற தாரி?

சும்மா சொல்லுடா?

கவின் மேலுள்ள சினத்தில் பைத்தியம் முத்தி விட்டதா? என்று கேட்டான்.

ஜானு சிரிக்க, யாரும்மா அது? அவன் கேட்க,

டேய்..கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு இல்ல நீ செத்த என்று மிரட்டினாள் தாரிகா.

அர்ஜூன் தான் நாள், நிமிடம், நொடி கூட சொல்வானே? அவன் சொல்வதை கேட்டு ஜானு அதிர்ந்தாள்.

வைடா. அப்புறம் பேசலாம்.

அவளாக போன் செய்து வைக்க சொல்றாளே? அர்ஜூன் புலம்பிக் கொண்டே வைத்தான்.

என்ன ஜானு?

எப்படிக்கா?

இது தான் காதலின் ஆழம். அவர்கள் பற்றிய சிறு விசயம் கூட மனதில் ஆழமாக பதிந்து விடும் வலியையும் சேர்த்து என்று வருத்தப்பட்டாள்.

ஜானு அபியை சந்தித்ததை யோசிக்க அவளுக்கு சுத்தமாக நினைவில்லை. அவளுக்கு குழப்பமானது.

அவள் தாரிகாவிடம் அதை சொல்லி கேட்டாள்.

ஜானு..இது மட்டுமல்ல. அவங்க தூரமா இருந்தா அவங்களையே நினைச்சுக்கிட்டு இருப்போம். பக்கத்துல இருந்தா ரசிச்சுக்கிட்டு இருப்போம். அவங்கள யாராவது கஷ்டப்படுத்துனா அது நம்மை பாதிக்கும்.

பாதிக்குமா?

ம்ம்..அவங்கள விட நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவங்களுக்காக செய்யாத விசயத்தை கூட செய்வோம். அது ஆபத்தாக என்று தெரிந்தும் செய்வோம் என்று தாரிகா அர்ஜூனை நினைத்தால்.

நீயே யோசித்து பார். நீ உன் அபி மாமாவை காதலிக்கிறாயா? என்று தெரிந்து விடும்.

சரிங்க அக்கா என்று திரும்பி படுத்துக் கொண்டாள் ஜானு. அவளை பார்த்து நகைப்புடன் தாரிகா கண்ணை மூட கவின் முன் தெரிந்தான். அவளுக்கு அழுகை வர, அழுது கொண்டே தூங்கினாள்.

அர்ஜூனை ஹாஸ்பிட்டலில் விட்டு சைலேஷ் குடும்பம் அவர்கள் வீட்டிற்கு சென்றனர். தாத்தாவிடம் ஏற்கனவே பிரச்சனை முடிந்தது என்று கூறியதால் அவர் துக்கத்தை தழுவி இருந்தார். ஆனால் யாசு நடந்தது முழுவதையும் அறிந்து கொள்ள காத்திருந்தாள். ஆனால் அலைந்த அசதியில் நித்தி தூங்கி விட, சைலேஷ் அவளை எழுப்பாமல் அவன் அறைக்கு தூக்கி சென்றான். கைரவை பிடித்து விசாரித்தாள் யாசு.

செம்ம டயர்டா இருக்குப்பா புலம்ப, பரவாயில்லை சொல்லிட்டு ஓய்வெடுக்கலாம் என்று யாசு அவனை விடாமல் பிடித்துக் கொண்டாள். வேறு வழியில்லாமல் சொன்ன பிறகு தான் விட்டாள்.

அர்ஜூன் ஸ்ரீ அறை கதவை திறக்க, அதை அடைத்து வைத்திருப்பார் அஞ்சனாம்மா. அர்ஜூன் அம்மாவிடம் தாரிகா பற்றி அவனும் சொல்லி இருப்பான். அவளும் போனில் கூறி இருப்பாள்.

அர்ஜூன் கதவை தட்டி சத்தமிட்டான். அவர் கதவை திறக்க, அம்மா எதுக்கு பூட்டுனீங்க? முடியலப்பா என்று ரொம்ப சோர்வாக அமர்ந்தான். ஸ்ரீ அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து, என்னம்மா…என்னால தூக்கம் கலஞ்சதா? அலுப்பாக கேட்டான்.

எதுக்கு அர்ஜூன் தாரிகா விசயத்துல தலையிட்டு என்ன பண்ணி வைச்சிருக்க? தாரிகா அம்மா அவனிடம், பாப்பா ரொம்ப அழுதாளாடா? கேட்டார்.

சாரிம்மா..அவன் பேசாம அவ கஷ்டப்பட்டா. அதனால் தான் இவ்வாறு செய்து விட்டேன். நான் நினைத்து ஒன்று நடந்தது ஒன்று.

ரொம்ப நாள் பேசாம இருக்க மாட்டாங்கம்மா. அம்மா..அவன் கோபத்துல தான் அப்படி பேசிட்டான். தப்பா எடுத்துக்காதீங்க.

அது எப்படிப்பா பேசலாம். நான் மன்னிக்கவே மாட்டேன் என்றார்.

அம்மா..ப்ளீஸ் நாளைக்கு பேசுவோம்மா. ரொம்ப டயர்டா இருக்கு. அந்த நாற்காலியிலே தலை சாய்த்தான்.

அம்மா அறையை பூட்டி வைக்காதீங்கம்மா..என்றான்.

என்னடா பேசுற? ஸ்ரீயை இந்நிலையில் வைத்துக் கொண்டு திறந்து வைக்க முடியுமா? என்று அவர் கேட்க, நிமிர்ந்த அர்ஜூன் அறைக்கு யாரும் வந்தாங்களா? கேட்டான்.

நீ தான் ஒருவனை பார்த்துக் கொள்ள சொன்னாயே அவன் தான் வந்தான். ஸ்ரீயை பார்த்து அ..அகில் வந்தானா? என்று பதறினான்.

ஸ்ரீ சினத்துடன் அவனை பார்த்தாள். வந்தான்..அவன் அழைத்துக் கொண்டே வந்ததால் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டேன்.

சற்று நொடிகள் அமைதியாக இருந்தவன் தலையை நிமிர்த்தி, அம்மா..நான் இங்கே இருப்பது உங்களுக்கு பிரச்சனை இல்லையா? என்று ஸ்ரீயை பார்த்தான்.

அவள் நம்பிக்கையுடன் அவனை பார்த்தாள். அந்த பார்வையில் ஸ்ரீயின் காதல் தெரிந்தது அர்ஜூனுக்கு

நீ இருந்தா பாதுகாப்பு தான். ஆனால் நம்பிக்கைலாம் இல்லை என்று அவர் கேலி செய்ய,

அம்மா…நான் நல்ல பையன் என்று ஸ்ரீயை பார்த்து, அப்படிதான ஸ்ரீ? என்று கண்ணடித்தான். அவள் விழித்தாள்.

நீ உள்ள போய் தூங்கு அர்ஜூன். ரொம்ப சோர்வா இருக்கிற மாதிரி இருக்கு.

நீங்க தூங்கலையாம்மா..இல்லப்பா தூங்க முடியல. அம்மா அவளை நினைச்சு உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க. நான் காரில் வந்து கொண்டிருந்த போது அவள் சாதாரணமாக இருப்பது போல் தான் பேசினாள்.

என் காதலை பற்றி..என்று தொடங்கிய அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து விட்டு, அம்மா நீங்க தூங்குங்க என்று அங்கிருந்த மேசையை இழுத்து போட்டு காலை அதில் நீட்டி நாற்காலியின் கை பக்கம் முதுகை சாய்த்து படுத்தான். அம்மா உள்ளே படுக்க சென்றார்.

அர்ஜூன் ஒரு நிமிடம் என்று ஸ்ரீ எழுந்தாள்.

ஸ்ரீ என்ன பண்ற? நீ எதுக்கு எழுந்த?

அவளுடைய காலை நீட்டிக் கொண்டே அவனருகே மெதுவாக நகன்று வந்து, நீ எழாதே என்று அவனுடைய லேப்பை எடுத்து அதற்குரிய உறையில் இட்டு பையில் எடுத்து வைத்தாள்.பின் அந்த மேசையை அவன் தலை அருகே கொண்டு வந்து, இப்ப சரியா படுத்துக்கோ என்று அவன் முகத்திற்கு நேராக வந்து புன்னகையுடன் நிமிர்ந்தாள்.

அவளை நிமிர விடாமல் அவள் தலையை இழுத்து முத்தமிடுவது போல் வந்து தேங்க்ஸ்டி..என்றான் ஏக்கத்துடன். அவள் வேகமாக விலகி சென்றாள். அவன் ஸ்ரீயை பார்த்து சிரித்தான். அவள் இதயமோ வேகமாக துடித்தது. நெஞ்சில் கை வைத்து கட்டிலில் படுத்தாள். அர்ஜூன் தூங்கிய பின் அவள் தூங்காது அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

E