அத்தியாயம் 15

பிரதீப் கவினை அழைத்து அவரது வீட்டிற்கு வர வைத்தார். அனைவரும் தூக்கிக் கொண்டிருக்க, ஜானு தூக்கமில்லாமல் இருந்தாள். அவள் அண்ணனின் போன் சத்தம் கேட்டு எழுந்து மாடியிலிருந்து அவன் பேசுவதை பார்த்தாள்.

கொஞ்ச நேரத்தில் கவின் அங்கே வந்தான். இந்நேரத்தில் அண்ணா எதுக்கு வீட்டுக்கு வந்துருக்காங்க? சிந்தித்தவாறு கீழே மறைந்து நின்று கொண்டாள்.

பிரதீப் கவினை உற்று பார்த்து, நீ ஒரு பொண்ணுகிட்ட இப்படி தான் பேசுவாயா?

அண்ணா..அவள் என்று அழுதான்.

எதையும் முழுதாக அறிந்து கொள்ளாமல் பேசுவது தவறு.

அண்ணா..இந்த நேரம் அவன் வீட்டில் அவளுக்கென்ன வேலை? கேட்டான்.

சந்தேகமா? வேற ஏதாவது பிரச்சனையால் கூட சென்றிருக்கலாமே?

என்ன பிரச்சனையாம்? கவின் கோபமாக கத்த, அவனை முறைத்த பிரதீப் அவனிடம் உனக்காக கூட அந்த பொண்ணு சென்றிருக்கலாம் என்று கவினை ஆராய்ந்தார்.

அவ..ஆதேஷிற்கு நோ..சொன்ன போது என் மீதுள்ள காதலால் கூறுகிறாள் என்று நினைத்தேன். ஆனால் அவள் ச்சீ..என்றான்.

பிரதீப் அவனை ஓங்கி அடித்து விட்டு, காதலிக்கிற பொண்ண பத்தி இப்படி பேசுற? அவள் இப்படி செய்பவள் தானா என்று யோசிக்க மாட்டாயா? என்ன பேசி வைச்சுருக்க? அந்த பொண்ணு மனசு என்ன பாடுபடும் என்று திட்டினான்.

அர்ஜூன் உன்னை பார்க்கணும்னு சொன்னான் என்று கவினை இழுத்துக் கொண்டு செல்ல, அண்ணா மாமா வீட்டாளுங்க எல்லாரும் வந்திருக்காங்க.

பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் என்று பிரதீப் கடிந்தான். பண்ணை வீட்டுக்கு தான். அங்கே யாரும் இருக்க மாட்டாங்க என்று அவனை இழுத்து சென்றான்.

ஜானு வேகமாக ஜர்கினை போட்டுக் கொண்டு, மற்றொன்றை எடுத்து ஆதேஷ் அறை கதவை தட்டினாள்.

அவன் எழுந்து வந்து துகி, தூங்க கூட விட மாட்டாயா? கேட்டுக் கொண்டே தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தான். ஜானு அவனை முறைக்க, ஜானு..நீயா? இங்க என்ன செய்ற?

வெளிய வாங்க..உங்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு வாங்க என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

வாய்ப்பா? என்ன வாய்ப்பு? ஆதேஷ் கேட்டான்.

இத போட்டு வாங்க. வெளிய ரொம்ப குளிரும் அண்ணாது தான் என்று ஆதேஷிற்கு ஒரு ஜர்கினை கொடுத்து அவன் போட்டவுடன் அவனை இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

எங்க போறோம்? சொல்லு?..ஆதேஷ் கேட்க, நீங்களே பாருங்களேன் என்று அவர்களது பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றாள்.

அர்ஜூனும் கைரவும் காரிலிருந்து வெளியே வந்தனர். கவினை பார்த்தவுடன் அர்ஜூனும் கைரவும் மாறி மாறி அவனை அடிக்க, அழுது கொண்டே தாரிகா அவர்களிடம் வந்தாள்.

அண்ணா என்ன செய்றீங்க? என்று கவினை மறைத்து நின்றாள். சைலேஷ் நித்தி காரிலிருந்து இறங்க, மற்றொரு பக்கம் ஆதேஷ் ஜானு வந்தனர்.

தாரிகாவை எதிர்பார்க்காத ஆதேஷ்..தாரி இங்க என்ன பண்ற? கேட்டான்.

ஆதேஷை பார்த்த தாரிகா அவனிடம் ஓடி வந்து, அவனது கையை பிடித்துக் கொண்டு அழுதாள்.

எதுக்கு அழுற? என்னாச்சு? அண்ணா என்று அர்ஜூனை பார்த்தான்.

பிரதீப்பிற்கு ஜானுவை பார்த்ததும் புரிந்தது. ஆதேஷை அவள் தான் அழைத்து வந்திருக்கிறாள் என்று.

அர்ஜூனும் கைரவும் கவினை அடிப்பதை போல் இருப்பது தாரிகாவின் அழுகையை பார்த்து தாரிகாவின் கையை எடுத்து விட்டு, கவினிடம் வந்தான் ஆதேஷ்.

என்ன செஞ்சீங்க சீனியர்? ஆதேஷ் கேட்டான். அவனும் கவினிடம் சண்டை போடுவானோ? என்று பயந்து தாரிகா அவனிடம் வந்து, ஒண்ணுமில்லைடா..நீ எப்படி வந்த? என்று கேட்டாள்.

அர்ஜூன் கவினிடம், நீ பேசாமல் போனதால் அவள் வருத்தமாகவே இருந்தாள். அதனால் உன்னை பேச வைக்க தான் கைரவிடம் நான் தான் அனுப்ப சொன்னேன்.அப்படியாவது பேசுவாய் என்று தான் எண்ணினேன். ஆனால் நீ என்ன பேசிட்ட?

ஏன்டா, அவள் எப்படிடா இங்க வருவா? பெருசா கோபப்படுற? உங்க குடும்பத்துல கல்யாணம் இருக்கு. அதை எல்லார் முன்னும் பேசி தானே அவளுக்கும் தெரியும். எப்பவாது நீ அவளை ஊருக்கு கூப்பிட்டாயா?

இப்ப வந்தாலும் நீ உன்னோட குடும்பத்துக்கு அறிமுகப்படுத்துவாயா? உனக்கே வேலை நிறைய இருக்கும். அவள் இங்கே வந்து உன்னிடம் பேச முடியாமல் தவிப்பதற்கு பதில் சென்னையிலே இருக்கலாம்னு நினைச்சது தப்பாடா.

என்ன பேசிட்ட டா அவள பத்தி..யார் கூப்பிடாலும் போறவன்னு நினைச்சியா? அர்ஜூன் சினத்துடன் கத்தினான். தாரிகா அழுதாள்.

அண்ணா..என்ன சொல்றீங்க? என்று ஆதேஷ் கவினை முறைத்தபடி கேட்க, கைரவ் அனைத்தையும் கூறினான்.

அவ எத்தனை பசங்களிடம் பேசி பார்த்திருக்கீங்க? அவளுக்கு சின்ன வயசுல இருந்து தெரிந்த ஒருவன் நான் மட்டும் தான். ஆனா இப்படி பேசி வைச்சிருக்கீங்க என்று ஆதேஷ் கவின் சட்டையை பிடித்தான்.

எனக்கு அவ கிட்ட பிடிச்சதே அந்த ஒழுக்கமான குணம் தான். அமைதியாக அவள் உண்டு அவள் வேலை உண்டுன்னு இருப்பா. அக்கா இறந்த பிறகு அவளும் ஆன்ட்டியும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா?

அவள யாழு அக்கா எப்படி பார்த்துக்கிட்டாங்க தெரியுமா? அவங்க போன பிறகு அவள் வேலைக்கு போனா? அங்க இருந்த ஒருவனது தொந்தரவால் வேலையை விட்டாள். அந்த குமாரன் வேற அடிக்கடி தொந்தரவு செய்வான்.

பின் கல்லூரி சேர்ந்த பின் அவளுக்காக வேலை தேடிய போது அங்கேயும் உங்கள பார்த்தோம். ஆனால் நடந்த பிரச்சனையில் அவளை வேலைக்கு போக வேண்டாம்னு ஆன்ட்டி சொல்லிட்டாங்க. அப்புறம் அர்ஜூன் அண்ணா வந்த பின் தான் எல்லாமே சரியா இருந்தது போல் இருந்தது. நீங்களும் அவள் காதலை ஏத்துக்கிடீங்கன்னு சந்தோசமா இருந்தா. அவள் மகிழ்ச்சியை பார்த்து தான் நான் இடையே சென்றால் என்னை நினைத்து வருந்துவாலே என்று தான் விலகி இருந்தேன். ஸ்ரீயிடம் இருக்கும் போது அவள் அக்காவுடன் இருப்பது போல் சந்தோசப்படுவாள்.

எனக்கு என்னோட காதலை விட, அவ சந்தோசமா இருக்கணும்னு நினைச்சேன். அதான் விலகி இருந்தேன். ஆனால் அவகிட்ட என்ன பேசிட்டீங்க சீனியர். அவள் உங்களை எவ்வளவு காதலித்தாள். யாருடன் அவளை பார்த்தாலும் தவறாக தான் நினைப்பீர்களா?

நீங்க சுத்துனீங்களே சீனியர்..பொண்ணுங்களுடன். அதையும் அவள் பார்க்க தான் செய்தாள். ஆனால் ஒரு வார்த்தை உங்களிடம் கேட்டாலா? நித்தி சீனியர் சிறு வயதிலிருந்து பழக்கம் என்பதால் அவங்களுக்கும் உங்கள பிடிக்குமோன்னு தான் ஒரு முறை கோபப்பட்டாள். ஆனால் மறுபடியும் அதை பெரியதாக எடுக்காமல் தானே உங்களுடன் பேசினாள். பழகினாள் என்று தாரிகாவை பார்த்தான்.அவள் கண்கலங்க ஆதேஷை பார்த்தாள்.

நீ இவ்வளவு தூரம் என்னை புரிஞ்சு வைச்சிருக்கிறாயா? நீ என்னை நம்புவேல ஆது?

நம்பியதால் தான் இவ்வளவும் பேசினேன். அண்ணா..இவள எதுக்கு கூப்பிட்டு வந்தீங்க? தாரி நீ கிளம்பு. அர்ஜூன் அண்ணா அவளை அழைச்சிட்டு போங்க என்றான்.

அர்ஜூன் ஒரு நிமிஷம் என்று கவினிடம், நான் அனுப்பிய புகைப்படத்தை பார்த்தாயே? வீடியோவை பார்த்தாயா? கேட்டான் கைரவ்.

வீடியோவா? என்று அர்ஜூன் கேட்டான். நந்துவும் அர்ஜூனிடம் ஏதும் கூறி இருக்க மாட்டான். கைரவ் வீடியோவை காட்டினான். அனைவரும் சூழ்ந்து அதை பார்த்தனர்.

தாரிகா கையை ஒருவன் பிடித்த போது அவளுக்கு கவின் நினைவு தான் வந்திருக்கும். அதனால் தான் சீனியர்.. சீனியர்.. என்று கத்தியிருப்பாள். அவன் இல்லாததை உணர்ந்து கைரவை பார்த்து அண்ணா..அண்ணா..என்று அழைத்திருப்பாள். அதனால் தான் கைரவ் தாரிகா கையை பிடித்திருப்பான். இதை பார்த்த கவினிற்கு முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

கவின் பேச தொடங்கும் முன் சைலேஷ் அவன் முன் வந்து, எங்கள பார்த்தா எப்படி தெரியுது? எங்க வீடு என்ன ஹோட்டலாடா? என் தம்பி திமிறா தான் பேசுவான். ஆனால் பொண்ணுங்க பின்னாடி சுத்த மாட்டான். அவன் பின்னே சுத்துன ஒரே பொண்ணு உங்க ஸ்ரீ தான். அதுவும் காதலால் தான் சுத்தினான்.

அது எப்படி? எப்படி? அவ கூட வேற யாரு இருக்காவா? நான் எங்க வீட்ல இருப்பேன்னு தெரிஞ்சு தானே பேசுன? என்று சைலேஷ் கவினை அடிக்க கையை ஓங்கினான். அங்கே வந்த நித்தி அப்பா,

இங்க என்ன நடக்குது? யாருடா நீ? என் மாப்பிள்ள மேல கைய வைக்கிற? என்று அவர் முன் வந்தார். அனைவரும் அவரை அதிர்ந்து பார்த்தனர்.

சைலேஷ் திரும்பி நித்தியை பார்த்தான். அவன் சினத்துடன் இருக்க, சார்..நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. நான் கோபத்தில் தான் அவளிடம் பேசி விட்டேன்.

சைலேஷ் அவனை விடுத்து தாரிகாவை அவன் முன் வந்து நிறுத்தினான். அவள் எதுக்கு எங்க வீட்டுக்கு வந்து என்ன செஞ்சான்னு தெரியுமா?

உன்னோட அருமை ப்ரெண்டு அகில் கத்தியதில் எங்க தாத்தாவும் விழிச்சுட்டாங்க. அவர் ஏற்கனவே உடல் நலமில்லாதவர். அதனால் தான் நித்தியை கூட அவரை பார்த்துக் கொள்ள சொல்வேன். உனக்கு தெரியாதது ஒன்றுமில்லை. நீங்க எல்லாரும் செஞ்சது வெளிய தெரிந்தால் எங்க தாத்தா மரியாதையே போயிடும்.

அவ எங்க கூட கொஞ்ச வரல. என்னோட தம்பியை திட்ட தான் வந்தாள். ஆனால் நீ எப்படி பேசிட்ட? அவள கொஞ்சம் பாரு. அப்ப அழ ஆரம்பிச்ச பொண்ணு தான். இன்னும் அவ நிறுத்தல.நீ பேசியது அவளை எப்படி காயப்படுத்தி இருக்கு.

இப்படி பேசுற ஒருவனுக்காக நடுராத்திரி அடுத்தவங்க வீட்டுக்கு வந்திருக்க. இனி நிதானமா யோசித்து செயல்படு. இப்ப நீ கிளம்பும்மா..உங்க அம்மாகிட்ட நானே விட்டுறேன். ஆனால் என்னையும் சேர்த்து பேசிட்டடா? சைலேஷ் கோபமாக செல்ல, நித்தி அப்பா கவினையும் சைலேஷையும் பார்த்தார்.

சார்..என்று கவின் அவன் கையை பிடிக்க, சைலேஷ் அவன் கையை உதறி விட்டு காதலிச்சா அந்த பொண்ண முழுசா நம்பணும்.

நானும் தவறு செய்திருக்கிறேன். ஒரு பொண்ணு என்னை காதலிப்பது கூட தெரியாமல் இருந்தேன். ஆனால் உன்னை போல் இல்லை. நான் அவளை எப்பொழுதும் நம்புவேன் என்று நித்தியை பார்த்து விட்டு அவன் செல்ல,

நில்லுங்க..நில்லுங்க..என்று சத்தமிட்டுக் கொண்டே அவன் பின் நித்தி ஓட, அவள் அப்பா அவளையும் கவினையும் அதிர்ச்சியுடன் பார்த்தார்.

சைலேஷ் நிற்காமல் செல்ல, பின்னே நித்தி வருவதை கவனித்து நின்றான் சைலேஷ். ஓடி வந்த நித்தி நின்று அவன் மீது மோத, அவளை நேராக நிறுத்தி விட்டு பார்த்து வர மாட்டாயா? கண்ணை பின்னாடியே வைச்சிருக்கிறாயா? என்று கேட்க,

நான் முன்னாடி தானே வைச்சிருக்கேன் என்று அவனது கையை பிடித்தாள். அவனுக்கு நித்தி அப்பா அங்கிருப்பதையே மறந்து விட்டான்.

அப்பா..என்றாள் மெதுவாக.

அப்பாவா?..என்று சுயம் வந்து திரும்பி அவரை பார்த்தான். அவளது கையை கோர்த்துக் கொண்டு அவர் முன் வந்தான்.

அங்கிள். நாங்க காதலிக்கிறோம் என்று அவனை பற்றியும் அவன் தாத்தா, பிஸினஸ் பற்றியும் கூறினான். அவர் கவினை பார்த்தார். அவன் மாமா..நான் என்று தாரிகாவை பார்த்தான்.

நீங்க சொல்ல வேண்டாம் சீனியர். நாம எல்லாத்தையும் முடிச்சுக்கலாம் என்று அர்ஜூனிடம், அண்ணா வா,…போகலாம் என்றாள்.

அர்ஜூனை பார்த்து, அர்ஜூன் நீயா?

ஆமாம் அங்கிள். நான் தான். நாங்க சீக்கிரம் வருவோம் என்று கூறினான்.

அர்ஜூன் நீ நாளை வரவில்லையா? பிரதீப் கேட்டான்.

அண்ணா..அவளுக்கு இன்னும் சரியாகல. அவளுக்கு சரியானவுடன் வாரோம் என்று தாரிகா கையை பிடித்தான். அவர் புரியாமல் அனைவரையும் பார்க்க, பிரதீப் அனைத்தையும் விளக்கினான். அர்ஜூன் தங்கை தாரிகா என்றும் கூறினார்.

கவின் தாரிகாவிடம் வர, அவள் அர்ஜூன் பின் நின்று கொண்டு இதுக்கு மேல் நீங்க பேசுறத கேட்க முடியாது சீனியர். ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுதாள்.

அர்ஜூன் தாரிகாவை விட்டு விலகி நின்றான். கவின் அவள் கையை பிடித்து, ப்ளீஸ் சாரிம்மா..என்றான்.

நோ..சீனியர்..சாரி சொன்னா நீங்க பேசியது இல்லன்னு ஆகிடும்மா? எப்படி பேசிட்டீங்க? என்று அழுதாள்.

ஜானு தாரிகா முன் வந்து, அண்ணா..அவங்கள தனியா விடுங்க. நேரம் கொடுங்கள்..என்றாள். கவின் கண்கலங்க விலகினான்.

இதை மறைந்திருந்து பார்த்த கவின் அக்காவும் மாமாவும் அவர்களிடம் வந்தனர். அகல்யாவை பார்த்ததும், அக்கா..என்று அங்கிருந்து கவின் விலகி செல்ல, அவன் மாமா அவனை தடுத்து அங்கே அழைத்து வந்தான்.

இனி அவன் இவ்வாறு பேச மாட்டான் என்று கவினிற்கு பதில் அவன் மாமா பேச அவனுக்கு தலைகுனிவாயிற்று. நித்தி அப்பா அனைவரிடமும் அந்த பொண்ணு நேரம் எடுத்துக்கட்டும் என்று சைலேஷை பார்த்து எனக்கும் சிந்திக்க நேரம் வேண்டும் என்று கவினை அழைத்துக் கொண்டு சென்றார். அவன் தாரிகாவை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். நித்திக்கு கஷ்டமாக இருந்தது. இதை பார்த்த சைலேஷ் அவருக்கு அவர் பொண்ணை பற்றி கவலை இருக்கும்ல. அவர் தான் நேரம் கேட்டிருக்கார்ல. பார்க்கலாம் என்று நித்தியை தோளோடு அணைத்து ஆறுதலாக பேசினான்.

அனைவரும் கிளம்ப, பிரதீப் தாரிகாவை அழைத்து, நமக்கு ஒரு வேலை உள்ளது. தனியே செய்ய வேண்டாம். நாளை காலை முடித்து விட்டு கிளம்பு என்றான்.

உங்களுக்கு என்ன வேலை? ஆதேஷும் அர்ஜூனும் ஒருவாறு கேட்டனர்.

அர்ஜூன் உன்னால் முடியாததை இவள் தான் செய்யப் போகிறாள் என்று தாரிகாவை பார்த்தான். அவளுக்கு கமலி நினைவு வந்து, அண்ணா..என்று பிரதீப்பை பார்த்தாள்.

அவளை பார்த்து என்ன சொல்ற?

ஆமாம் அண்ணா. நான் இருக்கேன். நாளைக்கு முடிச்சிட்டு வாரேன் என்றாள் அர்ஜூனிடம்.

என்னால் முடியாததை நீ செய்வாயா? கேட்டான்.

கண்ணை துடைத்து புன்னகையுடன், ம்ம்..செய்வேனே?

ஜானு உன்னோட அறைக்கு அழைத்து செல் என்றான் பிரதீப். ஜானு சொன்ன வாய்ப்பு ஆதேஷிற்கு நினைவு வந்தது. இதை தான் சொன்னாலா? என்று அவளை பார்த்தான். அனைவரும் கிளம்பினார்கள். நித்தி என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க,

அகல்யா அவளை அழைக்க, அக்கா அப்பாவிடம் சொல்லுங்க. யாசுவிடம் செல்கிறேன் என்று சைலேஷுடன் காரில் ஏறினாள்.

உங்க அப்பா கோபிச்சிக்காம நித்தி? சைலேஷ் சொல்ல, நான் பேசிக் கொள்கிறேன் என்று கிளம்பினார்கள்.

ஆதேஷ் ஜானு தாரிகா நடந்து சென்று கொண்டிருக்க, அவர்களிடம் வண்டியை நிறுத்தினான் பிரதீப். ஜானுவிற்கு ஆதேஷ் பேசியது வந்து கொண்டே இருந்தது. பார்க்காதவாறு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். நால்வரும் வீட்டிற்கு சென்றனர்.

உள்ளே சென்றவுடன் ஜானு நில்லு, இந்த நேரம் எதுக்கு வெளிய வந்த? பிரதீப் கேட்டான். அண்ணா..என்று அவள் ஆதேஷ் தாரிகாவை பார்த்தாள்.

மாமா..நான் தான் தனியே வெளியே செல்ல வேண்டாம்னு ஜானுவை அழைத்தேன். நாங்கள் தற்செயலாக தான் வந்தோம் ஆதேஷ் கூற,

மாமாவா? என்று ஆதேஷை பார்த்தாள் தாரிகா.

அவளை எதுக்கு அழைத்தாய்? பிரதீப் கேட்டான்.

அதான் சொன்னேனே மாமா. தனியே சென்றால் வழி மறந்து விடும்.

வீட்டில் வேறு யாருமா இல்லை.

மாமா..எல்லாரும் தூங்கினாங்க. ஜானு தான் சமையலறை பக்கம் வந்தாள். அதான் அவளை அழைத்து வந்தேன்.

ஜானும்மா நீயா சமையற்கட்டுக்குள் சென்றாய்?

அண்ணா..என்று விழித்தாள்.

ஆதேஷ் புரியாமல் ஜானுவை பார்க்க, தப்பிக்க உதவுகிறேன்னு நான் எப்போதும் செய்யாத விசயத்தை சொல்லிட்டானே? அவனை பார்த்தாள்.

எப்படி? என்று அவன் கேட்க, நாசமா போச்சு. நான் தொலைஞ்சேன் என்று மனதில் நினைத்தவள் அண்ணா மணியை பாரேன் மூன்றாகி விட்டது. நாளைக்கு நான் ஸ்கூலுக்கு போகணும்ல. நான் தூங்கப் போறேன் என்று ஓடிய ஜானு திரும்பி தாரிகா கையை பிடித்து கொண்டு செல்ல ஆதேஷும் குட்நைட் மாமா என்று பின் சென்றான்.