அத்தியாயம் 14

பழைய காலத்து வீடு. மிகவும் பெரியதாக இருந்தது. வெளியே பெரிய மைதானம் போல் இருந்தது. மாட்டுக் கொட்டகை, கோழி, வாத்து அடைத்த அதனுடைய வீடு என்று பார்த்துக் கொண்டே ஜானு பின் சென்றான் ஆதேஷ். வீட்டினுள்ளே பெரிய தூண்கள் வீட்டை தூக்கி நிறுத்தியது போல் இருந்தது.இவர்களுக்காக அனைவரும் அந்த பெரிய ஹாலில் அமர்ந்திருந்தனர்.

புவியிடம் பேசிட்டியா ஜானு? கேட்டான் பிரதீப். ம்ம்..அண்ணா என்று அமர்ந்தாள்.

எங்கே அமர்கிறாய்? போ..தூங்கப்போ. துளசி போயிட்டா. நாளைக்கு ஸ்கூல் கிளம்பணும் என்றான் பிரதீப்.

அந்த பசங்ககிட்ட பிரச்சனை ஏதும் செய்யாத ஜானும்மா. அவங்க சரியில்லை.

ஆமாம் அண்ணா. எவ்வளவு தைரியம் அவங்களுக்கு? என்னோட புவியை கொல்ற வரை போயிட்டாங்க. சும்மா விடக் கூடாது என்றாள் ஜானு.

மாமா சாரும் இதே தான் சொன்னார் மாமா என்று ஆதேஷ் கூற, உங்களிடம் யார் கேட்டா? ஜானு அவனை முறைத்தாள்.

ரொம்ப சரியா சொன்னம்மா. நானும் உன் பக்கம் தான். உன்னிடம் பிரச்சனை பண்ணா சொல்லு. அவனுகள ஒருவழி செய்து விடலாம் என்று ஆதேஷ் அப்பா கூற,

தேங்க்ஸ் அங்கிள்..என்று அவர் பக்கம் சென்று, அவர் உங்க பையன் தானா? சரியான..என்று ஆதேஷை பார்த்தாள்.

ஏய்..ஜானு, என்ன சொல்ல வந்த? என்று அவன் எழுந்து அவளருகே வர, அங்கிள் நாம் நாளைக்கு பேசலாம் என்று அவள் அறைக்கு ஓடினாள்.

மாமா..எல்லாரையும் பாருங்க கிண்டல் பண்றாங்க என்று ஓரமாக அமர்ந்தான் ஆதேஷ்.

நம்ம ஜானு தான மாப்பிள்ள..நானே கத்து தாரேன் கூறிய பிரதீப் அனைவருக்கும் அறையை காண்பித்து ஓய்வெடுக்க சொன்னான். அப்பத்தாவும் துளசியும் முன்பே சென்றிருப்பார்கள்.

பிரதீப்பிடம், உனக்கு தொந்தரவு ஏதும் இல்லையே? காவேரி கேட்டார்.

அம்மா..என்ன பேசுறீங்க? இது உங்க வீடும்மா என்று கண்கலங்கினான். துகிரா சோபாவிலே தூங்கிக் கொண்டிருந்தாள்.

பிரதீப், இந்த பொண்ணு இப்படி தூங்குகிறாள்? ரொம்ப அழகா இருக்கா என்று அவனிடம் அறையை கேட்டு விட்டு அவர் சென்றார்.

பிரதீப் தூங்கும் துகிராவை பார்த்து ரசித்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளை ஓர் அறையில் விட்டு அவன் வெளியே வந்தான். மாடியிலிருந்து ஆதேஷ் அம்மா பிரதீப்பை பார்த்துக் கொண்டிருந்தார்.அவர் மனதில் பையன் நல்லா தான் பாத்துக்கிறான். துகி சந்தோசமா தான் இருப்பா என்று நினைத்துக் கொண்டார்.

ஆதேஷ் ஜானு கிளம்பிய பின் தீனா அவருடைய ஸ்டேசனில் இருக்கும் ஒருவரை ஹாஸ்பிட்டல் வரச் சொன்னான். பின் புவியிடம், நான் ஒரு வேலையாக வெளியே கிளம்ப வேண்டும். அதனால் ஒருவரை உன்னை பார்த்துக் கொள்ள வரச் சொல்லி இருக்கிறேன். அவர்கள் இருந்தாலும் நீ கவனமாக இரு. ஏதாவது சிறிது சந்தேகமாக இருப்பது போல் தெரிந்தால் கூட உடனே என்னை அழைத்து விடு. நான் வந்து விடுவேன் என்றான்.

அவள் அவனது கையை பிடித்து, நீங்களும் கவனமாக இருங்கள் என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் பயம் புரிந்து ஒன்றுமில்லைடா. சீக்கிரம் வந்து விடுவேன். நர்ஸிடம் கூறி விட்டு செல்கிறேன் என்று அவளை கவனித்தான். ஆனாலும் அவள் முகம் பயத்தை காட்ட, உருட்டிய அவளது விழிகளில் அவன் இதழ்களை பதித்து விட்டு, சீக்கிரம் வருகிறேன் என்று அணைத்து விடுவிக்க அவன் கைகளை இறுக்கமாக பிடித்தாள்.

புவியை பார்த்துக் கொள்ள தீனா அழைத்த போலீஸ் வரவும் அவரிடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தலையசைத்து அவளை ஒரு முறை பார்த்தான்.

ஒரு நிமிஷம் இந்நேரம் போகணுமா? என்று பயத்துடன் கேட்டாள் புவி.

அவளிடம் வந்து அவளை அணைத்து அவளது நெற்றியில் முட்டியபடி, நீங்க போலீஸ்காரனை காதலிக்கிறீங்க? இப்படி பயப்படலாமா? தைரியமா இருக்கணும். எனக்கு என்ன ஆனாலும்..அவன் பேச அவனது வாயை மூடினாள்.

ப்ளீஸ் இப்படி பேசாதீங்க என்று கண்ணீர் விட்டாள். மூக்கோடு மூக்கு வைத்து உரசியவன் நீ அழாம இருந்தா தான் என்னால வேலையை பார்க்க முடியும் இல்லைன்னா இந்த அழுமூஞ்சி முகம் தான் என் முன்னே வரும் என்று கொஞ்சி அவளை சமாதானப்படுத்தி விட்டு அவரிடம் கண்ணசைத்து விட்டு கிளம்பினான்.

அவர் புவனாவிடம், ஏன்மா நீ சாரை பற்றி கவலைப்படாதேம்மா. போற வேலையை நல்ல படியா முடிச்சு வரணும்ன்னு நினைச்சுக்கோம்மா. அவர் சரியா செஞ்சிட்டு சீக்கிரம் வந்திடுவார்.

சார்..அவர் இந்த நேரம் தனியா போறாரு. அதான் பயமா இருக்கு.

என்னம்மா..சிங்கம் வேட்டைக்கு தனியா போனாதாம்மா வெற்றியோட வரும். அதுக்கு அதான் பெருமையும் கூட. என்னம்மா சொல்ற?

புவி சிறு புன்னகையுடன்,ம்ம்..என்றாள்.

நீ ஒய்வெடும்மா.

பிரதீப் பெற்றோர்கள் இறந்த இடத்தில் சிசிடிவி இருக்கா? இல்லை வேரேதும் கிடைக்கிறதா? என்று பார்க்க தான் சென்றிருப்பான். வெளிச்சமுள்ள நேரத்தில் அவன் அங்கு நின்றால் கொலைகாரன் உஷாராகி விடுவான் என்று இந்நேரம் சென்றிருப்பான்.

அவன் நினைத்தது போல் அந்த பள்ளத்தின் இடையே உள்ள மரக்கிளையில் ஒரு கேமிரா கிடைத்திருக்கும். அந்நேரத்தில் அவ்விடத்தில் இறங்குவது ஆபத்து. எப்படியோ அவன் அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

பின் வேகமாக ஹாஸ்பிட்டலுக்கு வந்தான். தீனா கால்களில் அடிபட்டிருந்தது. ஆனால் அதை பொருட்டாய் எடுக்காமல் சார். நீங்க வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு காலையில் வாருங்கள். நீங்கள் இங்கே இந்நேரம் வந்தது யாருக்குமே தெரிய வேண்டாம் சார் என்று புவியை பார்த்தான். அவள் அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

சார்..உங்களுக்கு அடி பட்டிருக்கு சார் என்று அவர் பதறினார். அவர் சத்தத்தில் புவனா விழித்தாள்.

அவர் வெளியே சென்று மருத்துவரை அழைக்க, வேற டாக்டர் இருந்தார். அவரை அழைத்து வந்தார்.

நான் தான் சொன்னேன்ல. பார்த்து போயிட்டு வாங்கன்னு என்று பதறினாள்.

புவி ஒன்றுமேயில்லை. இது சாதாரண அடிதான்.

என்ன? அதனால் தான் இரத்தம் கொட்டுகிறதா? கடிந்தாள். மருத்துவர் வந்து அவனை பார்த்து காலுக்கு கட்டிட்டு சென்றார்.

தீனா கேமிராவை ஆன் செய்து பார்த்தான். அதில் அது விபத்தல்ல என்பது தெளிவாக இருந்தது. வேலீஸ்வர் முகம் தெளிவாக இருந்தது. பிரதீப் அம்மா மானத்தை காக்க அவராகவே பள்ளத்தில் விழுந்து இறந்ததை பார்த்து தீனா கண்கள் சிவக்க, உங்கள விட மாட்டேன்டா என்று முணுமுணுத்தான்.

அதை பார்த்த புவி, அதில் இருப்பது யார்? என்று கேட்டாள்.

முகத்தை இலகுவாக மாற்றி, வேண்டாம்மா. நான் அதை பார்த்துக் கொள்கிறேன் என்று அதை பத்திரப்படுத்தி விட்டு அவள் கட்டிலில் அவன் சாய்ந்து அமர்ந்து அவளை அவன் மீது கிடத்திக் கொண்டான். அவளும் அவன் மார்பில் சாய்ந்து நன்றாக தூங்கினாள். ஆனால் தீனாவால் தூங்க முடியவில்லை.

இரண்டு நாட்களில் புவனா நடக்க தொடங்கி விடுவாள் என்று மருத்துவர் கூறி இருப்பார். அதன் பின் உங்களை கவனிக்கிறேன்டா என்று மனதினுள் நினைத்தான்.

ஹாஸ்பிட்டலில் தாரிகா சினத்துடன் அர்ஜூனிடம், அண்ணா வா…அந்த கைரவை ஒரு கை பார்க்கலாம் என்று அர்ஜூனை எழுப்பி கூறினாள். ஸ்ரீயும் விழித்துக் கொண்டாள். எதுக்கு? கேட்டுக் கொண்டே எழுந்தான். கைரவ் தாரிகாவுடன் எடுத்த புகைப்படத்தை கவினுக்கு அனுப்பினானே அதை கவின் தாரிகாவிற்கு அனுப்பி என்ன இது? என்று கோபமாக அனுப்பி இருப்பான். தாரிகா அர்ஜூனிடம் கூறினாள்.

தாரிம்மா..நான் தான் அப்படி செய்ய சொன்னேன் அர்ஜூன் கூற, அவனை விட்டு விலகி, ஏன்டா இப்படி பண்ணீங்க? என்று அழுதாள்.

அவன் அப்படியாவது பொறாமையில் பேசுவான் என்று நினைத்து தான் செய்தேன். தாரிகா அழுது கொண்டே வெளியே செல்ல,..

தாரி..நில்லு என்று ஸ்ரீ அவளை அழைத்துக் கொண்டு அர்ஜூனை முறைத்தாள். ஸ்ரீயை பார்த்த அர்ஜூன், நான் அவளை பார்த்துக்கிறேன் அவனும் வெளியே வந்தான்.

அம்மா அவனிடம் என்ன ஆச்சு? கேட்க, நான் அவளை பார்த்துகிறேன்ம்மா. நீங்க ஸ்ரீயை பார்த்துக்கோங்க என்று செல்ல, அவள் அகிலிடம் சென்று விசயத்தை சொல்ல, சும்மாவே அகிலுக்கும் கைரவிற்கும் ஆகாது.

வா தாரிகா என்று அவன் அறையை விட்டு வரவும் அர்ஜூன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அர்ஜூனை பார்த்து அகில், அவ உன்னோட தங்கைன்னு பெருமையா பேசிட்டு என்ன வேலை பார்த்து வைச்சிருக்க? என்று அடித்தான்.

சீனியர் வேண்டாம். நாம் கிளம்பலாம் தாரிகா கூற, இந்த நேரம் எங்க போறீங்க? அபி தடுத்தான்.

அகில் வேண்டாம். காலையில் பார்த்துக் கொள்ளலாம். என் மீது தான் தவறு. தாரி போகாதே..அர்ஜூன் இருவரிடமும் மண்றாடினான்.

நீ சொன்னால் அவனுக்கு மூளை இல்லையா? தாரிகா திட்டி விட்டு செல்ல, அபி நீ வெளியே வராதே என்று பதட்டமாக இன்பாவிடம் சென்று அபியை பார்த்துக் கொள்ள சொல்லி அர்ஜூன் அவர்கள் பின் சென்றான்.

ஏதும் பிரச்சனையா அபி? இன்பா கேட்க, அவன் கூறியவுடன்..இந்த நேரம் அவன் வீட்டுக்கா போறாங்க? இது கவினுக்கு தெரிந்தால்..இன்பா கூற,.

போச்சு..பிரச்சனை பெரியதாவதற்குள் சீக்கிரம் அவர்களை வர வைக்கணும் அபி பதறினான்.

இரு..என்று இன்பா தாரிகாவிற்கு போன் செய்ய அவள் எடுக்கவில்லை. அவள் அம்மாவிடம் சொல்ல அவரும் பதட்டத்துடன் அவளுக்கு போன் செய்ய, அவள் எடுக்கவில்லை.

இருங்கம்மா. நான் சைலூவிற்கு போடுகிறேன் என்று இன்பா போனை போடவும் சைலேஷ் வீட்டில் அகில் சத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

வேலைக்கார கனி அக்கா கதவை திறக்க, எங்கே அவன்? அகில் உள்ளே வந்தான். தாரிகாவும் கீழே ஒவ்வொரு அறையாக பார்க்க தாத்தாவும் யாசுவும் வெளியே வந்தனர்.

அகில் இங்க என்ன செய்ற? தாரிகா என்று யாசு அவளை பார்க்க, எங்க கைரவ்? அகில் அவளிடம் வந்தான்.

அவன் அறையை கை காட்ட, சைலேஷ் போனை எடுத்தான். நித்தியும் விழித்தாள். இன்பா விசயத்தை கூற, சைலேஷ் வேகமாக வெளியே சென்றான். நித்தியும் பின் சென்றாள். அர்ஜூனும் உள்ளே வந்தான்.

அகில் கைரவை கீழே இழுத்து வந்தான். அதை பார்த்து அர்ஜூனும் சைலேஷும் ஒன்றாக அவனிடம் வந்தனர்.

கைரவ் புரியாமல் விழிக்க, தாரிகா அவனிடம் வந்து, என்னடா செஞ்சு வைச்சிருக்க? கத்தினாள்.

தாரி..அவனை விடு. நான் தான் என்று அர்ஜூன் கைரவ் முன் வந்தான். தாரிகா கோபத்தில் அர்ஜூனை தள்ளி விட்டாள். அவன் கீழே விழுந்தான்.

ஏன்டா அனுப்பின? அடித்தாள் கைரவை.

ஏம்மா..ஏன் என் பெயரனை அடித்தாய்? தாத்தா கேட்க, தாத்தா நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க உள்ளே போங்க..என்றான் சைலேஷ்.

அந்த பொண்ணு எதுக்குடா கைரவை அடிச்சா? அமைதியா இருங்க தாத்தா என்று விட்டு, கவின் போன் செய்தானா? சைலேஷ் கேட்டான்.

இல்லை. நான் போட்டேன். அவர் எடுக்கல..அவர் என்ன இது? என்று மேசேஜ் பண்றார். அதான் பேசிடலாம்னு போன் செய்தேன். அவர் எடுக்கல..என்று அழுதாள்.

மணி நடு இரவாகிறது. இப்பொழுது வரலாமா? கேட்டான் சைலேஷ்.

நான் என்ன சார் பண்றது? உங்க தம்பியும் என் அண்ணனும் தேவையில்லாத வேலைய பண்ணிட்டாங்க என்று அழுதாள்.

தாரி..என்று அர்ஜூன் அவளருகே வர, நில்லுடா..அங்கேயே நில்லு. அவர் என்னை பற்றி என்ன நினைப்பார்?

நீ தான் வருத்தமுடனே இருந்த? வெளியே காட்டிக் கொள்ளாமல் அழுதேல. அதனால் தான் அவனை பேச வைக்க இவ்வாறு செய்தேன் அர்ஜூன் கூற, அனைவருக்கும் புரிந்தது. அவளும் அமைதியானாள்.

அர்ஜூன் சொன்னதுக்காக மட்டும் நான் செய்யல.நம்ம கல்லூரி டிரெண்டே நீயும் கவினும் தான். உங்க காதல் தான். அதுக்கு தான் உதவ நினைத்தேன் என்றான் கைரவ்.

அப்பொழுது வந்தது கவின் போன். தாரிகா எடுத்தாள்.

சீனியர். எனக்கு எதுவும் தெரியாது. நம்ம சண்டைய சரி செய்ய தான் அவன் இப்படி செய்தான் என்று அவள் கூற,

நீ அவன் பக்கம் சென்று விட்டாயா? எடுத்ததும் அவனுக்கு சாதகமாக பேசுற?

எங்க இருக்க? கேட்டான். அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அவள் பயத்துடன் கைரவை பார்த்துக் கொண்டே, அவனுடைய வீட்டில் தான் இருக்கேன்.

அவனுடைய வீட்டிலா? அறையிலா? கேட்டான்.

அவள் கண்ணீருடன் வீட்டில் தான் என்றாள். இன்னும் விடிய நேரம் உள்ளது. அறைக்கு செல்லலாமே? என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவள் வாயில் கை வைத்தவாறு அவன் பேசுவதை கேட்டாள். தனியா தான் இருக்கீங்களா? இல்ல அவனோட ப்ரெண்ட்ஸும் இருக்காங்களா? கேட்டான்.

அவள் போனை தவற விட்டு கீழே அமர்ந்து அழுதாள். நித்தி, யாசு, அர்ஜூன் அவளருகே வந்தனர். கைரவ் போனை எடுத்து, அவளிடம் என்னடா பேசுன?

செம்மையா எஞ்சாய் பண்ற போல? நீ மட்டும் தான் இருக்காயா? வேற யாரையும் அழைத்து வந்திருக்காயா?

கவின் நீ ரொம்ப பேசுற. வாய மூடிரு.. கைரவ் அதட்டினான்.

நான் என்னடா பேசினேன்? நீங்க செய்வதை தானே பேசினேன். புகைப்படத்திலே இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருக்கீங்க. இப்ப தனியா வேற..என்று பல்லை கடித்து கவின் பேச,..

போதும் கவின். போதும் நிறுத்துடா..

நான் காதலிக்கிற பொண்ண உன் வீட்டில் வச்சி என்ன செய்ற?

போனை தூக்கி எறிந்தான் கைரவ். என்னடா ஆச்சு? சைலேஷ் அவனிடம் கேட்டான்.

அண்ணா அவன் வேற மாதிரி பேசுறான் என்று கவின் பேசியதை கூற, தாரிகாவிற்கு உடலெங்கும் கூசியது. நித்தியும் யாசும் கொதித்தனர். அவனை…என்று நித்தி போனை எடுத்தாள்.

கைரவ் அர்ஜூனிடம் வந்து அவனது கையை பிடித்து, தாரிகாவிடம் வந்து எழுந்திரு என்றான். அவள் நிமிர கூட இல்லை. கைரவே அவளை தூக்கி விட்டு தாரிகா கையை பிடித்தும், அவன் காரை நோக்கி விரைந்தான்.

அர்ஜூன் காரை எடு என்றான் கைரவ். தாரிகா அழுது கொண்டிருக்க உள்ளே ஏறு என்று கத்தினான் கைரவ். அர்ஜூனிற்கு கவின் மீது பயங்கர கோபம் தான். கைரவின் செயல்கள் அவனையும் ஊக்குவிக்க காரை வேகமாக எடுத்தான். சைலேஷும் மற்றவர்களும் நில்லுங்கடா என்று கத்த, அதற்குள் அவர்கள் சென்றனர்.

நித்தி தாத்தாவை பார்த்துக் கொள் என்று சைலேஷ் அவன் காரில் ஏற, நித்தி யாசுவிடம் தாத்தாவை பார்த்துக் கொள் என்று சைலேஷ் காரில் அவளும் ஏறினாள். அவளை பார்த்த சைலேஷ் வேகமாக காரை எடுத்து அவர்களை பின் தொடர்ந்தான். தாரிகா அழுது கொண்டே இருக்க அர்ஜூன் அவ்வப்போது அவளை பார்த்துக் கொண்டே காரை செலுத்தினான்.

அகில்… கவின் மாமா குடும்பமே அங்கே வந்திருக்கும். இவங்க அங்க போய் பிரச்சனை செய்து கல்யாணம் நின்று விட்டால் என்ன செய்வது? யாசு புலம்ப,

அட..ஆமால..இரு அர்ஜூனுக்கு போன் செய்வோம் என்று அவன் போன் செய்ய அர்ஜூனும் எடுத்தான். அகில் அவர்களது எண்ணத்தை கூற, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று போனை வைத்து விட்டு சாரி தாரிம்மா..இப்படி நடக்கும் என்று நாங்கள் நினைக்க கூட இல்லை. நீ அழுவதை பார்க்க முடியாமல் தான் இப்படி செய்து விட்டேன்.

அவள் அழுகை அப்பொழுதும் நிற்கவில்லை. கைரவிற்கு கவின் மீதுள்ள கோபம் குறைந்தபாடில்லை.கொஞ்சம் ஊருக்கு அருகே வரவும் அர்ஜூன் பிரதீப்பிற்கு போன் செய்தான். விசயத்தை கூறி கவினை பார்க்கணும். உங்க பண்ணை வீட்டுக்கு அவனை தனியே அழைத்து வாருங்கள் என்று போனை வைத்தான்.