அத்தியாயம் 13
பிரதீப் காரை செலுத்த துகியும் ஆதேஸூம் முன் சீட்டில் அமர்ந்திருந்தனர். ஆதேஷ் மனம் உலன்று கொண்டிருக்க காரை கையில் எடுத்தான் பிரதீப். துகி ஆதேஷ் தோளில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆதேஷ் தாரிகாவை பார்த்ததிலிருந்து இப்பொழுது வரை நடந்ததை யோசித்தவாறு வந்தான்.
ஜானு வீட்டில் போன் எடுக்காததால் அவள் மருத்துவமனையில் தான் இருப்பாள் என்று அங்கு வந்து காரை நிறுத்தினான் பிரதீப். அவன் பின் வந்த இரு கார்களும் அங்கேயே நின்றது.
ஆதேஷ் காரை திறந்து வெளியே வர ஓடி வந்து கட்டிக் கொண்டாள் ஜானு.அண்ணா..என்று அழுது கொண்டே.
அவன் ஏற்கனவே காதல் தோல்வியில் இருந்தான். அவன் உறைந்து நிற்க, வெளியே வந்த துகிராவும் பிரதீப்பும் சேர்ந்தவாரே..ஜானு என்று கத்தினர்.
அவர்கள் பின் வந்த ஆதேஷ் அம்மாவும் அப்பாவும் அவனருகே வந்தனர். ஜானு ஆதேஷை பார்க்க, அவன் குனிந்து அவளை பார்த்தான்.
அவனை விட்டு விலகிய ஜானு பிரதீப்பை பார்த்து, அண்ணா என்று கட்டிக் கொண்டு அழுதாள். மற்றதை மறந்து ஜானு அழுவதை பார்த்து,
ஜானும்மா என்ன ஆச்சு? பிரதீப் கேட்டான்.
ஒரு நிமிஷம் இருங்க என்று பிரதீப்பிடம் கூறிய துகிரா, ஜானுவை அவனிடமிருந்து பிரித்து என்ன ஜானு இது? என்று கன்னத்தை காட்டி கேட்டாள். ஜானு கன்னத்தில் ஐந்து கை விரல் பதிந்து சிவந்து இருந்தது.
பிரதீப் மற்றும் மற்றவர்களும் அவளருகே வந்தனர். அவள் கன்னத்தில் கை வைத்தவாறு பின்னே நகர்ந்தாள். பிரதீப் சினத்துடன் யாரு ஜானு?
அண்ணா..ஒன்றுமில்லை.
நான் தான் என்ற குரலில் அனைவரும் திரும்பினர். தீனா நின்று கொண்டிருந்தான். ஜானு புரியாமல் அவனை பார்த்தாள்.
பிரதீப் அவனிடம், ஏன்டா நானே அவளை ஒரு முறை கூட அடித்ததில்லை என்று தீனாவை அறைந்தான்.
அண்ணா..என்று ஜானு தீனா முன் வந்து பேச வர அவளை தடுத்த தீனா, நான் சொன்னேன்ல அந்த பிரச்சனையில ஜானு மீது தெரியாமல் கை பட்டு விட்டது.
தெரியாமலா? என்ன பேசுற? அவள் உனக்கும் தங்கை தானே?
தீனா அமைதியாக நின்றான். அண்ணா..தீனா அண்ணா மீது தவறில்லை. அவர் என்னை அடித்ததால் தான் உன் முன் உயிருடன் இருக்கேன் என்று அவள் ஒரு கதை கட்டி பிரதீப்பை அமைதியாக்கினாள்.
நீ எதுக்குமா அழுத? ரொம்ப வலிக்குதா? என்று ஆதேஷ் அம்மா கேட்க, அவரை பார்த்த ஜானு ஆன்ட்டி என்று அவரை கட்டிக் கொண்டு, புவிக்கு ரொம்ப வலிக்குதாம் அழுது கொண்டே இருந்தாள். கொஞ்ச நேரம் முன் தான் விழித்தாள். அவள் இப்பொழுது தான் அமைதியா இருக்கா என்று புவிக்கும் ஜானுவிற்கும் இருக்கும் நெருக்கம் மொத்தமும் சொல்லி முடித்தாள்.
வா..உன்னோட ப்ரெண்டை பார்த்துட்டு வருவோம் ஆதேஷ் அம்மா கூற, அவர்கள் முன் ஓடினான் தீனா.
ஏன்டா இவன் வேகமா போறான்? ஆதேஷை பார்த்தார் அவன் அம்மா.
மாம்..அவர் காதலிக்கிற பொண்ணு தான் ஜானு ப்ரெண்டு என்றான்.
வா..வா..என்ன பண்றான்னு பார்ப்போம். வா துகி என்று ரெண்டு பொண்ணுங்க கையை பிடித்துக் கொண்டு உள்ளே சென்றார். ஆதேஷும் பிரதீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உள்ளே சென்றனர். பிரதீப் போனில் யாருக்கோ ஏதோ கட்டளையுடன் உள்ளே வந்தான். ஆதேஷ் அவனை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தான்.
புவி அருகே காவேரி அமர்ந்து அவள் கையை பிடித்திருக்க, அவள் கண் மூடி அமர்ந்திருந்தாள். அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டு, விழித்து பார்த்தாள். தீனாவை பார்த்த புவி கண்கள் கலங்கியது.
அவன் அம்மா புவி கையை விட்டு நகர்ந்து கொண்டார். நேராக அவளிடம் வந்த தீனா, இன்னும் ரொம்ப வலி இருக்கா என்று கலங்கியவாறு கேட்டான்.
காயம் பட்டு தாயை பார்த்தவுடன் அழும் குழந்தை போல் புவி அழ, அங்கு அனைவரும் வந்தனர்.தீனா அவளருகே அமர்ந்து அவனது தோளோடு அணைத்து சமாதானப்படுத்தினான். வந்தவர்களை ஜானு புவிக்கு அறிமுகம் செய்ய, தீனா அவளிடம் உனக்கு இவங்களும் உதவினாங்க என்று ஆதேஷ் துகிராவை காண்பித்தான்.
நன்றி கூறிய புவி ஜானுவை பார்த்தாள். அவள் கன்னத்தில் மருந்து போட்டிருந்தார்கள். உனக்கு வலிக்குதா? ஜானுவிடம் புவி கேட்க, ஜானு கண்ணிலிருந்து பொளபொளவென கண்ணீர் கொட்டியது.அவளை கண்ணாலே அழைத்தாள் புவி.
ஜானு அவளிடம் சென்று, சாரி புவி. நாங்கள் உன் அருகிலே இருந்திருக்கணும் கவலையுடன் கூற,
என் மீது தான் தவறு. என்னால் தான் எல்லாமே நடந்தது துளசியும் அழுதாள்.
எனக்கு சீக்கிரம் சரியாகிடும். துருவன் எப்படி இருக்கான்?
அவன் வெளியே தான் இருக்கான்.
வெளியேவா? அவன் அம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டாமா? இங்க என்ன செய்கிறான்? அவனை வீட்டிற்கு போக சொல் ஜானு புவனா கூறினாள்.
நான் சொன்னா அவன் கேட்பானா? ஜானு கேட்க, புவி தீனாவை பார்த்தாள்.
அவனை வர சொல்லணுமா? கேட்டான் தீனா.
அவனை வீட்ல விட்டுட்டு வாரீங்களா? கேட்டாள் புவனா. தீனா வெளியே சென்றான்.
அவனுக்கு அடி பட்டது பலமா இருக்கா ஜானு?
ரொம்ப இல்ல..ஆனால் அவனுக்கும் வலி இருக்கு.
நாளைக்கு ஸ்கூலுக்கு போய் அவர்களிடம் பிரச்சனை செய்யக் கூடாது ஜானு என்று புவனா கண்டித்தாள்.
நான் யார் வழிக்கும் போக மாட்டேன். என் வழிக்கு வரவங்கள சும்மா விட மாட்டேன் புவி என்றாள் ஜானு.
ஆன்ட்டி நீங்களாவது சொல்லுங்க. ஜானு உங்கள பத்தி சொல்லி இருக்கா? ஆதேஷ் அம்மாவிடம் புவி கூறினாள்.
நான் பார்த்துக்கிறேன்ம்மா. நீ எதை பற்றியும் யோசிக்காதே. நன்றாக ஓய்வெடு என்றார்.
சரிங்க ஆன்ட்டி என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்க, தீனா வந்தான்.
நீ புவனாவை பார்த்துக்கோ. அம்மா, அப்பத்தா, துளசி எங்க வீட்டுக்கு வாங்க. நாளைக்கு உங்களது பொருட்களை நம் வீட்டிற்கு மாற்றி விடுவோம். மணி ஒன்றாகப் போகிறது, சீக்கிரம் கிளம்புங்கள் என்று பிரதீப் அழைத்தான்.
அனைவரும் கிளம்ப, அண்ணா நீ முன்னாடி போ..நான் புவியிடம் பேசிட்டு வாரேன் ஜானு கூற, இந்நேரம் தனியா வேண்டாம் என்றனர் அனைவரும்.
நான் பேசணும் என்று தீனாவை பார்த்தான். அவனுக்கு புரிந்தது. அவர்களை பார்த்து நீங்க கிளம்புங்க ஆதேஷ் நீ இரு என்று நிறுத்தினான்.
நாங்களும் இருக்கோம் என்று ஆதேஷ் அம்மா கூற, ஆன்ட்டி நீங்க சோர்வா இருக்கீங்க. ரெஸ்ட் எடுங்க ஜானு கூறினாள்.
துகியும் சொல்ல, நான் வந்து விடுவேன். நீ மாமாவுடன் கிளம்பு என்று கூற, ஜானு அவனை பார்த்து என்ன சார் சொன்னீங்க? மாமாவா?
உங்க அண்ணா தான் அப்படி அழைக்க சொன்னார்.
அண்ணா..என்று பிரதீப்பை பார்த்தாள் ஜானு.
ஜானு துகி, இனி அவள் வீட்டிற்கு செல்ல மாட்டாள். நாம் நாளை பேசிக் கொள்வோம். ரெண்டு பேரும் பார்த்து வாருங்கள் என்று பிரதீப் அவன் குடும்பத்தையும், ஆதேஷ் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
ஜானு ஆதேஷை பார்க்க, அவன் அமைதியாக நின்றான்.
ஜானு தீனாவை கையை கட்டிக் கொண்டு பார்த்தாள்.
ஜானு..என்று அவன் ஆரம்பிக்க, புத்தி இருக்காடா? ஏன்டா அப்படி சொன்ன?
நீ அடித்தா என் கன்னத்தில் கை தடம் பதிந்தது? நானே ரொம்ப நாள் கழித்து இருவரும் சேர்ந்து விட்டீர்கள்? என்று எவ்வளவு சந்தோசமா இருந்தேன்.
இப்ப அண்ணாவுக்கு உன் மேல கோபம் இருக்கும் என்றாள்.
ஜானு, நான் சொல்வதையும் கேள். நான் உன் அண்ணன் என்பதால் பிரதீப் என்னை அடித்ததோடு நிறுத்தீட்டான். அவனுக்கு மட்டும் அர்தீஸ் ப்ரெண்டு தான் உன்னை அடிச்சான்னு தெரிஞ்சா. அவனை கொல்லாம விட மாட்டான். அது மட்டுமல்ல..அவங்க குடும்பத்தை பிடிக்கும் வழி கூட எனக்கு கிடைத்து விட்டது. அதற்கான வேலையில் தான் இறங்கப் போறேன். எல்லாரும் கவனமா இருங்க..
என்ன சொல்றீங்க? அவங்கள பிடிக்க போறீங்கன்னா? புவனா கேட்டாள்.
நீ எதையும் யோசிக்காதம்மா..ஓய்வெடு போதும்.
இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம். அம்மா, துளசி, அப்பத்தாவிடம் நான் பிரதீப்பிடம் சொல்ல வேண்டாம்னு சொல்லி இருக்கிறேன். நீ இனி அதை பற்றி யாரிடமும் பேச வேண்டாம்.
ஜானு நீ வெளியே இரேன். அவனிடம் பேசணும்னு ஆதேஷை காண்பித்தான்.
எனக்கு தெரியாமல் சாரிடம் என்ன பேசணும்?
சாரா? ஜானு..நீ என்னை பெயர் சொல்லியே அழையேன். எனக்கே ஒரு மாதிரி இருக்கு என்றான் ஆதேஷ்.
பெயர் சொல்லியா? ஏன் ஜானு நீ அவனை மாமான்னு அழைக்கும் முறை தான் வரும் தீனா கூற, இருவருமே மாமாவா? என்றனர் கோரசாக.
ஆமாம் ஜானு. அவர் உன்னோட அண்ணாவை மாமான்னு தானே கூப்பிடுகிறார். நீயும் அப்படி தான் அழைக்கணும் புவனா சொல்ல
நான் அபி மாமாவை தவிர யாரையும் மாமான்னு சொல்ல மாட்டேன் என்றாள் ஆதேஷை முறைத்தவாறு.
ஏன்மா கோர்த்து விடுற என்று ஆதேஷ் புவியை பாவமாக பார்த்தான். தீனா சிரித்து விட்டு, கவினும் அந்த பொண்ணும் பேசிட்டாங்களா? கேட்டான்.
தெரியல சார்.
சாரா?
என்னோட அண்ணாவை மட்டும் மாமான்னு கூப்பிடுற? நானும் உனக்கு மாமா தான் என்றான் தீனா.
ஓ.கே மாமா சார்.
தீனா புன்னகையுடன் ஜானு வெளிய இரு. இவரிடம் பேசிட்டு அழைக்கிறேன் கூறினான்.
இவரா? மரியாதை பலமா இருக்கே என்று ஆதேஷை பார்த்துக் கொண்டே வெளியே சென்று அமர்ந்தாள்.
இங்க பாரு மாப்பிள்ள..என்னால பிரதீப் அண்ணாகிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாது. அதனால நீ எல்லாரையும் பார்த்துக்கோ.
மாப்பிள்ளையா? நானா? நான் பார்த்துக்கணுமா? ஆதேஷ் பயந்தவாறு கேட்க, தீனா முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு, யாருக்கு வேண்டுமானாலும் எது கூடவும் நடக்க நேரிடும். அதனால் கவனமாக பார்த்துக்கோங்க. என்னோட வேலையில நான் பிஸியா இருப்பேன். அடிக்கடி வீட்டிற்கு வர மாட்டேன்.
மாமா சார்..நான் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்பிடுவேன்.
ஏன்?
படிப்பை பார்க்க வேண்டாமா? அம்மா அப்பா தான் இருப்பாங்க. நீங்க அவங்கள பார்த்துப்பீங்கன்னு கூட்டிட்டு வந்தா நீங்க என்னை பார்த்துக்க சொல்றீங்க?
துப்பாக்கி சுட தெரியுமா?
மாமா சார், எனக்கு துப்பாக்கி பிடிக்க கூட தெரியாது.
ஓ.கே கத்துக்கோங்க என்று துப்பாக்கியை தூக்கி போட்டான் தீனா.
மாமா சார்…அதிர்ந்து அதை பிடித்தான். மனதில் செம்ம பயம் ஆதேஷிற்கு.
அர்ஜூன் வந்தா ஊருக்கு வருவீங்க தானே?
மாமா சார்..என்று சிந்தித்தான்.
நாளை நான் கூறும் போது வாங்க. நான் சொல்லித் தாரேன்.
சரி என்று அவன் கதவை திறக்க ஜானு அவன் முன் வந்தாள்.
மாப்பிள்ள..நில்லுங்க..என்று தீனா அவனருகே வந்து, அந்த பொண்ணை மறக்க கஷ்டமா இருக்கா? கேட்டான். ஆதேஷ் முகம் வாடியது. பரவாயில்லை செம்மையா கோபப்பட்டீங்க?
மாமா சார், நானே அவ விசயத்துல இருந்து வெளிய வர நினைச்சா. ஞாபகப்படுத்துறீங்களே?
சரி..மாப்பிள்ள கோபிச்சுக்காதீங்க. நீங்க அந்த பொண்ணை மறக்க வேற பொண்ணை காதலிக்கலாமே?
டேய்..அண்ணா..என்ன பேசுற? ஜானு கத்த, புவனா உள்ளிருந்து அண்ணா நீங்க படிப்புல கவனத்தை கொண்டு போங்க..ஐடியா கொடுக்குற ஆளப்பாரு? என்று தீனாவை திட்டினாள் புவனா.
சரியா சொன்ன புவி. அண்ணா..பாத்தேல என்னோட புவி மூளைய? ஜானு பெருமையடிக்க, என்ன மூளையோ புத்தகத்தை வைத்துக் கொண்டே இருந்தால் பைத்தியம் தான் பிடிக்கும் என்றான் தீனா.
மாமா சார்..நானே பாத்துக்கிறேன்.தேங்க்ஸ் சிஸ்டர். உங்க உடம்பை பார்த்துக்கோங்க என்று ஜானுவை பார்த்தான். அவள் தலையை வெட்டினாள்.
உன்னுடன் சண்டை போடும் நிலையில் நான் இல்லை என்று அவன் தீனாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான்.
புவி நீ வருத்தப்படாதே. நான் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து உனக்கு சொல்லி தாரேன் ஜானு கூற, மெலிதான புன்னகையுடன் நீ எனக்கு சொல்லித் தர போகிறாயா? சொல்லிக் கொண்டே ஜானுவும் அவன் பின் வந்தாள்.
அவன் காரை எடுக்க, சற்று நொடி அமைதி நிலவியது. பின் ஜானு ஆரம்பித்தாள். இன்னுமா அந்த பொண்ண மறக்கல?
அவன் காரை நிறுத்தி அவளை பார்த்து, அமைதியா வாராயா?
இல்லை. எத்தனை வருட காதல்?
அவன் தாரிகாவை பார்த்ததிலிருந்து அனைத்தையும் கூறி முடித்தான். ஆனால் அவங்களுக்கு வேறவங்கள தான் பிடிச்ச பின்னும் எப்படி உங்களால் காதலிக்க முடிந்தது?
அவளுக்கு தான் ஆரம்பித்திலிருந்து என் மீது விருப்பமில்லையே? நான் மட்டும் தான் காதலிக்கிறேன் என்று தெரிந்து தான் செய்தேன். அவளிடம் முதல் முறையாக கோபமாக பேசினேன். அதுவும் ப்ரெண்டா கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். நான் எப்படி அந்த மாதிரி சொன்னேன் என்று எனக்கே புரியவில்லை.
அவங்க கிடைக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு தான் பேசிட்டீங்களோ?
தெரியலையே என்று ஜானுவை பார்த்தான். அவளும் அபியை காதலிக்கிறாளே? அவளுக்கு அபி காதல் தெரிந்தால் அழுவாளோ? என்று நினைத்தான் ஆதேஷ். இருவரும் வீட்டிற்கு வந்தனர்.