அத்தியாயம் 12

ஸ்ரீ அர்ஜூனை இமை கொட்டாமல் பார்க்க, இருவரும் பார்க்காத நேரம் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்துக் கண்ணடித்தான். அவள் அம்மா, தாரிகாவை பார்த்தாள். அம்மா ஸ்ரீக்கு ஊட்டுவதில் கவனமாகவும், தாரிகா சோகமுடனும் இருக்க மீண்டும் அவனை பார்த்தாள். இம்முறை அவளை பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் திடுக்கிட்டு,

என்ன பண்றான் இவன்? பயத்தில் தலை கவிழ்ந்தாள். சாப்பிட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தாள். அப்பொழுதும் அவன் பார்க்க,

அச்சோ..இவன் என்ன இப்படி பார்க்கிறான்? எனக்கு பயமா இருக்கே..இது சரியில்லை என்று மனதில் நினைத்த ஸ்ரீ, எனக்கு போதும்மா என்று அவள்  ஆடையை மறந்து, அம்மா நான் தூங்குகிறேன் என்று படுத்துக் கொண்டாள். அவளுக்கு காயத்தால் போர்வையை போர்த்த கூட முடியாது.அவளுடைய கால்கள் முழங்காலுக்கு கீழ் தெரிய, பட்டென எழுந்து அமர்ந்தாள்.

நமட்டு சிரிப்புடன் ஸ்ரீ தூங்கப்போறேன்னு சொன்ன? தூங்கலையா? என்று அர்ஜூன் அவளை குறுகுறுவென பார்த்தான்.

டேய்..என்று அவனை முறைத்துக் கொண்டு, அர்ஜூன் நீ சாப்பிட்டியே கையை கழுவி விட்டு வாயேன்.

ஸ்ரீ மீது அழுத்தமான பார்வையை உதிர்த்து விட்டு, கை கழுவ சென்றான். ஸ்ரீ தாரிகாவை பார்த்து சம்பாசனை செய்ய, அவள் சிரிப்புடன் கட்டை விரலை தூக்கி காட்டினாள்.

அம்மா…அகில் சீனியர், அபி சீனியருக்கு சாப்பாடு குடுத்துட்டு வரவா? தாரிகா சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள்.

நானே கொடுத்துட்டு வாரேன் என்று அவர் எடுத்துக் கொண்டு வெளியே சென்றார். அர்ஜூன் வெளியே வந்தான்.

அர்ஜூன்..இங்கே வா என்று ஸ்ரீ அழைத்தாள். தாரிகாவை பார்த்தான். அவள் சாப்பிட்டுக் கொண்டே அர்ஜூனை பார்த்தாள்.

ஸ்ரீ அருகே தாரிகா அமர்ந்திருந்தாள். அர்ஜூனை கீழே விழ வைக்க திட்டம் போட்டிருந்தனர். தாரிகா அருகே அர்ஜூன் வரும் போது தாரிகா இடையே காலை விட்டு அவனை இடறி விட்டு அவன் தள்ளாடும் இடத்தில் ஒரு நாற்காலியை போட்டு வைத்து அதுவும் அவனை தட்டி அவன் விழுவதாக செய்திருந்தனர்.

அவர்கள் நினைத்தபடி தாரிகா அர்ஜூனை சரியாக இடறி விட்டு அவனும் சரியாக நாற்காலி பக்கம் விழ தான் வந்தான். ஸ்ரீக்கு கொஞ்சம் தள்ளி தாரிகா இருக்க, நாற்காலி இருவருக்கும் நடுவே இருந்திருக்கும். அர்ஜூன் விழ வந்த போது அவனே அவனை சமாளித்து நகர்ந்தவன் கால் திருப்பி ஸ்ரீ இருந்த கட்டிலில் அவளது இதழ்களில் முத்தமிட்டபடி அவள் மீதே விழுந்தான்.

தாரிகா அதிர்ச்சியில் வாயில் வைக்க இருந்த சாப்பாட்டை அப்படியே வைத்த படி அதிர்ந்து இருவரையும் பார்த்தாள். அர்ஜூன் நகர்வதாக இல்லை. ஸ்ரீயும் பயத்தில் உறைந்து இருந்தாள்.

டேய் அண்ணா, என்ன நடக்குது? தாரிகா கேட்க,

அவன் எழாமல் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே, உனக்கு முத்தம் வேண்டுமென்றால் சொல்லி இருக்கலாமே? அதற்காக இருவரும் சேர்ந்தா திட்டம் போடுவீங்க? கேலியுடன் நகைத்தான்.

திருதிருவென விழித்த ஸ்ரீ, என்னடா சொன்ன? என்று அவனை செல்லமாக அடிக்க,

ஏம்மா, நீ அவனை அடிக்கதான் செய்கிறாயா? தாரிகா கேட்க ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள்.

அவன் திரும்பி தாரிகாவை பார்த்து எழுந்து, நீ அவளுக்கு உதவுகிறாயா? தாரிகாவிடம் வர அவள் ஸ்ரீ கட்டிலின் மறுபுறம் நின்று கொண்டு,

அண்ணா, முதலில் எனக்கு அவளை தான் தெரியும்.பின் தான் நாம் அறிமுகமானோம்.

ஓய்..நான் உன்னோட அண்ணா. எனக்கு எதிரா நிற்கிறாயா?அவளை விரட்ட இருவரும் ஸ்ரீயை சுற்றி சுற்றி விளையாண்டு கொண்டிருந்தார்கள். அவன் கூறிய அண்ணனில் ஸ்ரீயின் மனம் சுணங்கியது. அவளுக்கு இன்னும் பயம். எங்கே தாரிகாவை தன்னுடன் பேச விடாமல் செய்து விடுவார்களோ? என்ற பயம். தாரிகா வெளியே ஓடி விட்டாள்.

அர்ஜூன் திரும்பி ஸ்ரீயை பார்த்தான்.அவள் முகம் வாட்டத்துடன் பார்த்த அர்ஜூன் அவளருகே வந்து அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன? அவன் கேட்க, அவள் மௌனமாக இருந்தாள்.

நீ பேசாம இருந்தேனா? என்று ஸ்ரீயிடம் நெருக்கமாக வந்து அமர்ந்தான். அவன் எப்போதும் ஸ்ரீயின் ஆடையை பெரியாக எடுத்துக் கொள்ள மாட்டான். ஸ்ரீ தான் அவன் பார்வையில் பயந்தாள். அர்ஜூனுக்கு தவறான எண்ணமெல்லாம் இல்லை. அவளை டீஸ் பண்ண தான் செய்தான். அவள் காதலை தன்னிடம் கூற மாட்டாளோ? என்ற ஆவல் கூட அவனிடம்.

ஸ்ரீ அவனை ஏறிட்டு பார்த்து விட்டு மீண்டும் மௌனமானாள்.

ஸ்ரீ..என்று அழைத்து அவள் முகத்தை நிமிர்த்தினான். நீ என்னிடம் ஏதாவது சொல்லணுமா?

இல்லை என்று தலையசைத்தாள்.

அப்புறம் ஏன் உன் முகம் திடீரென வாடி விட்டது. அர்ஜூன் நிவி..என்றாள்.

அவனுக்கென்ன? ஆருத்ராவிடம் தான் இருக்கிறான்.

தெரியும். அவனை கொஞ்சம் பார்த்துக்கோ.

திடீர்ன்னு ஏன் இப்படி சொல்ற?

என் மீதுள்ள கோபத்தில் அவனை ஏதாவது செய்து விடுவார்களோ? என்று பயமா இருக்கு அர்ஜூன். நீயும் அர்ஜூன் ரொம்ப பேசாத.

என்னை வேடிக்கை மட்டும் பார்க்க சொல்கிறாயா? சினத்துடன் கேட்டான்.

இல்ல அர்ஜூன். அவங்க பேச்சு இப்ப வேறுபட்டது போல் உள்ளது.

எனக்கு ஏதும் தெரியவில்லையே?

அர்ஜூன்..நீங்க எல்லாரும் இதிலிருந்து போறீங்களா? ப்ளீஸ்.

ஸ்ரீ போதும். உன்னை தனியா விட்டு போகச் சொல்றீயா?

அவள் அமைதியாக இருந்தாள்.

ஓ.கே நாங்க இதிலிருந்து போகிறோம். ஆனால் எனக்கு ஒன்று வேண்டும் என்றான்.

என்ன? என்பது போல் அவனை பார்த்தாள்.

எனக்கு நீ வேண்டும். எனக்கு என்னோட ஏஞ்சல் வேண்டும். உன்னால் என்னை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?

அவள் திகைத்து, அர்ஜூன்..உனக்கு பைத்தியமா? கேட்டாள்.

இல்ல ஸ்ரீ. நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நீ என்னை கல்யாணம் செய்தால் போதும். உன்னிடம் எனக்கு வேரெதுவும் வேண்டாம். பின் உன் வழிக்கே வர மாட்டேன்.

நோ..அர்ஜூன் என்று கண்கலங்கினாள்.

முடியாதுல. அப்ப நீ நடக்குறத வேடிக்கை மட்டும் பாரு. நிவிக்கு மட்டுமல்ல யாருக்கும் எதுவும் ஆக விட மாட்டேன். நீ தேவையில்லாம யோசிக்காதே. கண்ணை மூடி தூங்கு என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

ஸ்ரீ அர்ஜூன் கையை பிடித்து, நீயும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமே?

நான் ஓய்வெடுத்தால்..என்னுடைய முக்கியமான வேலை ஒன்று கெட்டு விடுமே என்று அவள் இதழ் நோக்கி குனிந்தான். ஸ்ரீ சட்டென விலக இருவரும் முட்டிக் கொண்டனர்.

அர்ஜூன்..என்று ஆர்வமாக ஏதோ சொல்ல வாயெடுத்த ஸ்ரீ நான் தூங்குகிறேன் அர்ஜூன் என்று படுத்து கண்ணை மூடினாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் மீண்டும் தன் லேப்பை எடுத்து அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் ஸ்ரீ தூங்கி விட தாரிகா ஸ்ரீயிடன் வந்து அமர்ந்தாள்.

தாரி நீ தூங்கலையா? அர்ஜூன் கேட்டான்.

அம்மா எங்கே?

அம்மா அபி, அகில் சீனியருடன் இருக்காங்க.

அவங்க சாப்பிட்டாங்களா?

ம்ம்..என்றாள்.பின் நீ லேப்பில் என்ன செய்கிறாய்? கேட்டாள் தாரிகா.

என்னுடைய தனி வேலை.

அது என்ன வேலை?

பிஸினஸ் அட்வைசர்.

என்ன? அதிர்ந்தாள்.

எத்தனை நாட்களாக பண்ற?

போன வருடமே தொடங்கி விட்டேன். இது ஆன்லைனில் மட்டுமே தொடர்புடையது. இதில் எனக்கு கீழ் ஏழு பேர் இருக்காங்க. அவங்களுடைய பெயரை தவிர அவங்கள பத்தி எனக்கு வேரேதும் தெரியாது.

தெரியாம எப்படிடா வேலை பார்க்க முடியும்?

ஏன் முடியாது. நாங்கள் பிஸினஸ் பற்றி செய்வதால் அதற்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசிக் கொள்வோம்.

உன்னால எப்படி இதை பற்றி படிக்காமல் முடியுது?

அம்மாவும் மற்றவர்களும் பேசி பார்த்திருக்கேன்.நான் தான் அன்றே கூறினேனே?

ஆனால் அண்ணா..இத்தனை நாள் செய்திருக்கிறாய்? நீ தொடங்கினாயா? இல்லை உன் குரூப்பில் யாரும் தொடங்கினார்களா?

நான் அவங்க பாஸ்.

தாரிகா சிரித்துக் கொண்டு பாஸா?

ஏன்மா, என்னால முடியாதா?

அப்படி சொல்லவில்லை. எவ்வளவு சம்பாதித்து வைத்திருக்கிறாய்?

நான்..என்று இழுத்த அர்ஜூன் கூறியதை கேட்டு தாரிகா அதிர்ந்து, என்னடா சொல்ற?

ஆம்.தொடங்கிய மூன்று மாதம் குறைவாக தான் வந்தது. என்னோட டீமிற்கே சரியாகி விடும். எனக்கு சுத்தமாக கைக்கு பணமே வராது. ரொம்ப கஷ்டப்பட்டு இரவு விழித்திருந்து பார்த்து தான் நிறைய கிளைண்ட் பிடிச்சோம். எங்களது அறிவுரையால் அவர்களது பெயரும் பொருளும் உயர்ந்தால் பணம் நிறைய கிடைக்கும்.

குறைந்தபட்சம் பத்தாயிரம் அதிகபட்சமாக பத்து இலட்சம் வரை வாங்குகிறோம்.இப்பொழுது ஐந்து கோடி சேர்த்து வைத்திருக்கிறேன்.

எப்படிடா?

நான் வரும் பணத்தில் பாதி தான் எடுப்பேன். மீதி என் டீம் மெம்பர்ஸ்க்கும். அவங்க தனி வேலைக்கும் பணம் வாங்குவார்கள். பெரிய பிஸினஸ் மேனை நான் தான் டீல் செய்வேன். தாரி இன்னொரு முக்கியமான விசயம். என்னோட அம்மாவிற்கும் கூட இரு முறை செய்து கொடுத்திருக்கிறேன்.

என்ன?

ம்ம்..என்றான் மகிழ்ச்சியுடன்.

ஏன்டா, அப்புறம் அம்மாவிடம் கடனுக்காக ஐந்து கோடி வாங்குன?

அது வேற..அதே பிஸினஸ் வைத்தே கட்டி விடுவேன்.

அப்ப நீ சம்பாதித்த பணம்?

அது என்று ஸ்ரீயை பார்த்தான். தாரிகா அதிர்ந்து அண்ணா..ஸ்ரீக்காகவா?

அவள் கேட்க, அவன் தலையசைத்தான்.

உன்னை மாதிரி ஒரு காதலன் கிடைப்பது எவ்வளவு அதிர்ஷ்டம்? உன்னை நினைத்தால் பெருமையா இருக்குடா.

ஹாஹாம்..அப்புறம் என்று அர்ஜூன் கிண்டலாக பேசினான்.

ஸ்ரீ கண்ணில் கண்ணீர் வடிந்தது. இவ்வளவு நேரம் இருவரும் பேசியதை கேட்டுக் கொண்டு தான் இருந்திருப்பாள்.அம்மா உள்ளே வந்தார். தாரிகா அமைதியாக இருக்க,

அம்மா சாப்பிட்டீங்களா? இல்லையா? அர்ஜூன் கேட்க, சாப்பிட்டேன்டா.

எதுக்கு இவ்வளவு நேரம்? அவனுக என்ன பண்றானுக? என்ன பேசினீங்க? அர்ஜூன் வினவ,

ஏன்டா இத்தனை கேள்வி?

சும்மா தான்மா. நீ தூங்கலையா? அர்ஜூனிடம் கேட்டார்.

நான் தூங்க நேரமாகும்மா.

தாரி நீ போய் படு என்றார். அவள் ஸ்ரீ அறையின் உள்ளிருந்த அறைக்குள் சென்று படுத்தாள். அம்மா நீங்களும் சென்று ஓய்வெடுங்கள் என்று லேப்பிற்குள் நுழைந்தான்.

நான் அவங்க அறைக்கு செல்கிறேன் என்றார்.

எங்கேம்மா? அர்ஜூன் கேட்டான்.

தருணுடன் இதயா குடும்பம் உள்ளது. அந்த பசங்க கஷ்டப்படுவாங்கல..

அம்மா..உங்க பிள்ளைகளும் தனியே தான் இருக்கோம் என்றான் அர்ஜூன்.

அதான் நீ இருக்கேல. ரெண்டு பேரையும் பார்த்துக்க மாட்டாயா?

அவங்க போகட்டும். விடு அர்ஜூன் என்றாள்.

அவங்க சென்ற பின் அவள் இருந்த அறைக்கு அர்ஜூன் சென்று ஏன் அம்மாவை போக விட்ட?

அவங்க யார் அறைக்கும் போகல? வெளிய தான் உட்கார்ந்திருப்பங்க. அவங்க தனியா இருக்க நினைச்சிருக்காங்க. கதவு திறக்கும் ஓசை கேட்டு வெளியே வந்தனர் அர்ஜூனும் தாரிகாவும். நிவாஸ் ஸ்ரீயை பார்க்க வந்திருப்பான்.

அவர்களை பார்த்து பேசி விட்டு ஸ்ரீ அருகே உட்கார்ந்திருந்து விட்டு வெளியே சென்றான். அர்ஜூன் நிவாஸை அங்கே இருக்க சொல்ல, அவன் ஆருத்ராவை பார்த்துக் கொள்ள யாருமில்லை என்று சென்று விட்டான். அவள் நாளை வீட்டிற்கு சென்று விட்டால் நிவாஸால் பிரச்சனை முடியும் வரை அவளை பார்க்க முடியாது என்று அவளறையிலே இருந்தான்.

தாரிகா படுக்க சென்று விட, அர்ஜூன் ஸ்ரீயிடம் வந்து அமர்ந்தான். அவளது மிருதுவான உள்ளங்கையில் மெதுவாக முத்தமிட்டு, பேச ஆரம்பித்தான்.

நீ இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஐந்து வருடங்கள்.. உன்னை பார்க்காம என்னால இருக்க முடியல.தெருதெருவா தேடினேன். அங்கிள் என்னை கண்டுபிடித்தும் என்னால் உங்கள் யாரையும் அறிய முடியாமல் போனது. ஒரு வேலை நான் அவரை கவனித்திருந்தால் இப்பொழுது அவர்களுடன் சந்தோசமா இருந்திருப்ப ஸ்ரீ. நீ அவங்க கையல சிக்கி தவித்திருக்க மாட்டாய்? கண்கலங்கினான்.

அகிலுக்காக உன்னை விட்டு கொடுப்பதாக கூறியதால் நீ என் மீது கோபமா இருக்கிறாயா ஸ்ரீ? அப்படியாவது உன்னை பார்த்துக் கொண்டாவது இருக்கலாம். முன் போல் என்னை விட்டு சென்று விட மாட்டாய் என்று தான் அவன் கூறியதை ஒத்துக் கொண்டேன். ஆனால் இப்பொழுது அதை விட உன்னுடன் நெருக்கமாக உணர்கிறேன். என்னால் என்னை கட்டுப்படுத்த முடியாமல் தான் முத்தமிடுகிறேன். என்னை மன்னிச்சிரு ஸ்ரீ என்று அவளது தலையை கோதினான். எனக்கு நீ என் அருகே இருந்தால் மட்டும் போதும் என்று எழுந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து ஸ்ரீயையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்ரீ அனைத்தையும் கேட்டு, நீ உன்னை ஏன் அர்ஜூன் குற்றம் சாட்டுகிறாய்? அது என் தலைவிதி. எனக்கு உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் போதாதுடா. உன்னுடன் வாழ ஆசையாக உள்ளது. ஆனால் என் துரதுஷ்டம் உன் முன் நிற்க கூட திராணி இல்லாது போயிற்றுடா. உன் தூய்மை, தகுதி, மனசுக்கு நான் ரொம்ப கீழ்டா மனதினுள் எண்ணி வருந்தினாள்.என் காதலை சொல்ல கூட அருகதையற்றவள்டா என்று மனதினுள் அழுதாலும் கண்ணீர் வழிய, அர்ஜூன் ஓடி அவளருகே வந்தான்.

ஸ்ரீ..ஸ்ரீ..அவளை எழுப்ப, அவள் அசையாது இருந்தாள். எப்பொழுதும் போல் கனவு காண்கிறாள் போல என்று அவன் நினைத்துக் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டான்.