அண்ணா..புவி என்று கவின் கேட்க,..ஆள் போட்டுருக்கேன் இருந்தாலும் சீக்கிரம் கிளம்பணும். அர்ஜூன் அவங்கள விட மாட்டேன் அர்ஜூன். விடவே மாட்டேன்.
ஏன் அர்ஜூன் ஆதாரத்துக்கு நீ சொன்னவங்க சாட்சி சொல்லுவாங்களா?
சொல்வாங்க அண்ணா. ஆனால் அவருக்கும் அவர் தங்கைக்கும் ஏற்கனவே பிரச்சனை உள்ளது ஊரார் அனைவருக்கும் தெரியுமே? அதனால் அவங்க சாட்சி சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டாங்க.
வேற ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கணும் . நாளை நானும் ஊருக்கு வாரேன் அண்ணா. பார்க்கலாம் என்றான்.
கேரி பின் சென்ற இன்பா, அவனை நிறுத்தி என்னாச்சு கேரி?
ப்ளீஸ் பிரின்சன், என் அருகே வராதே? கண்ணீர் வழிய அவளை பார்த்தான்.
சைலு கேரி..என்று மாதவ் அவனை பிடித்து இழுக்கிறேன் என்று யாசுவை இழுத்து நடக்க, சார்…யாசு என்றாள் நித்தி.
நின்று யாசு கையை பிடித்திருப்பதை மாதவ் பார்த்து விட்டு, சைலேஷை பார்த்தான். அவன் தோளை குலுக்கியவாறு முன் சென்றான். மாதவ் யாசு நாம பேசுவோம் என்று அவள் கையை விட்டு இன்பாவை பார்க்கச் சென்றான்.
எதுக்குடா அழுற? நீ அழுது பார்த்ததே இல்லை. அழாதேடா.. ப்ளீஸ் என்று இன்பா கெஞ்ச, அவன் இன்பாவை அணைத்து விட்டான். அவள் அவனை தள்ள, ப்ளீஸ் பிரின்சஸ்..என்னோட வர்றியா? இன்பா கண் கலங்க அவனை விலக்கி விட்டு அமர்ந்தாள். அவளருகே வந்து அமர்ந்தான் கேரி
நான் விருப்பமில்லாமல் தான் திருமணம் செய்து கொண்டேன். எனை அறியாமல் அனைத்தும் நடந்தது. நான் ஒரு நாள் கூட என் வொய்புடன் நேரம் செலவழித்ததே இல்லை. பிசினஸ் வேலையா தான் இருப்பேன். இரவு தூங்க மட்டும் தான் வீட்டுக்கே வருவேன். அதனால் இருவரும் சண்டை வந்து, கோபித்து சென்று அவள் வீட்டிற்கு சென்று என் வீட்டிற்கு வரும் போது கருவுற்றிருந்தாள்.
சந்தோசமா இருந்தாலும் அவளுடனான பிரச்சனை அதிகமானது. அந்த பொண்ணு மத்திய வர்க்கப் பொண்ணு. ரொம்ப நல்ல பொண்ணு. ஆனால் அவள் என்னை பிடித்து தான் திருமணம் செய்தாள்.எங்க வீட்ல அவளிடம் நல்லா நடந்துக்கிட்டாங்க. ஆனால் நான் அவளுடன் பேசாதிருப்பதை பார்த்து, என் வீட்டில் கேட்டிருப்பாள் போல..அவங்க பிசினஸை காரணம் காட்டி சமாளித்திருக்கிறார்கள்.
முழு மாத கர்பிணியா இருந்தா. அன்று இரவு வீட்டிற்கு வந்தப்ப..பணம் தான் முக்கியமா? நான் உங்களுக்கு தேவையில்லையா? என்னை பிடிக்கலையான்னு கேட்டா?
நானும் வேலைப்பளு அலுப்பில் வந்துருந்தேன். என்னோட பெற்றோர் மீதிருந்த கோபத்தில், ஆமாம். எனக்கு பணம் தான் முக்கியம் என்று கத்தினேன். அவள் அழுது கொண்டே படுத்து விட்டாள்.
எனக்கு கஷ்டமா போச்சு. சாரி என்று அவளருகே சென்றேன். அவள் எழுந்து பக்கத்து அறையில் சென்று படுத்துக் கொண்டாள். நானும் அவள் தூங்குகிறாள் என்று தூங்கி விட்டேன்.
நடுஇரவில் அவளுக்கு வலி வந்திருக்கு.நான் அசதியில் தூங்கியதால் எழாமல் இருந்து விட்டேன். வீட்டு ஆட்கள் அனைவரும் அவரவர் அறையில் இருந்தனர்.
அவள் கதறல் அதிகமாகவும் நான் தான் முதலில் விழித்தேன். அவளை பார்த்து பதறி அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தேன். ஆனால் அவளது கர்ப்பப்பை பலவீனமா இருக்கு. அதனால் யாராவது ஒருவரை தான் காப்பாற்ற முடியும்ன்னு சொல்லிட்டாங்க.
எனக்கு அவள் மீது விருப்பமில்லை. ஆனால் அவள் என்னை மிகவும் நேசித்தாள். அது எனக்கு நன்றாகவே தெரியும். என்னால் குழந்தையையும் விட முடியவில்லை.எனக்கு ரெண்டு பேரும் உயிரோட வேண்டும் என்றேன்.
அந்த வலியிலும் அவள் குழந்தையை காப்பாற்ற சொன்னாள். இல்லை எனக்கு நீயும் வேண்டும் என்றேன். அன்று இரவு நான் கோபத்தில் பேசியது அவள் மனதில் பதிந்து விட்டது. என்னை தான் உங்களுக்கு பிடிக்காதே. குழந்தைய எடுத்துக்கோங்க.. குழந்தைக்கு பணத்தை விட பாசம் அதிகமா கிடைக்கணும். அதுக்கு நீங்க உங்க மனசுக்கு பிடிச்ச பொண்ணா, குழந்தையை நல்லா பாத்துக்கிற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க என்று காதலுடன் என்னை பார்த்து கண்ணை மூடினாள். நான் நொறுங்கி விட்டேன் என்று அழுதான் கேரி. இன்பா கண்களும் கலங்க கண்ணீர் வழிந்தது.
அவள் போன பின் என் பெற்றோரை விட்டு பிரிந்து தனியே வந்தேன். பாப்பாவை பார்த்துக்க ஆளை வைத்து விட்டு, பிசினஸை பார்த்தேன். ஆனால் அதிகம் வெளியே இருக்க மாட்டேன். எல்லாவற்றையும் உதவியாளரை வைத்தே செய்து விட்டு, பாப்பாவுடன் தான் நேரம் செலவழித்தேன். என் வீட்டில் வேரொரு பொண்ணு எனக்கு பார்த்திருப்பதாக சொன்னாங்க. என்னால முடியாதுன்னு சொல்லிட்டு, பாப்பாவுடன் வீட்டிலே இருந்தேன்.
அப்படி ஒரு நாள் தான் சைலு போன் செய்து அர்ஜூனா? அந்த பையன் பிரின்சஸ்? என்று இன்பாவை பார்த்தான். ம்ம்..என்றாள் தொண்டை அடைக்க,
அந்த பையன் பிசினஸ் பற்றியும், அவனது காதலை பற்றியும் கூறினான். எனக்கு உடனே உன் நினைவு தான் வந்தது. யாரோ ஒரு பொண்ணை கல்யாண பண்றதுக்கு பதில் எனக்கு ரொம்ப பிடிச்ச உன்னை பண்ணிக்க கேட்கலாம்ன்னு தோணுச்சு? என்று இன்பாவை பார்த்தான்.
கண்ணீரை துடைத்த இன்பா,ஓ..இரண்டாவதாக என்னை கல்யாணம் செய்ய கேட்க வந்தாயா?
அப்படியில்லை பிரின்சஸ். எனக்கு உன் மீது இப்பொழுதும் காதல் உள்ளது. ஆனால் உனக்கு..
நிறுத்து. போதும்.என் மீது உனக்கு காதல் இருந்தது நாம் படிக்கும் சமயத்தில். ஆனால் அப்பொழுது இருந்தது போல இப்பொழுதும் காதல் இருந்தாலும் அந்த அளவுக்கு இல்லை.
பிரின்சஸ்..சத்தமிட,
இன்பா அவனை வெறித்து விட்டு, உனக்கு புரியலையா? நீ உன்னோட பொண்டாட்டியோட வெளியே சுற்றாமல் இருந்த, அவளுக்கான நேரம் செலவழிக்காமல் இருந்த..ஆனால் அவள் மீதுள்ள காதலை நீ கூறாமல் விட்டுட்ட?
இல்ல..பிரின்சஸ்.நான் அவளை லவ் பண்ணவேயில்ல.
உனக்கே தெரியாம அவ உன்னோட மனசுல இருக்காடா. அவ சாகும் நிலையில் இருந்த போது இரண்டு பேருமே வேணும்ன்னு தான கேட்ட. அவளுடனும் குழந்தையுடனும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டிருக்க. ஒரு வேலை உனக்கு அவள் மீது விருப்பில்லாமல் இருந்தா நீ எப்பவோ விவாகரத்து செய்திருப்ப. ஆனால் நீ பண்ணல. அது போல் உங்கள் குழந்தையை பத்தி தெரிஞ்ச உடனே சந்தோசப்பட்ட..அது உன்னுடைய குழந்தைக்காக இல்ல. அது அவள் மீண்டும் உன் வீட்டிற்கு வந்ததால்.
பாவம் அந்த பொண்ணுக்கு தான் உன்னை புரிஞ்சுக்க தெரியல.அவ சொன்னான்னு அவ பேச்ச தட்டமாக உனக்கு பிடிச்ச என்னை கல்யாணம் பண்ண நினைக்கிற? அதுக்கு பேர் என்ன? அந்த பொண்ணு சொன்னதுலயும் ஒரு தப்பு இருக்கு.
கல்யாண வாழ்க்கையில ஒருவருக்கு மட்டும் விருப்பமிருந்து மற்றவருக்கு பிடிக்கலைன்னா அந்த வாழ்வு ரெண்டு பேருக்கும் அவஸ்தை தான்.
நான் உன்னை என்னோட ப்ரெண்டா மட்டும் தான் பார்த்தேன். பார்க்கிறேன். பார்ப்பேன். நீ சொல்வது போல் உனக்காக தான் திருமணம் செய்தால் எனக்கு வேதனையாக தான் இருக்கும்.
கேரி..எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் அதுக்கு ஒரு எல்லை இருக்கு. ஆனால் காதலுக்கு எல்லை இல்லை. முடிவும் இல்லை. நான் வெளிப்படையாகவே சொல்றேன்.
நீ என்னை ப்ரெண்டா தொட்டா..எனக்கு ஏதும் தோணாது. ஆனால் கணவனாக என் அருகே வந்தால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு என்னோட ப்ரெண்டு கேரி தான் வேண்டும் என்று இன்பா அழுதாள். அவர்கள் பேசுவதை பின்னிருந்து அனைவரும் பார்க்க, அபியும் இருந்தான்.
ஆதேஷ் தாரிகாவை பார்த்தான்.அவளும் கண்கலங்க நின்றாள். ஆதேஷிற்கு புரிந்தது. அவனுக்கு ஏற்றுக் கொள்ள கஷ்டமா தான் இருந்தது.
கேரிக்கு இன்பா வார்த்தைகள் தைக்க, அவனும் அழுதான். சைலேஷும் மாதவும் கேரியை அணைத்துக் கொண்டு, நீ எங்கள விட்டுட்டு போயிட்டன்னு தான் கோபமா இருந்தோம். இவ்வளவு நடந்ததா டா? மாதவ் கண்கலங்கினான்.
இன்பாவிடம் வந்த இதயா,அக்கா..என்று இன்பாவை அணைத்தாள்.
எனக்கு ஒண்ணுமே புரியலடா..என்று கேரி அழுதான். இன்பா கேரியை பார்த்து, உன்னோட காதலை மிஞ்சும் ஒரு காதல் கிடைச்சா அவங்கள கல்யாணம் பண்ணிக்கோ இன்பா கூற, அவளை புரியாமல் பார்த்தான் கேரி.
புரியலையா உங்களுக்கு? அபி கேட்க,அப்பொழுது தான் கேரியும் இன்பாவும் அவனை பார்த்தனர். அகில் அவனை அவர்கள் அருகே அழைத்து வந்தான்.
நீங்க காதலித்ததை விட எந்த பொண்ணு உங்களை காதலிக்கிறாளோ அவளுடன் பழகி காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். கரெக்டா மேம்..என்று அபி இன்பாவிடம் கேட்க,
ஹ..என்று விழித்து ம்ம்..என்றாள்.
இங்க என்ன பண்றீங்க? கேட்டபடி தீனா வந்தான்.அர்ஜூன், கவின் அவனுடன் வந்தனர். அர்ஜூன் எப்பொழுதும் ஸ்ரீக்கு கொடுக்கும் சாக்லெட்டை சாப்பிட்டுக் கொண்டே வந்தான்.
என்னடா பொண்ணுங்க மாதிரி சாக்லெட் சாப்பிடுற ?அகில் அர்ஜூனை வினவ,
பசங்க சாக்லெட் சாப்பிடக் கூடாதா? என்ன? அவன் கேட்க,
திடீர்ன்னு எதுக்குடா?
டென்சன்டா.
உனக்கு என்ன டென்சன்?
ஏகப்பட்டது இருக்கு. என்னன்னு சொல்றது? என்று அர்ஜூன் இன்பாவை பார்த்தான்.
மேம் அழுதீங்களா? சாக்லெட் வேணுமா? என்று இன்பாவிடம் அர்ஜூன் நீட்ட, அதை பிடுங்கிய ஆதேஷ் தனியாக சென்று அமர்ந்து அதை பிரித்தான்.
உனக்கு என்ன ஆச்சுடா ஆது?
அண்ணா..என்று அர்ஜூனிடம் பேச நினைத்து பேச முடியாமல் மீண்டும் அமர்ந்தான். அர்ஜூன் எல்லாரையும் பார்த்தான். பிரச்சனையால் அனைவர் முகமும் வாடி இருக்க புரிந்து கொண்ட அகில் ஆதேஷிடம் வந்து, அவனது சாக்லெட்டை பிடுங்கினான்.
சீனியர்..குடுங்க? அவன் கேட்க, நீ முதல்ல பேசு. அப்புறம் நான் எத்தனை வேண்டுமானாலும் வாங்கித் தாரேன். தாரிகாவை பார்த்தான். கவின் இருவரையும் பார்க்க, இன்பாவும் ஆதேஷிடம் தாரிகாவும் நீயும் நினைக்கிறத பேசுங்க என்றாள்.
இவங்க எதுக்கு பேசணும்? என்று கவின் பொறாமையில் தகிக்க, தாரிகா பார்வையில் அமைதியானான். என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? என்று தாரிகா பார்ப்பது போல் இருந்திருக்கும். இருவரும் ஓர் மரத்தடி மேசையில் அமர்ந்தனர்.
நான் அன்றே உன்னிடம் பேசினேன். நாம் பேசிய ஒரு வாரமும் முடிந்தது. ஆனால் உன்னால் என்னிடம் பேச முடியலைல..தாரிகா கேட்க, அமைதியாக அமர்ந்திருந்தான் ஆதேஷ்.
தாரிகா அவனருகே ஒட்டி வர, தள்ளிப் போ..என்றான். நாம் இது போல் நிறைய முறை அமர்ந்து பேசி இருக்கோம் என்றாள்.
இருக்கலாம். ஆனால் இப்பொழுது என்னால் முடியலை என்றான் ஆதேஷ். என்னுடைய உணர்வுகள் அவ்வளவு வீக்கா. உடனே உன்னை மறக்க. என்னால முடியல. அதனால் தான் உன்னிடமிருந்து விலகி இருந்தேன் அவன் கூறினான்.
அவனும் மனுசன் தான். அவன் அம்மா பற்றி தெரிந்தது. திடீர் தந்தை..நம் எல்லாருடைய பிரச்சனை. அதை விட அவன் காதல். கண்டிப்பா அவ மேல தான் கோபத்தை காட்டுவான். “அமைதியான கடலும் கொந்தளிக்கும்” அவள் பேச, வருத்தமாக இருந்த தீனா சிரித்தான்.
டேய்..வாயை மூடு என்றாள் துகி.
என்ன நீ எங்களுக்கு மரியாதையே கொடுக்க மாட்டிங்கிற? தீனா எகிற, உங்களுக்கெல்லாம் மூளையே இல்லடா.
மேடம் என்ன சொன்னீங்க? அர்ஜூன் அவளிடம் வர, தயங்கியவாறு மூளை இல்லைன்னு சொன்னேன்.
இரண்டு பேரும் சண்டை போட்டா போடட்டும் ப்ரெண்ட்ஸ் தான? அர்ஜூன் கேட்க, இன்பாவும் இல்ல அர்ஜூன் தாரிகாவுக்கு மட்டும் தான் ஆதேஷ் ப்ரெண்டு. இன்னும் ஆதேஷ் காதல் முடிவுக்கு வரவில்லை என்று கேரியை பார்த்தாள்.
அவன் அமைதியாக இருக்க, டேய்..அர்ஜூன் என்னோட வாழ்க்கையோட விளையாடுறீங்கடா? என்றான் உதறலுடன் கவின்.
யார் இடையே செல்வது? தீனா கேட்க, நான் தான் இருக்கேனே என்று அவன் கேட்ட நிமிடத்தில் அவர்கள் முன்னிருந்த கல் இருக்கையில் சென்று அவர்களை பாராதது போல் வருத்தமாக இருப்பது போல் காட்டினாள் துகிரா.
ஆதேஷ் அவளை பார்த்ததும், ஏய்..கேடி என்ன பண்ற? கேட்டான்.
ஆது இங்க தான் பேசுறீங்களா? சாரிடா என்று எழுந்தாள் துகிரா. தாரிகா புரியாமல் அவளை பார்க்க, போ..என்று ஆதேஷ் கூற அனைவரும் அவளை பார்த்து சிரித்தனர்.
இந்த அசிங்கம் உனக்கு தேவைதானா? தீனா சிரிக்க, ஸ்ரீயை பற்றி தெரிந்ததிலிருந்தே நித்தி அமைதியாக இருந்திருப்பாள். அவள் செய்கையில் அனைவரும் சிரிக்க, தாரிகா அம்மா அங்கே சென்றார்.
அதற்குள் அவர்கள் மீண்டும் பேச்சை ஆரம்பித்திருப்பர். புரிஞ்சுக்கோ ஆது தாரிகா கெஞ்ச,..முடியல தாரி. பள்ளியிலிருந்தே காதலிக்கிறேன். அது உனக்கே தெரியும்னு சொன்னேல. நீ அப்பொழுதே மறுத்திருக்கலாம். அப்பொழுது பேசாமல் திடீர்ன்னு சீனியருடன் நீ சேர்ந்துட்டா..என் நிலையை யோசித்தாயா?
கல்லூரி வந்தவுடனே உனக்கு தெரிஞ்சது தானே. நீ என்னிடம் பேசி இருக்கலாமே? நீ காதலை சொன்னால் தானே உன்னை வேண்டாம் என்று சொல்ல முடியும். பள்ளி நாட்களிலே சொல்லி இருந்தால் அன்றோடு பிரச்சனை முடிந்திருக்கும் கோபமாக அவள் பேச,
பிரச்சனையா? நான் உனக்கு பிரச்சனையா? கேட்க,
ஆது ப்ளீஸ் நீ என்னோட ப்ரெண்டுடா.
இல்ல..இந்த பிரச்சனை இனி உனக்கிருக்காது. எனக்கு நீ காதலியாகவும் வேண்டாம். ப்ரெண்டாகவும் வேண்டாம். எனக்கு யாருமே வேண்டாம் என்ற ஆதேஷை அடித்து விட்டால் தாரிகா.
அங்கே வந்த தாரிகா அம்மா பார்த்தது தன் மகள் ஆதேஷை அடித்ததை.
தாரி..என்று அம்மா கத்த ஆதேஷ் கன்னத்தில் கை வைத்திருக்க, எல்லாரும் அங்கே வந்தனர்.