வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-5
228
அத்தியாயம் 5
துகிரா பிரதீப் அருகே வந்து அமர்ந்தாள்.
நாம கிளம்பணும். உனக்கு ஏதும் பிரச்சனை இல்லையே? பிரதீப் கேட்க,
ஆதேஷ் அவனிடம் வந்து என்னோட குடும்பத்தை நான் அழைத்து வரலாமா? என்று கேட்டான். பிரதீப் அவனை பார்க்க,
என்ன தான் அப்பா அம்மாவுடன் இருந்தாலும், அவங்களுக்கு கொஞ்சம் மாற்றம் இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது. அம்மா முன்பு போல் பேச மாட்டிக்கிறாங்க. துகிரா அப்பா மீண்டும் பிரச்சனை செய்தால் கொஞ்சம் பயமா இருக்கு. அவங்க பழைய மாதிரி இருந்தால் நல்லா இருக்கும். துகி கூட இருந்தாங்கன்னா? என்று பிரதீப் முகத்தை உற்று நோக்கினான். அவன் அமைதியாக கேட்க மேலும் தொடர்ந்தான்.அவள் இருந்தா கொஞ்சம் அவங்க நார்மலா இருப்பாங்க.
நீ வரலையா? துகிரா வருத்தமாக கேட்டாள்.
நான் வாரேன். விடுமுறை நாளுக்காக மட்டும் தான் வருவேன். ஞாயிற்றுக்கிழனை இரவு கிளம்பிடுவேன்.
அப்புறம் நிவாஸ் சொன்னது போல் அர்ஜூன் அண்ணாவையும் அழைத்து செல்வோமா? அந்த ரெசார்ட்டை திரும்ப எல்லாரும் பார்க்க போகலாமா?
எதுக்கு?
அதை கொஞ்சம் மாற்றினால் நல்லா இருக்கும்.
திட்டம் ஏதும் வச்சிருக்கியா?
ஆம் என்று பிரதீப் என்ன கூறுவானோ என்று ஆர்வத்துடன் ஆதேஷ் அவனை பார்த்தான்.
ஓ.கே போகலாம்.ஆனால் எல்லாராலும் வர முடியாதே? பிரதீப் கூற, ஆதேஷ் மற்றவர்களை பார்த்தான். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அதனால் நான் ஞாயிற்றுகிழமை வர பார்க்கிறேன் என்றான் சைலேஷ்.
அதற்கு பிரதீப், அர்ஜூன் நீ நம்ம ஊருக்கு வர வேண்டாம்.சிங்காரபுரத்துக்கு போ. நான் என்னோட பணியாளை வைத்து ஏற்பாடு செய்கிறேன். அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, நானும் வருகிறேன். தாரி நீயும் வரணும் என்றாள். அவள் கவினை பார்க்க,
நாம் சென்று விட்டால் அபி, தருணை யார் பார்த்துக் கொள்வார்கள்? ஸ்ரீ நிவாஸை பார்க்க, நான் வரல ஸ்ரீ..எனக்கு கை பெயினா இருக்கு என்று நிவாஸ் முகம் சுளிக்க, ஸ்ரீ பதறி அவனருகே வந்தாள். அர்ஜூன் நீ போய்ட்டு வா. நான் நிவியுடன் இருக்கேன் என்றாள் ஸ்ரீ. அங்கே வந்த ஆருத்ராவின் அன்னை தம்பியை நான் பார்த்துக்குறேன்.
இருக்கட்டும்மா என்றாள் ஸ்ரீ.
ஆருவிற்காக நாளை இங்கு தான் இருப்பேன்.நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஆம் என்று டாக்டராக வந்தான் ஆருத்ரா அண்ணன். இந்நிலையில் வெளியே செல்வது நல்லதல்ல. நான் இங்கே தானே இருப்பேன். எனக்கு வேலையில்லாத போது என் மச்சானை நான் பார்த்துக் கொள்கிறேன்.நீ போயிட்டு வா ஸ்ரீ. நீ தனியே இருப்பது தான் நல்லதல்ல. அவன் அக்கறையுடன் பேச, அர்ஜூன் அவனை முறைத்தான்.
ஸ்ரீ நிவாஸ் அருகே சென்று ரொம்ப வலிக்குதாடா? அவள் அவனிடம் பேசிக் கொண்டிருக்க,ஆருத்ரா அண்ணனோ ஸ்ரீயை பார்த்தவாறே நின்றான். அர்ஜூன் முகம் மாற, தாரிகா ஸ்ரீயை அவன் பார்க்காதவாறு மறைக்க கவின் அவளிடம் வந்து,
அர்ஜூன் தான் காதலால் பொறாமைப்படுறான். உனக்கு எதுக்கு வயிறு எறியுது? கேலி செய்தான். சீனியர் சும்மா இருங்க. அர்ஜூன் மூஞ்சியை கொஞ்சம் பாருங்க.கஷ்டமா இருக்கு என்றாள்.
என்னோட ஜில்லு..உனக்கு தெரியாதா என்ன? ஸ்ரீ அர்ஜூனை விட வேற யாரையாவது பார்ப்பாவாளா? நெவர் என்று பேச இருவரும் நெருக்கத்தையும் கவனித்து ஆருத்ரா அண்ணன் கவினிடம்,
ஏன்பா லவ்ஸ் பண்ற இடமா இது?
சார்,..நாங்க பேசிக்கிட்டு இருக்கோம் முறைத்தவாறு சொல்லி விட்டு, மேலும் தாரிகாவை நெருங்கி அவன் நம்ம ஸ்ரீயை பார்க்கவே கூடாது என்று கடுப்புடன் கூறி விட்டு செல்ல, சீனியர்..நீங்க ஊருக்கு போறீங்களா? கத்தி கேட்டாள்.
ஹலோ, இது ஹாஸ்பிட்டல் கத்தாதீங்க என்றான் ஆருத்ரா அண்ணன்.
தாரிகா கடுப்புடன், யோவ்..உனக்கு என்ன பிரச்சனை? பக்கத்துல நின்னு பேசினா? இங்க லவ் பண்ணக் கூடாதுங்கிற, தள்ளி நின்னு பேசுனா கத்துறோம்னு சொல்ற?
உன்னோட ஹாஸ்பிட்டல்னா எல்லாரும் உன்னை மாதிரி இருக்க முடியாது? சண்டை இழுத்தாள். அவன் சினத்துடன் தாரிகாவிடம் வர, கவின் அவர்களை நோக்கி வந்தான். ஸ்ரீ இடையே புகுந்து அவனை தடுக்கிறேன் என்று அவன் மீது கை வைக்க, அவன் அவளை பார்த்துக் கொண்டே அமைதியாக நின்றான். அவன் பார்வை அவள் மீது தீவிரமாக, அர்ஜூனிற்கு சினம் ஏறியது.
நிவாஸ் அதை பார்த்து வர, ஸ்ரீ அவன் மீதுள்ள கையை எடுக்காமல் தாரிகாவை சமாதானப்படுத்த, தாரிகா ஆருத்ரா அண்ணனை வெறித்து பார்த்தாள்.
ஸ்ரீ திரும்பி அவனது பார்வையை பார்த்து பயந்து கையை எடுக்க, அவளை எடுக்க விடாது அவள் கை மீது அவன் கையை வைக்க, ஸ்ரீ பதறி பட்டென உதறி விட்டு அர்ஜூன் அருகே சென்றாள். அவன் அவளை முறைக்க, ஸ்ரீ கைகள் தானாக அர்ஜூன் கையை கோர்த்து அவன் பின் மறைந்து கொண்டாள்.
இதை பார்த்த ஆருத்ரா அம்மா..தேவ் என்று சத்தமிட்டார். அவன் அவரை பார்க்க, அவர் அவனை இழுத்து செல்ல நிவாஸூம் அவர்கள் பின் சென்றான்.
ஆருத்ரா அம்மா..அவனை அடிக்க வர நிவாஸ் தடுத்து, நான் பேசுகிறேன் என்று தேவை அமர வைத்து நிவாஸ் அர்ஜூன் ஸ்ரீ காதலை பற்றி கூறினான். தன் அக்காவை விட அர்ஜூனை பற்றி நிவாஸ் உயர்வாக பேச, தேவ் புரிந்து கொண்டு,
அவனிடம் காதலை கூறாமல் அவனை விட்டும் கொடுக்காமல் இருக்காலா?
அவங்க பிரச்சனையை கூறாமல்,அவளுக்காக அர்ஜூன் செய்வதை மட்டும் கூறினான்.
என்னால் இவ்வளவு தூரம் போக முடியாது. இது என்னோட உழைப்பால் இது வரல..அப்பா உழைப்பு தான். ஆனால் என் உழைப்பால் எனக்கு இங்கே நல்ல பெயர் இருக்கு.
காதலிக்காக பெத்த அம்மாவிடமே கடனாளியா இருக்கானா? அவன் காதல் உயர்ந்தது தான். உன்னோட அக்காவை சீக்கிரமே காதலை கூற சொல்லு.
பாக்க பையன் ஆப்பிள் போல் இருக்கான். எந்த பொண்ணும் கொத்திட்டு போயிடாமல்.
அர்ஜூன்லாம் போக மாட்டான் நிவாஸ் கூற, அவன் போகலேன்னா? அவன் அம்மா பெரிய ஆளுன்னு சொல்ற? பெரிய இடத்து பொண்ணை ஏமாத்தி கட்டி வச்சுட்டா?
கட்டி வச்சுருவாங்களா? பயந்தவாறு நிவாஸ் முகத்தை வைக்க,
நீ தடுக்கலாமே?
நீங்க வேற? இவளை அவன் அம்மாவுக்கு பிடிக்காது. இதுல அவளிடம் பேசி கஷ்டப்படுத்திட்டாங்க. பிரச்சனை முடியட்டும். அப்புறம் நானே ஸ்ரீயை சொல்ல வைக்கிறேன் நிவாஸ் கூற,
எனக்கு திடீர்ன்னு ஒரு ஈர்ப்பு உன் அக்கா மீது. காதலெல்லாம் இல்லை. சாரிடா மச்சான் என்றான்.
விடுங்க மாமா. அர்ஜூனும் ஸ்ரீயும் புரிஞ்சுப்பாங்க.
இருவரும் பேசிக் கொண்டே எல்லார் முன்னும் வந்தனர். பின்னே தேவின் அம்மாவும் வந்தார்.
ஸ்ரீ அழுது கொண்டிருந்தாள்.அதை பார்த்து நிவி, என்ன ஸ்ரீ?
அவனிடமும் அவள் ஆரம்பிக்க, துகியோ போதும்மா. கொல்லாதா. காதிலிருந்து இரத்தம் வருது என்றாள்.
நானே அர்ஜூன் கோபிச்சிட்டு வெளிய போயிட்டான்னு கவலையில்ல இருக்கேன். எனக்கு நேரமே சரியில்லை.இந்த வாரம் முழுவதும் தினமும் சாரி கேட்டுக் கிட்டே இருக்கேன். அவனும் என்னிடம் சினத்துடனே பேசுகிறான். கஷ்டமா இருக்கு.
நீ லவ் பண்றியா? துகிரா கேட்டாள்.
லவ்வா..இல்லையே? எல்லாரும் அவளை பார்த்து முறைத்தனர்.
அர்ஜூனை சமாதானப்படுத்த வழி சொல்லுங்கடான்னா? தேவையில்லாததை பேசிக்கிட்டு இருக்கீங்க?
தேவையில்லாததா? என்று தாரிகா கவினிடம், மாமா எனக்கு இந்த பொண்ணு பேசுறதே பிடிக்கல?
பிடிக்கலையா? ஸ்ரீ வாய் விட்டு முதலில் கோபப்பட்டவள் தாரிகாவின் மாமாவில் அவளையே பார்த்தாள்.
ஏன் மாமா? நான் உங்களை மாமான்னு கூப்பிடுறேன்ல? நீங்க என்னை என்ன செல்லப் பேர் வச்சி கூப்பிடுவீங்க? தாடையில் கை வைத்து யோசிப்பது போல்,
டார்லிங்கா? டியரா? குட்டிப் பொண்ணா? இல்ல ஏஞ்சலா? என்று ஸ்ரீயை பார்த்துக் கொண்டே கேட்க, ஸ்ரீ அதிர்ந்து,
தாரி..நீ..நீ..நீ..என்று விரலை அவளை நோக்கி காட்டியவாறு ஓடி வந்தாள். அங்கிருந்த எதிலோ கால் வழுக்கி விழுந்து ஸ்ரீ அலறினாள்.
ஸ்ரீ..டிராமா பண்ணாத? என்று தாரிகா அவளிடம் வந்தாள். ஸ்ரீ கண்ணீரை பார்த்து தாரிகாவும் வர, அவளை தடுத்து ஸ்ரீயை தூக்கி ஓரிடத்தில் உட்கார வைத்து, நர்ஸ் என்று ஆளுமையான குரலில் கத்தினான் தேவ். சுற்றி இருந்தவர்கள் அவனை பார்க்க, அங்கே வந்தனர் ஐந்தாறு நர்ஸ்.
அந்த பொண்ணுக்கு சீக்கிரம் சிகிச்சை செய்யுங்க என்று கட்டளையிட்டு, அவள் விழுந்த இடத்தில் பார்த்தான். அது ஆசிட் தண்ணீர். ஸ்ரீ வலியால் துடிக்க, யாரும் அசையாதீங்க என்று கத்தினான் தேவ். அவன் பார்வை சுற்றி உலவ,.ஒருவன் மட்டும் பாட்டிலை கையில் வைத்தவாறு நடுங்கிக் கொண்டு நிற்பதை பார்த்த ஆதேஷ் கவினை அழைத்தான்.
இருவரும் அவனை நோக்கி ஓட, ஆதேஷும் கவினும் அவனை விரட்ட தீனா மாதவும் அவர்கள் பின்னே ஓடி வந்தனர். தேவும் அவ்விடத்தை சரி செய்ய சொல்லி அவனும் வெளியே வந்தான்.
அர்ஜூன் சாக்லெட்டை கையில் வைத்தவாறு கவலையுடன் அமர்ந்திருந்தான். தாரிகாவும் மற்றவர்களும் ஸ்ரீ அருகே வந்தனர்.
மேம்..கொஞ்ச நேரம் அவங்களுக்கு மருந்திட்டு விடுகிறோம். அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நர்ஸ் கூறி விட்டு செல்ல,அவளையும் ஓர் அறையில் சேர்த்து சிகிச்சை முடித்து தாரிகாவிடம், அவளுக்கான மருந்தை பற்றி கூறி விட்டு கிளம்ப, ஸ்ரீயோ வலி தாளாது அவளை அறையில் சேர்க்கும் முன்னே மயங்கியிருப்பாள்.
ஆதேஷ் கவின் அவனை பிடித்து விட மற்றவர்களும் அங்கே வந்தனர். அங்கு சோகத்தின் உருவாய் அமர்ந்திருந்த அர்ஜூனை பார்த்து,
டேய்..அண்ணா, என்னடா பண்ற? கத்தினான். ஆதேஷ் குரலில் அதிர்ந்து நிமிர்ந்த அர்ஜூன், என்னவாடா கூப்பிட்ட? கேட்டுக் கொண்டே அங்கே வந்து, யாருடா இவன்? என்று கேட்டான்.
பல்லை கடித்த ஆதேஷ், ஸ்ரீ மேல ஆசிட் பட்டுருச்சுடா என்று மீண்டும் கத்தினான். அவனது உரிமையில் அனைவரும் அவனை பார்க்க, அர்ஜூனோ ஸ்ரீ மேல ஆசிட் பட்டுடுச்சா? பதறினான்.
முதல்ல இவன பிடி. இவன் தான் செய்திருக்கிறான் கவின் கூற, வெறியுடன் அவனை பார்த்த அர்ஜூன், அவனை அவர்களிடமிருந்து பிடித்து இழுத்து அடித்தான். அவன் வாயிலிருந்து இரத்தம் வழிய,
ஏன்டா..அவள இப்படி கஷ்டப்படுத்துறீங்க? இருக்கிற வலி போதாதா? கேட்டுக் கொண்டே அடித்தான். உன்னை..என்று அவனை தள்ளி விட்டு அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவன் மீது போட முனைந்தான்.
அனைவரும் அவனை தடுக்க, அவன் அவர்களை தள்ளி விட்டு மீண்டும் போட வந்த சமயம் நித்தி வந்து, அர்ஜூன் ஸ்ரீ விழிச்சுட்டாடா. ரொம்ப அழுறா. எங்களால சமாளிக்க முடியல என்று கத்தினாள்.
அர்ஜூன் கீழே போட்டு விட்டு, அண்ணா அவனை விடாதீங்க என்று தீனாவிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றான். அவனை ஆதேஷ் கவின் பிடித்துக் கொள்ள மற்ற இருவரும் விசாரித்தனர்.
உள்ளே வந்த அர்ஜூன் கண்டது சைலேஷ், பிரதீப் இருவரையும் சோர்வாக. மயக்கத்திலிருந்து விழித்த ஸ்ரீ வலி தாங்க முடியாமல் அலற, உதவ வந்த சைலேஷ் பிரதீப்பை பிடித்துக் கொண்டு அழுதே சோர்வடைய வைத்திருப்பாள்.
இருவரும் பாவமாக பார்க்க, நிவாஸ் மட்டும் ஸ்ரீயிடம் அழுது கொண்டே சமாதானப்படுத்திக் கொண்டு இருப்பான். அங்கே வந்த நர்ஸ் ஒருவர் இத்தனை பேர் இருக்காதீங்க. வெளிய போங்க என்று சினத்துடன் கூறி விட்டு, அவளது காலை பார்த்தார். அவள் கீல்ஸ் அணிந்திருக்க, அவளது செருப்பில் தான் ஆசிட் முதலில் பட்டு வழுக்கியதில் அதிலே அவள் காலிலும் பட்டிருக்கும். ஆனால் ஸ்ரீக்கு அந்த வலியும் மனதில் உள்ள வலியும் அவளை நச்சரிக்க, காயத்தை பார்த்த நர்ஸ் ஸ்ரீயிடம்,
மேம். இது சாதாரணமானது தான். முகத்தில் பட்டு வலி தாங்க முடியாமல் மீண்டு வந்தவர்களும் இருக்காங்க. நாளைக்கே உங்களுக்கு சரியாகிடும் என்று கூற,
அர்ஜூன் கோபமாக அந்த நர்ஸை பார்த்து, நீங்க மருந்து மட்டும் போடுங்க. உங்க அறிவுரை எங்களுக்கு தேவையில்லை கடுத்தவாறு உள்ளே வந்தான்.
ஸ்ரீ அவனை பார்த்து,அர்ஜூன்..ரொம்ப வலிக்குது அர்ஜூன். தாங்க முடியல என்று அழுதாள். அனைவரும் வெளியேற, நிவாஸை தாண்டி ஸ்ரீ அருகே அர்ஜூன் வந்து, ஸ்ரீ நாம ஊருக்கு போகலாம் என்றான்.
அர்ஜூன் என்ன சொல்ற? இந்நிலையில் எப்படி போவீங்க? கேட்டான் நிவாஸ்.
என்ன பண்ணச் சொல்றடா..உங்க வீட்ல அவள கொல்ல துடிச்சுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு நாள் இல்ல.. ஒரு வாரமோ..ஒரு மாதம் கூட ஆகலாம்.
ஆமா..ஆனால் இங்க மாதிரி அங்க இவ பக்கம் யாரும் நெருங்க முடியாது. அங்க எல்லாருக்கும் இவள தெரியும். நீயும் வர? நிவாஸிடம் கூறினான்.
எனக்கு என்று அர்ஜூன் இழுக்க, எங்கிட்ட உதார் விடாதடா. உனக்கு ஓ.கே ஆகிடுச்சுன்னு தெரியும். ஆருவ அவளோட பெற்றோர் பத்திரமா பாத்துப்பாங்க. நாம் நாளை காலையே கிளம்புறோம். மத்தவங்க வேணும்னா இப்பொழுதே கிளம்பட்டும்.
தருண்..நிவாஸ் கேட்க, அவனை பார்த்துக்க இங்க ஆள் இருக்காங்க என்றான் அர்ஜூன்.
ஸ்ரீ அர்ஜூன் பேசுவதை கேட்டவாறு அழுது கொண்டிருக்க, அந்த நர்ஸ் பொண்ணு ஸ்ரீயின் கீழிருந்த போர்வையை விலக்கி சார்..இந்த பொண்ணுக்கு,
வேலைய மட்டும் பாருமா. ஏற்கனவே டென்சன்ல இருக்கேன். நீயே வாங்கிக் கொள்ளாதே? நாங்க இல்லாதப்ப தான் அவளை கஷ்டப்படுத்துனாங்கன்னு பார்த்து பார்த்து வச்சுக்கிட்டு இருக்கோம். எங்கிருந்து தான் முளைக்கிறானுகளோ? என் முன்னாடியே அவளை ரொம்ப அழ வச்சுட்டானுக. இனி நானா? அவங்களான்னு பார்த்துக்கிறேன்.
நீ உன் வேலையை மட்டும் முடிச்சிட்டு போ என்று சீறினான் அர்ஜூன்.
அந்த பொண்ணு பாவமாக ஸ்ரீயை பார்த்தாள்.பின் தன் வேலையை முடித்து விட்டு ஒரு ஊசி போடணும் சார் அந்த பொண்ணு கூற, அர்ஜூன் உள்ளே வந்த போது அவன் கையை பிடித்தவள் தான் விடவேயில்லை.