ஹாய்..ப்ரெண்ட்ஸ்..
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.
இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 119.
ஸ்ரீ அவங்க என்னோட அம்மா இல்லையா? ஜிதின் கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க, அவன் முகமெங்கும் மலர்ச்சி. ஸ்ரீ நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். அவங்க என்னோட அம்மா இல்லை என்று பக்கத்தில் இருந்த ஆதேஷை அணைத்தான்.
உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா? அகில் கேட்டான்.
அகில், அவங்க கொலைகாரி. அவங்கள என்னோட அம்மான்னு சொல்லவே எனக்கு பிடிக்காது. நானும் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்து விடுவேன் என்றான் மகிழ்ச்சியாக.
அது எப்படி வருவ? உனக்கு அவங்களை பற்றி தெரியும். நீ தப்பிக்க நினைத்தால் கொல்லாம விட மாட்டாங்க ஸ்ரீ கூறினாள்.
நீ என்னமும் செய். அக்காவை என்ன செய்தார்கள்?
என்ன ஸ்ரீ? இவன் கார் தான். எனக்கு உறுதியாக தெரியும். இவன் தான் கொன்றிருக்க வேண்டும்? ஆதேஷ் கூறினான்.
இல்லை ஆது. உரிமையில்லாததை கூட அழிக்கும் அவர்கள் அவனுக்கு அவர்கள் வாங்கிக் கொடுத்த காரை பயன்படுத்தி இருக்கலாம் ஸ்ரீ சோகமாக கூறினாள்.
ஜிதின் ஸ்ரீ முன் மண்டியிட்டு, நான் ஒரு நிலையிலே இல்லை. என்னை மன்னிப்பாயா?
நான் மன்னித்து என்ன தான் ஆகப் போகிறது? அதான் என் வாழ்க்கையவே அழிச்சிட்டீங்களே? எனக்கு வேண்டியதை மட்டும் சொல்லு. தேவையில்லாமல் பேசாதே. ஏற்கனவே கஷ்டத்துல இருக்கேன்.
ப்ளீஸ்..
என்னால முடியாதுடா, ஜிதின் சொல்லு.. என்று அழுதவாறு கெஞ்சினாள்.
ஸ்ரீ நீ யாரிடமும் கெஞ்ச தேவையில்லை என்று பிரதீப் ஸ்ரீயை தோளோடு அணைத்து, எவனும் எப்படியும் போகட்டும் என்று அர்ஜூனை பார்த்துக் கொண்டு கூறினான்.
தேங்க்ஸ் அண்ணா. நான் பேசியது எதற்கு என்று புரிந்து கொண்டீர்களா?
ம்ம்..தலையசைத்தான் பிரதீப். அவளை அன்பாக பார்த்துக் கொண்டே நிமிர்ந்து, ஜிதினை பார்த்து சொல்றியா?
ஒரு நாள் அவங்க எங்க வீட்டுக்கு வந்தாங்க. அம்மா தான் அவரை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.நான் மறைந்து நின்று கேட்டேன்.
என்னிடம் சாட்சி இருக்கு. ஒழுங்கா எல்லாத்தையும் நிறுத்தீடுங்கன்னு மிரட்டீனாங்க?
கயலிடம் ஒரு பொண்ணு இவ்வளவு தைரியமாக தனியே மிரட்டுவதை பார்த்து அசந்து விட்டேன். கயல் ஒன்றும் குறைவில்லையே? அந்த பொண்ணு கழுத்தை பிடித்து தூக்கினார். ஆதாரத்தை தர சொல்லி. ஆனால் அந்த பொண்ணு என்னை கொன்றாலும் நான் தர மாட்டேன் என்று அவரையே பிடித்து தள்ளி விட்டு சென்றார்.
அடுத்து அவரை நான் பார்த்தது தாரிகா வீட்டில் அவருடைய புகைப்படமும், அவளது அழுகையும் தான். அப்பொழுது தான் அவர் இறந்ததே எனக்கு தெரியும்.
ஆதேஷிடம் அவங்க இறந்த தேதி உனக்கு நினைவிருக்கா? கேட்டான் ஜிதின்.
அவன் சிந்தனையுடன் கூறினான். ஓரிடத்தில் கண்ணை மூடி அமர்ந்தான். அவனுள் நிறைய ஓட்டங்கள்.அவனிடம் சிறு புன்னகை, முகம் சுளிப்பு, பயம் ,கோபம் என்று பல பாவனைகள் தெரிந்தது. எல்லாரும் அவனை கூர்மையுடன் கவனித்தனர்.
எஸ்..அன்று இரவா நடந்தது? என்று ஜிதின் ஆதேஷிடம் கேட்டான். அன்று மூன்றாவது முறையாக என்னுடைய காரை எடுத்து சென்றார்கள். ஆனால் ஐந்தே நிமிடத்தில் வேறொறு காரில் வீட்டிற்கு வந்தார்கள்.
அவங்க யாரையோ கொல்ல சொல்லி வந்திருக்கிறார்கள் என்று கூறி விட்டு ஸ்ரீ அருகே வந்து, ஆதிக்காக நீ ஏற்றிருந்தாலும் அன்று நாம் சேர்ந்திருக்க முடியாது என்று விரக்தி புன்னகையுடன் கண்ணீருடன், உன்னோட அம்மா, அப்பா என்னை மகன் போல் தான் பார்த்தார்களாம். என்னிடம் உன் அம்மா வந்து பேசினார்கள்.
என்னோட மருமகனை நாங்கள் முடிவி செய்து விட்டோம். நீ இல்லை என்றார்.
யாரென்று நானும் கேட்டேன். அவங்க சொல்லாம கிளம்பிட்டாங்க வருத்தமாக கூறி விட்டு, மற்றவர்களை பார்த்து,
எனக்கு உங்க உதவி வேண்டும். நான் அங்கிருந்து வெளியே வர வேண்டும். என்னால் முடிந்தால் ஏதாவது சாட்சி கிடைத்தால் தருகிறேன். நீங்கள் உதவினால் ஸ்ரீ அருகே வரவே மாட்டேன்.
அன்று போதை மருந்தால் நடந்தது தான். எனக்கு என்ன நடந்தது என்று முழுதாக கூட தெரியாது. அந்நேரம் எனக்கு ஸ்ரீ அருகே இருந்ததும்..என்று சொல்ல முடியாமல் அவளை பார்க்கவும் முடியாமல் தலை கவிழ்ந்து நின்றான்.
போதும் நிறுத்து.இதற்கு மேல் அவளை நீ பார்க்க கூட வரக் கூடாது. புரிஞ்சதா? மிரட்டினான் தன் கம்பீரக்குரலால் பிரதீப்.
நீர் வழிந்தோட, சாரி ஸ்ரீ என்று அழுது கொண்டே காரை எடுத்தான். ஸ்ரீ அர்ஜூனை தவிர்த்து விட்டு, அகிலிடம் சென்று, சீனியர் நான் தாரிகா வீட்டிற்கு போகணும் என்றவுடன் அர்ஜூன் அவளை வேகமாக திரும்பி பார்த்தான்.
எனக்கு யாரும் ஏதும் செய்ய வேண்டாம். இப்பொழுதைக்கு நான் அவளது வீட்டிற்கு செல்கிறேன். சீக்கிரமே என்னுடைய பிரச்சனையை முடிக்க வேண்டும். அவங்க நிறைய பேரை கொன்றிருக்கிறார்கள். என்னோட பெற்றோருக்காக தான் தாரிகா அக்கா இறந்திருக்கிறாங்க. நான் அங்கிருப்பது தான் சரியாக இருக்கும்.
ஆது, அவளுக்கு தெரியுமா?
தெரியாது. நீ என்னை எப்படி அழைத்தாய்?
தாரி அப்படி தானே அழைப்பாள். உன்னை பற்றி நிறைய சொல்லி இருக்கா. அவன் வருத்தமடைந்தான்.
இன்னும் அவளை நினைச்சுகிட்டு இருக்கிறாயா? நீங்க ரெண்டு பேரும் பேசியே ரொம்ப நாளாகிடுச்சுன்னு வருத்தப்பட்டா என்று அவனை பார்த்தாள். அவன் சோகமாக முகத்தை வைத்திருக்க,
மூஞ்சிய ஏன்டா இப்படி வச்சிருக்க? சிரிக்கலாமே? அவள் எக்கி அவனது கன்னத்தை பிடித்து இழுத்தாள்.
ஷ்..ஆ.. என்று அவன் முகம் சுருக்க, எல்லாரும் ஸ்ரீயை வியந்து பார்த்தனர்.
ஆது உனக்கு அவ செட்டே ஆக மாட்டாடா. நீ எவ்வளவு க்யூட். எவ்வளவு ஹேண்சம். வேற பொண்ணா இல்லை? சீக்கிரம் உனக்கானவளை பார்ப்படா. முகத்தை சிரிப்போட வைச்சுக்கோ. எவ்வளவு அழகா இருக்கும்.
அவ உன்னோட ப்ரெண்டு. நீ இப்படி பேசுற?
நான் அவளை குறை சொல்லவில்லையே? உன்னோட குணத்திற்கு செட் ஆக மாட்டான்னு தானே சொன்னேன். உனக்கு புரியுதோ? இல்லையோ?
அவளும் அவளுடைய அம்மாவும் கஷ்டப்படும் நேரத்தில் பக்கத்திலே இருந்து பார்த்துகிட்ட. அதனால் கவினை விட நீ அவளுக்கு ஸ்பெசலா தான் இருக்கும். நீ அம்மாவிடமும் பேசவில்லை தானே?
தாரியாவது என்னிடம் சொல்லிட்டா. ஆனா அம்மாவுக்கு நீ பேசாத காரணமும் தெரியாது. அவங்க யாரிடமும் சொல்லவும் இல்லை. அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு உனக்கு யோசிக்கவே தோணலையா?
சாரி ஸ்ரீ என்றான்.
எனக்கு எதற்கு சாரி. இன்று கூட அவளை பார்த்திருப்பாய். ஆனால் நீ பேசவில்லை தானே? அவளுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். சிந்தித்து முடிவெடு என்று எல்லாரோட உதவிக்கு தேங்க்ஸ் என்று போனை எடுத்து தாரிகாவிற்கு அழைக்க, ஸ்ரீ அழைப்பை பார்த்தவள் ஸ்ரீக்கு காதில் இரத்தம் வராத ஒன்று தான் குறை. அவளை திட்டி தீர்த்தாள்.
நிறுத்து தாரி. எனக்கு சோர்வாக உள்ளது. நீ நம்முடைய பொருட்களை எடுத்து வை. உன்னுடைய வீட்டிற்கே செல்லலாம் என்று ஸ்ரீ கூற, போனை பிடுங்கிய அர்ஜூன்
அதெல்லாம் இல்லை. எல்லாரும் என்னுடைய வீட்டில் தான் இருக்கணும் என்றான். அவள் அர்ஜூனை முறைத்துக் கொண்டு அவனது கையிலிருந்து அவளும் போனை பிடுங்கி, இல்ல தாரி நாம நம்ம வீட்டுக்கே போகலாம் இருவரும் மாறி மாறி பேச,..எல்லாரும் இருவரையும் பார்த்த வண்ணமிருந்தனர்.
பிரதீப் இருவரையும் நிறுத்தி, ஸ்ரீ முதலில் அர்ஜூன் வீட்டிற்கு சென்று முடிவெடுப்போம்.இது ரோடு. நீங்கள் சண்டையிடும் இடமில்லை.
அர்ஜூனிற்கு அழைப்பு வந்தது இதயாவிடமிருந்து. யோசனையோடு பார்த்தவன் இதயா கூறியதை கேட்டு, நீங்கள் செல்லுங்கள். நான் வருகிறேன் அவன் கிளம்ப, அவனை தடுத்த பிரதீப் விசயத்தை கேட்டான்.
தருணிற்கு புவனாவிற்கு நடந்தது தெரிந்து, கத்திக் கொண்டு மருத்துவமனையில் இருக்க மாட்டேன். புவியை பார்க்கணுமென்று சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டிக்கிறானாம். நான் செல்கிறேன் என்று அவன் ஓடி சென்று மருத்துவமனைக்கு வண்டியை விரட்டினான்.
ஸ்ரீயை அகில் அழைக்க, என்னுடன் வரட்டும் என்று ஆதேஷ் ஸ்ரீ தோளில் கை போட்டு செல்ல, அகில் அவனை முறைத்தவாறு ” பிள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குதே!” மனதில் அவனை திட்டியவாறு வண்டியை எடுத்தான்.
வீட்டிற்கு சென்றவுடன் பிரதீப் ஸ்ரீயை நிறுத்தி, உனக்கும் அவனை பிடிக்கும் தானே? ஏன் ஸ்ரீ இப்படி சண்டை போடுறீங்க?
அண்ணா, அவன் என்ன பேசினான்? பார்த்தீர்கள் தானே? எனக்கு மானம் மரியாதை சூடு சுரனை எல்லாம் உள்ளது தான் என்றாள்.
எல்லாமே இருக்கு. கொஞ்சம் அறிவும் இருந்தால் நல்லா இருக்கும் பிரதீப் ஸ்ரீயிடம் கோபப்பட அவனை அதிர்ந்து அனைவரும் பார்த்தனர்.
ஜிதின் சரியாக இருக்கிறானா? என்று தெரிந்து கொள்ள பேசி இருக்கலாம். ஒரு வேலை வா..படுக்கைக்கு என்று அவன் உன்னை அழைத்திருந்தால் என்ன செய்திருப்பாய்?
அவள் கண்களில் நீர் சுரந்தது.
உனக்கு இவ்வளவு நடந்தது தெரிந்து அவன் அந்த வலியை காட்டிக் கொள்ளாமல் இப்பொழுது கூட உனக்கு தான் உறுதுணையாக தான் இருக்கிறான். நீ வேரொருவனிடம் இவ்வாறு பேசினால் அவன் கோபப்படாமல் என்ன செய்வான்?
அவள் அழுது கொண்டு, அவன் கேட்கிறான் என்று தெரிந்து தான் ஜிதினிடம் நான் அவ்வாறு பேசினேன்? எனக்கும் அவனை ரொம்ப பிடிக்கும். நானும் அர்ஜூனை மட்டும் தான் காதலிக்கிறேன் என்று உரக்க கத்தி அழுதாள்.
நித்திக்கு ஸ்ரீ அர்ஜூனை காதலிப்பது தெரியாது தானே? அவள் அதிர்ந்து ஸ்ரீ நீ என்ன சொன்ன? என்று அகிலை பார்த்தான். அவனும் நித்தி எனக்கும் தெரியும் என்றான் சாதாரணமாக.
ஜிதின் எதுக்கு ஸ்ரீ உன்னிடம் மண்டியிட்டு மன்னிப்பு வேண்டினான் அகில் கேட்டான்.
அழுது கொண்டிருந்தவள் மேலும் அழுது கொண்டு, அவள் அறை நோக்கி செல்ல, பிரதீப் தாரிகாவை கையசைப்பிலே உள்ளே செல்லச் சொல்லி, அவள் அறை கதவை பூட்டும் முன் ஸ்ரீயை தடுத்து அவனும் உள்ளே செல்ல, அறைக்கதவு தாழிடப்பட்டது.
இவள் பேசியதை அங்கு வந்த கவின், அபி, இன்பா பார்த்து திகைத்து நின்றனர்.
நான் அப்பொழுதே சொன்னேன்ல அபி என்று கூறியவாறு இன்பா அவனிடம் பேசிக் கொண்டே உள்ளே செல்ல, கதவில் நித்தி சாய, கதவை பிடித்த இன்பா தடுமாற அபி அவளை பிடித்து நிறுத்தி அவளையே பார்க்க,
டேய்..ரொமான்ஸ் பண்ற நேராமா இது? கடுகடுத்தவாறு அபியை பார்த்தாள் நித்தி. இன்பா அவனை விலக்கி விட்டு அவனை முறைத்து விட்டு உள்ளே சென்றாள். ஆழ்ந்து மூச்செடுத்து விட்டு அபியும் உள்ளே சென்றான்.
பிரதீப் அவளிடம் கேட்க, தாரிகா அர்ஜூன் அம்மா பேசியதை சொன்னாள்.
ஸ்ரீ அவங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்று பிரதீப் கதவை திறக்க, துகிரா எப்பொழுதும் போல் காதை அறைக்கதவில் பதித்திருப்பாள். அவன் கதவை திறக்க, அவள் கீழே விழ சென்றவளை பிடித்து நிறுத்தி,
என்ன செய்ற? கத்தினான் பிரதீப். அவள் அரண்டு வாயில் கையை வைத்துக் கொண்டு பவ்வியமாக நிற்க, யாராலும் அவள் செய்கையை கூட ரசிக்காது ஸ்ரீயையே நோக்கினர்.
வெளியே வந்த பிரதீப் எல்லார் முன்பும் வந்து, எல்லாருக்கும் அர்ஜூன் ஸ்ரீயை காதலித்தது தெரியும் தானே? அதற்கு மேலும் ஒன்று உள்ளது. ஸ்ரீ நல்லா கேட்டு உன்னோட வாழ்க்கைக்கான முடிவெடு என்று அவர்களது ஊர்க்கதையை ஆரம்பித்தான்.
நம்ம ஊருல காதலுக்கு எவ்வித எதிர்ப்பும் இருக்காது என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு காரணம் அகில், ஸ்ரீ பெற்றோர்கள் தான். இப்பொழுது ஸ்ரீயின் பெற்றோர்கள் இறப்பிலும் சேர்ந்து இருப்போம் என்று அவர்களது காதலை நிரூபித்து தான் இறந்திருக்கிறார்கள்.
அவர்களது பெற்றோர்கள் கருவுற்றிருந்த பொழுது சரியான மருத்துவ வசதி இல்லாமல் இருந்தது. இருவரும் ஒரே நேரத்தில் தான் கருவுற்றிருந்தார்கள். மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் தான் பிரசவ நேரத்தில் அகில் அம்மாவை மட்டுமே இங்கே கவனிக்க முடிந்தது. ஆனால் ஸ்ரீயின் அம்மாவிற்கு பக்கத்து ஊரில் தான் பிரசவம் பார்த்தார்கள்.அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து ஒன்று இறந்து போனது என்றார்கள்.
அகிலும் ஸ்ரீயும் ஒரே நாளில் தான் பிறந்தார்கள். ஆனால் இரண்டே நிமிடம் தான் வேறுபாடு. வறட்சியில் கஷ்டப்பட்ட நம் பூமியில் ஸ்ரீ பிறந்த அதே நிமிடம் சரியான மழை. அவள் என்ன தான் பக்கத்து ஊரில் பிறந்திருந்தாலும் அந்த நேரம் ஊரார் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதனால் அவளை கொண்டாடினார்கள். ஆனால் பக்கத்து ஊர்க்காரன். ஸ்ரீ தன்னுடன் பிறந்தவளையே கொன்றால் என்ற பழிப்பெயரை ஆரம்பித்து வைத்தான்.ஆனால் நம் ஊரில் அன்று ஆரம்பித்த வளர்ச்சி இன்றும் சரியவில்லை. என்ன தான் எங்களது உழைப்பிருந்தாலும் தெய்வ செயல் ஒன்றுள்ளதல்லவா?
அவளுடைய வருகை அனைவரையும் சிந்திக்க வைக்க, அவளுடைய அம்மா, அப்பாவிற்கோ தன் மகளை பக்கத்து ஊர்க்காரன் தவறாக பேசுகிறானே? வருத்தம் மேலோங்க ஆரம்பித்தது.
அர்ஜூன் பாட்டி தான். அவருக்கு தெரிந்த ஊருக்கு பிரசித்தியான ஜோதிரை அழைத்து ஸ்ரீயின் முழுப்பெயர், பிறந்த தேதி, நாள், நட்சத்திரம் பார்க்க அவர் சொன்னதை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்.
அவளது பெயரை கூறும் முன் அவளை தூக்கி வந்த ஸ்ரீயின் அம்மா அவரிடம் புலம்பி அழுதாங்க. அவர் அவங்கள பார்த்து புன்னகையுடன்,
உங்க பொண்ணு துரஷ்டக்காரின்னு யாரு சொன்னா?
அவ மாகாளி. நல்லவர்களுக்கு நல்லதும் கெட்டவர்களை அழிக்கும் காவல் தெய்வமாக தான் அவள் உலா வருவாள். ஆனால் அவள் இவ்வூரை விட்டு மட்டும் செல்லக்கூடாது சென்றால் அவளை காப்பாற்றுவது எளிதல்ல.
அவளுக்கு உற்ற துணையாவன் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பான். அவனை கண்டறிவது அரிது. அவன் கிடைத்தால் அவனை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவன் காதல் மட்டும் தான் அவளை காக்கும் கேடையம். காலம் தாழ்ந்து போனால் இருவருமே வீழ்வது நிச்சயம். வாழ்ந்தால் இருவரும் ஒன்றாக தான் வாழ்வார்கள். இறந்தால் இருவரும் ஒன்றாக தான் இறப்பார்கள் என்று கூறினார். அதிலிருந்து ஸ்ரீயை வெளியே அனுப்பவே கூடாதுன்னு தான் முடிவெடுத்தாங்க. அவளுக்கு அன்று நடந்த அந்த பிரச்சனையில் வேறு வழியில்லாமல் கிளம்பினார்கள்.
அர்ஜூன் ஸ்ரீ அப்பாவிடம் எங்கே போறீங்கன்னு? அப்பொழுதே கேட்டான்.
அவர் சொல்லி இருக்கலாம். ஸ்ரீ இங்கிருந்து வேறு இடத்திற்கு போனதால் அவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று அவன் பாட்டியை கூட தனியே விட்டு சென்றான். அவன் தேடியும் ஸ்ரீ கிடைக்காதது தான் துரதர்ஷ்டம். நான் கூட அவன் அம்மாவிடம் சென்றிருப்பான் என்று நினைத்தேன் என்று பிரதீப் முடித்தான்.