Advertisement

அத்தியாயம் 17

ஆதிரா தங்கள் அறையில் சர்வாவின் ஷர்ட்டை மிகுந்த சிரத்தையுடன் அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தாள்.. அவளை திசை திருப்புகிறேன் பேர்வழி என தன் சின்ன சின்ன வேலைகளையும் அவள் தலையிலே கட்டிவிட்டு விட்டான் சர்வா..

அவளுக்கும் அது ஒன்றும் தவறாகத் தெரியவில்லை.. தங்கள் வீட்டிலேயே தன் வேலையை தானே செய்த பழக்கம் உண்டு என்பதால்‌ இங்கே தனக்கு செய்வதோடு அவனுக்கும் சேர்த்து விரும்பியே செய்திருந்தாள்..

இரண்டு நாட்கள் தான் சர்வா இதை செய்.. அதை செய்.. என்று அவளை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.. மூன்றாம் நாள் அவன் சொல்ல முதலே அவளாகவே எல்லாம் செய்து முடித்திருந்தாள் ஆதிரா..

அதில் அவனுக்கே அவ்வளவு ஆச்சர்யம்.. இத்தனை வயதிலும் சுமி, சென்னையில் என்ன செய்கிறாளோ தெரியாது.. ஆனால் இங்கு வந்துவிட்டால் தன் எல்லாத் தேவைக்கும் தாயைத்தான் அழைப்பாள்..

இவனுக்கும் தன் வேலைகளைப் பெரும்பாலும் தானே செய்யும் வழக்கம் தான்.. அறை‌ கூட்டப் பெருக்க மட்டுமே கோமதியை அவன் அறைக்குள் அனுமதிப்பது.. அதுவும் இவன் இருக்கும் போதே விசாலம் கூட்டி வந்து துப்புரவாக்க விட்டு விடுவார்.. இப்போது அதற்கும் அவசியமின்றி இவள் தான் அதையும் செய்கிறாள்.. அவள் வேலைகளையும் கவனித்து மேலதிகமாக தன் வேலைகளையும் எந்த முகச் சுழிப்பும் இல்லாது நேர்த்தியாக செய்கிறாளே என்று தான் சர்வாவுக்கு ஆச்சரியம்..  ஆனால் வெளியில் எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இந்த சொகுசுகளை அனுபவித்தான்..

அவன் கொடுத்த பைல்களையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து தரமான வேலைகளை செய்து கொடுத்திருந்தாள்..

சர்வா, ‘எல்லா விஷயத்திலும் ஓகேவா தான் இருக்கா.. ஆனா சுமி விசயத்துல மட்டும் தான் இப்படி புத்தி கெட்டுப் போய் ஏதேதோ பண்ணிட்டு இருக்கா.. ஒரு வேளை அண்ணா மேல இருக்க பாசத்துல இதை எல்லாம் செய்திட்டிருக்காளா? அப்படியா இருந்தா இந்த திருமணம் முடிந்தால் மட்டும் போதும்.. அவள் மேல் இருக்கும் அந்தக் கறையும் நீங்கி விடும்.. அதன் பின் அவளுடன் தன் வாழ்க்கை இயல்புடன் இருக்கும்’ என்று மனதார நம்பினான்..

அது வரை அவளின் ஆகாத சிந்தனைக்கு அவள் சிறிது கஷ்டப்படத் தான் வேண்டும்.. என்று அவளைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டிருந்தான்.. (ஆகாத சிந்தனை? அவளுக்கு?)

ஆனால் ஆதிராவோ அவன் கொடுத்த எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்தால், சுமி பரணி திருமணம் குறித்து தனக்கு விதித்திருக்கும் தடைகளை நீக்குவான் என்று நம்பிக் கொண்டிருந்தாள்.. ஆனால் இது வரை அப்படி ஒரு நல்லது நடக்கவேயில்ல்லை.. இதில் மாமியார் வேறு இப்போது ஜாடையாகப் பேசிக் கொள்வதும் இவளுக்கு புரியத் தான் செய்கிறது..  

“உனக்கென்ன நீ உன் பாட்டுக்கு வர, உன் வேலையை உனக்குத் தோணுறதை செய்யிற.. மத்தவங்க நினைப்புலாம் உனக்கு எங்க இருக்கு? வீட்டில ஒரு கல்யாணம் வச்சிருக்காங்களே! அதில எவ்ளோ வேலையிருக்குன்னு எல்லாம் உனக்கு என்ன கவலை? அந்த வேலையெல்லாம் பார்க்க இனி தனியா சம்பளம் குடுத்து தான் ஆள வேலைக்கு வைக்கணும் போல?” 

கோமதிக்கு விழும் இந்தத் திட்டுக்கள் எல்லாம் இவளுக்கானது என்று தெரிந்தாலும் அவளால் என்ன செய்து விட முடியும்?..

மாலையானால் ரிப்போர்ட் சப்மிட் பண்ணக் கேட்கும் டீம் லீடர் போல இவளின் அன்றைக்கான வேலைகளை செக் பண்ணி அதிலுள்ள குறைகளை சொல்லித் திருத்தும் வரை தூங்க விட மாட்டான் சர்வா.. இதில் அவள் எஞ்சிய நேரத்தில் அவள் படிப்பையும் கவனிக்க வேண்டும்.. இவள் நிலை இப்படியிருக்க, 

விசாலத்தின் நினைப்பு என்னவோ மகன் அவளை வேலை செய்ய விடாமல் உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறான் என்பதுதான்..

அதைத் தான் அவ்வப் போது வார்த்தைகளில் குத்திக் காட்டுவார்..

சுமிக்கு கல்யாணக் கனவுகளில் இது போன்ற வேறு எதுவும் கண்ணில் அவள் படுவதில்லை..

இப்போது குளித்து முடித்து பனியனுடன் வந்தவனிடம் ஆதிரா சட்டையைக் கொடுக்க அணிந்து கொண்டவன் கண்ணாடி முன் நிற்க, இவள் மெல்லப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்..

“இன்னைக்கு காலேஜ் லெவனுக்கே முஞ்சிடும்..”

“முத்தண்ணன கார்ல அப்பாவை ட்ராப் பண்ணிட்டு அப்படியே அங்க வர சொல்லிடுறேன்.. அவரு கூடவே வீட்டுக்கு வந்துடு..”

“அதில்ல.. அண்ணி ஃபோன் பண்ணாங்க.. இன்னைக்கு காலேஜ் லெவனுக்கே முடிஞ்சிடும்ன்னு சொல்லவே லஞ்சுக்கு அங்க வரியான்னு கேட்டாங்க..

அதான் ‍, நான் தனு கூட அப்பிடியே போய்டட்டுமா?” கண்ணாடி முன் தலை வாரிக் கொண்டே அவள் சுடிதார் துப்பட்டாவை திருகிக் கொண்டே தட்டுத் தடுமாறி இழுத்துப் பேசியவளைப்  பார்த்துக் கொண்டே கேட்டிருந்தவன்,  

அவளின் ஆர்வமான கேள்வியில் அவளைக் கண்ணாடியூடே ஆழ்ந்து பார்த்தவன், எதுவும் சொல்லாது, “டைமாச்சு, கிளம்பிட்டன்னா வா.. போலாம்..” என்று கொண்டே அவன் முன் செல்ல, இத்தகைய அவன் செயலில் கேட்காமலே அவனிடம் இதைக் கேட்காமலே இருந்திருக்கலாம் என தன்னை நொந்து கொண்டு அவன் பின்னே சென்றாள்..

காலையுணவை முடித்து காரில் கல்லூரி சென்று சேரும் வரை ஆதிராவிடம் அமைதியோ அமைதி.. எப்போதும் அப்படித் தானென்றாலும் இன்று அவள் முகமும் வாடி விட்டிருந்தது.. சர்வா அதைக் கவனித்தாதாலும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை அவளிடத்தில்..

இன்னும் மனைவியை சமாதானப்படுத்தும் அளவுக்கெல்லாம் முன்னேற்றமாகவில்லையே அவர்கள் உறவு.. ஒரே அறையில் தங்கியிருக்கும் பொழுது சாதாரண நபர்களிடையே கூட பேச்சு இருக்கும்.. அது போல் கணவன் மனைவி என்பதால் கொஞ்சம் அதிகமான உரிமையுடனான பேச்சு இவர்களுக்குள் அவ்வளவே..

சர்வாவுக்கே அந்த நிலை ஒரு இனம் புரியாத அதிருப்தியைக் கொடுத்தாலும் சுமி திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிடும் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டானது என்று நம்பும் பூனை போல் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளான்..

சர்வா அவளைக் காலேஜில் இறக்கி விட்டவன், ஏதேனும் சொல்வானோ என்று ஆதிரா அவன் முகம் பார்த்திருப்பது அறிந்தும், சட்டை செய்யாது கிளம்பிப் போய் விடவே, செல்லும் அவன் வண்டியையே ஏக்காமாய் பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் வாகனம் கண்ணை விட்டு மறைந்ததும் பெரு மூச்சுடன் அவ்விடத்தில் இருந்து நகர்ந்தாள்..

இங்கு அவளை விட்டு விட்டு வந்த சர்வாவுக்கு தான் வேலையே ஓடவில்லை.. காலையில்  ரிவர்வியூ‌ மிரரில் அவள் நின்று தன்னை ஏக்கத்துடன் பார்த்ததை நினைத்தவனுக்கு இப்போதும் அதே கண் முன் வந்து நிற்க திணறிப் போனான்..

அல்லது என்று விலக்கவும் முடியாது, நல்லது என்று அணைக்கவும் முடியாத அல்லலாகிப் போனாள் ஆதிரா அவனுக்கு.. இப்படியே யோசித்துக்கொண்டே இருந்தால் சரிவராது என்று, அன்புக்கு அழைப்பு விடுத்தவன், அவனிடம் பேசிவிட்டு தன் வேலைகளைக் கவனிக்க எல்லா ஏற்பாட்டையும் செய்து விட்டு தன் காரைக் கிளப்பி சென்றான்..

கல்லுாரி வாசலில் நிவேதாவைக் கண்ட ஆதிரா தன்னை அழைக்க கார் வரும் வரை அவளுடன் சென்று பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவளிடம் வந்து நின்றாள்..

“ஹே ஆதி.. கல்யாணம் ஆகிப் போனியா? இல்ல காணாம போனியானு தெரியல.. ஒரே காலேஜ்னு தான் பேரு.. பார்க்கக் கூட முடியல உன்னை..” அவளைக் கண்ட மாத்திரமே புகார் வாசிக்க ஆரம்பித்தாள் நிவேதா..

“எதுக்கு இப்போ பொய்யா புழுகிட்டு இருக்க? ரெண்டு நாள் முன்னாடி கூட காண்டீன்ல பார்த்தேன் தானே உன்னை?..” 

“அதைத்தான் சொன்னேன்.. முன்னாடி எல்லாம் டெய்லி பார்த்துப்போம்.. இப்போ உனக்கு ரெண்டு நாள் முன்னாடி பார்த்தது சாதாரணமாப் போச்சு..” என்று சலித்துக் கொண்டாள் அவள்..

“சரிடி பெரிய தப்பு தான். இனி டெய்லி உன்னைத் தேடி வந்துட்டு தான் கிளாஸ் உள்ளவே போவேன் போதுமா? ஆனா நீயேன் இப்போ பஸ் ஸ்டான்ட்ல நிக்காம இங்க நின்னிட்டிருக்க?” அவளை சந்தேகமாக பார்த்துக் கொண்டே கேட்டாள் ஆதிரா..

“அப்பிடிலாம் பார்க்காத.. சஞ்சய் இப்போ ஊர்ல இல்ல.. அதோட அவர்கூட ஊர் சுத்தி அது வீட்டுக்கு தெரிஞ்சு உதை வாங்குற அளவு எனக்கு உடம்புல தெம்பும் இல்ல..” உடனே ஜகா வாங்கினாள் அவள்..

“நம்பலாம் போல தான் இருக்கு. ஆனா நீ ஏன் நிக்கிறன்னு சொல்லவே இல்ல இன்னும்..” எண்றவும்,

“அட உன்னோட அன்பு அன்பண்ணன் தான் வெயிட் பண்ண சொன்னாரு.. தான் இந்தப் பக்கம் தான் வரேன்னு.. பிக்கப் பண்ண சொகுசா வண்டி வரும் போது எதுக்கு பஸ்ல நசிஞ்சி சில்லறை வேஸ்ட் பண்ணனும்?”

“அண்ணன் இந்த வழியா எதுவும் வேலையா வருவாரு போல.. உன்ன வெயிட் பண்ண சொல்லிருக்காருன்னா அப்போ அண்ணா தனியா வர மாட்டாரு.. அண்ணி இல்ல கயல் அண்ணா கூட வருவாங்க போல..” அதை சொல்லும் போதே அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.. வீட்டுக்கு செல்ல முடியா விட்டாலும் எப்படியோ இன்று அவர்களைக் காணப் போகிறோமே என்று..

“அட அல்பமே! இதுக்கு போயா மூஞ்சில மூவாயிரம் வாட்ஸ் பல்ப எரிய விடுற? உன் அத்தான்கிட்ட கேட்டா இருக்குற வேலையெல்லாம் விட்டு ஆத்துக்காரி ஆசைப்பட்டாளேன்னு டான்னு கூட்டிப் போய் உங்க வீட்ல விட்டுட போறாரு.. அதை விட்டுட்டு இப்பிடி ஓசி விசிட்கு அலையுற..” என்று நிவேதா கிண்டல் செய்ய

“ம்ம்கும் , நானா போறேன்னு கேட்டதுக்கே விடல..” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், வெளியே நல்ல மனைவியாக, “கேட்டா கூட்டிப் போவாங்க தான். ஆனா அவருக்கு நெறைய வேலையிருக்கும் எப்போவுமே.. அதோட இப்போ தங்கச்சி கல்யாணம் வேற.. கல்யாணம்னா சும்மாவா? எவ்வளவு வேலை இருக்கும்? அதான் அவரு ஒரே பிசி.. அதனால நான் கேட்டுக்கல..” என்றாள்..

“பார்ரா…. அன்னைக்கு லாவண்யாக்கா சொல்லும் போது கூட நாம் நம்பல.. இப்போ நம்புறேன் நீ பக்கா குடும்ப குலவிளக்கு ஆகிட்டடி..”

“போதுமே.. அது சரி.. லாவண்யா அண்ணி விசயம் என்னாச்சு? அவங்ககிட்டயே கேட்கணும்ன்னு நினைச்சேன்.. பட் டைமே இல்ல.. அதனால பேசல..”

“அது ஓரளவு சரியான மாதிரித் தான்.. அவங்க அம்மா தான் சும்மா சலம்பல் பண்ணிட்டே இருக்காங்க போல.. கல்யாணம் பண்ணி வச்சே ஆகணும்ன்னு.. இங்க நம்ம  ஹெச்ஓடி தான் அவங்க அப்பா தலையக் கழுவி கழுவி சம்மதிக்க வச்சிருக்காங்க..”

“எப்பிடியோ அவங்க ஆசை நிறைவேறினா ஓகே தான்.. அவங்க கூட எனக்கு ஃபோன் பண்ணி சொல்லவே இல்ல பாரேன்.. இன்னைக்கு இருக்கு அவங்களுக்கு..” செல்லமாய் கோபித்துக் கொண்டாள் அவளிடம்..

“ஏன் ஆதி? உங்க அண்ணன் அவங்கள ஏமாத்திட்டாங்கன்னு தான் அவங்க ஆசை இப்பிடியாச்சும் நிறைவேறட்டும்ன்னு ஹெல்ப் பண்றயா என்ன?” 

நிவேதாவின் அந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லாது சிரிக்க, அதை மேலும் நிவேதா விசாரிக்க முன் அவர்கள் முன் வந்து நின்றது சர்வாவின் கார்..

இந்த நேரத்தில் அவன் இங்கு வந்தது ஆச்சர்யமாய் இருந்தாலும் நண்பி முன் எதுவும் கேட்க முடியாது, அவளிடம் விடை பெற்று அவன் காரில் ஏறப் போனாள் ஆதிரா.. வீட்டுக்கு சென்று தான் பார்க்க முடியவில்லை.. வருகின்ற இடத்தில் அண்ணன் அண்ணியைப் பார்க்கக் கூட குடுத்து வைக்க வில்லையே.. என்ற கவலை அவளுக்கு.. முத்து வண்டியோட்டி வந்திருந்தாலாவது அவரை கொஞ்சநேரம் காத்திருக்க சொல்லி அவர்களைப் பார்த்து விட்டு கிளம்பியிருப்பாள்.. இவனிடம் கேட்டு மறுபடியும் ஒரு மொக்கை வாங்க வேண்டுமா? என்று அமைதியாக ஏறி அவனருகில் அமர்ந்து கொண்டாள்..

“நீயும் வண்டில ஏறிக்கோமா இப்போ உங்க ஊருக்கு தான் போறோம்..” என்ற சர்வாவின் கூற்றில் ஆச்சர்யமாக கணவனைப் பார்த்தவளுக்கு உள்ளே அவ்வளவு மகிழ்ச்சி.. அது முகத்திலும் தெரிய இப்போதே சர்வாவுக்கும் ஏதோ சரியான உணர்வு..

அதற்குள் இவரைத் தான் வராங்கன்னு அன்பண்ணா சொல்லிருக்காங்களா? என்று புரிந்து கொண்ட நிவேதாவும் பின்னாடி சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்..

“நான் பின்னாடி போய் உக்காந்துக்கவா?” நண்பியைத் தனியே விட மனமின்றி கணவனிடம் கேட்டாள்..

அவனும் அது தான் சரியென்று   தலையசைக்கவே பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்..

நண்பிகள் இருவரும் தம்முள் வளவளத்த படி வரவே சர்வா அவர்களை தொல்லை பண்ணாமல் அமைதியாக வண்டியோட்டிக் கொண்டு் வந்தான்..

“ஆதி.. நிஜமாவே உன் அத்தான் சூப்பர்டி.. நீ உங்க வீட்டாளுங்களை பார்க்க ஆசைப்பட்டும் அவருக்கு வேலை இருக்குன்னு கேக்கலை இல்லன்னா கூட்டிப் போய் இருப்பார்ன்னு சொல்லவும் எங்க எல்லா குடும்ப இஸ்திரி மாதிரி உருட்டுறியோன்னு நெனச்சேன்.. ஆனா பாரு நீ கேக்காமலே அவரா கூட்டிப் போறாரு.. சஞ்சஜை இவருகிட்ட இப்போவே ட்ரைனிங் அனுப்பப் போறேன் என்று ரகசியம் என்ற பெயரில் அவள் பேசியது சர்வா காதில் அச்சு பிசகாமல் விழுந்தது.. அவளை பேசவிடாது நிறுத்த ஆதிரா சர்வா கவனம் கவராதவாறு அடித்து கிள்ளி என்று எவ்வளவோ செய்தும் முடியவில்லை.. முழுத் தோல்வியே அவளுக்கு.. நிவேதா கடமை தவறாது எல்லாம் ஒப்பித்த பின் தான் ஓய்ந்தாள்..

இவளின் தடை முயற்சிகள் எல்லாவற்றையும் பாராது பார்த்திருந்த சர்வா உள்ளே சிரித்துக் கொண்டவனுக்கு ஆதிரா தன்னை விட்டுக் கொடுக்காததும் நிவேதாவின் உன் அத்தான் என்ற சொல்லும் உள்ளூர ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்த அதை ஆராயாமல் அனுபவித்தான்..

நிவேதாவின் வீடு வரவே அவள் இறங்கிக் கொள்ள ஆதிராவும் உடன் இறங்கி முன் சீட்டில் கணவன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்..

அதையடுத்து அடுத்த தெருவில் இருந்த ஆதிரா வீடு நோக்கி நகர்ந்தது வண்டி.. வண்டி நின்றதும் இறங்கிய ஆதிரா வாசலிலே செருப்பை மாட்டிக் கொண்டிருந்த லாவண்யாவைக் கண்டதும் கணவனை மறந்து விட்டவளாக “லாவண்யா அண்ணி..” என்ற ஆனந்தக் கூச்சலுடன் ஓடிச் சென்று அவள் கை பற்றியிருந்தாள்..

அவள் அழைப்பில் திடுக்கிட்ட சர்வா, பல்லைக் கடித்துக்கொண்டு ஆதிராவை முறைத்தான்.. அதை அவள் பார்க்கும் முன்னே கண்ட லாவண்யா தன்னைப் பற்றியிருந்த ஆதியின் கையை விலக்கியவள், “இனிமேல் என்னை அண்ணின்னு கூப்பிடாத ஆதி.. இப்போ நான் வரேன்.. எனக்கு வேலையிருக்கு..” என்று கத்தரித்து விட்டு போய்விட்டாள்.. உடன் வந்த சர்வாவையும் ஒரு பார்வை பார்த்து விட்டு..

அவள் பேச்சில் சர்வா,ஆதிரா இரண்டு பேருமே குழப்பத்தில் நின்றிருக்க, உள்ளே இருந்து வந்த அன்பு தான்,

“வா ஆதி.. வாங்க ஆதி மாப்பிள்ளை..” என்று வரவேற்க அதில் கலைந்து அவனுடன் அவர்களும் உள்ளே சென்றனர்..

தொடரும்….

Advertisement