அதியா அறைக்கு செல்லாமல் ஆரியனுக்காக அவன் அறைக்கு வெளியே அமர்ந்திருந்தாள்.
துருவினி அவளை பார்த்து, “நல்லா ஏமாத்திட்டு இப்ப எதுக்கு காத்து கிடக்கணும்?”
“நான் சொன்னேன்ல்ல வினு” அவளை பாவமாக அதியா பார்த்தாள்.
“உனக்கு அண்ணன் இருப்பதை ஏன் சொல்லவில்லை?”
நான் பள்ளியில் படிக்கும் போது பார்த்தது அவனை. அடுத்து முழுவதும் வீடியோ காலில் தான். அதுவும் அக்கா அலைபேசியில் தான் பார்த்தேன். அவன் எண்ணமே எனக்கு இல்லை. எனக்கு ஆகுவை எண்ணி பயம் தான் இருந்தது.
“அண்ணனை மறந்துட்டியா?”
ஆமா..அவன் எப்படினாலும் எங்களை விட்டு போனவன் தான? கண்ணீருடன், “அக்கா இல்லாத சமயம் வீட்டில் இருக்க எவ்வளவு பயமா இருக்கும் தெரியுமா?” அவன் உடன் இருந்திருந்தால் நானும் ஆகுவும் நிம்மதியாக இருந்திருப்போம்..
“வீட்ல என்ன?” துருவினி யோசனையுடன், உன்னோட மாமா..என கேட்க, ம்ம்..தலையசைத்த அதியா அவருக்கு அக்கா மீது கோபம் வரக் காரணமே அவர் கம்பெனியை கேட்டதனால் மட்டுமல்ல.. நேர்மையான வழி என்றால் என்ன? என்று கேட்பது போல தான் எல்லாரிடமும் நடந்துப்பார். ஆனால் அவர் மற்றவர்களை மிரட்டி நல்லவர் போல எல்லாரிடமும் காட்டிப்பார்..
அன்று கூட என்னோட அறையில ஆகுவை பார்க்க வாரேன்னு என்னை என துருவினியை நடுக்கத்துடன் அணைத்தாள்.
அத்து கூட இருந்திருந்தால் அவன் என் பக்கம் கூட வந்திருக்க மாட்டான். அன்று பாப்பா விழித்து அழவும் செல்வி அக்கா வந்து அவரை முறைத்தார். பின் அக்காவிடம் சொல்லி இருவரும் சண்டை போட்டுக்கிட்டாங்க. அதிலிருந்து என்ன நிலையானாலும் கதவை பூட்டாமல் இருக்க மாட்டேன். ஆனால் இங்க வந்த பின் தான் பாதுகாப்பாக இருப்பது போல இருக்கு.
“உன் அம்மாவுக்கு தெரியாதா?”
தெரியும். அவனை ஏதும் செய்ய முடியாதே! என்னை தான் அவங்களும் அடிப்பாங்க.
அடிப்பாங்களா?
ஆமா..என் மேலையும் தவறு இருப்பதால் அமைதியாக விட்டு விடுவேன்.
துருவினி கோபமாக உன் மேல என்ன தப்பு இருக்கு?
அறைக்குள்ள போனால் கதவை பூட்டணும்ல்ல?
நானெல்லாம் பூட்டவே மாட்டேன். சொல்லப் போனால் பூட்டினால் தான் அம்மாவும் அண்ணாவும் திட்டுவாங்க. அம்மா இருந்த வரை அவங்களோட தான் தங்கிப்பேன்.
எனக்கு யாரும் தூங்கும் போது துணைக்கு இருந்ததேயில்லை..சின்ன வயசுல இருந்தே தனியா தான் இருந்தேன். என்னால எதையும் சட்டென யோசிக்க முடியாது. அண்ணா சொன்னால்ல..எனக்கு சரியான முடிவெடுக்க தெரியாது உதட்டை பிதுக்கினாள்.
துருவினி அதியா கையை பிடித்து, நீ என்னோட அண்ணிக்கு அப்படியே எதிர்மாறா இருக்க. அதியாவோ ஆரியன் அறையை பார்த்தாள். அவனும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.
மடியிலிருந்து வந்த ஆத்விக்கும் இதை கேட்டான். ஆரியன், ஆத்விக் இருவருக்கும் வருண் மீது வெறியுடனான சினம் மேலிட்டது.
எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர்களருகே வந்த ஆத்விக் அதியா தோளில் கையை போட்டு சோபாவில் அமர வைத்து, அவனது அலைபேசியை எடுத்து யாரையோ அழைத்து, “டேய் அவன் காதில் அலைபேசியை வை” என சொல்ல பெண்கள் புரியாமல் விழித்தனர். இவர்கள் ஹாலுக்கு வந்ததால் அவனுக்கு ஏதும் தெரியவில்லை.
அதி, உன்னால முடிந்த வரை அவனை திட்டு..
“யாரை?” துருவினி கேட்க, அவளை முறைத்து விட்டு, அதி இந்த உன்னோட அந்த மாமன் தான்.
“என்ன?” அதியா பதற, அவன் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கான். வீட்ல இதெல்லாம் நடந்தது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் இப்ப வரை அவனை விட்டிருக்க மாட்டேன். அக்காவும் நம்முடன் இருந்திருப்பா.
ஹாஸ்பிட்டல்ல அவரு இருக்காறா? அப்படின்னா அத்து நீ? என்று விரல்கள் நடுங்க கேட்டாள். மாமா வரலைன்னாலும் உன் திருமணம் அவனோடு நடந்திருக்காது..
“நீயுமா? அப்ப இந்த அடி என்னால தானா?” அதியா அழுதாள்.
அவளை தன் பக்கம் அமர வைத்து அதியா கையை பிடித்து, நான் தூரமாக இருந்தாலும் உன்னை பற்றியும் அக்காவை பற்றியும் எண்ணாமல் இருந்ததில்லை. அவள் திருமணத்தின் போது ஒரு வார்த்தை ஓ.கே சொல்லி இருந்தான்னா..அவளும் நீங்களும் என்னோட மும்பையில இருந்திருப்பீங்க.
அவள் கம்பெனிக்காக மட்டுமல்ல அம்மாவுக்காகவும் தான் இங்கேயே இருந்தால் கடைசி அவளுக்காக அவங்க என்ன செஞ்சாங்க? பணம் இருக்கும் இடத்தில் அன்பை எதிர்பார்க்க முடியாது. நீ நம்ம வீட்டிலிருந்து கிளம்பும் முன்னே வந்துட்டேன்.
அக்கா இறந்த செய்தி தெரியவும் வந்துட்டேன். ஆனால் நீயாக வெளிய வரணும்ன்னு காத்திருந்தேன்.
நான் கஷ்டப்பட்ட போது என்னடா செஞ்ச?
உன்னை மட்டுமல்ல.. என்னையும் தான் போட பார்த்தானுக..
உன்னை எதுக்கு?
ஏய்..லூசு, நான் நானாக தான் போனேன். நாம தான் அந்த குடும்பத்தின் வாரிசுகள். நாம கம்பிளைண்ட் பைல் பண்ணா அவன் உள்ள போகணும்.
உடனே பண்ணிடலாமே சார். உங்க கம்பெனியும் உங்க கைக்கு வந்திரும் துருவினி சொல்ல, இல்ல அது அவ்வளவு ஈசியில்லை. இப்ப கூட என்னை பற்றி தெரிய வந்தால் பிரச்சனை வரும். அவனோட குடும்பத்து ஆட்கள் சாதாரண ஆள் இல்லையே!
அண்ணா, நான் அவனிடம் பேசலை. அவன் என்னமும் செய்யட்டும். இனி எங்களுக்கு நீ இருக்கேல்ல. அதுவே போதும் அதியா அவனை அணைத்தாள்.
நான் உங்களை விட்டு போனது தவறு தான். நான் சுயநலமாக தான யோசித்தேன் கண்கலங்கினான்.
“இல்லை” தலையசைத்து, உன்னை நீ காப்பாத்திட்ட. ஆனால் எங்களுக்கு எங்களை காப்பாத்திக்க தெரியலை. நான் இப்ப கூட ஆகுவிற்காக தான் வந்தேன்.
இப்படி தான் நீ சொல்லாத அதி. உனக்காக ஒருவர் வேணும்ன்னு நினைக்கிறது தப்பில்லை. அதுக்காக ஒருவரை சார்ந்து வாழணும்ன்னு நினைக்காத..
“ரெண்டு பேருக்கும் என்னை பார்த்தால் ஜோக்கர் போல இருக்கா?”
“அதி, அந்த பையன் உன்னை சைட் அடிச்சிருக்கான். இது கூட தெரியாம அவனுக்கு பயந்து வந்திருக்க. பாவம் அந்த பையன். ரொம்ப மிஸ் பண்ணுவான்” என துருவினி சொல்லி சிரிக்க, ஆத்விக் சத்தமில்லாமல் இருந்தான். தன் சிரிப்பை மென்றவாறு அவள் அவனை பார்க்க, அவன் பார்வை வேறிடம் சென்றது.
ஆரியன் அறைக்கு வெளியே நின்று மூவரையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மாமா, நானில்லை உங்க சிஸ்டர் தான் துருவினியை போட்டு விட்டான்.
அண்ணா..முதல்ல சார் தான் ஆரம்பிச்சி வச்சார்..நானா? அவன் கேட்க, ஆமா..நீங்க தான எதுக்கு பயந்தன்னு அதிகிட்ட கேட்டீங்க?
நான் அவகிட்ட தான பேசிட்டு இருந்தேன். நீ எதுக்கு இடையில வந்த அவன் கேட்க, இருவரும் மாறி மாறி பேச அதியா இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆரியனோ “செட் அப்” கத்தினான். உத்தமசீலன் அறையிலிருந்து குழந்தைகளும் அவரும் வெளியே வந்தனர்.
மூவரும் எழுந்து நிற்க, அதியா பாவமாக அவனை பார்த்தாள்.
இருக்கும் கோபத்தில் அவளை பார்க்கவும் அவன் மனமிறங்கியது. ஆனால் அவர்கள் பேசியது பிடிக்காமல் பட்டென கதவை அடித்து சாத்தினான்.
“ஆரு” கதவருகே சென்று அதியா அவனை அழைத்துக் கொண்டிருந்தாள். ஆரியன் அவன் கதவை போல் மனதையும் பூட்டினான். “அவன் பூட்டு திறக்கப்படுமா?” வாங்க பார்க்கலாம்..
“வா அதி. இதுக்கு மேல திறக்க மாட்டான்” துருவினி அவளை அழைத்து, நீ ரெஸ்ட் எடு. நான் டின்னர் தயார் செய்கிறேன் என்றாள்.
நீ மேலே வர வேண்டாம். “வினு அதிக்கு சமையல் செய்ய கற்றுக் கொடு” உரிமையுடன் ஆத்விக் பேச, அவள் தந்தை அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“மாமா, விளையாடலாமா?” என குழந்தைகள் அவனிடம் வந்தனர்.
“நான் பேசிட்டு வந்துறவா?” என கேட்டுக் கொண்டே சோபாவில் அமர்ந்தான்.
சார், அதிக்கு கிச்சன் வேண்டாம் என்றாள் துருவினி.
இல்ல வினு, அவள் எல்லாத்தையும் சீக்கிரம் கத்துக்கணும். மாமா எழுந்து வரும் முன் அதி, வெறும் அதியாக இருக்கக்கூடாது.
“என்ன சொல்றீங்க?” என திகைத்து துருவினி கேட்க, ஹா..என்னோட தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன்னு சொல்றேன். உன்னோட ஆபிஸ்ல்ல இருந்தா சொல்லேன். திறமையானவனாக வேண்டும் என ஓரக்கண்ணால் உத்தமசீலனை பார்த்தான்.
“எதுக்கு அவசரம்?”
இந்த அதியை என்னால நம்பமுடியாது. வருண் சரியாகி வந்து மிரட்டி இவ போயிட்டான்னா அவள் வாழ்க்கையே முடிஞ்சிரும்..
“அதுக்காக யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாமா?”
ஏன்? உனக்கென்ன பிரச்சனை? அவன் கேட்க, அவள் தந்தையை பார்த்தாள். அவரோ “வேண்டாம்” தலையசைத்தார். அதையும் ஆத்விக் கவனிக்க தான் செய்தான்.
ஓ.கே நீ உன் வேலையை பாரு. நான் என் வேலையை பார்க்கிறேன்..
“என்னது? என்னிடம் கேட்காமலா?” அதியா சினமுடன் அவனை முறைத்தாள்.
சரி, நீயே முடிவெடு. “கம்பெனியை டேக் ஓவர் பண்ணப் போறீயா? இல்லை கல்யாணம் பண்ணிக்க போறியா?” சினமுடன் அவனும் கேட்டான்.
இல்லை. என்னால இரண்டும் முடியாது..
“ஏன்?”
ஆகுவை பார்த்துக்கணும்ல்ல. இப்ப யாரு இது போல் பொண்ணுடன் போனால் ஏத்துப்பாங்க என அவளை மகளாக எண்ணியே பேச, அனைவருக்கும் அவள் பேச்சில் பெருமிதமானது.
“ஷனா இனி என் பொறுப்பு. போதுமா? இப்ப முடிவை சொல்லு?”
இல்லை. என்னால முடியாது..
“அதான் ஏன் முடியாது?” அவன் கேட்க, அவள் கண்கள் தானாக ஆரியனை தேடியது.
ஆகர்ஷனா அவளை பார்த்து, “அதிம்மா சொல்லுங்க?” மாமா நமக்காக தான வந்திருக்காங்க.
“ஆமா, ஆனால் என்னால முடியாது” அதியா அழுது கொண்டே அறைக்கு ஓடினாள். அங்கிருந்தவர்களுக்கு அவள் எண்ணம் புரிந்தது.
அதி, நீ இப்ப கீழ வரணும் இல்லை. நான் இப்பவே கிளம்பிடுவேன்..
நான் வர மாட்டேன்..
இங்க எத்தனை நாள் நீ இருக்க முடியும்? நாம கிளம்பி தான் ஆகணும். ஏற்கனவே பக்கத்து வீட்ல ஒரு மாதிரி பேசுறாங்க. உனக்கு நேரமெல்லாம் தர முடியாது. அதனால இப்பவே சொல்லு? ஆரியனுக்கு கேட்க வேண்டுமென்று கத்தி பேசினான் ஆத்விக்.
அதியாவிற்கோ அழுகை தான் வந்தது.
நாளை காலை வரை தான் உனக்கான நேரம். அதற்குள் விசயத்தை சொல்லீடு. இல்லை நாளையே நாம் கிளம்பணும் என கத்திக் கொண்டே ஆரியன் அறையை பார்த்தான்.
ஆரியனுக்கு கேட்டிருக்கும் போலும். கதவை பட்டென திறந்து யாரையும் பார்க்காமல் விறுவிறுவென நடந்தான்.
“மாமா” ஆத்விக் அழைக்க, அவனை திரும்பி கூட பாராமல் சென்றான் ஆரியன். அவன் தந்தைக்கும் துருவினிக்கும் ஆரியனை எண்ணி கவலை பிடித்துக் கொண்டது.
துருவினி வேகமாக அவள் தந்தையை அவரறைக்கு இழுத்து சென்று, “அப்பா எதுக்கு வேடிக்கை பாக்குறீங்க?” கண்டிப்பா சொல்றேன்பா. அண்ணாவுக்கு அதியை பிடிச்சிருக்கு. அவன் காதலை காட்டிக் கொள்ளாமல் நீங்க ஆர்டர் போட்டால் தட்ட மாட்டான். அண்ணியிடம் கூட இவ்வளவு பாசமாக அவன் பேசியதில்லை. அதி போயிட்டான்னா ரொம்ப ஹர்ட் ஆகிடுவான்.
துரும்மா, எனக்கும் தெரியும். அதியை நான் கன்சிடர் செய்தது திருமணமாகி குழந்தை வைத்திருப்பதால் தான். ஆரியாவிற்கும் அவளுக்கும் வயது வித்தியாசம் ரொம்ப அதிகம்..
பதினொரு வயது தானப்பா..
“என்னம்மா ஒரு வயது போல சாதாரணமா சொல்ற?” அவங்க எதிர்காலத்திலோ இல்லை வெளியே இருவரும் சேர்ந்து சென்றாலோ பிரச்சனை வரும்மா. அதிக்கும் நம்ம ஆரியாவை பிடிச்சிருக்குன்னு தெளிவா காண்பிச்சுட்டா. ஆனால் அந்த பொண்ணு வாழ்க்கையையும் பார்க்கணும்மா..
அப்பா..
இப்பொழுது பாசம் காதல் தான் தெரியும். அவன் வயதில் அவள் அவனை பார்த்துக் கொள்வது போல இருக்கும். பிள்ளைகளை வளர்க்கணும். சும்மா இல்லம்மா அவர் சொல்லிக் கொண்டிருக்க, தொண்டையை கனைத்தான் ஆத்விக்.
இருவரும் அதிர்ந்து அவனை பார்க்க, ஸ்டெயிலாக கதவில் சாய்ந்து கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சார்” துருவினி அழைக்க, அவளை பார்த்து விட்டு, “அங்கிள் சீக்ரெட் கூட கதவை திறந்து வைத்து கொண்டா பேசுவீங்க? உங்க மகன் பார்த்தால் என்னாவது?” கேட்டான்.
“இல்லப்பா” அவர் அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தன் மகளை பார்த்தார்.
எதுக்கு கோபம் வரப் போகுது? அதி இங்கே வந்ததிலிருந்து நானும் அடிக்கடி இந்த பக்கம் வந்து தான் சென்றேன். உங்க வீட்டுக்கு வந்து நிறைய மாறி இருக்கா. “ஆரியன் மாமா அதியாவை திருமணம் செய்வதில் எனக்கு பிரச்சனையில்லை” பட்டென சொன்னான்.
ஆ..என வாயை பிளந்து துருவினி அவனை பார்க்க, அவள் கன்னத்தை தட்டினான். சுயம் வந்து அவள் தந்தையை பார்த்தாள். அவர் இருவரையும் மாறி மாறி பார்த்தார்.
அங்கிள், நான் இப்பொழுது வேண்டுமென்றே தான் கொழுத்தி போட்ருக்கேன். ஒன்று அதி நேரடியா மாமாஸிடம் பேசுவா இல்லை அவர் பேசுவார். இரவு கண்டிப்பாக நடக்கும்..
அப்புறம் இந்த வயசு கணக்கெல்லாம் பற்றி கவலைப்படாதீங்க. என்னோட டார்கெட் மிஸ் ஆகாது. இன்னும் ஒரு வாரமோ இரு வாரமோ…ம்ம், நோ..நோ..ஒரே வாரத்துல்ல இவங்க திருமணம் நடக்கும். நடத்தி வைப்பேன். உங்களுக்கு ஓ.கே வான்னு சொல்லுங்க? கேட்டான்.
வந்துப்பா. அதிக்கு தான் ஆரியனை சமாளிக்க கஷ்டமா இருக்கும்.
அதெல்லாம் சமாளிக்கட்டும். நான் செய்வதை கண்டுகொள்ளாமல் இருங்க போதும் என்றான்.
“ம்ம் சரிப்பா” அவர் தன் மகளை பார்க்க, ஆனால் உங்க அம்மா..
“அம்மாவா? அம்மாவாக என்று எங்களுக்கு இருந்தாங்க? அவங்களும் அவ பக்கம் வரக் கூடாதுன்னா மாமா தான் அதியை கட்டிக்கணும்”.
“எல்லா பொண்ணுகளும் இதுல கரெக்ட்டா இருங்க மனதில் அவளை ரசித்துக் கொண்ட ஆத்விக். என்னோட தங்கச்சி புருசன் எனக்கு என்ன வேணும்? மாமன் தான?”
ஆமா சார்..
இந்த சாரை விட்டு நீயும் என்னை மாமான்னு அழைக்கணும் என்றான். அவள் அப்பா முன் சொல்ல அவனுக்கு பயம் தான் காட்டிக் கொள்ளாமல் சொல்லி விட்டு, “அங்கிள் சரிதான?” அவரை கேட்க, அவர் அவனை முறைத்தார்.
அங்கிள், கொஞ்ச நேரம் வெளியே இருங்கள். உங்க பையன் வரட்டும். இன்னும் கொளுத்தி போடலாம் என்றான்.
“என்னத்த கொளுத்த? அண்ணா விடாகொண்டன்”.
“தெரியுமே! காதல்ல எந்த விடாகொண்டனும் அப்படியே இருப்பதில்லை. பாரு” அவனும் ஹாலுக்கு வந்து அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.
“வினு, உன்னோட நம்பர் கொடு” அவன் கேட்க, உத்தமசீலன் அவனை முறைக்க, “அங்கிள் பாருங்க” என சொல்லி “நீ உன்னோட அறைக்கு போ”. நான் கால் பண்ணி பேசுவேன். தயவு செய்து ஏதும் பேசாமல் மட்டும் இரு. நானே பார்த்துப்பேன் என வாயிலை பார்த்தான்.
“எனக்கு டயர்டா இருக்கு” ஆரியன் சொல்ல, “சொல்லுடா” அலைபேசியை காதில் வைத்து, பார்த்திட்டியா? போலீஸாக இருந்தாலும் எனக்கு ஓ.கே தான். அதிக்கு இப்ப பாதுகாப்பு தான் முக்கியம்.
வருண் ஹாஸ்பிட்டல்ல சேர்ந்திருக்கான். அவன் வெளியே வருவதற்குள் அதிக்கு திருமணத்தை முடிக்கணும் இல்லை இவளோ மறுபடியும் போயிடுவா என்ன செய்றது? சீக்கிரம் பாரு. நாம நாளைக்கு மீட் பண்ணுவோம்..
“என்ன அவனா? எங்க இருக்கான்? குடும்பம்?” என ஆத்விக் பேச, ஆரியனோ நிற்க முடியாமல் அவனை முறைத்து பார்த்தான்.
“ஓ.கே டா மார்னிங் வரச் சொல்றீயா?”
இதுக்கு எதுக்கு கோவில் வரை போயிட்டு. காலையில வீட்டிற்கே வரச் சொல்லு. முதல்ல அவனை பார்த்து பேசணும். பின் குடும்பத்தை மீட் பண்ணலாம்.
ஹப்பா, இப்ப தான் நிம்மதியா இருக்கு. நான் நல்லா தூங்குவேன் என ஆத்விக் அலைபேசியை வைத்து ஆரியனை பார்த்து விட்டு உத்தமசீலனை பார்த்தான்.
என்னோட சீனியர் தான் அங்கிள். என்ன இருந்தாலும் விசாரிக்கணும்ல்ல. இங்க வீட்டுக்கு தான் வரச் சொல்லி இருக்கேன். இதோ புகைப்படம் கூட அனுப்பீட்டான் என ஒருவனின் புகைப்படத்தை காட்ட, அவரோ அவனை புரியாமல் பார்த்தாள். ஆத்விக் கண்ணடிக்க, அவர் புன்னகைத்தார்.
“ம்ம் பையன் நல்லா தான் இருக்கான். வயசு அதிகமா இருக்குமோ?” அவர் கேட்க, “அட என்னோட மாமனார் செம்ம சார்ப்பா இருக்காரே!” என மனதில் சிந்தித்து, “வயசெல்லாமா பார்க்குறது அங்கிள்? எந்த காலத்துல்ல இருக்கீங்க?” அவன் ரொம்ப நல்லவன் தான். பார்க்கலாம் வரட்டும். பாசிட்டிவ் ரிசல்ட்டா இருந்தால் சிம்பிளா கோவில்ல வச்சி கூட மேரேஜை முடிச்சிறலாம்..
ம்ம்..ரொம்ப வேகமா தெரியுதேப்பா!
அதுக்கு என்ன அங்கிள் பண்றது? அதியை காப்பாற்ற வேற வழியில்லை. சாதாரணமான ஒருவனால் அவளை பாதுகாக்க முடியாது.
“மாமா, இதோ புகைப்படத்தை பாருங்க” ஆரியனிடம் ஓடினான் ஆத்விக். அவனை வெளியே தள்ளி அறைக்கதவு உடையும் அளவிற்கு அடித்து கதவை சாற்றினான் ஆரியன்.
புன்னகைத்த ஆத்விக், “நீங்க ஓய்வெடுங்க அங்கிள். தர்சு என்ன பண்றான்?” கேட்க, “அவன் தூங்கிட்டான்” என்று துருவினி வெளியே வந்து, “ஏதாவது சொதப்பீட்டா?”
இல்லை இல்லை எல்லாமே பக்காவா இருக்கு..
“அந்த புகைப்படம்?” அவர் கேட்க, அதெல்லாம் சும்மா இல்லை, ஏற்கனவே இவரிடம் பேசிட்டேன். நாளை கண்டிப்பாக வருவார்.
வருவாரா?
நீங்க ஓய்வெடுங்க. காலையில நடப்பதை நாளை பார்த்துக்கலாம். “குட் நைட் அங்கிள், வினு” சொல்லி அவன் அவளை பார்த்துக் கொண்டே சென்றான். அவருக்கோ நன்றாக புரிந்து விட்டது.
வாழ்க்கை முழுக்க இங்கேயே செட்டில் ஆக தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்கான் என எண்ணிக் கொண்டார்.
“என்ன இவர்? அப்பா முன்னாடி இப்படியெல்லாம் பேசுகிறார்?” துருவினி எண்ணினாள். பின் அவர்களும் இரவு நித்திரா தேவியை தழுவ சென்றனர்.
ஆரியனுக்கோ உறங்க முடியவில்லை. எப்படியாவது உறங்கணும் என்று கண்ணை மூடினான். கண்ணை மூடியவுடனே அதியாவுடன் வேறொருவன் கை பிடித்து நிற்பது போல் தோன்ற, பட்டென எழுந்து அமர்ந்தான்.
ஆகர்ஷனாவும் ஆத்விக்கும் உறங்கிக் கொண்டிருப்பதாக எண்ணி, அதியா உறங்காமல் வெளியே வந்து அமர்ந்திருந்தாள்.
அலைபேசியில் வெகுநேரமாக ஆரியனை அழைத்துக் கொண்டிருந்தாள் அதியா. இவள் அழைப்பதை பார்த்து சைலண்ட் மோடில் போட்டு விட்டான் படுக்கும் முன்னே ஆரியன்.
அவளோ அவனை அழைத்து அழைத்து சோர்ந்தாலும் அழைப்பதை விடவில்லை. எழுந்து அமர்ந்த ஆரியன் அலைபேசியை பார்த்தான்.
எடுக்காத ஆரியா. உன்னால இதுக்கு மேல கட்டுப்பாட்டோட இருக்க முடியாது. அவ உன்னோட சின்னப் பொண்ணு. திருமணம் ஆகாதவள். நீ விலகியே இரு. அவன் ஒரு மனது சொன்னது.
மற்ற மனமோ, “உன்னால அதியை பார்க்கமால் இருக்க முடியுமா? கடையில் இருக்கும் போதே அவள் எண்ணமாகவே இருந்த? நாளை அவளை பார்க்க மாப்பிள்ளை வாரான்னு அத்து சொன்னான். அவ போயிட்டான்னா என்ன செய்வ? எப்படி பார்ப்ப?” அவனை குடைந்தது.
“ஆ…” தலையை பிடித்தான். பின் வேகமாக மணியை பார்த்தான். நள்ளிரவை கடந்து இருந்தது. என்ன எண்ணினானோ படியில் ஏறினான்.
“அதியாவை உள்ளே அழைத்து விடலாம்” ஆத்விக் எழுந்தான். படியில் சத்தம் கேட்கவும் மறுபடியும் படுத்து கண்ணை மூடினான்.
அதியாவோ கண்ணீருடன் சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே அவள் முன் வந்தான் ஆரியன். அவனை பார்க்கவும் வேகமாக எழுந்து அழுது கொண்டே அணைத்து, “ஆரு நீங்க ஏன் பேசாம போயிட்டீங்க? பேச மாட்டீங்களோன்னு பயந்துட்டேன். நான் உங்களை ஏமாற்ற நினைக்கலை. ரஞ்சித்துன்னு யாருமில்லை. நானாக தான் சொன்னேன். எனக்கு மேரேஜ் ஆகலை தான். ஆனால் ஆரு நான் இப்ப என்ன செய்றது?”
ஆரியன் ஏதும் பேசவில்லை. கைகளை இறுக மடக்கி இருந்தான். அவன் கைகள் அவளை தொட கூட மறுத்தது. அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் ஜடம் போல் நின்றானே தவிர ஏதும் சொல்லவில்லை.
அதியா அவனிடமிருந்து நகர்ந்து ஆரு, “நான் என்ன செய்றது?” மறுபடியும் கேட்டாள்.
“நீ மேரேஜ் பண்ணிக்கோ” அவளை விட்டு அவன் விலக, அவனை பின்னிருந்து அணைத்து, “ஆரு ப்ளீஸ்” அழுதாள்
ஆரியன் திரும்பி அவளை பார்க்க, “சாரி ஆரு..நாங்க எங்க பாதுகாப்புக்காக தான் பொய் சொன்னோம்”.
“இங்க வந்த பின் சொல்லி இருக்கணுமா? இல்லையா? நீ கிளம்பிடு” அவன் சொல்ல, “சாரி ஆரு” அவனருகே செல்ல, “அதிம்மா” அதியாவிடம் ஓடி வந்து ஆகர்ஷனா அவள் காலை கட்டிக் கொண்டாள்.
“ஆகு, நீ தூங்கலையா?” அதியா கேட்க, அவள் ஆரியனை பார்த்து விட்டு, “நாம போயிடலாம். நீ தான சொன்ன? நம்மை புரிஞ்சுக்காம கஷ்டப்படுத்துனாங்கன்னா அங்க இருக்கக்கூடாதுன்னு சொல்லி தான வீட்ல இருந்து என்னை அழைச்சிட்டு வந்த..”
நம்மை புரிஞ்சுக்காத யாரும் நமக்கு வேண்டாம்.
“ஐ அம் சாரிடா. உன்னை விட்டுட்டு போயிட்டேன்”.
எனக்கு தெரியும் அதிம்மா. நீ அழுதுட்டு தான் போயிருப்பன்னு.
“மாமா நாம கிளம்பிடுவோமா? அதிம்மா ரொம்ப நாளா அழுதுட்டே இருக்காங்க” அறையிலிருந்து ஆரியனை பார்த்துக் கொண்டே வந்த ஆத்விக்கிடம் பேச..
ம்ம்..போகலாம். ஒரு வாரம் தான்.
“அண்ணா” அதியா அவனை அழைக்க, ஆத்விக் ஆரியனை முறைத்து பார்த்தான்.
“அண்ணா, நீ பக்கத்திலயே இரேன்” ஆத்விக்கை அணைத்தாள் அதியா.
அவளை நகர்த்தி, “அழுதுகிட்டே இருக்காத. தூங்கு” ஆத்விக் ஆரியனை பார்த்து விட்டு உள்ளே செல்ல எண்ணினான். ஆகர்ஷனா ஆரியனை பார்த்துக் கொண்டே நின்றாள்.
“நோ மாமா. எனக்கு அப்பாவே பிடிக்காது. எனக்கு அதிம்மாவும் மாமாவும் போதும்” அவனை கட்டிக் கொண்டாள்.
“இல்லடா, அம்மாவுக்கு துணைக்கு யாராவது வேணும்ல்ல?”
“வேண்டாம் மாமா. நாம அதிம்மாவை பார்த்துப்போம். எனக்கு யாரையும் பிடிக்கலை” ஆரியனை முறைத்து பார்த்தாள். ஆரியன் தொண்டை அடைக்க, “ஷனா” அழைத்தான்.
“பேசாத ஆரு. நீ சொன்னது போல நாங்க போயிடுறோம். உன்னை மட்டும் தான் நாங்க நம்பி இங்க வந்தோம். உனக்கு தெரியுமா? அதிம்மாவும் நானும் ரயிலில் வரும் போது அதிம்மாவை இந்த ஆம்பிளைங்க எப்படி பார்த்தாங்க தெரியுமா? அதுல அவங்க ரொம்ப பயந்தாங்க. நானும்” ஆத்விக்கை அணைத்து, “அத்து மாமா ஆருவை போக சொல்லுங்க. நாம இப்பவே போவோமா?” சத்தமாக ஏங்கி ஏங்கி அழுதாள்.
“ஷனா” ஆரியன் கண்கலங்க அவளருகே வர, “கையை உயர்த்தி பேச வேண்டியதை சரியா பேசிட்டீங்க” கண்ணீருடன் ஆத்விக் சொல்ல, “இல்லை நான்” ஆரியன் பேச வந்ததை கூட கவனிக்காமல் உள்ளே சென்றான்.
அதியா கண்ணீருடன் படுத்திருக்க, அவளருகே அமர்ந்து ஆகர்ஷனாவை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான் ஆத்விக். இருவரையும் உறங்க வைத்து விட்டு வெளியே வந்தான் ஆத்விக்.
ஆரியன் செல்லாமல் அங்கேயே சிகரெட்டை ஊதி தள்ளிக் கொண்டிருந்தான். அவன் வாயில் இருந்ததை பிடுங்கி கீழே போட்ட ஆத்விக், அவளாக உங்களிடம் கேட்பான்னு நான் எதிர்பார்க்கலை. எனக்கு உங்களை நன்றாக தெரியும். வயதை வைத்து எதையும் முடிவு பண்ணாதீங்க..
என்ன தான் அதி குழந்தை போல் நடந்து கொண்டாலும் ஷனாவை வளர்த்திருக்கா. அவளுக்கு உணவு தயார் செய்யத் தெரியாது. ஷனாவிற்கு வேண்டிய எல்லாமே அவள் தான் தேர்ந்தெடுப்பாள். வீட்டில் ஆட்கள் சமைத்து மட்டும் தான் கொடுப்பார்கள். சொல்லிக் கொடுத்தால் எல்லாவற்றையும் கத்துப்பா.
அவள இப்படி அவங்க வளர்த்தது அவர்களுக்கு எதிராக அவள் எதுவும் செய்திடக் கூடாதுன்னு தான். அவளால சின்ன விசயத்தை கூட தாங்க முடியாது. அவளும் நீங்களும் காதலிக்கிறீங்கன்னு தெரியுது. ஆனால் உங்களால அவளை ஏத்துக்க முடியலை.
நம் வாழ்க்கை நமக்காக இருக்கணும். அடுத்தவங்களுக்காக செய்யும் ஒவ்வொரு விசயமும் நம்மை காயப்படுத்தும். காதலில் வயதோ, கலரோ, ஏற்றத்தாழ்வு ஏதும் கிடையாது. உங்களுக்கான நேரம் குறைவா தான் இருக்கு. ஷனா சொன்னது போல நாங்க இங்கிருந்து போக மாட்டோம். ஆனால் இன்னும் ஒரு வாரத்துல்ல வருண் விழிச்சிருவான்னு தோணுது. அதுக்குள்ள மனதளவில் வலிமையான ஒருவன் தான் என்னோட அதி கழுத்துல்ல தாலியை கட்டணும்ன்னு நினைக்கிறேன். அது நீங்களாக இருந்தால் பிரச்சனையில்லை..
“ஆனால் நீங்க ஒத்துக்க மாட்டேங்கிறீங்க? ஓ.கே நான் நிஜமாகவே அதிக்கு ஏற்றவனை கண்டிப்பாக திருமணம் செய்து வைப்பேன்” ஆரியனை பார்த்தான். அவன் முகமோ இறுக்கமாக இருந்தது.
இப்பொழுது நான் பார்க்கும் ஆரியனுக்கு எந்த நம்பிக்கையும் யார் மீதும் இல்லை. ஆனால் நான் பார்த்த ஆரியன்..என அவனை கூர்ந்து பார்த்து, “எதற்கும் பயப்பட மாட்டார். ஒருவரை நம்பினால் சரியாக இருக்கும். அவர் நொடிப்பொழுதில் எடுக்கும் முடிவு எல்லாருக்கும் பயனுள்ளதாகவும் பர்ஃபட்டாகவும் இருக்கும். “ஹி இஸ் எ பர்பைக் மேன்”.
“உனக்கு என்னை எப்படி தெரியும்?”
நோ..நோ..நீங்க அவர் இல்லை என்ற ஆத்விக், அதி இதுக்கு மேல ஹர்ட் ஆகக்கூடாதுன்னு தான் நான் அவள் முன்னாடி வந்தேன். ஆனால் அவள் சந்தோசமா இருப்பான்னு எனக்கு தோணலை. ஆனால் அவளுக்கு இப்ப பாதுகாப்பு அவசியம். அதுக்காக உங்க வீட்ல இருக்கோம்.
நாளைக்கு வர்ற மாப்பிள்ளை பற்றி எனக்கு முழுதாக தெரியாது. ஜஸ்ட் சீனியர் தான். என்னோட பசங்கள விசாரிக்க
சொன்னேன். காலை தெரிந்து விடும். அப்புறம் தான் வருவார்.
இனி நாங்க உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம். நீ போங்க..தூங்குங்க..
“உனக்கு என்னை எப்படி தெரியும்ன்னு கேட்டேன்?”
“அதை நீங்களே கண்டுபிடிங்க. கிளம்புங்க” ஆத்விக் ஆரியனை விரட்டாத குறையாக பேசினான். ஆரியன் சென்ற சில மணி நேரத்தில் ஆத்விக்கும் கீழே வந்தான்.
யாருமில்லாமல் இருக்க கதவை திறந்து வெளியே சென்று அமர்ந்தான். அலைபேசியை எடுத்து, “விசாரிச்சீங்களா? இல்லையா?” கேட்டான்.
சார், அவர் வேண்டாம். கொஞ்சம் அவர் நடத்தை சரியில்லைன்னு சொல்றாங்க..ஓ..அப்படியா, சரி வேற மாப்பிள்ளை பார்த்து விசாரிச்சு சொல்லு? அவன் கேட்க, ஆத்விக் முன் ருத்ரகாளியாக நின்றாள் துருவினி.
“காலையில் பேசலாம்” அலைபேசியை வைத்து விட்டு, எழுந்து அவளை பார்த்தான்.
“நீங்க என்ன சொன்னீங்க? இப்ப என்ன பண்றீங்க? அதிக்கு வேற மாப்பிள்ளை பார்க்க சொல்றீங்க?” சினமுடன் கேட்டாள்.
உன்னோட அண்ணன் இப்படியே இருக்க வேண்டியது தான். நான் என்ன செய்றது?
அவள் முறைத்தாள்.
“உன்னால உன் அண்ணாவை சம்மதிக்க வைக்க முடியுமா?”
நீங்க தான் பிளான் வச்சிருக்கீங்கல்ல?
“வச்சிருந்தேன். ஆனால் அதி அவளாகவே உன் அண்ணாவிடம் பேசினாள்” என மாடியில் நடந்ததை சொல்ல, “அப்ப..அதி, ஆகாவை அழைச்சிட்டு போயிடுவீங்கல்லா?”
அவள் திருமணக் கோலத்தில் பார்த்து, இங்கிருந்து அழைச்சிட்டு போகணுமா? விட்டு போகணுமான்னு பார்க்கணும்? எல்லாம் உன் அண்ணன் கையில் தான் இருக்கு. அதி யாரிடம் பேசியதில்லை. அவளுக்கு மனசே விட்டு போயிருக்கும்.
அவரிடம் நீங்க காதலிக்கிறீங்கன்னு சொல்லும் போது எந்த பதட்டமும் இல்லை. அமைதியாக தான் இருந்தார்.
“அதுக்கு?”
“அதுக்கா? நீ லாயர்ன்னு வெளிய சொல்லாத. இது கூட புரியலையா?” சினந்தான் ஆத்விக். அவள் விழித்தாள்.
அமைதியாக இருந்தார்ன்னா, நம்ம எல்லாருக்கும் அவர் காதல் தெரியும்ன்னு முன்னதாகவே அவருக்கு தெரிஞ்சிருக்கு. ஆனால் அவர் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கார். என்ன செய்தாலும் அவர் மாறப் போறதில்லை. அதுக்காக அதியை அப்படியே நான் விட முடியாது. அவள் பாதுகாப்பு முக்கியம் தான?
ம்ம்..என்று வருத்தமாக அவள் குரல் வந்து நிறுத்தி அவனை பார்த்து, “நான் லாயர்ன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” துருவினி கேட்டாள்.
உன் குடும்பமே என் பாக்கெட்டில் என்றான். அவனருகே வந்து அவனது பாக்கெட்டை எட்டிப் பார்த்து, “இங்க ஒன்றுமில்லையே!” என்றாள் நக்கலாக. அவள் கையை அவன் நெஞ்சில் வைத்து, அங்க இல்லை. இங்க இருக்கு என்றான்.
துருவினி திகைத்து விழிக்க, அவன் அலைபேசியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“என்ன? எதுக்கு?” அவள் வார்த்தைகள் தடுமாறியது. அலைபேசியை பட்டனை ஆன் செய்தான். முன்னே வந்த புகைப்படத்தை அதிர்ந்து பார்த்து, “நா..நானா? எப்படி இது உங்களிடம்?”
துருவினியின் கடைசி வருட பள்ளியில் எடுத்த புகைப்படம்.
நான் தான் சொன்னேன்ல்ல. உன் அண்ணனை வைத்து தான் உன்னையும் உன் குடும்பத்தையும் தெரியும்.
“எப்படி?”
ம்ம்..என எழுந்து அவள் கண்ணை பார்த்துக் கொண்டே தலையை சாய்த்து அவளருகே வந்தான்.
“என்ன?” அவள் பின்னே விலகினாள்.
“நீ தான கேட்ட?”
அங்கிருந்தே சொல்லுங்க..
சொல்லலாம். ஆனால் நாங்க கிளம்பிடுவோமே! அதனால் சொல்ல தோணுது..
“எனக்கு தூக்கம் வருது” துருவினி நகர சென்றாள். அவளை அணைத்து, “வினு ப்ளீஸ் ஒரு நிமிசம் மட்டும்” என சொல்ல, அவளும் அமைதியாக நின்றாள்.
மாடியில் சத்தம் கேட்டு இருவரும் விலகி வேகமாக ஓடினார்கள். அதியாவை கட்டிக் கொண்டு ஆகர்ஷனா அழுது கொண்டிருந்தாள்.
“எங்கள தான் போக சொல்லீட்டீங்கல்ல அப்புறம் எதுக்கு இந்த தேவையில்லாத நம்பிக்கை கொடுக்குறீங்க?” சினமுடன் கத்தினாள் அதியா.
“முதல்ல குழந்தையை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போகணும்” ஆரியன் சொல்ல, தேவையில்லை அவள் கனவால் தான் பயப்படுறா. மயங்கீட்டா..
“கனவா? உன்னிடம் சொன்னாலா?” கத்தினான் ஆரியன்.
ஆமா சொல்லி இருக்கா.
“அதி” சினமுடன் ஆத்விக் அழைக்க, ஆமா அண்ணா அக்காவை மாமா கொன்றதை பக்கமிருந்து பார்த்ததை எண்ணி தான் அவள் எனக்கும் ஏதும் ஆகிடுமோன்னு பயப்படுறா..
“கேளுங்க” ஆத்விக்கிடம் ஆகர்ஷனாவை கொடுத்து விட்டு வெளியே சென்று நின்று கொண்டாள். கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அவள் நிற்க, அவள் தோளை ஆதரவாக பற்றினாள் துருவினி.
வினு, என்னையும் மாமா கொன்றுவாரோன்னு அவ மட்டுமல்ல நானும் அவரால் எங்களுக்கு ஆபத்து வருமோன்னு பயந்தேன். ஆனால் அவர் எண்ணம் வேற. ஆனால் அந்த விசயம் அவள் மனதில் ஆழமாக பதிந்ததால் என்னையும் மாமா கொல்வது போல கனவு அடிக்கடி ஆகுவிற்கு வரும். பயந்து இப்படி தான் எழுவாள்.
“இருந்தாலும் ஒரு முறை ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்ல்ல?” துருவினி கேட்க, அதியா அமைதியாக இருந்தாள். உத்தமசீலன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.