வல்லவன் 20

காலை எழுந்த ஆத்விக் அவனருகே உறங்கிக் கொண்டிருந்த உத்தமசீலனை பார்த்து விட்டு அவ்வறையை பார்த்து தலையை பிடித்தான்.

“மாப்பிள்ள, தலை ரொம்ப வலிக்குதா?” உத்தமசீலன் எழுந்து அமர்ந்தார்.

நீங்க தூங்கலையா அங்கிள்?

நீங்க எழவும் எனக்கும் முழிப்பு தட்டிருச்சு. அதான் எழுந்துட்டேன்.

“அங்கிள், நான் தயாராகி வாரேன்” அவன் குளியலறைக்கு செல்லவும் உத்தமசீலன் துருவினி அறைக்கு சென்று தயாராகி வந்தார்.

எல்லாரும் சாப்பிட அமர்ந்திருந்தனர். ஆத்விக்கும் கவினும் அமர்ந்தனர். சக்தி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதிவதினியும் துருவினியும் உணவை உணவு மேசையில் அடுக்கினர். துருவினி எல்லாருக்கும் உணவுத்தட்டை வைத்து விட்டு, ஆத்விக், கவினிற்கு மட்டும் வைக்காமல் உணவை மற்றவர்களுக்கு எடுத்து வைத்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“வினு, எங்களுக்கு உணவு?” ஆத்விக் கேட்க, இரு தெரு தள்ளி டாஸ்மாக் இருக்கு. நீங்க உங்களுக்கு வேண்டியதை அங்க வாங்கிக்கலாம். இனி சாப்பாடு கிடையாது துருவினி சொல்ல, அதிவதினியும் மற்றவர்களும் மனதில் சிரித்துக் கொண்டனர்.

“ஒரு நாள் குடித்ததுக்கா சாப்பாடு கிடையாது?”

“ஒரு நாளானாலும் குடி குடிதான?” சக்தி கேட்க, அவளை ஆத்விக், கவினும் முறைத்தனர்.

வினு, ரொம்ப பசிக்குது என்ற ஆத்விக் அதிவதினியிடம், அத்தை ஏதும் சொல்லாமல் இருக்கீங்க?

நான் சொல்றதுல்ல என்ன இருக்கு? அதான் என் பிள்ளை சொல்லீட்டால்ல?

பிள்ளையா? ஆத்விக் துருவினியை பார்த்து, கவின் காதில் சென்று இவ செய்ற வேலையெல்லாம் தொல்லையா இருக்கு. பிள்ளைன்னு சொல்றாங்க..

அப்ப உணவு கிடையாது. அப்படி தான? ஆத்விக் துருவினியிடம் கேட்க, வினு இந்த ரசம் செம்ம டேஸ்ட்டா இருக்கு.  கையில் ஊற்றி உர்ரென உறிஞ்சினாள் சக்தி.

“ஏய், ஒழுங்கா சாப்பிடு” ஆத்விக் சொல்ல, டேஸ்ட்டா இருக்குல்ல. ருசித்து சாப்பிட வேண்டாமா? சொல்லிக் கொண்டே மட்டன் கிரேவியை எடுத்து மேலும் அவர்களை கடுப்பேற்றினாள்.

துருவினி புன்னகையுடன் அவர்களை பார்த்துக் கொண்டே அவளுக்கு உணவை எடுக்க, “இரும்மா நான் வைக்கிறேன்” அதிவதினி அவளுக்கு எடுத்து வைக்க, அவளும் அமர்ந்தாள்.

ஆத்விக்கும் கவினும் எழாமல் அனைவரும் உண்பதை பார்க்க, “பார்க்காதீங்க.. போங்கடா குடிக்க போங்க” சுகுமார் சொல்ல, “அப்பா இதெல்லாம் சரியா?” கவின் கேட்டான்.

“சரி, தப்பு பற்றி நீங்க பேசுறீங்களா? உங்களுக்கு வெல்லக்கட்டி வேணும்ன்னு கேட்டது சரியா?” சக்தி கேட்க, எல்லாரும் அவளை பார்த்தனர்.

“நான் என்ன பேசினால் உனக்கென்ன?” கவின் சினமுடன் சொல்ல, பசித்தால் இப்படி தான் கோபம் வரும். அதனால வெட்டியா என்னுடன் சண்டை போடாமல் போங்க என்று அதிவதினி, துருவினியை பார்த்து “சமையல் சூப்பர்” சக்தி இருவரையும் பாராட்டி விட்டு கையை கழுவ சென்றாள்.

“அங்கிள், நீங்களாவது சொல்லுங்கள்” ஆத்விக் சொல்ல, மாப்பிள்ள குடிக்க மாட்டேன்னு நீங்க பிராமிஸ் பண்ணுங்க. நான் சொல்கிறேன். பிராமிஸை மீறாமல் இருக்கணும். அது தான் மிக முக்கியம் என்றார் உத்தமசீலன்.

“நான் பண்றேன்” கவின் எழுந்து, நான் இனி குடிக்கவே மாட்டேன். அம்மா, எனக்கு உணவு வேண்டும் கெஞ்சலாக அதிவதினியிடம் கேட்டான்.

ஓ.கே என்று உண்பதை விட்டு எழ, இருங்க அத்தை. நான் இருக்கேன்ல்ல என்று சக்தி உரிமையாக அவரிடம் கூறி விட்டு, கவினிற்கு உணவை வைத்துக் கொண்டே ஆத்விக்கை பார்த்தாள். அவனும் உறுதியளிக்க அவனுக்கும் சக்தி உணவை எடுத்து வைத்தாள்.

பசங்களுக்கு உணவை ஊட்டி விட்டு துருவினியும் உணவை முடித்து எழுந்து, அப்பா நான் பிள்ளைங்கல்ல பள்ளியில் விட்டு நானும் ஆபிஸ் கிளம்புகிறேன் துருவினி சொல்ல, “யாரும் எங்கும் போகக் கூடாது” கண்டிப்பான குரலில் ஆத்விக் கூற, சக்தி உத்தமசீலனுக்கு புரிந்தது.

ஏன்டா மச்சான். அதான் அவன் உள்ளே இருக்கான்ல்ல? கவின் கேட்க, அவன் உள்ள இருக்கான். ஆனால் அவன் பெரியப்பா, பசங்க வாராங்களே ஆத்விக் அதிவதினியை பார்த்துக் கொண்டே சொன்னான். கவின் பெற்றோர் அதிர்ந்து அவனை பார்த்தனர்.

அதிவதினி தானாக தன் கையை சுகுமார் கையுடன் கோர்த்துக் கொண்டார்.

“அத்தை, எதுக்கு பயப்படுறீங்க?” அவன் கண்டிப்பாக அதி குரூப்ஸூக்கு வர முயல்வான். ஆனால் மாமா, அங்கிளை தாண்டி அவன் உங்களை பார்க்க முடியும்.

“ஆது, யாரை சொல்ற?” கவின் விசயமறியாது கேட்டான். ஆத்விக் அவனை பார்த்து விட்டு, மாமா அந்த ஆளு வர்றது அவன் குடும்ப கம்பெனியை அபகரிக்க தான். பாவம் அவனால் அதுவும் முடியாது.

சுகுமார் ஆத்விக்கை பார்த்து, என்ன பிளான் வச்சிருக்க?

மாமா, முடிந்த பின் தெரிஞ்சுக்கோங்க. ஆனால் அத்தைக்கு பிரச்சனை வராது. நான் உறுதி அளிக்கிறேன்.

யார பத்தி பேசுறீங்க? கவின் சீற்றமுடன் கேட்டான்.

சக்தி விசயத்தை சொல்ல, உனக்கு எப்படிம்மா தெரியும்? சுகுமார் கேட்க, எனக்கு என்னோட அண்ணா சொன்னான்.

“அண்ணாவா? அவங்களுக்கு எங்களை எப்படி தெரியும்?” கவின் கேட்க, சக்தி ஆத்விக்கை பார்த்தாள்.

ஆத்விக், “மச்சான் கோர்ட்டுக்கு போகணும். வரப் போறீயா? ஆர்க்கியூ பண்ணிட்டு இருக்கப் போறீயா?”

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லு?”

“வா போகும் போது சொல்கிறேன்” ஆத்விக் கூற, இருவரும் கிளம்பினார்கள். பிரச்சனை என்பதால் தான் போக வேண்டாம்ன்னு சொல்றான் என்று துருவினிக்கு நன்றாக புரிந்தது. மற்றவர்கள் வீட்டில் இருந்தனர்.

இரவு முழுவதும் ஆரியன் கைகளில் தலை வைத்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்து நித்திரையில் இருந்த அதியா காலை அவன் மீது உறங்கிக் கொண்டிருந்தாள்.

விழித்த ஆரியன் அதியாவை புன்னகையுடன் பார்த்து அவள் கூந்தலை ஒதுக்கி அவளது நெற்றியில் முத்தமிட்டு மெதுவாக அவளை அணைத்தாவாறே படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அருகே இருந்த மேசையிலிருந்து அலைபேசியை எடுத்து அதி குரூப்ஸிற்காக வாதாடும் அட்வகேட் விக்ரமை அழைத்தான்.

எல்லாமே தயாரா இருக்கா விக்ரம்?

இருக்கு சார். சார் அப்புறம்..நேற்று இரவு உங்க மச்சான் ரொம்ப டிரிங்க் பண்ண மாதிரி இருந்தது. அவரும் வந்துருவார்ல்ல சார்? ஆத்விக்கை பற்றி அவர் கேட்க, அப்படியா? வந்துருவார். நீங்க கவனமா இருங்க. போதும்..

ஓ.கே சார். ஐ கால் யூ பேக். உங்க வொய்ஃப்பையும் பத்திரமா அழைச்சிட்டு வந்துருங்க சொல்லி அவன் அலைபேசியை வைத்தான்.

ஆரியன் அவன் தந்தைக்கு அழைக்க, ஆத்விக் எழும் முன் உத்தமசீலன் அப்பொழுது தான் விழித்தார். அவர் நடந்ததை கூறினார்.

ஓ.கேப்பா. எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோங்க. யாரும் வெளியே செல்ல வேண்டாம். எல்லாம் முடிந்த பின் கால் பண்றேன் என்று ஆரியன், விசயத்தை கூறாமலே வைத்து விட்டான். அவரும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வைத்து விட்டார்.

சற்று நேரம் அதியா உறங்க அவளை ரசித்து பார்த்துக் கொண்டே படுத்திருந்தான் ஆரியன். நேரத்தை கவனித்து ஜில்லு..எழுந்திரு..கோர்ட்டுக்கு போகணும் அவள் காதருகே ஆரியன் பேசினான்.

கண்ணை லேசாக விழித்து ஆரியனை பார்த்து அவனை இறுக்கிக் கொண்டு, “ஆரு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா?” கேட்டுக் கொண்டே மீண்டும் கண்களை மூடினாள்.

ஏற்கனவே எட்டாகி விட்டது. பத்து மணிக்கு அங்க இருக்கணும். நாம போய்ட்டு வந்து தூங்கலாம். அதிம்மா..நீ கண்டிப்பா போகணும். நீயும் ஒரு ஆதாரம் தான். பயப்படாம பேசணும். என்னால இடையில தலையிட முடியாது. உன்னோட பாதுகாப்பிற்காக தான் நான் வருகிறேன். சீக்கிரம் எழுந்திரும்மா..என்று அவள் தாடையை நிமிர்த்தி அவள் இதழ்களில் மென் முத்தத்தை பதித்தான்.

“மாமா, இப்படியெல்லாம் முத்தம் கொடுத்தால் நாம போகவே முடியாது” அதியா சிணுங்க, நாம வந்து கொஞ்சலாம்டா. அந்த வருண் தப்பித்தால் நம் ஷனா வாழ்க்கை என்னாவது? அவன் கேட்க, மறுநிமிடம் கண்ணை திறந்து ஆரியனை பார்த்தாள்.

கிளம்பலாம்டா. போய்ட்டு வந்து ரெஸ்ட் எடுக்கலாம் கெஞ்சாத குறையாய் கேட்டு அவளை தயாராக அனுப்பினான். இருவரும் தயாராகி வந்தனர். அதியா புடவையுடன் வந்தாள். இருவரும் உண்டனர்.

“சூப்பரா இருக்கீங்க” ஆரியன் சொல்ல, வெட்கமுடன் முகத்தை திருப்பினாள். அவளை நெருங்கிய ஆரியன், “யார் என்ன பேசினாலும் என்ன நடந்தாலும் உண்மையை தான் சொல்லணும்” ஆரியன் சொல்ல, ஆரு பசங்களை பார்க்கணும் போல இருக்கு என்றாள்.

போய்ட்டு பார்த்துட்டு வரலாம். பசங்க வீட்ல தான் இருப்பாங்க..

“சரி ஆரு” அவனை அணைத்து கண்கலங்கினாள்.

“என்ன அதி, எதுக்கு கண்ணீரெல்லாம்? நானிருக்கும் போது நீ அழலாமா?”

“அழலை ஆரு. எனக்கு சந்தோசம் தான். கிளம்பலாம் ஆரு” அவன் கையை பற்றிக் கொண்டாள். அதியாவின் செய்கை ஆரியன் மனதை உலுக்கியது. அதியாவிற்கு ஏதும் தவறாக நடந்திருமோ? பயம் அவனை பிடித்துக் கொண்டது.

இருவரும் கோர்ட்டிற்கு கிளம்ப, அதே நேரம் தான் ஆத்விக் கவினிடம் சங்கர நாராயணன் பற்றி கூறினான். அவன் கோபமுடன், “இத்தனை வருடங்களாக ஏன்டா மறைச்ச?”

யாருக்கும் தெரியாது என்பதால் தான் இவனை இப்ப பிடிக்கும் வாய்ப்பு இருக்கு?

ஏதும் ஆதாரம் இருக்காடா? கவின் கேட்க, அங்க வந்து பார்த்துக்கோடா.. அவர்கள் கோர்ட்டை அடைந்தனர். சற்று நேரத்தில் ஆரியன் அதியாவும் வந்தனர். ஆரியன் நண்பர்கள் முன்பே வந்து சந்தேகிக்கும் படி ஆட்கள் யாரும் இருக்கிறார்களா? அவ்விடத்தை நன்றாக பரிசோதித்து விட்டு முன் பக்கம் வந்தனர்.

ஆரியன், அதியா, ஆத்விக், கவின் நின்று கொண்டிருந்தனர். கவினோ ஏதும் நடவாதது போல இருக்க, மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆரியன் அவ்வப்போது அதியாவை பார்க்க அவள் கண்கள் பயத்தில் சுற்றிலும் அலைபாய்ந்தது.

“அதி” ஆரு மென்மையாக அழைக்க, அதற்கே திடுக்கிட்டு அவனை பார்த்தாள் அதியா.

“என்ன அதி? பயமா இருக்கா?” ஆத்விக் கேட்க, இல்ல..இல்லையே என்று ஆரியனின் கையை பிடித்துக் கொண்டாள். ஆனால் அவள் பதட்டமாக இருப்பது மூவருக்கும் நன்றாக தெரிந்தது.

“உனக்கு கால் ஏதும் வந்ததா?” ஆரியன் கேட்க, அவள் பதறி அவனை பார்த்தாள்.

“அதி சொல்லு?” ஆத்விக் பதட்டமாக, “அண்ணா அமைதியா இரு. எனக்கே பயமா இருக்கு”.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு வெல்லக்கட்டி என்று அழைக்க வந்து, அதி என்றான் கவின்.

“வேண்டாம்” ஆரியன் கண்ணை காட்ட, “அண்ணா” ஆனால் கவின் சொல்லும் போது ஆள்காட்டி விரலை நீட்டி அதியா ஒரு பக்கம் காட்டினாள்.

ம்ம்..அதி, ஐஸ்கிரீம் சாப்பிடலாமா? ஆரியன் கேட்க, ஹா..என புரியாத மழலை போல் விழித்தாள்.

“ஐஸ்கிரீம் வேணுமா? வேண்டாமா?” பல்லை கடித்துக் கொண்டு அதியாவிடம் ஆரியன் கேட்க, வேணும் தலையை ஆட்டினாள்.

“மாமா” ஆத்விக் அழைக்க, “நான் பார்த்துக்கிறேன். எல்லா ஆதாரமும் சரியாக பத்திரமா வச்சுக்கோ” என்று அதியாவை ஆரியன் வெளியே அழைத்து சென்றான். யாரோ பின் தொடர்வது ஆரியனுக்கு நன்றாக புரிந்தது.

“ஆரு” அதியா அழைக்க, “அதி என்னோட செல்லம்ல்ல. அமைதியா மட்டும் வா” அவள் தோளில் கை போட்டு புது தம்பதிக்கான ரகசியம் பேசுவது போல புன்னகைத்து ஆரியன் பேச, அதியா குழப்பம், பயம், அவன் முதலாவதாக ஐஸ்கிரீம் வாங்கித் தாரான் என்று மனமகிழ்ச்சி கலந்தடித்து அவள் நவரச பாவனைகள் அவள் முகத்தில்.

அதி, உனக்கு எந்த ஃப்ளேவர் வேணும்? ஆரியன் கேட்க, எனக்கு ஸ்ட்ராபெரி என்று அவனிடம் சொல்ல, “இங்க உட்காரு” ஆரியன் சொல்லி அவன் வாங்க செல்ல, ஆரு அவன் கையை பிடித்தாள் அதியா. அவள் கையை எடுத்து விட்டு, “ஜஸ்ட் டூ மினிட்ஸ்” சொல்லி அவன் சென்றான்.

உடனே ஒருவன் அதியா முன் ஒரு காகிதத்தை வைத்து விட்டு ஓடினான். அவள் கை நடுங்க அதை பிரித்து பார்த்தாள்.

நீ உண்மையை சொன்னால் உன் சொந்தங்கள் அனைவரும் போய் சேர்ந்திருவாங்க. மாத்தி சொல்லு. நீ வருணை காப்பாற்றியே ஆக வேண்டும். இல்லை உன் அண்ணன், மாமா, புருசன் எல்லாரையும் காலி செய்திருவோம் மிரட்டல் காகிதமாக இருந்தது. இந்த காகிதம் உன்னோட புருசன் கண்ணில் சிக்க கூடாது என்று பின் குறிப்பு போடப்பட்டுள்ளது..

அதியாவிற்கு வியர்த்து பயத்துடன், கையிலிருந்த காகிதத்தை கசக்கி தூக்கி எறிந்து விட்டாள். ஆரியன் ஐஸ்கிரீமுடன் வந்து அமர்ந்தான்.

இந்தா சாப்பிடு..

“ஆரு, நேரமாகலையா?” அதியா கேட்க, கேஷ் அது போய்கிட்டே இருக்கட்டும். நம்மை இப்பொழுது அழைக்க மாட்டாங்கல்ல. நீ நிதானமாக சாப்பிடு என்று அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அதில் கோர்ட்டில் நடக்கும் அனைத்தும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

ஆரு, எனக்கு இப்ப வேண்டாமே!

“ஏன் அதி? இப்படி வியர்க்குது? காய்ச்சல் போல தெரியல” என்று ஆரியன் அவன் கைக்குட்டையை எடுத்து அதியாவிற்கு துடைத்து விட, அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டு, “என்ன ஆரியன் சார்? ஃபுல் டைம் ஹஸ்பண்ட் ஆகிட்டீங்க?” கேலி செய்ய, அவன் புன்னகையுடன்.. என்னோட அதிக்கு வியர்க்குது நான் துடைக்கிறேன். சீக்கிரம் சாப்பிட்டு கிளம்புங்க. அடுத்து உங்க கேஷ் தான் போலவே!

ஆமா சார், ஆதாரத்தையே இங்க வச்சிட்டு இருக்கீங்க. நீங்க கிளம்புங்க அவர் சொல்ல, என்னோட அதி சாப்பிட்ட பின் தான் மத்ததெல்லாம் என்றான். அதியா கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

“அதி, எதுக்கு அழுற? ஆரு..நாம அப்புறம் சாப்பிடலாமா?” அதியா அழ, சுற்றி இருந்தவர்கள் அவளை வேடிக்கை பார்த்தனர்.

சாப்பிடும்மா. மெதுவா போகலாம்..

இல்ல ஆரு, நாம போயிடலாம் ஆரியனை அணைத்து அழுதாள்.

“அதிம்மா, இதுக்கு எதுக்கு அழுறீங்க? போகலாம்..வந்து சாப்பிடலாம்” என்று அவளை தூக்கிக் கொண்டு அவன் வாங்கியதை கொடுத்து, இதை தனியே வச்சிருங்க. நாங்க வந்து சாப்பிட்டுக்கிறோம். “என்ன அதி ஓ.கே வா?” ஆரியன் அதியாவை தாங்கி பேசுவதும், அவளை கவனித்துக் கொள்வதையும் பார்த்த மற்ற பெண்களுக்கு புகைச்சல் உண்டானது.

அதியாவை தூக்கிக் கொண்டே வெளியே வந்தான்.

“நான் வந்திருவேன் ஆரு. இறக்கி விடுங்க” அதியா சொல்ல, அந்த காகிதத்தில் என்ன இருந்தது? நேரடியாக ஆரியன் கேட்க, அவனை திடுக்கிட்டு பார்த்தாள் அதியா.

“அதி” ஆரியன் அழைக்க, ஆரு..யாரோ மிரட்டுறாங்க.

இதெல்லாம் நடக்க தான் செய்யும். அதுக்காக பயப்படலாமா? நீ உண்மையை சொல்லு. யாருக்கும் ஏதும் ஆகாது. ஆரு அத்தை வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்கலான்னு பார்த்து சொல்லுங்க என்று அவனை கொட்ட கொட்ட விழித்து பேசினாள்.

ம்ம்..அங்க ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போட்ருக்கேன்.  இப்பவே கேட்கிறேன் என்று அழைத்து பேசி, அனைவரும் நல்லா இருக்காங்க அதி. நான் உன் பக்கத்திலே தான் இருப்பேன். நீ யாரை பார்த்தும் பயப்படக் கூடாது. நீ இப்ப அதிகுணன் பொண்ணு இல்லை. ஆரியனின் மனைவி. கோர்ட்டில் இருக்கிறவங்களுக்கும் என்னை நன்றாக தெரியும்.

அந்த வருணும் இருப்பான். நீ இப்ப ஆரியனின் மனைவியாக பேசணும். இருவரும் பேசிக் கொண்டே கோர்ட்டிற்குள் நுழைந்தனர். ஆரியன் அப்பொழுது கூட அதியாவை இறக்கி விடவில்லை.

அதியாவை அழைக்கும் நேரம் இருவரும் வர, அனைவரும் இவர்களை தான் பார்த்தனர்.

சிலர் மகிழ்வுடனும், சிலர் குரோதத்துடனும் பார்க்க, வருணோ கொலைவெறியில் ஆரியனை பார்த்தான். சங்கர நாராயணன் இவர்களை அமைதியாக பார்த்தார்.

“மேடம், இவங்க தான் அதியா” ஒருவர் சொல்ல, நீதிபதி இருவரையும் பார்த்து கண்ணை காட்டினார்.

அதியா புரியாமல் விழிக்க, ஆரியன் புன்னகையுடன் அவளை கூண்டில் நிற்க வைத்தான். அமர்ந்திருந்த ஆத்விக் ஆரியனிடம் ஓடி வந்தான்.

இறங்கிய அதியா, அங்கே இருந்தவர்களை பார்த்து பயத்துடன் “ஆரு விட்டு போகாதீங்க” அவன் கையை பற்றிக் கொண்டாள்.

ஏற்கனவே வருண் கம்பெனியின் இல்லீகல் பைல்கள், ஆதாரங்கள் அனைத்தையும் பார்த்து விட்டார் நீதிபதி.

புருவம் சுருக்கிய நீதிபதி, ஏம்மா கொஞ்ச நேரம் நில்லு. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லீட்டு உன் கணவனிடம் செல்லலாம் என்றார்.

“ஆரு, நீங்களும் வாங்க. அப்ப தான் பேசுவேன் அதியா” பிடிவாதமாக ஆரியன் கையை பிடிக்க, “அதி இது விளையாடும் இடமில்லை” ஆத்விக் சினமுடன் சொல்ல, அதியா அழுதாள். கோர்ட்டே அவளை ஸ்தம்பித்து பார்த்தனர்.

அதியா கையை எடுத்துக் கொண்டே, அதி இங்க பாரு. இங்க பக்கத்துல்ல தான் நிற்பேன். நீ யாருக்கும் பயப்பட வேண்டாம். அழாத என்று ஆரியன் அவள் கண்ணை துடைத்து விட, ஆரு பக்கத்துல்ல வேண்டாம். எனக்கு நேரா நில்லுங்க..

எதிர்தரப்பு அட்வகேட், என்ன விளையாட்டு மிஸஸ் அதியா ஆரியன்? அவர் கேட்க, என்னோட மனைவி தைரியமா பேசணும்ன்னு ஆரியன் சொன்னது நினைவில் வந்தது.

ஆரியன் கையை அதியா அவளாகவே விட்டு, “சாரி சார்” என்று அவள் அவர்கள் கேட்பதற்கு பயமில்லாதது போல் விளக்கமளித்தாலும் உள்ளூற பயத்துடன் அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டே பதிலளித்தாள்.

சத்யன் கேட்ட மறுகேள்விக்கு பதிலளிக்காமல் மாஸ்க் அமர்ந்திருந்த ஒருவனை பார்த்து பயந்து அவளே ஆரியனிடம் வந்து, ஆரு..ஆரு..அவன் சொல்லும் போது துப்பாக்கி தோட்டாக்கள் அடுத்தடுத்து அதியாவை நோக்கி வந்தது.

“அதி” கத்திக் கொண்டே ஆரியன் அவளை தள்ளி அவன் நிற்க, லோகேஷ் அவனை தள்ள, அவனை தள்ளிய ஆத்விக்கை நெருங்கியது தோட்டா. தோட்டா ஆத்விக்கை துளைக்கும் முன் கவின் அவன் மீது பாய்ந்து தள்ளி விட்டான். தோட்டா நாற்காலியை துளைத்தது.

அதியா தாமதிக்காமல், அந்த மாஸ்க் போட்டவனை பிடிங்க. அவன் தான் சூட் செய்தான் கத்தினாள்.

நிரா நில்லு இல்லை நீயும் வருண் மாமா போல சிறையில் தான் இருக்கணும் அதியா சினமுடன் கத்தினாள்.

நீதிபதி அதிர்ந்து பார்க்க, “ஹேய்..அவன பிடிங்கடா” ஆரியன் தன் நண்பர்களுக்கு உத்தரவிட, விஷ்ணுவும் பிரகாஷூம் நிரஞ்சன் தலையில் துப்பாக்கியை வைத்தனர்.

“அண்ணா, அவனை சூட் பண்ணீடாதீங்க” அதியா அழுதாள்.

“அதி” ஆரியன் சீற்றமுடன் அழைக்க, ஆரு சந்தோஷினி அவனை லவ் பண்றா. அவ வாழ்க்கையே அழிஞ்சிரும் அதியா அழுது கொண்டே செல்ல, “அவன் தலையில் இருக்கும் துப்பாக்கியை எடுக்காதீங்கடா” ஆரியன் சத்தமிட்டு அவனிடம் சென்றான்.

“வருண் தான அதியாவை கொல்ல சொல்லி உனக்கு உத்தரவிட்டது?”

“இல்ல” வருண் கத்தினான்.

நிரஞ்சன் வருணை பார்த்த பார்வையில், இவர்களுக்குள் பிரச்சனை இருப்பதாக தோன்ற, “யாருன்னு சொல்றீயா இல்லை உன்னோட மூளையை சிதறச் செய்யவா?”

“ஆரியன்” நீதிபதி சத்தமிட்டார்.

“சாரி மேடம்”. இவன் இப்பவே சொல்லணும் என அவனது காலில் சுட்டான் ஆரியன். இரத்தம் வழிய கீழே விழுந்தான் நிரஞ்சன். அவன் மீது நேராக கத்தியொன்று பாய, அதை பார்த்த ஆத்விக், மாமா நிரஞ்சனை கொல்லப் பார்க்கிறாங்க என்று சொல்லவும், அவனையும் இழுத்துக் கொண்டு நகர்ந்து கீழே விழுந்தான் ஆரியன். கத்தி கதவில் குத்தி நின்றது.

அதியா மயங்கினாள். அதி கவின் அவளிடம் ஓடினான். அதியாவை பார்த்தாலும் இப்பொழுது உண்மை வாங்கணுமே என்று நிரஞ்சனுடன் எழுந்தான். அவன் தயங்காது வருண் செய்ததை சொல்லி விட்டு, இப்பொழுது அதியாவை கொல்ல பார்த்தது சங்கரநாராயணன் சார் தான் என்றான்.

போலீஸார் அனைவரும் வெளியே காவலுக்கு நிற்க, வருணுக்கான தண்டனையை கொடுத்தார்கள். பின் நிரஞ்சனை விசாரித்து விட்டு, சங்கர நாராயணனை அழைக்க, அவரோ..எங்க மருமக உழைத்த உழைப்பை இந்த சின்ன பொண்ணு அதியா பிடுங்க பார்க்குது. அதியாவை குற்றம் சாட்டினார்.

ஆத்விக் சினமுடன் விக்ரமை பார்க்க, அவர் நீதிபதியிடம் அவர் அதியா அப்பாவை கொலை செய்த வீடியோவை காட்டி விட்டு, அதியா பெயரில் உள்ள சொத்துக்களையும், கம்பெனி பொறுப்பையும் நடத்தப் போகதாக அறிவித்தான் விக்ரம்.

“இந்த பொண்ணா?” நீதிபதி கேட்க, “நான் செய்யக் கூடாதா மேம்?” அதியா முதல் முறையாக தைரியமாக கேட்டு விட்டு, அவள் அக்கா அவங்க சொத்தை காப்பாற்ற உயிரை விட்டதையும் சொல்ல, அவர் வருணை புழுவை போல எண்ணினார்.

“சரிம்மா, நீ குழந்தை போல நடந்துக்கிற? கவர்மெண்ட் பார்த்துக்கும்” அவர் சொல்ல, நோ..மேம். என்னால முடியும். எனக்கு உறுதுணையாக ஆருவும், என் குடும்பமும் இருக்காங்க. என்னால எங்க கம்பெனியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும். என்னோட கடைசி வருட இன்டர்ன்னா எங்க கம்பெனில்ல தான் செய்தேன். நேர்மையாக செய்தேன் அவள் பேச, அவர் புன்னகையுடன் “அவள் தான் பொறுப்பு” சொல்லி விட்டு, சங்கர நாராயணன் , நிரஞ்சனையும் சிறையில் அடைத்தார்.

அனைத்தும் முடிய வெகு நேரமானதில் இருந்த களைப்பில் ஓரிடத்தில் அதியா தனியே அமர்ந்திருக்க, அவளருகே லோகேஷ் அமர்ந்திருந்தான். மற்றவர்கள் விக்ரமை பார்த்து பேசி விட்டு வந்தனர்.

லோகேஷ் மடியில் குழந்தை போல் தலை வைத்து உறங்கிய அதியாவை பார்த்து ஆரியன் புன்னகையுடன் அவளை தூக்கிக் கொண்டு கவின் வீட்டிற்கு விரைந்தான். ஆத்விக்கும் வீட்டிற்கு செல்ல, கவின் டியூட்டிக்கு கிளம்பினான்.

ஆரியனுக்கு முன்னே ஆத்விக் அதிவதினி வீட்டிற்கு வந்தான். வந்தவுடன் அவன் சிறுவயதில் தங்கிய அறைக்குள் நேராக சென்று கதவை அடைத்து, துவாலையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் செல்லும் நேரம் அறையில் சத்தம் கேட்டு நின்று புருவத்தை சுருக்கி அறையை நோட்டமிட்டான்.

அவனது அலமாரிக்கு பின் ஏதோ அசைவு தெரிய அவன் கால்கள் அங்கே சென்றது. சக்தி வெளியே வந்தாள்.

“ஏய், இங்க என்ன பண்ற?” சினமுடன் கேட்டான்.

அண்ணா, பிரச்சனை என்னாச்சு? முடிந்ததா?

எந்த பிரச்சனையும் இல்லை. நீ சொல்லு?

நாங்க “ஹைடு அன்ட் சிக்” விளையாடிட்டு இருக்கோம் என்று அவள் பார்வை கண்ணாடிக்கு பின்னே நோட்டமிட்டது.

“அதுக்கு என்னோட அறையில வந்து ஒளிஞ்சிப்பியா?”

உங்க அறை திறந்து தான் இருந்தது. ஒளிய தான வந்தோம்..

வந்தோமா? அவன் பார்வை அவ்வறையை ஆராய, “வினு நான் போறேன்” என்று அவள் கதவை திறந்து ஓடி விட்டாள்.

கண்ணாடியின் பின்னிருந்து துருவினி வெளியே வந்து, ஏய் நில்லு.. சக்தி பின் அவள் ஓட, அவள் கையை பிடித்து நிறுத்தினான் ஆத்விக்.

கையை விடுங்க. எனக்கு உங்க அறைன்னு தெரியாது என்று சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படத்தை பார்த்தாள். அதில் கவினும் ஆத்விக்கும் சிறுவயதில் எடுத்த புகைப்படம் இருந்தது.

அவன் கையை தட்டி விட்டு, அதனருகே சென்று, “இதுல இது நீங்களா?” அவள் கேட்க, ஆத்விக்கிடம் சத்தமேயில்லை. அவள் அவனை பார்க்க, அவன் கதவை தாழிட்டு அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“கதவை திறங்க” துருவினி ஆத்விக்கிடம் வந்தாள்.

ஆத்விக் அவளை நோக்கி வேகமாக வந்தான். பயந்து துருவினி நிற்க, அவன் அவளை நெருங்கி அணைத்தான். அவள் அவனை தள்ள, “நான் பேசணும் வினு” என்றான் அணைத்தவாறே. அவள் சமைந்த சிலையாய் நின்றாள்.

ஆத்விக் அவளை விட்டு நகர்ந்து அவளை பார்த்தான். அவள் உணர்வை மறைத்து நின்றாள். அவளை இழுத்து சுவற்றில் ஒட்டி நிற்க வைத்து அவன் கைகளை அரணாக்கி, “அன்று நான் பேச எண்ணிய போது ஷனா அழுதிட்டா. இன்று நான் பேசியே ஆகணும்” என்று ஆத்விக் துருவினி கண்களை ஆழ்ந்து பார்த்தான். அவள் எண்ணத்தை யூகிக்க..அவள் முகத்தை திருப்ப, எதுக்கு பயப்படுற வினு?

“நான் பயப்படலை” என்று அவளது இதழ்கள் மட்டும் சொல்ல, அவளின் கீழிதழ்களை பிடித்து அவன் நெருங்க, துருவினி கண்ணை மூடினாள்.

அவள் மென்மையாக இதழ்களை வருடி அவளை கண் திறக்க வைத்தான்.

“பாரு வினு. உன்னாலும் ஃபேஸ் பண்ண முடியலைல்ல?” ஆத்விக் குரல் தாழ்ந்து மென்மையுடன் வந்தது.

நா..நான் ந..நல்லா தான் இருக்கேன் என்று அவளுக்கு நெஞ்சு ஏறி இறங்கியது.

நல்லா இருக்கியா? ம்ம்..ரொம்ப அழகா தான் இருக்க..

நான் கிளம்பணும் வழியை விடுங்களேன் ப்ளீஸ்..

முடியாது வினு. உன்னை என்னால் எப்போதும் விட முடியாது. எனக்கு உன்னை அவ்வளவு பிடிக்கும் என்று அவன் இரு கைகளையும் எடுத்து அவள் கன்னத்தில் வைத்து அவளை நிமிர்த்தினான். ஆத்விக்கின் செயலில் துருவினிக்கு கண்ணீர் வழிந்தது.

“ஏன் வினு? என்னை பிடிக்கலையா?” ஆத்விக் கேட்க, கண்களை மூடி திறந்தாள் துருவினி.

“ஐ லவ் யூ வினு. வில் யூ மேரி மீ?” காதலையும் கூறி, உடனே திருமணம் செய்ய கேட்டான்.

அத்து..நா.நான்..என கண்கலங்க துருவினி அவனை பார்க்க, “வினு” அழைத்துக் கொண்டே அவள் இதழ்களில் மென்மையான முத்தம் கொடுக்க, அவள் கைகளை முதலாவதாக அவன் தோளில் வைத்தாள். அவன் முத்த யுத்தம் ஆரம்பிக்க, அவள் கையை அவனது பின் தலைக்குள் நுழைத்தாள். இருவரும் உலகம் மறந்த தங்களது காதலில் மூழ்கி இருந்தனர். அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்டு துருவினி அவனை தள்ளி நகர்ந்தாள்.

“வினு” ஆத்விக் அழைக்க, அவளுக்கோ அழுகை வந்தது.

பிடிக்கலையா வினு. “சாரி” ஆத்விக் பதட்டமுடன் அவளை பார்த்தான்.

சாரி..சாரி..அவள் சொல்ல, “ஏன் வினு என்னோட முத்தத்தை ஏற்றுக் கொண்டதற்கு சாரியா? இல்லை தவறான செயலாக எண்ணியதால் சாரியா?” கேட்டான்.

“அத்து’ ஆரியன் குரல் கேட்க, துருவினி பதட்டமுடன் கதவருகே செல்ல, “மாமா நான் பேசிட்டு இருக்கேன். இரு நிமிடம் போதும். ப்ளீஸ்” ஆத்விக் குரல் உடைந்து வந்தது. வெளியே அனைவரும் பதறினார்கள்.

அவன் குரலில் பாதிக்கப்பட்ட துருவினி..அத்து..நான்..

நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லீட்டு போ

“எனக்கு டைம் வேணும் அத்து ப்ளீஸ். அப்புறம் நீங்க பக்கம் வந்தால் பிடிக்காதுன்னு இல்லை. உங்க முத்தம் என்னை ரொம்ப தொந்தரவு பண்ணீருச்சு” வருத்தமாக அவள் கூறினாள்.

ஆத்விக் கண்ணீரை பார்த்து, “அத்து..ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” அவன் கண்ணை துடைத்து விட்டாள்.

“எனக்கு சாதகமா பதில் சொல்லுவன்னு நம்புறேன் வினு. எல்லார் மாதிரியும் என்னை விட்டு போயிடாத” என்று மண்டியிட்டான் அழுதவாறு.

“அண்ணா..அண்ணா..வெளிய வா” அதியா அழைக்க, பசங்களும் ஆத்விக்கை அழைத்தனர்.

துருவினி கதவு பக்கம் பார்த்து விட்டு, ஆத்விக் முன் அவளும் மண்டியிட்டு “என்னோட முதல் காதலை மறக்க முடியாமல் தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். எனக்கு உங்க வலி புரியுது அத்து” அவனை அணைத்து சொல்ல, ஆத்விக் அதிர்ந்து அவளை நகர்த்தினான்.

“நீ காதலிக்கிறியா வினு?”

ம்ம்..

யாரு? என்னாச்சு?

ஒரு தலைக்காதல் தான். அவனும் என்னோட ப்ரெண்டும் காதலிக்கிறாங்க.

“நீ சொல்லவில்லையா?”

“யாருக்கும் தெரியாது. என்னோட காதல் ரகசியமானது” கண்ணீருடன் துருவினி சொல்ல, என்னை அவாய்டு பண்ண நீ சொல்லலைல்ல?

இல்ல அத்து, அவன் நிகிதாவை காதலிக்கிறான்.

“உன்னோட வொர்க் பண்ற பொண்ணா?”

ம்ம்..அவளும் அவனும் காலேஜ்ல்ல இருந்து காதலிக்கிறாங்க..நானும்..என்று அவனை பார்த்தாள்.

உன் வீட்டுக்கு தெரியுமா?

நோ..

மாமாவுக்குமா?

யாருக்கும் தெரியாது. அவனுக்கும் தெரியாது..

“யாரு அவன்?”

வேண்டாம் அத்து, இப்ப தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. அவனை பற்றி வேண்டாமே!

ம்ம்..ஆத்விக் அவளை பார்த்தான்.

“நான் போகவா? அழ மாட்டீங்கல்ல?”

நோ..தலையசைத்தான்.

துருவினி கண்ணை துடைத்து எழுந்தாள்.

“எத்தனை வருசமானாலும் நான் காத்திருப்பேன். மறந்துறாத வினு” அமைதியாக சொல்லி விட்டு அவனே கதவை திறந்தான்.

எதுக்குடா அழுத? என்னாச்சு? எல்லாரையும் முந்திக் கொண்டு அதியா ஆத்விக்கிடம் வந்து துருவினியை பார்த்து, வினு நீயும் அழுதியா?

“அதி நகரு” ஆரியன் இருவர் முன்னும் வந்தான்.

துருவினி ஆரியனிடம் வந்து, அண்ணா அத்து மாமா என்னை காதலிப்பதாகவும், கல்யாணம் பண்ணிக்க கேட்டார். ஆனால் எனக்கு நேரம் வேண்டும். எங்கள் இருவரிடமும் இதை பற்றி இனி யாரும் பேச வேண்டாம் என்று யாரையும் கவனிக்காமல் நகர்ந்தாள்.

“என்னது? கல்யாணமா?”

“காதலை சொன்னவுடன் அவள் பதில் சொல்லும் முன் கல்யாணத்தை பற்றி எதுக்கு கேட்ட?” ஆத்விக்கிற்கு சக்தியிடம் மரியாதை குறைந்தது.

எல்லாரும் அவளை பார்க்க, “சாப்பிட்டு நீ நல்லா தூங்கு. எனக்கு பசிக்கலை”  கதவை அடைக்க வந்தவனை நிறுத்திய அதிவதினி, “நீங்க என்னமும் செய்யுங்க. ஆனால் சாப்பிட கரெக்டா வரணும்” அவனை எச்சரித்து விட்டு துருவினியை பார்க்க சென்று அவளிடமும் அதையே கூறி வந்தார்.