வல்லவன் 16
அண்ணா, உங்களது முதல் மனைவி இந்த சைந்தவி உங்களை புகழிற்காகவும் பணத்திற்காகவும் உங்கள் அம்மாவை ஏமாற்றி திருமணம் செய்திருக்கா. இவளுடன் சிறுவயதிலிருந்து ஆசிரமத்தில் வளர்ந்த அவினாஸை காதலித்தவள். அவனிடம் ஏதுமில்லை என்றவுடன் உங்கள் அம்மாவை வைத்து உங்களது வாழ்க்கைக்குள் நுழைந்திருக்கிறாள்.
நீங்கள் உங்கள் மனைவி மீது ஈர்ப்பு இல்லை என்பதால் தான் விலகி இருந்திருக்கீங்க. ஆனால் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் உங்கள் அம்மாவை வைத்து அடிக்கடி உங்களை வர வச்சிருக்காங்க. ஆனாலும் நீங்கள் உங்கள் மனைவியை கண்டுகொள்ளாமல் இருக்க, இவங்க உங்க அம்மாவை கொலை செய்ய நினைச்சா.
இவங்களுக்கு உங்களிடம் தேவையான சுகம் கிடைக்கவில்லை எனவும் வெளியே கிடைக்கவும் அவங்க வெளியே சென்று வருவாங்க. அதே போல் இவள் பல முறை வெளியே செல்வதை உங்கள் அம்மா பார்த்திருக்காங்க. ஆனால் எங்கு போறாங்கன்னு தெரியலைன்னு ஒருநாள் பின் தொடர்ந்து இவர் மற்ற ஆண்களுடன் தகாத உறவில் இருப்பதை பார்த்து உங்கள் அம்மா இவருக்காக காத்திருந்தார்.
இருவருக்கும் சண்டை முற்றி இவங்க தான் அடுப்பை ஆன் செய்து விட்ருக்காங்க. ஆனால் இதை கவனிக்காமல் மனஉளைச்சலில் இருந்த உங்க அம்மா வீட்ல இருந்திருக்காங்க.
உங்க அப்பாவை அவர் பேரனுடன் வெளியே செல்லும் நேரம் பார்த்து எல்லாவற்றையும் செய்து முடித்து ஏதோ சொல்லி உதவிக்கு என்று அங்கே ஒரு பொண்ணை வர வைத்து இருக்கா. அந்த பொண்ணு ஸ்மல் வைத்து அடுப்பை அணைக்க ஓடி வந்திருக்கா. அந்த நேரம் வெடித்து சிதறியது வீடு.
கச்சிதமாக திட்டம் போட்டு உங்களையும் அந்த பொண்ணையும் கொன்று விட்டு இவள் தப்பி இருக்கா. குழந்தையை பற்றி கூட சிந்திக்காமல் உங்களை தனியே விட்டு போயிருக்கா..
உங்களுக்கான கெட்ட பெயர் வரக் காரணமும் இவள் தான். இவள் தான் அக்கம் பக்கத்து வீட்டில் நீங்கள் சென்னையில ஒரு வீடு வச்சிருக்கீங்கன்னு பேசி உங்க வாழ்க்கையை அழிச்சிருக்கா. இது தெரியாமல் உங்கள் வேலையை விட்டு, சொந்த ஊரை விட்டு வந்துருக்கீங்க..கவின் சொல்லி முடிக்க, துருவினி சீற்றமுடன் அவளிடம் வர, அவளை பிடித்த ஆத்விக் “வினு அமைதியா இரு” கத்தினான்.
அத்து..பாருங்க. எங்க எல்லாரோட வாழ்க்கையையும் பாழாக்கிட்டு எப்படி நடிச்சிருக்கா. நான் இவளை எப்படி நினைத்திருந்தேன். என் அம்மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்திருந்தேன்..இப்ப தர்சுவை கேட்கிறா என கோபமாக தர்சுவை உன்னிடம் விட மாட்டோம் என கத்தினாள் துருவினி.
“நான் உள்ளே சென்றாலும் என்னால வெளிய வர முடியும். இத்தனை நாள் சும்மா இருந்திருப்பேன்னு நினைக்கிறியா?” சைந்தவி கேட்க,
“ஆமா, மறைந்திருந்து என்ன கேவலமான வேலையெல்லாம் பார்த்தீயோ?” துருவினி கேட்க, அவளை அலட்சியப்படுத்தி விட்டு, மாமனாரே நான் போயிட்டு வருவேன். என்னோட மகனையும் வீட்டையும் ஒப்படைக்க தயாராக இருங்க அவள் தெனாவட்டாக கை விலங்கை ஏற்றுக் கொண்டாள்.
“ச்சீ பொண்ணா இவ?” கூக்குரல்கள் கேட்க, “உன்னோட குழந்தை எப்போதும் உனக்கு கிடையாது. அவன் இப்ப உயிரோட இல்லை” ஆரியன் சொல்ல, “ஏமாத்த பாக்குறியா?” சைந்தவி கத்தினாள்.
“இல்லை. உனக்கும் உன் காதலனுக்குமான குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. தர்சு உன்னோட குழந்தை இல்லை” ஆரியன் சொல்ல, “அண்ணா” துருவினி கோபமாக அழைத்தாள்.
ஆமா, எங்களுக்கு திருமணமானதிலிருந்து என் விரல் கூட அவள் மீது பட்டதில்லை. அவள் கருவுற்று இருந்தது அவள் காதலனால். அது அன்றே எனக்கு தெரியும் இருந்தும் அவனை என் குழந்தையாக தான் எண்ணினேன்.
அன்றைய நாள் குழந்தை இறக்கவும் மனதில் மொத்த வலிகளும் ஏறியது போல கதறி அழும் போது தான் என்று ஆத்விக், அதியாவை பார்த்த ஆரியன், ஒரு பொண்ணு அவள் ட்வின்ஸ் குழந்தையை காப்பாற்ற பையனை மட்டும் என்னிடம் கொடுத்தாள்.
நான் பொண்ணையும் கேட்டதற்கு இவள் கஷ்டப்பட்டாலும் ஒருவராவது உயிரோட வாழணும். என்னால இரு பிள்ளைகளையும் உங்களிடம் கொடுக்க முடியாது. அது அவனுக்கு தெரிந்து உங்களை கண்டுபிடித்து எல்லாரையும் கொன்றுவான். என் பையனை நல்லவனாக மட்டும் வளருங்கள். இவன் அவன் கண்ணில் பட்டால் கொன்றுவான்..
“எங்க வீட்டு வாரிசு” என்று முத்தமிட்டு கொடுத்து விட்டு போனாங்க என்று ஆதிரா புகைப்படத்தை பார்த்தான்.
“மாமா” ஆத்விக் அதிர்ந்து, “தர்சு” என தொண்டை அடைக்க கேட்க, ஆமாம் தர்சுவும் ஷனாவும் தான் ட்வின்ஸ். இருவரும் ஆதிராவின் பிள்ளைகள். இன்று தான் உங்கள் அக்கா ஆதிரா புகைப்படத்தை பார்த்தேன் என்றான் ஆரியன்.
அதியாவோ, “ஆரு..நிஜமாக தான் சொல்றீங்களா?” என புன்னகையுடன் தர்சுவை அணைத்துக் கொண்டாள். அனைவரும் ஆனந்தமுடன் பார்க்க, “தேங்க்ஸ் மாமா” ஆத்விக் அவனை அணைத்து விட்டு சந்தோசமாக தர்சனை தூக்கினான்.
அனைவரும் நம்ப முடியாமல் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
உத்தமசீலனோ மனம் உடைந்து அமர்ந்தார் கண்ணீருடன்.
“அப்பா” துருவினி சத்தம் கேட்டு எல்லாரும் அவரை பார்த்தனர்.
“உன்னோட அம்மா விருப்பம்ன்னு என்னோட பிள்ளை வாழ்க்கையை நானே அழிச்சிட்டேனே! வந்த மகராசி குடும்பத்தையே அசைச்சு பார்த்து ஒண்ணுமில்லாமல் போட்டு போயிட்டாளே!” என்று கதறி அழுதார் உத்தமசீலன்.
அப்பா ஆரியன் அவரிடம் வந்து அணைத்துக் கொள்ள, கவின் அவரிடம் வந்து, பெரியப்பா இப்ப அழுது ஒன்றும் மாறாது. இப்ப கிடைச்ச குடும்பத்தோட உங்க மகன் சந்தோசமா இருப்பான் என அவன் சொல்ல, “உன்னோட வாக்கு பலிக்கட்டும்ய்யா” அவர் கவினை அணைத்தார்.
“அப்பா எழுந்திருங்க” ஆரியன் அழைக்க, என்னை மன்னிச்சிருப்பா. விலகி இருந்தாலும் சந்தோசமா இருந்திருப்பீங்கன்னு எண்ணினேன். ஆனால் இந்த பொண்ணுகிட்ட தப்பு இருக்கும்ன்னு எண்ணியது உண்மைதான். ஆனால் நம்ம வாழ்க்கையை அழிக்க வந்த சீக்காலின்னு தெரியாம போச்சே. உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் மனபாரம் தாங்கமால் அழுதார்.
அங்கிள், அவள விடுங்க. இனி மாமா நம்முடன் சந்தோசமா இருப்பார். நம்முடைய புது விடியலை நீங்க பார்க்க வேண்டாமா? ஆத்விக் அவர் கையை பிடித்து பேச, அவர் கண்ணீருடன் எழுந்து தன் மகளை பார்த்தாள். துருவினி மனதில் குமுறிக் கொண்டிருந்தாலும் வெளியில் திடமாகவே பேசினாள்.
அப்பா, முடிஞ்சதை விடுங்க. நம்ம அதி, ஷனா, தர்சு அவள் கண்கள் கலங்க பேச முடியாமல் தர்சனை பார்த்தாள். கண்களில் கண்ணீர் வழிய, ஆகர்ஷனாவும் தர்சனும் துருவினியிடம் தாவி, “அழாதீங்க அத்தை. நாம கேக் கட் பண்ணனும்ல்ல?” கேட்டான் தர்சன்.
கண்ணீரை துடைத்து, “பண்ணலாமே!” என்று உதட்டளவில் சிரிப்பை கொண்டு வந்து, வாங்க வாங்க என்று உத்தமசீலனையும் ஆரியனையும் பார்த்துக் கொண்டே மேடை ஏறினாள்.
அதியாவோ, “ஆரியன் என்ன சொல்வானோ?” அவனை பார்க்க, அவன் மாலையை போட்டுக் கொண்டு அவளருகே வந்து அதியா கையை பிடித்து அமர்ந்தான்.
அங்கிள், வாங்க என்று ஆத்விக்கும், உத்தமசீலனின் சொந்தங்களும் அவருக்கு உறுதுணையாக நிற்க, ஆரியன் புன்னகையுடன் முதல் மனைவி சைந்தவி முன்னே தாலியை கட்ட வரும் போது தயங்கி அதியாவை பார்த்தான்.
“அண்ணா, இதுல்ல சைன் பண்ணீட்டு தாலி கட்டுங்க” என்று கவின் ஒரு பைல்லை நீட்டினான்.
“என்ன மாமா இது?” அதியா கேட்க, மூத்த தாரம் உயிரோட இருக்கும் போது தாலி கட்ட முடியாதுல்ல.,அதான் விவகாரத்து பத்திரம் ஏற்கனவே தயார் செய்திருந்தேன். சைந்தவியிடம் சைன் வாங்கிட்டேன்.
ஆரியன் வாங்கி சைன் பண்ண, “வந்து பார்த்துக்கிறேன்” என்று பிதற்றியவாறு சென்றாள் சைந்தவி.
நீ வெளிய வர முடியாது. எல்லார் பேசியதையும் அதோ அந்த நிரூபர் லைவ்ல்ல காட்டிட்டு இருக்காரு. சோ நீ வெளிய வந்த உன்னை பார்க்கவே பொண்ணுங்க கூசி கொல்ல கூட தயங்க மாட்டாங்க என்றான் கவின். அவளோ அவனை முறைத்துக் கொண்டே சென்றாள்.
கவின் அவரிடம் சென்று ஏதோ பேச, ஆரியன் அதியா கழுத்தில் தாலியை கட்ட அதை படமாக்கி எல்லா சேனலுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது..
அனைவரும் மகிழ்வுடன் இருக்க, அதை பார்த்த உத்தமசீலன் கண்ணில் அவர் மனைவி சிரித்த முகமாய் தன் மகன் ஆரியன் தலையை ஆதூறமாக வருடுவது போல தெரிந்தது. கண்களில் நிரப்பிக் கொண்டு அவர்களையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.
“வாங்க சம்பந்தி” சுகுமார் உத்தமசீலனை அவர்களிடம் அழைத்து சென்றார்.
எல்லா சம்பிரதாயமும் முடிய, மணமக்கள் உண்டு வந்தனர். எல்லாம் நல்ல படியாக முடிந்தது. இனி நம்ம அதி கம்பெனி நடத்தும் அழகை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் சுகுமார் புன்னகையுடன் சொல்ல, ஆரியனுக்கு புரை ஏறியது.
“ஆரு” அவள் அழைக்க, ஒன்றுமில்லையே! என்று கையை விரித்து உத்தமசீலனை பார்த்தான்.
அதான் நான் இருக்கேன் என் மருமகளுக்கு…
“தேங்க்ஸ் மாமா” என்று அவரிடம் வந்து அமர்ந்து, “மாமா..எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிடணும் போல இருக்கு?”
வாங்கீட்டா போச்சு..
மாமா, சத்தமா சொல்லாதீங்க. அப்புறம் ஆரு கண்டிசன் போடுவாரு.
“ஆமா, இல்லைன்னாலும் உன் வள்ளல் தெரியாது பாரு” ஆத்விக் அதியா தலையில் கொட்ட, மாமா இவனை அவன் வீட்டுக்கு போக சொல்லுங்க இல்லை இவன் கொட்டியே என் மண்டை வீங்கிடும்.
அதுக்காக நான் போக முடியாது. இன்றிலிருந்து இரண்டு நாட்கள் நாங்க உங்க பக்கமே வர மாட்டோம். மாமா, வினு எல்லாரும் என் வீட்டில் தான் தங்கப் போறாங்க ஆத்விக் சொல்ல, “என்னப்பா சொல்ற?” உத்தமசீலன் கேட்டார்.
“மாமா” ஆத்விக் அழுத்தி சொல்ல, ஆமா..ஆமா..நாங்க மாப்பிள்ள வீட்ல தான் தங்கப் போறோம்.
அப்பா துருவினி அழைக்க, அவன் அவளை பார்த்து கண்ணடித்தான்.
நீ போகணும்ன்னா போடா..மாமா, வினு, பசங்க எங்களோட தான் இருப்பாங்க அதியா சொல்ல, “என்ன மாமா சொல்றீங்க?” ஆத்விக் கேட்க, அதியா புரியாமல் விழிக்க ஆரியன் புன்னகைத்தான்.
சக்தி அதியா காதில் ஏதோ சொல்ல, ஏய்..என்ன இதெல்லாம் என சொல்ல வந்த அதியா வந்த வார்த்தையை மென்று விழுங்கி அமைதியானாள்.
“கவின் உனக்கு எப்படி சைந்தவியை தெரியும்?” ஆரியன் கேட்க, அண்ணா..எங்களுக்கு உங்களை பற்றி எல்லாமே தெரியும். உங்க குடும்ப விசயம் அதிகம் தெரியாது. அதி வாழ்க்கை நல்லா இருக்கணும்ன்னா உங்களை சுற்றி இருக்கும் புரளியை ஓட்டணும்ன்னு நான் நேற்று சைந்தவியை பேச அழைத்தேன்.
அவ உயிரோட இருக்கான்னு தெரிந்து தான் அன்று என்னிடமும் அதியிடம் அவள் முன் வந்தால் என்ன செய்வீங்கன்னு கேட்டீயா?
ம்ம்…ஆறு மாதங்களுக்கு முன் வரை நான் வேலூர்ல்ல தான் பணியில் இருந்தேன். எனக்கு சென்னை போஸ்ட்டிங் போடுறதா சொன்னாங்க. நான் எடுத்த கேஷை முடித்து வர எண்ணினேன். ஆனால் அதற்குள் இங்கே வர வச்சுட்டாங்க. இடையில போன போது தான் சைந்தவியை சிட்டியில்ல பார்த்தேன். பயங்கர அதிர்ச்சி. ஆனால் அப்பொழுதைக்கு ஏதும் தெரியவில்லை.
உங்களுடன் அதியை பார்க்கவும், அதுவும் உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும்ன்னு தெரிந்ததால் அவங்கள பற்றி ஆள் விட்டு கண்காணித்தேன். அதன் பின் தான் நேற்று தான் சந்திக்க முடிந்தது.
அதி என்னோட மாமா பொண்ணு. அவளை நான் காதலிக்கிறேன். அவங்க திருமணத்தை நிறுத்த வாங்கன்னு தான் சொன்னேன்.
அண்ணா..உங்களை பற்றி மோசமாக என்னிடமே பேசினாங்க என்று கவின் ஆரியனை பார்த்து, நல்ல வேலை தப்பிச்சீங்க. இந்த மாதிரி மோசமான பொண்ணோட வாழ்வதெல்லாம் முடியாத காரியம் கவின் சொல்லிக் கொண்டிருக்க, அவன் அலைபேசி அலறியது.
அலைபேசியில் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் கவின்.
“கவின்” அவன் அப்பா அவனை உலுக்க, அப்பா சைந்தவி போன போலீஸ் ஜீப் வெடித்து சிதறியதாம். போலீஸ் ஆட்கள் கூட யாரும் உயிரோட இல்லையாம். அவள் கருகி விட்டாளாம் என்றான்.
எல்லாரும் அதிர்ந்து அவனை பார்க்க, “நான் பார்த்துட்டு வாரேன்” கவின் கிளம்ப, ஆரியனும் எழுந்தான்.
“அண்ணா, நீங்க இங்கே தான் இருக்கணும் இல்லை தேவையில்லாமல் பழியை உங்க மேல போட்ருவாங்க” அவன் செல்ல, “நானும் வாரேன்” என்று ஆத்விக்கும் அவனுடன் பைக்கில் சென்றான்.
அதியாவிற்கோ கைகள் நடுங்க, “அதி எவளோ செத்தான்னா நீ எதுக்கு பயப்படுற?” சுகுமார் சினமுடன் கேட்டார். அவள் ஆரியனை பார்க்க, அவன் அதியாவை இழுத்து மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“ஆரு, நீங்க அவங்கள பார்க்க போகணும்ல்ல?” அதியா கேட்க, “தங்கச்சிம்மா அதெல்லாம் ஆரியா வர வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம்” என்ற லோகேஷ், மச்சீ..நம்மை யாரோ கவனிப்பது போல இருக்குடா அந்த வருணை பார்க்க சொன்னேன். அவன் குடும்பத்துடன் உள்ளே தான் இருக்கான்.
“ஒரு வேலை என்னை கொலை செய்ய நினைக்கிறவங்களாக இருக்குமோ?” சக்தி கேட்க, எல்லாரும் ஆரியனை பார்த்தனர்.
அவனுக யாருன்னு நீ சொல்லு? ஆரியன் சக்தியிடம் கேட்க, தாத்தா ப்ரெண்டோட மகன் தான். பிசினஸ்ல்ல பகையாளியாகிட்டாங்க. என்ன பிரச்சனைன்னு அந்த ஜான்விக்கு தான் தெரியும். அவள் என்னை கொல்ல நினைப்பவங்க கம்பெனியின் உதவியாளர் தான்..அதான் அவரை பார்க்க எண்ணினேன்.
கவின் சார் அவளிடம் பேசுனாங்களான்னு தெரியல..
சரி, நீ இதுல்ல தலையிட வேண்டாம். பத்திரமா மட்டும் இரு சக்தி என்று விசு..மும்பை கிரைம் பிராஞ்ச் ஏஜென்சி அனீக்கிற்கு கால் பண்ணு. பேசலாம் என அதியாவை நகர்த்தி தன் நண்பர்களுடன் செல்ல, “ஆரியா நீ வெளிய போகக் கூடாது” உத்தமசீலன் சொல்ல, அப்பா நான் எங்கும் போகலை. இதோ..இந்த அறையில தான் இருக்கப் போறேன் சக்தி நீயும் வா என அவளையும் அழைத்து சென்றனர்.
மாமா, ஆரு சி.ஐ.டி ஓ.கே. அந்த லோகு அண்ணாவுமா? காமெடி பீஸ் மாதிரி தெரியுறாரு சிரித்தாள் அதியா. லோகேஷ் மனைவி இடுப்பில் கையை வைத்து அதியாவை முறைத்தாள்.
சரிம்மா விடு. அதி இப்படி தான் பட்டுன்னு பேசுவா. அதி இப்படி பேசக் கூடாது சரியா? உத்தமசீலன் கேட்க, அங்கிள் நான் சும்மா தான் பேசினேன். சாரி சிஸ்டர் என்றாள் அதியா. ம்ம்..ம்ம்..என்று சிலுப்பிக் கொண்டாள் லோகேஷ் மனைவி.
“அங்கிள், நாம எப்ப வீட்டுக்கு போவோம்?” அதியா கேட்க, “அதுக்குள்ளவா?” சுகுமார் கேட்டார்.
மாமா, என்னால இதை போட்டுட்டு இருக்க முடியல என்று அவள் அணிந்திருந்த நகைகளை காட்டினாள்.
“அதி, கொஞ்ச நேரம் தான்” துருவினி அவளருகே வந்து அமர்ந்தாள்.
“ஆன்ட்டி, நாம ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?” ஆகர்ஷனா கேட்க, “நானும் நானும் தர்சன்” அவர்களிடம் வந்து துருவினி அருகே அமர்ந்தான்.
“இப்ப அண்ணா பிஸியா இருக்கான்” துருவினி அமைதியாக பேச, “நான் அத்துவை வாங்கீட்டு வரச் சொல்றேன்” என்று அவனுக்கு அதியா அழைத்தாள்.
ஆத்விக் அலைபேசியை எடுத்து, “அதி என்ன வேணும்?” சிடுசிடுவென கேட்டான்.
பேச கூட முடியாதாடா. கோபமா பேசுற?
நான் எதுக்கு வெளிய வந்துருக்கேன். நீ எதுக்கு இப்ப கால் பண்ற?
பண்ணா என்னடா?
அடிச்சேன்னா பாரு ஆத்விக் சினமுடன் பேச, போடா எங்களுக்கு ஆருவே வாங்கித் தருவாரு. நீ அங்கேயே இருந்துக்கோ..
என்ன வேணும்?
அவ்விடத்தை விட்டு நகர்ந்து வந்து, அண்ணா வினு ரொம்ப டல்லா இருக்கா. வந்த ஸ்கோர் பண்ணலாம்.
“வாரேன்” என்று அலைபேசியை வைத்து விட்டான். அதியா அலைபேசியை முறைத்து விட்டு இவனெல்லாம்..என்று அதியா திரும்ப, துருவினி பசங்களுடன் அவளிடம் வந்திருந்தாள்.
அது வந்து வினு..இப்படி சொன்னால் வேகமா வாங்கீட்டு வருவான் என்று அதியா பாவமாக முகத்தை வைக்க, துருவினி அதியாவை அணைத்துக் கொண்டாள்.
“வினு, அவ உங்க ஏமாத்திட்டால்ல. அவ மட்டும் இப்ப இருந்திருந்தால் அவளை சும்மா விட்ருக்க மாட்டேன். நீ ஃபீல் பண்ணாத” அதியா சொல்ல, துருவினி நகர்ந்து, “என்ன செஞ்சிருப்ப?” கையை கட்டிக் கொண்டு கேட்டாள்.
ம்ம்..அவளை என்னன்னா? அறையில அடைச்சி உணவை கொடுக்காமல் சாவடிச்சிருப்பேன்.
ஓ..உணவை கொடுக்காமல் சாவடிச்சிருப்பியா? அவ கேடியாச்சே..தப்பிச்சி ஓடிட்டானா?
தப்பிச்சான்னா ஆரு கண்டுபிடிச்சிருவாருல்ல. அப்புறம் அடைச்சி வைக்கலாம்.
அண்ணாவெல்லாம் இதுல நீ இழுக்கக்கூடாது..
ஆமா, அவருக்கே நிறைய வேலைகள் இருக்கும். நான் கண்டுபிடிச்சிருவேன்… ஹான்..நாங்களும் அதிம்மா கூட போயி அவள பிடிச்சி கட்டி போட்டு, அதிம்மா கட்டி போட்டு என்ன பண்ணலாம்? தர்சன் கேட்க, தர்சு கட்டி போட்டு அவள் கதற கதற இதோ என்று ஓடிச் சென்று கட்டையை எடுத்து வந்த அதியா, நடுமண்டையில் அவளை அடித்து காலி பண்ணிடுவோம் என செய்து காட்டினாள்.
அதியா கட்டையை வைத்துக் கொண்டு கையை தூக்கி நிற்க, சக்தி, ஆரியன் அவன் நண்பர்கள் எல்லாரும் வெளியே வந்தனர்.
துருவினி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, கட்டை விரலை உயர்த்தி சுகுமாரிடம் காட்டினாள். உத்தமசீலனும் தன் மகளை கண்டு இன்பமானார்.
ஆரியன் புரியாமல் அவர்களை பார்த்து, “தங்கச்சிம்மா..என்ன இது?” யாரை அடிக்க இது? லோகேஷ் கேட்க, அதியா அவள் மனைவியை பார்க்க, அவள் புரிந்து கண்ணை காட்டினாள்.
“வினு, இதோ டெமோ காட்டுறேன் பாரு” என்று அதியா கட்டையால் லோகேஷை அடிக்க, “என்னை விட்ரும்மா” அவன் ஓட, அதிம்மா நானு நானு என பிள்ளைகள் அவள் பின் ஓடினர். அதை பார்த்து துருவினி மேலும் சிரித்தாள்.
“வினுவை சிரிக்க வைக்க அதி செய்யும் கலாட்டாவை நீயே பாரு” ஆரியா உத்தமசீலன் சிரிக்க, ஆரியனோ எல்லாரையும் பார்த்தான்.
“திருமண நேரத்தில் இதெல்லாம் நடக்கும்ன்னு எனக்கு தெரியாது” என்று சுகுமாரை பார்த்து, கம்பெனி விசயத்துல்ல நீங்களும் அதிக்கு துணையா இருப்பீங்கன்னு நினைக்கிறேன்.
அதான் சொல்லீட்டீங்கல்ல? நாங்க பார்த்துக்கிறோம். அப்பா உங்களிடம் கேட்காமல் சொல்லீட்டான் ஆத்விக்.
அதனால என்னப்பா? நம்ம குடும்பத்துல்ல யாருக்கும் ஏதும் ஆகாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. ஒரு முறை போல் மறுமுறை தவற விட மாட்டோம்.
ம்ம்..என்று துருவினியை பார்த்தான். “அப்பா” தர்சனும் ஷனாவும் ஓடி வந்தனர். என்னாச்சு? எல்லாரும் பதற, “ஆரு” அதியாவும் ஓடி வந்தாள்.
லோகேஷ் கையில் தண்ணீர் பைப்புடன் அவளை விரட்டி வந்தான். தண்ணீரில் குளித்திருந்தாள் அதியா. ஓடி வந்து ஆரியன் கழுத்தை கட்டிக் கொண்டு அவன் அமர்ந்திருந்த சேர் பின்னே நின்றாள்.
“அதி, என்ன இது? இப்படியா விளையாடுவீங்க?” சுகுமார் அதட்ட, மாமா அவன் தான். வாயை பனியாரம் போல வைத்து அதியா கூறினாள்.
“அவனா? ஒழுங்கா அண்ணன்னு சொல்லு” லோகேஷ் தண்ணீரை அவளிடம் காட்ட, “டேய் லோகு சின்னப்பையன்னு நினைப்பா” விஷ்ணு அவனை திட்டினான்.
துருவினி அதியாவை மேலும் கீழுமாய் பார்த்து, “ஏய் நடிக்கிறீயா? ஏற்கனவே ஆடையை மாற்றணும்ன்னு கேட்டேல்ல?” என்று லோகேஷை பார்த்தாள்.
அவன் தலையை சொரிய, “அங்கிள் இப்படி மாட்டி விட்டுட்டீங்க?” தர்சன் லோகேஷை திட்ட, “தர்சு..இப்படி சொதசொதன்னு முழுவதும் ஈரமானதால் தான்” வினு ஆன்ட்டி கண்டுபிடிச்சிட்டாங்க ஆகர்ஷனா சொல்ல,
“ஓ அப்ப இது பிளான் தான? யாரோடது?” துருவினி கேட்க, ஆரியன் அதியாவை பார்க்க, வாயில் இருந்த நீரை ஆரியன் முகத்தில் துப்பினாள்.
அனைவரும் அதிர்ந்து அதியாவை பார்த்தனர். “அதி” அவள் அத்தை கோபமாக அழைக்க, “நான் இன்று சந்தோசமா இருக்கேன் சோ” என்று லோகேஷ் கையிலிருந்த தண்ணீரை அடிக்கும் டியூப்பை பிடுங்கி அங்கிருந்தவர்கள் மீது தெளித்தாள். எல்லாரும் அவ்விடம் விட்டு ஓடினார்கள்.
ஆரியன் அவளிடம் ஓடி வந்து அவள் கையிலிருந்த டியூப்பை பிடுங்க, ”ஹே..ஆரு” அவன் மீது பீய்ச்சி அடித்தாள். அவன் அவள் கையிலிருந்து வாங்க எண்ணி அவளை நெருங்க, அவன் கை அவளது இடையில் படவும் உறைந்தது போல நின்றாள் அதியா. தண்ணீர் மேல் நோக்கி அடிக்க, ஆரியன் அவளிடமிருந்து டியூப்பை பிடுங்கி கீழே போட்டு அவளை அறைக்குள் இழுத்து சென்றான். ஆரியனையும் நன்றாக நனைத்து விட்டிருந்தாள் அதியா.
ஆரியன் அதியாவை அறைக்கு அழைத்து செல்வதை பார்த்து அதிவதினி அவர்களிடம் செல்ல, “வந்துருவாங்கம்மா” உத்தமசீலன் நகர்ந்தார்.
“அதி, எல்லார் முன்னும் இப்படியா விளையாடுவது?” அவன் கேட்க, அவள் பதில் கூறாமல் அமைதியாக அவனை பார்த்தாள்.
“சொல்லு? எல்லார் ஆடையும் பாழா போச்சுல்ல?” அவள் பார்வையில் ஆரியன் சுருதி குறைந்தது. அதியா ஆரியனை அணைக்க, அதி அழுறியா? கேட்டான்.
நோ..என்று தலையை மட்டும் அசைத்தாள்.
அவன் அதியாவை நகர்த்த, நான் உங்களை கன்வின்ஸ் பண்றேன் என்று அதியா சொல்ல, புன்னகையுடன் அவளை பார்த்தான் ஆரியன்.
முத்து முத்தாக அழகு பால் முகத்தில் நீர் நிற்க, இருவரும் கண்ணோடு கண் பார்த்தனர். ஆரியன் அவன் விரலால் அத்துளிகளை சேர்த்து அவள் முகத்தில் கோலமிட, அதியா கண்களை மூடினாள்.
“ஹே ஜில்லு, கண்ணை திற” அழைத்தான் ஆரியன்.
அதியா விழித்து அவ்வறையை சுற்றி பார்க்க, “என்ன தேடுற?”
“யாரையோ நீங்க கூப்பிட்டீங்கல்ல?” அதியா முகத்தை சுளித்து சொல்ல, “நான் உன்னை தான் அழைத்தேன்” என்று அவளது உதட்டிலிருந்து வழிந்த சொட்டுகளை துடைத்தான்.
“ஆரு, நீங்க என்ன சொன்னீங்க?” அதியா கேட்க, “ஏன் உனக்கு கேட்கலையா?”
நீங்க யாரையோ சொல்றீங்கன்னு..
நாம அறைக்குள்ள இருக்கோம். அடுத்தவங்க வரும் இடத்தில்லா நான் உன்னை அழைச்சிட்டு வருவேன் என்று அதியாவை அவனுடன் நெருங்க வைத்து, “ரொம்ப தேங்க்ஸ்டி. என்னோட வாழ்க்கையில் வந்ததற்கு..”
அவன் வாயை அவளது மென்மையான கையால் மறைத்து, “நான் தான் உங்களிடம் தேங்க்ஸ் சொல்லணும்? நீங்க மட்டும் என் வாழ்க்கையில் வரலைன்னா நான்..” அதியா கண்கள் கலங்கியது.
அவள் கண்ணீரை துடைத்து விட்டு அதியா நெற்றியில் முத்தமிட்டு அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆரு” அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவனை நிமிர்ந்து பார்த்து, “ஆரு, இந்த கிர்தா குத்துது” என்றாள். ஆரியன் புன்னகையுடன், “எடுத்திடலாம்” என்றான்.
இல்ல இல்ல..இது தான் ரொம்ப அழகா இருக்கு.
“ஓ அழகா இருக்கா?” என்று கேட்டுக் கொண்டே அவள் இதழ்களை வருடினான்.
“ஆரு, போகலாமா?” என்று இருவரின் ஆடையையும் பார்த்து, ஹப்பா புடவையை மாத்திடலாம் என்றாள்.
ஆரியன் புன்னகையுடன், முதல்ல வெளிய வா. என்ன பிளான் வச்சிருக்காங்களோ?
“பிளானா?” கண்களை சுருக்கி கேட்டாள்.
இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.
ஆரு நீங்க போங்க. நான் இங்கேயே இருந்துக்கிறேன். அப்புறம் அவங்க பிளான்ல்ல இருந்து தப்பிச்சிறலாம்ல்ல?
இப்படியே ஈரத்துல்ல இருந்தா ஃபீவர் வந்திரும். வா நான் இருக்கேன்ல்ல. பார்த்துக்கலாம்
பார்க்கப் போறீங்களா?
“ம்ம் வா” அதியாவை வெளியே அழைத்து சென்றான் ஆரியன்.
அதியா செய்த வேலையால் சக்தி, துருவினி ஆடையும் நனைந்திருக்க, ஓரமாக நின்று புடவையை சரி செய்து விட்டு பேசிக் கொண்டே வெளியே வந்தனர்.
ஆத்விக்கும் கவினும் வந்து கொண்டிருந்தனர்.
ஆத்விக் இருவரையும் பார்த்து, “ஏதும் பிரச்சனையா?” கேட்டுக் கொண்டே அருகே வந்தான். துருவினியும் சக்தியும் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணாலே பேசி சிரித்தனர்.
ஆத்விக் கையிலிருந்த ஐஸ்கிரீம் பாக்ஸை வாங்கிய துருவினி அதை ஓரமாக வைக்க, சக்தி புடவையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினாள்.
“ஒன் டூ த்ரீ” சக்தி தயார் துருவினி சொல்ல, “ஏய் என்ன பண்ண போறீங்க?” கவின் பதறினான்.
“அண்ணா, நாங்கள் மட்டும் நனைந்தால் எப்படி?” துருவினி கேட்க, கவின் ஆத்விக் மீது தண்ணீரை அடித்தாள் சக்தி. துருவினி கையை தட்டி சிரித்தாள்.
“அடிங்கோ, எங்ககிட்டவே வா?” ஆத்விக் துருவினியை இழுத்து அவனுடன் நனைய வைத்தான். முழுவதும் நனையாமல் கவின் உசாராகி ஓட, ஷனா இடை புகுந்து நின்றாள். சக்தி அவன் மீது தண்ணீரை தெளிக்க, கவின் கோபமாக அவளை அடித்து விட்டான்.
புன்னகையுடன் நெருக்கமாக இருந்த ஆத்விக் துருவினி கவின் செய்கையில் அதிர்ந்து நகர்ந்தனர். சக்தி கையிலிருந்ததை கீழே போட்டு விட்டு அங்கிருந்து அறைக்கு ஓடினாள். அவள் ஓடுவதை பார்த்து அதிவதினி அவளை அழைக்க, ஷனா அவனை முறைத்து விட்டு அவள் பின் ஓடினாள்.
ஆத்விக் சினமுடன், “எதுக்குடா அவளை அடிச்ச?”
விளையாடுறதுக்கு இவங்க என்ன சின்னப்பசங்களா?
ஆமாடா, சின்னப்பசங்க இல்லை தான். அதுக்காக கை நீட்டுவியா? திருமண வீடுன்னா இது மாதிரி விளையாட்டெல்லாம் இருக்க தான் செய்யும்.
அதுக்காக மேல தண்ணீ ஊத்துவாளா? பார்த்து ரெண்டு நாள் கூட ஆகலை. அதுக்குள்ள என்ன விளையாட்டு வேண்டி இருக்கு? முகத்தை சுளித்து கவின் பேச, “என்னடா சொல்ல வர்ற?” ஆத்விக் கவின் சட்டையை பிடித்தான்.
“அத்து அவரை விடுங்க” துருவினி சொல்ல, நீ இதுல்ல தலையிடாத. “நீ சொல்லு? சக்தியை பற்றி என்ன தெரியும்? நானும் உங்களிடம் மேலோட்டமாக தான் சொன்னேன். அதை வச்சி நீ தப்பா நினைச்சு பேசுவியா?”
“நான் அப்படி என்ன தப்பா பேசிட்டேன்?” கவின் சீற, “டேய் நீங்க எதுக்கு அடிச்சுக்கிறீங்க?” சுகுமார் சினமுடன் கேட்டார்.
“மாமா, உங்க பையனை பார்த்து பேச சொல்லுங்க. சொந்தம் நண்பன்னு பார்க்க மாட்டேன்” என்று சினமுடன் கூற, அனைவரும் அதிர்ந்து ஆத்விக்கை பார்த்தனர்.
“சக்திக்கு இவ்வளவு இம்பார்டன்ஸ் கொடுக்குற? உங்களுக்குள்ள என்ன?” கவின் வாயை விட, ஆத்விக் கவினை ஓங்கி அறைந்தான்.
“அவளும் எனக்கு அதி போல தான். போதுமா?” ஆரு மாமா அன்று என்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார். சரியாகி வெளியே வந்தேன். ஒரு வருடம் நன்றாக போனது. பின் நான் சீனியர் ஒருவரிடம் சேர்ந்தேன். சீனியர்ஸ் அங்க கொஞ்சமும் என்னை மதிக்கலை. அப்பொழுது தான் அவன் எனக்கு துணையாக வந்தான். அவன் சக்தி..சாரி சுவேரா அண்ணன் ஆரவ்.
எப்போதும் இருவரும் சேர்ந்தே தான் திரிவோம். ஒரு சென்சேஷ்னல் கேஷ். அரசியல் வாதி ஒருவனிடம் இருந்து ஆதாரத்தை சேகரிக்கும் போது அவனிடம் மாட்டிக் கொண்டேன். ஆரவ் கொஞ்சமும் யோசிக்காமல் என்னை காப்பாற்றினான். அவன் அண்ணாவும் குடும்பமும் எனக்கு உறுதுணையா இருந்தது.
அவனுக்கும் என்னை போல ஆரு மாமாவை ரொம்ப பிடிக்கும். உங்களை பார்க்கணும்ன்னு ஆசைப்பட்டான். ஆனால் அவனை இல்லாமலே பண்ணீட்டானுக. இங்க எங்க அக்காவுக்கு மட்டும் ஏதும் ஆகலைன்னா அவனுக்கு ஏதும் ஆகாமல் பார்த்திருப்பேன்.
சக்தி என்னோட சேர்ந்து வரலை. முதல்ல நான் மட்டும் தான் அதி, ஷனா பேபிக்காக வந்தேன். அவங்க குடும்பத்துல்ல அவனும் சக்தியும் தான் தப்பிச்சாங்க. நான் இங்கே வந்த சமயம் சக்தியை காப்பாற்ற அவனாகவே அவங்க முன்னாடி போயிருக்கான். ஆரவ்வை கொல்லும் போது சக்தியை பிடித்து இழுத்துட்டு போயிருக்காங்க. அவ கண்ணு முன்னாடியே அவளோட அண்ணனை கொன்னுட்டானுக. அப்புறம் என்னோட வொர்க்கர்ஸ் தான் சக்தியை காப்பாற்றினாங்க.
என்னால சுவாவுக்காக கேஷை எடுக்க கூட முடியலை. இவளும் எனக்கு ஜூனியர். அவள் அண்ணனும் எனக்கு நண்பன் என்பதால் இந்த கேஷை நான் நடத்தக் கூடாதுன்னு தான் மும்பைல்ல ஃபேமஸ் லாயரிடம் பேசிட்டு வந்திருக்கேன். அவர் தான் பார்த்துட்டு இருக்கார்.
நீ உனக்கு அலார்ட் பண்ண வேலையை மட்டும் பாரு. மத்ததை நாங்களே பார்த்துக்கிறோம் என்றான் ஆத்விக் கனத்த மனதுடன்.
இங்க உங்க எல்லாரையும் பார்த்தால் அவள் சாதாரணமா பேசிருவான்னு தான் அதியை கண்காணிக்கும் வேலையை அவளுக்கு கொடுத்தேன். நீங்க எல்லாரும் துணைக்கு இருப்பீங்கன்னு நினைச்சேன் என கண்கலங்கி எழுந்தான். சக்தி ஆத்விக் முன் வந்தாள்.
“சாரி சுவா “ஆத்விக் கூற, அவள் அலைபேசியை அவனிடம் நீட்டினாள்.
என்ன? அவன் கேட்க, “சார், பிரஜித் மும்பை போகலையாம்” சக்தி சொல்ல, “போகலையா?” அலைபேசியை வாங்கிய ஆத்விக், துரியனை திட்டினான்.
சக்தி சினமுடன் வெளியே செல்ல, அவளை பார்த்துக் கொண்டே அலைபேசியுடன் திரும்பி பார்த்தான் ஆத்விக். பிரஜித் நின்று கொண்டிருந்தான்.
“இங்க என்னடா பண்ற?” சக்தி அவனை அடித்தாள்.
“உன்னை இங்க விட்டு நான் எப்படி போவேன்?”
“இந்த சினிமா டயலாக்கிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை” ஆத்விக் சினமுடன் அவனிடம் வர, “சுவா, என்னை காப்பாத்து” சக்தி பின் ஒளிந்தான் பிரஜித்.
“பிரஜா, கொஞ்சம் கூட சீரியசா இருக்க மாட்டீயாடா?” கோபமாக சக்தி கேட்க, நீயும் தான் இருந்த..என்ன நடக்குது? அவன் கேட்க, அவனை இழுத்து ஆத்விக் அடிக்க வந்தான்.
சார், அடிக்காதீங்க. என்னோட ஒரே தங்கச்சி என்ன ஆவா? கொஞ்சம் அவளுக்காக என்னை விட்ருங்க.
“தங்கச்சியா? உனக்கு ஏதுடா தங்கச்சி?” சக்தி கேட்க, நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கும் தங்கச்சி கிடைப்பால என்று பிரஜித் அதியாவை பார்த்தான்.
சக்தி அவனை முறைக்க, “சாருக்கு கல்யாணம் கேக்குதா?” ஆத்விக் அவன் சட்டையை பிடித்து இழுத்தான்.
“சார், என்ன சார்? மச்சானோட சட்டையை இப்படியெல்லாம் பிடிக்கலாமா? சொல்லு சுவா” அவன் சக்தியை பார்க்க, அவன் தலையில் அடியை போட்டு, கல்யாணம் ஒன்னு தான் கேடு.
கால் பண்ணா அலைபேசியை எடுக்க மாட்டியா? அங்க எல்லாரும் உனக்கு ஏதோ ஆயிருச்சோன்னு டென்சன்ல்ல இருக்காங்க. சமீ அழுறா..
“அழுறாலா? இருக்காதே!” அவளுக்கு எல்லாமே கரெக்ட் பண்ணி விட்டு தான வந்தேன்.
என்னடா பண்ணீட்டு வந்த? சக்தி கோபமாக கேட்க, அதுவா..நம்ம துரியோட அம்மாகிட்ட சொல்லீட்டு வந்துருக்கேன்.
“அடப்பாவி, என்ன செஞ்சுட்டு வந்திருக்க?” என்று சக்தி பதட்டமாக ஆத்விக்கை பார்க்க, அவன் பல்லை கடித்தான்.