வல்லவன் 14
சக்தி பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவள். பாட்டி, தாத்தா. அவங்களுக்கு இரண்டு பசங்க. இரண்டாவது மகனின் கடைசி பொண்ணு தான் சுவேரா. பெயர் மாற்றம் செய்யப்பட்ட சக்தி. இவளுக்கு முன் இரு அண்ணா, அக்கா. இருவருக்கும் திருமணம் முடிந்து பசங்க இருந்தாங்க. அவளோட கடைசி அண்ணாவிற்கு மட்டும் திருமணமாகலை ஆத்விக் குரல் தழுதழுத்தது.
சுவேராவிற்கு போலீஸ் ஆகணும்ன்னு ஆசை. அவள் அப்பாவின் ஆசைக்காக தான் லாயர் ஆனாள். சுவா எங்களது சட்டக் கல்லூரியில் பிரபலமாக இருந்தாள். ஓரிடத்தில் இருக்கவே மாட்டாள். துறுதுறுன்னு ஏதாவது செய்து கொண்டே இருப்பாள். அதனாலே அவளை எல்லாருக்கும் பிடிக்கும். என்னோட ஜூனியர். கார்ல்ல தான் வருவா..
முதல்ல நானும் பெரிய லாயருக்கு ஜூனியராக தான் இருந்தேன். தொடர்ந்து அவர் கொடுத்த கேஸில் வெற்றி அடைந்ததால் அவருக்கு என் மீது கோபம் வந்து, ஆகாத கேஸா கொடுத்தார். அதனால் தான் தனி ஆபிஸ் ஆரம்பித்தேன். அவள் என்னோட ஆபிஸ்ல்ல சேர்ந்தாள். பிரஜித், சமீரா, துரியன் எல்லாரும் சக்தி முன் சேர்ந்தவங்க. கொஞ்சம் ஆட்டிட்டியூடு அதிகம் தான். ஆனால் கொடுக்கும் வேலையை சரியாக முடிப்பாள்.
அதனால் தான் என்று ஆத்விக் ஆரியனை பார்த்து, உங்களை எப்படியாவது உங்களோட வேலையில் சேர்க்க வைக்கணும்ன்னு டாஸ்க் கொடுத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பாராதது அதியும் ஷனாவும் உங்க கண்ணில் படுவாங்கன்னு. அதை விட அதிர்ச்சி..அவள் உங்களுக்காக சக்தியிடம் சண்டை போட்டது.
ஆரியன் புன்னகைக்க, என்னிடம் கூட சகஜமா பேச மாட்டா மாமா. அதி மாறிட்டு இருக்கா. எப்படியாவது அவளை நீங்க தான் எங்க கம்பெனி பொறுப்புகளை எடுத்துக்க வைக்கணும்
“என்னது? அதெல்லாம் முடியாது. டிரஸ்ட்டுக்கு எழுதி வச்சிருங்க” ஆரியன் சொல்ல, “மாமா இது எங்க அக்கா உயிரை கொடுத்து உழைத்த உழைப்பு. அப்படியே விடணுமா?” ஆத்விக் கேட்க, “அதியால எப்படி கம்பெனியை சமாளிக்க முடியும்?” கவின் கேட்டான்.
மாமா நினைத்தால் முடியும்..
“அவளோட பாதுகாப்பை விட எனக்கு எதுவும் பெரியதில்லை” ஆரியன் சொல்ல, “மாமா ப்ளீஸ்” இந்த சொத்தை நாங்க டிரஸ்ட்டுக்கு கொடுத்தாலும் எப்படியாவது அம்மா கைக்கு போக வாய்ப்பிருக்கு. இப்ப யாரையும் நம்ப முடியாதுல்ல?
“சரி, ஏதாவது யோசிக்கலாம்” என்றான் ஆரியன்.
“சரி, இப்ப இந்த பொண்ணை என்ன செய்யப் போறீங்க?” அதிவதினி கேட்டார்.
“அவ அதியோட எங்க வீட்ல இருக்கட்டும்” என்ற ஆரியன், “இந்த கேஷை நானே பார்த்துக்கிறேன்” என்றான்.
“அப்ப நம்ம அதி விசயம்?” கவின் கேட்க, அதையும் பார்த்துக்கிறேன்.
அண்ணா, இதில் நானும் உங்களுக்கு உதவுகிறேன். நீங்க உங்க ஸ்டைல்ல விசாரிங்க. நான் என்னோட ஸ்டைல்ல விசாரிக்கிறேன் கவின் கூற, மும்பை கேஷ்டா நீ எப்படி விசாரிப்ப?
அதெல்லாம் எனக்கு ஆள் இருக்காங்க. அவனை வைத்து பார்த்துக்கிறேன் என்றான் கவின்.
“அது யாருடா எனக்கு தெரியாமல்?” ஆத்விக் கேட்க, “ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாதுடா மச்சான்” என்று ஆரியனை பார்த்து, வாழ்த்துக்கள் அண்ணா. கொஞ்சம் அத்தையிடம் கவனமா இருங்க என்றான்.
“உனக்கும் அவங்கள பிடிக்காதா?” ஆரியன் கேட்க, அவங்க பணமில்லைன்னா ரொம்ப மட்டம் தட்டுவாங்க. எனக்கும் அவங்களுக்கும் சுத்தமாக ஆகாது என்று அவன் தன் அம்மாவை பார்த்தான்.
அதிவதினி யோசனையுடன் அமர்ந்திருந்தார். கவின் அவரருகே சென்று அமர்ந்து, “யோசனை பலமா இருக்கேம்மா?” கேட்டான்.
ஒன்றுமில்லைடா. நாம கிளம்பலமா? கேட்டார் அதிவதினி.
“உன்னோட அம்மாவுக்கு அந்த பொண்ணு கூட பேசணும். எப்படி கேட்கன்னு யோசிக்கிறா?” சுகுமார் சொல்ல, “அவகிட்ட நீங்க என்ன பேசப் போறீங்க?” கவின் கேட்டான்.
“சொல்ல மாட்டேன். போடா”.
“எப்படி இப்படி சரியாக அவங்கள புரிஞ்சு பேசுறீங்க?” ஆரியன் சுகுமாரிடம் கேட்டார். ஆரியன் தோளில் கையை போட்டு, “அவளை நான் காதலிக்கிறேன். அவ்வளவு தான்” என்றார்.
“என்ன?” ஆரியன் கேட்க, காதல் நம் உணர்வுகளை அதிகப்படுத்தும். அவளுடன் திருமணம் நடந்த புதிதிலே அவளை கவனித்துக் கொண்டே இருப்பேன். அதி மாதிரி தான் எல்லாத்துக்கும் பயப்படுவா. சின்ன சின்ன விசயத்துக்கும் சந்தோசப்படுவா..அதனால அவளை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. அவளது சிறு சிறு பாவனை வைத்தே அவளின் எண்ணத்தை கண்டுகொள்வேன். மாப்பிள்ள, உங்களுக்கும் இது தேவைப்படும்.
அதியிடம் முன்னேற்றம் தெரிந்தாலும் வெளிநடப்பு தெரியாமல் வளர்ந்த பிள்ளை. யாரிடம் எப்படி பேசணும்ன்னு தெரியாது. எனக்கு தெரிந்து அவ கம்பெனியை நடத்த நீங்களும் உடன் இருந்தால் தான் சரியாக இருக்கும். நீங்களும் அவளை பார்த்தவுடன் அவள் எண்ணத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். உங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படும்.
“முயற்சி செய்கிறேன் சித்தப்பா” என்றான் ஆரியன். அவர் புன்னகையுடன் அவன் கன்னத்தை தட்டி, “அதி அம்மாகிட்ட கவனமா இருங்க” என்றார்.
“மாமா கிளம்பலாமா? அங்கிள் தனியா பார்த்துட்டு இருப்பார்” என்று ஆத்விக் கூற, கவினை பார்த்த ஆரியன், வாரீங்களா டிராப் பண்ணிடுறோம் கேட்டான்.
அண்ணா, நாங்க கேப் புக் பண்ணிக்கிறோம். நீங்க வேலையை பாருங்க. சக்தியை ஈவ்னிங் பிக் பண்ண வாரேன் சரியாக முடிச்சிருவேன் என்றான் கவின்.
“பார்க்கலாம்” ஆரியன் சொல்லி சென்றான். கவின் அவன் பெற்றோருடன் அறையில் இருந்தான்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு அதிவதினி கதவை திறந்தார்.
சக்தி நின்று கொண்டிருந்தாள்.
“என்னம்மா?” அவர் கேட்க, “ஆத்விக் சார் பைக் கீ இங்க இருக்குன்னு சொன்னார்” என்று அறையை கவனிக்க, கண்கள் சிவக்க அழுத அறிகுறியாக கவின் அவன் அப்பா கையை பிடித்திருந்தான். அவனை பார்த்து விட்டு அவள் கண்கள் சுழல, ஆன்ட்டி அங்க தான் இருக்கு. கொஞ்சம் எடுத்து தர்றீங்களா? கேட்டாள்.
“உள்ள வாம்மா. எடுத்துக்கோ” சுகுமார் சொல்ல, அவளோ அவர்கள் அவளை தவறாக எண்ணியதாக நினைத்து தயங்கி நின்றாள்.
“வாம்மா” அவர் அழைக்க, அதிவதினி அவளுக்கு வழிவிட்டார்.
கவினருகே வந்து, சார் எடுத்துக்கவா? கேட்டாள்.
எடுத்துக்கோ. அப்புறம் இது என்னோட நம்பர் என்று கவின் அவன் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு, அந்த பொண்ணு நேம் என்ன சொன்ன? ஹம்ம்..ஜான்வி தான? கேட்டான்.
ஆம் தலையசைத்தாள்.
அவளை பற்றி உனக்கு தெரிந்த விவரத்தை எனக்கு அனுப்பு. அப்பொழுது தான் அவளிடம் பேச்சு கொடுக்க எளிதாக இருக்கும். ஈவ்னிங் நானும் உன்னோட பப்பிற்கு வாரேன். நீ ஆரியன் அண்ணா வீட்ல தான இருப்ப?
ஆம் தலையசைத்தாள்.
நான் பிக் பண்ணிக்கிறேன். உன்னோட குடும்பத்துக்கும் கொலை செய்தவர்கள் விவரமும் வேண்டும். போனவுடன் அனுப்பு. நான் இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்.
ஓ.கே சார். நான் கிளம்புகிறேன் என்று அவன் பெற்றோரை பார்க்க, எனக்கும் உன்னோட நம்பர் கொடு என அதிவதினி கேட்க, அவன் தந்தை புன்னகைத்தார்.
“மேம், நான்” அவள் தயங்க, நான் உன்னிடம் நம்பர் தான் கேட்டேன்.
அம்மா, எதுக்கு? கவின் கேட்க, ஒரு ப்ரெண்ட்ஷிப்பிற்காக…
சக்தி திகைத்து அவரை பார்க்க, அம்மா உங்களுக்கு இருக்கிற ப்ரெண்ட்ஸ் போதும்.
“அதை நீ சொல்லக் கூடாது” என தன் கணவனை துணைக்கு அழைத்து பார்க்க, “அப்பா வேண்டாம்” கவின் சொல்ல, “கொடும்மா. என்னோட வது உன்னை திட்ட மாட்டா” என்றார்.
“அப்பா” கவின் பல்லை கடித்தான். சக்தி என்ன செய்வதென்று புரியாமல் விழித்தாள்.
சக்தி, நீ போ..
“இல்லை, எனக்கு நம்பர் கொடுத்திட்டு போ” அதிவதினி பிடிவாதம் செய்ய, ம்மா, சின்னபிள்ளை மாதிரி பிடிவாதம் பண்ணாதீங்க..
ஏன்டா, என்னோட வது சின்னப்பிள்ளை தான் என்று அவர் மனைவி கன்னத்தை கிள்ளினார்.
“அப்பா” கவினுக்கு டென்சன் ஏறியது.
“அடக் கொடும்மா” அவள் கையிலிருந்த அலைபேசியை பறித்து, “சுகு பர்ட்டன் தெரியலை” என்று அவரிடம் அலைபேசியை நீட்டினார். சக்தியோ அவர்களை அதிர்ந்து பார்த்தாள்.
“அம்மா” அழுத்தமாக அழைத்து எழுந்து அவரிடம் வந்து அலைபேசியை கவின் பிடுங்க, “சுகு எனக்கு வேணும்” கொஞ்சலாக கேட்டுக் கொண்டே அலைபேசியை விடாமல் பிடித்துக் கொண்டு நின்றார் அதிவதினி.
கண்களை விரித்து சக்தி அவர்களை பார்க்க, அம்மாவும் மகனும் சக்தியின் அலைபேசியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
“ஏய், என்ன வேடிக்கை பாக்குற? பிடித்து இழு” கவின் சக்தியை அழைக்க, எங்க? எப்படி பிடிப்பது? என தெரியாமல் நின்றாள் சக்தி.
பிடித்து இழு. உனக்கு உன்னோட அலைபேசி வேண்டாமா? அவன் கேட்க, “வேண்டும்” அவனருகே சென்று அவளும் கவினுடன் சேர்ந்து இழுத்தாள்.
“சுகு, வேகமா இழுங்க” அதிவதினி சொல்ல, “சக்தி விடாத” கவினும் சொல்ல, சுகுமாரும் சக்தியும் பார்த்துக் கொண்டனர்.
அவளோ விழித்துக் கொண்டு இழுக்க, இரு பக்கம் அதிக விசையுடன் இழுக்க, கவின் பொறுக்க மாட்டாமல் ஒரே இழு இழுக்க, அலைபேசியோடு சக்தியுடன் அவன் விழ, மறுபக்கம் அதிவதினியும் சுகுமாரும் கீழே விழுந்தனர். அதிவதினி தன் கணவன் மேல் விழுந்திருக்க, அதியாவும் ஆத்விக்கும் சக்தியை தேடி வந்தனர்.
நடக்கும் காட்சியை கண்டு இருவரும் ஒரே போல், “என்ன நடக்குது?” கத்தினார்கள்.
சுதாரித்த சக்தி வேகமாக எழுந்தாள். கவின் அவள் அலைபேசியுடன் எழுந்தான்.
“சுகு, அந்த பொண்ணு நம்பர் வேணுமே!” என விழுந்தவாரே இருவரும் ரகசியம் பேச, அதியா இருவருக்கும் இடையே வந்து, “எந்த பொண்ணு நம்பர் வேணும் அத்தை?” கேட்டாள் புன்னகையுடன்.
அதுவாம்மா? என அவளை பார்த்து, அதிவதினி வேகமாக எழுந்தார். சக்தியோ நடந்ததை நம்ப முடியாமல் ஆத்விக் அருகே சென்று, “சார்..இவங்க இப்ப மேரேஜ் பண்ணிக்கிட்ட மாதிரி நடந்துக்கிறாங்க” என்றாள்.
ஆத்விக் புன்னகையுடன் தன் நண்பனை பார்க்க, “இந்தா அலைபேசி. முதல்ல கிளம்பு” என்றான் கவின் சினமுடன்.
“அந்த பொண்ணு என்னடா பண்ணா? உன்னோட அம்மா நம்பர் தான கேட்டா? அந்த பொண்ணு அமைதியா தான இருக்கு” சுகுமார் அவனை திட்ட, “அவனுக்கு பொறாமை சுகு” என்றார் அதிவதினி.
பொறாமையா? எனக்கா? எனக்கெதுக்கு பொறாமை வரப் போகுது? எனக்கு சும்மா பொண்ணுங்க வீட்டுக்கு வந்தால் பிடிக்காது. ப்ரெண்டுன்னு யாரையாவது அழைச்சிட்டு வந்து என்னை தொந்தரவு பண்ணுவீங்க.
ஆமா சார் இங்கேயே இருந்துட்டார் பாரு. டேய் நீ வந்தே ஆறு மாதம் ஆகுது. என்னோட அத்தையும் மாமாவும் தான் நீ இல்லாமல் கஷ்டப்பட்டிருப்பாங்க..
“விடுடா. கிளம்புங்க” கவின் சொல்ல, சக்தி அவளது அலைபேசியை கவினிடமிருந்து வாங்கி அதிவதினியிடம் கொடுத்து, “ஆன்ட்டி நாம வெளிய மீட் பண்ணிக்கலாம்” என்று கையை நீட்டினாள்.
“குட்” இப்படி முடிக்கிறதை விட்டு விழுந்து வாரிட்டு சுகுமார் கவினை பார்த்தார்.
அவன் அவரை முறைத்தான். அனைவரும் கிளம்பினார்கள்.
மாலை மங்கும் நேரம் கவின் ஆரியன் வீட்டிற்கு வந்தான். சக்தியும் துருவினியும் பேசிக் கொண்டே பூ தொடுத்துக் கொண்டிருந்தனர். ஆகர்ஷனாவும் தர்சனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கவின் வெளியே நின்று சக்தியை அழைத்தான்.
“உள்ள வாங்க அண்ணா” துருவினி அவனை உள்ளே அழைத்தாள்.
ஆகர்ஷனாவும் தர்சனும் அவனிடம் ஓடி வந்து, “அதிம்மா வரலையா?” கேட்டனர்.
“உங்க அதிம்மாவை நாளைக்கு பாருங்க” அவன் சொல்லிக் கொண்டே சக்தியை தேடினான்.
“சக்தி உள்ள தான் இருக்கா. தயங்காமல் வாங்க அண்ணா” துருவினி கவினை அழைத்து சென்றாள்.
“எல்லாரும் கல்யாண வேலையா வெளிய போயிருக்காங்க” துருவினி சொல்ல, ம்ம்..தெரியும்மா என்று அவன் சக்தியை பார்த்து, கிளம்பு. சீக்கிரம் போயிட்டு வரணும்.
“பிளான் வச்சிருக்கீங்களா சார்”? சக்தி கேட்டாள்.
அதெல்லாம் உனக்கு தேவையில்லை. நீ அந்த பொண்ணு ஜான்வியை அடையாளம் காட்டிட்டு அமைதியாக ஓர் இடத்தில் இரு. நான் பேசிட்டு வந்துருவேன்.
ஓ.கே சார் என்று துருவினியை பார்த்து, பசங்களை உள்ள வச்சுக்கோ. கதவை திறக்காத. நான் சீக்கிரம் வந்திடுறேன். பிரச்சனைன்னா கால் பண்ணு என்று சக்தி சொல்ல, கண்டிப்பா கால் பண்றேன் என சக்தியை பார்த்து புன்னகைத்தாள் துருவினி.
கதவை திறக்காமல் இருந்தாலே பிரச்சனை வராது. கவனமா இரும்மா என்று தர்சன், ஆகர்ஷனாவை பார்த்து, ஆன்ட்டி பேச்சே கேட்டு உள்ள இருங்க. தொந்தரவு செய்யக் கூடாது என கூறி சக்தியுடன் கவின் கிளம்பினாள்.
பைக்கில் சக்தி கவினுடன் சென்று கொண்டிருக்க, “இவள் இந்த ஆடையுடன் எப்படி பப்பிற்கு வருவாள்? எப்படி கேட்பது?” சிந்தனையுடன் பைக்கை விரட்டிக் கொண்டிருந்தான்.
சார், கொஞ்சம் நிறுத்துங்க சக்தி சொல்ல, பிரேக்கிட்டு நிறுத்தி, என்னவென்று கேட்டான்?
இப்ப வந்துருவேன் சார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று சொல்லி பொட்டிக் ஒன்றில் நுழைந்து சக்தி வேறொருத்தி போல் மாடர்ன் ஆடையில் ஒப்பனையுடன் வந்தாள். கவின் அவளை ஆவென பார்த்தான்.
“கிளம்பலாமா சார்?” சக்தி அவனிடம் கேட்க, ம்ம் என பப் நோக்கி வண்டியை செலுத்தினான்.
கலர் கலர் வண்ணங்களூடே ஆண்களும் பெண்களும் இசைக்கு ஏற்றாற்போல் மதுக்கோப்பையுடன் குதித்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
“இங்க வா அமரலாம்” இருவரும் அமர்ந்தனர். சக்தி கவினை பார்க்க, “அவன் என்ன?” கேட்டான்.
சக்தி அவன் கையை இழுத்து அவள் தோளில் போட, “ஏய் என்ன பண்ற?” பதறினான்.
இங்க இப்படி தான். இல்லைன்னா சந்தேகம் வந்திரும் சார் என்று பேரரை அழைத்து மதுவை வாங்கினாள்.
குடிக்காத கவின் சொல்ல, நான் தான் சொன்னேன்ல்ல. நீங்க திருமண விழாவிற்காக வந்திருக்கீங்க? அமைதியா வேடிக்கை பாருங்க என்று அவனிடம் பேசிக் கொண்டே மதுவை தொண்டையில் சரித்தாள்.
சக்தி..குடிக்காத. நாளை அதிக்கு மேரேஜ். ஆதுவுக்கு தெரிந்தால் என் மேல் கோபப்படுவான்..
முகத்தை கைகளால் மறைத்து கவினை இழுத்து அவனை முத்தமிடுவது போல் பாவனை செய்த சக்தி, அவள் தான் ஜான்வி என்று காட்டினாள். அவள் செய்கையில் கோபத்தை காட்ட எண்ணியவன் கையை இறுக கோர்த்துக் கொண்டாள்.
பெண்களை அருகே நெருங்க விடாத கவின் சக்தியை பார்த்து தடுமாறினான்.
சார் அவள் தான். கவனமா பேசுங்க என்று சொல்ல ஜான்வியை பார்த்தான். சிவப்பு நிற ஜிகுஜிகு ஆடை. தொடைக்கு மேல் இருந்தது. கவர்ச்சியாக இருந்தாள் ஜான்வி. அவளுடன் இருவர் வந்திருந்தாங்க.
“யார் அவனுக?” கவின் கேட்க, ப்ரெண்ட்ஸாக தான் இருக்கும் என்று தொண்டையை பிடித்து, “ரொம்ப எறியுதே! இப்படியா எறியும்?” சக்தி கவின் முகத்தில் ஊத, கடுப்புடன் அவளை பார்த்தான்.
“சார், நீங்க குடிச்சிருக்கீங்களா? சக்தி கேட்க, இது தான் முதல் தடவையா? கேட்டான்.
ம்ம்..நோ..நோ..ஒன்.. டூ..
டூ..இது செகண்ட் டைம். பாட்டிக்கு குடித்தால் பிடிக்காது. அடி வெளுத்திருவாங்க. என்னோட ப்ரெண்ட்ஸ். எனக்கு தெரியாமல் கொடுத்தாங்க. அன்று பாட்டி அறை தான் எனக்கு. அடிச்சாங்க..மாம், டாடா கூட என்னை திட்ட தான் செய்தாங்க. பாட்டி தான்..
மை பாட்டி..வெரி ப்யூட்டி..லவ் யூ பாட்டி..ஐ மிஸ் யூ..பாட்டி நான் குடிச்சிட்டேன். வா..என்னை அடிக்க வா என உலறிக் கொண்டே அழுதாள். கவினுக்கு அவள் நிலை நன்றாக புரிந்தது.
“நீ இங்கேயே இரு” எழுந்தான். அவன் கையை பிடித்த சக்தி, “மாமு என்னை விட்டு போகாத. ஐ லவ் யூ” என்றாள். கவின் அதிர்ச்சியுடன் அவளை பார்க்க, உலறிக் கொண்டே சாய்ந்து அமர்ந்தாள்.
“ஜான்வியிடம் பேசியே ஆகணும்” அவள் வாயிலாக உண்மையை அறிய பஃக் ஒன்றை அவன் செயினில் மாட்டி அவளை நெருங்கினான். அவளும் குடித்துக் கொண்டிருந்தாள்.
சாதாரணமாக போய் பேசினால் சந்தேகம் வந்து விடும் என சக்தியை பார்த்தான். அவள் அதே நிலையில் எதையோ உலறிக் கொண்டிருந்தாள். அவனும் டிரிங்கை வாயில் சரித்து நேராக அவளிடம் சென்று நடனமாட அழைத்தான்.
கவின் அழகில் மயங்கிய அந்த ஜான்வியோ அவனுடன் இணைந்து நடனமாட, அவனுக்கு ஏனோ அவளை தொட கூட பிடிக்கவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை என்று நடனமாடிக் கொண்டே அவளை பற்றி கேட்டு, அவனுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டு அவளை விட்டு தனியே வந்து அமர்ந்தான்.
அவனுக்கும் போதை ஏறி இருக்க, மெதுவாக நகர்ந்து ரெஸ்ட் ரூம் சென்று முகத்தில் தண்ணீரை அடித்து அவனை அவனே சரி செய்து வெளியே வந்தான். சக்தியை காணவில்லை. சுற்றும் முற்றும் பார்க்க, அவளை ஒருவன் தன்னருகே அமர்த்தி, அவளது தொடையை தடவியவாறு ஏதோ பேசினான். அவள் தடுக்கும் நிலையில் இல்லை.
கவின் சென்ற பின் மீண்டும் குடித்திருப்பாள் சக்தி. அவர்கள் முன் வந்த கவின், அவனிடம் ஏதும் பேசாது சக்தியை தூக்க, “ஹே…”அவன் கவினை பார்க்க, கவின் அவனை கண்டுகொள்ளாமல் சக்தியை தூக்கி வெளியே வந்து, தண்ணீரை வைத்து அவள் முகத்தில் அடித்தான். அவள் போதை லேசாக தெளிய ஏதோ உலறினாள்.
“இது சரி வராது” என்று ஆட்டோவை அழைத்து அவளுடன் ஏறி அவன் வீட்டிற்கு கிளம்பினான்.
செல்லும் வழியில் ஆட்டோவில் வைத்து “மாமு” என கவின் முடியை பிடித்து அவளருகே இழுத்து, “மாமு ச்சுசூ” சொல்ல, வாட்? அதிர்ந்தான் அவன்.
“மாமு” அவள் மீண்டும் சொல்லும் முன் அவளது வாயை அடைத்து ஆட்டோகாரனிடம் பக்கமிருந்த ஹோட்டல் ஒன்றில் ஆட்டோவை நிறுத்தி பணம் கொடுத்து அவரை அனுப்பி வைத்து விட்டு அவளை உள்ளே அழைத்து சென்றான்.
ஹோட்டலில் இருந்து ஒரு பொண்ணும் பெண்மணி வெளியே வந்தனர். அவர்களை அழைத்து மேம், இவங்கள கொஞ்சம் ரெஸ்ட் ரூம்ல்ல மட்டும் விடுங்களேன் சக்தியை அவர்களிடம் காட்டி கேட்டான் கவின். அந்த பெண்மணி இருவரையும் ஒரு மாதிரி பார்த்தனர்.
“தெரியாத பொண்ணாப்பா?” அவர் கேட்க, தெரிந்த பொண்ணு தான்.
இல்லை, இந்த நேரத்துல்ல ஹோட்டல்? பக்கமிருந்த பொண்ணு அவனை பார்க்க, தவறான எண்ணமிருந்தால் உங்களிடம் உதவி கேட்டிருக்க மாட்டேன். உங்களால உதவ முடியாதுன்னா இருக்கட்டும். நான் வேற யாரையாவது பார்த்துக்கிறேன் என சக்தியை தோளில் தாங்கியவன் கைகளில் ஏந்தினான்.
“சார்..சார்..சும்மா கேட்டோம்” அந்த பொண்ணு. விடுங்க நாங்க உதவுகிறோம் என்று சக்தியை தாங்கியவாறு வரவேற்பறை பெண் மூலம் உள்ளே சென்றனர்.
சக்தியை ஓர் அறைக்கு அழைத்து செல்ல, மடமடவென வாமிட் எடுத்தாள் சக்தி.
ஹே அந்த பொண்ணு அவளை தள்ளி விட, அந்த பொண்ணோட அம்மா சக்தியை குளியலறைக்கு அழைத்து சென்றார்.
“சார், அந்த பொண்ணுக்கு ஆடை வேணும்” அந்த பொண்ணு கவினிடம் கேட்க, அவன் பக்கமிருந்த கடைக்கு சென்று ஒரு சுடிதார் வாங்கி வந்து அந்த பெண்ணிடம் கொடுத்தான்.
சக்தியை தயாராக்கி கீழே ஆட்களுடன் அழைத்து வந்தனர்.
“சார், கார் இருக்கா?” அந்த பொண்ணு கேட்க, “அவன் புக் பண்ணனும்” என்று அலைபேசியை எடுத்தான்.
“எங்களோட கார்ல்ல வாப்பா” என்று அந்த பெண்மணி சொல்ல, அவன் யோசனையுடன் உங்களுக்கு எதுக்கு தொந்தரவு?
தொந்தரவா? அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த பொண்ணை தான் சமாளிக்க முடியல. எப்படி தான் நீங்க சமாளிக்கிறீங்களோ! அவர் கேட்க, என்ன? கவின் கேட்டான்.
“சார் வாங்க” அந்த பொண்ணு கவினை அழைக்க, அவனும் வேறு வழியில்லாது அவர்களுடன் கிளம்பினான்.
காரில் சென்று கொண்டிருந்தனர். நீங்க இருவரும் லவ் பண்றீங்களா? அந்த பெண்மணி கேட்க, ச்சே..ச்சே அதெல்லாம் ஒன்றுமில்லை என்றான்.
அந்த பொண்ணு சக்தியை ஒருவாறு பார்க்க, “எதுக்கு அவள இப்படி பாக்குறீங்க?” கவின் அவளிடம் கேட்டான்.
காரை ஓட்டிக் கொண்டே அவனை பார்த்து, உங்களுக்கு லவ் இல்ல அவளுக்கு உங்க மேல லவ் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
“லவ்வா? இவளா?” ஏளனமாக சக்தியை பார்த்த கவின், நாங்க இன்று காலை தான் மீட் பண்ணவே செய்தோம். வாய்ப்பேயில்லை என்றான்.
“எனக்கு தெளிவா தெரியுது” அந்த பெண்மணி கூற, அவன் அமைதியானான்.
என்னப்பா பதிலையே காணோம்?
கண்டிப்பாக காதல் இல்லை கவின் சொல்லிக் கொண்டிருக்க ஆத்விக் அலைபேசியில் அழைத்தான்.
“எக்ஸ்யூஸ்மீ” என்று அலைபேசியை காதில் வைத்தான்.
எங்கடா இருக்கீங்க? நான் உங்களை தேடி பப்பல்ல இருக்கேன்.
அவ நல்லா குடிச்சிட்டு நிதானம் இல்லாமல் இருக்கா ஆது. ஆரியன் சார் வீட்டுக்கு இவ இப்படியே போனால் நன்றாக இருக்காது. நான் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். நீ நேரா வீட்டுக்கு வாடா..
“குடிச்சிருக்காலா? எதுக்குடா குடிக்க விட்ட?”
“என்னடா நான் ஊத்தி குடுத்த மாதிரி கேட்குற?” கவின் சினமுடன் கேட்க, “சரி, ஏதும் பேசினாளா?” ஆத்விக் கேட்க, “என்ன பேசினாளா?” கவின் கேட்டான்.
இல்ல, ஒன்றுமில்லை ஆத்விக் சொல்ல, பேசுனா..அவளோட குடும்பத்தை மிஸ் பண்றா..
ஓ..அவ்வளவு தான பேசுனா?
ஆமா, வேறென்ன பேசணும் என்ற கவின், “டேய் சக்தி யாரையும் லவ் பண்றாளா?” கேட்டான்.
“என்னடா மச்சான்? கேட்கலை. சிக்னல் கிடைக்கலை போல. சீக்கிரம் வா” என்று அலைபேசியை வைத்து விட்டான் ஆத்விக்.
“சிக்னல் இல்லையா?” கவின் சிந்திக்க, அந்த பொண்ணும் பெண்மணியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியல. ஆனால் இந்த பொண்ணு உங்களை மாமூன்னு சொல்லுமா? அவர் கேட்க, அதிர்ந்து அவரை பார்த்தான் கவின்.
ஏன் ஏதும் சொன்னாலா?
ம்ம்..சொன்னா, அவளோட மாமூ அவளை முறைச்சிகிட்டே இருக்காராம். சிரிக்க மாட்டேங்கிறாராம் அந்த பொண்ணு கவினை பார்த்து புன்னகைக்க, அவள் யாரையோ மாமூன்னு சொல்லி இருப்பா. நாங்க பேசியது கூட இல்லை என்றான்.
இப்பொழுது உங்களிடம் பேசியது யாரு? இந்த பொண்ணுக்கு தெரிந்தவரா? அந்த பொண்ணு கேட்க, ஆமா என்னோட மச்சான் தான். அவரோட ஜூனியர் தான் இவள் என்றான்.
அப்படின்னா, இந்த பொண்ணோட மாமூவை அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. அவரிடம் கேட்டுக்கோங்க..
எதுக்கு இதெல்லாம்? தேவையேயில்லை என்றான் அவன்.
சரி, உங்கள் விருப்பம் என்று அவர்கள் அவன் வீடு வரவும் இருவரையும் அங்கே விட்டு சென்றனர். சக்தியை பார்த்தவாரே கவின் அவளை தாங்கி நடக்க, ஆத்விக் வேகமாக அவர்களிடம் விரைந்தான்.
சக்தியிடம் வந்து, “ஏய்..எதுக்கு குடிச்ச?” அவள் தலையில் ஓரு போடு போட்டான்.
மாமூ..எனக்கு பசிக்குது உலறினாள்.
ஏய்..ஏய்..என்று ஆத்விக் சினமுடன் கவினிடமிருந்து சக்தியை இழுத்து அவள் தலையில் கொட்ட, அவளோ ஆவென கத்தி அழுதாள்.
விழித்த சக்தி, ஹய் ஆத்விக் சார் அவன் கையை எடுத்து விட்டு நிற்க முடியாமல் காலை தூக்கி சல்யூட் செய்ய முனைந்து கவின் தந்தை சுகுமார் மீது சாய்ந்தாள்.
“அடியேய்” அதிவதினி அவளை இழுக்க, “அத்த இருங்க” என்று “வாய மூடு. வாய மூடு ஷ்ஷ்” ஆத்விக் அவளை மிரட்டினான்.
வாயை குவித்து ஷ்..என்று இடவலப்புறமாக தலையை ஆட்டி, அதிவதினியை பார்த்து “ஆன்ட்டி” என்று அவரை அணைக்க வந்தாள்.
கவின் அவளை பிடித்து தள்ள, ஆத்விக் சினமுடன் அவனை பார்த்து விட்டு, சக்தி வாயை அவன் கையால் அடைத்து அவளை தூக்கினான்.
“டேய் ஆது, என்ன பண்ற?” சுகுமார் பதற, மாமா நான் இவளை உங்க பையன் பாதுகாப்பா பார்த்துப்பான்னு தான் உடன் அனுப்பினேன். இவள் குடிக்கும் வரை உங்க பையன் என்ன செய்தான்? கோபமாக கேட்டான்.
“நான் சென்ற வேலையை பார்க்க வேண்டாமா? அவ குடிச்சா நான் என்ன செய்றது?” கவின் கோபமாக கேட்க, அத்தை..நான் இவனை நம்பி தான அனுப்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நம்மை நம்பி வந்திருப்பவங்கல்ல நாம தான பார்த்துக்கணும்? உங்க பையனுக்கு சுவாவை கொல்ல நினைக்கிறவங்க பத்தி தெரியல. எல்லாம் என் தப்பு தான். இவனை நம்பி அனுப்பினேன்ல்ல? சீற்றமுடன் வார்த்தைகள் வந்தது.
“இவளுக்காக என்னோட சண்டை போட்டுகிட்டு இருக்க ஆது?” கவின் கோபமாக கேட்டான்.
“அது என்ன இவளுக்காக?” ஆத்விக் அவனை சினமுடன் பார்த்தான். பெரியவர்கள் இவர்கள் சண்டையை முதலாவதாக பார்த்து அதிர்ந்து நின்றிருந்தனர்.
ஆமா, உன்னை நம்பி அனுப்பினேன்ல்ல ஆத்விக் கோபப்பட, சக்தி போதையில் ஆத்விக் பொத்தானை திருகிக் கொண்டிருந்தாள்.
“ஓ அப்படின்னா? இவ சொன்ன மாமூ..நீ தானா? ஆது உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கலை. இரண்டு பேரை ஒரே நேரத்தில் ஓட்டிட்டு இருக்கியா? என்ன பேசுகிறோம்?” என மறந்து கவின் ஆத்விக்கிடம் வார்த்தையை விட்டான்.
சக்தியை இறக்கி விட்டு ஆத்விக் கவின் கன்னத்தில் பளாரென அறைந்து, இப்ப ஆரியன் மாமா தோழர்கள் வரலைன்னா நீங்க இருவரும் உயிரோட இருந்திருக்க மாட்டீங்க? யூ ஃபூல் கத்தினான் ஆத்விக்.
கன்னத்தை தடவிய கவின் திகைத்து அவனை பார்க்க, நீ ஹோட்டலுக்கு செல்லவுமே எனக்கு மிரட்டல் வந்தது. மாமா அருகே இருந்தார். அந்த ஹோட்டல் வரவேற்ப்பறைக்கு உடனே அழைத்து, அங்கிருந்த அவருடன் படித்த தாரா என்ற பொண்ணு மூலம் தான் உங்களுக்கு உதவினார். உங்களை அழைத்து வந்த அந்த பெண்மணி யாருன்னு உனக்கு தெரியாதுல்ல. அவங்க ஹை கோர்ட் நீதிபதி என்றான் ஆத்விக்.
அதிர்ந்த கவின், அவங்க எங்களுக்கு உதவினாங்களா? அவங்க நீதிபதியா? கேட்டான்.
அவங்க உனக்கு உதவ வரலை. சக்திக்கு உதவ தான் வந்தாங்க. அவங்களுக்கு சக்தியையும் இவளுக்கு அவங்களையும் நன்றாக தெரியும். தாராவும் சக்தியும் சிறுவயது தோழிகள்.
அப்புறம் தெரியாதது போல நடந்துகிட்டாங்க?
கொலைசெய்ய வர்றவன் முன் அவங்க அடையாளத்தை காட்டி அவங்களும் மாட்டணுமா? ஆத்விக் கேட்க, கவின் சக்தியை பார்த்தான்.
நான் இவளை துருவோட தங்க வச்சிருக்கிறேன். உன்னோட உதவியை எதிர்பார்த்தது என் தவறு தான்..
“இவளோட மாமூ யாரு? அவங்களும் தெரியாதுன்னு சொன்னாங்க” கவின் கேட்க, “அது உனக்கு தேவேயில்லை” என்ற ஆத்விக் சக்தியை தூக்கினான்.
அங்க எல்லாருக்கும் வேலை இருக்கும். இந்த பொண்ணு என்னோட அறையில இருக்கட்டும். நான் பார்த்துக்கிறேன் என்றார் அதிவதினி.
“வது” அவர் கணவன் அழைக்க, இன்று மட்டும்.
“இல்லை” அவர் கவினை பார்த்தார்.
நீங்க தான் பார்த்துக்கிறேன்னு சொல்றீங்களா? என்று கவின் ஆத்விக்கிடம் சாரிடா ஓவரா பேசிட்டேன்.
துரு வேற சக்தி வேற. சக்தி எனக்கு சிஸ்டர் மாதிரி. அவ முன்னாடி இப்படி பேசாத என்று ஆத்விக் அதிவதினியை பார்த்து, அத்தை அவளை அறையில படுக்க வச்சிட்டு வாங்க. அவள் நாளை அணிய ஆடையை மாமா வாங்கி தந்தாங்க. அதை அவளிடம் கொடுத்து அணிய வையுங்க. ஆறு மணிக்கே அவள் தயாரா இருக்கணும். அதிக்கு அக்காவாக சக்தி தான் நிக்கணும் என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.
அதிவதினி சக்தியை இழுக்க, அவளோ நகருவதாக இல்லை.
கவின் பெற்றோர் அவனை பார்க்க, அவன் ஏதும் பேசாமல் அவளை தூக்கி அவன் அம்மா படுக்கையில் படுக்க வைத்து விட்டு வெளியே வந்தான் கவின்.
வெளியே சென்ற ஆத்விக் உள்ளே வந்து, இந்தாங்க அத்தை அவளுக்கு தேவையான எல்லாமே இதில் இருக்கு என்று கொடுத்தான்.
அதை பார்த்த, .ஆடை மட்டும் கொடுத்தால் போதும். நான் ஜூவல் தர மாட்டேனா? அதிவதினி கேட்க, உங்க பையன் சும்மாவே அதிகமா பேசிட்டான். திருட்டு பட்டம் கட்டி விட்டால் என்னை கூட இனி சக்தி நம்பமாட்டாள் என்று பட்டென கூறினான் ஆத்விக்.
“ஆது, என்ன இப்படி பேசுற?” கவின் கோபமாக கேட்க, நீ செய்வது அப்படி தான இருக்கு. உன் பேச்சே சரியில்லை மச்சான். உனக்கு சக்தியை பார்க்க பேச பிடிக்கலைன்னாலும் இன்று மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ. நாளையிலிருந்து அவளை நீ பார்க்க வேண்டாம். அவளோட கேஸை பிரச்சனையை எப்படி சரி செய்யணும்ன்னு எனக்கு தெரியும். நான் பார்த்துக்கிறேன் என்று கவின் பேச வருவதை கூட கேட்காமல் சென்று விட்டான் ஆத்விக்.
கவின் வருத்தமுடன் தன் பெற்றோரை பார்த்தான்.
“ஆது சொன்னது என்ன தப்பு இருக்கு? நீ எதுக்கு நம்ம ஆதுவோட இந்த பொண்ணை சேர்த்து பேசுன?” இந்த பொண்ணும் மோசமான பொண்ணு போல இல்லை. அந்த பொண்ணு எதற்கெடுத்தாலும் மாமூன்னு தான் சொல்லுது.
யாரையோ காதலிக்குதோ? அதிவதினி கேட்க, கவின் ஏதும் சொல்லாமல் அறைக்கு சென்றான்.
சுகு பதில் சொல்லாமல் போறான். நான் நினைத்தது நடக்காது போலவே! என்று அதிவதினி கேட்க, தெரியலையேம்மா..நீயாக கனவு காணாத வதும்மா என்று சுகுமார் சொல்லி விட்டு, தூங்கும்மா நாமும் இந்த பொண்ணோடவே கிளம்புவோம். அவர்களுக்கு உதவ ஆட்கள் இருப்பது சந்தேகம் தான் என்றார்.
நம்ம கவினை அங்க சென்று பார்க்க சொல்லலாம்ல்ல? அதிவதினி கேட்க, ம்ம்..கண்டிப்பா போவான். நான் அவனை அனுப்பி விட்டு என்னறைக்கு போகிறேன் என்று சுகுமார் கவின் அறைக்கு செல்ல, அவன் விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்தான்.
“கவின் கண்ணா?” அவர் அழைக்க, அப்பா என அவர் மடியில் படித்துக் கொண்டான் கவின்.
“அதியை மறக்க முடியலையா கண்ணா?” அவர் வருத்தமுடன் மகன் தலையை கோதினார்.
ம்ம்..என்று கண்ணீருடன் அவரை பார்த்தான். இன்னாருக்கு இன்னார் தான் என்று கடவுள் வகுத்ததை யாராலும் மாற்ற முடியாது. மறக்க கஷ்டம் என்றாலும் நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். நீ ஏத்துக்காமல் உன்னோட உணர்வுகளை காட்டி விட்டால் நம்ம அதி வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும்..
என்ன இருந்தாலும் மாப்பிள்ளைக்கும் அதியை பிடிச்சிருக்கு. அதிக்கும் அவரை தான் பிடிச்சிருக்கு. உன்னிடம் பாசமாக அவள் பேசும் போது நீ எமோஸ்னல் ஆனால் அதியை தான் எல்லாரும் தவறா பார்ப்பாங்க. மாப்பிள்ளைக்கும் அவள் மீதுள்ள நம்பிக்கை போயிடும். அப்புறம்..என அவர் பேசும் போதே..
அப்பா வேண்டாம். என்னால அதி வாழ்க்கை கெடாது. நீங்க ஆசைப்படுவது போல பொண்ணு பாருங்க. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று அவரை பார்த்தான்.
கவினை அணைத்து ஆறுதலளித்து..முதல்ல ஆதுவை சென்று பாரு. நம்ம அதி கல்யாணம். நாம இல்லாமல் பிள்ள தனியா பார்த்துட்டு இருப்பான். உன் உதவி அவனுக்கு தேவைப்படும் என்று அவர் சொல்ல, ம்ம்..இப்பவே கிளம்புகிறேன் என்று அவன் ஆத்விக்கை அழைக்க, அவன் அழைப்பை எடுக்கவில்லை. அதனால் ஆரியனை அழைத்தான் கவின்.
ஆரியன் அலைபேசியை எடுத்து, “கொஞ்சம் அத்துவை பார்க்க வா. அவன் அப்செட்டா இருக்கான்” ஆரியன் சொல்ல, மறுநிமிடம் அங்கிருந்து கிளம்பினான் கவின்.