ஏற்கனவே நடந்ததை ஆரியன் நண்பர்கள் கூற, துருவினியும் உத்தமசீலனும் மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளுடன் ஆத்விக் வருவதை பார்க்க, குழந்தைகள் முன் ஓடி வந்தனர். அவன் நேராக துருவினியை நோக்கி வர, அவளுக்கு இதயம் படபடவென துடித்தது. அவன் அவளருகே இருந்த உத்தமசீலனை அணைத்தான்.
“என்னாச்சுப்பா? பிரச்சனை ஏதுமில்லையே!” அவர் அணைத்தாவறே கேட்டார்.
“நோ அங்கிள்” அவன் குரல் தழுதழுக்க, தன் தந்தையை பார்த்தவாறே ஆத்விக்கை பார்த்தாள்.
“சார் அழுற மாதிரி தெரியுதே!” நக்கலாக கேட்டாள்.
“இல்லையே! இது ஆனந்தக் கண்ணீர்” என நகர்ந்து, சார் சொல்லாத..மாமா சொல்லு என்றான். உத்தமசீலன் அவனை முறைக்க, அங்கிள் இது தான முறை..
எனக்கு அப்படி தோணலையே!
“எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க” என்று அமர்ந்தான்.
“அவங்கள தனியா விட்டு வந்திருக்கீங்களா?” உத்தமசீலன் கேட்டார்.
எஸ் அங்கிள், அவங்க பேசணும். மனசு விட்டு பேசிட்டால் இனி பிரச்சனை வராது.
ஆனால் உங்க அம்மா? துருவினி கேட்க, நாம சீக்கிரம் இவங்க மேரேஜை முடிக்கிறது தான் நல்லது அங்கிள் என அவரை பார்த்தான்.
எல்லாரையும் அழைத்து தான் செய்யணும்.
“முதல்ல அவங்க என்ன முடிவோட வாராங்க பார்க்கலாம்” அவர் சொல்ல, ஆரியன் பைக் சத்தம் கேட்டது. எல்லாரும் எழ, அதியா முன் ஓடி வந்தாள்.
“எதுக்கு இப்படி ஓடி வர்ற?” ஆத்விக் கேட்க, போடா என அவனை தள்ளி விட்டு, சமையலறைக்கு சென்று பாத்திரங்களை உருட்டினாள்.
“அதி, என்ன பண்ற?” துருவினி கேட்க, ஆரியன் உள்ளே வந்தான். எல்லாரும் அவனை எதிர்பார்ப்புடன் பார்க்க, நாளைக்கே மேரேஜ் பண்ணனும். ஏற்பாட்டை கவனிங்க என்றான்.
“மாமா, யாரோட கல்யாணம்?”
“உனக்கு தெரியாதா?” ஆரியன் கேட்டான்.
“ஓ கவினா?” சிரிப்பை அடக்கி ஆத்விக் கேட்க, அவனை முறைத்து “எங்களுக்கு” என அழுத்தமாக கூறி, சீக்கிரம் ஏற்பாட்டை ஆரம்பிங்க என்றான்.
“அதான் நான் இருக்கேன்ல்ல மாமா” என்ற ஆத்விக், யாரையோ அழைத்து பேசினான்.
எல்லாமே அவங்களே பார்த்துப்பாங்க. இடத்தை மட்டும் சொல்லுங்க என்றான்.
அதிகிட்ட கேட்டுக்கோ என்றான்.
“ஆமா, அவ கிச்சன்ல்ல என்ன செய்றா? எதுக்கு ஓடி வந்தா?” ஆத்விக் கேட்க, ஆரு “துரு ரொம்ப மோசம். எதுவுமே செய்யலை” என்று வயிற்றை தடவிக் கொண்டே ரொம்ப பசிக்குது என்றாள்.
“அடச்சே, இதுக்கு தான் ஓடி வந்தீயா? பைத்தியமே!” ஆத்விக் சொல்ல, ஆரியன் அவனை முறைத்தான்,
அவ என்னோட தங்கச்சி தான். நான் திட்ட தான் செய்வேன்.
“என்ன செய்றது?” அதியா ஆரியனை பார்க்க, நீ பார்க்க வேண்டியது என்னை. வா..எனக்கு கெல்ப் பண்ணு துருவினி அதியா கையில் கத்தியை கொடுக்க, எனக்கு பசிக்குது. இப்ப வேலையெல்லாம் செய்ய முடியாது.
சட்டையை கழற்றி தொங்க விட்டு, “கிச்சன் வந்து ரெண்டு பேருமே வெளிய போங்க” என்று ஆரியன் வேலையை ஆரம்பிக்க, “ஆரு உங்களுக்கு சமைக்க தெரியுமா?”
ம்ம்..சமைப்பேன். நீ போ என அவளை வெளியே தள்ளி சமைக்க, ஆத்விக் அவனுக்கு உதவ, இருவரும் சமையலை முடித்தனர்.
அனைவரும் அமர்ந்து உணவுண்டனர். ஆத்விக் அனைவரிடமும் சொல்லி விட்டு கவினை பார்க்க செல்ல, ஆரியன் அதியாவும் உடன் சென்றனர்.
கவினும் அவனது பெற்றோரும் ஹாஸ்பிட்டலில் இருந்தனர். ஆத்விக், அதியா, ஆரியன் அவர்கள் இருந்த அறைக்கு வந்தனர்.
“மாமா, டாக்டர் என்ன சொன்னாங்க?” கவினை பார்த்துக் கொண்டே அவன் தந்தையிடம் சென்றாள் அதியா.
கொஞ்ச நேரத்துல்ல கிளம்பலாம்ன்னு சொல்லி இருக்காங்கம்மா.
“மாமா, சக்திக்கு என்ன சொன்னாங்க? அவளுக்கு ஒன்றுமில்லையே!”
இல்லப்பா, அந்த பொண்ணு மயங்கி தான் இருந்திருக்கா. அவள கிளம்ப சொல்லீட்டாங்க. அந்த பொண்ணு தான் நீ வரணும்ன்னு சொன்னா. போய் பார்த்துட்டு வா என்று சுகுமார் ஆத்விக்கிடம் சொன்னார்.
“போகும் போது அழைச்சிட்டு போறேன் மாமா” கவின் அருகே வந்து அமர்ந்தான்.
“வாப்பா, உட்காரு” அதிவதினி ஆரியனுக்கு பலமாக வரவேற்பு கொடுக்க, அவர் அழுதிருக்கிறார் என்று அனைவருக்கும் நன்றாக தெரிந்தது.
“அத்தை” அதியா அழைக்க, அவர் அவளை அணைத்துக் கொண்டார்.
“அம்மா” அழுத்தி கவின் அழைக்க, கண்ணீரை துடைத்து விட்டு நகர்ந்து நின்றார்.
“ஆரியன் சார், அதி இங்க வாங்க” கவின் அழைக்க, மாமா ரொம்ப வலிக்குதா? அதியா அவன் கையை பிடிக்க, அவளை முறைக்கும் ஆரியனை புன்னகையுடன் பார்த்தான் கவின்.
சார், நீங்க உங்க காதலை மறைக்க காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அதை இனி உங்க வாழ்க்கையில கொண்டு வரக் கூடாது. நான் இதை சொல்லலாமான்னு தெரியல. அதி ஹாப்பியா இருக்கணும். அதுக்கு தான் சொல்றேன்.
“அப்புறம்” என தயங்கி அனைவரையும் பார்த்து விட்டு ஆரியன் அதியாவை பார்த்தான் கவின்.
நான் கேட்பதற்கு உங்க மனசுல இருந்து எனக்கு பதில் வேண்டும்? என ஆரியனிடம் பீடிகை போட்டான்.
“என்ன?”
“ஒரு வேளை உங்களுக்கு அதியுடன் திருமணம் முடிந்த பின் உங்களது முதல் மனைவி உங்கள் முன் வந்தால் என்ன செய்வீங்க? இருவருமே எனக்கு பதில் சொல்லணும்” என்று அதியாவை பார்த்தான்.
கவின், என்ன கேக்குற? சுகுமார் சினமாக, அப்பா..ப்ளீஸ்..எனக்கு தெரியணும். அவ்வளவு தான்..
“எதுக்குடா திடீர்ன்னு இப்படி கேக்குற?” ஆத்விக் கேட்டான்.
அதி ஏற்கனவே நிறைய கஷ்டப்பட்டுருக்கா. அவளால் இதை தாங்க முடியுமான்னு சந்தேகம் தான் என்று கவின் அவளை பார்த்தான்.
மாமா, அவங்க உயிரோட இல்லை. அவரே சொன்னார்.
நான் உண்மையை பேசலை. ஜஸ்ட் உங்களை அனலைஸ் பண்ணும் கேள்வி தான்..
நான்..நான்..என்ன செய்யணும்? தெரியலையே! அதி கண்கலங்க சொல்ல, அவள் கையை பிடித்த ஆரியன், சைந்தவிக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. தாலி கட்டினேன். சில நாட்கள் தான் உடன் இருந்தேன். மற்றபடி அவளுக்கு பிடித்தது பிடிக்காதது எதுவுமே எனக்கு தெரியாது. எனக்கு அப்பொழுது என்னோட வேலை தான் பெரியதாக பட்டது. அம்மாவிற்காக தான் அந்த சில நாட்கள் கூட தான்..
“சார், இதை நான் கேட்கலை” கவின் சொல்ல, “சார் இல்லடா அண்ணான்னு கூப்பிடணும்” அதிவதினி கூறினார்.
ஓ.கே அண்ணா, சொல்லுங்க என்று அவன் அம்மாவை பார்த்தான். அவர் புன்னகைத்தார்.
என் மனதில் சைந்தவிக்கென்று ஓர் இடம் நான் கொடுத்ததேயில்லை. ஆனால் அதி என அவள் கையை இறுக பற்றி, இனி சாகும் வரை அதி மட்டும் தான் மனசுலயும் இருப்பா. என் வாழ்விலும் இருப்பா..
குட். “அதி நீ சொல்லு? எனக்கு தெரியாதுன்னு சொன்ன அவ்வளவு தான் கண்டிப்புடன் கவின் கூற, அதியா ஆரியனை பார்த்தாள்.
ஆரியன் அவள் கையை விட, அவன் கையை பிடித்து, மாமா அவங்க எங்க முன்னாடி வந்தா ஆரு கையை இப்படி பிடிச்சுப்பேன். விடவே மாட்டேன் என்றாள்.
ஓ அப்படியா? புன்னகைத்த கவின், கையை எப்போதும் பிடிச்சுக்கிட்டே இருக்க முடியாதே வெல்லக்கட்டி!
மாமா, நீ ரொம்ப டஃப்பான குவர்ஸ்டின் கேட்குற? எனக்கு சொல்ல தெரியல…
“சொல்லத் தெரியலையா? இப்படி அவ முன்னாடி நின்ன வாழ்க்கையே போயிரும்” அதிவதினி சொல்ல, “அத்தை நீங்களும் மாமாவோட சேர்ந்து இப்படி பேசுறீங்க?”
புருசனோட வாழ எந்த எல்லைக்கும் போக தயாரா இருக்கணும்.
எல்லையா?
ஆமா, சில நேரம் வாய்ச்சண்டை கூட போடணும்.
அய்யோ அத்தை, என்னால முடியாதே!
“ஆமா ஆமா உன்னால எப்படி முடியும்? சாப்பிட சொன்னால் எவ்வளவு இருந்தாலும் நல்லா திங்க தான முடியும்?” ஆத்விக் சினமுடன் சொல்ல, “போடா நீ என்னை திட்டிக்கிட்டே இருக்க?”
ஆரியன் அதியாவை அவன் பக்கம் திருப்பி, நீ எதுவும் செய்ய வேண்டாம். என்னை நம்பினால் போதும்.
“என்ன சொல்ல வர்றீங்க? எல்லாரும் என்னை குழப்புறீங்க?” அதியா சொல்ல, அதி..நான் அவள் பக்கம் போக மாட்டேன்னு நம்பணும். அவளிடம் பேசினாலும் என்னை நீ நம்பணும்..
“என்னது? செத்து போன மனைவிகிட்ட பேசப் போறீங்களா?” அவள் கேட்க, அவள் தலையில் ஓங்கி கொட்டினான் ஆத்விக்.
“ஆ”வென கத்தி அதியா அழ, “அத்து சும்மா இருடா” என ஆத்விக் கொட்டிய இடத்தில் தடவிக் கொண்டே, அவள் இருந்தாலும் சரி அவள் இல்லைன்னாலும் நான் அவளிடம் பேசினாலும் என்னை நீ நம்பணும்.
“நீங்க எதுக்கு பேசணும்?”
“எப்படி தான் இவளை சமாளிக்கப் போறீங்களோ?” ஆத்விக் தலையில் அடித்தான்.
அவள் என்னை திருமணம் செய்த காரணம் புகழ் தான். என்னோட துறையில் எனக்கு நல்ல பெயர் இருந்தது.
ஓ..அப்படியா? ஆரு அவங்க பெற்றோர் எங்க இருக்காங்க?
அவளுக்கு யாருமில்லை. ஆசிரமத்தில் வளர்ந்தவள் தான். அம்மாவுக்கு அவளை பிடித்திருந்தது. அதனால் திருமணம் செய்து வச்சாங்க..
ம்ம்..ஆரு, உங்க அம்மாவுக்கு என்னை பிடிக்குமா? அதியா கேட்க, கண்டிப்பா பிடிக்கும். உன்னை முன்னே பார்த்திருந்தால் நமக்கு கூட திருமணம் செய்து வைத்திருக்கலாம்.
“அப்படின்னா சைந்தவி மேம் மாதிரி தான் அதியை ட்ரீட் செய்திருப்பீங்களா?” கவின் கேட்க., ஆரியன் அவனிடம் அவள் என்னிடம் ஒருநாள் கூட பேச முயற்சித்ததேயில்லை. வீட்ல இருக்கிறவங்களுக்காக பேசிப்போம்.
“அப்படின்னா அவங்க விருப்பமில்லாமல் தான் உங்களை திருமணம் செஞ்சாங்களா?”
தெரியாது என்றான் ஆரியன்.
மாமா, எதுக்கு இதெல்லாம்?
“சரி, அதியை எந்த நிலையிலும் கைவிடக் கூடாது” என்று கவின் சொல்ல, கவின் கையை பிடித்து ஆரியன் பிராமிஸ் செய்தான்.
அதியா கவினை முறைத்து, “இதை முன்பே கேட்டிருந்தால் பிராமிஸ் செய்து கொடுத்திருப்பார்ல்ல?”
எனக்கு இனி எந்த சந்தேகமும் இருக்காது. நிம்மதியாக இருப்பேன்ல்ல? கவின் சொல்ல, “மாமா” என திட்டிய அதியா கண்கள் கலங்கியது. ஆரியன் அவளை அவன் தோளில் சாய்க்க, அவள் ஆரியனை அணைத்து கவினை பார்த்து, சாரி மாமா..உன்னோட காதல் எனக்கு தெரியாது..
“எனக்கு நீ சந்தோசமா புன்னகையோட இரு போதும்” என கண்களை மூடினான் கவின். ஆத்விக் அவன் கையை பிடிக்க, சக்தி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்த ஆரியன், சக்தி எதுக்கு என்னோட கடைக்கு வந்தா? ஆத்விக்கை பார்த்து கேட்க, கவின் கண்களை திறந்து அவளை பார்த்தான்.
சக்தி ஆரியன் அருகே வந்து, “சாரி சார்..உங்களை நாங்க எப்படியாவது பழைய இடத்திற்கு வர வைக்க எண்ணினோம். அதான் அன்று ஓவரா பேசினேன்”.
ஆமா, மாம்ஸ் போல யாரும் நேர்மையாகவும் திறமையாகவும் அவங்க துறையில இல்லை. அதான் கொண்டு வர நினைச்சோம். கொண்டு வந்துட்டோம்..
ஆரியன் அவனை முறைக்க, சும்மா முறைக்காதீங்க மாமா. எல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் அதிகமாலிடுச்சு. திறமைக்கு மதிப்பில்லாமல் போச்சு. நீங்க உள்ள வந்தால் பயப்படுவானுக. அதான்..
சார், அதை விட இப்ப கூட நிறைய இளம்தலைமுறையினர் உங்களை பற்றி அறிந்து உங்களை தேடிட்டு இருக்காங்க என்றாள் சக்தி.
எதுக்கு சிரிக்கிறீங்க? நான் ஒன்றும் காமெடி பண்ணலை. நீங்க சூப்பர் ஹூரோவா யாருக்கும் இருக்கக் கூடாது. எனக்கு மட்டும் தான் நீங்க சூப்பர் ஹீரோ. வேணும்ன்னா ஆகு, தர்சுவை சேர்த்துக்கலாம். மத்தவங்களெல்லாம் வேண்டாம் அதியா சக்தியை முறைத்தாள்.
ஆரு, இவன் ஓவரா பேசுறான். உங்களுக்கு இந்த ஜாப் வேண்டாம். நம்ம சூப்பர் மார்க்கெட் இருக்குல்ல போதும்.
நோ..நோ..என அதியாவை ஆரியனிடமிருந்து இழுத்து நகர்த்திய ஆத்விக் ஆரியனருகே அமர்ந்து, நீ கிளம்பு. நானும் மாமாவோட நம்பர் ஒன் ஃபேன்.
“ஃபேனா? அதெல்லாம் முடியாது எழுந்திருடா” அதியா ஆத்விக்கை பிடித்து இழுத்தாள்.
அதியாவோ கோபமாக சுகுமார் அருகே செல்ல, “அதி, இங்க வா” ஆரியன் அழைக்க, “மாமா..நான் போக மாட்டேன்” என்றான் விடாப்பிடியாக ஆத்விக். அவனை பார்த்து விட்டு, “வான்னு சொன்னேன் அதி” ஆரியன் அழைக்க, உதட்டை பிதுக்கிக் கொண்டு அவனருகே வந்தாள். அவளை இழுத்து ஆரியன் அவன் மடியில் அமர வைத்தான். அதிவதினி வெட்கமுடன் கண்ணை மூடினார்.
அதியாவோ ஆரியனை விழித்து பார்க்க, ஆரியனும் அவளை பார்த்தான்.
ஹலோ, உங்க ரொமான்ஸை நாளை திருமணம் முடிந்த பின் வச்சுக்கோங்க என ஆத்விக், “நீயே மாமா பக்கத்துல்ல உட்கார்ந்துக்கோ” தலையை சிலுப்பி எழுந்தான் ஆத்விக். அங்கு மனநிறைவான மகிழ்ச்சியலை பரவியது.
“சார்” ஆத்விக்கை அழைத்தாள் சக்தி.
“ஹா சக்தி, அந்த பயலுகள எங்க?” ஆத்விக் கேட்க, சார் அவங்க வாரேன்னு சொன்னாங்க. கால் பண்ணா எடுக்க மாட்டேங்கிறாங்க அவள் சொல்ல, பிரஜித்தும் துரியனும் வந்தனர்.
“எவ்வளவு நேரம்டா? எங்க போனீங்க?” சக்தி கேட்க, சாரிடி என பிரஜித் அவளை ஆராய்ந்தான்.
“நான் ஓ.கே தான். நீங்க என்ன பண்ணீட்டு இருந்தீங்க?”
அய்யோ வர்ற வழியில ஒரு பொண்ணு எங்க பைக்ல்ல அடிபட்ருச்சு..
“என்னடா சொல்றீங்க? மெதுவா வர வேண்டியது தான” சக்தி கேட்க, துரியன் இடுப்பில் கை வைத்து அவளை முறைத்து, நீ தான அன்று வேகமாக வர மாட்டேங்கிறோம்ன்னு தனியா போன? அதான் வேகமாக வந்தோம்.
அந்த பொண்ணு ஒன்றுமில்லையே!
அய்யோ, ஏன் கேக்குற? சரியான வாயாடி பொண்ணு சக்தி. சமாளிக்க முடியல பிரஜித் புலம்ப, அதெல்லாம் அந்த பொண்ணு நல்லா தான் இருக்கா சக்தி. “நீ ஓ.கே தான?”
“டேய், நீங்க கிளம்புங்க. இனி நான் பார்த்துக்கிறேன்” ஆத்விக் சொல்ல, “சார்..என்ன சொல்றீங்க?” பிரஜித் கேட்க, மும்பைல்ல சமீரா தனியா கவனிச்சிட்டு இருக்கா. நீங்க இருவரும் போங்க..
அப்ப சக்தி, அவள் என்னோட இங்க வொர்க் பண்ணுவா..
“சார்” பிரஜித் இழுக்க, அவன் காதை திருகி சக்தி அவனை வெளியே இழுத்து சென்று, எனக்கு உன் மேல எந்த விருப்பமும் இல்லை.
“சார் மேல லவ்வா?”
இல்லை..இல்லை..அவர் ஒரு பொண்ணை காதலிக்கிறார். நீங்க சமீக்கு துணையா இருங்க. நான் கிளம்பும் போதே புலம்பிட்டு இருந்தா என சொல்லி அவர்களை கிளப்ப, ஆரியனை பார்த்து “சார் எனக்கு ஆட்டோகிராப்” துரியன் கேட்க, “எனக்கும்” என பிரஜித்தும் கேட்க, டேய் நான் ஒன்றும் ஸ்டார் இல்லை..
சார், கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கும் ஸ்டார் சார் நீங்க..
“போதும்டா. என் அண்ணனை விட அவரை ரொம்ப புகழ்ந்துட்டீங்க? கிளம்புங்கடா” அதியா அவர்களை விரட்ட, சார் உங்க தங்கச்சி ரொம்ப பாவம் துரியன் சொல்ல, “ஏன்டா?” அதியா கேட்டாள்.
சாரை நிறைய கெர்ல்ஸூக்கும் தெரியும். சோ..
“ஓடிரு” அதியா அவனை விரட்டினாள். அவர்கள் மும்பை கிளம்பினார்கள். “சக்தியை தனியே விட முடியாது” என்று ஆத்விக் ஆரியனிடம், “மாமா, நான் உங்க வீட்ல தங்கிக்கவா? இவ என்னோட வீட்ல தங்கட்டும்”.
“அதெல்லாம் வேண்டாம். சக்தி எங்களுடன் தங்கட்டும்” ஆரியன் சொல்ல, அதியா அவளை முறைக்க, “அதி..நீ சக்தியை இன்வெயிட் பண்ணு” சொல்ல, “பண்ணலாம். அங்கிளும் வினுவும் ஒத்துக்கணுமே!” என்று அவனை பார்த்தாள்.
“அவங்களை நான் பார்த்துக்கிறேன்” என்று ஆரியன் அதியாவை பார்க்க, “சக்தி, நீ எங்களுடன் தங்கிக்கலாம். ஆனால் சமத்து பொண்ணா இருக்கணும். ஓ.கே வா?”
“சக்தி சின்னப் பொண்ணு இல்லை அதி” ஆத்விக் சொல்ல, “தெரியுது” என்று அவள் சொல்ல, சார் நான் ஹாஸ்ட்டல்ல இருந்துப்பேன் என்றாள் சக்தி.
அதான் கூப்பிட்டால்ல. நீ தங்கிக்கோ. மேரேஜூக்கான வேலையை பார்க்க கிளம்பணும் ஆத்விக் சொல்ல, இன்று அதி எங்களோட தான் இருப்பா.. அதனால நீங்க கிளம்புங்க அதிவதினி ஆரியனை பார்த்தார்.
ஓ.கே ஆன்ட்டி..
ஆன்ட்டியில்லை..சித்தி என்றான் கவின்.
ஓ.கே சித்தி என அதியாவை பார்த்துக் கொண்டே, கொஞ்சம் அவளோட பேசலாமா? ஆரியன் கேட்டான்.
பேசலாம்.
அத்தை, ஆகு என்னை விட்டு தூங்க மாட்டாளே!
அதெல்லாம் பழகிப்பா..
அத்தை..
“அதி பேசாத. மாப்பிள்ளைகிட்ட பேசிட்டு வா” அவர் கண்டிப்புடன் கூற, இருவரும் தனியே சென்றனர்.
“அட அட என்ன பெருந்தன்மை? இப்படி திருமணத்திற்கு முன்பே அனுப்பி விடுறாங்க பெரியவங்க?”
பிள்ளைகளை பார்த்தால் தெரியாதா ஆது. உன்னையெல்லாம் விடவே மாட்டோம் என்றார் சுகுமார்.
“மாமா” அவன் அழைக்க, அனைவரும் புன்னகைத்தனர்.
“ஆது, இந்த பொண்ணு யாரு?” அதிவதினி சக்தியை பார்த்து கேட்க, அவன் சக்தி குடும்பத்தை அழிச்சுட்டாங்க. அவள் பாதுகாப்பிற்காக இங்கே அழைத்து வந்ததாக சொல்லி கவினை பார்த்தான்.
மச்சான், மேரேஜ் நீ இல்லாம நடக்காது. வருத்தப்பட்டு வராம இருந்திருறாத ஆத்விக் சொல்ல, உன்னோட அம்மாவுக்கு விசயம் தெரிந்தால் ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்கடா..
பிரச்சனை செய்ய முடியாதபடி செய்திடலாம் ஆத்விக் சொல்ல, கவின் கீழே இறங்கினான்.
“என்ன செய்யப் போற?”
அவங்களுக்கு தேவையான சொத்தை வைத்து தான் ஆட்டம் காட்டணும்..
கவின் சிந்தனையுடன், “ஏமாத்தப் போற?”
அப்சல்யூட்லி. அவங்க பெயரில் சொத்தை அதி எழுதி கொடுப்பதாக சொல்லி அவங்கள வர வச்சி அவங்க முன்னிலையிலே நம்ம அதி திருமணம் நடக்கப் போகுது..
“ஷனாவை அவங்களிடம் விடாமல் பார்த்துக்கணும்டா” கவின் சொல்ல, அதற்கு தான் ஆள் இருக்கேன் என்று ஆத்விக் புன்னகைத்தான்.
“ஆள் இருக்கா?” கவின் கேட்க, “ஹே ஆது, அந்த பொண்ணு தான?” அதிவதினி ஆர்வமுடன் ஆத்விக்கிடம் வந்து கேட்டார். ஆத்விக் புன்னகையுடன் துருவினியை நினைக்க, “டேய் மச்சான் வெட்கப்படுற” கவின் சிரிப்புடன் கேட்டான்.
“இல்லையே! நான் எதுக்கு வெட்கப்படணும்?”
டேய் ஆது.. அதிவதினி அவனுக்கு கிச்சு கிச்சு மூட்ட, அத்தை..விடுங்க சிரித்தான்.
“யாருடா அந்த பொண்ணு? எத்தனை முறை கால் பேசினோம். நீ சொல்ல வில்லை” கவின் கேட்க, “ஆரியன் சார் சிஸ்டர் துருவினி தான்” சார் என்றாள் சக்தி.
அவளை பார்த்து அதிர்ந்து, “டேய், எதுக்குடா? ஏன்டா?”
“எதுக்கா? ஏன்னா? என்ன கேள்விடா கேக்குற?” அவன் தந்தை கவினிடம் கேட்டார்.
இல்லப்பா, இவன் அவளை..
எனக்கு முன்னாடியே அவளை தெரியும். பர்ட் சைட் லவ்டா மச்சான் ஆத்விக் அசைந்து வழிந்து கொண்டே கூறினான்.
“அடச்சே ஆடாம நில்லு. ரொம்ப வழியுறடா. அவ பக்கத்துல்ல கூட இல்லை” கவின் சொல்ல, “இருக்காடா இங்க” என்று அவன் நெஞ்சை காட்ட. “போச்சுடா இனி உன்னோட சுத்துனா நானும் பைத்தியமாகிடுவேன்” கவின் சொல்ல, சக்தி இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.
அதிவதினி அவளை பார்த்து, “நீ என்னம்மா படிச்சிருக்க?” கேட்டார்.
ஆன்ட்டி, நான் என்று சக்தி ஆத்விக்கை பார்த்தாள்.
அத்தை, சக்தி என்னோட ஜூனியர் தான்.
லாயரா? அவர் கேட்க, லேசாக புன்னகைத்த சக்தி நான் வெளியே இருக்கேன் என நகர்ந்தாள். ஆத்விக் அவளை பார்த்துக் கொண்டே நின்றான்.
“என்னாச்சுடா?” அதிவதினி கேட்க, “நான் வாரேன் அத்தை” ஆத்விக் அவள் பின் வெளியே வந்தான்.
“சக்தி” அவன் அழைக்க, “சார்…டாட் ஆசைக்காக படித்தது என்றாலும் ஆர்வமுடன் படித்தேன். லாயராக இருந்தும் அவங்கள காப்பாற்றவும் முடியல” கண்ணீர் வடித்தாள்.
கவினை அறைக்குள் இருக்க சொல்லி அவன் பெற்றோர் வெளியே வந்தனர்.
“ஆதூர் என்ன செய்தான்?” சின்னப்பையன் சார். கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் கொன்னுட்டாங்க. நான் லாயர்ன்னு சொல்றதுக்கு அசிங்கமா இருக்கு என்று நாற்காலியில் அமர்ந்து முகத்தை மூடி அழுதாள்.
“விடு சுவா?”
நோ..சார், அவனுக யாருன்னு தெரிந்தும் நான் விடணுமா? நான் வந்த வேலை முடிந்தால் மும்பை போகணும் சார்..
“என்ன சொல்ற சக்தி?” சீரியசாக ஆத்விக் கேட்டான்.
ஐ அம் சாரி சார். நீங்க உங்க குடும்பப் பிரச்சனையையும் உங்களது எதிர்காலத்தையும் பாருங்க. என்னோட குடும்பத்தை அழிச்சவனுகள சும்மா விட முடியாது. அந்த ஜான்வி இங்க வந்திருக்கா. அதனால் தான் உங்களுடன் வந்தேன்.
“சக்தி” கோபமாக அழைத்தான் ஆத்விக்.
“சாரி சார்” எழுந்தாள்.
இப்ப என்ன உன்னோட குடும்பத்தை அழிச்சவங்கள பழி வாங்கணும். அவ்வளவு தான..பார்த்துக்கலாம்.
வேண்டாம் சார். உங்களுக்கு ஏற்கனவே நிறைய வேலைகளும் பொறுப்புகளும் இருக்கு. எனக்கு யார் இருக்கா? அந்த ஜான்வி இன்று இரவு பப்புக்கு போறான்னு நியூஸ் வந்தது.
“நியூஸ் வந்ததா? நீ முதல் முறையாக இப்ப தான வர்ற?”
எஸ் சார், தூரியன் ப்ரெண்ட்ஸ் இங்க இருக்காங்க. அவங்க தான் அவளை வாட்ச் பண்ணி சொன்னாங்க.
“அவனோட ப்ரெண்ட்ஸ நீ எப்படி நம்புற?” ஆத்விக் கோபமாக கேட்டான்.
“நான் என்ன சார் செய்றது?” விரக்தியுடன் கேட்டாள்.
நமக்கு ஒருத்தர் உதவினால் நம்மிடம் ஏதாவது எதிர்பார்ப்பாங்க. உனக்கு தெரியாதா? சினமுடன் கேட்டான்.
தெரியும். கேட்டான் சார்..
“கேட்டானா? என்ன கேட்டான்?” ஆத்விக் கேட்க, அவனோட டேட்டிங் பண்ணனும்ன்னு கேட்டான் என்றாள்.
“ஏய்..உனக்கு புரியலையா? எப்படி இப்படி மாறின?”
ஒன்றை இழந்தால் தான ஒன்று கிடைக்கும் சக்தி தத்துவம் பேச, பெரியவர்கள் அதிர்ந்து அவளை பார்த்தனர். ஆத்விக் பளாரென அவளை அறைந்தான்.
“அண்ணா, என்ன பண்ற?” அதியா சக்தியிடம் ஓடி வந்தாள். ஆரியனும் அவள் பின்னாலே வந்தான்.
என்ன செய்ய துணிஞ்சிட்ட? ஆத்விக் சீற்றமுடன் கத்தினான்.
“ஆது, நாம ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்” அதிவதினி அவன் கையை பிடிக்க, “அத்த எப்படி பேசுறா பாருங்க”.
“ஏம்மா?” அவர் கேட்க, “அத்தை என்ன செஞ்சா?” அதியா கேட்டுக் கொண்டே சக்தியை பார்க்க, அவள் கண்ணீருடன் குற்றவாளியாக நின்றாள்.
கவின் ஆத்விக் சத்தம் கேட்டு வெளியே வந்தான்.
“நான் போறேன்” சக்தி நகர, அவளை இழுத்து மீண்டும் அறைந்தான் ஆத்விக்.
“அதென்ன பொம்பள பிள்ளைய அடிக்கிற? என்ன பழக்கம்?” சுகுமார் ஆத்விக்கை திட்டினார்.
“மாமா, அவ பேசுனதை கேட்டீங்கல்ல?”
இறந்தவங்களுக்காக வேண்டிக்கோம்மா. அதுக்காக பழி வாங்கணும்ன்னா பேசுவ அதுவும் எந்த வழியில என்று அவர் முகம் சுளித்தார்.
அதியா புரியாமல் விழித்தாள்.
சுகுமாரும் அதிவதினியும் அவளை பார்த்து முகம் சுளிக்கவும் சக்திக்கு தாங்காது அழுகை வந்து விட்டது.
“என்னை எப்படி சும்மா இருக்க சொல்றீங்க? என்னால முடியாது. என்னோட பேமிலி யாரும் தப்பு செய்யலை. அதிலும் என்னோட அண்ணா, அக்காவோட சின்ன பசங்க என்ன செஞ்சாங்க?” என கதறி அழுதாள்.
அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல்ல? ஆத்விக் கேட்க, அழுகையை குறைத்து அவனை பார்த்த சக்தி..உங்களால என்ன சார் செய்ய முடியும்? என்னோட குடும்பத்தோட பிரச்சனை தான சார்..நானே பார்த்துக்கிறேன்.
மெண்டல் மாதிரி பேசாத சக்தி.
இல்ல சார், இப்ப தான் தெளிவா இருக்கேன். இனி நாம மீட் பண்ண வேண்டாம். உங்களுக்கு பேமிலி இருக்காங்க. அவங்கள நல்லா பார்த்துக்கோங்க..
ஆத்விக்கோ அவளை தனியே விட முடியாமல் திணறினான்.
ஆரியனோ, என்ன பிரச்சனைன்னு சொல்லு?
சார், அதி மேம்மை விட்றாதீங்க. நீங்க இத்தனை வருசமா உங்க ஜாப்பை விட்டு போனதுக்கு வருந்துனீங்களான்னு தெரியாது. ஆனால் என் அண்ணா வருத்தப்பட்டான். அவனுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்க வேலையை பாருங்க..நான் கிளம்புகிறேன்.
எங்க போகப் போற? ஆத்விக் கேட்டான்.
நான் எங்கேயும் போறேன்..
சக்தி, என்னை ரொம்ப கோபப்படுத்துற? உன்னை அவங்க கண்டு கொள்ளக் கூடாதுன்னு தான் சக்தின்னு புதிய அடையாளத்தை கொடுத்தேன் ஆத்விக் சொல்ல, என்னடா சொல்ற? கவின் கேட்டான்.
சாரி சார், எனக்காக நிறைய உதவி செஞ்சிருக்கீங்க. ரொம்ப நன்றி. நான் சாவதற்குள் எல்லாரையும் கொன்னுட்டு தான் சாவேன் அதுக்காக தான் சக்தி என்ற அடையாளம் என்று அவள் நகர்ந்தாள்.
அதியாவோ வேகமாக ஓடி அவள் முன் நின்று,” சக்தி உயிர் உனக்கு அவ்வளவு சாதாரணமா போச்சா?” சினமுடன் கேட்டாள்.
இல்லை. அந்த உயிருக்காக தான் செய்யப் போறேன்..
“இல்ல சக்தி” அதியா பேச, ஒரு நிமிசம் உங்க அக்காவை உங்க கண்ணு முன்னாடி கொன்னுட்டான் ஒருவன். அவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவனை உங்களால் ஏதும் செய்ய முடியலையா? செய்திருக்கணும். உங்களுக்கு வாய்ப்பு தேடி வந்தது. விட்டுட்டீங்க..
உங்க இடத்துல்ல நானும், உங்க அக்கா இடத்துல்ல என் அக்காவும் இருந்திருந்தால் இப்ப அவன் உயிரோட இருந்திருக்க மாட்டான். அவனை திருமணம் செய்து கொன்றிருக்கலாம். அக்காவை கொன்ற மறு நொடி அவனுடன் சண்டை போட்டு இருக்கலாம். உயிராய் வளர்த்த அக்காவை விட்டு கொடுத்துட்டு வந்திருக்கீங்க..
அதியா அவளை அனலாய் முறைத்து, “உன்னோட அக்கா சாகும் போது அவ குழந்தையை உன்னிடம் ஒப்படைத்தால் என்ன செய்வ?” கேட்டாள்.
“பாப்பா கையால அந்த கொலைகாரனை கொல்ல வச்சிருப்பேன்” சக்தி சொல்லவும் அதிவதினி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
பொண்ணுக்கு தைரியம் சாதாரணமாக இருக்கலாம். அசாதாரணமாக போகக் கூடாது. போனால் எல்லாம் நொடிப் பொழுதில் காணாமல் போயிரும். நீ சொன்னது போல் குழந்தை கையில் கத்தியை கொடுத்தால் குழந்தை எப்படி நல்லவனாக வளர்வான். அவனுக்கும் கொலைகாரன் பட்டம் தான் கிட்டும். யோசித்து பேசு.
சக்தி அமைதியாக நிற்க, ஆரியன் சக்தியிடம்., இந்த கேஸ் உன் பக்கம் முடியும்? என்னை நீ நம்புறேல்ல? கேட்டான்.
ம்ம்..என சொல்லி அமர்ந்தாள் சக்தி.
மாமா..மும்பையில நடக்கும் கேஷ் இது..
பார்க்கலாம். இந்த கேஷ் சம்பந்தப்படவங்க..விசாரித்தவர்கள்..கேஷின் இப்போதுல்ல நிலை எல்லாமே எனக்கு வேணும் அத்து, ஆரியன் கேட்க, மாமா..அது என சக்தியை பார்க்க, அவள் பாக்கெட்டிலிருந்து பென்டிரைவ் ஒன்றை நீட்டினாள்.
இதில் எல்லாமே இருக்கு சார்..பாருங்க. இந்த கேஷை நான் உங்களோட சேர்ந்து பார்க்கணும்ன்னு நினைக்கிறேன்.
உன்னால முடியாது சக்தி. அவங்க உன்னோட குடும்ப நபர்கள். அதனால அதுக்கு அலோ பண்ண முடியாது. நான் பார்த்துக்கிறேன் ஆரியன் சொல்ல, நானும் உதவுகிறேன் என கவின் சொல்ல, ஆத்விக்கும் சக்தியும் அவனை பார்த்தனர்.
“சீரியசான விசயமா இருக்கு. அதான் கேட்டேன். என்ன சொல்றீங்க அண்ணா?” கவின் கேட்க, “மாமா முதல்ல உனக்கு சரியாகட்டும்” அதியா சொல்ல, இதெல்லாம் சாதாரணம் அதி. “நான் நிறைய கடந்து வந்துட்டேன்” என்று அவன் அம்மாவை பார்க்க, அவர் முகத்தை திருப்பினார்.
மேரேஜ் முடியட்டும் பார்க்கலாம். “சார், அந்த ஜான்வி?” சக்தி கேட்க, இன்றிரவு பப்பிற்கு வா. நாம அவளை பேச வைக்கலாம் கவின் சொல்ல, “நாமா?” ஆத்விக் கேட்டான்.
நீங்க கல்யாண வேலையை பாருங்க. அந்த பொண்ணை அடையாளம் காட்ட ஆள் வேணும்ல்ல? கவின் சிந்தனையுடன் ஆரியனை பார்க்க, “நீங்க குடிச்சு உலறீட்டு வரமா இருந்தால் சரி” என ஆரியன் கூற, “என்னோட பிளான் படி தான் என்னுடன் நீ வரணும்” என்று கவின் சக்தியை அழுத்தமாக பார்த்தான்.
“சரி சார்” என்று ஆத்விக்கை பார்க்க, அவன் இவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
ஆரியன் மெதுவாக கவினருகே வந்து, “அத்துவுக்கும் சக்திக்கும் ஏதும் இருக்குமோ?” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி கேட்டான்.
இல்ல அண்ணா. ஆதுவிற்கு உங்க தங்கச்சி மேல தான் காதல். அவங்க இல்லாத போதே வழியுறான் என்று ஆரியனை பார்த்தான்.
ஆரியன் அமைதியாக இருவரையும் பார்த்தான்.
சக்தி ஆரியனிடம் வந்து, சார் நான் தனியா இருக்கணும்ன்னு நினைக்கிறேன். அதனால உங்க வீட்ல தங்கலை..
தனியாவா? அதியா கேட்க, சக்தி ஆரியனை தான் பார்த்தாள்.
அதெல்லாம் வேண்டாம். இப்பொழுது மாதிரி ஏதாவது செய்து பிரச்சனையாகிடும். ஒழுங்கா அதியோட போ ஆத்விக் சினமுடன் பேசினான். அவள் கண்கலங்க அவனை பார்த்தாள்.
ஆத்விக்கிற்கு சினம் ஏற, “ஆரு நாங்க வெளிய இருக்கோம்” அதியா சக்தி கையை பிடித்து இழுத்து சென்றாள்.
சுகுமார் சிந்தனையுடன், “ஆது எதுக்கு அந்த பொண்ணை இங்க அழைச்சிட்டு வந்த?”
மாமா, அவளுக்கு கொஞ்சம் மாற்றமா இருக்கும்ன்னு பார்த்தேன். அங்க அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தா என்று அவரை பார்த்து, அவளோட குடும்பத்தை இழந்த பின் அவள் அவளாகவேயில்லை..