வல்லவன் 1

மாரி, வாடி சுள்ளி புறக்க போகணும்..

இதோ, மாமாவுக்கு காஃபி போட்டு கொடுத்து வாரேன்க்கா..

சீக்கிரம் வாடி..

“வாரேன்க்கா” என்ற மாரி, தன் மாமனுக்கு காஃபியை கொடுத்துட்டு இருவரும் சுள்ளி புறக்க கிளம்பினார்கள்.

ஓடையருகே சென்று சுள்ளி புறக்கிட்டு இருவரும் பேசியவாறு வந்து கொண்டிருந்தனர். மாரி ஏதோ தட்டி கீழே விழுந்தாள்.

“கீழ பார்த்து வாடி” என்று சொன்ன அவளோட பக்கத்து வீட்டு அக்கா “அய்யோ! எழுந்திருடி” என பதறி அவளை இழுத்தார்.

“அக்கா, என்னாச்சு?”

யாரோ செத்து கிடக்காங்க. வயித்தை கிழிச்சு போட்ருக்காங்க. வாடி கொலை செஞ்சிருக்காங்க. யாருமே இல்லாம இருக்கு. எவனும் வந்துறாம என சுள்ளியை கீழே போட்டு தலை தெறிக்க இருவரும் சென்று ஊராரிடம் சொன்னார்கள்.

விசயம் போலீஸிற்கு செல்ல, ஆட்கள் அவ்விடத்தை வந்து சேர்ந்தனர். உடன் ரிப்போர்ட்டர்ஸூம் வந்தனர்.

போலீஸார் ஆதாரத்தை தேட, அங்கே வந்தான் கவின். வேலூர் லத்தேரி கிராமத்தின் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ். நேர்மை என்ற பெயருக்கு மறுபிறவி என்று இவரை கூறுவார்கள்.

ஹலோ, சார் என்று கவினிடம் ஒருவன் கையை நீட்டினார். மக்கள் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.

காய்ஸ்..கவின் அழைக்க, அவனது டீம் அவர்கள் முன் வந்தனர்.

சார், நமக்கு கிடைத்த ஆதாரம். இந்த பொண்ணு நிறை மாத கர்பிணி. அவங்க வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்துருக்காங்க. குழந்தை இறந்து அங்கே கிடக்கு என மரத்தடியை காட்டினான் ஒருவன்.

சார், இரு உடலிலும் வேறு எந்த சேதாரமும் தெரியவில்லை. உடலை சுற்றி வரிசையாக மணக்கும் ரோஜாக்களால் அலங்காரப்படுத்தி இருக்காங்க.

சோ..கொலைகாரன் திட்டம் செய்து கொன்றிருக்கான். கர்பிணி பொண்ணு வயிற்றை கிழித்து குழந்தையை எடுக்க காரணம் என்ன?

வெட்ட வெளியே சடலங்களை போட்ருக்கான். எல்லாருக்கும் தெரியணும்ன்னு செய்திருக்கான். அதை விட மணம் பரப்பும் ரோஜாக்களால் அலங்கரித்து இருக்கான் என்றால் என அவ்விடத்தை சுற்றி பார்த்து, பறவைகள் உடலை சேதாரப்படுத்தக் கூடாது என்ற காரணமாகவும் இருக்கலாம்..

பாரன்சிக்கிற்கு உடலை அனுப்புங்க பார்க்கலாம் என கவின் தன் டீமை பார்த்தான்.

சார்..

ம்ம்..என்று அவன் அங்கே அமர்ந்தான்.

முதல்ல இந்த சடலங்களை பார்த்தவங்களை பார்க்கணும்.

கிளம்பலாம் சார்.

ம்ம்..என்று கவினும் அவன் உதவியாளரும் கிளம்பினார்கள். மாரி வீட்டிற்கு சென்று விசாரிக்க, அவளும் அவளுடன் வந்த உமையாளும் நடந்ததை சொன்னார்கள்.

அங்கிருந்து கிளம்பி நேராக அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பாரன்சிக் ஆபிஸரை கவினிற்கு நன்றாக தெரியும் என்பதால் கவினை அதிகம் காத்திருக்க வைக்கவில்லை. எப்போதும் எதிலும் நேரடியாக ஈடுபடுபவன் கவின். அதனால் அவனும் வந்திருந்தான்.

முடித்து வெளியே வந்த பாரன்சிக் மருத்துவர் சொல்லி இருந்தால் நானே ரிப்போர்ட் அனுப்பி இருப்பேனே சார் அவர் சொல்ல, பரவாயில்லை சார்.

ரிப்போர்ட் தயாரா சார்?

ம்ம்..தயார் சார். அந்த பெண்மணியின் வயிற்றை பர்பட்டாக மகப்பேறு செய்து ஆப்ரேசன் செய்வது போல கட் செய்து இருக்கான். பார்ட்ஸ் எதுவும் எடுக்கவில்லை. அந்த குழந்தை உயிரோட தான் இருந்திருக்கும். ஆனால் அவன் மூச்சடைக்கும் மருந்தை செலுத்தி இருக்கான். அது நம்ம தமிழ்நாட்டிலே இயங்காத மருந்து. அந்த பொண்ணுக்கு முன்னால் காதலன் யாரும் இருக்கானான்னு பாருங்க. ஒரு வேளை டாக்டராக கூட இருக்கலாம். மத்தபடி எதுவும் தெரியவில்லை.

கைரேகை, வேறேதுவும் அவன் தடம் என கவின் கேட்க, நோ..சார்..இது போன்ற கொலையை என் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. இது அழகான வஞ்சம் போல இருக்கு.

“அழகான வஞ்சமா?” கவின் சிரிக்க..சார், நம்ம பசங்க தவறு செய்தால் அடிப்போம். அதே போல தான் அவனுக்கு உரியவர் தவறு செய்ததால் தண்டிக்கும் உரிமை இருப்பது போல நடந்து கொள்ளுதல்..

இந்த பொண்ணுக்கும் கொலைகாரனுக்கும் சம்பந்தம் இருக்கும்.

“தேங்க்யூ சார்” என கவின் எழுந்து ரிப்போர்ட்டுடன் வெளியே வந்தான். அந்த பெண்ணின் உறவினர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை பார்த்துக் கொண்டே சென்றான்.

“சார், இப்பொழுது வரச் சொல்லவா?” கவின் டீம் கேட்க, நோ..இரு நாட்கள் செல்லட்டும். அந்த பொண்ணோட கணவர், நண்பர்கள் எல்லாரும் எப்படி நடந்துக்கிறாங்கன்னு விசாரிக்கலாம்.

நாளைக்கு நீங்க மட்டும் சென்று பார்மாலிட்டிக்கு விசாரித்து விட்டு வாங்க. நாட்கள் செல்ல சிலர் அவர்களின் சுயரூபத்தை காட்டுவார்கள் பார்க்கலாம்.

தமிழ்ச் செல்வன்..நீங்கள் கண்காணித்துக் கொண்டே இருங்கள். எதற்கும் சித்திரன் நீங்க ஹாஸ்பிட்டல் மகப்பேறு மருத்துவர்களை கண்காணியுங்கள். உங்களுக்கு சந்தேகம் உள்ளவர்களை லிஸ்ட் எடுத்து வையுங்க. முக்கியமானவர்களை விசாரிக்கலாம்.

“ஓ.கே சார்” என்று சல்யூட் செய்து அவர்கள் அகன்றனர்.

     (இரு நாட்களுக்கு பின்)

சித்திரன்..

சார்..

“டாக்டர்ஸ் ஏதும் சந்தேகிக்கும் படி பேசுறாங்களா? விசாரிச்சீங்களா?”

“யாரும் சந்தேகிக்கும் படி நடந்து கொள்ளவில்லை” என்றான் சித்திரன்.

கவின் தமிழ்ச்செல்வனை பார்த்தான்.

சார், அந்த பெண்மணியின் கணவன் மீது சந்தேகம் உள்ளது. அவரும் அந்த பொண்ணும் அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க போல..

“கணவன் மனைவி சண்டையெல்லாமா ஆதாரம்?”

நோ..என்று அவன் டேஃப்பு ஒன்றின் வீடியோவை நீட்டினான். அதை கவின் வாங்க, மேலிடத்திலிருந்து ஆட்கள் ஸ்டேசனுக்கு வந்தனர்.

கவின் எழுந்து சல்யூட் செய்தான்.

கவின் பொறுப்பா இருக்கிறவருன்னு உங்களை நினைச்சா. இன்னும் எத்தனை நாள் தள்ளிப் போடுவீங்க. விசயம் மீடியாவிற்கு சென்று எல்லாரும் நம்ம ஊரை பற்றிய பேச்சு தான். முதல்ல முடிங்க..

எஸ் சார்..

ஒரே நாள் தான் உங்களுக்கான நேரம்.

சார், ஒருநாள் எப்படி? கவின் கேட்க, நீங்க முடிப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு. நமக்கு மேலிடத்திலிருந்து பிரஷ்ஷர் பண்றாங்க. என்னன்னு பாருங்க என  அவர் சென்றார்.

பெருமூச்சுடன் கவின் அமர, “என்ன சார் இது? கொலையான விசயம். உடனே எப்படி?”

ம்ம்..நீங்க ஏதோ சொல்லீட்டு இருந்தீங்கல்ல?

எஸ் சார்.. டேஃப்பு..

என்ன வீடியோ என அனைவரும் பார்த்தனர்.

கணவனோ அவன் நண்பனிடம், அவர் மனைவியை சந்தேகப்படுவதாக கூறி கொல்ல போவதாக சொல்ல, டேய்..கர்ப்பமா இருக்காங்கடா..

“அதான் அதான் சந்தேகமா இருக்குடா. அது என் குழந்தையா? இல்லை அந்த வேலு குழந்தையான்னு தெரியலை”.

கேட்டால் சந்தேகப்படுறியான்னு சண்டைக்கு வர்றாடா?

அதுக்கு கொலையா பண்ணப் போற?

ஆமாடா, நாங்க முதலிரவில் சேர்ந்தது தான். பின் எங்களுக்குள் எதுவும் நடக்கலை. அதனால..

இதுக்கு மேல துரோகியை கொல்லணும்.

நீ தேவையில்லாமல் சந்தேகப்படுற மாதிரி இருக்கு. பொன்னி வேலுவை காதலித்தாலும் அவர்களிடம் அதிகம் நெருக்கம் இல்லை. வேலுவும் பொண்டாட்டி பிள்ளைகள்ன்னு சந்தோசமா இருக்கான்டா.

இல்ல, இருவரும் நடித்து ஏமாத்துறாங்க. முதல்ல இவளை போடணும். அப்புறம் அவனை கவனிச்சுக்கிறேன்.

“அந்த வேலுவை விசாரிச்சீங்களா?”

ம்ம்..விசாரித்தோம் சார். பொன்னிக்கு வேலு முறைப்பையன். அதனால் இயல்பான பாசம் தான் போல. வேலு மேல் எந்த சந்தேகமும் இல்லை. ஏன்னா..அவனை தனியே இருக்கும் போது பின் தொடர்ந்தேன். முருகன் கோவில் மலைஉச்சியில் அமர்ந்து கதறி அழுதான்.

“பொன்னி கணவன் சந்தேகப்படுவது உண்மையாக இருக்குமோ?”

இல்லை சார். இறந்த குழந்தைக்கும் அப்பாவுக்கு டி.என்.ஏ மேச் ஆகுது.

ஓ..வேலு அந்த பொண்ணு மேல இருக்கும் பாசத்துல்ல அழுதிருக்கான். பொண்டாட்டி முன் அழுதால் அவ வருத்தப்படுவான்னு..

எஸ் சார், பொன்னி பற்றி என்ன நினைக்கிறீங்க முத்து சார்?

சார், நல்ல பொண்ணு. அவளுக்கு வேலுன்னா உசுறு. கொஞ்சம் அப்பாவி கூட. எனக்கு தெரிந்து அந்த பொண்ணு திருமணத்தின் பின் வேலு மீதுள்ள பாசத்தில் கணவனிடம் வேலு பற்றி அதிகம் பேசி இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதான் அவன் இப்படி பேசி இருக்கான்.

சோ..பொன்னி, வேலு இடையே ஏதுமில்லை. கணவன் தவறாக மனைவியை எண்ணி கொலை செய்திருக்கான்.

ம்ம்..இருக்கலாம் சார்.

ஓ.கே என எழுந்து, வேலு, பொன்னியின் கணவனையும் வரச் சொல்லுங்க.

இருவரும் வந்தனர். உடன் அவர்களின் சொந்தங்களும் வந்தனர்.

வேலுவின் மனைவி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் இயல்பாக வந்து நின்றான்.

“சொல்லுங்க வேலு? எதுக்கு பொன்னியை கொன்னீங்க?” என கவின் கேட்க, எல்லாரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

சார், அவ என்னோட மாமா பொண்ணு. நான் எதுக்கு கொல்லணும்?

உண்மையை சொல்லுங்க..

“ஆமா, என்னோட பொண்டாட்டியை நீ தான் கொன்னுட்ட. அவள் மீதுள்ள ஆசையில் தான செஞ்ச?” என பொன்னி கணவன் வேலுவின் சட்டையை பிடித்தான்.

நாங்க இங்கிருக்கும் போதே..என்ன அடிச்சுக்கிறீங்க? கவின் கேட்க, சார் இருவருக்கும் எப்போதுமே ஆகாது.

“இதை நீங்க எங்களிடம் சொல்லவில்லையே!” கவின் பொன்னியின் கணவனை பார்த்தான்.

“இதுனால என்ன சார்? எனக்கு யாரை பிடிக்கும், பிடிக்காதுன்னா உங்களிடம் எதுக்கு சொல்லணும்?”.

நான் அப்படி சொல்லவில்லை. வேலு உங்கள் மனைவியின் முறைப்பையன். அதான் சொல்லலை எனக் கேட்டேன்.

சார், எனக்கெல்லாம் யார் மீதும் பகை இல்லை. பொன்னியை எனக்கும் முன் ரொம்ப பிடித்தது தான். எனக்கு திருமணமான பின் அதிகம் பேசகூட இல்லை. ஒரு முறை அவளாகவே என்னை தேடி வந்தாள்.

மாமா..என்னை வேற ஊர்ல மட்டும் விட்றியான்னு கேட்டா. எதுக்குன்னு கேட்டதுக்கு என்னோட புருசன் சந்தேகப்படுறான். அடிக்கிறான். பயமா இருக்குன்னு அழுதா. நான் இவனிடம் அதனால் தான் சண்டைக்கே போனேன். அதை வச்சிட்டு அவளோட பழகுறேன்னு என் பொண்டாட்டியிடம் சொல்லி எங்களை பிரிக்க பார்த்திருக்கான்.

“நானாடா என் பொண்டாட்டியை அடித்தேன்? அவள உள்ளங்கையில வச்சு தாங்கினேன்”.

“தாங்குனியா?” என்று ஒரு சிறுவன் முன் வந்து, “சார்…பொன்னியக்காவ இந்தாளு அடிச்சதை நானே பார்த்திருக்கேன். அக்கா அழுதுட்டே இருந்தாங்க.” அவங்களுக்கு அதனால காது வலி கூட வந்தது. நான் தான் அவங்களோட ஹாஸ்பிட்டல் போனேன்.

“போடா” என பொன்னியின் கணவன் அவனை தள்ள, யோவ்…கடைசியில அக்காவை கொன்னிட்டுயா பாவி..

சார், அந்த அக்கா ரொம்ப நல்லவங்க. வேலு அண்ணாவை ரொம்ப காதலிச்சிச்சு. ஒழுங்கா அவருக்காவது கல்யாணம் பண்ணி வச்சிருந்தா..உயிரோட இருந்திருக்கும்..என அலுத்துக் கொண்டே பொன்னி கணவனை முறைத்துக் கொண்டே சென்றான் அந்த சிறுவன்.

பொன்னியின் அன்னை இதை கேட்டு, நான் உங்கள தடுக்காமல் இருந்தால் என் பிள்ளை இருந்திருப்பா மாப்பிள்ள. தப்பு பண்ணீட்டேன். ஊர்க்காரவங்க பேச்சுக்கு பயந்து தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளையை பறி கொடுத்துட்டேனே! என அழுது கொண்டே பொன்னியின் கணவனை பார்த்து, இதுக்கு தான் என் பிள்ளையை உனக்கு கட்டிக் கொடுத்தேனா? பாவி…நீ கொல்லயில போக. உன்னை அடுப்புல வச்சி எறிக்க…வசை பாடிக் கொண்டே அழுது தீர்த்தார். அனைவர் கண்களும் கலங்கியது.

“இப்ப என்னய்யா சொல்ற?” கவின் பொன்னி கணவனிடம் கேட்டான்.

“நான் கொலையெல்லாம் செய்யலை. என்னோட பொண்டாட்டியை நான் எப்படி கொல்லுவேன்?”

“அப்ப இது என்ன?” வீடியோவை காட்ட, சந்தேகித்துக் கொண்டிருந்த ஊரார் அனைவரும் கொந்தளித்து விட்டனர்.

நல்லா இருந்த புள்ள…குழந்தை வரும் பெயர் வைக்கணும். அது செய்யணும் இது செய்யணும்ன்னு நேத்து தான் பேசிட்டு இருந்தது என பக்கத்து வீட்டு அக்கா புலம்பினார்.

இவன் வெளியே வரவேக் கூடாது சார். உள்ள பிடிச்சி போடுங்க இளவட்டங்கள் கொந்தளித்தனர். கவின் பார்வை வேலுவை சந்தேகமாக நோக்கியது.

அவனோ கழுத்தில் போட்டிருந்த ருத்ராட்சத்தை பிடித்தான் கண்ணீருடன்.

வேலு, நீங்க என்ன சொல்றீங்க?

“ம்ம் நானா? நான் என்ன சொல்றது? அவளே இல்லை. இவன் இருந்தால் என்ன செத்தால் என்ன?” என்று கவினை பார்த்து, விசாரணைக்கு வரணும்ன்னா சொல்லுங்க. வாரேன் என நகர, அவன் மனைவி அவன் கையை பிடிக்க, “நான் தனியா இருந்துட்டு வாரேன்மா” என நகர்ந்து ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு செங்கலை வைத்து அங்கே பூ ஒன்றை வைத்து கதறி அழுது கொண்டிருந்தான். அவனை பின் தொடர்ந்து வந்த சித்திரன் தள்ளி நின்று அவனை பார்த்து விட்டு அவன் வீட்டிற்கு சென்ற பின் அவ்விடம் சென்று பார்த்தான்.

அச்செங்கலில் பொன்னியின் பெயரை எழுதி ஸ்மைலி போட்டு வைத்திருந்தான் வேலு.

“ஸ்டேசலில் இருந்த கவினிடம் சித்திரன் வேலு செய்ததை சொல்லி, கள்ளத்தொடர்பு ஏதும் இருந்திருக்குமோ சார்?” கேட்டான்.

ஜெயிலில் கைதியாக இருந்த பொன்னியின் கணவனை பார்த்துக் கொண்டே, அது கள்ளத்தொடர்பல்ல..காதல்.

வீட்டினர் பிரித்து பொன்னிக்கு திருமணம் செய்த பின் தானும் அவளுக்காக வேறு பொண்ணை திருமணம் செய்திருக்கிறான். அவள் முன் சந்தோசமாக இருப்பது போல் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்திருக்கான். ஆனால் வேலு சந்தோசமாக இல்லை. அவன் மனைவிக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவ்வப்போது தூரத்தில் இருந்தே அவளை பார்த்துக் கொள்வானே தவிர பேச்சு வார்த்தை இருவரிடமும் இல்லை.

வேலு சொன்னது போல் பொன்னி அவனிடம் உதவியாக கேட்டாலே தவிர, வா நாம ஓடிப் போயிருவோம்ன்னு சொல்லலை. பொன்னியை பொறுத்தவரை வேலு மகிழ்ச்சியாக வாழ்கிறான். இவங்க உறவை கொச்சைப்படுத்தாதே! உடலை பார்த்து காதல் வராது சித்திரன்.

“சார், காதல் தத்துவமா பேசுறீங்களே! நீங்க யாரையும் காதலிக்கிறீங்களா?” அவன் கவினிடம் கேட்க, கவின் புன்னகைத்து விட்டு, என்னுடையதும் வேலு காதல் போல தான். அந்த பொண்ணுக்கு திருமணமாகவில்லை. அவள் மனம் வேறொருவனிடம் இருக்கு என சிரித்தான்.

“சார், வலியை கூட சிரிப்பாலே சொல்றீங்க?”

“அவ அப்படி” என்றான் புன்னகையுடன்.

சார், இவன்? இவனுடைய அந்த வீடியோவை வைத்து விசாரித்தேன். அவன் உண்மையை ஒத்துக் கொண்டான்.

“வாட்?” சித்திரன் அதிர்ந்தான்.

ம்ம்..என்று கவின் யோசனையுடன் பிடிக்கிறேன்டா..வருவேன்டா என மனதில் எண்ணிக் கொண்டான்.

மக்களே! இந்த கவினை நினைவில் வச்சுக்கோங்க. இவன் சேவை நமக்கு தேவை…

     (சில மாதங்களுக்கு பின்)

சென்னை மாகாணத்தில் ஒரு பொண்ணு மைசூர் சில்க் புடவையும் ஒரு தோளில் பையையும், மற்றொரு தோளில் பாப்பாவையும் தூக்கிக் கொண்டு வீதி வழியே ஓடி வந்து கொண்டிருந்தாள். அவளை விரட்டி சில தடியன்களும் வந்தனர். காலை நேரம் என்பதால் வீதி சற்று வெறிச்சோடி இருந்தது.

கையிலிருந்து கட்டையை துக்கி எறிந்தான் ஒரு தடியன். அது அந்த பொண்ணின் காலை இடறி விட்டு கீழே விழுந்தாள் குழந்தையுடன்.

“இப்ப பிடிங்கடா” ஒருவன் கத்த, பாப்பா அழுது கொண்டிருந்தாள். எட்டு வயதையோத்த சிறுமி. பெயர்: ஆகர்ஷனா.

அந்த பெண்ணோ..மத்திய உயரம். பால் போல் தூய்மையான வெண்ணிறத்தோல், கொழுக்மொழுக் கன்னங்களும் தேகமும், குட்டியான அழகு வட்ட முகம், திராட்சை கண்கள், வளைந்த நாசி, எதிர் செல்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் அழகு..அவள் அதியா.

கீழே விழுந்ததில் கை, கால்களில் சிராய்ப்பு. இரத்தத்தை பார்த்ததும் கண்ணீருடன் அம்மா..அம்மா..என பாப்பாவை விட ஏங்கியவாறு பாப்பாவை தூக்கிக் கொண்டு எழுந்தாள் நம் நாயகி அதியா. தடியன்கள் அவளருகே வந்து விட்டனர்.

“அதிம்மா ஓடு” பாப்பா சொல்ல, “வலிக்குது ஆகு” என அழுது கொண்டே அவள் ஓட எத்தனிக்க, அவள் முடியை பிடித்து ஒருவன் இழுக்க, ஆவென கத்தினாள். பாப்பாவை ஒருவன் பிடித்து இழுக்க, “விடுடா ராஸ்கல்” என பாப்பா அவனை அடிக்க, அவனுக்கு வலிக்கவேயில்லை.

ஆகு..என கையை நீட்டி அதியா அழைத்தாள். அவளது நீட்டிய கை ஓர் பைக்கை உரசியது. மழை சடசடவென பொழியத் தொடங்கியது. பைக்காரன் அவளை திட்ட பைக்கை நிறுத்தினான். அங்கே நடக்கும் காட்சியை பார்த்து விட்டு மீண்டும் பைக்கில் ஏறினான்.

அதி அவனை பார்த்து, “சார் கெல்ப் பண்ணுங்க. என்னோட பாப்பாவை தூக்கிட்டு போறானுக” அழுதாள்.

பைக்கை நிறுத்தி விட்டு சாய்ந்து வேடிக்கை பார்த்தான் அவன்.

“டேய் சாடிஸ்ட், உன்னை வேடிக்கையா பார்க்க சொன்னேன்?” என அழுது கொண்டே அவனை திட்ட, “ஏய்..எங்கள மீறி எவனாவது உங்களுக்கு உதவுவானா? வாய மூடிட்டு வா” அவளது கையை பிடித்து இழுத்து சென்றான்.

அதி பாவமாக திரும்பி அவனை பார்த்து உதட்டை பிதுக்கினாள்.

இவள் செய்கையில் கடுப்பான தடியன் அவளை ஓங்கி அறைந்தான். பொத்தென தரையில் விழுந்து மயங்கினாள். அவள் தலையில் இரத்தம் வழிந்தது.

அடப்பாவி கொன்னுட்டியா? என பாப்பாவை தூக்கியவனும் மற்றவனும் அதியாவிடம் வந்தனர்.

பாப்பா அவனிடமிருந்து துள்ளி இறங்கி, “அதிம்மா.. அதிம்மா” என கத்திக் கொண்டே அதியாவிடம் வந்து அவளை உலுக்கினாள்.

சுவாசம் பார்த்தவன்..சாகலடா. உயிரோட தான் இருக்காங்க.

சீக்கிரம் அவங்களுக்கு ஏதும் ஆகக் கூடாது இல்லை பாஸ் நம்மை கொன்றுவார். சீக்கிரம் வாங்கடா..என அவளை தடியன் ஒருவன் தூக்க,

“அதிம்மா..எழுந்திரு..எழுந்திரு” கதறி அழுதாள் ஆகர்ஷனா.

“அதிம்மாவ தூக்காதீங்க” அவர்களை ஆகர்ஷனா தடுக்க, “பாப்பா சும்மா இரு” அவன் பாப்பாவை தள்ள, அவளோ பைக்கருகே ஹெல்மெட் போட்டு நின்று கொண்டிருந்தவனை பார்த்து, “சார் என்னோட அதிம்மாவை காப்பாத்துங்க. அவங்க கடத்திட்டு போயிருவாங்க” என அவள் சொல்ல, அவளையும் ஒரு தடியன் தூக்கிக் கொண்டு நடந்தான்.

ஹெல்மேட்டை கழற்றி பைக் மீது வைத்து விட்டு, சினமுடன் எல்லாரையும் பார்த்தான் ஆரியன்.

ஆரியன். நல்ல உயரம். அதற்கேற்றாற் போல் உடல்வாகு. அழகான காந்தக்கண்கள். அதில் எப்போதும் கோபம் மட்டுமே குடியிருக்கும். முரட்டு இதழ்கள். அவன் சிரிப்பை பார்ப்பதே மிகக் கடினம். அப்படியொரு கல் மனம் படைத்தவன். வயது தான் முப்பத்தைந்து. பார்க்க இளமையுடன் சாதாரணமாக இருப்பான். இப்பொழுது கூட பாப்பா அவர்கள் தூக்கி செல்வதை பார்க்கவும் தான் உதவ வந்திருக்கான்.

ஏய்..ஆரியன் கத்த, எல்லாரும் அவனை பார்த்தனர்.

“விடுடா” என பாப்பா அந்த தடியனை அடிக்க, அவர்களிடம் சென்ற ஆரியன் அவன் முடியை பிடித்து இழுக்க, அவன் வலியில் பாப்பாவை கீழே விட்டான்.

பாப்பா ஆரியனிடம் வந்து, “சார் அம்மாவை அவன் தூக்கிட்டு போறான்” என அவள் கையை காட்ட, அங்கே இருந்த போஸ்ட் மரத்தை பார்த்து அவனை தள்ளி விட்டு, மற்றவர்களுடன் சண்டை போட்டான்.

“யாருடா நீ? உனக்கும் இவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என கேட்டவன் வாயை உடைத்து பேச முடியாமல் செய்து கடைசியில் அதியாவை துக்கி வைத்திருப்பவனிடம் சென்று, அந்த பொண்ணை விட்ரு..

விட முடியாது. இவங்கள எங்க பாஸ்கிட்ட அழைச்சிட்டு போகணும்..

“முடியாதா?” என அவன் மண்டையில் கட்டையால் ஓர் போடு போட்டான். அவன் அதியாவை கீழே விட, “சார் அம்மா” ஆகர்ஷனா கத்தினாள்.

ஆரியன் நகர்ந்து நிற்க பொத்தென கீழே விழுந்தாள் அதியா.

“அம்மா” என மீண்டும் ஆகர்ஷனா அவளிடம் ஓட, மற்றவர்கள் ஆரியனை பார்த்து ஓடினார்கள். அதியா விழிக்காமல் இருக்க, “சார்..ஹாஸ்பிட்டல்ல டிராப் பண்ணீடுங்க” என அழுதாள்.

அவன் ஏதும் சொல்லாமல் நிற்க, சார்..சாரி..ப்ளீஸ் என அவள் அழ, அவன் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு ஆட்டோவை பிடித்து அவளை ஏற்றி, ஆக்ரஷனாவை ஏறச் சொன்னான்.

அவளோ பையை தரதரவென இழுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறினாள்.

ஹாஸ்பிட்டல் சென்று ஆரியன் இருவரையும் விட்டு செல்ல எண்ணினான். ஆகர்ஷனா ஆரியன் கையை பிடித்து, “ப்ளீஸ் கொஞ்ச நேரம் இருங்க சார்” என்றாள்.

அவன் அமைதியாக அமர்ந்தான். அதியாவிற்கு தலையில் கட்டு போட்டு மருத்துவர்கள் வெளியே வந்தனர். அவள் மயக்கத்திலிருந்து விழித்து அழுதாள்.

“சார், அவங்க அழுறாங்க. சமாதானப்படுத்துங்க. அவங்களுக்கு பெரிய அடியெல்லாம் இல்லை. பீஸ் பே பண்ணீடுங்க” என அவர் சென்றார்.

ஆகர்ஷனா உள்ளே சென்று, அங்கிருந்த நாற்காலியை இழுத்து படுக்கை அருகே போட்டு ஏறி படுக்கையில் அமர்ந்தாள்.

“அதிம்மா, ஒன்றுமில்லை டாக்டர் சொல்லீட்டாங்க. மாத்திரை மட்டும் போடணும்” என பாப்பா அவளை அணைக்க, அதியாவும் அணைத்து அழுதாள்.

கோபமாக உள்ளே வந்த ஆரியன், “சின்ன பொண்ணுக்கு இருக்கும் தைரியம் கூட உனக்கில்லையா? இதுல்ல வாய் மட்டும் பேசுற?” திட்டினான்.

அவளோ அழுது கொண்டு அவனை பார்த்து மேலும் அழுதார்.

சார், அதிம்மாவை அழ வைக்காதீங்க..

“உனக்கு அவ அம்மாவா? நீ அவளுக்கு அம்மாவான்னு தெரியல?” என்று அதியாவை முறைத்தான்.

அதியா ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு வெளியே செல்ல, “எங்க போற? பே பண்ணீட்டு போ”.

ம்ம்..என வரவேற்பறையில் பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

ஆகர்ஷனா பைக்கை எடுத்த ஆரியன் முன் வந்து நின்றாள். அவன் புருவம் சுருக்கி அவளை பார்த்தான்.

“சார், எங்களை “ஹெல்த்தி வே” ஹோட்டலில் மட்டும் இறக்கி விட்டு போறீங்களா? நாங்க இப்ப தான் சென்னைக்கு வந்துருக்கோம்”.

அவன் பதில் கூறாமல் பைக்கை எடுக்க, “அதிம்மா..வா” என அவள் ஏறி கையை நீட்டினாள். மூவரும் ஹோட்டலுக்கு சென்றனர்.

ஹோட்டல் வரவும் அதியாவும் ஆகர்ஷனாவும் வண்டியிலிருந்து இறங்கினர்.

“தேங்க்ஸ் சார்” என அதியா கூற, ஆகர்ஷனா ஆரியனை பார்த்து புன்னகைத்தாள். அவன் அவர்களை பார்த்தானே தவிர பதிலோ.. புன்னகை கூட செய்யவில்லை.

அதியா அலைபேசியை எடுத்தாள்.

“அதிம்மா, என்ன பண்ணப் போற? நாம சர்பிரைஸ் பண்ணுவோம்” என ஆகர்ஷனா புன்னகையுடன் ஆரியனை பார்த்து, சார் என கையை துக்க, அவன் பதில் கூறாமல் அப்படியே இருந்தான். ஆகர்ஷனா அதியாவை பார்த்தாள்.

அவனை முறைத்த அதியா ஆகர்ஷனாவை தூக்க, “அதிம்மா..இன்னும் கொஞ்சம் பக்கம்..இன்னும் கொஞ்சம்” என முகத்தினருகே சென்று ஆரியன் கன்னத்தில் முத்தமிட்டாள் ஆகர்ஷனா.

என்னோட அம்மாவை காப்பாற்றியதற்கு…”பை சார்” என சொல்லி செல்ல, ஆரியன் அதிர்ச்சியுடன் இருவரையும் பார்த்தான்.

“ஆகு நில்லு, நானும் வாரேன்” என அவள் பின் அதியா ஓடினாள். இருவரும் வரவேற்பறை பெண்ணிடம் சென்று பெயர் ஒன்றை கூறி விசாரிக்க, அவர்கள் எண்ணை சொல்லவும் இருவரும் அந்த அறையை நோக்கி சென்றனர்.

ஆரியன் மனதினுள் ஏதோ புதுவித சொல்ல முடியாத உணர்வு. அவன் கண்கள் கலங்க, அவனாகவே உள்ளே செல்ல..ஆட்டோக்காரன் அவனை அழைத்தான்.

“வெயிட் பண்ணுங்க” என்று உள்ளே சென்றான். உணவருந்த செல்லும் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான்.

“எதற்காக தேவையில்லாமல் நான் இங்கே இருக்கணும்? அந்த குட்டிப் பொண்ணு என் மனதை கட்டுப்படுத்துவது போல இருக்குதே!” என பெருமூச்செடுத்து விட்டு எழுந்தான்.

அப்பொழுது ஆகர்ஷனா அழுது கொண்டே வாயில் இரு கையையும் அடைத்துக் கொண்டு வெளியே ஓடினாள். ஆரியன் மனம் நிற்க மறுத்து அவனை மீறியும் ஆகர்ஷனாவை நோக்கி வேகமாக நடந்தான்.

அதி..என்ற குரலில் நின்று திரும்பி பார்த்தான் ஆரியன். அதியா சீற்றமுடன் அவளை அழைத்த பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

“இனி என் பக்கம் வர நினைக்காத. பொண்ணாடி நீ..ச்சீ..நான் என்னடி உன்னை பண்ணேன்? எனக்கு இப்படியொரு துரோகம் பண்ண? நீயெல்லாம் தோழியா? ச்சீ..உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு” என பயங்கரமாக கத்தினாள் அதியா.

“அதி” என்று நிரஞ்சன் அவளை தொட வர, உன்னோட அசிங்கமான கையால என்னை தொடாத. அவள் என்னோட தோழின்னு தெரியும். தெரிந்தும் இப்படி உடம்புக்காக அலஞ்சிட்டு இருந்திருக்க? தைங்க் காட்..அந்த கடவுள் உன்னிடமிருந்து என்னை காப்பாற்றி விட்டார். இத்தனை நாள் முட்டாள்தனமாக உன்னை போல கேவலமான ஒருவனை காதலித்ததை எண்ணி வெட்கப்படுறேன்.

இல்ல அதி, அவள் தான்..

“என்ன அவள் தான்? காதல்ன்னா என்னன்னு தெரியுமா?” மனசுல்ல இருக்கிற பொண்ணை தவிர கண்கள் கூட மற்றவரை தவறான கண்ணோட்டத்தில் தீண்டக் கூடாது.

“என்னை விட ஆகு உன்னை எந்த இடத்துல்ல வச்சிருந்தா தெரியுமா?” அவளோட அப்பா இடத்துல்ல வச்சிருந்தா..

இவ்வளவு சீப்பா நடந்துப்பன்னு நான் நினைக்கவேயில்லை. எல்லாரும் சொன்னாங்க. நீ சரியில்லை பழகாதன்னு. உன் மேல வச்சிருந்த நம்பிக்கையில் நான் உன்னை காதலித்தேன். இனி நீ என் முன்னாடி வந்த ஏன்டா பிறந்தோம்ன்னு யோசிக்கும் அளவிற்கு செய்துடுவேன் என அவனை திட்டி விட்டு அவள் கையில் இருந்த மோதிரத்தை அவன் மீது தூக்கி எறிந்து விட்டு வேகமாக அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

அவள் பேசுவதை கேட்ட ஆரியனுக்கு நன்றாக காதில் விழுந்தது. ஆகர்ஷனா இந்த கேவலமான பிறவியை அப்பாவாக எண்ணியதாக அதியா சொன்னதும் வேகமாக அவளுக்கு முன்னே அவன் ஓடினான்.

வெளியே வந்து ஆரியன் ஆகர்ஷனாவை தேடினான். அவள் ஓரிடத்தில் வாமிட் செய்து கொண்டிருக்க, அவர்கள் வந்த ஆட்டோக்காரர் அவள் தலையை பிடித்திருந்தார்.

“பாப்பா, இருடா தண்ணீர் எடுத்து வாரேன்” என அவர் ஆட்டோ அருகே செல்ல, ஆரியன் அவளிடம் வந்தான். அவன் பின்னே வந்து கொண்டிருந்த அதியா பதட்டத்தில் காலை மாற்றி படியில் வைத்து பொத்தென முன்னோக்கி விழுந்தாள். அனைவரும் அவளை பார்க்க, ஆரியனும் ஆகர்ஷனாவும் ஒன்று போல் அவளை பார்த்தனர்.

“அம்மா” அழுது கொண்டே ஆகர்ஷனா அங்கேயே அமர்ந்தாள். அதியாவோ எழ முடியாமல் எழ முயன்றவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. கண்ணீருடன் அப்படியே கண்களை மூடினாள். பாப்பாவும் அவளை பார்த்து கொண்டே மயங்க, ஆகர்ஷனாவை தன் கைகளால் தாங்கினான் ஆரியன்.

ஆட்டோக்காரர் இருவரையும் பார்க்க, வெளியே வந்தும், சென்றும் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அதியாவை கவனித்தார். அவளுக்கு தண்ணீர் தெளித்து அமர வைத்தார் அவர்.

ஆட்டோக்காரர் பாப்பாவிடம் சென்று தண்ணீரை தெளிக்க, அவளுக்கு வாயை கழுவி விட்டு அவள் விழிக்கவும் ஆரியன் ஆகர்ஷனாவிற்கு தண்ணீரை குடிக்க கொடுத்தான். அவள் அவன் கையை நகர்த்தி, “அதிம்மா” என மெதுவாக ஆரியனிடமிருந்து விலகி அழுது கொண்டே அதியாவிடம் ஓடினாள்.

அதியாவும் விழித்து ஆகர்ஷனாவை தான் தேடினாள்.

“அதிம்மா” என ஓடி வந்து அவள் மீது பொத்தென விழுந்தாள் ஆகர்ஷனா. “ஆகு சாரிடா” அதியா அவளை அணைத்து அழுதாள்.

அதிம்மா, அவன் டாட்டாக வேண்டாம். நாம வேற டாட் தேடிக்கலாம்..

வேண்டாம்டா. நாம பட்டதெல்லாம் போதும். நமக்கு வேண்டாம். உனக்கு டாட் வேண்டாம். நான் இருக்கேன் என கதறி அழுதாள்.

அம்மாடி, என்ன பிரச்சனையானாலும் வீட்ல போய் பார்த்துக்கோங்க. எல்லாரும் உங்களை தான் வேடிக்கை பாக்குறாங்க.. என்றார் அதியாவிற்கு உதவிய பெண்மணி.

“தேங்க்ஸ் மேம்” என தனது கைக்குட்டையால் முகத்தை துடைத்து விட்டு, ஆகர்ஷனாவை தூக்கிக் கொண்டு சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

ஆகர்ஷனா கண்களை மூடி அவள் தோளில் உறங்கிக் கொண்டிருக்க, அதியா இருக்கையில் சாய்ந்தவாறு கண்ணீர் வழிய வழிய அமர்ந்திருந்தாள்.

ஆரியன் ஆட்டோக்காரரை பார்த்தான். அவர் இவர்களை நோக்கி வர, ஆரியன் அவர் பின்னே வந்தான்.

அப்பொழுது ஒருவன் அவர்களுக்கும் முன்னே அதியாவை நோக்கி ஓடி வந்தான். ஆரியனுக்கு சந்தேகம் பிறக்க அவன் நடை வேகமானது. ஆட்டோகாரர் புரியாமல் அவனை பார்க்க, அதியாவை நோக்கி வந்தவன் கையில் மயக்கமருந்தை வைத்திருந்தான். அவன் அதை அவள் மீது வீசும் முன் ஆரியன் அவன் கையை பிடித்து அவன் பக்கம் காட்ட, அவன் மீது பட்டு அவன் மயங்கி விழுந்தான்.

“முதல்ல எழுந்திரு” ஆரியன் சத்தம் போட, அதியா பயத்துடன் விழுந்தவனை பார்த்தான்.

“எழுந்திரு. வா சீக்கிரம்” என சொல்லி, “அண்ணா ஆட்டோவை எடுத்துட்டு வாங்க” என்றான். அவள் அவர் பின்னே பாப்பாவை தூக்கிக் கொண்டே நடக்க, ஆரியன் சுற்றிலும் பார்த்தவாறு அவள் பின்னே நடந்தான்.

மூவரும் ஆட்டோவில் ஏறினார்கள்.

“அம்மா, எங்க போகணும்?” ஆட்டோக்காரர் கேட்க, அவள் பதில் சொல்லாமல் இருந்தாள்.

“ஏய், உன்னை தான்” ஆரியன் சத்தமிட்டான்.

“எங்களுக்கு இங்க யாரையும் தெரியாது” என்றாள் கண்ணீருடன்.

“அப்புறம் எதுக்கு இங்க வந்த?” பல்லை கடித்துக் கொண்டே கேட்டான்.

அதியா அழுது கொண்டே, அண்ணா..ஆட்டோவை நிறுத்துங்க. எங்களால யாருக்கும் தொந்தரவு வேண்டாம்..

“அம்மாடி, யாரும்மா அந்த ஆளு? உன்னை கொல்ல வேற பார்க்கிறான். நீங்க யாரையும் தெரியாதுன்னு சொல்றீங்க?”

“நான் பார்த்துக்கிறேன் அண்ணா” என்றாள் அழுது கொண்டே.

“இப்ப பார்த்த மாதிரி தான் பார்த்துப்பியா? போ..நல்லா பார்த்துக்கோ” சீற்றமுடன் ஆரியன் கத்தினான்.

“தம்பி, ஏற்கனவே இருவரும் முடியாம இருக்காங்க. இப்படி பேசுறீங்க?” என ஆட்டோவை நிறுத்தினார்.

நான் ஹாஸ்ட்டல்ல இருந்துப்பேன்.

நீ சின்னப் பொண்ணோட இருக்க? உன்னோட பிள்ளையாக இருந்தாலுமே இருவரையும் சேர்த்து உள்ள அனுமதிக்க மாட்டாங்கம்மா..

அவள் மேலும் அழுதாள்.

தனியே இங்கே வீடு எடுத்து தங்கலாம். பார்த்தால் பெரிய வீட்டு பிள்ளங்க மாதிரி இருக்கீங்க. உங்க வீட்டுக்கே போயிருங்கம்மா. நான் வேணும்ன்னா ரயில் ஏற்றி விட வாரேன் ஆட்டோக்காரர் சொல்ல, அதுக்கு நாங்க சாவதே மேல்..என்றாள்.

“சாகணும்ன்னா நீ சாக வேண்டியது தான? சின்னப் பொண்ணையும் இப்படி தான் சாகணுன்னு சொல்வாயா?” மீண்டும் சினமுடன் பல்லை கடித்தான் ஆரியன்.

என்னோட வீடு பெரிய குடும்பம். உங்களை அழைச்சிட்டு போனால்..கண்டிப்பாக உன்னோட புருசன் பத்தி கேட்பாங்கம்மா..

உன்னோட புருசன் இருந்தால் நீ இப்படி கஷ்டப்படம்மாட்டன்னு எனக்கு நல்லா புரியுதும்மா. என்னோட வீட்ல பேசியே கஷ்டப்படுத்திடுவாங்க. அதனால என்னோட வீட்டுக்கு அழைச்சிட்டு போக முடியாதும்மா. உன்னை தனியே விடமும் மனசு வர மாட்டேங்குது என்று அவர் ஆரியனை பார்த்தார். அவனுக்கும் அதியாவிற்கும் அவர் எண்ணம் புரிந்தது.

“சும்மாவே முறைப்பான். இதில் இது வேறயா?” என அவள் சட்டென. “பரவாயில்லை அண்ணா. எங்காவது டூலெட் போர்டு இருந்தா நிறுத்துங்க. நாங்க பார்த்துப்போம்”.

“அம்மா, உன்னை பார்த்தாலும் சின்னப் பொண்ணு மாதிரி தான் இருக்க?” ஊர்ல நல்லவனுகல விட பொறுக்கி பயலுக தான் ஜாஸ்தி. அதனால கௌரவம் பார்க்காதம்மா.

“அண்ணா, நான் கௌரவம் பார்க்கலை. எங்களை பார்த்ததிலிருந்து சும்மாவே முறைச்சிட்டு இருக்கார் இந்த சார். இதுல இவர் வீட்ல நாங்க எப்படி இருக்க முடியும்?”

“வந்து தொலைங்க” என்றான் ஆரியன்.

“அம்மா, பொறுமையா இரும்மா. பொம்பள பிள்ளைய வச்சிருக்கம்மா” என  அவர் பதற, அவள் முகத்தை திருப்பிக் கொண்டு, “சரிங்கண்ணா” என்றார்.

“நான் பைக் நிறுத்திய இடத்துக்கு போகணும்” என இடத்தை சொல்ல, அவர் அவனை பார்த்து, ”தம்பி,இரண்டும் சின்னப்பிள்ளைகள் பார்த்துக்கோங்க” என்றார்.

ம்ம்..என அவன் இறங்கி பைக்கை எடுத்தான். ஆகர்ஷனா விழித்து விட, அவளிடம் ஆரியன் வீட்டிற்கு தற்பொழுதைக்கு போகணும் என சொல்லி அவளை முதலில் பைக்கில் ஏற்ற, முன்னால் வாம்மா..என ஆகர்ஷனாவை அழைத்து முன்னே அமர வைத்து விட்டு அதியாவை பார்த்தான். அவள் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

“எனக்கு பைக்ல்ல சென்று பழக்கமில்லை. அதனால தோளில் கை போட்டுக்கவா?” அதியா கேட்க, அவனோ சினமுடன் “பின்னாடி கைபிடியை பிடிச்சுக்கோ” என சொல்லி விட்டு பைக்கை எடுத்தான். அவளுக்கு பயம் பிடிக்க, கண்களை இறுக மூடிய அதியாவின் மனம் நேரம் செல்ல செல்ல லேசானது போல உணர்வு. கண்களை திறந்த அந்நொடி அவளுக்கு அப்பயணம் மூச்சை சீராக்கியது. எஞ்சாய் பண்ணும் மூடு அவளுக்கு இல்லை என்றாலும் பாதுகாப்பான உணர்வு அவளுள் ஏற்பட்டது. அவள் கண்கள் அனிச்சையாக அவனை பார்க்க தூண்டியது.

கண்களை மூடிய அவளுக்கு வாழ்க்கையில் நிகழ்ந்தவை கண்ணீரை வர வைத்தது. என்னோட ஆகுவிற்காக எதையும் நான் ஏற்பேன். இனி என் வாழ்வு அவளுக்கு மட்டும் தான் என எண்ணினாள். ஆனால் அவளுக்கென புது குடும்பம் கிடைக்கப் போவதை அவள் அறியவில்லை.