Advertisement

உள்ளம் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடனும், கண்கள் முழுவதும் கண்ணீருடனும் அவன் கை காட்டிய ராமன், சீதையை பார்த்தாள் வான்மதி.

இப்போது ராமர், சீதையின் முகம் இவர்களின் முகம் போல அவளுக்கு காட்சி அளித்தது. அதில் அவள் முகம் பூவாக மலர்ந்தது. அவளுடைய இத்தனை வருட தேடலுக்கும் விடை கிடைத்தது போல இருந்தது. ஆனந்தத்துடன் அவனை பார்த்தாள்.

“இளவரசே தாங்கள் சொல்வது அனைத்தும் மெய் தானா?”, என்று ஆனந்தததுடன் கேட்டாள் வான்மதி.

“மெய்யாக  தான் உரைக்கிறேன் வான்மதி. இந்த நரேந்திரவர்மன் என்றுமே பொய் உரைக்க மாட்டேன் தேவி. தேவி என்று இனி அழைக்கலாம் அல்லவா?”, என்று சிரித்தான் நரேந்திரவர்மன்.

“தங்களை தவிர வேறு யாரும் இனி என்னை அவ்வாறு அழைக்க இயலாது”, என்று வெட்கத்துடன் முணுமுணுத்தாள் வான்மதி.

“தேவி என்று உன்னை அழைக்கும் அனுமதி  மட்டும் தான் உண்டா தேவி? வேறு உரிமைகள் எனக்கு உன்னிடம் கிடையாதா? நான் எதாவது செய்தால் அதற்கு மறுப்பு தெரிவிப்பாயா?”

இப்போது அவள் முகம் செந்தாமரை போல சிவந்து போனது. அதை ஆசையாக பார்த்தான் அவன்.

“நான் எதுவோ சொப்பனம் கண்டு கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது இளவரசே”, என்று தலை குனிந்த படி கூறினாள் வான்மதி.

“இது சொப்பனம் அல்ல தேவி. அதை நான் உனக்கு நிருபிக்கிறேன்”

“எவ்வாறு?”

“இவ்வாறு”, என்று கூறி கொண்டே  அவள் கன்னத்தில் மீது தன் உள்ளங்கையை வைத்தான். அதிர்ந்து அவனை பார்த்தவள் அவன் கண்களில் வழிந்த காதலை தாங்க இயலாமல் கண்களை இறுக்கி மூடி கொண்டாள்.

அவள் உடல் எல்லாம் சிலிர்த்தது. அவள் கண்ணின் கருமணிகள்  அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்தது. அவளுடைய சிலிர்ப்பை தான் அவனும் பார்த்து கொண்டே இருந்தான். அவன் தொடுகையில் சிலிர்த்து சிவந்து கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு தான் ஆண்மகன் என்ற கர்வம் வந்தது. எப்படி ஒருவன் தான் விரும்பும் பெண்ணை தொட்டு அவளை பெண்ணாக உணர வைக்கிறானோ அவனே ஆண்மகன் என்பது மரபு.

இங்கேயும் அது தான் நடந்து கொண்டிருந்தது. அவனுடைய சிறு தொடுகையை கூட தாங்க இயலாமல்  நாணி முகம் சிவந்து போய் நின்றவளை பார்த்து அவனுக்கு காதல் பெருக்கெடுத்தது.

அது மட்டும் இல்லாமல் அவளுடைய மென்மையான கன்னத்தில் அவனுடைய வாள் பிடித்த கடினமான கைகள் பட்டது, அவனுக்கு ஒரு புது மாதிரியான உணர்வை கொடுத்தது.

அவளுடைய கன்னத்தில் இருந்த குளிர் அவன் கை வழியே அவன் உடல் முழுவதும் படர்ந்து பரவியது போல உணர்வை அடைந்தான் நரேந்திரவர்மன். உணர்ச்சி வேகத்தில் அவன் கை மேலும் அவள் கன்னத்தில் அழுந்தி பதிந்தது. அந்த சிறு அழுத்தத்தை தாங்க முடியாமல் கண்களை மூடிய நிலையிலே நின்று கொண்டு உதடு கடித்தாள் வான்மதி.

இப்போது அவன் பார்வை அவள் கண்ணில் இருந்து அவளுடைய உதட்டுக்கு இடம் பெயர்ந்தது. சிவந்த அவளுடைய அதரங்களை பார்க்கும் போது தேனுரும் கனி என்பது தான் அவன் நினைவில் வந்தது. அதுவும் அவள் உதடு கடித்திருந்ததால் தெரிந்த அந்த வெண்ணிற பற்கள் கொற்கை முத்தை அவனுக்கு நினைவு படுத்தியது.

சிவந்த அதரமும், முத்து போன்ற பற்களும் சேர்ந்து “என் தேவியின் அதரமே காமனின் திறவுகோல்”, என்று புதிய கவிதையை அவன் மனது படைத்தது.

மெதுவாக அவன் பார்வை அவள் முகம் முழுவதும் பயணித்தது. உருண்டையான களையான முகம்,  வெண்ணையை வைத்து செய்தது போல வழுவழுவென்று மின்னியது.

மெதுவாக அவன் பார்வை அவள் முகத்தில் இருந்து அவள் கழுத்துக்கு பயணித்தது. சங்கு கழுத்து என்று கவிஞர் எதனால் அழைக்கிறார்கள் என்று இன்று  புரிந்தது நரேந்திரவர்மனுக்கு. அவள் அணிந்திருந்த ஆபரணம் அவள் கழுத்துக்கென்று படைக்க பட்டது போல இருந்தது. அதில் தான் அணிவிக்கும் மாங்கல்யம் எப்போது குடியேறும் என்று நினைத்து ஒரு நிமிடம் கனவில் ஆழ்ந்து விட்டான் அவன்.

கழுத்தில் இருந்து பார்வை இன்னும் இறங்கியதும் ஒரு சாதாரண ஆண்மகனாக வெப்ப மூச்சு வந்தது அவனுக்கு. வான்மதியின் மார்பில் பதிந்த அவன் பார்வை அவனை வெகுவாக இம்சித்தது. தான் ஒரு இளவரசன் என்பதை மறந்து சித்தம் குலைந்தது போல உணர்ந்தான் நரேந்திரவர்மன்.

“பிரம்மன் இவளை மட்டும் படைக்கும் போது, வெகுநாள்கள் எடுத்து கொண்டான் போல?”, என்று நினைத்து கொண்டவனின் பார்வை அவளுடைய செழுமையை கண்டு வியந்தது. அதை மூடி கொண்டிருக்கும் மேலாடை அவள் அழகை மறைக்க முயன்று தோற்று கொண்டிருந்தது. அவன் கண்களுக்கு அவை கூட  எதிரியாக தெரிந்தன. அந்த மெல்லிய உடையையும் வாள் கொண்டு கிழித்தெறிய வீரம் கொண்டான் நரேந்திரவர்மன்.

அதை செய்ய முடியாமல் ஒரு பெருமூச்சுடன் இன்னும் பார்வையை கீழிறக்கினான். அப்போதும் அவனுக்கு வியப்பு தான் வந்தது. மேலே இருக்கும் செழுமை துளி கூட இல்லாமல் இடை சிறுத்து இருந்தது.

“மேலே வள்ளல் தன்மை கொண்டு படைத்தவன் கீழே கஞ்ச தன்மையுடன் படைத்திருப்பது ஏன்?”, என்று சித்தம் கலங்கி யோசித்து கொண்டிருந்தான்.

அத்தனை நேரம் கண்களை மூடி இருந்தவள், மெதுவாக கண்களை திறந்தாள். அவன் முகத்தை பார்க்க இயலாமல் தயக்கத்துடன் தான் அவன் முகத்தை பார்வை இட்டாள். ஆனால் அவன் அவள் முகம் நோக்காமல் அவளுடைய மார்பையும், இடையையும் மாறி மாறி பார்வையிட்டு கொண்டிருப்பதை கண்டவளுக்கு  மேலும் வெட்கம் வந்தது.

மெதுவாக கைகளை அவன் முகம் அருகே கொண்டு சென்று அவன் கண்களை மூடினாள்.

அவள் தொடுகை பட்டதும் சுயநினைவுக்கு வந்தான் நரேந்திரவர்மன். அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“முக்கியமான வேலையில் ஈடு படும் போது இப்படி இடையூறு செய்யலாமா தேவி?”, என்று சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.

“அது அவரவர் செய்யும் வேலையை பொறுத்தது. தங்களுடைய செயல் ஒன்றும் முக்கியமானதும் அல்ல. சரியான வேலையும் அல்ல”, என்று வெட்கத்துடன் கூறினாள் வான்மதி.

“அப்படி சரியான வேலை அல்ல என்று நீ சொல்லும் அளவுக்கு என்ன வேலை செய்தேன்? நீ தான் பார்த்தாயே? எங்கே கொஞ்சம் கூறு பார்க்கலாம்”

அவன் கண்களில் இருந்து கண்ணை எடுத்து விட்டு “அது உங்கள் கண்களை தான் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது என்று கேட்க வேண்டும் இளவரசே”, என்று சிரித்தாள் வான்மதி.

“கண் என்ன கூறுவது? நானே கூறுகிறேன். நான் என்ன வேலை செய்து கொண்டிருந்தேன் தெரியுமா?”

“ஐயோ வேண்டாம். தாங்கள் கூற வேண்டாம்”, என்று பதறினாள்.

அவள் பதற்றத்தை ரசித்தவன் “நான் கூறியே ஆக வேண்டும். பிரம்மனுடன் ஒரு விவாதத்தை நடத்தி கொண்டிருந்தேன் தேவி”, என்று சிரித்தான்.

“என்ன பிரம்மனுடனா?”

“ஆம் தேவி. நம்மை படைத்த பிரம்மனுடன் தான் விவாதம் நடத்தி கொண்டிருந்தேன்”

தன் அழகை கண்டு தான் அவன் மெய் மறந்து நிற்கிறான், என்று நினைத்த வான்மதிக்கு அப்படி இல்லை என்று நினைத்து மனது கலக்கம் கொண்டது.

கலக்கத்தை மறைத்து கொண்டு “என்ன விவாதம் புரிந்தீர்கள் இளவரசே?”, என்று வினவினாள்.

“சொல்கிறேன் பொறு. அதற்கு முன் அது என்ன இளவரசே? என் பெயரை சொல்லி நீ அழைக்கலாம் அல்லவா?”

“என்னது? தங்கள் பெயரை, நானா? அது முறை அல்ல இளவரசே”

“எனக்கு நீ என் பெயரை சொல்லி அழைத்தால் இன்பம் கிடைக்கும்”

“சரி அதை நம் திருமணத்துக்கு பிறகு முடிவு செய்யலாம். தற்போது தாங்கள் பிரம்மனுடன் நடத்திய விவாதத்தை கூறுங்கள்”

“எனக்கு உன் உடலை பார்த்து தான் சந்தேகம் வந்தது வான்மதி”, என்று அவன் சொன்னவுடன் கலங்கி இருந்த அவள் முகம் மலர்ந்தது. முகம் செஞ்சாந்து நிறம் பூசி கொண்டது.

அதை ரசித்தவன் “உன் வெட்கம் நிலவு பெண் மேகத்தில் இருந்து மறைந்து மறைந்து முகம் காட்டுமே? அது போல் அழகாக இருக்கிறது தேவி”, என்றான்.

“தங்கள் வர்ணனையை நிறுத்தி விட்டு கூற வந்ததை கூறுங்கள் இளவரசரே”

“கூறுகிறேன். பால், தயிர், வெண்ணை, நெய், போன்ற கொழுப்பு நிறைந்த பலகாரங்களை உண்டது போல செழித்து வளர்ந்திருக்கிறது உன் மார்பின் அழகு. ஆனால் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் பட்டினி கிடந்தது போல வாடி இருக்கிறது உன் இடை. இது எதனால் என்று தான் பிரம்மனிடம் விவாதித்து கொண்டிருந்தேன்”, என்று அவன் கூறியதும் தன்னுடைய முகத்தை தன் இருகைகளாலும் மூடி கொண்டாள் வான்மதி.

Advertisement