அங்கே நின்றிருந்த யார் முகத்திலும் சற்றும் தெளிவில்லை. அதுபோக முன்னால் சென்றால் கத்தி வந்து பின்னால் குத்துமே, அதனால் எப்படி உள்ளே செல்வது, இன்னும் இங்கே என்ன புதுவித டுவிஸ்ட் இருக்கிறது என பயந்து போய் நின்றிருந்தனர் நம் சித்து கேங்.
     “டேய் மவனே அந்த மேப்ல எதாவது குளூ போட்டுக்கான்னு பாருடா. நீ உன் இஷ்டத்து போயி கத்தி குத்து வாங்கி செத்து கித்து தொலைச்சிடாதடா”
     மகனின் மீதிருந்த அக்கரையில்தான் நம் அரவிந்தும் பேசினார். ஆனால் எப்போதும்போல் அவர் டோனில் நக்கல் தொனி கலந்துவருவதை அவரால் தடுக்கமுடியவில்லை.
     “அடஇருயா நீ வேற நானும் அதைத்தான் பாக்குறேன். எங்க இதுல எப்புடி எந்த வழியா போகனும்னு போட்டிருக்கே தவிர வரப்போற டேஞ்சரை எல்லாம் எப்படி பேஸ் பண்றதுன்னு போடலையா” சித்து பதற்றத்தில் அவனும் கடுகடுத்து வைத்தான் அவனை பெற்றவரிடம்.
     “ஏய் கெழவி என்ன அப்புடியே செலையாட்டம் நிக்கிற. உள்ள போவ எதாவது வழி தெரியுமா உனக்கு”
     எல்லோரும் குழப்பத்தில் நிற்பதை கண்டு மாதவன்தான் கிழவியிடம் கத்தினான். கண்ணாத்தா பேய்க்கு நம் டூ இடியட்ஸ் பயந்ததெல்லாம் அந்த காலம், எப்போது கிழவி ஒரு டம்மி பீசு என தெரிந்ததோ அப்போதுலிருந்தே கிழவி மீதான மரியாதை போய்விட்டது இருவருக்கும்.
     மாதவன் கேட்டதற்கு “நான் என்னத்தடா கண்டேன்” பாவம் போல் பதில் சொல்லியது கண்ணாத்தா பேய்.
     கிழவியின் பதிலில் கடுப்பாகிய சித்துவோ “நான் என்னத்த கண்டனா, ஏய் கெழவி உனக்கு என்னதா தெரியும். எங்க எல்லாரையும் இங்க இழுத்துட்டு வரமட்டும் தெரியும்ல” என எகிறினான்.
     இதை எல்லாம் கண்டுக்கொள்ளாது “இப்ப என்ன பண்றது வீராம்மா? என்ன பண்லாம்னு எனக்கு எதுவும் தோனலையே, நீயே சொல்லும்மா”
     பதற்றத்தில் எந்த ஒரு ஐடியாவும் வராததால் வீராவிடம் கேட்டு நின்றார் அரவிந்த்.
     “ஆமா வீரா என்ன பண்றதுன்னு எதாவது ஐடியா பண்ணு செல்லம். அந்த வெவஸ்த்த கெட்ட முன்னோர் முண்டம் என்னென்ன வேல பண்ணி வச்சுட்டு போயிருக்கு பாரு. நீதான் எதாச்சும் ஐடியா பண்ணி எல்லாரையும் காப்பாத்தி விடனும்டா”
     சித்து தன் பங்கிற்கு அவனும் வீராவிடமே கேட்டு வைக்க, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்த‌ வீராவுக்கு எப்போதும்போல் ‘இனி இவங்களை நம்பி அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை’ என்ற உண்மை காலதாமதமாக புரிந்தது.
     ‘ஆனா என்ன பண்றதுன்னுதான் எனக்கும் புரியலையே. சரி‌ யோசிப்போம்’ என உள்ளே அலறிய வீரா, அவர்கள் இருந்த இடத்தை சாதாரணமாய் சுற்றி பார்க்க அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை.
     ‘இப்பன்னு பாத்து என் சிஐடி கண்ணுக்கும் ஒரு எழவும் தெரியமாட்டேங்குதே. இப்படியே போனா சரிவராது’ என கண்களை மூடி நன்கு மூச்சை இழுத்து விட
     “என்ன வீரா இந்த நேரம்னு பாத்து மூச்சு பயிற்சி எல்லாம் பண்ற. சீக்கிரம் கண்ண தொறடி” சித்து வேறு நான்சிங்கில் வந்தான்.
     தன் கவனத்தை ஒன்று திரட்ட முயன்றிருந்த வீரா சித்துவின் நாராசமான வார்த்தைகளை கேட்டு கடுப்பில் கண்ணை திறந்து “கொஞ்ச நேரம் உங்க வாயை மூடுங்க சித்து என்னை யோசிக்க விடுங்க” கத்தி விட்டாள் வீரா.
     கோபத்தில் வீரா எகிறிக் கொண்டு வந்ததில் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டான் சித்து. சித்துவை ஆஃப் செய்தவுடன் தன்னை சாந்தப்படுத்திக் கொண்ட வீரா, தங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறது என ஒவ்வொரு இடத்தையும் நன்கு உற்று பார்க்க அப்போதுதான் அந்த வித்தியாசம் அவளுக்கு கொஞ்சம் தெரிந்தது.
    “சித்து கொஞ்ச தள்ளுங்க”
     தன் அருகில் நின்றிருந்த சித்துவை சற்று ஓரமாக தள்ளிவிட்டு கீழே குனிந்து ஒரு இடத்தில் இருந்த மண்ணை தட்டிவிட, மற்றவர்கள் வீராவை குழப்பமாய் பார்த்து நின்றிருந்தனர்.
     “அங்கிள் சித்து இங்க பாருங்க” அந்த இடத்தை வீரா சுட்டிக்காட்ட, அங்கு ஐந்து விரல்கள் கொண்ட கையின் அச்சு போல் ஒரு சிம்பல் இருந்தது.
     “இந்த கை சிம்பல் இதை பாருங்க‌. அங்க குகை கதவை திறக்க கூட இந்த மாதிரி ஒரு சிம்பல் மேலதான் சித்து கை வச்சாரு”
     வீரா சுட்டிக்காட்டியப் பின்னரே அதை உணர்ந்த சித்து “ஆமா வீராம்மா! நீ சொல்றது கரெக்ட். இது அதேமாதிரி ஒரு சிம்பல்தான். இருடா இதேமாதிரி சிம்பல் வேற எங்கையாவது இருக்கான்னு பாக்குறேன்” சித்து நின்ற இடத்திலிருந்தே எட்டி பார்க்க, அதே மாதிரி வரிசையாக அங்கங்கு சிம்பல்கள் இருப்பதை கண்டு அதை வீராவிடமும் காட்டினான்.
     “சித்து எனக்கு என்னவோ இந்த சிம்பல் மேல கால் வச்சு போனா எந்த ஆபத்தும் வராதுனு தோனுது”
     வீரா சொன்னதற்கு அரவிந்த் ஆளுக்கு முன் ஆமாம் என மண்டையை ஆட்டி “டேய் மவனே எனக்கு என்னவோ அந்த சிம்பல் மேலையே நடந்துபோனா நாம போக வேண்டிய இடத்துக்கு போயி சேந்தர்லாம்னு தோனுதுடா. அதனால டைம் வேஸ்ட் பண்ணாம சட்டுப்புட்டுனு அதுமேல நடந்து போடா” வீரா சொன்னதை அச்சுப்பிசகாமல் தானும் சொல்லி சித்துவை ஏவிவிட்டார் மனிதர்.
     “ஓகே ஓகே! மொதல்ல இருக்க சிம்பல் மேல காலை வச்சு பாக்குறேன் கத்தி கடப்பாரன்னு எதாவது வருதான்னு பாருங்க. அப்படி எதுவும் வரலைனா அப்படியே எல்லாரும் என்ன பாலோ பண்ணி பின்னாடியே வந்திருங்க”
     தன் பின்னால் நின்றிருந்த வீரா மாதவன் சங்கர் மூன்று பேரிடமும் கூறிய சித்து ஊரில் இருந்த அத்தனை தெய்வத்தையும் கும்பிட்டு, தன் வலது காலை அதுவும் சற்று எட்டவே நின்று அந்த சிம்பலில் வைத்து அழுத்தினான் சித்து. வீரா சொல்லியிருந்ததைப் போலவே எந்த பக்கம் இருந்தும் எந்த ஆயுதமும் வரவில்லை.
     “ஹப்பாடி எதுவும் ஆகலை” நிமம்தி அடைந்த சித்து
     “வீரா நான் முன்னாடி போறேன், நீங்க பின்னாடியே வந்திருங்க என்னமா” பாசமாய் கேட்ட சித்துவை திட்டக்கூட முடியாது சரியென தலையை ஆட்டி வைத்தாள் அவன் அன்புக்காதலி.
     மிக மெதுவாக கவனமாக ஒவ்வொரு சிம்பலிலும் தன் காலை எடுத்து வைத்து முன்னேறி சென்ற சித்து ஒருவழியாக அந்த இடத்தை கடந்தான். அவன் பின்னால் வீரா, மாதவன் மற்றும் சங்கர் மூவரும் வர, அவர்களுக்கு பின்னால் தாங்கள் பேய் என்பதையே மறந்து அவர்களைப் போலவே வந்த கண்ணாத்தா கிழவியையும் அவனின் ஆருயிர் தந்தையையும் கண்டு தலையில் அடித்துக் கொண்டான் சித்து.
     “ஏய் கெழவி, யோவ் நைனா! உங்க ரெண்டு பேருக்கும் பேருக்காவது மூளைன்னு ஒன்னு இருக்கா. அவங்கதான் மனுஷங்க இப்புடி வராங்க, உங்க ரெண்டு பேருக்கும் என்னா கேடு வந்துச்சு. செத்துப்போய் பேயா சுத்துறீங்கல, அப்படியே காத்துல பறந்து வர தெரியாதா”
     சித்து இருவரையும் கேவலமாக திட்டியப்பின்னரே அதை உணர்ந்த கிழவி “அட ஆமால்ல, இது எனக்கு தோனாமா போயிட்டுதே” என்றவாறு முன்னால் பறந்தது.
     “அ..அது எனக்கும் தெரியும்டா மவனே! ஆனா உங்கள மாதிரி நடந்து பாக்கலாமேன்னு நானும் டிரைப் பண்ணுனேன்” அரவிந்த் கேவலமாக சமாளித்து இளித்து‌ வைக்க, த்தூ என துப்பினான் மகன்‌.
     இப்படி அமளிதுமளியுடன் இரண்டாவது லெவலையும் வெற்றிகரமாக நம் சித்துவின் கேங் முடித்துவிட “சித்து இன்னும் நாம எவ்ளோ தூரம்தான் போகனும் அந்த மேப்ப பாருங்க” என்றாள் வீரா சலிப்பாக.
     தன் பேக்கெட்டில் இருந்த மேப்பை எடுத்த சித்து அதை ஒரு இரண்டு நிமிடம் குறுகுறுவென பார்த்தவனின் முகம் சட்டென பிரகாசமானது.
     “வீராம்மா அவ்ளோதான் போலடா, இங்கபாரு நாம நிக்கிறது இதோ இந்த இடம். இங்க இருந்து கொஞ்ச தூரம் முன்னே போனா இதோ இங்க ரெட் மார்க் பண்ணிருக்கே அங்கதான் புதையல் இருக்கும் போல”
     சித்து காட்டியதை தானும் பார்த்த வீரா ‘ஹப்பாடா ஒருவழியா எல்லா கண்டத்தையும் தாண்டி வந்துட்டோமா’ நிம்மதி பெருமூச்சு விட்டாள். ஆனால் ‘என்னவோ ஒன்னு இடிக்குதே’ என்று வீராவின் மனதிற்குள் தோனவும்‌ செய்தது. எனவே ஆளுக்கும் முன் வேகமாக முன்னேறி செல்லப் போன சித்துவை பிடித்து பின்னே இழுத்து தடுத்தாள்.
     “என்னாச்சு வீரா, எதுக்குடி என்ன புடிச்சு இழுத்த” புரியாமல் பையன் கேட்டு நிற்க
     “இல்ல சித்து இங்க பாருங்க‌. இதுல இன்னும் கொஞ்ச தூரம் கோடு இருக்கு. ஏற்கனவே நம்ம உள்ள வரதுக்குள்ள எவ்ளோ டேஞ்சர் இருந்தது. நீங்க பாட்டுக்கு அசால்ட்டா கால வச்சு வேற ஏதாச்சும் நடந்துட்டா என்ன பண்றது. இருங்க யோசிச்சு கால வைப்போம்” முன்னெச்சரிக்கை செய்தாள் வீரசுந்தரி.
     அவள் சொன்னதிலும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்தது. ஏனெனில் இந்த புதையலை மறைத்து வைத்திருக்கும் அந்த முன்னோர் இங்கு எதாவது புதுவித டுவிஸ்டை வைத்திருக்கும் பிராபபிளிட்டி இருநூறு பர்சண்ட் இருப்பதை உணர்ந்து சித்துவும் அமைதியாக நின்றுக்கொண்டான்.
     ‘என்னப் பண்ணலாம்’ தீவிரமாக வீரா யோசிக்க, அவளை சுற்றி நின்றிருந்த மூன்று மனித மாக்கான்கள் மற்றும் இரண்டு பேய் ஜந்துக்கள் வீரா என்ன சொல்ல போகிறாள் என பார்த்திருந்தார்களே தவிர சின்னதாக யோசிக்கும் பாவைனையை கூட தரவில்லை. முடிலில் வீராவின் தீவிர முயற்சியின் பலனாய் ஒரு ஐடியாவும் கிடைத்தது.
     மாதவனை நோக்கி திரும்பிய வீரா “மாதவன் நீங்க என்ன பண்றீங்க, உங்க கைல இருக்க கடப்பாரைய கொண்டு போய் அங்க இருக்க கட்டத்துல வைங்க. ஆனா ரொம்ப பக்கத்துல போயிடாமா, கொஞ்சம் தூரமா இருந்தே வைங்க. சித்து எதுக்கும் நீங்க மாதவன சப்போர்டா பிடிச்சுக்கோங்க. ஏன்னா எதுவேனா நடக்கலாம், இல்ல நடக்காமலும் போகலாம்”
     வீரா எதற்கு சொல்கிறாள் என புரியாத போதும் அவள் சொன்னதை இருவரும் அப்படியே செய்தனர்‌. மாதவன் உசாராக நன்கு தூரமாக தள்ளி நின்றபடி கடப்பாரையை வைக்கப்போக அவன் பின்னால் சித்து அவனை ஸ்ராங்காக பிடித்துக் கொண்டான்.
     பெரிய பெரிய கட்டங்கள் இருக்க ஒரு கட்டத்தில் அந்த கட்டாரையை வைக்க, ஒன்றும் ஆகவில்லை.
     “ஹப்பாடா ஒன்னும் ஆகலை” சந்தோஷத்தில் மாதவன் இதுவரை லேசாக அங்கே வைத்திருந்த கடப்பாரையை சற்று வேகமாக வைத்து அழுத்த, இதுவரை சாதாரண தரையாக இருந்த அந்த கட்டம் டமாரென்ற சத்தத்துடன் திறந்துக்கொண்டது.
     சத்தம் கேட்ட அதிர்ச்சியில் சித்து மாதவனை பிடித்து பின்னால் இழுக்க, பொத்தென இருவரும் மல்லாக்க விழுந்தனர். கொஞ்ச நேரம் என்ன ஆனது என்றே புரியாமல் திகைத்து போய்விட்டனர் இருவரும்.
     “என்ன ஆச்சு வீரா” அதிர்ச்சியில் ஆந்தைப்போல் கண்களை விரித்த சித்து கேட்க
     “அது ஒன்னுமில்ல சித்து இப்ப கடப்பாரைக்கு பதிலாக நாம காலை வச்சிருந்தோம்னா டமார்னு பூமி பொழந்து நாம எல்லாம் அந்த குழில விழுந்திருப்போம் அவ்வளவுதான்” அசால்டாக சொல்லி நிறுத்தினாள் அவள்.
     வீரா சொன்ன தினுசில் தாங்கள் கடப்பாரையை வைத்த இடத்தை எட்டிப்பார்த்த சித்துவின் இதயம் ஒருமுறை நின்று துடித்தது. பின்னே அதனுள் பத்தடி பள்ளம் இருக்கிறதே. அவசரப்பட்டு சித்து காலை வைத்திருந்தால் பப்பரப்பே என வழுக்கி தாறுமாறாக உள்ளே விழுந்திருப்பானே. இவ்வளவு பெரிய ஷாக்கில் இருந்து சித்து வெளியே வரும்முன் அந்த பள்ளம் மீண்டும் மூடிக்கொண்டது.
     அடுத்து இருக்கும் இந்த பெரிய தடையை பார்த்ததில் மூளை வேலை நிறுத்தம் ஆகிவிட, இதை தாண்ட என்ன செய்வதென வீராவை பார்த்து நின்றான் பாவப்பட்ட அரவிந்தின் மகன்.
-ரகசியம் தொடரும்