Advertisement

எனக்கு அட்ஜஸ்ட்மென்ட் ஒத்துவராதுன்னு சொல்லிதான் என் போர்ட்ஃபோலியோ குடுத்தேன். அவனும் பெருசா எதுவும் வற்புறுத்தவும் இல்லை. ஒரு ஆறு மாசம் அவனும் ஆடிஷன் அனுப்பினான், ஒன்னு ரெண்டு தேறும், அவன் கமிஷன் எடுத்துட்டு என் பேமென்ட் வந்துடும்.

ராம்ப் ஷோக்கு தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருந்தேன். என்னோட இன்னும் இரண்டு பொண்ணுங்க. அதுல ஒருத்தி அந்த ஷோ அரேஞ்ச் பண்ற ப்ரோடுயூசர், ஃபைனான்சியர்னு அவன் சொன்னவங்களோட படுத்துட்டு வந்தா. “ஏன் இப்படி பண்றன்னு நான் கூட சண்டை போட்டேன். திறமை மட்டும் போதாது சஹானா, சரியான நேரத்துல நமக்கு புஷ் குடுக்க ஆளுங்களும் தேவைன்னு எனக்கே பாடம் எடுத்தா. பிரவீன் அவன் பங்குக்கு, அவளுக்கு ஓகேன்னவேதான் அனுப்பறேன் சஹானா,உனக்கு பிடிக்கலைன்னா வேணாம். ஆனா வயசு ஏறிகிட்டே போகுது பார்த்துக்கோன்னு போயிட்டான். அந்த வருஷம் அவ ராம்ப் ஏறினா. எனக்குக் கிடைக்கலை. என்னவிட பெருசா அழகோ, திறமையோல்லாம் இல்லை. வயசு இருந்தது. இருபத்திரண்டுதான் அவளுக்கு. அஞ்சு வருஷம் கம்மி, ஆனாலும் அடுத்த ஒரு வருஷத்துல என்னைத் தாண்டி பல மைல் தூரம் போயிருந்தா”, நடையை நிறுத்தி சுதர்ஷனைப் பார்த்தவள், ஒரு வேதனைப் புன்னகையுடன், “மனசு ஒரு குரங்குன்னு சொன்னவன் தப்பா சொல்லியிருக்கான் தர்ஷூ…. மனசு ஒரு சைத்தான். மூளையை மழுங்கடிக்கற அளவுக்கு அது நியாயம் பேசும். எனக்குள்ள போராடிப் போராடி நான் தோத்துப்போயிருந்தேன். எத்தனை பேர் சூழ்ந்திருந்தாலும் ரொம்ப மனசுவிட்டு பேசிடல்லாம் முடியாது. அதுவும் நான் ரொம்ப ரொம்ப ஒதுக்கம் காட்டுவேன். யார்கிட்டேயும்  நினைக்கறது சரியா தப்பான்னு கூட கேட்க முடியலை. வருணுக்கு போன் பண்ணலாம்னு எடுப்பேன். கிளம்பி வாடின்னு சொல்லுவான், இல்லை அடுத்த நிமிஷம் அங்க வந்து என்னை கூட்டிட்டு வந்துருவான்னு நல்லா தெரியும். ஆனா தோத்துபோய் எல்லார் முன்னாடியும் வர அப்போ தைரியமில்லை”

“எல்லாம் பார்த்தாச்சு…இது ஒன்னு மட்டும்தானே… இதையும் பார்த்துடுவோம்னு துணிஞ்சேன். என்னவோ அந்த எழவையும் செஞ்சுட்டா உடனே ராம்ப் வாக் சான்ஸ் கிடைக்கும், பெரிய டிசைனர் கண்ல பட்டு அவங்க அப்படியே என்னை கொத்திகிட்டு போயிடுவாங்கன்னு நினைப்பு!”, அவளையே ஏளனமாக ஏசிக்கொண்டாள்.

பல்லைக்கடித்து பேசாமல் இருந்தான் சுதர்ஷன். அவள் மனதில் புதைத்து வைத்திருப்பதெல்லாம் வெளியே வந்துவிடட்டும் என்பதில் கவனமாக இருந்தான்.

“விதி அந்த நேரம் விளையாடிச்சு. அடுத்த சீசன் ராம்ப்-வாக்ல ஏற்கனவே தேர்ந்தெடுத்த மாடல் காலை உடைச்சிகிட்டா, அதனால அவசரமா வேற ஆள் தேடறாங்கன்னு ந்யூஸ் வந்தது. ஆசை என் கண்ணை மட்டுமில்லை என் மூளையையும் மழுங்கடிச்சுது. பிரவீன் கிட்ட, எல்லாத்துக்கும் சரி, எனக்கு அந்த சான்ஸ் வேணும்னு போய் நின்னேன்.  அவள் கைகள் இரண்டும் அவன் வயிற்றை சுற்றி இறுக்கமாக கட்டியிருந்தாள்.

“ஃபைனான்சியர்கிட்ட பேசிட்டேன் சஹானா. இராத்திரி மீட் பண்ணி கம்பனி குடு”, சொல்லி டீடெயில்ஸ் அனுப்பினான். சஹானாவின் முகம் முழுவதும் அருவருப்பு. எத்தனை பெரிய முட்டாள்னு இப்ப தெரியுது. ஆனா அப்ப எனக்குள்ள ஆட்டிப்படைச்சிகிட்டு இருந்த சாத்தான், “இது ஒரு நைட் மட்டும் தாண்டிடு சஹி… சாதிக்க வேண்டியது நிறைய இருக்குன்னு என்ன என்னவோ எனக்கு நானே உளறிகிட்டுப் போனேன். அங்கதான் கௌரவ் இருந்தான். அவனை முன்னாடியே பார்த்திருக்கேன். கொஞ்சம் பிரபலமான டிசைனர்ஸ் கூட அவங்கிட்ட மரியாதையா பேசுவாங்க. நிஜமா இந்த கடைசி கதவைத் திறந்துட்டா என் வாழ்க்கை பிரகாசமாகிடும்னு நினைச்சு டின்னர்க்கு அவனோட போனேன். அந்த நைட் கடக்க அவனோட சேர்ந்து குடிக்கவும் செய்தேன். முன்னாடி நானும் வருணும் அவங்க அப்பாவோட வைன் கொஞ்சம் சாப்பிட்டு கெக்கெபிக்கேன்னு சிரிச்சிகிட்டு இருப்போம். இப்ப மூணு நாலு கிளாஸ் போக தள்ளாடி தள்ளாடித்தான் ரூமுக்குப் போனேன்”, என்றவள் திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

சுதர்ஷன் மனம் அவளுக்காக வருந்தினாலும் முகத்தில் எந்த உணர்வும் காட்டவில்லை. அவன் முகம் வெறுப்பையோ, ஏளனத்தையோ காட்டும் என்று தேடிப்பார்த்தவளுக்கு அவன் கண்களின் கனிவு மட்டும்தான் தெரிந்தது.

அடைக்கும் தொண்டையை சீர் செய்தவள், “அந்த நைட் பெருசா ஞாபகம் இல்லை. விடியக்காலையில எழுந்தபோது அவன் எதிர்பார்த்ததை எங்கிட்ட வசூல் பண்ணியிருந்தான்னு புரிஞ்சுது. எப்ப கிளம்பி போனானோ தெரியாது. மனசு பூரா வலி. ஒன்னும் சொல்லாம கிளம்பி வந்துட்டேன். யாரையும் பார்க்கக்கூட பிடிக்கலை. மதியம் பிரவீனைப் பார்க்க அவன் ஆஃபீஸ் போனேன். அங்க மறுபடியும் விதி விளையாடிடுச்சுன்னுதான் சொல்லணும். ஸ்பீக்கர்ல போட்டு பேசிகிட்டு இருந்தான். வழக்கமா எக்சர்சைஸ் பண்ணும்போது அப்படித்தான் பேசுவான். கதவு லேசா திறந்திருந்தது. கெளரவ் சொன்னது தெளிவா விழுந்துச்சு, சொல்லலை திட்டிகிட்டு இருந்தான்”

“சாலே… என்ன ஐட்டம் மேன் அனுப்பற? புதுசா இருந்தா மட்டும் போதுமா? டின்னரும்போது நல்லா பேசறாளேன்னு பார்த்தா, கிடைச்சது சரக்குன்னு பாதி மட்டையாகிட்டா. பொம்மையோட பண்ற மாதிரி இருந்துச்சு. எதுக்குடா இப்படி முத்தின பீசெல்லாம் அனுப்பற?”

“ராம்ப் வாக்ல  நவீனா இடத்துக்கு அவளுக்கு சான்ஸ் வேணும்னு ரொம்ப கேட்டா, இப்பல்லாம் பதினாறு பதினேழுகூட புதுசா இருக்க மாட்டேங்குதே கௌரவ் பையா”, என்று பிரவீன் வழிந்தான்.

“டேய்…அதுக்குத்தான் ஏற்கனவே ஷோபியை போட்டாச்சே”, என்று கெளரவ் சொல்லவும், பெரிய ஜோக் போல சிரித்த பிரவீன்,

“எனக்குத்தான் தெரியுமே பையா. இத்தனை வருஷமா ரொம்ப பிகு பண்ணாளா, அதான் அதுவே வலிய வந்து கேட்கவும், சரி சும்மாவாச்சம் அனுப்புவோம்னு நினைச்சேன். குடிக்க மாட்டாளே அவ…”, என்று யோசித்தான்.

கேட்டுக்கொண்டிருந்த சஹானாவிற்கு கண்கள் இருட்டியது. உடல் முழுதும் தீப்பற்றி எரிவதைப்போல சூடு பரவியது. மேலே கேட்கவே கூசினாலும், அவர்கள் அவளைக் கேவலமாக பேசுவதை முழுவதுமாக கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தாள்.

எப்படியோ அவள் தங்கியிருக்கும் அறைக்கு வந்தவள் காய்ச்சலில் விழுந்தாள். இரண்டு நாட்கள் எதிர் அறையில் இருந்த ரோசி பாவம் பார்த்து மாத்திரை ரொட்டி என்று வாங்கிக்கொடுத்தாள். கண்களில் நீர் கூட வற்றிவிட்டது சஹானாவிற்கு. வாழ்க்கையே வேண்டாம் முடித்துக்கொள்வோம் என்று அப்படி ஒரு வெறுப்பு.  இரண்டு நாட்கள் கழித்து மனம் அதிர்ச்சியிலிருந்தும் அயர்விலிருந்தும் சற்று தெளிந்தபின் யோசிக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் அவள் மூளை எவ்வளவு ஆபத்தாக யோசிக்கும் என்று புரிந்தது. முதலில் தனக்கு எந்த தொற்று  நோயும் இதன் மூலம் வந்து தொலைக்கவில்லை என்பதை ரத்த மாதிரி, பாப்-ஸ்மியர் என்று சில அத்தியாவசிய பரிசோதனைகளை செய்து கொண்டாள்.

மீண்டும் ஒன்றுமே நடவாததுபோல் பிரவீன் ஆஃபீசுக்குச் சென்றாள். போலியாக சிரித்துப் பேச, அவனும் கெளரவ் உன் அழகில், பேச்சுத் திறமையில் கவரப்பட்டார். எப்படியும் இன்னும் இரண்டொரு நாட்களில் செய்தி வந்தாலும் வரும் என்பது போல அள்ளிவிட்டவன், “எதுக்கும் ஒரு இன்சூரன்ஸ்க்கு அந்த ஷோ டைரக்டரையும் பார்த்துடறியா சஹானா? அவர்கிட்ட பேசவா?”, என்று அடுத்த ஆளுக்கு விருந்தளிக்க அவளிடமே கேட்டான்.

எழுந்த உமட்டலை வெளியே காட்டாது, “இப்பதான் ஃபீவர் போச்சு ஆனா முழுசா போகலை பிரவீன், எதையாவது அவருக்கு தொத்திக்குடுத்துட்டா வம்பாகிரும். ஒரு இரண்டு நாள் போகட்டுமே. சரி உனக்கு ஒரு தாங்க்ஸ் சொல்ல வா லன்ச் வெளிய போகலாம்”, என்று அழைத்தாள்.

அதுக்கென்ன என்று உடன் வந்தான். லன்ச் முடிந்து அவன் கிளம்பிவிட்டான். மாலைப் பொழுதிற்காகக் காத்திருந்தாள். அவனை தொடர்பு கொண்டாள்.

“ஹலோ?”

“ப்ரவீன், நாந்தான். உனக்கு உடம்பு  நல்லாயிருக்கா?”, என்று சற்று தோய்ந்த குரலில் கேட்டாள்.

“இல்லை… உனக்கும் சரியில்லையா? நாலஞ்சு ட்ரிப் அடிச்சிட்டேன் பாத்ரூமுக்கு. நீ? ”

“ஹ்ம்ம்….அதேதான். அந்த ஹோட்டல்ல நாம சாப்பிட்டதுதான் எதுவோ சேரலை போல. அதுக்குத்தான் கூப்பிட்டேன். ம்ம்… எங்கிட்ட சுத்தமா காசே இல்லை பிரவீன். இருந்ததை லன்சுக்கு குடுத்துட்டேன். நான் உன் வீட்டுக்கு வரவா. சமாளிக்க முடியலைன்னா சேர்ந்தே டாக்டரைப் பார்க்கலாம்”, தூண்டிலைப் போட்டாள்.

“ஹ்ம்ம்…சரி சரி…வா. கதவு சும்மா சாத்தி வைக்கறேன்”, அவசரமாக அழைப்பை துண்டித்ததிலேயே தெரிந்தது மீண்டும் கழிவறைக்குப் படையெடுத்திருக்கிறான் என்று.

ஒரு குரூர புன்னகை சஹானா முகத்தில் வந்து போனது. கிடைத்த ஸ்கர்ட், டீ-ஷர்ட்டை போட்டுக்கொண்டு கிளம்பினாள். அவனுக்குக் கொடுத்த அதே பேதி மாத்திரையின் சிறு அளவை அவளும் உண்டாள்.

பத்து நிமிடத்தில் அவன் வீட்டில் இருந்தாள். உள்ளே சென்றவள், கெஸ்ட் பாத்ரூமிற்குள் ஓடினாள். வெளியே வந்தவள் பார்த்தது வெளுத்துப்போயிருந்த பிரவீனைத்தான். ‘இன்னும் இருக்குடா உனக்கு’, என்று நினைத்தவள், “உப்பும், சர்க்கரையும் சேர்த்து தண்ணி சாப்பிடணும்னு சொல்லுவாங்க. இரு”, என்று காரியமாக சென்று அவனுக்கும் அவளுக்குமாக கலந்து கொண்டு வந்தாள்.

அந்த ஹோட்டல்காரனை சபித்துக்கொண்டே குடித்தான். “நீ போய் படு. நான் இங்க சோஃபால படுக்கறேன். வயிறு மொத்தமா காலி ஆச்சுன்னா சரியாகிடும்”, என்று கரிசனையாக சொல்லி அனுப்பி வைத்தாள்.

ஒரு மணி நேரம் போல விட்டு வைத்தாள். பின் இன்னும் கொஞ்சம் மாத்திரை கலந்து ப்ளாக் டீ ரெடி செய்தாள். அந்த வாசனைக்கு வந்தான்,

“என்ன பண்ற?”

முடியலை. ப்ளாக் டீ குடிச்சா  நிறுத்தும்னு கூகிள் சொல்லுச்சு. நீ ட்ரை பண்றியா?”, அவள் எதிர்பார்த்தது போலவே அவன் கேட்க, தன்னிடம் இருந்ததை அவனிடம் தந்துவிட்டு , மாத்திரை இல்லாத புது டீயை அவளுக்கு எடுத்துக்கொண்டாள். அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் பிரவீன் வயறு கலக்கித் தள்ள, ஒரு கட்டத்தில் பாத்ரூம் வாசலிலேயே படுத்துவிட்டான்.

“அய்யோ… இந்த உடம்பை தூக்கிப் போட்டுட்டு வேற உடம்புக்குள்ள போயிடலாம் போலருக்கே”, என்று ஒரு கட்டத்தில் புலம்ப, ‘அப்படித்தானேடா  நானும் கதறினேன்’, என்று மனதுக்குள் கருவினாள்.

அவன் டாக்டரிடம் போவோம் என்றதற்கு, “எனக்கு ஆல்மோஸ்ட் சரியாகிடுச்சு. மே பீ உன் உடம்புக்கு கொஞ்சம் டைம் எடுக்குது போல.  நைட்ல எங்க அலையறது? காலையில போயிக்கலாம்”, என்று அவன் யோசனையை மழுங்கடித்தாள்.

உருவிப்போட்ட நாராகக் கிடந்தவனைப் பார்க்கப் பார்க்க ஒரு திருப்தி.  ஆனாலும் அவன் செய்த நம்பிக்கை துரோகத்திற்கு இது பத்தாது என்றும் தோன்றியது.  கிட்டதட்ட முப்பது மணி நேரம் தெளிய வைத்துத் தெளிய வைத்து அவனை நோகடித்தாள்.

டாக்டரை நேரே அழைத்து வா என்று கெஞ்சினான் பிரவீன். இதற்கு முன்னர் நீ நடக்கும் நிலையில் இல்லை. நான் சென்று டாக்டரிடம் சொல்லி மாத்திரை வாங்கி வருகிறேன் என்று சொல்லி  விட்டமின் மாத்திரையை ஒரு முறையும் நிஜ மாத்திரையை ஒரு முறை என்று கலந்து கொடுத்து சரியாவது போல ஒரு தோற்றத்தைக் கொடுத்து மீண்டும் பாத்ரூமுக்கு ஓட வைத்தாள்.

உடம்பில் நீர் சத்து குறைந்து, இடுப்பில் டவலை மட்டுமே சுற்றி, அதிலும் சிலதை நாசப்படுத்தி ஓரத்தில் நாறிக்கொண்டிருக்க, நடக்கக்கூட முடியாமல் தவழும் நிலைக்கு வரவும், ஆம்புலன்சை வரவழைத்தாள். உயிர் பயம் வந்தது போல அவளையும் உடன் வரச் சொல்லி கெஞ்சினான் பிரவீன். அவன் குடும்பம் எல்லாம் வேறு மாநிலத்தில் இருக்கிறார்கள். ஹாஸ்பிட்டலில் சேர்த்தவள், அவன் கடன் அட்டையை வாங்கி அட்மிஷனில் தேய்த்தாள். அவளைக் கடவுளாக நினைத்துக் கும்பிட்டான் பிரவீன்.

ஆனால் அவனுக்குத் தெரியாதது, அவன் வீட்டுக் கிட்சனில் இருந்த பல மாவு, பொடிகளில் மாத்திரையை நுணுக்கிக் கலந்திருந்தாள்.

கேட்டுக்கொண்டிருந்த சுதர்ஷனால் அவளின் தீவிரத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவள் ஏமாற்றப்பட்டது அவனுக்குமே எரிந்த்து. கௌரவைப்போல ப்ரவீனின் தாடையையும் உடைக்கத் தோன்றியது.  “எல்லாரும் சொல்லுவாங்க. நீ செஞ்சதோட இல்லாம அங்கங்க கண்ணி வெடியை வெச்சிட்டும் வந்தருக்க. பெரிய விஷயம் சனா. அப்பறம் அவன் நிலைமை என்னாச்சு?”

“சாப்பிடவே பயப்பட்டு, ஆளே இளைச்சு, கொஞ்ச நாள் உடம்பை சரி  பண்ணிகிட்டு வரேன்னு அவன் சொந்த ஊருக்கு போயிட்டான். எதை தூக்கிப் போட்டாலும், அவன் ரொம்ப ஆசையா வெச்சிருக்க விஸ்கி பாட்டில் போடமாட்டான். எப்போ குடிச்சாலும் மறுபடியும் புடுங்கிக்கும். அத்தனை போட்டு வெச்சிருக்கேன்”, குரலில் சற்றும் பச்சாதாபமே இல்லை.

அவன் வாயில் கைவைக்க, “நீ சம்மதிச்சுத்தானே போன, அவனா வற்புறுத்தினான்னு நினைக்கலாம். அந்த வாய்ப்பு யாருக்கோ போயிடுச்சுன்னு தெரிஞ்சும், இத்தனை நாள் முடியாதுன்னு முறுக்கினவ அவளா வந்தாளேன்னு சும்மா அனுப்பினேன்னு சொன்னானே, அதுக்காகத்தான். மறுனாள் என் உடம்பை நான் எவ்வளவு வெறுத்தேனோ அதைவிட நூறு மடங்கு அவனை வெறுக்க வெச்சேன். எழுந்துக்க முடியாம, படுத்தபடியே கட்டின டவல்லயே போனான். ரூமே நாறிப்போச்சு. அதுலையே கிடந்தான், அப்படியே கிடக்கட்டும்னு விட்டேன்.”

பிரவீனைப் பற்றி சொன்னதைவிட, அவளைப் பற்றிச் சொன்னதுதான் அவன் மனதை கனக்க வைத்தது. தன்னைத்தானே மன்னிக்கத் தாயாராகவே இல்லை அவள்.

Advertisement