அத்தியாயம் 9

ரகுவும் மித்துவும் தங்கள் குழந்தைக்கு ரியா என பெயரிட்டனர்.

ரியா பிறந்து ஒரு வருடமானது. அவளுடைய பிறந்த நாளை சிறப்பாக    கொண்டாடினர். அவளுடைய மழலை பேச்சால் அனைவரையும்    கவர்ந்தாள். தினமும் பாட்டு பாடினால் தான் தூங்குவாள். மித்து தான்   பாட்டை பாடுவாள். இரவு எட்டு மணியானதும் ம்மா…பாட்டு என   ஆர்வமாக மழலை பேச்சில் கேட்க, அவளும் பாடுவாள்.

   “அழகான காடு

    காட்டுக்குள்ளே

    சத்தமொன்று கேட்டது

    கம்பீர நடையுடன்

    சிங்கமொன்று வந்தது (உர் உர் உர்)

    இரண்டு

    நீளமான காதுகளுடன்

    குட்டிமுயல்

    தாவி தாவி வந்தது.

    நரியொன்று

    நான்கு காலில்

    நடந்து

    ஊளையிட்டு வந்தது. (உஊ……உஊ)

    கரடியொன்று

    இரண்டு காலில்

    தேனெடுத்து வந்தது.

     அனைவரும்

      கூடி

      தேனை உண்டு

      மகிழ்ந்தனர்.

     கொண்டாட்டமோ கொண்டாட்டம்” (ஊகூ…… ஊகூ) ஆனந்தமாக    குரலெழுப்பினர்”.

மித்து அழகான தொனியில் பாட்டு பாடிக் கொண்டே ஆட்டம் போட குழந்தை கை தட்டி சிரித்தது. ரகுவும் குழந்தையுடன் சேர்ந்து   கொண்டான். இப்படியே அழகாக அவர்களது நாட்கள் ஓட, விடுதியையும்   மித்து கவனித்துக் கொண்டாள்.

இரண்டு வருடங்கள் கழித்து, ஒரு நாள் இரவில் மித்து உறங்க  முடியாமல் தவிக்கவே, தண்ணீர் எடுக்க கீழிறங்கி வந்தாள்.

திலீப் யாருடனே பேசிக் கொண்டிருந்தான். இவனை எங்கேயோ   பார்த்தது போல் உள்ளதே என்று மறைந்து நின்று அவர்கள் பேசுவதை   கேட்டு விட்டு, நம்முடைய திலீப்பா இவன்? அவள் மனதில்   கேள்விகளுடன் மேலே சென்று படுத்தாள். அவளால் தூங்க   முடியவில்லை.

மறுநாள் காலையில் முதல் வேலையாக நடந்தவற்றையும், அவர்களது   திட்டத்தினையும் சேர்த்து போலீசிடம் கூறினாள். போலீசும் திலீப்பிற்கு  உடந்தை என்பது மித்துவிற்கு தெரியாது.

அன்று குழந்தைகளை கடத்தியது, மித்துவை கொல்ல முயற்சி  செய்தது எல்லாவற்றையும் செய்தது திலீப் தான். நடந்த அனைத்திற்கும்   மூலக்காரணமே இவன் தான். கூட்டத்திற்கு தலைவனும் இவன் தான்  என உறுதியாக தெரிந்தது மித்துவிற்கு.

அன்று தான் கம்பெனி வேலையாக ரகு பெங்களூரு கிளம்பிக்  கொண்டிருந்தான். இவரிடம் எப்படி கூறுவது? தன் தம்பி இவ்வளவு  பெரிய தவறான காரியம் செய்கிறான் என தெரிந்தால், இவர் மிகவும்    வருத்தப்படுவாரே, தம்பி மேல் அளவு கடந்த பாசமும், நம்பிக்கையும்   வைத்திருக்கிறார் என யோசித்தாள்.

பின் முடிவெடுத்தவாறு, முதலில் போலீஸ் என்ன சொல்கிறார்கள் என   பார்ப்போம்.

ஏய் மித்து, என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்? ரகு கேட்க,

அது வந்து….ஒன்றுமில்லை. நீங்கள் வர எத்தனை நாட்களாகும்?

எப்படியும் மூன்று, நான்கு நாட்களாகும் என்றான் அவன் உடைகளை  எடுத்து வைத்தவாறே.

என்னாச்சு உனக்கு?

இல்லை, எனக்கு ஒருமாதிரியாக உள்ளது. நீங்கள் கண்டிப்பாக செல்ல  வேண்டுமா?

ஏய் மண்டு, இன்று உனக்கு என்னாயிற்று?

பதில் கூறாமல் அழவே ஆரம்பித்தாள் மித்து.

என்னடா, சின்ன குழந்தையாட்டம் நடந்துக்கிற? அவளை அணைத்துக்  கொள்ள கொஞ்சம் அமைதியாகி, நீங்கள் கிளம்புங்கள் நேரமாகிறது.

நிச்சயமாக தானே கூறுகிறாய்?

ஆமாம் தலையசைத்தாள் மித்து.

அவன் கிளம்ப, மித்துவும் ரியாவும் அவனுடன் வெளியே வந்தனர்.

ரியா குட்டி அப்பாவிற்கு முத்தம் கொடு கன்னத்தை ரகு காட்ட, ரியாவும்   முத்தமிட்டாள்.

ரியா குட்டி “பை பை” என்றான்.

அவனுடைய அம்மாவிற்கும், தம்பிக்கும் கையை காட்டி விட்டு கிளம்ப, குழந்தை சிரித்துக் கொண்டே கையை அசைத்தது.

ஆனால் மித்து மறுபடியும் அவனை கூப்பிட்டு அணைத்துக் கொண்டாள். பத்திரமாக சென்று வாருங்கள் ரகு என்றாள்.

பதிலுக்கு அவனும் அவளை அணைத்துக் கொண்டு, ரியாவை பத்திரமாக    பார்த்துக் கொள், உன்னையும் என கூறி விட்டு கிளம்பினான்.

மித்துவின் முகமே சரியில்லை. இதுவரை இவள் இவ்வாறு நடந்து   கொண்டதில்லையே? உன்னுடைய பிரச்சனையை கம்பெனி பிரச்சனை   முடிந்த பின் வந்து தீர்த்து வைப்பேன் என மனதில் நினைத்தவாறு    சென்றவன் மித்துவை திரும்பி பார்த்து, சீக்கிரம் வந்து விடுகிறேன் என கூற,

ம்ம்….என்றாள் சுரம் இல்லாமல்.

இப்படி கூறினால், நான் எவ்வாறு செல்வது?

கஷ்டப்பட்டு சிரிப்பை உதட்டிற்கு கொண்டு வந்து போயிட்டு வாங்க ரகு  என கையசைத்தாள். ரகு கிளம்பி விட்டான். நடந்த அனைத்தையும்  மரகதமும், திலீப்பும் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரகு கிளம்பியவுடன் மரகதம் அவரது அறைக்கு சென்று விட்டார்.

என்ன அண்ணி? நீங்கள் அண்ணணிடம் எதையும் கூறவில்லை போல  திலீப் கேட்க, சில நிமிடம் அதிர்ந்து நின்றாலும், சகஜ நிலைக்கு திரும்பி, நீ அவரை அண்ணன் என்று கூறாதே, அதற்கான தகுதி உனக்கு இல்லை  என்றாள் கோபமாக.

என்ன தகுதி இல்லையா? அதை விடுங்கள்.

நீங்கள் போலீஸ் வரை சென்றுள்ளீர்கள் போலவே? கவலைப்படாதீர்கள், அவன் என்னோட தோஸ்த்து தான். நான் கூறுவதை மட்டும் தான்   செய்வான். அந்த இரண்டு ரெளடிகளை பிடித்ததை அண்ணன்   சொல்லியிருப்பாரே! அவர்களும் எங்களுடைய ஆட்கள் தான்.

அண்ணா முன்னாடி நாடகம் போட்டோம். அவர் ஏமாந்து விட்டார்.

இதை கேட்டவுடன் எதற்கும் பயப்படாத மித்து மனதில் பயம்   தோன்றியது தன்னை பற்றி அல்ல குழந்தையை பற்றி.

மறுநாள் போலீஸ் கமிஷ்னருக்கு போன் செய்து நடந்தவற்றை கூறினாள்

என்னால் திலீப்பை எதுவும் செய்ய முடியாது என்றார் கமிஷ்னர்.

அப்படியென்றால் நீங்களுமா?

உனக்கு எதுக்கும்மா இந்த பிரச்சனை?

சார், நானே பார்த்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி கோபமாக கூறி   விட்டு திரும்ப, அங்கே திலீப் நின்று கொண்டிருந்தான். ரியா தூங்கி  கொண்டிருந்தாள்.

ஏய், நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கத்தினான்

உன்னை உள்ளே தள்ள ஏற்பாடு செய்கிறேன்.

உனக்கு எவ்வளவு தைரியம்? கையில் கத்தியை எடுத்து ரியா அருகே கொண்டு செல்ல, மித்து துடித்துப் போனாள். தயவுசெய்து என்னுடைய பொண்ணை விட்டு விடு கெஞ்சினாள்.

அத்தை..அத்தை..என  கத்தினாள்.

நீ எதற்காக கஷ்டப்பட்டு கத்துகிறாய்? நானே கூப்பிடுகிறேன் என் அம்மாவை, என அவனும் கத்தினான். மரகதமும் வந்தார்.

என்னடா செய்கிறாய்? பிள்ளை கழுத்துல கத்தியை வைத்துக்  கொண்டிருக்கிறாய்?

அத்தை, இவன் ரியாவை என கண்கலங்க கூற,

இவள் கழுத்துல வைடா கத்தியை. என் பெயர்த்தி எனக்கு வேண்டும். இவளை கொன்னுடுடா,

அத்தை நீங்களுமா? கண்கலங்கினாள்.

என்னடி அத்தை, எனக்கு உன்னை முதலில் இருந்தே பிடிக்கவில்லை. ரகுவிற்காக தான் உன்னை ஏற்றுக் கொண்டேன். உன்னை எப்படி  வெளியே அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வாய்ப்பு   தானாகவே கிட்டி விட்டது.

இங்கே பாரு திலீப், ரியா நம்முடைய இரத்தம் அவளை விடு. இவள்  உயிரோட இருக்கக் கூடாது என்றார் மித்துவை பார்த்து,

மித்ராவின் மனம் நொறுங்கியது. நான் உங்களை அம்மாவாக  நினைத்தேன். ஆனால் நீங்கள் இப்படி பேசுகிறீர்களே?

என்னது நானா? உன்னுடைய அம்மாவா? வில்லத்தனமான சிரிப்பை   உதிர்த்தார் மரகதம்.

வேலை செய்யும் சாந்தியும் அன்று விடுமுறை. அவளிடமும், ரேணுவிடமும் மித்துவை பார்த்துக் கொள்ள சொல்லி தான் அன்று   கிளம்பினான் ரகு மித்துவின் நடவடிக்கையால் தான்.

இவர்கள் போட்ட சத்தத்தில் ரியா விழித்து விட்டாள் மரகதம் உள்ளே  நுழையும் போதே,

திலீப் மித்துவின் வாயை அடைத்து அவளது கை, கால்களை கட்டிக் கொண்டிருக்க, ரியாவும் பார்த்தாள். மித்து அதனை கவனித்து விட்டாள். மற்றவர்கள் ரியாவை கவனிக்கவில்லை. திலீப் மித்துவை தூக்கிச் சென்று  காரில் பின் பக்கம் அடைத்து இருபுற கண்ணாடியையும் அடைத்தான். திலீப் முன்பக்கம் சென்று காரை எடுக்க, மரகதம் அவளை அவனும்   கோபத்தில் ஓங்கி அறைந்தான். மித்து மயங்கி விட்டாள்.பின் சீக்கிரம்  முடித்து விட்டு வா என்றாள். காரை வேகமாக ஓட்டினான். அவளது   வாயும், கையும் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் பரிதாபமாக   காணப்பட்டாள்.

ரியா அம்மா…அம்மா என்று கூப்பிட்டாள். அவளுக்கு நடப்பது புரியாமல் இருக்கவே,

மரகதம் ரியாவிடம் ,அம்மாவும் சித்தப்பாவும் ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். சீக்கிரமே வந்து விடுவார்கள்.

சரிங்க பாட்டி என்றாள்.

ரகு, மித்து முதன் முதலாய் சந்தித்த காட்டின் உள்ளே கார் சென்றது. வெகுதூரம் சென்ற பின் திலீப் காரிலிருந்து வெளியே குதித்தான்.மித்ரா  இருந்த கார் மிகப்பெரிய பள்ளத்தில் விழ, காரின் இரு பக்க   கண்ணாடியும் உடைய, அவள் விழித்தாள். பயந்து கொண்டிருக்க, கார்   பள்ளத்தின் இடையே இருந்த மரத்தில் மாட்டிக்  கொண்டது. திலீப்  கார்  கீழே விழுந்த சத்தம் கேட்டு, மித்து இறந்து விட்டாள் என நினைத்து  கிளம்பினான்.

அந்த நிலையில் அவளது கைக்கட்டு அவிழ்ந்து விட்டது. வாய்க்கட்டையும்   அவிழ்த்தாள். கார் கீழே விழ, அவள் காரிலிருந்து வெளியே குதித்து, மரத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள்.

யாராவது இருக்கிறீர்களா? காப்பாற்றுங்கள் என கத்தினாள். மித்துவிற்கு  சரியான அடி, முகம் பாறைகளில் சிராய்த்தது. மரக்கிளை முறியும்   நேரத்தில் கடவுள் போல ஒருவர் மித்துவை மீட்டெடுத்தார். அவர்   மருத்துவமனையில் சேர்த்து விட்டு கிளம்பி விட்டார்.

ரேணுவின் மாமா வேலை செய்யும் மருத்துவமனையில் மித்துவை    சேர்த்திருப்பார். அதனால் மித்துவை பார்த்து ரேணுவிற்கு கூற, அவள்   தான் மித்துவை பார்த்துக் கொண்டாள்.

மித்து ஒரு மாதத்தில் சரியானாள். ஆனால் முழுவதுமாக இல்லை. அவள்  ஓய்வு எடுத்தால் தான் உடல் நிலை சரியாகும் மருத்துவர் கூறினார்.

நாங்கள் எவ்வளவோ கூறினோம். அவள் கேட்கவே இல்லை.

என்னை பற்றி என்றாவது ஒரு நாள் அண்ணாவிற்கு தெரிய வரும். அன்று  அண்ணாவையும், ரியாவையும் உன்னோடு அனுப்பி வைக்கிறேன். அதுவரை நீங்கள் காத்திருங்கள் அண்ணி என திலீப் காரில் மித்து  மயக்கத்தில் உள்ள போது கூறினான்.

மயக்கத்திலே மித்து திலீப்பிடம், நீ அவ்வாறு செய்யாதே!

நீங்கள் முதலில் செல்லுங்கள். பின் உங்களது குடும்பத்தை அனுப்பி   வைக்கிறேன் பேசி விட்டு கீழே குதித்தது நினைவில் வர, அவன்  பேசியதையும், மரகதத்தை பற்றியும், அவர்கள் அவளை கொலை செய்ய   முயற்சி செய்ததை மித்து அப்படியே ரேணு, மாமா, அத்தையிடம் கூற,

என்ன மனிதர்கள் இவர்கள் என பொரிந்து தள்ளினார் மகா அத்தை.

அன்றே கூறினேன் அண்ணாவிடமும், உன்னிடமும். நீங்கள் தான் கண்டு   கொள்ளவில்லை.

ஆம் ரேணு, நீ கூறியதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு வேலை நீ கூறியதை வைத்து நான் ரகு அம்மாவை பற்றி அன்றே   பேசியிருந்தால், எங்களது உறவு என்றோ முறிந்து போயிருக்கும்.

என்ன கூறுகிறாய்? ரேணு கேட்க,

அவர் அம்மாவை அவ்வளவு நம்புகிறார். அளவு கடந்த பாசமும் உள்ளது. அதனால் நாங்கள் தான் சண்டை போட்டுக் கொண்டே இருந்திருப்போம். இப்பொழுது நாங்கள் தான் பிரிந்திருக்கிறோம். எங்கள் உறவு அல்ல.

பிரிய போகிறாயா? அத்தை கேட்க,

ஆமாம் அத்தை. அவர் தான் பிரிய போகிறார். நான் பக்கத்திலே தான்  இருப்பேன்.

என்ன குழப்புகிறாய்? தலையில் அத்தை கை வைத்து உட்கார,

தெளிவாக கூறுகிறாயா? ரேணு கேட்க,

நான் ரகு, ரியா பக்கத்திலே இருந்து அவர்களை பார்த்துக் கொள்ள  போகிறேன். அதுவும் அவர்களுக்கு தெரியாமலே அதற்கு நீங்கள் தான்   உதவ வேண்டும் மாமா.

அந்த வீட்டிற்குள் மறுபடியும் செல்ல போகிறாயா? அவர்களுக்கு   தெரியாமலா?

ம்ம்.. நான் இறந்து விட்டேன் என்று தானே நினைப்பார்கள். அது  அப்படியே இருக்கட்டும்.

ஆமாம், உன்னுடைய பெயரில் உடல் கூட வைத்து உன்னுடைய தோடு, வளையல் என அலங்கரித்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடல், அணிகலன் எல்லாமே அவர்களே.. அத்தை கேட்க,

கண்டிப்பாக இல்லை அத்தை. மித்துவை காப்பாற்றியவர் தான் உடலை   மாற்றி மித்துவிற்கு உதவி இருக்கிறார். நடக்கும் பிரச்சனை அவருக்கு  ஏற்கனவே தெரிந்திருக்கும் போல,…அவர் யார்? என்று தான்   தெரியவில்லை.

ரகுவோட அம்மாவை பார்க்கணுமே, பயங்கரமாக நாடகமாடினார்கள். “வேற லெவல் போ மித்து” என ரேணு கூற மித்து வருத்தமடைந்தாள். ரகு   அண்ணா ரொம்பவே உடைந்து விட்டார். அண்ணாவிடம் மறைமுகமாக   மித்து நம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டாள் என்றும் கூறினேன். அவர்  ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டார்.

உனக்கு தெரியுமா மித்து? நீ கார் எடுத்து சென்றதாகவும், ப்ரேக் வயர்  அறுந்து உனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் கதை கட்டி விட்டிருக்கிறார்கள்

இதுவும் நல்லது தான் ரேணு.. மித்து சொல்ல

நான் எதற்கு உதவ வேண்டும்? மாமா கேட்டார்.

எனக்கு நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் மாமா.

உனக்கு என்ன பைத்தியமா? ரேணு கேட்க,

மருத்துவ விதிகளுக்கு எதிரானது. என்னால் முடியாதுமா.  என்னுடைய உண்மையான உறவுகளை காப்பாற்ற நான் எதையும்  செய்வேன். நீங்கள் உதவவில்லையெனில் வேறொரு மருத்துவரை  அணுகுகிறேன் சவாலாக கூறினாள்.

வேண்டாம்மா, அவ்வாறு செய்யாதே. உனக்கு வேற விதத்தில் பிரச்சனை  எழும். புரிந்து கொள்.

எந்த பிரச்சனை வந்தாலும் நானே பார்த்துக் கொள்கிறேன். அவரும், என்னுடைய குழந்தையும் தான் எனக்கு முக்கியம்.

மாமாவும் அவளது பேச்சில் மனமுருகி அரை மனதாக ஒத்துக்  கொண்டார். சிகிச்சையை செய்தார். மித்துவின் கலர் மாற்ற  மெலானாலஜி சிகிச்சையும், உடல் முழுவதும் பிளாஷ்டிக் சர்ஜரி செய்து  மித்து ஸ்வேதாவாக மாறினாள். இந்த சிகிச்சை முடிந்த பின்  அதிகமாகவே வலியால் அவதிபட்டாள்.

நடந்த எல்லாவற்றிற்கும் அந்த திலீப்பும், மரகதமும் தான் காரணம். அவர்களால் என் மித்து வாழ்க்கை ஒன்றுமில்லாமல் போய் விட்டது. அவர்களை சும்மா விடவே கூடாது கோபமாக ரேணு கூற,

நீ கோபப்படாதேம்மா! பார்வதி அமர்த்த,

அப்புறம் என்ன நடந்தது? பாலா வினவ

மித்து இறந்து விட்டால் என்பதால் ரகு இடிந்து போய் விட்டார். என்னால்  முடிந்த போதெல்லாம் ரகு அண்ணாவை பார்க்க செல்வேன். அவர் யாரிடமும் சரியாக பேசாமல் தனித்தே இருந்தார். வேலைக்கும்  போகவில்லை. ரியாவை மட்டும் பார்த்துக்  கொண்டு மித்துவை  நினைத்து கொண்டே இருந்தார்.

                                 “இறைவா!

                                  என்னவளை

                                  என்னிடமிருந்து

                                  பறித்து விட்டாயே!

                                   நீ

.                                  இருக்கிறாயா? இல்லையா?

                                   எங்களுக்கு

                                   அவள்

                                   வேண்டுமல்லவா!

                                   அவளில்லா

                                   உலகில்

                                   நான் எவ்வாறு

                                   இருக்க வல்லேன்?

                                   வரம் கொடு இறைவா!

                                   வரம் கொடு!

                                   அவளிருக்கும் இடமே

                                   சொர்க்கம்

                                   அதை எனக்கு காட்டு!

                                   இறைவா காட்டு!

மித்ரா இறந்து ஒரு வருடமானது. எங்களுடன் மித்து சிகிச்சையில் முழுவதுமாக குணமடைந்து விட்டாள். ரகு அண்ணா வீட்டில் அவருக்கு  மரகதம்மா கல்யாண பேச்சை எடுக்க,

அம்மா..என் மித்து என்னுடன் தான் இருக்கிறாள். என்னால் வேறு  யாரையும் மணமுடிக்க முடியாது. தயவுசெய்து இதை பற்றி இனிமேல்  பேசாதீர்கள். ஏற்கனவே நான் சொல்லி விட்டேன். ஆனால் நீங்கள்  கேட்கவே மாட்டேன் என்கிறீர்கள். நான் சென்னை செல்ல நினைக்கிறேன். மித்து எங்களை விட்டு சென்றதிலிருந்து ரியாவும் யாரிடமும் செல்ல  மாட்டிங்கிறாள். அதுவும் உங்களிடமும், திலீப்பிடமும் என்றான்.

ரகு கூறியதை கேட்டவுடன் பகீரென்றது மரகதத்திற்கு.

தாராளமாக கிளம்பு ரகு. நான் உனக்கு பொருட்களை எடுத்து  வைக்கிறேன் பேச்சை மாற்றினார்.

ரகு ரயிலில் பதிவு செய்வது தெரிந்து தான் மித்துவும் ஸ்வேதாவாக  பதிவு செய்து ரகுவுடனும், குழந்தையுடனும் பயணம் செய்தாள். தன்  கணவனையும், குழந்தையையும் அருகே வைத்துக் கொண்டே யாரோ  போல் இருப்பது தாங்க முடியவில்லை என்று என்னிடம் கூறி அழுதாள். என்னாலும் ஏதும் செய்ய முடியவில்லை. இந்த விபத்து நடப்பதற்கு  முன்னால் வரை என்ன நடந்தது என்பதை என்னிடம் ஏற்கனவே மித்து  கூறி விட்டாள்.

ரகு அண்ணா எப்பவுமே அவரை சுற்றி இருப்பவர்களை சந்தோசமாக  மாற்றி விடுவார். துறுதுறுப்பாகவும், ஜாலியாகவும் பேசுவார். எதையும்   நேர்முகமாகவும் எடுத்துக் கொள்வார். ஆனால் இப்பொழுது முழுவதுமாக  மாறி விட்டார்.

மித்து தன்னுடன் இல்லை என்பதால் தன்னை தானே வருத்திக்   கொண்டு எல்லா பெண்களிடமும் கோபமாக நடந்து கொள்கிறார். மித்துவை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சியில் தான்  இவ்வாறு நடந்து கொள்கிறார். மித்து அண்ணாவை நினைத்து மிகவும்   கவலைப்படுகிறாள்.

என்னுடைய தோழி அவளுடைய குடும்பத்திற்காக தன் உயிரையும், அடையாளத்தையும் விட்டு கொடுத்து வாழுறதை நினைக்கும் போது  எனக்கு ரொம்ப பெருமையாக உள்ளது கண்கலங்கினாள்.

ஏன்டா, இவ்வளவு பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு எதுவுமே  நடக்காதது போல சாதாரணமாக இருக்கிறாள் பாருடா இந்த பொண்ணு  என்றார் பார்வதி.

ஆமாம்மா,”ஷி இஸ் வெரி கிரேட் மா”

அந்த திலீப்பை சும்மா விடக் கூடாது. எவ்வளவு திமிரு அவனுக்கு? என்றான் பாலா.

சார் கொஞ்சம் அமைதியாக இருங்கள். எதையும் அவசரப்பட்டு  செய்யாதீர்கள். அந்த திலீப் ரொம்ப மோசமானவன்.

ம்…அதையும் பார்த்து விடுவோமே?

இவன் இப்படித்தான்மா என்று அந்த அறையை விட்டு வெளியே வர,

                                                                                          இவர்கள் இதுவரை பேசியதை யாரோ கேட்டு விட்டு ஓட,ரேணு  கவனித்து பாலாவிடம் கூற, அவனும் சென்று பார்த்தால் அங்கே யாருமே   தென்படவில்லை.உடனே மருத்துவமனையில் இருக்கும் காவலர்   ஒருவருக்கு போன் செய்து யாரேனும் வித்தியாசமாக ஓடுகிறானா?

ஆமாம் சார்.

சீக்கிரம் அவனை பிடியுங்கள்.

அவரும் சென்றார். கவனமாக இருங்கள். அம்மாவையும், ரேணுவையும்    பார்த்து கூறி விட்டு எகிறி குதித்து ஓடினான்.