அத்தியாயம் 8
கல்லூரி முடிந்த பின் வங்கி பரீட்சைக்கு படித்து எழுதி தேர்வானாள் மித்து. அவளுக்கு கிடைத்த அந்த வேலையில் முதலில் இருபதாயிரம் வாங்கினாள்.பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பணம் கிடைத்தது. அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அதற்குரிய பணத்தை அவளுடைய பெயரிலே சேர்த்து வைத்து கொண்டிருந்தாள்.
ரகு தினமும் ஒரு முறையாவது மித்துவை பார்க்க வந்து விடுவான். என்ன வேலை இருந்தாலும் இருவரும் ஒரு முறையாவது சந்தித்து பேசுவர் ரேணுவும் தான்.
இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ரகுவும் ஆர்வமாக அவனுடைய கம்பெனி பொறுப்புகளை தானே கவனித்து, கம்பெனியை உயர்த்த தானே உள்ளிருந்து நடவடிக்கைகளை மேற்க்கொண்டான்.
ஒரு முறை விடுதியில் மீரா அக்காவும், மித்துவும் மட்டுமே இருந்தனர். திடீரென மின்சாரம் இல்லாமல் இருக்கவே, ரகு முகமூடி போட்டு மெழுகுவர்த்தியுடன் மித்து முன் நிற்கவே, பார்த்து பயந்து மயங்கி விழுந்தாள். மித்து இருட்டிற்கு பயப்படுவால் என தெரியாமல் அவன் இவ்வாறு செய்யவே அவன் அதிர்ந்து விட்டான். பின் மருத்துவருக்கு போன் செய்து வரவைத்தான்.
அங்கே மீரா அக்கா வந்து, என்னாச்சு தம்பி? நீங்கள் இங்கே என்ன?
கொஞ்சம் தண்ணீர் என திக்கிக் கொண்டே மித்துவை பார்க்க, சும்மா தான் விளையாடினேன். மயங்கி விட்டாள் என்றான்.
தண்ணீரை தெளித்தும் அவள் எழவே இல்லை. அவளுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனாலும் அவள் விழிக்கவில்லை.
விடுதியில் உள்ள அனைவரும் வந்தனர். மித்து…மித்து…உனக்கு என்ன ஆயிற்று? என வந்த சிறுமிகள் அவளை கூப்பிட, அவள் அசையவே இல்லை. ரகு அழ ஆரம்பித்தான்.
அதிர்ச்சி மயக்கம் தான். சீக்கிரமே எழுந்து விடுவார்கள். எழுந்த பிறகு தண்ணீரில் கலந்து கொடுங்கள் என மருந்தை கொடுத்து விட்டு கிளம்பினார் மருத்துவர்.
மருந்தை கரைத்து ரேணு மித்துவின் வாயில் ஊற்றிக் கொண்டே ரகுவை முறைத்துக் கொண்டிருந்தாள். பத்தே நிமிடத்தில் விழித்தாள் மித்து.
விழித்தவள் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க, மித்து நான் என்றான்.
நான் தான் விளையாட்டாக செய்தேன். விளையாட்டு விபரீதமானது.
நீங்கள் தான் காரணமா? ராஜீ பாப்பா கேட்க ரகு அமைதியாக இருந்தான்.
இது நடந்ததால் தான் உங்கள் அன்பு புரிந்தது. அவன் அவளை கட்டிக் கொண்டு அழ, மித்து மறுபடியும் அவ்விடத்தையே பார்க்க, ரேணுவிற்கு ஏதோ தவறாக தெரியவே சிறுமிகளை உள்ளே அனுப்பி விட்டு, மித்துவிடம் வந்து
இப்பொழுது கூறு. ரேணு கேட்க, என்ன கேட்கிறாய்? மித்து ரேணுவை பார்த்தாள்.
ரகு வந்ததை ஏற்கனவே பார்த்து விட்டேன் சன்னல் வழியே. வேறொருவனும் இங்கே தான் இருந்தான். அவன் முகம் சரியாக தெரியவில்லை.
வேறொருவனா? ரேணு கேட்க,
இதனை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எதை பற்றியும் யோசிக்காமல் ஓய்வெடு என மித்துவை அணைத்து விட்டு கிளம்பினான்.அப்பொழுது ரேணு கையில் கீழே கிடந்த ஒரு பொத்தானை எடுத்தாள். இதனை எங்கோ பார்த்தது போல் உள்ளதே? என்று யோசித்தாள்.
உடல் சரியானவுடன் ரகுவை கோவிலில் சந்தித்தாள் மித்து.
உன் உடல் சரியாகி விட்டதா மித்து?
பார்த்தீர்களா ரகு, நீங்கள் இன்னும் அதை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அவன் அதற்கு பதில் கூறாமல் ரேணுவை பார்த்து,
என்ன ரேணு வேண்டிக்கிட்ட? நீ உன்னுடைய காதலனை தேடிக் கொண்டு இருக்கிறாயா?
காதலனா? எனக்கா? அப்படியெல்லாம் இல்லை அண்ணா. நான் அத்தை மாமா கூறுபவர்களை தான் கல்யாணம் செய்து கொள்வேன்.
அப்படி தெரியவில்லையே? உனக்கு யாரோ இருப்பது போல் தெரிகிறதே?
அண்ணா! என்னை பார்த்து என்ன கூறி விட்டீர்கள்?
உண்மையை தான் கூறுகிறேன் என ரகு மித்துவை பார்க்க, அவளை கேலி பண்ணாமல் சும்மா இருங்கள் என்றாள் மித்து.
மித்து உனக்கே தெரியாமல் ஏதோ நடக்கிறது. ரேணுவை பார்த்து கூறினான் ரகு.
முகத்தில் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல், அண்ணா! நான் கூறுகிறேனே மீண்டும் ஆரம்பிக்க,
ஓ அப்படியா! பார்ப்போமா? ரகு சவால் விடுக்க,
அதெல்லாம் எதற்கு? ரேணு கேட்க,
என்ன பயப்படுகிறாயா?
எனக்கு பயமா? நளினமாக சிரித்து சவாலை ஏற்றுக் கொள்கிறேன்.
ம்ம்..என அழுத்துக் கொண்டே, உன் தோழிக்கு என் நினைவே இல்லை. நாங்கள் சந்தித்து இரண்டு வருடங்களாயிற்று. அவள் எப்பொழுது தான் கல்யாணத்திற்கு சரி என கூறுவாள். கேட்டு சொல்லேன்.
மித்து ரேணுவை முறைக்க, அட உங்கள் பிரச்சனையே வேண்டாம்டா சாமி. என்னை விட்டு விடுங்கள் கோவிலினுள் சென்றாள் .
“உன் கண்ணில்
ஆயிரம் நம்பிக்கை
என் மேல்
அதை
வெளிப்படுத்தாமல்
மறைப்பதேன்
என் கண்மணியே!
உன்னை
பார்த்த நொடியே
ஏதோ
புரியா உணர்வு
என்னுள்
உதித்தது
என் கண்மணியே!
என் கண்ணில்
நம்மை
பற்றி
ஆயிரம் கனவுகள்
என் கண்மணியே!
நிறைவேறும்
ஏக்கத்தோடு
என்
மனதோரம்
சிறு நீர்த்துளிகள்
என் கண்மணியே!
கனவோடு
நில்லாமல்
நினைவோடும்
நம்
காதல் மலரை
கல்யாண மாலையாக்குவது
எப்போது
என் கண்மணியே !”
என மித்துவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.
ரகு என் லட்சிய விடுதிக்காக நான் இடம் வாங்கி விட்டேன்.
எப்பொழுது வாங்கினாய்? என்னிடம் கூறவேயில்லையே ?
உங்களுக்கு சர்பிரைசாக இருக்கட்டும் என்று தான், நான் கூறவேயில்லை.
கல்லூரியில் படிக்கும் போதே, பகுதி நேர வேலை செய்தேன் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? அதில் ஈட்டிய பணம் எனக்கு உதவியாக இருந்தது.
எந்த இடத்தில் பதிவு செய்து வாங்கினாய்?
அசோக் நகர் அருகே தான் இடம் வாங்கினேன். அதற்கு சொந்தக்காரர்கள் இடத்திற்கு பக்கத்தில் தான் உள்ளார்கள். விசாரித்ததில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அதனால் பதிவு செய்து விட்டேன்.
அவருடைய பெயர் சந்திரனா ?
ஆமா, அவரை எப்படி உங்களுக்கு தெரியும்? முறைத்துக் கொண்டு கேட்க,
அவரு அப்பாவோட தோழன் தான். இடத்தை விற்பது பற்றி ஏற்கனவே கூறி இருந்தார். நீ தான் உதவி தேவையில்லை என்றாயே அதனால் உன்னை பற்றி அவரிடம் கூறவில்லை.
வரும் வெள்ளிக்கிழமை பூஜையை ஆரம்பித்து அதற்கான வேலையை தொடங்கி விடுவோம்.
சரி, அம்மா, தம்பியை கூப்பிடுகிறேன். நீங்கள் கூப்பிட்டு வாருங்கள்.
சம்பிரதாயம்லாம் எதற்கு?
ப்ளீஸ் ரகு, நான் கூறுவதற்கு முன்பே நீங்கள் அம்மாவிடம் கூறக்கூடாது.
சரிங்க மேடம். நீங்கள் சொல்லீட்டீங்களே! நான் கேட்காம இருக்க முடியுமா? அவளை பார்த்து சிரிக்க அவளும் சிரித்தாள்.
அன்றைக்கு நடந்த மோட்டார் வாகனம் பிரச்சனைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து விட்டீர்களா?
ம்ம்..போலீஸ் கண்டுபிடித்து விட்டனர். அன்று சிறுமிகளை கடத்தியவர்களுள் இவர்களும் உள்ளனர். அதனால் தான் உன்னை இரு முறை தாக்க முயற்சித்தனர்.
விடுதியில்?
ம்ம்….இவர்கள் தான்.
இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை.அவர்கள் ஜெயிலில் தான் உள்ளனர். நீ எதற்கும் கவனமாக இரு. மற்றவர்களையும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கிடைத்தால் கூட்டத்தின் தலைவனை கண்டறிய இயலும்.
நீங்களும் கவனமாக இருங்கள் ரகு.
சரிங்க மேடம், நீங்களும்…
புரிந்தது ரகு, சிரித்துக் கொண்டே, விடுதிக்கு வேலை செய்ய ஆட்களை பார்க்கணும்?
நீங்கள் அதை பற்றி கவலைப்படாதீர்கள் மேடம். அதற்கு தான் நான் இருக்கிறேன்.
என்ன நீங்களா? கொத்தனாராகவா? சிரித்துக் கொண்டே மித்து கேட்க,
மித்து….என ரகு அவளை விரட்ட, நான் வருகிறேன் என கூறிக் கொண்டே ரேணுவை நோக்கி ஓடினாள்.
அவள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ரகுவிற்கு மேலும் இன்பமானது. அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
அன்று வெள்ளிக்கிழமை. காலை ஏழு மணியளவில் பூஜை நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் ரகுவும் மித்துவும் சேர்ந்தே செய்து முடித்தனர். பின் ரேணு வந்தாள். அதன் பின் மரகதமும், திலீப்பும் வந்தனர்.
மித்து ரகுவின் அம்மாவை பார்த்து, ஆன்ட்டி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்?
நல்லா இரும்மா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க, அங்கே அத்தை, மாமா, மீரா அக்கா வந்தனர்.
பூஜை நன்றாகவே முடிந்தது. மறு நாள் விடுதி அமைப்பதற்கான வேலை ஆரம்பமானது. மித்துவின் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. இதனை பார்த்த ரகு, எப்படியோ நினைத்ததை சாதித்து விட்டாய்?
லட்சியம் முழுமையாக நிறைவேறவில்லை.நீங்கள் உறுதுணையாக இருந்ததால் தான் என்னால் இந்த அளவு சாதிக்க முடிந்தது.
என்னம்மா இன்னும் நிறைவேறவில்லை?
விடுதி அமைத்து முடித்தவுடன், ஆதரவற்றவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கணும். ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு செய்கின்ற அனைத்தும் அவர்களை சென்றடைகிறதா? என பார்க்க வேண்டும்.
நீ அங்கேயே தங்கி விடுவாயா?
என்ன ரகு, இப்படி கூறுகிறீர்கள்?
நீங்கள் எனக்காக இரண்டு வருடங்களாக காத்திருக்கிறீர்கள்? நம்முடைய கல்யாணம் சீக்கிரமே நடக்கும்.
சரி மித்து, எல்லாமே சரியாக நடக்கிறதா? கவனித்துக் கொள்.
ம்…பார்த்துக் கொள்கிறேன்.
கல்யாணத்திற்கு பிறகும் வேலைக்கு செல்வேன்.
வேண்டாம்மா என்றான் சட்டென்று ரகு.
இப்பவே என்னை உங்களுடைய கட்டுக்குள் வைக்க பார்க்கிறீர்களா?
அய்யோ, நான் அவ்வாறு கூறவில்லை. உன் உடல்நிலை பாதிக்கப்படுமோ? என எண்ணி தான் கூறினேன்.
அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் ரகு.
இத்தனை வருடங்களாக வேலை பார்த்து, படித்து, தேர்வு எழுதி, நல்ல வேலைக்கு சேர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய். கல்யாணத்திற்கு பிறகாவது ஓய்வு எடுக்கலாம்ல. நான் உன்னுடன் இருக்கும் வரை எந்த கஷ்டமும் உன்னை அணுக விட மாட்டேன்.
நீங்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
விடுதி வேலை அனைத்தும் முடிந்தவுடன் நம்ம கல்யாணம் தான்.
அம்மாடியோவ்! இப்போதாவது உனக்கு கல்யாண எண்ணம் தோன்றியதே?
ரகு,”ஐ லவ் யூ” என அவனருகே வந்து கூறினாள்.
இதை சொல்ல இரண்டு வருடமா? முடியலப்பா. நான் கேட்டவுடனே, ஓ.கே சொல்லியிருந்தால் இப்பொழுது நமக்கு ஒரு குட்டி பாப்பா இருந்திருப்பாள்.
ச்சீ….சும்மா இருங்கள் ரகு.. மித்து கண்ணை மூட, அவன் உன்னுடைய வெட்கம் கூட அழகாக உள்ளது என இருவரும் நெருக்கமாக, அவள் அங்கிருந்து ஓட முயற்சிக்க,
உன்னை எப்படி விடுவேன் என்று அவளை இழுத்து அணைத்து விட்டு,அவளது இதழ்களில் முத்தமிட்டான். பின் பேசி விட்டு கிளம்பினார்கள்.
விடுதிக்கான வேலை முடிந்தவுடன் அதற்கான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து ரகுவின் உறவினர்கள், மித்துவின் நண்பர்கள் அனைவரும் அன்று விடுதி திறப்பு தினத்தை கொண்டாடினோம். அந்த விடுதிக்கு “மதுராந்தக விடுதி” பெயர் வைத்தனர். ஆதரவற்றோர்களை அங்கே சேர்த்து, அவர்களுக்கு தேவையான சூழலையும், உறவுகளையும் அமைத்துக் கொடுத்தனர். சமையற்கட்டிற்கென, சாப்பாட்டிற்கென, தூங்குவதற்கு என தனித்தனி அறைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம், தோட்டம் என அனைத்தும் இருந்தது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தனித்தனியே இடவசதி அமைக்கப்பட்டு இருந்தது. மித்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அனைவருக்கும் சந்தோசமாக இருந்தது.
எங்களுடைய அடுத்த கொண்டாட்டம். வேறென்ன? ரகு- மித்துவின் கல்யாணம் தான். அவர்களது திருமணம் ஆகஸ்டு இருபதாம் தேதி என அறிவிக்கப்பட்டது.
ரகு, மித்துவிடம் அந்நாளை பற்றி கேட்கவே, என்னால் எப்படி அந்த தேதியை மறக்க முடியும். முதல் முதலாக நாம் சந்தித்த நாளாயிற்றே. அதுவே நம் திருமண நாளாயிற்று. அது நம் பந்தத்தை பிரியாததாக மாற்றும் என்றாள் அவன் கையை பிடித்துக் கொண்டே.
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர் அந்நாளுக்காக. அந்நாளும் வந்தது. அழகர் மலை கோவிலில் திருமணம் நடந்து, அதே காட்டின் நடுவே பெரிய மைதானம் போன்ற பகுதி, மேலோட்டமான புல்வெளிகள், சுற்றிலும் மரங்கள், மரங்களில் குதித்து விளையாடும் மந்திகள், அங்கே இலை, செடி, கொடி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அதன் இடையே கண்ணை கவரும் வண்ணத்தில் திரைச்சீலைகள் அமைத்து, அந்த இயற்கையான சூழலில் அனைவரும் ஒன்றிய வண்ணம் இருக்க, அங்கே மணமக்கள் வந்தனர்.
பட்டுச்சேலை இளஞ்சிவப்பு வண்ணத்தில் கழுத்தில் அணிகலனுடன் மித்ரா மின்ன, அவளது சடையலங்காரம் முழுவதும் பூக்களால் நிரம்பி வழிய, கந்தர்வ கன்னி போல் அழகாக இருந்தாள். ரகுவும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் சட்டையும், பட்டு வேஷ்டியுடனும் அழகாக இருந்தான். கோவிலுக்கு சென்று அனைவரும் பார்க்கும் வண்ணம் ரகு, மித்ராவிற்கு தாலி கட்டி கை பிடித்து வலம் வந்தான் அழகர் கோவிலில்.
திருமணம் முடிந்து இயற்கையான அந்த வனச்சூழலுக்கு வந்தனர். ரகு, மித்ராவிற்கு வாழ்த்துக்களை குவித்தனர் உறவினர்களும், நண்பர்களும். இப்படியொரு திருமணத்தை யாரும் பார்த்ததில்லை அனைவரும் கூறிய வண்ணம் சென்றனர். சாப்பாடும் அங்கேயே பரிமாறப்பட்டது.
எல்லாம் முடிந்து ரகுவின் வீட்டிற்கு சென்றாள். தினமும் ரேணுவிடம் , அங்கு நடப்பதை கூறுவாள். அவள் வேலையை விடவில்லை. காலையில் எழுந்து குளித்து கிளம்பி காபி போட்டு அனைவரையும் எழுப்பி விட்டு, சாப்பாடு ரெடி செய்து, அங்கே வேலை செய்யும் சாந்தி அக்காவும் அவளுக்கு உதவுவார்கள். சாப்பாட்டை பரிமாறி விட்டு அவளும் சாப்பிட்டு ரகுவுடன் சேர்ந்து வேலைக்கு கிளம்புவாள். மித்துவும், ரகுவும், திலீப்பும் காலை ஒன்பது மணிக்கே கிளம்புவார்கள். இரவு ஏழு மணியாகும் மித்து ரகு வருவதற்கு.
அவளது சாப்பாட்டை பற்றி மரகதமும், திலீப்பும் பெருமையாக பேசுவார்கள். அதை நினைத்து மகிழ்வாள் மித்து.
இப்படியே சில நாட்கள் கடந்தது. ரகுவும், அவனுடைய வீட்டில் உள்ளவர்களும் மித்துவை நன்றாக கவனித்துக் கொண்டனர்.
மித்ரா கர்ப்பமானாள். மரகதம் மித்துவை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தார். மித்துவும் வீட்டிலே இருந்து விட்டாள். மரகதமும் அவளை நன்றாக கவனித்துக் கொண்டார். ரகு எல்லையில்லா மகிழ்ச்சியில் திக்குமுக்காடினான்.
மித்து, நமக்கு பெண் குழந்தை தான் ரகு கூற இல்லை ஆண் குழந்தை மரகதம் கூற,
எதுவாக இருந்தாலும், நல்லபடியாக பிறக்கணும் மித்து கூற, அனைவரும் சிரிக்க, திலீப் மட்டும் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.ஒன்பதாம் மாதம் முதல் வாரத்தில் ஜனவரி ஏழாம் தேதி நாள் குறிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே மித்துவிற்கு வலி வந்து விட்டது. அன்று வீட்டில் யாரும் இல்லை சாந்தி அக்கா தவிர. திலீப் ஏதோ எடுக்க வீட்டிற்கு வந்தான். இருவரும் மித்துவை மருத்துவமனையில் சேர்த்தனர். ரகு வேகமாக மருத்துவமனைக்கு வர,மித்து வலியால் கத்துவதை கேட்டு அவன் கண்கலங்கிக் கொண்டே நிற்க,குழந்தை பிறந்தது.
ரகு வந்தவுடன் தன் குழந்தையை கூட காணாது மித்துவை பார்க்கச் சென்றான். குழந்தை தொட்டிலில் தன் பிஞ்சு கால்களை உதைத்துக் கொண்டிருந்தது.
மித்து..மித்து..ரகு கூப்பிட, மெதுவாக கண்ணை திறந்து எழ முயற்சித்தவளை உட்கார வைக்க முயற்சி செய்து, அவளது கையை இறுக்கமாக பற்றினான். மித்துவின் முகத்தை கையில் ஏந்தி, அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
திலீப், மரகதம், ரேணு உள்ளே வந்து குழந்தையை தூக்கி கொஞ்சினர்.
நான் கூறியதை போலவே பெண் குழந்தை என்றான் மகிழ்ச்சியோடு ரகு. சிறு புன்னகையுடன் தலையசைத்தாள் மித்து.
எந்த குழந்தையாக இருந்தால் என்ன? எனக்கு பெயர்த்தி வந்து விட்டாள்.
கடைசியாக குழந்தை தன் அம்மா அப்பா கையில் இருந்தது.
“என்னவளின்
இமைகள்
சோர்வாக
நீ
துடித்தெழ
நான் கண்டேன்
உன்னை…..
உன்
பிஞ்சு விரல்களை
பிடித்த
கணமே
என்னுள் தாக்கிய
உணர்வு
ஏராளம்………..
என்
கண்ணே
என்னவளை போல்
உன்னையும்
என்
இமையாய்
காப்பேன் என்றுமே……”
அவனுள் தோன்றிய எண்ணம் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.