அத்தியாயம் 28
கல்லூரியில் ஓரிடத்தில் கல் இருக்கையில், தலையை இருக்கையின் விளிம்பில் சாய்த்து கண்ணை மூடி சிந்திக்கிறேன் என்று தூங்கி விட்டாள் விமலா. அவளை தாண்டி சென்ற யுவி, அவளை பார்த்தவுடன் அவளருகே வந்து பக்கத்தில் உட்கார்ந்து, அவளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் விழிப்பது போல் இருக்கவே, அவன் கண்ணை மூடி தூங்குவது போல் நடித்தான். இதை தூரத்தில் இருந்து வருணும்,நிலாவும் பார்த்துக் கொண்டு அவனுக்கும் அவளை பிடித்திருக்குமோ! என்று நிலா வருணிடம் கேட்க,
என்ன இருக்குமோ! அது உண்மை என்று நேரடியாகவே தெரிகிறது என்று வருண் கூறினான்.
எனக்கும் தோன்றுகிறது தான் இருந்தாலும்….என்று நிலா யோசித்தாள்.
அவர்கள் ஏதாவது செய்யட்டும். நாம் வெளியே செல்வோமா? வருண் கேட்க, உனக்கு வேலை இல்லையா?
எட்டு மணிக்கு மேல் தான்.
சரி போகலாம். முதலில் இவர்களை கவனிப்போம் என்று இருவரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
விமலா, கண்ணை திறந்தவுடன் யுவியை பார்த்து பயந்து வேகமாக எழுந்தாள். இவன் என் அருகே என்ன செய்து கொண்டிருக்கிறான்?
ஏதும் பேச வந்திருப்பானோ! மனதினுள் யோசித்தவாறு நின்றவள் சுற்றி சுற்றி பார்த்து விட்டு மீண்டும் அவனை பார்த்தவாறு அருகிலே, கையை இருக்கையின் விளிம்பில் வைத்தவாறு உள்ளங்கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு அவன் தூங்குகிறான் என்று நினைத்து அவனையே ரசித்துக் கொண்டு,
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லையே என்று கவலையோடு பேசிக் கொண்டு, நிலா கூறியது சரியா? இல்லைவருண் நினைத்தது.. நான் யோசிப்பது சரி என்றான். அது சரியா? குழப்பமாக உள்ளதே!
இன்னும் ஒரு மாதத்தில் எப்படியும் கிளம்பி விடுவேன். ஆனால் இப்பொழுது என்னால் இவர்களது வீட்டை விட்டு வர முடியாது. ரோஜா தற்பொழுது தான் மகிழ்ச்சியாக இருக்கிறாள். அதை என்னால் கெடுக்க முடியாது. எனக்கும் பிடித்து இருக்கிறது. ஆனால் என்னால் அங்கே இருக்க மனது ஏற்று கொள்ள மாட்டேங்கிறது. நான் என்ன செய்வது? நீயும் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாய். நிலா கூறியது போல் சொல்லவா? இல்லை கிளம்பவா? எனக்கு எதற்கு உன்னை பிடிக்க வேண்டும்? மனதில் நினைப்பதாக நினைத்து அவள் வெளியே சொல்ல அவள் பேசுவதை கேட்டவாறு யுவியும் தூங்குவதை போல் பாவனை செய்து கொண்டிருந்தான்.
பின் ஏதும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
வருணும் நிலாவும் அருகே வந்தனர்.
ஓய், இவன் என்ன செய்கிறான்? வருண் சத்தமாக பேசினான்.
உஷ்…..உஷ்……சத்தம் போடாதே! அவன் தூங்குகிறான் என்று மெதுவாக விமலா கூற, வருண் அவனருகே வந்து வேண்டுமென்றே சத்தம் போட,
டேய், அரை மெண்டல்….என்று உட்கார்ந்தவாறு எட்டி வருணது வாயை விமலா மூட, அவளது துப்பட்டா யுவி மீது விழுந்தது. அவனோ மனதினுள் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
விமலா எழுந்து, வாடா… அவனை இழுக்க, அவனை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். நீங்கள் செல்லுங்கள். நான் வருகிறேன் வருண் கூற, விமலா யுவிவை பார்த்தாள்.
அவனை யாரும் கடத்தி விட மாட்டார்கள். நீ செல்…..அவன் விழித்த பின் நான் வருகிறேன் வருண் கூற,
அவனிடம் எதையும் கூறி விடாதே! விமலா கூற, நான் எதுவும் கூற மாட்டேன் என்று மனதினுள் சிரித்தான் வருண். விமலாவும் நிலாவும் அங்கிருந்து சென்றனர்.
போதும் நடித்தது எழுந்து விடு. அவள் சென்று விட்டாள் என்றான் வருண்.
யுவி மெதுவாக கண்ணை திறக்க, வருண் அவனை பார்க்க, யுவி எதுவும் கூறாமல் எழுந்தான்.
நில்லு யுவி, நீ எதற்காக அவளிடம் நடிக்க வேண்டும்? உனக்கு அவளை பிடித்திருக்கிறது தானே?
யுவி அவனருகே வந்து அமர்ந்தான். பிடித்திருந்தால் என்ன?
நண்பனாக ஒன்று கூறுகிறேன் கேள். அவளை பிடித்திருந்தால் அவளிடம் விரைவிலே கூறி விடு இல்லையென்றால் அவளை தொலைத்து விடுவாய் என்று வருண் கூற,
எங்களுடைய வீட்டிலிருந்து கிளம்பி விடுவாள். அவ்வளவு தானே!
இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதே! அவளை பார்க்கவே முடியாமல் கூட போகலாம்.
அவளுடைய வீட்டில் தானே இருப்பாள்?
அவள் என்ன தான் வேலை அசதியில் கல்லூரிக்கு வந்தாலும், அவள் வகுப்பில் நடத்துவதை வைத்தே முதல் மதிப்பெண் வாங்கிடுவாள்.
அவள் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்ய முடிவெடுத்துள்ளாள். அதற்கு ஏற்றாற்போல் தான் இண்டர்வியூ அட்டென்டு செய்ய போகிறாள். இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. சென்று விடுவாள்.
அப்படியென்றால் அவள் புலம்பியது இதை பற்றி தானா?
என்ன பேசினாள்? வருண் கேட்க,யுவி கூறினான்.
அவள் இரண்டு விசயத்தை யோசித்து வைத்திருக்கிறாள்? அதை பற்றி தான் தற்பொழுது குழப்பத்தில் உள்ளாள். அதற்கான முடிவை அவள் தான் எடுக்க வேண்டும். அதை பற்றி என்னால் கூற முடியாது. உன் காதலை நீ எவ்வளவு சீக்கிரம் முடியுமோ விரைவிலே கூறி விடு. அது தான் உனக்கு நல்லது. எனக்கு அந்த ரெஸ்டாரண்ட்ல நீ பதட்டப்பட்டதை வைத்தே அவள் மீது உனக்கு காதல் வந்தது புரிந்து விட்டது. ஆனால் உன்னுடைய காதலை நீ தான் கூற வேண்டும்.
என்னால் அவளிடம் பேச கூட முடியவில்லை யுவி கூறினான்.
நீ என்ன பேசுகிறாய்? அவள் உன்னுடைய வீட்டில் தான் இருக்கிறாள்? வாய்ப்புகள் அருமையாக கிடைக்கும். நீ கண்டிப்பாக கூறு. இருவருமே எனக்கு நண்பர்கள் தான். எனக்கு இருவருமே முக்கியம் தான். பார்த்துக் கொள். வாய்ப்பை நழுவ விட்டு விடாதே! வருண் எழுந்து செல்ல,யுவி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.
கல்லூரிக்கு அனைவரும் வர, ஒரு பொண்ணு யுவி பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். அவனும் பெரியதாக கண்டு கொள்ளவில்லை. விமலாவும் இதனை பார்த்தாள். கௌதமிடமும் அவனுடைய நண்பர்களுடனும் சாதாரணமாக பழக ஆரம்பித்தாள் விமலா. இதை பார்த்து யுவிக்கு கோபம் வந்தாலும், அவன் ஏதும் கூறாமலே சென்று விட்டான். வருண் கௌதமிடனும் யுவியிடமும் நன்றாகவே பேசினான். இதை கவனித்த விமலா வருணிடம்,
யுவி யாருடனும் ஒட்டவே மாட்டிக்கிறான். கௌதமும் அவனும் மீண்டும் நண்பர்களாக நீ எனக்கு உதவுவாயா? விமலா கேட்டாள்.
ஓ.கே செய்திடலாம் என்று இருவரும் அடித்துக் கொள்ள, டேய் நானும் இருக்கிறேன் என்று நிலா கூற, அவளது கையிலும் இருவரும் தட்டி விட்டு, ஏதேனும் திட்டம் உள்ளதா?
ம்ம்ம்ம்….இருக்கிறது வருண் கூற, இருவரும் தலையசைத்தனர்.
அன்று கல்லூரி முடிந்து அனைவரும் வெளியே வர, யுவி கௌதமை யாரோ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவன் கூற, கௌதமிடம் யாரோ யுவியை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றொருவர் கூறினான்.
இருவரும் யாருமில்லாத இடத்தில் சந்திக்க, உனக்கு ஒன்றுமில்லையே,…. என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க, கையை தட்டிக் கொண்டே மூவரும் வந்தனர்.
உங்களுடைய வேலை தானா? என்று கௌதம் கேட்க,
விமலா இருவருக்கும் இடையில் வந்து, என்னால் தான் உங்களது நட்பு முறிந்து விட்டது.நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்.தவறான செயலில் மட்டும் ஈடுபடாதே! என்று கௌதமிடம் சொல்ல, அவன் தலையசைத்தான். இருவரது கையையும் கோர்த்து விட்டு, ஒரு போட்டோ எடுத்து கல்லூரி குழுவில் போட்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, என்னை மன்னித்து விடுடா மச்சான் என்று கௌதம் யுவியை கட்டி பிடிக்க, அவன் விமலாவை பார்க்க, அவள் கவனித்து விட்டு செல்ல, அவளது கையை பிடித்து நன்றி என்றான். பின் அனைவரும் கிளம்பினர். யுவிக்கு விமலாவை ரொம்பவே பிடித்து போயிற்று. ஆனால் கூற முடியாமல் தவித்தான்.
இரண்டு நாட்களுக்கு பின் வீட்டில் அனைவரும் இருக்க, காபி போட்டு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
யுவி காதில் போட்டு பாடல் கேட்கும் கருவியை போட்டு கொண்டே தூங்க, யாரும் அங்கே இல்லை என்று நினைத்து அதனை எடுத்து விட்டு, அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த குட்டி பையன் எதையோ தட்டி விட யுவன் விழித்தான். அவனை பார்த்து அவள் பயந்து பின்னே விழ, அவன் ஏதும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, எழுந்து அவள் உள்ளே சென்றாள்.
அய்யோ! என்ன செய்கிறேன் நான், என்னால் என்னை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? இவ்வளவு நாட்கள் சமாளித்தேனே! அவளுடன் அவளே பேசிக் கொண்டிருந்தாள்.
யுவி உள்ளே வந்து, எனக்கு காபி வேண்டும் என்றான். அவள் மனதை அமைதியாக்கி விட்டு அவனுக்கு செய்து கொடுக்க, அவளிடமிருந்து வாங்கி விட்டு சிரித்துக் கொண்டே சென்றான். அவள் பேசியதை கேட்டு விட்டான்.
யுவி காபி குடித்துக் கொண்டிருக்க, கவி அருகே வந்தாள்.
என்னடா, உனக்கு ஸ்பெசல் போல. அவன் சிரித்துக் கொண்டே குடிக்க, அவனுக்கு வருணுடமிருந்து போன் வந்தது.
பேசியவுடன் போனை விட்டெறிந்தான் யுவி. அது நேராக ஒரு சோபாவில் விழுந்தது. கோபமாக யுவி வெளியே செல்ல, கவி என்னவென்று கேட்டுக் கொண்டே அவன் பின் செல்ல, அவளிடமும் கத்தி விட்டு பைக்கை விரட்டினான். இதை பார்த்து விமலா போனை கையில் எடுத்து யாரிடம் பேசினான் என்று பார்க்க, வருணுடைய நம்பர் பதிவாகி இருந்தது.
உடனே அவளுடைய போனை எடுத்து, வருணிற்கு போன் செய்ய, வீட்டிலிருந்த அனைவரும் வந்தனர். கவி அவன் கோபத்தை கூற,
எங்கே சென்றிருக்கிறான்? அம்மா கேட்க, தெரியவில்லை என்றாள் கவி.
பதட்டப்படாதீர்கள் ஆன்ட்டி, நான் கேட்கிறேன் என்று விமலா கூற, அனைவரும் அவளருகே வந்தனர்.
வருண் போனை எடுத்தான். என்னடா யுவி கோபப்படும் அளவிற்கு என்ன நடந்தது?
அவன் தயங்கிக் கொண்டே பேசாமலிருக்க, சொல்கிறாயா? இல்லை நான் அவனை பார்க்க வரவா? உன்னிடம் தானே வருவான்?
கண்டிப்பாக இல்லை. அந்த ரேஷ்மா, அவனை மிரட்டுவது போல் அவனிற்கு வீடியோ அனுப்புவதாய் நினைத்து, எனக்கு அனுப்பி விட்டாள்.
என்ன வீடியோ?
அதை நீ பார்க்க வேண்டாம்.
அனுப்பு என்று கூறுகிறேன்ல?
அவன் அனுப்பினான். குடும்பம் மொத்தமும் பார்த்து அதிர்ச்சியோடு நிற்க, விமலா மட்டும் வருணிற்கு போன் செய்து, நீ வேலையாக இருக்கிறாயா?
இல்லை. முதலில் யுவி அவளை பார்க்க செல்லாமல் தடு. அவள் இந்த வீடியோவை சும்மா அனுப்பவில்லை. அவளை பற்றி தான் நமக்கு தெரியுமே! அவள் எவ்வளவு பெரிய கேடி. ஏதோ திட்டம் வைத்திருக்கிறாள். நான் இந்த வீடியோவை உடனே கல்லூரி குழுவிற்கு அனுப்புகிறேன்.
நீ என்ன பைத்தியமா? அவன் கேட்க, நாம் பிறகு பேசலாம். அவளுடைய வீட்டிற்கு தான் சென்று கொண்டிருப்பான். அவன் அவள் வீட்டு வாசப்படியில் கூட கால் வைக்க கூடாது. அவனை தடுத்து அமைதியாக்கு.
இதுவரை நாம் எடுத்த அவளது வீடியோக்களை மட்டும் அனுப்பு, நான் இதை பார்த்துக் கொள்கிறேன். நீ அவனுடனே இரு.
விமலா கூறியது போல் அந்த ரேஷ்மா ஒரு திட்டத்துடன் தான் யுவியை வீட்டிற்கு வர வைக்க வீடியோவை அனுப்பி இருக்கிறாள்.
வீட்டில் யாருமில்லா சமயம் பார்த்து அவனை வர வைத்து, அவன் மீது வீண் பழி சுமத்தி யுவி வீட்டிற்குள் நுழைய திட்டம் போட்டிருப்பாள்.
நீ என்ன செய்ய போகிறாய்? வருண் கத்த அவள் போனை துண்டித்தாள். அவள் கூறியது போல் வருண் யுவியை தடுத்து, விமலா இதனை பார்த்துக் கொள்கிறேன் என்றாள் என்று அவள் கூறிய அனைத்தையும் வருண் கூற, வீட்டில் அனைவரும் அதிர்ச்சியுடன் இருந்தனர்.
விமலா ஆடியோ ஒன்று தயார் செய்து கொண்டிருந்தாள்.
ஹே, கெர்ல்ஸ்……நம் யுவியை வைத்து அந்த ரேஷ்மா என்ன செய்திருக்கிறாள் பாருங்கள். அவளுடைய வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து, பதில் அனுப்புங்கள் என்று சாதாரணமாக பேசினாள்.
அந்த இரண்டு வீடியோவையும் அனுப்பவும் செய்தாள்.
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவளும் யுவியும் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவை கல்லூரியில் அனைவருக்கும் அனுப்புகிறாய்? கவி கோபமாக கேட்டாள்.
இதை நேரிலே பார்த்து இருக்கிறேன். பயப்படாதீர்கள், அவனை பற்றி யாரும் தவறாக பேச மாட்டார்கள் விமலா கூற, அவன் எவ்வளவு தறுதலையாய் சுற்றிக் கொண்டு இருந்திருக்கிறான் என்று அவனது சித்தி கூற, அவனும் சரியாக வீட்டிற்கு வந்தான். அவர் கூறுவதை கேட்டு அங்கேயே நின்றான். வருண் அவனது தோளில் தட்டிக் கொடுத்தான்.
அவனது அம்மா பேச வர, அதற்குள் விமலா என்ன ஆன்ட்டி பேசுகிறீர்கள்? உங்களுடைய மகனை பற்றி நீங்களே அவ்வாறு பேசலாமா? இதுவரை அவன் எந்த பொண்ணு பின்னால் சுற்றியது கூட இல்லை. கல்லூரியில் இருக்கும் பெண்கள் தான் அவன் பின்னே சுற்றுவார்கள். அதை கூட கவனிக்க மாட்டான். அவன் இவ்வாறு செய்திருப்பானா?
அவளது போனை எடுத்து கல்லூரி பெண்கள் அனுப்பிய பதிலை காட்டி இதோ பாருங்கள், அவனை பற்றி தவறாக ஏதும் வந்துள்ளதா? காண்பித்தாள்.
அந்த பொண்ணு பணக்கார பசங்களை மிரட்டி திருமணம் செய்து கொள்ள கூறி, வீடியோ எடுத்து வைப்பாள். பணத்திற்காக தான். அவள் செய்தது அவளுக்கே திரும்பி விட்டது. இதனால் தான் அவனை ஏமாற்ற நினைக்கும் அனைத்து பெண்களின் மற்றுமொறு வீடியோ நாங்கள் எடுத்து வைத்துள்ளோம் கூற,
நீ எதற்காக இதையெல்லாம் செய்தாய்? அவனுடைய அம்மா கேட்க,
அவனுடைய பாதுகாப்பிற்கு…..என்று அவள் பேச…பேச….யுவிக்கு கண்ணீர் சந்தோசத்தில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது.
அம்மாவோ! அவளை விடாது…நீ எதற்காக அவனுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கேட்க, அவள் தலையை கவிழ்ந்த படி நின்றாள்.
கூறு என்று அவர் கத்த,அவள் அனைவர் முன்னிலையிலும் மண்டியிட்டு, நான் அவனை காதலிக்கிறேன் என்று அழுது கொண்டே கூற, அவன் கண்ணீரை துடைத்து விட்டு யுவி அவளருகே வந்து, அவளை தூக்கி விட்டு அவளை கட்டிக் கொண்டு எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது. நானும் உன்னை காதலிக்கிறேன் என்று கூற அவள் அவனையே பார்த்தவாறு நின்றாள்.
கவி அவளிடம், எதற்காக அவனை அப்படி பார்க்கிறாய்?கேட்க,
நீ என்ன கூறினாய்? விமலா கேட்க,
நான் உன்னை காதலிக்கிறேன். எனக்கு உன்னை பிடித்திருக்கிறது அவன் கூற, இது என்னுடைய கனவா? கண்ணை மூடி திறக்க அனைவரும் அவளை பார்த்து சிரிக்க ரோஜா அவளருகே வந்து,
அக்கா, இது கனவல்ல….என்று கூற, அவன் விமலாவை அவன் பக்கம் திருப்பி, நீ என்னை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வெளிநாட்டு வேலையை அல்ல. எனக்கு நீ வேண்டும். நீ இல்லாமல் என்னால் இனி இருக்க முடியாது. என் வாழ்க்கையின் கடைசி வினாடி வரை என்னுடன் நீ இருக்க வேண்டும் என்று அவளை அணைத்துக் கொண்டான்.
அவள் கண்ணில் நீர் சொட்ட சொட்ட அவனை பார்த்தாள்.
அவன் கண்ணீரை துடைத்து விட்டு அவள் கையை விடாமல் பிடித்து, குடும்பத்தினர் பக்கம் திரும்ப, அனைவரும் மகிழ்ச்சியாக யுவி அவனது அம்மாவை பார்த்தான்.
எனக்கு அவளிடம் சில விதிமுறைகள் உள்ளது. முதலில் அவள் வேலைக்கு இப்பொழுது செல்லலாம். ஆனால் கல்யாணத்திற்கு பின் நம்முடைய குடும்ப பொறுப்புகளை ஏற்று நடத்த வேண்டும். வேலை என்றால் நம்முடைய பிசினஸ் சம்பந்தப்பட்ட விசயத்தை மட்டும் செய்யலாம். அதுவும் நம் கம்பெனியில் மட்டும் என்றார்.
ரோஜாவின் முழு பொறுப்பும் பாட்டி பார்த்துக் கொள்வார் இப்பொழுதிலிருந்தே!
அப்புறம் நான் என் மகனுடன் அதிகமாக நேரம் செலவழித்ததில்லை. அதனால் கல்யாணத்திற்கு முன் அவன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் நானே பார்த்துக் கொள்வேன். எங்களை நீ தொந்தரவு செய்யக் கூடாது. கல்யாணத்திற்கு பின் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்.
இதற்கெல்லாம் அவள் ஒத்துக் கொண்டால், எனக்கு பிரச்சனை இல்லை என்று புன்னகையுடன் கூற, அவள் அழுது கொண்டே ஓடி வந்து அவனது அம்மாவை கட்டிக் கொண்டாள்.
அழுகிறாயா? அவளை பார்த்து அம்மா கேட்க, மகிழ்ச்சியால் தான் கண்ணீர் வருகிறது.
விமலா, இந்தா என்று வருண் கேக்கை எடுத்து வந்து,
என்ன விமலா! யுவியால் உனக்கு நிறைய உறவுகள் கிடைத்துள்ளது. நீ மறுபடியும் அவனிடம் காதலை கூறுவதற்கு முன்பே அவனே கூறி விட்டான். சந்தோசமாக இருக்கிறாயா?
அவள் தலையசைத்து விட்டு வருணிடமிருந்து அந்த கேக்கை வாங்கி, யுவிக்கு கொடுத்து அவளுடைய காதலை அனைவர் முன்னிலையிலும் கூறினாள். பின் இருவரும் சேர்ந்து அங்கிருந்த பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி அனைவரிடமும் கூறி விட்டு விமலாவை வெளியே அழைத்து வந்து அவனுடைய பைக்கில் ஏற்றி, யுவி ஓர் அழகான இடத்திற்கு அழைத்து வந்து, அவள் கையை கோர்த்துக் கொண்டு அவளுடன் நிறைய விசயங்களை பகிர்ந்து விட்டு திரும்ப, அவள் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை தன் பக்கம் இழுத்து முன் போல் அவளது இதழ்களை வருடி விட்டு முத்தமிட்டான்.
“காதலை
கூறிய நொடியே
ஏதோ கனவாக
தோன்றவே
என்னை மறந்தேன்
முழுதாகவே
என் முன் நீ நிற்க
நினவாக
இல்லாது இருக்க
அந்த சூரியனது
வெப்பத்தை
உன்னுள் உணர்ந்தேன்.
கதிரவனாய் நீ இருக்க
அதன் வெளிச்சமாக
நான் இருக்க
என் காதல்
இருளை கடந்து
வெற்றியடைந்து விட்டது.
என்
கனவினின்று
மீண்டு
என் காதல்
உயிர்ப்பெற்று விட்டது
மீள்கனவாகவே!”
பாலாவும் ரேணுவும் சேர்ந்து மதுவுடன் நேரத்தை செலவழித்தனர். இடையிடையே அவர்களது காதல் பெருக, வீட்டின் நடுவே நின்று கொண்டு கொஞ்சிக் கொண்டிருந்தனர். இதை பார்த்து மகா அத்தை, இதற்கு மேல் இவர்கள் செல்லும் படி விடக் கூடாது என்று இருவரது திருமணத்தை பற்றி பேச, ரேணுவோ வெட்கத்தில் சிவந்து இருக்க, மித்துவும் ரகுவும் அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தனர். திருமண தேதி குறித்து வேலை மும்பரமாக நடந்து கொண்டிருந்ததுஅனைவருக்கும் அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டது.
அப்படியே இரண்டு மாதங்கள் கழிந்தது.
பாலா, ரேணுவின் திருமண நாளும் வந்தது. அன்று எல்லாரும் எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு, மித்து ரகுவிடம் எனக்கு நம்முடைய திருமணம் நினைவு வந்து விட்டது.
அதற்கென்ன? நீ கூறினால் நாமும் பாலா, ரேணுவுடன் திருமண கோலத்தில் நிற்கலாம் குறும்புத்தனமாக பேச, ரியா அங்கே வந்து, அம்மா அப்பா நீங்கள் அங்கே நில்லுங்கள் என்று கூற, இருவரையும் போட்டோ எடுத்து விட்டு அவர்கள் அருகே வந்து அப்பா செல்பி என்றாள். அவர்கள் சந்தோசமாக எடுத்துக் கொண்டிருக்க, பாலாவின் நண்பர்கள் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தனர்.
முதலில் ராஜா குடும்பமும், கவியும் வந்தனர். பின் சுந்தர் அவனது குடும்பத்துடன் வந்தான். அவனும் ஒரு பெண்ணை காதலிக்கிறான். கவிதாவின் அறைத்தோழி தான். பாலா அவளை அழைத்ததால், அங்கே வந்து தன்னுடைய குடும்பத்திற்கு அவளை அறிமுகப்படுத்தி வைத்தான் சுந்தர். சூர்யா அவனுடைய குடும்பத்துடன் வந்து மஞ்சுவை தேட,அவன் பின்னே வந்து அவள் பயமுறுத்தி விளையாடிக் கொண்டிருந்தாள். திலீப்
அங்கே ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருக்க, ராஜம்மா அவனை பிடித்து இழுத்து சென்றார்.
பார்வதியம்மாவும், ரேணுவின் அத்தையும், மாமாவும் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். திருமண மணமக்கள் ரேணு பச்சைகலர் பட்டுடனும், பாலா வெள்ளை பட்டு வேஷ்டியுடனும் அழகான ஜோடியாய் காட்சியளித்தனர். மணமேடை மீது இருவரும் வர, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
டேய், பாலா நீங்கள் இன்னும் பார்த்துக் கொண்டு தான் இருக்க போகிறீர்களா? சூர்யா மேடைக்கு வர, அனைவரும் வந்தனர். திருமண பூஜை நடந்து கொண்டிருக்க,…எல்லா ஜோடிகளும் வரிசையாக நின்றனர். பாலா ரேணுவின் கழுத்தில் தாலியை கட்ட, ஓஓஓ….என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
அடுத்து யாருடைய திருமணம்? என்று ரகு கேட்க, ராஜா எங்களுடையது என்று கவிதாவின் தோளில் கையை போட்டான்.
டேய் அண்ணா, எனக்கு பிறகு தான் நீ திருமணம் செய்வேன் என்று கூறினாய்? மஞ்சு வினவ, பாப்பா, அது எப்பொழுதோ சொன்னது.
பாப்பாவா? இவளா? சூர்யா கிண்டல் செய்ய, அன்றைய பொழுது மகிழ்ச்சியாக கழிந்தது. பாலாவின் நண்பர்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு தங்கள் வீட்டிற்கு கிளம்பினர்.
மறுநாள் பாலாவும் ரேணுவும் ஜோடியாக வெளியே வர, மித்து பாலாவிடம், அண்ணா, இரண்டு நாட்கள் நல்ல வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அவளிடம் அடி வாங்கி விடாதீர்கள் என்று கிண்டல் செய்ய, அவன் சிரித்துக் கொண்டே ரேணுவின் கையை பிடித்தான்.
மித்து, நீ ரொம்ப பேசுகிறாய். உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் ரேணு கூற, முதலில் அண்ணனை கவனி. பிறகு என்னை பார்த்துக் கொள்ளலாம் கூறி விட்டு மித்துவும், ரகுவும் ஒரு காரில் ஏற, பார்வதியம்மா, ராஜம்மா, திலீப், ரியா மற்றொரு காரிலும், ரேணுவின் அத்தையும், மாமாவும், மதுவும் ஒரு காரில் ஏறி இரண்டு நாட்களுக்கு வெகு தூரத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு சென்றனர்.
மித்து, ரகு சென்ற காரிடயே ஒரு பெண் வந்து விழ, மித்துவும் ரகுவும் காரிலிருந்து இறங்க, ஒரு பெண் “உதவி செய்யுங்கள்” மித்துவின் கையை பிடிக்க, இவர்களது உதவும் படலம் தொடர்ந்தது.
“பெண்மையின்
அமைதியடி நீ!
பெண்மையின்
பாசமடி நீ!
பெண்மையின்
பொறுமையடி நீ!
பெண்மையின்
காதலடி நீ!
பெண்மையின்
வீரமடி நீ!
பெண்மையின்
பெருமையடி நீ!
வெற்றியின்
சொரூபமே நீயடி!”