தோழிகள் அனைவரும் செயல்திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்க, அவன் அம்மா காபி என்றான்.
இன்றாவது சாப்பிட்டு விட்டு போ என்றார் அம்மா.
இன்று நீங்களும், அப்பாவும் மட்டும் சாப்பிடுங்கள். நாங்கள் வெளியே சாப்பிடப் போகிறோம்.
மஞ்சு ராஜாவிடம், நீ உண்மையாக தான் கூறுகிறாயா?
அவன் தலையசைத்துக் கொண்டே, கவிதாவின் கையை பார்க்க, சிவந்த இடத்தில் மருந்து தடவி இருந்தது. மஞ்சுவோ, அடப்பாவி அவளுக்காகவா?….மனதினுள் யோசித்து விட்டு,
மீதியை நாளை பார்ப்போம் என்று மஞ்சு கூற, மற்றவர்கள் கிளம்பினார்கள்.
அம்மாவிடமும், அப்பாவிடமும் கூறி விட்டு மூவரும் வெளியே வந்து சாப்பிட அழைத்துச் சென்றான். கவிக்கு மட்டும் சிறப்பு வாய்ந்த
ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்து விட்டு, பிறந்தநாள் வாழ்த்தை கூறினான். அவள் நன்றி கூறினாள். சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர்.
ராஜா விடுதிக்கு செல்லாமல் வேரொரு திசையில் செல்ல,எங்கடா அழைத்து செல்கிறாய்? மஞ்சு கேட்க,
கொஞ்ச நேரம் அமைதியாக வா ராஜா கூறி விட்டு, ஒரு டெடி கடையில் நிறுத்தினான். உனக்கு வேண்டியதை எடுத்துக் கொள் கவியிடம் கூற,
ஏற்கனவே ஐஸ்கிரீம் வாங்கி தந்து விட்டீர்களே! போதும் என்றாள்.
இது உனக்கு தேவைப்படும் என்று தோன்றியது.
இதை வைத்து விளையாட அவள் என்ன சின்ன குழந்தையா?
எனக்கு பிடிக்கும் என்று கவிதா கூறி விட்டு உள்ளே செல்ல, மஞ்சு அவளையே பார்த்தாள். அவள் மஞ்சுவை பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே சென்று ஒன்றை எடுத்தாள். அது பெரியதாக தொப்பியுடன் கத்திரிப்பூ நிறத்தில் அழகாக இருந்தது.
அதை பார்த்து மஞ்சுவும், அண்ணா எனக்குடா?
சின்ன பசங்க விளையாடுவது உனக்கு பிடிக்காதுல?என்றான் கிண்டலாக, கவி மஞ்சுவை பார்த்து சிரிக்க,
டேய், வாங்கி தாடா என்று மஞ்சு கேட்டாள்.
கவிதா வாங்கிய டெடிக்கு ஜோடி ஒன்று உள்ளது. அதை தரவா? கடைக்காரர் கேட்டார்.
தாரளமாக தாருங்கள் என்று அதே போல் தொப்பி இல்லாமல் காபி நிறத்தில் வாங்கி கொண்டாள் மஞ்சு. பின் கவிதாவை விடுதியில் விட்டு, அவள் அறைக்கு செல்லும் வரை பார்த்து விட்டு ராஜா மஞ்சுவை வீட்டில் விட்டுட்டு அவன் வீட்டிற்கு வந்தான். கவிதாவின் அறையை பார்த்தவாறே கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு தூங்கச் சென்றான்.
“நீ
என்னை
அணைத்த
நொடி
என்னுள்ளே
நான் தொலைந்தேன்……
இக்கணம்
இப்படியே
உறைந்தால்
என்
மனப்பதைப்பு
நின்று போகும்……..
என்
கண்கள்
உன்னை
மட்டுமே தேடும்……..
என்
கால்கள்
உன்னை நோக்கியே
செல்லும்…
நானும் உன்னுடையன்
ஆவேன்…….”
கல்லூரியில் கவிதா மஞ்சுவிடம்,உன் அண்ணனின் நண்பனை போடா, வாடா என்று பேசுகிறாய்?
அவருடைய பெற்றோரும், எங்களுடைய பெற்றோரும் நண்பர்கள் தான். அதனால் எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே நல்ல பழக்கம். எனக்கு அவரை பற்றி நன்றாக தெரியும் பேசிக் கொண்டிருந்த போதே வகுப்பு மேடம் வந்தார். அதனால் சரியாக பேச முடியவில்லை. பின்பும் சூர்யாவை பற்றி அவர்கள் பேசவில்லை.
சூர்யாவும் ராஜாவும் ஸ்டேசன் வந்தனர். கைதியை பார்க்க சென்றேன். பின் மஞ்சுவை வீட்டில் விட்டு வந்திருக்கிறேன். அதனால் தான் நேரமாகி விட்டது.
வீட்டில் என்னடா பிரச்சனை? அந்த பெண் எப்படி இருக்கிறாள்?
நடந்ததை கூறினான் பாலா.
அட, உனக்கு போட்டிக்கு ஆள் உள்ளது போல.
அவனெல்லாம் எனக்கு போட்டியா? அவனே பழி வாங்க போவதாக மிரட்டி இருக்கிறான்.
அவன் பயங்கரமானவன் தான் போல. எதற்கும் இருவரும் கவனமாக இருங்கள் எச்சரித்தான் சுந்தர்.
சரிடா, கவனமாக இருக்கிறோம்.
இவர்கள் ஏதாவது கூறினார்களா? ராஜா கேட்க,
கோவையில் ஆண்டர்சன் ஒருவன் பிரைவேட் கம்பெனி நடத்தி வருகிறானாம். அவன் தான் காரணம் என்று கூறுகிறார்கள் வேறெதுவும் கூற மாட்டிக்கிறார்கள்.
சூர்யா டென்சனுடன் அவர்களை அடிக்க, நண்பர்கள் அவனை தடுத்து, துப்பாக்கியை காட்டி மிரட்டினார்கள்.
துப்பாக்கியை பார்த்து பயப்படுவது அந்த காலம். நீங்கள் எங்களை ஏதாவது செய்தால், உங்களுக்கு தான் பிரச்சனை தெனாவட்டாக கூற,
பாலா அவனை பார்த்து நக்கலாக சிரிக்க,பாலாவின் நண்பர்கள் அவனை சூழ, அவன் கையில் அவனே சுட்டுக் கொண்டு, துப்பாக்கியை கீழ் பக்கமாக தூக்கி எறிய, நேராக துப்பாக்கி அவனது காலடியில் விழ,அவன் கையில் எடுத்தான்.
என்னையே சுட்டு விட்டாயா? என்று பாலா அவனை சுட்டான். அடிபட்டவன் கீழே சரிந்தான்.
மற்றவர்கள் அவனை எழுப்ப, அவன் எழவே இல்லை. ஒழுங்காக கூறி விடுங்கள் என்று சுந்தர் மற்றவர்களிடம் துப்பாக்கியை காட்ட,
எச்சிலை விழுங்கியவாறு, ஒருவன் எங்களை ஏதும் செய்து விடாதீர்கள். நாங்கள் கூறி விடுகிறோம்.
அந்த ஆண்டர்சன் தம்பி மிக்கேல் எம் எல் ஏ பெண்ணை காதலித்தான். அவனுடைய செயல் அந்த பெண்ணிற்கு பிடிக்கவில்லை. திட்டிக் கொண்டே இருப்பாள். அவனது காதலையும் அவள் ஏற்றுக் கொள்ளவில்லை.அதனால் அந்த பெண்ணை கடத்தி விட்டார்கள்.
அவர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள்?
எங்களுக்கு தெரியாது சார். ஆனால் அந்த பெண்ணை கட்டாய திருமணம் செய்ய இருக்கிறார்கள். நாளை அதிகாலையிலே புனித ஆலயத்தில் கட்டாய திருமணம் நடக்க போகிறது. எந்த ஆலயம் என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறவே நண்பர்கள் திட்டம் போட ஆரம்பித்தனர்.
ஆலயத்தில் வைத்தே அவர்களை பிடிக்க திட்டம் தீட்டினர். உயர் அதிகாரியிடம் கூறி இன்னும் காவலர்களையும் உதவிக்கு கேட்டனர். அவர்களிடமும் அடி ஆட்கள் உள்ளனர். அதனால் அந்த பெண்ணை பாதுகாப்பாக கொண்டு வர, பெண் காவலர்களையும் அவர்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
என்னால் உங்களை அழைத்து செல்ல முடியாது. முக்கியமான வேலை உள்ளது. இன்று நீங்களாகவே சென்று விடுங்கள். இரவு வீட்டிற்கு வந்து கவிதாவை விடுதியில் சேர்த்து விடுகிறேன். அவளிடம் கூறி விடு என்று கூறி மஞ்சுவின் போனை துண்டித்தான்.
இரவில் நான் வீட்டிற்கு வர மாட்டேன். நாளை மதியம் தான் வருவேன் என்று பாலா அம்மாவிற்கு போனில் கூற, அவரும் சரியென்று கூறி வைத்து விட்டார். ராஜா வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ராஜா உள்ளே வந்தான். வாடா சாப்பிடு அம்மா அழைக்க, அவன் அம்மா அருகே உட்கார்ந்து வாயை திறந்தான். அம்மாவும் ஊட்டி விட, மஞ்சுவோ… உனக்கு கை இல்லையா? போட்டு சாப்பிட வேண்டியது தானே!
அவளது தலையில் ஒரு தட்டு தட்டி விட்டு, கவி சாப்பிட்டு விட்டு கூறு…என்று அறையினுள் செல்ல, முழுவதும் சாப்பிட்டு கிளம்பு…அம்மா அவன் பின்னே சென்றார். மஞ்சு அவனை முறைத்தாள்.
உள்ளே ராஜா அவனது விலை அதிகமுள்ள கோர்ட்டு சட்டையை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டிருந்தான்.
இதை எதற்குடா எடுக்கிறாய்? எங்களிடம் கூறாமல் திருமணம் ஏதும் முடித்து விட்டு வந்து விடாதே?
என்ன? திருமணம் செய்ய போகிறானா? என்று சாப்பிடும் கையுடன் அவனது அறைக்குள் மஞ்சு நுழைய, கவிதா இதை கேட்டு, சாப்பிடுவதை நிறுத்தி விட்டு யோசனையில் மூழ்கினாள்.
அவன் பையுடன் வெளியே வந்து, மஞ்சு திருமணம் முடிந்த பிறகு தான், நான் திருமணம் செய்து கொள்வேன் என்றவுடன் தான் கவிதாவிற்கு நிம்மதியானது இருந்தாலும் அவர்கள் ராஜா திருமணத்தை பற்றி பேசியது அவளுக்குள் ஒரு மாதிரி தான் இருந்தது. எதையும் காட்டிக் கொள்ளாமல் வேகமாக சாப்பிட்டாள்.
அப்படியென்றால் இது எதற்கு?
அது ரகசியம். முடிந்தவுடன் நானே வந்து எதற்கு என்று கூறுகிறேன். மஞ்சு அவனை நம்பாமல் பார்த்தாள்.
கவிதா சாப்பிட்டு விட்டு பையை எடுத்துக் கொண்டு அவனருகே வர, அவனும் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான். வண்டியில் ஏறியவுடன் ஏதோ யோசனையுடன் இருந்தாள். அவளுள் பல ஓட்டங்கள். பின் அவன் மீது சாய்ந்தே தூங்கி விட்டாள். இம்முறை அவளை எழுப்பாமல் அவளை நகர்த்தி விட்டு அவளை தூக்கிக் கொண்டு விடுதிக்குள் செல்ல வார்டனை பார்த்து, சத்தம் போடாதீர்கள் என்று சைகை செய்து விட்டு உள்ளே சென்றான்.
அட, இரவு வேளையில் என்னவொறு காதல் காட்சி….இருவரை பற்றியும் விடுதியில் பெண்கள் பேச, அவன் அதனை கேட்டுக் கொண்டு சிரித்துக் கொண்டே அவளது அறைக்கு சென்று படுக்க வைத்து விட்டு, அவன் வீட்டிற்கு வந்து அதே நாற்காலியில் தூங்கினான்.
மறுநாள் அதிகாலையிலே ராஜா வேகமாக எழுந்து குளித்து விட்டு, அவன் எடுத்து வந்த உடையை உடுத்தி நிற்க செவிலியரோ கண்ணெடுக்காமல் அவனையே பார்க்க, அவனை பார்த்தது போதும். எனக்கு தண்ணீரை எடுத்து கொடு என்று கைதி கூற, ம்… தருகிறேன் என்று கொடுத்தாள்.
கவிதா தாகமாக உள்ளது என்று பார்த்தால் அறையில் தண்ணீர் இல்லை. கீழே சென்று எடுத்து மேலே வரும் போது, அவன் தயாரானதை பார்த்து பதட்டத்தில் தண்ணீரை கீழே விட்டாள். சத்தம் அதிகமாக கேட்கவே சட்டென கீழே உட்கார்ந்தாள். அவள் அறையிலிருந்து பெண்கள் வெளியே வர, ராஜா அவர்களை பார்த்து அவர்கள் தான் ஏதோ செய்து விட்டார்கள் என்று உள்ளே சென்றான்.
அவர்களும் ராஜாவை பார்த்திருப்பார்கள். என்னதான் வீட்டில் மஞ்சுவிற்கு பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று ராஜா கூறினாலும் கவிதா யோசனையில் தான் இருந்திருப்பாள். அவனும் மாப்பிள்ளை போல் தயாராகி இருப்பதை பார்த்து விட்டு மேலும் உடைந்து போய் அழுதாள்.
கீழே உட்கார்ந்திருந்த கவிதா அழுவதை பார்த்து, அவளை உள்ளே அழைத்து சென்று, என்னடி அவர் எதற்காக இப்படி மாப்பிள்ளை போல் தயாராகி இருக்கிறார்? என்று கேட்க,
அழுது கொண்டே தெரியவில்லை என்றாள்.
அவர் ஏதாவது கல்யாண விழாவிற்கு கூட செல்லலாமே?
இந்த நேரத்தில் யாரடி கல்யாணம் நடத்துவார்கள்? திருட்டு கல்யாணம் வேண்டுமானால் நடக்கலாம்…கூற, கவிதா மேலும் அழுதாள்.
நீ அவரை காதலிக்கிறாயா?
அவள் அழுது கொண்டே, அந்த வீட்டை ஜன்னல் வழியே பார்த்தாள்.
ஏன்டி, இதெல்லாம் முன்பே சொல்ல மாட்டாயா?
அந்த சார் நடந்து கொண்டது போல் இவரும் நடந்து கொள்வாரோ? மற்றவள் கூற, அவள் கண்ணில் நீர் தாரை தாரையாக கொட்டியது.
அழுவதை நிறுத்து. முதலில் குளித்து விட்டு உடையை மாற்றி விட்டு அவரை பின் தொடருவோம்.
கிளம்பும் பொழுது கவிதா நினைத்து பார்த்தாள். பாலா வீட்டில் இருந்து கவிதா கிளம்பி சென்று அழுது கொண்டிருப்பாளே! அப்பொழுது கூட ராஜா காப்பாற்றுவானே! அப்பொழுதிலிருந்து கவிதாவிற்கு ராஜா மீது காதல் வர ஆரம்பித்திருக்கும். பின் அவன் அவளை அணைத்த போது அவன் மீது காதல் வந்ததை உணர்ந்திருப்பாள்.அவனுடைய பைக் சத்தம் கேட்டாலே அவள் அறையின் ஜன்னல் வழியே அவனை பார்த்திருப்பாள். அனைத்தையும் நினைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். பின் அறைத்தோழியும், கவிதாவும் கிளம்பினார்கள்.
ராஜா வீட்டிலிருந்து கிளம்பியவுடன், இவர்களும் அவனை ஸ்கூட்டரில் பின் தொடர்ந்தனர். நேராக ஆலயத்தின் வாசலுக்கு சென்றவுடன் ஒரு பெண் அவன் கையை பிடித்து இருவரும் உள்ளே சென்றாள்.
தவறாக புரிந்து கொண்டு, இல்லடி இதற்கு மேல் வேண்டாம். என்னால் முடியாது. என்னை விடுதிக்கே அழைத்து சென்று விடு கவிதா கூறினாள்.
கொஞ்சம் பொறுமையாக இருடி. அவசரப்படாதே! அவளது கையை பிடித்து கொண்டு தலையில் துப்பட்டாவை மறைத்தவாறு உள்ளே சென்றனர்.
உள்ளே சென்ற இருவரும் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தனர். கவிதாவும் தோழியும் பின்னே அமர்ந்து இவர்களை கவனித்துக் கொண்டிருக்க, சுந்தரும் ராஜா அருகே வந்து உட்கார்ந்தான்.
வெளியே அனைவரும் வந்து விட்டனர் என்றான் சுந்தர்.
கல்யாண பெண்ணும், அவனும் சேர்ந்தே வந்தனர். அவர்களை சுற்றி நிறைய ஆட்கள் இருந்தனர்.
ராஜா எழுந்து ஓரமாக உட்கார்ந்து கல்யாண பெண் அருகே வரும் வரை காத்திருந்தான். அவள் வந்தவுடன் மெதுவாக குனிந்து அவளுடைய ஆடையை மெதுவாக பிடித்து இழுத்து அங்கிருந்த நாற்காலியின் ஆணியில் மாட்டி விட, துணி கிழிந்து அவள் எடுக்க அவனருகே வந்தாள். அவனது கைக்குட்டையை கீழே போட அதில் ஒரு காகிதம் தெரிந்தது. அதில் நீங்கள் பயப்படாதீர்கள்..போலீஸ் அனைவரும் உள்ளோம் உங்களை காப்பாற்றி விடுவோம். எப்படியாவது அவர்களை வெளியே அழைத்து வாருங்கள் என்று எழுதி இருந்தது. அவள் நிமிர்ந்து ராஜாவை பார்க்க அவன் கண்ணசைத்தான். அவள் கண்கலங்க, அந்த மாப்பிள்ளையோ அவளது கையை பிடித்து இழுத்தான். அவள் பயந்தாலும் அவனது கையை உதறி விட்டு, எனக்கு…எனக்கு….மூச்சு வாங்குகிறது என்று கீழே உட்கார்ந்து நடிக்க ஆரம்பித்தாள். ராஜா அருகே இருந்த பெண் வேகமாக எழுந்து, காற்று வரட்டும் அவளை தூக்குங்கள். வெளியே அழைத்து செல்லுங்கள் என்றவுடன் மாப்பிள்ளை பயந்து கொண்டு அவளை தூக்கிக் கொண்டு வெளியே வர, அவனுடைய அண்ணனிற்கு சந்தேகம் வந்தது.
வெளியே போகாதே!.. அவன் கத்த, மிக்கேல் அங்கேயே நின்றான். ஏதோ தவறாக உள்ளது என்று கவிதாவின் தோழி எழுந்து கவிதாவின் கையை பிடித்து இழுக்க, அவளுடைய துப்பட்டா விலகியது. ராஜா அவளை பார்த்து அதிர்ச்சியானான். அவன் பார்த்ததை தோழியும் பார்த்து விட்டாள். ஆனால் பெரியதாக அலட்டிக் கொள்ளாமல் கவிதாவை பாதுகாப்பாக ஓரிடத்தில் நிற்க வைத்தாள்.
கல்யாண பெண்ணை பார்த்து, மிக்கேல் என்னிடமே நடிக்கிறாயா? உன் தோழியை மறந்து விட்டாயா?
கல்யாண பெண்ணிற்கு போன் வந்தது. நான் தப்பித்து விட்டேன்டி. நீ அவனை மணந்து கொள்ளாதே!
வேகமாக அவனருகே வந்து, அவள் தப்பி விட்டாள் என்று ஓங்கி அவன் கன்னத்தில் அறை விட்டு திரும்பி ராஜா அருகே வந்து, அவனது கையை பிடிக்க அவனுக்கோ கவிதா அங்கே இருப்பதை நினைத்து அடுத்து என்ன செய்வது? என்று யோசனையுடன் நின்றான்.
ஆண்டர்சன்னோ ராஜாவை நோக்கி கோபமாக அடிக்க வந்தான். இடையே சுந்தர் நுழைந்து, இது ஆலயம் இங்கே இதெல்லாம் வேண்டாம். வெளியே வா. பார்த்துக் கொள்ளலாம் என்று ராஜாவையும், கல்யாண பெண்ணையும் அழைக்க, இவர்கள் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு முன் நடக்க மிக்கேல் கோபமாக அவனுடைய ஆட்களை அழைத்தான். அவர்கள் ராஜா, சுந்தர் முன் வந்து நிற்க, சண்டையை ஆரம்பித்தனர்.
நான் தான் சொன்னேன்ல, வெளியே வைத்து பார்க்கலாம் என்று சுந்தர் சத்தமிட்டான்.
ஆமாம் வெளியே செல்லுங்கள் என்று பாதிரியார் அவர்களிடம் சொல்ல, அவரை பிடித்து கீழே தள்ளி விட்டனர். இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று ராஜாவும், சுந்தரும் அந்த பெண்ணுடன் வேகமாக வெளியே ஓட, அவர்களும் வெளியே வந்து சண்டை போட ஆரம்பித்தனர். அந்த பெண்ணை மறுபடியும் மிக்கேலும், அவனுடைய அண்ணனும் பாதிரியாரிடம் இழுத்துச் சென்று அவரது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்ட, உள்ளே இருந்த பெண் காவலாளி அந்த பெண்ணை காப்பாற்ற சென்றார். அவரையும் அடித்து கீழே தள்ளினர்.
அந்த பெண் கதறிக் கொண்டிருக்க அவன் அவளது கையில் மோதிரத்தை திணிக்க கையை பிடித்தான். இங்கே இரு. எங்கும் செல்லாதே! என்று தோழி வேகமாக ஓடி வந்து, அவனை வேகமாக தள்ளி விட்டு அந்த பெண்ணை பிடித்துக் கொண்டு ஓடி வந்தாள். ராஜாவும் சுந்தரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க, பாலா சூர்யா மறைந்து நின்றனர். நேராக அவர்களிடம் வந்து அந்த பெண்ணை ஒப்படைத்து விட்டு திரும்ப,
ஏய், நீ இங்கே என்ன செய்கிறாய்? பாலா கேட்டவுடன் அறைத்தோழிக்கு கவிதா நினைவு வந்தது.
அய்யோ! கவிதாவை மறந்து விட்டேனே! கூற, அவளும் இங்கே வந்திருக்கிறாளா? பாலா கேட்டான்.
தோழி வெளியே இருப்பதை கவனித்த ராஜா, கவிதாவை தேடினான். அவள் வெளியே இல்லை.
தோழியிடம் வந்து, நீங்கள் இருவரும் எதற்காக இங்கே வந்தீர்கள்? என்று கத்தினான் ராஜா.
உங்களால் தான் என்று அவளும் கத்தினாள்.
என்னாலா?
நீங்கள் அப்புறம் சண்டை போடுங்கள். எனக்கு உதவிக்கு வாடா,..சுந்தர் கூப்பிட்டான்.
ராஜா, தோழியை முறைத்து கொண்டே செல்ல, இவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் அவளை பாருங்கள் என்று ராஜாவை பார்த்துக் கூறினாள்.
நாங்களா? சுந்தர் கேட்க,
ஆமாம், நாம் தான் என்று தோழி அழுத்தமாக கூறி விட்டு, களத்தில் இறங்கி நன்றாகவே அந்த தடியங்களுடன் சண்டை போட்டாள். வியப்புடன் அனைவரும் தோழியை பார்த்தனர்.
ராஜா உள்ளே செல்ல, கவி ஓடி வந்து அவன் மீது மோதினாள். ராஜாவை பார்த்ததும் கவிதா பதட்டமானாள். அண்ணனும் தம்பியும் அருகே வர, ராஜா கவிதாவை வெளியே இழுத்துச் சென்றான்.
“எம் எல் ஏ” பொண்ணு, ஏன் சார் ஒளிந்து நின்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
அவர்கள் வெளியே வருவதற்காக காத்திருக்கிறோம் என்றான் சூர்யா. இவர்கள் போலீஸ் என்று உங்களுக்கு தெரியும். ஆனால் உங்களை கடத்தியவர்களுக்கு தெரியாது. மறைந்திருந்து தாக்க காத்திருக்கிறோம்.
ஆனால் உள்ளிருந்த மக்கள், அவர்களை பின் வழியாக அப்பொழுதே வெளியே அனுப்பி விட்டோம்.
ஓ! திட்டமா?
அவர்கள் இருவரும் அங்கே பார்த்துக் கொண்டிருக்க, அவனுடைய ஆட்களை சுந்தரும் தோழியும் அடித்து துவைத்திருப்பார்கள்.
அண்ணனையும் தம்பியையும் பார்த்து பாலாவும் போலீஸ் ஆடையில் வர, மற்றவர்களை மற்ற பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.
மிக்கேலும், ஆண்டர்சனும் சரணடைவது போல பக்கத்தில் வந்தனர். ராஜா கவிதாவை பின்னே வைத்துக் கொண்டு நின்றான். அவர்கள் ராஜா அருகே வந்தவுடன், அண்ணன் கையை அவனது பேண்டில் வைக்க ஏற்கனவே அவன் கத்தியை அங்கே வைப்பதை கவிதா பார்த்திருப்பாள்.
அவன் சரியாக கத்தியை ராஜா அருகே கொண்டு வர, கவிதா இடையே புகுந்து கத்தியில் கை வைத்து விட்டு கத்தினாள். அவளது கையிலிருந்து இரத்தம் கொட்டியது.
ராஜாவிற்கோ ஏற்கனவே கோபம் அதிகமாக வரும். கவிதாவின் கை இரத்தமாகவும், அவள் வலியால் அழுவதை பார்க்கவும் கோபம் வந்து அடித்த அடியில் அவன் சுண்டு விழுந்தான்.
இதை பார்த்த தம்பி கோபத்துடன் கத்தி எடுக்க, இம்முறை சூர்யா தடுக்க வந்து கத்தி அவனது கையில் குத்தியது. மீண்டும் ராஜா கோபமாக, பாலா அவனை பின்னே வந்து பிடித்து அடித்தான். அவனுக்கும் கையில் ஏற்கனவே அடிபட்டு கட்டு போட்டிருந்ததால் ரொம்ப நேரம் அவனை பிடித்து வைக்க முடியவில்லை. மற்ற போலீஸ் ஆட்களை வர வைத்து, அவனை பிடிக்க, அவன் நழுவி ஓட ஆரம்பித்தான். கவிதா மயங்கவே, அவளை தோழியிடம் விட்டு, சூர்யாவை சுந்தர் பார்த்துக் கொள்ள, ராஜா, பாலா, மற்ற போலீஸ் அவனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
“எம் எல் ஏ” விடம்,அவரது பெண்ணை ஒப்படைத்து விட்டு, ஆண்டர்சனையும்,அவனது தம்பியையும் கைவிலங்கு மாட்டி பாலா அழைத்துச் சென்றான்.
சுந்தர், ராஜா, தோழி மூவரும் கவிதாவையும், சூர்யாவையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கவிதாவிற்கு கையில் கட்டு போடப்பட்டது. அவள் மயக்கத்திலிருந்து விழிக்க, மஞ்சுவும் அவளது பெற்றோர்களும், சூர்யாவின் பெற்றோர்களும் அங்கே வந்தனர். கவிதாவை பார்த்து பேசி விட்டு, சூர்யாவை பார்க்க சென்றனர். ராஜாவும் சென்றான்.