அத்தியாயம் 17

ரேணு பாலா இருக்கும் இடத்திற்கு சென்று பாலா… பாலா….. கத்திக் கொண்டே வந்தாள்.

அங்கே இருப்பவர்களுக்கு சத்தம் கேட்க, பாலா திரும்பி பார்த்தான். ரேணு வியர்த்து விறுவிறுக்க அழுது கொண்டே வந்திருந்தாள்.

அவளை பார்த்தவுடன், நீ எதற்காக இங்கே வந்தாய்? கோபமாக அவன் கேட்க, அவள் திக்கி திக்கி ஏதோ கூறினாள். அவனுக்கு புரியவில்லை என்றாலும், நீ முதலில் கிளம்பு….கூற,

இல்லை பாலா…

அதான் அந்த பொண்ணு போக மாட்டேன் என்று கூறுகிறதே! எதற்காக விரட்டுகிறீர்கள் சார்? அங்கிருந்த ஒருவன் கேட்க,

இங்கே வாம்மா என்று மற்றொருவன் அழைக்க, அப்பொழுது தான் அவ்விடத்தையும், அங்கு இருப்பவர்களையும் பார்த்தாள். மனதினுள் அவ்வளவு பயம் இருந்தாலும் பாலா நான் எதற்கு வந்தேனென்றால் பேச, நீ எதுவும் கூற வேண்டாம் என்றும் இவள் பயப்படுகிறாள் என்று புரிந்து அவளை தனியே இழுத்து வர, இருவர் எழுந்து ரேணு அருகே வந்தனர். பாலா அவளை பின்னால் வைத்துக் கொண்டு நகன்று நகன்று சென்றான்.

அவர்கள், நீங்கள் கூறியதை போல் நாங்கள் உதவுகிறோம்… யார் அந்த பெண்ணை கடத்தியது என்று கூறுகிறோம். இந்த பெண்ணை மட்டும் ஒப்படைத்து விடுங்கள் கூற, பாலா ரேணுவின் கையை விடவே இல்லை.

இனி உங்கள் உதவி தேவையில்லை. நாங்களே ஓரளவு கண்டு பிடித்து விட்டோம். உங்களிடம் பேசும் போது ஐவரது போன் ஆனில் உள்ளது, அதுவும் ஒன்றுடன் ஒன்றி இணைந்துள்ளது. அந்த ஐந்து பேரையும் பிடியுங்கடா…பாலா நண்பர்களிடம் கூற, அவர்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருந்திருப்பார்கள். உடனே இருவராக பிடித்து சேர்த்து கைவிலங்கை மாட்ட, அவர்களால் தப்பிக்க முடியாமல் சரணடைந்து விட, பாலா பின்னே நின்ற ரேணுவை ஒருவன் பிடித்து இழுக்க, அவளுக்கு அதே அறிகுறிகள் வந்து மயங்க, சரியாக ஸ்வேதா வந்தாள்.

பாலா  மற்றவர்களை கிளம்ப சொல்ல,அவர்களும் கிளம்பினார்கள். ரேணுவை பிடித்தவனோ அகலாமல் இருக்க, பாலாவும் அவனும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, நண்பர்கள் செய்வதறியாது குற்றவாளிகளை பிடித்துக் கொண்டே பார்க்க, பாலாவோ கோபமாக, உனக்கு எவ்வளவு தைரியம் .நீ என்னுடைய ரேணு கையை பிடிக்கிறாயா? சொல்லி சொல்லி அடிக்க, மற்றவர்கள் சென்றவுடன் மறைந்திருந்த ஸ்வேதா தன் தடியுடன் ரேணு அருகே வந்து பதட்டமாக அவளை எழுப்ப, அவள் விழித்து மூச்சு திணறினாள். அவனை அடித்து பத்தி விட்டு பாலா ரேணுவை தூக்கிக் கொண்டு காற்றோட்டமான இடத்தில் அமர வைத்து அவன் மீது சாய்த்துக் கொள்ள, நண்பர்கள் பிடித்தவர்களை அழைத்து வர, தயவு செய்து இவர்களை ஸ்டேசன் அழைத்துச் செல்லுங்கள். அவனுடைய ஜீப்பின் சாவியை சுந்தரிடம் தூக்கி போட்டு அவர்களை கவனமாக அழைத்துச் செல்லுங்கள் கூற, மூவரும் ஐவரை இழுத்து ஜீப்பிலே போட்டு கிளம்பினார்கள்.

ரேணு சரியானவுடன் பாலா அவளை முறைத்தவாறு கையை கட்டிக் கொண்டு நிற்க, மீண்டும் பதட்டத்துடன் பாலா பாலா கூற, அவன் அவளையே பார்க்க ஸ்வேதாவே கூறினாள். மதுவை காணவில்லை…

அவள் எங்கே சென்றாள்?

தெரியவில்லை.

அதற்காக நீ இங்கே வந்தாயா? அவர்கள் எல்லாரும் யார் தெரியுமா? எங்களால் கை வைக்க கூட முடியாதவர்கள். அவர்களை விசாரிக்க தான் போன் போடாதீர்கள் என்று கூறினால் மேடம் நேராகவே வந்து விட்டீர்கள்.

நான் அவனை அடித்ததினால் என்ன பிரச்சனை வருமோ? என்று தெரியவில்லை பாலா கூற, அவள் அவனிடம் என்னை மன்னித்து விடுங்கள் கூறினாள்.

பின் அவள் ஏதும் கூறாமல் அமைதியாக பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு, மது….கூறினாள். வாருங்கள் போகலாம் என்று அவர்களை அழைக்க, மதுவை அழைத்துக் கொண்டு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

மீண்டும் அவளை முறைத்து விட்டு, கடைசியாக நீ பார்த்த போது என்ன செய்து கொண்டிருந்தாள்? எங்காவது அழைத்துச் செல்வதாக அவளிடம் கூறினாயா?

வெளியே தான் விளையாடிக் கொண்டிருந்தாள். யோசித்து விட்டு, மாலையில் பூங்காவிற்கு அழைத்து செல்வதாக கூறினேன் என்று கூற, இருவரும் வீட்டிற்கு செல்லுங்கள். நான் அவளுடன் வருகிறேன் என்று கூற நானும் வருவேன் என்று ரேணு பிடிவாதம் செய்ய, நீ வீட்டிற்கு சென்றால் தான் அவளை அழைத்து வருவேன் கூற, இருவரையும் ஆட்டோவில் அனுப்பி வைத்து விட்டு,அவன் பூங்காவிற்கு சென்றான்.

                         “இரவின் நிலவாய்

                           என்றும் பிரகாசிக்க

                           வந்த

                           என்

                           தேவதையே!

                            என்

                            வாழ்வினுள்

                            புகுந்து விட்டாய்.

                            என்னுள் பூவாய்

                            மலர்ந்து

                            என்னை

                            சிரிக்க வைத்தாய்.

                            தேனின் சுவையாய்

                            குடும்பத்தில்

                            நுழைந்து

                            என்னை மாற்றினாய்.

                             என் உயிரின்

                             கலவையானாய்

                             என்னுள்

                             வந்து விட்டாய் பெண்ணே!

                             வந்து விட்டாய்!

                               நீ

                               என்னை விட்டு

                               நீங்காது

                               பார்த்திருப்பேன்

                               இந்த ராஜாவின்

                               ராணியாக!”

பூங்காவிற்கு சென்றான். அங்கு மது இல்லை. அரசு பூங்காவில் யாரோ ஊஞ்சல் ஆடும் சத்தம் கேட்டது. பாலா உள்ளே சென்று பார்த்தான். மது ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்று,

டெடி, நீ எப்படி இங்கே வந்தாய்? அவளை இறக்கி விட்டு கேட்டான்.

இந்த அங்கிள் தான் அழைத்து வந்தார் என்று பின்னே கை காட்ட, அவள் பின் யாருமில்லை.

அங்கிள்… அங்கிள்… என்று கத்தினாள். பாலா சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே யாருமில்லாததனால், இருவரும் கிளம்ப மதுவை தூக்கிக் கொண்டு பேசிக் கொண்டே வந்தான்.

யாரென்று தெரியாதவர்களுடன் செல்ல கூடாது.

அவர் அக்காவின் தோழன் தானே! அவர் தான் கூறினார். அக்கா தான் பூங்காவிற்கு அவரை அழைத்து செல்ல சொன்னாராம். அவர் கூறினார் மது கூற,

தோழனா? யோசித்துக் கொண்டே,வீட்டிற்கு நுழைய ரேணு அழுது கொண்டிருந்தாள்.

ரேணுவை பார்த்து மது, அக்கா என்று அணைத்துக் கொள்ள, நீ ஏன் சொல்லாமல் சென்றாய்? குழந்தையை அடிக்க பாலாவும், ஸ்வேதாவும் தடுத்தனர். மது அழுது கொண்டிருக்க, ஸ்வேதா அவளை தூக்கி கொண்டு ரேணுவை திட்டி விட்டு அங்கிருந்து சென்றாள்.

குழந்தையை எதற்காக அடித்தாய்? பாலா சத்தமிட, ரேணு மேலும் அழுதாள். அவளருகே வந்து பொறுமையாக அவளிடம் பேச, அவன் வந்து விட்டான் என்று பாலாவை கட்டிக் கொண்டு அழுதாள்.

நீ யாரை கூறுகிறாய்?

அவன் தான். அந்த வளவன்….

வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரத்தில் எனக்கு போன் வந்தது.

என்ன ரேணு, மதுவை காணோமா? ஹா….ஹா….என்று சிரித்தான். கவலைப்படாதே! அவள் இப்பொழுது வீடு வந்து சேர்வாள். ஆனால் நாளை ஊகூம்….கண்டிப்பாக வர மாட்டாள்.

 ஏய், நீ யாருடா?

என்ன புதியதாக ஒருவன் வந்து விட்டால் என்னை மறந்து விடுவாயா?

வளவன், நீயா?

கண்டறிந்து விட்டாயே!

உன்னால் தான் பேச முடியாதே?

பாருடா இவளுக்கு ஆசையை. எனக்கு எல்லாம் சரியாகி விட்டது. ஆனால் உன்னை விட மாட்டேன்டி. எல்லாருக்கும் தெரியும்படி செய்தாயே! அதே போல் உன்னையும் பழி வாங்காமல் விட மாட்டேன் அவன் கத்தினான்.

உன்னால் முடிந்ததை செய்டா…பயத்தை மறைத்தவாறு ரேணு பேச,

உனக்கு அவ்வளவு தைரியம் ஆகி விட்டதா? சீக்கிரம் வருவேன் என்று போனை துண்டித்தான்.

ரேணு போனை வைத்து அப்பொழுது தான் அழுது கொண்டிருக்க பாலாவும் மதுவும் வந்தனர்.

இப்பொழுது பாலாவிடம் ரேணு, அவன் மதுவை ஏதும் செய்து செய்து விடுவானோ என்று பயமாக உள்ளது.

அவளது முகத்தை பாலா தன் கையில் பிடித்து கண்ணீரை துடைத்து விட்டு, அவன் ஏதும் செய்ய மாட்டான். பயப்படாதே! நீயும் கவனமாக இரு என்று அவன் கூற, ஸ்வேதா மதுவை ரேணுவிடம் அழைத்து வந்தாள்.

ரேணு அருகே வர பயந்தாள் மது. அதை பார்த்து வருத்தத்துடன் ரேணு இருக்க, மது அவளாகவே ரேணுவிடம் வந்து, அக்கா, என்னை அடிக்காதே! உங்கள் தோழன் தான் என்னை அழைத்துச் சென்றார். அதனால் தான் சென்றேன்.

அக்காவை மன்னித்து விடுடா மதுகுட்டி. இனி உன்னை நான் அடிக்க மாட்டேன் என்று மதுவை அணைத்துக் கொண்டு அழ, மது கண்ணீரை துடைத்து விட்டாள்.

வா, சாப்பிடலாம் மதுவை அழைக்க, ஸ்வேதா அங்கே வந்து, பாலாவையும், ரேணுவையும் நகர விடாமல்,

இருவரும் நில்லுங்கள். ஏன்டா அண்ணா! நீ ரேணுவை திட்டவா செய்தாய்?

ம்ம்… திட்டினேன். நீ கவனிக்கவில்லையா?

என்ன திட்டினாய்? நானும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். இருவரும் மாறி மாறி அன்பு மழையை பொழிகிறீர்களே?

நான் உதவி தானே செய்தேன் பாலா கூற,

சரி, நீ எதற்காக பாலாவை தேடி அவ்வளவு தூரம் சென்றாய்? அதுவும் எங்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து விட்டு, மற்றவர்களும் சேர்ந்து கொள்ள,

ஆமாம், எதற்காக பூட்டி விட்டு சென்றாய்? உனக்கு தான் ஆண்கள் மீது நம்பிக்கை இராது தானே! மதுவை காணவில்லை என்றால் மாமாவிடம் கூறி இருக்கலாமே! அத்தை பேச,

ரேணு தயங்கிக் கொண்டே, பாலாவின் நெருக்கம் அவளுக்கு பாதுகாப்பாக உணர்ந்ததை பற்றியும், அவன் மீது ஏதோ உணர்வு தாக்கியதையும் பற்றியும் சிந்தித்துக் கொண்டே அவனை பார்க்க,

பேசு ரேணு என்று…..ஸ்வேதா கேட்க,

எனக்கே தெரியவில்லை என்று அவனை பார்த்துக் கொண்டே கூறினாள்.

அப்படி கூறினால் எப்படி? ஸ்வேதா மீண்டும் கேட்க,

நான்… நான்… என்று கூறுவது போல் ஆரம்பித்து, மது அங்கே செல்லாதே! என்று ஓடி விட்டாள்.

அடியேய், மது அங்கே இல்லை. நீ கூறி விட்டு செல். ஸ்வேதா சொல்ல,

பாலாவிற்கோ மனது துள்ளல் போட்டது. என் காதல் அவளை தாக்க ஆரம்பித்து விட்டதோ! என்று எண்ணி அவள் சென்ற திசையையே பார்க்க, ஸ்வேதா அவனருகே வர, அவன் போனை எடுத்துக் கொண்டு அவளை பார்த்து விட்டு முக்கியமான போன் என்று நகர்ந்தான்.

சூர்யாவிற்கு  போனை போட்டு, அவர்கள் ஐவரும் பத்திரமாக தானே இருக்கிறார்கள்.

இருக்கிறார்கள்.

நான் அடித்தவன் ஏதும் பிரச்சனை செய்கிறானா? பாலா கேட்க,

அதெல்லாம் ஏதும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே நடந்ததை நம்முடைய அதிகாரிகள் பார்த்துக் கொண்டு இருந்ததை ராஜா அவனிடம் கூறி தான் அனுப்பினான். அதனால் பிரச்சனை வர வாய்ப்பிருக்காது சூர்யா கூறினான்.

என்னடா, உன்னுடைய காதலை கண்டுபிடித்து விட்டாய் போல? அது எப்படி, என்னோட ரேணுவா…? அவன் சிரித்துக் கொண்டே கிண்டல் செய்ய,

டேய், சும்மா இருடா என்று பாலா வெட்கப்பட்டான்.

இங்கே பாருடா சுந்தர், பாலா வெட்கப்படுகிறான்.

அடடா, இதை நேரில் பார்க்க நமக்கு கொடுத்து வைக்கவில்லையே? சூர்யா சொல்ல

சுந்தர் போனை வாங்கி, சீக்கிரம் வா. இவர்களிடம் பேச வேண்டும். யாரும் வந்து இவர்களை அழைத்து சென்று விடாமல் என்று கூற,

ராஜா, சூர்யாவுடன் சேர்ந்து அவர்களை கவனியுங்கள்.

ராஜா அவனுடைய தங்கையை கல்லூரிக்கு சென்று அழைத்து வீட்டில் விட்டு வருகிறேன் என்று சென்றிருக்கிறான்.அவன் முழுவதுமாக மாறி விட்டான்டா பாலா.

எல்லாம் காதல் படுத்தும் பாடு என இருவரும் சிரிக்க, நான் இப்பொழுதே வருகிறேன் என்று கிளம்ப, முதலில் சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள் என்று ரேணு எடுத்து வைக்க ஸ்வேதா அங்கே வந்து,

“என் சமையல் உன் மனதை சுவையூட்டும்” என்று ஒரு பாடலை பாடிக் கொண்டு பாலா அருகே வர, பாலாவிற்கு புரை ஏறியது.

ரேணு அவளை முறைக்க, பார்வதியம்மா தண்ணீரை எடுத்து கொடுத்தார்.

அண்ணா! உனக்கு பணிவிடை பலமாக உள்ளதே! கேலி செய்ய,

சும்மா இரும்மா.ஏதோ நல்ல யோசனையில் இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.இல்லையெனில் அப்பொழுதே சண்டை வந்திருக்கும்.

ஓ…சண்டை என்னும் தர்பாரா?

உனக்கு என்ன! அண்ணா மீது திடீர் கரிசனம்? நான் கிளம்புகிறேன் என்று அவன்  வேகமாக  சாப்பிட்டு விட்டு ஸ்டேசன் கிளம்பினான். ஸ்வேதா விடாது ரேணுவை கிண்டல் செய்யவே அவளும் உள்ளே ஓடினாள். இதை பார்த்து அனைவரும் கொல்லென சிரித்தனர்.

டேய் அண்ணா, சீக்கிரம் எழுந்திருந்திருடா மஞ்சு ராஜாவை போனில் எழுப்ப,

நான் தயாராகி விட்டேன் என்று அவர்களது அம்மா வந்தார்.

இவ்வளவு அதிகாலையில் எங்கே தான் செல்ல போகிறீர்கள்? அப்பா கேட்க,

அது ரகசியம் என்றார் அம்மா.

அவன் போனில் கேட்டு விட்டு, என்னை விடுங்கள். நான் தூங்க போகிறேன்.

அதெல்லாம் முடியாது. நீ ஒரு நல்ல ஆடையுடன் இப்பொழுதே தயாராகு. என்னை அழைக்க ஆறு மணிக்கு நீ வீட்டில் இருக்க வேண்டும்.

என்னால் முடியாது.

எனக்காக இல்லை. வேரொருவருக்காக மஞ்சு கூற,

எங்கே தான் செல்ல வேண்டும்? யாரை பார்க்க வேண்டும்?

நீ முதலில் வா. பிறகு உனக்கே தெரியவரும்.

வந்து தொலைகிறேன்…ராஜா செவிலியரிடம் கூறி விட்டு வீட்டிற்கு சென்றான்.

அம்மாவும், மஞ்சுவும் தயாராகி வெளியே வந்தனர்.

நீ  உள்ளே செல்ல வேண்டாம் என்று ராஜாவை இருவரும் நிறுத்தி, அம்மா நீங்கள் நேராக கோவிலுக்கு வந்து விடுங்கள். நாங்கள் அவளை அழைத்து வருகிறோம்.

யாரை அழைக்க வேண்டும்? ராஜா கேட்க,

எதுவும் கேட்காமல் நீ இருக்கும் வீட்டிற்கு செல் மஞ்சு கூற,ராஜா பைக்கை எடுத்தான். இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

மஞ்சு வேகமாக விடுதி பக்கம் சென்றாள். ராஜா ஒன்றும் புரியாமல் நிற்க, கவிதா தாவணியில் அழகாக வெளியே வந்தாள்.

கவி, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று மஞ்சு அவளை கட்டி பிடிக்க, அவள் அதிர்ச்சியோடு

மஞ்சு நீ இங்கே என்ன செய்கிறாய்?

வா கோவிலுக்கு செல்லலாம் மஞ்சு அழைக்க, பின்னால் நின்ற அறைத்தோழிகளைப் பார்த்தாள் கவிதா. அவர்கள் அவளை பார்த்து புன்னகைத்தனர். அவள் அவர்களை முறைத்து விட்டு, மஞ்சுவுடன் வர, ராஜா அவளை பார்த்தபடியே நின்றான். அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

மஞ்சுவிற்கு போன் வந்தது. எல்லாரும் தயார உள்ளனர். அவளிடம் பேசும் தோழி கூறவே, இருவர் அருகிலும் வந்தாள் மஞ்சு. இருவரையும் பார்த்து சிரித்து விட்டு,

அண்ணா….அண்ணா…என்று அழைக்க, அவனோ அவளை பார்த்தவாறு இருக்க, அவனை காதை பிடித்து இழுத்து, நேரமாகிறதுடா அண்ணா! கிளம்பலாமா?

அவன் ம்ம்ம்ம்.. மஞ்சுவை மந்திரித்ததை போல் பார்க்க,

என்னடா?….வண்டியை எடு,….அவன் எடுக்க, கவியும் மஞ்சுயும் ஏற, மஞ்சு திரும்பி அறைத்தோழிகளை பார்த்தாள். அவர்களும் அவளை பார்த்து சிரித்தனர்.

அவர்கள் கோவிலுக்கு வர, மஞ்சு கவிதாயை இழுத்துக் கொண்டு ஓட, கவிதா திரும்பி ராஜாவை பார்த்தாள். அதை கவனித்த மஞ்சு, நீயும் வாடா…..ராஜாவை அழைக்க, உள்ளே வந்தனர்.

அங்கே கல்லூரித் தோழிகள், அவர்களுடைய அம்மாக்கள், மஞ்சுவின் அம்மா, வார்டன், அறைத்தோழிகள் அனைவரும் இருக்க, கல்லூரித் தோழிகளில் ஒருத்தி கையில் கேக்குடன் மெழுகுவர்த்தி ஏற்றி வந்து கொண்டிருக்க, கவி கண்ணில் ஆனந்தக்கண்ணீர் பெருக பார்த்துக் கொண்டிருந்தாள். ராஜா கொஞ்சம் தள்ளி நின்று அவளை பார்த்துக் கொண்டிருக்க, அவள் கேக்கை வெட்டி பிறந்தநாளை நன்றாகவே கொண்டாடினார்கள்.

கவிதா, வார்டன் மற்றும் பெரியவர்கள் காலில் விழ, கோவிலில் விழக் கூடாதும்மா என்று ஒரு தோழியின் அம்மா கூறி விட்டு, நாங்கள் மனதார உன்னை வாழ்த்துகிறோம் என்று பிறந்தநாள் பாடலை அனைவரும் பாட, ராஜா எதுவும் பேசாமல் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான். அவளுக்கோ அவன் வாழ்த்து கூட சொல்லவில்லையே என்று வருந்தினாள்.

பின் அனைவரும் கல்லூரிக்கு கிளம்பினர். ராஜா இருவரையும் கல்லூரிக்கு அழைத்துச் சென்றான். என்ன தான் அவன் ஏதும் கூறவில்லை கவிதா வருத்தப்பட்டாலும், அதை வெளிகாட்டவில்லை.

கல்லூரி முடிந்து அவர்கள் கிளம்ப, ஒருவன் கவிதாவின் கையை பிடித்து, நான் கூறியதற்கு பதில் நீ கூறவில்லையே?

எனக்கு உன் மீது விருப்பம் இல்லை. என்னை தொந்தரவு செய்யாதே!

அது எப்படி விருப்பமில்லாமல் போகும். சிறு வயதிலிருந்தே நமக்கு ஒருவரை ஒருவர் தெரியும்.

அதற்காக உன்னை காதலிக்க முடியுமா?

ஏன் முடியாது? அவளது கையை அழுத்த, எனக்கு வலிக்கிறது விடுடா… கூற, அவன் மேலும் இறுக்க வலி தாங்க முடியாமல் அழுதாள்.

இதை பார்த்த மஞ்சு அவனை பிடித்து தள்ளி விட, அவன் கோபத்தில் எங்களுக்கு இடையில் எப்பொழுதும் நீ தான் இருக்கிறாய்? அவன் கோபம் முழுவதும் மஞ்சு மீது திரும்ப கவிதா கைகள் சிவந்த நிலையில் இருந்தது. அவன் மஞ்சுவை அடிக்க வர, சரியாக ராஜா வந்து வேகமாக உள்ளே வர, அவனை தாண்டி ஒருவன் வந்து அவனது கன்னத்தில் பளாரென்று அறைந்தான். அனைவரும் அதிர்ச்சியோட பார்க்க,

டேய் மச்சான், நீ இங்கே என்ன செய்கிறாய்? ராஜா கேட்க, சூர்யா தான் வந்தான். பாலா உன்னை அழைத்து வரச் சொன்னான் கூற கவிதாவும், மஞ்சுவும் சூர்யாவையே பார்த்தனர்.

மஞ்சு நிதானமாகி டேய், எதற்கு டா அவனை அடித்தாய்? சூர்யாவை பார்த்து கத்த,

உனக்கு உதவி செய்தேன்ல என்னை கூற வேண்டும். டேய் தம்பி, நல்லா பளாரென்று ஒன்று கொடு அவளுக்கு என கூற, சூர்யா போலீஸ் உடையில் இருப்பதால் அவனை பார்த்து அடிக்க வந்தவன் ஓடி விட்டான்.

உனக்கு எவ்வளவு தைரியம்? என்னை அடிக்க சொல்கிறாயா? என்று அவனை அடிக்க, கவிதாவோ ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

இரண்டு பேரும் முடித்து விட்டால் செல்லலாமா? ராஜா கேட்க,

டேய் அண்ணா, கவியையும் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். எங்களது செயல் திட்டம் முடிய இன்னும் மூன்று நாட்களாகும் கூற, நால்வரும் கிளம்பினார்கள்.