அத்தியாயம் 13

ராஜா, அந்த பெண்ணை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து, நீ உள்ளே செல்…என்றான்.

உள்ளே அவர் இருக்கிறாரா? அவள் கேட்க,

எவர்மா?

எங்கள் விடுதிக்கு என்னை தேடி வந்தாரே! அவர்.. குனிந்து கொண்டே பேச, அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு, இருக்கிறான் என்றான் கடுகடுப்புடன்.

அவள் உள்ளே வந்து, பாலா கண்ணை மூடி இருப்பதை பார்த்து விட்டு, அவனருகே மெதுவாக வந்து உற்று பார்த்துக் கொண்டிருக்க அவன் சட்டென விழித்து பயந்து,

ஏய், என்ன செய்கிறாய்? மிரட்டும் தொனியில் பேச, அவள் பயந்து பின்னே வர, வந்து கொண்டிருந்த ராஜாவின் மீது மோதி மீண்டும் பயந்து பின்னே செல்ல மினரல் வாட்டரை தட்டி நீரை கொட்டி விட்டு மீண்டும் பயப்பட, இருவரும் அவளை பார்த்து முறைக்க, விழிக்க விழிக்க படபடப்புடன் இருக்க, கைதிகளுள் ஒருவன் அவளை பார்த்து விட்டு பாலாவை முறைத்தான்.

உட்காரும்மா,…அவளை முறைத்த படி ராஜா கூற, அவளே பயந்து இருக்கிறாள்.

ஏன்டா,நீயும் பயமுறுத்துகிறாய்? சும்மா இருடா பாலா கூற,

மச்சான், யாரையும் சாதாரணமாக எடை போட்டு விடாதே! அவள் ராஜாவை முறைத்தாள்.

கைதிகளை வெளியே வர வைத்து, அவர்களை பார்த்துக் கூறு. இவர்களில் நீ யாரை பார்த்தாய்?

பாலாவை முறைத்தவனை அவள் கையை காட்ட, மற்றவர்கள் அவனை பார்த்து, சாட்சி உள்ளது என்று உனக்கு தெரியுமா? கைதிகளே சண்டை போட ஆரம்பிக்க, அந்த பெண்ணை விலக்கி விட்டு, ராஜாவும்,

பாலாவும் நிறுத்துங்கடா கத்த, அவர்களுள் ஒருவன் மட்டும் அந்த பெண்ணை தாக்க வர, ராஜா அங்கிருந்த நாற்காலியை எடுத்து அவன் தலையில் போட,அவனுக்கு இரத்தம் பொள பொளவென கொட்ட,அந்த பெண் காட்டி கொடுத்த கைதி மட்டும்,அவளை ஏதும் செய்து விடாதே! கத்த, அனைவரும் அவனை பார்த்தனர்.

எனக்கு அவளை பிடிக்கும். நான் அவளை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.

அவளோ, இல்லை சார் எனக்கு இவன் யாரென்று தெரியாது பதற,

தெரியவில்லை என்றால் எதற்காக  பதறுகிறாய்? கூறு? ராஜா கேட்க,

அதற்கு அவன், அவளுக்கு பாலா சாரை பிடிக்கும் என்றான்.

என்ன! என்னையா? பாலா அவளை பார்க்க, அவளது கண்கள் கலங்கியது.

சட்டென அவளருகே வந்து, நான் ஏற்கனவே வேறொருவரை காதலிக்கிறேன் கூற, அவள் அழுது கொண்டே சென்றாள். பாலா ராஜாவை கண்ணை காட்ட, ராஜா அவளை கூப்பிட அவள் கோபத்தில் போடா கூற, அவளை தூக்கி ஜீப்பினுள் நுழைத்தான்.அவள் அவனை அடிக்க அவர்கள் அவ்வாறே சென்றனர். பாலா அவசர  சிகிச்சை வண்டியை அழைத்து அடிபட்டவனை மருத்துவமனையில் சேர்த்தான்.

அன்று இரவு சோகமாக பாலா வீட்டினுள் நுழைய, ரேணு வேகமாக  வெளியே வந்தாள். பாலாவை பார்த்து நின்று, அவனருகே சென்று, நீங்கள் ரியாவை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்.இதோ வந்து விடுகிறேன் என்று வெளியே கிளம்ப,

இந்த நேரம் எங்கே செல்கிறாய்? எப்படி செல்வாய்?

வண்டி சாவியை ரேணு பாலாவிடம் காட்ட,நீ வண்டி வாங்கி விட்டாயா? என்னிடம் கூறவேயில்லை என்று கூற,மாமா தான் வாங்கி தந்தார்கள் என கூறிக் கொண்டே ஓடினாள். இருவரையும் பாலாவை காதலிப்பதாக கூறிய அந்த பெண் கவிதா பார்த்துக் கொண்டிருந்தாள். ரேணுவை தான் பாலா காதலிக்கிறான் என்பது தெளிவாக தெரிந்தது. பாலாவின் பின்னே சுற்றி வீடு வரை வந்து விட்டாள். பாலா வீட்டினுள் செல்ல,அழுகுரல் கேட்கவே உள்ளே சென்று பார்த்தால் மதுவிற்கு காய்ச்சல். பாலாவை பார்த்து மீண்டும் அவள் அழ, அவன் மதுவை சமாதானப்படுத்தி வெளியே வந்தால் ரியாவும் அழுது கொண்டிருந்தாள்.

ராஜம்மா, பாலாவிடம் இவளை சமாளிக்கவே முடியவில்லை.அவன் ரியாவை தூக்கிக் கொண்டு வெளியே வர, பார்வதியம்மாவும் அவனுடன் வந்து ரியாவை சமாளிக்க, கவிதா பார்த்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று எப்படி மதுவிற்கு காய்ச்சல் வந்ததும்மா?

தூங்கும் போது கட்டிலிலிருந்து கீழே விழுந்து பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது.

ரியா எதற்கு அழுகிறாள்?

மது அழுவதை பார்த்து அவளும் அழுகிறாள்.

பாலா அழுது கொண்டிருந்த ரியாவிடம்,மதுவிற்கு ஒன்றுமில்லை. வெறும் காய்ச்சல் தான். அவள் மருந்து சாப்பிட்டால் சரியாகி விடுவாள். நீ இப்பொழுது தூங்கு. நாளை அவளுடன் விளையாடலாம். பின் உன் அப்பாவை பார்க்க அழைத்துச் செல்கிறேன் என்று பேசியே சமாதானப்படுத்தினான்.இதை பார்த்த அந்த பெண்ணுக்கு பாலாவை மிகவும் பிடித்து விட்டது. அவருடன் தான் என் வாழ்க்கை முடிவெடுத்தாள்.

பார்வதியம்மாவிற்கு கீதாவின் நினைவு வரவே, அவளை பற்றி பேசவே, பாலா ரியாவை தோளில் போட்டுக் கொண்டே,அம்மா நானும் உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்று கீதாவிற்கு நடந்ததையும்,அவளது கணவனது நல்ல குணத்தையும் கூற, நானும் அவரை பார்க்கணும் அவர் கூற,

எதற்காக வெளியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? உள்ளே வாருங்கள் மாமா அழைக்க, இருவரும் திரும்பி பார்க்க அவரே வெளியே வந்தார்.

மிகவும் நன்றி. நீங்கள் கூறியதால் தான் நான் என் தங்கையை பற்றியும், அவளது கணவரை பற்றியும் தெரிந்து கொண்டேன் கண்கலங்க,

என்ன ஆயிற்று? அவர் கேட்க அவரிடமும் கூற, அவ்விடம் அமைதியாக ரேணு வந்தாள்.

மாமா, நான் வாங்கி விட்டேன் என்று அனைவரையும் பார்க்க, அவர்கள் கண்கலங்கி நின்றனர்.

உள்ளே வாருங்கள் அழைத்துச் செல்ல, பாலா ரியாவின் அறைக்கு சென்று அவளை தூங்க வைத்து விட்டு வெளியே வந்தான்.ரேணுவும் மதுவிற்கு மருந்தை கொடுத்து தூங்க வைத்து விட்டு அத்தையுடன் வெளியே வந்தாள்.

பாலா சாப்பிட வாருங்கள் ரேணு அழைக்க, எனக்கு பசியில்லை அவன் கூற, பார்வதியம்மாவும் எனக்கும் பசிக்கவில்லை கூறினார்.

ஆன்ட்டி, நீங்கள் மருந்து சாப்பிட வேண்டும் என்று கூற,

பாலா, அம்மாவிடம் வந்து சாப்பிடுவோம் என கூற, எப்படிடா? அழ ஆரம்பித்தார். அவனும் அம்மாவை கட்டி கொண்டு அழ, ரேணு எதற்கு அழுகிறீர்கள்?

பாலா கண்ணை துடைத்துக் கொண்டு, அவனது அம்மாவை சாப்பிட வைத்து மருந்தை கொடுத்து விட்டு, அவனும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சோர்வாக சென்றான்.

மறுநாள் காலையில் வீட்டிற்கு வெளியே ஏதோ சி.டி இருக்கவே, ரேணு அதை எடுத்து மாமா இது என்னவென்று பாருங்கள் கூறி விட்டு,சமையலறைக்கு செல்ல,மாமா அதை தொலைக்காட்சியில் இணைத்து போட, அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர். ரேணுவும் பார்த்து விட்டு வருத்தத்துடன் செல்ல பாலா கீழே இறங்கி வந்தான்.

அனைவரும் அவனை பார்க்க,ரேணுவின் அத்தை கோபமாக அவனை முறைத்து விட்டு உள்ளே செல்ல,ராஜம்மாவும் அவனை குறுகுறுவென பார்க்க,மாமா பாலாவை பார்த்து விட்டு எதுவும் கூறாமல் உள்ளே சென்றார்.

மாமா, ரேணு முகம் வாடியதை பார்த்திருப்பார்.என்ன நடக்கிறது? அவனும் தொலைக்காட்சியை பார்க்க,கவிதா அவனுக்கே தெரியாமல் போட்டோ எடுத்திருப்பாள். அவளுடைய போட்டாவையும் சேர்த்து நெருக்கமாக இருப்பது போல வீடியோ தயார் செய்து கடைசியில் அவனை காதலிப்பதாக கூறி சி.டி செய்து அனுப்பி வைத்திருக்கிறாள்.

இதை பார்த்தவுடன், பாலா அவன் அம்மாவிடம் செல்ல,என்னடா இது? கன்னத்தில் ஓங்கி அறைந்தார். ராஜம்மா மேலும் அடிக்கவிடாமல் பார்வதியம்மாவை தடுக்க, இருவரும் உள்ளே சென்றனர். அவன் ரேணுவிடம் பேச,… அவள் ஏதும் பேசாமல் சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு, அவளும் சென்றாள்.

ஆன்ட்டி, நான் உங்களிடம் பேசணும். உன்னிடம் பேச ஏதுமில்லை அவரும் கூற, கோபமாக நான் சொல்ல வருவதை யாரும் கேட்க மாட்டீர்களா? கத்தி விட்டு சாப்பிடாமலே வெளியே கிளம்பி, நேராக விடுதிக்கு சென்று சி.டி யை விட்டு எறிந்து என்ன செய்து வைத்திருக்கிறாய்? கத்திக் கொண்டே விடுதியினுள் நுழைந்தான்

நீங்கள் உள்ளே வரக்கூடாது வார்டன் சொல்ல,கவிதாவை வர சொல்லி அவள் வந்தவுடன் பயங்கரமாக திட்டி விட்டு வெளியே வந்தான். அவள் அழுது கொண்டிருக்க, மற்ற பெண்கள் அவளை தேற்றிக் கொண்டிருந்தனர். வார்டன் பாலாவிடம், என்னப்பா இப்படி பேசி விட்டீர்கள்?

அவளால் நான் வீட்டிற்கே செல்ல முடியாது? நான் காதலிக்கும் பெண் வீட்டில் உள்ளவர்களும், என்னுடைய அம்மாவும் அவள் செய்த காரியத்தால்,என்னை தவறானவனாக எண்ணிக் கொண்டனர். அந்த பெண் தற்பொழுது தான் நன்றாக பேசுகிறாள். இப்பொழுது இப்படி செய்து விட்டாளே! இனி அவள் என்னை தொந்தரவு செய்ய கூடாது. சொல்லி வையுங்கள் கூறி விட்டு அவன் சென்றான்.

பாலா தன் மற்றொரு நண்பன் சூர்யாவிற்கு போன் செய்து, பைக் கேட்டு வாங்கி ஓரு நதிக்கரையோரம் வந்தான். அங்கே இருந்த இயற்கை சூழல் அவனை அமைதியாக்க, அங்கே இருந்த பெஞ்சில் சாய்ந்து தூங்கினான்.

கவிதாவோ பாலாவை தேடி ஸ்டேசனுக்கு வர, ராஜாவை வெளியிலிருந்து பார்த்து வேகமாக அங்கிருந்து சென்றாள்.

பார்வதியம்மா மகனை நினைத்து வருந்த,ரேணு புரிந்து கொண்டு,

என்ன ஆன்ட்டி, ஒரு பெண்ணை மகன் காதலித்தால் ஏற்றுக் கொள்ளலாமே! எதற்கு வருத்தப்படுகிறீர்கள்?

அவன் காதலிப்பது வேறு பெண்ணை,ஆனால் யாரோ ஒரு பெண்ணுடன் இப்படி இருக்கிறானே? நான் அவனை தவறாக வளர்த்து விட்டது போல் தோன்றுகிறது வருத்தப்பட,

அதெல்லாம் இருக்காது ஆன்ட்டி,மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து தூங்க அனுப்பினாள்.

பாலா அன்றிரவு வெகு நேரம் கழித்து வீட்டிற்கு வரவே,எல்லா விளக்குகளும் அணைத்து இருப்பதை பார்த்து வருத்தத்துடன் உள்ளே வந்தான்.

சமையற்கட்டில் மட்டும் வெளிச்சம் தெரிந்தது. ரேணு சாப்பாட்டை டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்து, சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்றாள்.

அவன் அவளருகே வந்து, நான் தவறானவன் என்று எண்ணுகிறாயா? அவள் எதுவும் பேசாமலிருக்க, அவளது கையை அவன் பிடிக்க, அவள் கையில் நடுக்கம் தெரியவே, கையை விட்டு நிமிர்ந்து பார்த்தான். அவளுக்கு வியர்க்க ஆரம்பிக்க, ரேணு.. என்று கூப்பிட அவள் தடுமாறிக் கொண்டே நீங்கள் சாப்பிடுங்கள் என்று சமையலறைக்குள் நுழைய அவனால் சாப்பிட முடியாமல் தவித்தான். அவள் என்னை நம்பவில்லை. அதனால் தான் அவளுக்கு பழைய அறிகுறிகள் வந்து விட்டது கவலையோடு சாப்பிடாமல் அவனது அறைக்கு சென்றான்.

உடையை கழற்றி எறிந்து விட்டு, பனியனோடு கட்டிலில் விழுந்தான். மிகவும் குளிராக இருப்பதால் ஜன்னலை மூட சென்றான். வெளியே கவிதாவை பார்த்து பயங்கர கோபமாக கீழே வந்தான்.

இந்த நேரம் எங்கே செல்கிறார் என்று மெதுவாக எழுந்து வெளியே ரேணுவும் வர, ரேணுவை பார்த்த கவிதா பாலா அருகே வந்து அவனை கட்டி அணைக்க, இதை பார்த்தவுடன் ரேணுவிற்கு மூச்சு வாங்க கதவின் பின் மறைந்து உட்கார்ந்தாள். ஆனால் பாலாவோ சட்டென கவிதாவை தள்ளி விட, அவள் கீழே விழுந்தாள்.

உனக்கு என்ன தான் பிரச்சனை? அவன் கத்த, போன் பாலாவை அழைக்க அதை அணைக்கிறேன் என்று தெரியாமல் எடுத்து விட்டான். ராஜா தான் போன் செய்திருப்பான். அவர்கள் பேசுவதை கேட்கவும் ஆரம்பித்தான்.

ஏய், உனக்கு அறிவே இல்லையாடி? எத்தனை தடவை கூறுவது? போய் விடு. இல்லையென்றால் உன்னை என்ன செய்வேனென்று தெரியாது. போ….உரக்க கத்தவே, ரேணு கொஞ்சம் கொஞ்சமாக சாதாரண நிலைக்கு மாறுகிறாள். அவள் எழுந்து நிற்க, பாலாவின் சத்தம்  கேட்டு அனைவரும் வந்தனர்.

சார், நான் உங்களிடம் என் காதலை நேரில் கூற தான் வந்தேன். குரலை உணர்ந்த ராஜா வண்டியை எடுத்து கிளம்ப கவிதா நிறுத்தாமல் பேச,…

பேசுவதை நிறுத்து….பாலா கத்த பயந்து அவள் பின் சென்றாள். ஒருவன் உன்னுடைய காதலை ஏற்று கொள்ளவில்லை என்றால், தொந்தரவு செய்யாமல் விலகி விட வேண்டும். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் நடந்து கொண்டால்,உன்னை தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடுவார்கள் பாலா எல்லை மீறி பேசவும் கவிதா அழுதாள். ரேணு கோபமாக அவனருகே வந்து,

ஒரு பெண்ணிடம் இப்படி தான் பேசுவீர்களா?

பார்வதியோ! அவள் என்ன செய்தாலும், நீ இப்படி பேசக்கூடாது என்றார். பாலா அமைதியானான்.

அழுது கொண்டே சார், நீங்கள் அந்த மாதிரி தானா? கவிதா கேட்க

பாலாவிற்கு சுர்ரென்று ஏறியது. அடிக்க கையை ஓங்கினான். ரேணு அவனது கையை பிடித்து தடுத்து அப்படியே மயங்கி அவன் மீது சாய,ராஜாவும் சரியாக வந்தான்.

ஏய், எதையும் யோசிக்க மாட்டாயா? இங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள். உனக்கு அசிங்கமாகவே இல்லையா? என்ன செய்கிறாய் என்று தெரிந்து செய் ராஜாவும் கோபமாக திட்ட, ரேணு மயங்கியதை பார்த்தவுடன் அவளையே பார்த்துக் கொண்டு,ராஜா பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்தவள் திடீரென்று அழுது கொண்டே விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். எதையும் கவனிக்காது கண்மூடித்தனமாக

கவிதா நடக்க, எதிரே வரும் லாரியை கூட பொருட்படுத்தாமல் செல்லவே,அது அவளை மோதுகின்ற சமயத்தில் ராஜா அவளை காப்பாற்றி விட்டு,

உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? கோபமாக கத்தினான்.

ஆமாம், எனக்கு பைத்தியம் தான் பிடித்திருக்கிறது. இங்கிருந்து போ…போய் விடு என்று கதறி கதறி அழுதாள். அவளை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே இருந்தான் ராஜா. ரொம்ப நேரம் அழுது விட்டு,பின் எழுந்து மெதுவாக நடந்தாள்.

                           ” உன்னுடைய

                                  வார்த்தைகள்

                            என்னுள்

                                  வடுவாகி சென்றதே!

                           என்னுடைய

                                  கண்ணீர் துளிகள்

                            உன்னையே

                                    நினைக்க தோன்றுதே!

                            என் மனம்

                                    கேளாது

                            உயிரை

                                    உறைய வைக்கிறதே!

                            என் உணர்வுகளை

                                     நீ அறியாததேனடா!”

ராஜா வண்டியை எடுத்து வந்து அவளிடம் ஏறு…கூற, எதுவும் கூறாமல் ஏறி அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அழுது கொண்டே அவன் மீது சாய்ந்து தூங்கி விட்டாள். அவனுக்குள் அவள் மீது உணர்வுகள் வர ஆரம்பித்தது அவனை அறியாமலே. விடுதிக்கு வந்தவுடன் வண்டி சத்தத்தை அவன் எழுப்பிக் கொண்டிருக்க,எல்லா பெண்களும் எட்டி பார்த்தனர்.

கவிதாவின் அறை பெண்களும்,வார்டனும் மட்டும் கீழே வர,அவர்கள் அவளை எழுப்ப, அவள் இறங்கி அங்கேயே ஓரமாக அமர்ந்து விட்டாள்.

அவளால் எழ முடியவில்லை. மேடம் எப்படி இவளை மூன்றாவது மாடிக்கு அழைத்து செல்வது? அவளால் நிற்க முடியவில்லை என்றவுடன் அவன் கீழே இறங்கினான். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று வார்டன் கூற, அந்த பெண்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை. அவர் வரட்டும் என்றனர்.

அறையின் நம்பரை கூறியவுடன் கவிதாவை ராஜா தூக்கிக் கொண்டு அறையினுள் வந்து அவளை படுக்க வைத்தான். அவள் சோர்வுடன்

அவனை பார்க்க, அவன் அங்கே நிறைய மேக் அப் பொருட்கள் இருந்ததை பார்க்க, அது அவளுடையது தான் ஒருத்தி சொல்ல,

அடியேய்! இவரிடம் எதுக்குடி சொல்ற? மற்றவள் அவளை சுரண்ட, அவனோ கீழிறங்கி வந்து வார்டனிடம். அவளை பார்த்துக் கொள்ளுங்கள். பெரிய பிரச்சனையே செய்து விட்டாள். அவளை மருத்துவரிடம் காண்பித்தால் நல்லது அவன் கூற,வார்டன் கொதித்தே விட்டார்.

அவளை பைத்தியம் என்று கூறுகிறாயா? பாசத்திற்காக ஏங்கும் பைத்தியம் தான். அவளை பத்து வயதிலிருந்து பார்க்கிறேன். அவளுடைய பெற்றோர்கள் யார் என்று எனக்கும் தெரியாது. அவளுக்கும் தெரியாது.

அப்பொழுது தான் இந்த வேலைக்கே வந்தேன். அவளிடம் நிறைய திறமைகள் உள்ளது. அவளால் படித்து கொண்டு சம்பாதிக்கவும் முடியும். அவளுக்கு வெளியுலகம் பழக்கமில்லாததால் தனியாக வெளியே செல்ல கூட பயப்படுவாள். பள்ளி, கல்லூரிக்கு செல்ல மட்டும் தான் பழக்கப்படுத்தினேன். யாரிடமும் அதட்டி பேசவும் மாட்டாள். யாரும் அவளை காயப்படுத்துவது போல் நடந்து கொண்டால் அவர்களிடம் விலகி தான் இருப்பாள்.

அப்படியென்றால் பாலாவிடம் ஏன் அவ்வாறு நடந்து கொண்டாள்?

என்ன செய்தால்?

அவன் நடந்த அனைத்தையும் கூற, இதற்கு முன் நடந்ததை நான் கூறுகிறேன் என்று பாலா விசாரிக்க வந்ததையும், அவளது கையை பிடித்து சாட்சி கூற சொன்னதை அவர்கள் பெரியதாக கூற,

இதில் என்ன உள்ளது? ராஜா கேட்க,

யாருமில்லாத தனிமையில் வாழ்க்கையை ஓட்டும் பெண்ணின் கையை ஒரு ஆடவன் பிடித்து, அவளை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினால் அவளுக்கு அவனை பிடிப்பது இயல்பு தானே! எனக்கு புரிகிறது உங்கள் தோழன் அவளை சாட்சிக்காக மட்டும் தான் அவ்வாறு பேசி இருப்பார் என்று. அவள் தன் மீதுள்ள அக்கறையில் தான் பேசுகிறார் என்று தவறாக நினைத்து காதல் வயப்பட்டு விட்டாள். அவர் தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதனால் தான் வீடியோ அனுப்பினாள். அதனால் அவரோ மிகவும் கடுமையாக பேசவே, கடைசியாக பேசி தான் பார்ப்போம் என்று கிளம்பினாள். ஆனால் இந்த அளவிற்கு போவாள் என்று நான் நினைக்கவில்லை கண்கலங்க,

அவளுக்கு பாட்டிற்கு ஏற்ற நளினமாக ஆடவும் செய்வாள். அவள் நன்றாக படிப்பதால் நிறைய உதவிகள் கூட பணமாக தருவார்கள். அதை வைத்து தான் படிக்கிறாள். பள்ளி, கல்லூரி நடத்துபவர்கள் அவள் முதலிடத்திலே இருந்தால் விடுதிக்கான செலவை அவர்களே ஏற்று கொள்வதாக கூற, இன்னும் கல்லூரியில் அவள் தான் முதலிடத்தில் இருக்கிறாள்.இன்னும் மூன்று மாதத்தில் அவளது படிப்பு முடிந்துவிடும். அதற்கு பின் எப்படியும் அவள் இந்த உலகத்தை எதிர்நோக்க வேண்டும். அப்பொழுது என்ன செய்ய போகிறாளோ? தெரியவில்லை அவர்கள் புலம்ப,

இதை எதற்காக சொன்னேன் என்றால்,என்னிடம் கூறியது போல் அவளிடம் பேசி விடாதீர்கள் கூற, அவன் சரி என்று தலையசைத்து விட்டு சென்றான்.

ராஜா வார்டன் கூறியதை நினைத்துக் கொண்டே வண்டியில் சென்றான்.பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே அவளுக்கென்று நண்பர்கள் என்று யாருமில்லை. கல்லூரியில் தான் இருக்கிறார்கள் என்று கூறினாள்.

மற்ற  விவரத்தை கூட  சொல்லவில்லை வருத்ததோடு கூறினார்.

அவள் பாலாவின் மீதுள்ள காதலிலிருந்து விடுபட கஷ்டப்படுவாளோ! ஏதேனும் தவறான முடிவெடுத்து விடுவாளோ! எண்ணி வண்டியை விடுதிக்கே திருப்ப, அனைவரது அறையிலும் விளக்குகள் அணைந்திருப்பது தெரியவே, மீண்டும் வீட்டிற்கே சென்றான். உள்ளே சென்றவுடன் சோபாவில் அமர்ந்து கவிதாவை பற்றி யோசித்துக் கொண்டிருக்க,

எங்கே தான் சென்றாய்?சொல்லி விட்டு சென்றிருக்கலாம்? அம்மா அவனிடம் பேச,பதில் கூறாமலிருக்கவே

போனை ரொம்ப நேரமாக கையில் வைத்திருக்கிறாள். அவளையாவது என்னவென்று கேளுடா? அம்மா கூற

அதற்கும் அவன் பதில் கூறவில்லை.

அடியேய் மஞ்சு, என்னடி செய்கிறாய்? அவனும் வந்து விட்டான் கூற,

வாரேன்.கொஞ்சம் பொறும்மா..மஞ்சு கத்தி விட்டு, இன்னும் ஒரு முறை மட்டும் போன் செய்து விட்டு கூறுங்கடி. அவள் இல்லாமல் முடிப்பது மிகவும் கடினம்.பேசி விட்டு போனை துண்டித்தாள்.

அடியேய்,…அம்மா மீண்டும் கத்த,

அட, இரும்மா வருகிறேன். கல்லூரிக்கு சென்றால் மேடம் தொல்லை தாங்கவில்லை,வீட்டிற்கு வந்தால் நீயும் ஏன்மா,…பாடத்தை பற்றி தான் பேசி கொண்டிருந்தோம் புலம்பிக் கொண்டே வந்த மஞ்சு, ராஜா அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு, பதுங்கி பதுங்கி அவனை உற்று நோக்க,

என்ன? அவன் புருவத்தை உயர்த்த, ஒன்றுமில்லையே!…கூறி விட்டு அவனை விட்டு இரண்டு அடி தள்ளி வந்து,

என்னம்மா, தடியன் அமைதியாக இருக்கிறான் சத்தமாக அவனை வம்பிற்கு இழுக்க, அவன் கண்டு கொள்ளவில்லை.

அம்மா! இவனுக்கு என்னமா ஆயிற்று? இந்நேரம் இவன் என்னை அடிக்க வந்திருக்கணுமே?

எனக்கும் பதிலே கூறவில்லைடி.

ஆமாம். துரை எப்படி பேசுவார்? அவரை தான் அவனிற்கு குணமாகும் வரை வேலைக்கு செல்ல தேவையில்லை என்றும், சஸ்பன்சன்  என்றும் கூறி விட்டார்களே?

அய்யோ! திரும்பவும் அதை இழுக்காதீர்கள். அவனும் கோபப்பட போகிறான் அம்மா கூற,

நான் அவனை பார்க்க செல்கிறேன். சாப்பிட எதுவும் வேண்டாம். மஞ்சுவை பார்த்து, நாளை கல்லூரியில் உன்னை விட்டு விடுவேன். தயாராக இரு.

நீ என் அண்ணனா! இருக்காது. மஞ்சு கனவு காணாதே! அதற்கு வாய்ப்பில்லை அவள் கூற, அவளருகே வந்து அவளது கையை கிள்ளி விட்டு, கனவல்ல நிஜம் தான் என்று சிரித்தான்.

ஆஆஆ…. என்று கத்தியவள், அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, மற்றவர்களும் உறைந்த படி நின்றனர். அவன் வண்டியை எடுத்தான்.

ரேணுவை தூக்கி வந்த பாலாவோ, அவளது அறையில் படுக்க வைத்து விட்டு வர, அவளது அத்தை அவளுடன் இருந்து கவனிக்க ஆரம்பித்தார். பாலா கோபமாக வெளியே வர, அவசரப்படாதீர்கள்! மாமா தடுக்க, அவரையும் ஒரு பார்வை பார்த்தான்.

எனக்கு புரிகிறது? இப்பொழுது சென்றால் பிரச்சனை அதிகமாகி விடும். இனி அந்த பெண், உங்களை தொந்தரவு செய்வாள் என்று தோன்றவில்லை. பிறகு பார்க்கலாம் அவனை அமைதிபடுத்த, யாரும் அன்று சரியாக தூங்கவில்லை.மணி நான்கை தாண்டியதும் ரேணு விழித்தாள்.

அனைவரும் அவளிடம் பேசினர். பாலா தயங்கிக் கொண்டே வெளியே நிற்க, அவளது அத்தை அவனை பார்த்தார். உள்ளே செல்ல சொல்கிறார் என்று புரிந்து உள்ளே சென்றான். ரேணு நன்றாகவே எழுந்து உட்கார்ந்திருந்தாள். தயங்கிக் கொண்டே அவன் நகராமல் நிற்க, மற்றவர்கள் கீழே சென்றனர்.