அத்தியாயம் 11
பாலாவும், பார்வதியம்மாவும் மருத்துவமனை வந்தனர். ஓரிடத்தில் ரேணு நின்று கொண்டிருந்தாள். பாலாவை பார்த்து விட்டு, வெளியே சென்று உதவி கேட்போமா? எண்ணம் தோன்ற, அது சரிவராது என்று பாலாவிற்கு போன் செய்து, சீக்கிரம் பின்னே பாருங்கள் கூற, அவன் பார்த்து சிரிக்க ஆரம்பிக்க,
டேய், உனக்கு என்ன ஆயிற்று? எல்லாரும் உன்னை பார்க்கிறார்கள் பார்வதியம்மா கேட்க,
அவன் ரேணு பக்கம் கையை காட்ட, பார்வதியம்மாவும் சிரித்துக் கொண்டே, இங்கே என்னம்மா செய்கிறாய்?
முதலில் அந்த அறையை விட்டு வெளியே வாம்மா. அந்தம்மா யாரு? உன்னை எதற்காக திட்டுகிறார்கள்?
ரகு வெளியே வந்திருப்பான் போல, மறைந்து கொள்ள வேறு இடமில்லாமல் இந்த அறையினுள் நுழைந்து விட்டேன். உள்ளே சென்றதிலிருந்து அந்த அம்மா திட்டுகிறார்கள் கூறியவுடன், அவன் மேலும் சிரிக்க, ரேணு கோபமாக வெளியே வந்தாள்.
ஏய், ரகு…ரகு….என்று பாலா கூறியவுடன், ஒரு நாற்காலியின் பின் மறைந்து கொண்டு எட்டி பார்த்தால், அங்கே யாருமில்லை.
கோபமாக அவனை பார்த்து ரேணு கையை ஓங்க, அவன் சிரிக்க அருகே பார்வதியம்மாவை பார்த்து அமைதியானாள்.
பாலாவை பார்த்து முறைத்துக் கொண்டே, உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரிகிறது? மது உள்ளே ரகுஅண்ணா வீட்டாருடன் இருக்கிறாள். அவளை அழைத்து வாருங்கள் சார்.
என்னது வீட்டாரா? அம்மா கேட்க
ரகு, பாப்பா, ராஜம்மா….
பாலாவோ அவளை பார்த்து சிரிக்க,
சார், இது சிரிப்பதற்கான நேரமில்லை. சீரியசான நேரம்.
அம்மா, சீக்கிரம் மருத்துவரை கூப்பிடுங்கள். மேடம் சீரியசாக இருக்கிறார்களாம். அவள் மேலும் முறைக்க,
சும்மா இருடா, மதுவை மட்டும் உள்ளே சென்று அழைத்து வா. எப்படியாவது அவர்களை சமாளி.
ரேணுவை பார்த்து சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான் பாலா.
பாலா, ஸ்வேதாவின் அறைக்குள் நுழைய, ஆன்ட்டியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ரகு குழந்தைகள் இருவரையும் வெளியே அழைத்து வருவதற்கும் பாலா உள்ளே நுழைந்தான்.
மதுவை ரகுவிடம் வாங்கி விட்டு, ஸ்வேதாவின் தோழி அவசரமாக வெளியே கிளம்பணுமாம். மதுவை அழைத்து வரச் சொன்னார்கள். நீங்கள் இங்கேயே இருங்கள். மதுவை தூக்கிக் கொண்டு கிளம்பினான்.
இவர் என் மீது கோபமாக தானே பேசினார். இப்பொழுது தன்மையாக நடந்து கொள்கிறார் ரகு யோசிக்க,
ஆன்ட்டி, அங்கிள், ரியா, பாட்டி “பை பை” கூறினாள் மது.
பை என்று அவளை அனுப்பி வைத்தனர்.
பாலா, ரேணுவிடம் வந்து மதுவை அவளிடம் கொடுத்து விட்டு,
ஒரு வழியாக தப்பித்து விட்டாய் போல என்றான் குறுஞ்சிரிப்புடன்.
அவனை முறைத்தவாறே மதுவை தூக்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
ஸ்வேதாவின் அறைக்கு பாலாவும், பார்வதியம்மாவும் வந்தனர். ரகு ரியாவுடன் வெளியே அமர்ந்திருந்தான். ஸ்வேதாவிற்கு ராஜம்மா சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் ஸ்வேதாவையும், அம்மாவையும் பார்த்துக் கொள்கிறீர்களா? விசாரணை வேலை உள்ளது.
பார்த்துக் கொள்கிறேன் ரகு கூறினான்.
உங்களுக்கு யாரேனும் பகையாளிகள் உள்ளார்களா?
மித்து டைரியில் எழுதி இருந்ததையும், அவன் ராஜம்மாவிடம் கூறிய அனைத்தையும் பாலாவிடம் கூறினான்.
அப்படியென்றால் உங்கள் மனைவியை யாரோ கொலை செய்து இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்களா?
அன்று முழுவதும் அவள் வெளியே வரவில்லை. போன் பேசி விட்டு யாரையோ பார்க்க வெளியே கார் எடுத்து சென்றாள். பிரேக் வயர் அறுந்து விபத்து ஏற்பட்டதாக கூறினார்கள்.
யார் கூறியது?
என்னுடைய அம்மா…
உங்கள் மனைவிக்கு வேறு யாருடனும் பழக்கம் இருந்ததா?
சினமுடன் கண்டிப்பாக இல்லை.
எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகிறீர்கள்?
அவளுக்கு, நானும் அவளுடைய தோழியும் தான் நல்ல பழக்கம். வேறு யாருடனும் தேவையில்லாமல் பேசமாட்டாள்.
அந்த போன் உங்களுடையதா? தோழியுடையதா?
என்னுடையது இல்லை.
தோழியுடையதா?
தெரியவில்லையே? யோசித்தவன், ரேணுவிற்கு போன் செய்து, மித்து இறந்த அன்று நீ அவளுக்கு போன் செய்தாயா?
இல்லையே, அன்று பாப்பாவிற்கு உடல் சரியில்லை என்பதால் மருத்துவமனைக்கு சென்றோம்.
என்ன ஆயிற்று அண்ணா? எதற்காக? அவள் கேட்க,
சும்மா தான் கேட்டேன் போனை துண்டித்தான்.
ரேணுவும் போடவில்லையென்றால் யாராக இருக்கும்?
அந்த போன் உங்களிடம் இருக்கிறதா?
ம்…..இருக்கிறது வீட்டில்,
அதை பார்த்தால் தெரிந்து விடும். அதை விடுங்கள். நாளை பார்ப்போம்.
ஸ்வேதா உடனிருக்கும் போது என்ன நடந்தது?
ரகு நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான். நீங்கள் மனைவி இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஒரு கம்பிளைண்ட் எழுதி கொடுங்கள். உங்களது பாதுகாப்பிற்கு காவலர்களை வீட்டிற்கு அனுப்புகிறேன்.
எங்களை கொல்ல நினைப்பவன் அருகே தான் இருப்பது போல் தெரிகிறது. மறைமுகமாகவே விசாரிப்போம்.
நீங்கள் கூறுவதும் சரி என்று தான் தோன்றுகிறது. நீங்கள் இங்கேயே இருங்கள். நான் வந்து விடுகிறேன் என்று பாலா கிளம்பினான்.
பாலா, ரகுவின் வீட்டருகே சென்றான். ஆட்டோ ஸ்டாண்டு சென்று அங்கே இருப்பவர்களிடம் இரவு ஏதேனும் பிரச்சனை நடந்ததா?
ஒருவர் மட்டும் முன் வந்து ஒரு பொண்ணை இரத்த வெள்ளத்தில் ஒருவர் தூக்கி வந்தார். என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இவர்கள் சண்டையிட்ட இடத்தில் கேமரா ஒன்று இருந்தது. அவன் காலடியில் ஏதோ தட்டியது. மேக்கப் பொருட்கள் அங்கங்கு சிதறி கிடந்தது. அதனை எடுத்து ஒரு கவரில் போட்டான். பின் மருத்துவமனை வந்து ரகுவை கிளம்பச் சொல்லி, ஸ்வேதாவிடம் பேசினான்.
ரகு உன்னிடம் என்ன பேசினான்?
அவர் மிகவும் வருத்தப்பட்டார் அண்ணா. அவரால் தான் கஷ்டப்படுகிறேனாம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு முதலில் கிடைத்த உறவு ரேணு. அடுத்தது அவரு தான். அவர் இப்பொழுது அவராகவே இல்லை. அவர் தெளிவாகவும், சுறுசுறுப்பாகவும், அனைவரையும் கவரும் வண்ணம் பேசுவார். அதை பார்த்து தான் எனக்கு அவரை பிடித்து விட்டது.அவருடைய வசதியை பார்த்து தான் நான் ஒதுங்கி இருந்தேன். ஆனாலும் அவரை மறக்க முடியாமல் தவித்தேன். அதுவும் வெளிச்சமாகி வெளியே வந்து தான் அவருடையவளானேன். என் வாழ்வும் பிரகாசித்தது. திடீரென புயல் அடித்தாற் போல் வாழ்வே முடிந்தது. சர்ஜரியில் கஷ்டப்பட்டதை விட அவர் அவராக இல்லை என்பது தான் இதயம் வெடிப்பது போல் உள்ளது அழுபவளை பாலா சமாதானப்படுத்தினான்.
ரேணுவும் இப்பொழுது மாறி தான் விட்டாள். முன்பு அவ்வளவு சந்தோசமாக இருப்பாள். மதுவை வளர்க்கும் பொறுப்பு மட்டும் தான் இப்பொழுது உள்ளது. மற்றபடி அத்தை, மாமாவிற்காக சந்தோசமாக இருப்பது போல் நடிக்கிறாள்.
ஏன் இவ்வாறு கூறுகிறாய்?
எனக்கு உதவுகிறேன் என்று என்னை விடுதியில் தாக்க வந்தவர்களை விசாரிக்க சென்ற இடத்தில் இருந்த அவளை ஒருவன் சுற்றி சுற்றி வந்து காதலித்தான். அவள் முதலில் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அவளை பின் தொடர்ந்தான். கொஞ்ச நாளில் அவளையும் காதலிக்க வைத்து விட்டான். நன்றாக தான் போவது போல் இருந்தது. ரகுவும் அவளை அடிக்கடி கிண்டலடித்துக் கொண்டிருப்பார்.
நாட்கள் நகர்ந்தது. அப்பொழுது அவள் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் வேலை முடிந்து வெளியே வந்த சமயத்தில் கார் ஒன்று வேகமாக வந்து சேற்றை அவள் மீது வாரியடித்து சென்றது. அந்நேரத்தில் அவளது காதலன், அவளை விடுதியில் இறக்கி விடுகிறேன் என்று அவளை காரில் ஏற்றி நல்லவன் போல் குடிக்க நீரும் கொடுத்தான். அவள் குடித்து விட்டு மயங்க, அவளை ஹோட்டலுக்கு இழுத்துச் சென்று கட்டிலில் போட்டு விட்டு, போனில் அவனது நண்பர்களிடம், இது தான் சரியான வாய்ப்பு சீக்கிரம் வாருங்கள். அவளை பிடித்து வைத்திருக்கிறேன் என்று அவ்வறைக்கு வரச் சொன்னான்.
மயங்கிய நிலையில் அவளுக்கு இது கேட்கவே, அவளை அவளே கன்னத்தில் அடித்து அடித்து ஒருவழியாக மயக்கம் தெளிந்து விழித்தாள். சரியாக அனைவரும் உள்ளே வரும் சத்தம் கேட்டது.
ஒரு நிமிடம் யோசித்தவள், அங்கே இருந்த பூ பாட்டில்களை உடைத்து தன்னுடைய துப்பட்டாவில் திணித்து சரமாரியாக தாக்க ஆரம்பித்தாள். ஆனால் சுற்றி வளைத்து அவளை பிடித்தனர். மனம் சோர்வடையாமல் கையில் இருந்த பேனாவை வைத்து தாக்கினாள். வலி தாங்காமல் அவளை விடவே, கண்ணாடி பாட்டிலை எடுத்து ஒருவனது கையை கிழிக்க, மற்றவர்கள் பயந்து ஓடினர். காதலித்தவனோ அப்பொழுதும் விடாமல் இருக்கவே அவனையும் பாட்டிலால் தலையை அடித்து விட்டு பேனாவால் கழுத்தில் குத்தி விட்டு ஓடினாள்.
அவனுடைய நண்பர்கள் அவள் பக்கம் அனைத்தையும் மாற்ற,காதலன் ரேணுவை மிரட்டுவதற்காக வைத்திருந்த கேமரா மூலம் பதிவாகி உண்மை வெளிவர, போலீஸ் அனைவரையும் பிடித்தனர். அவன் பணக்காரன் என்பதால் வெளிவர வாய்ப்புள்ளது என்று ரகு தான் அவனை வெளிவராது பார்த்துக் கொண்டார்.
அதிலிருந்து ஆண்கள் பக்கம் வந்தாலே அவளுக்கு பதற்றம், நடுக்கம், மயக்கம் கூட வரும். அவளுடைய மனது மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அந்த கஷ்டமான சூழலில் தான், மதுவை பார்த்து வளர்க்க ஆரம்பித்தாள். அத்தைக்கு பெரிதும் விருப்பமில்லை என்றாலும் அவளுக்காக ஒத்துக் கொண்டார். அவள் கல்யாணத்தையே வெறுக்கிறாள். என் வாழ்க்கையை பார்த்து, தன் வாழ்க்கையில் மதுவை தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று முடிவெடுத்து விட்டாள்.
அனைத்தையும் கேட்ட பாலாவின் முகம் வாடியது.
ரகுவிடமும், மாமாவிடமும் மட்டும் தான் சாதாரணமாக பேசுவாள். உங்களை பற்றி நல்லவிதமாக கூறி இருக்கிறேன். உங்களிடமும் பழகுவாள் என்று தோன்றுகிறது.
இருவரும் எப்படி எதுவும் நடக்காதது போல் இருக்கிறீர்களோ!
அதற்காக அழுது கொண்டே இருக்க முடியுமா? என்ன?
அவனுக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை?
ஐந்து ஆண்டுகள் என்று நினைக்கிறேன்.
என்ன சொல்கிறாய்? ரேணு மனதளவில் மட்டும் தானே பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அதற்கு இரண்டாண்டுகளுக்கு குறைவான தண்டனை தான் கொடுப்பார்கள்.
அப்படியென்றால் அவன் வெளியே தான் இருப்பானா? ஸ்வேதா பதட்டமாக,
கண்டிப்பாக வெளியே வந்திருப்பான். அவன் ரேணுவை தேடினாலும் பரவாயில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பயப்படாதே! அவளிடம் இதை பற்றி கூறாதே? பாலா கூற,
அண்ணா இது எனக்காகவா? உனக்காகவா?
பாலா அதிர்ச்சியுடன் ஸ்வேதாவை பார்த்து விட்டு சிரித்தான்.
டேய், அண்ணா அவள் முன் போலில்லை. கோபக்காரியாக மாறி விட்டாள். “ஆல் தீ பெஸ்ட்”. அவன் சிரித்துக் கொண்டே வெளியே சென்றான்.
மருத்துவரிடம் சென்று ஸ்வேதாவின் உடல்நிலையை பற்றி விசாரித்து விட்டு அவனது அம்மாவிடம் வந்து மருத்துவர் கூறியதையும்,ரேணுவை பற்றியும் கூறினான்.
அட, பாவம்பா அந்த பொண்ணு. அதனால் தான் கல்யாணத்தை பற்றி பேசிய போது, முடியாது என்று ஆணித்தனமாக கூறினால் போல.
கல்யாணத்தை பற்றி அவளிடம் எதற்காக பேசினீர்கள்?
என் மகனிற்கு தான் அந்த பெண்ணை பிடித்து விட்டதே? அதனால் தான் சும்மா கேட்டு பார்த்தேன்.
அதெல்லாம் ஒன்றுமில்லை அம்மா.
உன்னை பார்க்கும் போதே நன்றாக தெரிகிறதே!
சிரித்து மழுப்பிக் கொண்டு, ரகு வீட்டிற்கு சென்று ஸ்வேதாவுடைய பையை எடுத்துக் கொண்டு, மதிய சாப்பாட்டை வாங்கி வந்து கொடுத்து விட்டு வேலைக்கு செல்கிறேன். அம்மாவும் சிரித்துக் கொண்டே சரி என்றார்.
பாலா வீட்டினுள் நுழைய ரேணு வேகமாக ஓடி வந்தாள். பாலா வருவதை கவனிக்காத ரேணு, திரும்பி மதுவை பார்த்துக் கொண்டே வந்து பாலா மீது மோத, கீழே விழாமல் அவன் பிடிக்க, இருவரும் பார்த்துக் கொண்டிருக்க நினைவு வந்தது பாலாவிற்கு. ரேணுவிற்கு ஏதேனும் ஆகி விடுமோ நினைத்து கீழே விட்டான்.
அய்யோ அம்மா! வலிக்குதே கத்தினாள்.
தெரியாமல் கீழே விட்டேன் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டே ஓரமாக சிரிக்க,
சிரிக்காதீர்கள் சார். கோபமாக அவள், நீங்கள் தான் பிடித்தீர்களே! ஏன் கீழே விட்டீர்கள்?
அப்புறம் சிந்தித்து விட்டு, அய்யோ அத்தை கத்திக் கொண்டே எழ,
காலில் சுளுக்கு பிடித்து விட்டது. முடியாமல் தத்தி தத்தி நடக்க,
ஏன்டீ, கத்திக் கொண்டே இருக்கிறீர்கள்? மகா அத்தை கேட்டுக் கொண்டே வர,
ரேணு பாலாவின் அருகே சென்று, அத்தை இங்கே பாருங்களேன் என்று அவனது கையை அவள் கண்ணை மூடிக் கொண்டு தொட, அவளுக்கு ஏதும் செய்யவில்லை என்று பார்த்த அத்தையின் கண்ணில் நீர் கோர்க்க, மேலும் அவனது கன்னத்தையும் தொட்டாள். அவனோ அசையாமல் அவளையே பார்க்க, ரேணு அதை கூட அறியாது அவனது மார்பினை தொட வர, அத்தை வேகமாக வந்து அவளது தலையில் ஒரு குட்டு வைத்து,
என்னடி பண்ற? எனக்கு புரிகிறது. அதற்காக இப்படியா செய்வ?
மன்னித்து விடுங்கள் தம்பி.
அவள் மீதுள்ள மயக்கம் தெளிந்து, அவளது கால்…
காலிற்கு என்ன?
முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு, சுளுக்கு பிடித்து விட்டது என்றாள். அவனோ அவளை ரசிக்க அதை பார்த்த அத்தை, அம்மா சொன்னாங்க. உட்காருங்கள் தம்பி.
மதுவோ கையில் ஒரு போட்டோவை வைத்துக் கொண்டு ஆட்டி ஆட்டி ரேணுவை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
அத்தை அவளை கொடுக்க சொல்லுங்கள் மதுவுடன் சேர்ந்து குழந்தை போல் பேச,
அடியே, சும்மா இருடி அத்தை கூற, பாலா சிரித்தான்.
இவளுக்கு மருந்து போட்டு விட்டு வருகிறேன்.
அவசரமில்லை மெதுவாக வாருங்கள்.
ரேணு, அத்தையின் தோள் மேல் கை போட்டுக் கொண்டு அவளது அறைக்கு செல்ல,
மது குட்டி, இங்கே வா? கூப்பிட்டான் பாலா.
இது என்ன போட்டோ? இது யாரு நீயா?
மது சிரித்துக் கொண்டே, இது நானில்லை ரேணுக்கா தான். அக்காவிடம் இதை வாங்க தான் ஓடி வந்தேன். அக்கா விழுந்து விட்டாள் சோகமாக கூற,
என்னுடைய டெடிகுட்டி இதற்கெல்லாமா வருத்தப்படுவது? உன்னுடைய அக்கா வலிமையானவள். சீக்கிரம் சரியாகி விடுவாள். நான் மேஜிக் செய்து உன்னுடைய அக்காவை சரி செய்து விடுவேன்.
உங்களுக்கு மேஜிக் தெரியுமா?
ம்ம்…நன்றாகவே தெரியும்.
செய்து காட்டுங்களேன்.
செய்யலாமே! ஆனால் இன்று இல்லை. இன்னொரு நாள் செய்து காட்டுகிறேன்.
உங்களை நான் எப்படி கூப்பிடுவது?
பாலாவென்று கூப்பிடு.
பெயரை சொல்லி அழைத்தால் அக்கா திட்டுவாள்.
அவள் ஏதும் கூறாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.
பாலா நீயாவது என்னுடன் விளையாட வருவாயா?.
உன்னுடைய அக்காவுடன் விளையாடலாமே?
அவள் என்னுடன் விளையாட வர மாட்டாள். அவள் வேலை முடிந்தவுடன், அவளது அறைக்கு சென்று விடுவாள்.
நீ எப்பொழுது விளையாட நினைக்கிறாயோ, அப்பொழுது ரேணுவுடைய போனில் என்னை கூப்பிடு, உடனே வந்து விடுவேன்.
மது சிரித்துக் கொண்டே, போன் செய்தவுடன் வந்து விட வேண்டும். சரியா?
கண்டிப்பாக வந்து விடுவேன்.
பாலா, நீ என்னுடனே இருப்பாயா? சரியாக மகாஅத்தை கீழே வந்து, இருவரும் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?
அத்தை, பாலா எப்பொழுதும் நம்முடனே இருக்கட்டுமா? மது கேட்க,
அதிர்ச்சியுடன், நீ என்ன கூறுகிறாய்?
உன்னுடைய அக்கா ஒத்துக் கொண்டால், நாம் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கலாம் பாலா கூற,
என்ன தம்பி சொல்கிறீர்கள்?
ஆமாம் ஆன்ட்டி. எனக்கு ரேணுவை பிடித்திருக்கிறது. நான் அவளை காதலிக்கிறேன்.
மகா அத்தை என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருக்க,
மது பாலாவிடம், பாலா என்னை வெளியே அழைத்து செல்கிறாயா?
ஏய் மது, என்ன அவரை பெயர் சொல்லி அழைக்கிறாய்? சத்தமிட,
நான் தான் அவ்வாறு அழைக்க சொன்னேன் பாலா அத்தையிடம் கூற,
இல்லை தம்பி இருந்தாலும் என்று அத்தை யோசிக்க,
அதனால் ஒன்றுமில்லை. அவள் அவ்வாறே அழைக்கட்டும் என்றான் கனிவாக.
அவரும் எதுவும் கூறாமலிருக்க, மது பாலா மீது தாவிக் கொண்டாள்.
மது பாலாவுடன் நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ரேணு என்ன செய்வாலோ என்று மனதினுள் வருந்தினார்.
வாருங்கள் சாப்பிடலாம் என்று பாலாவிற்கு சாப்பாடு பரிமாறினார்
சாப்பிட்டுக் கொண்டே பாலா ரேணுவை பற்றி விசாரித்தான். சுளுக்கு தான் தம்பி, சீக்கிரம் சரியாகி விடும்.
என்னை மன்னித்து விடுங்கள் ஆன்ட்டி. ரேணு கீழே விழாமல் பிடித்திருக்கலாம். எனக்கு அவளுடைய பிரச்சனை தெரியும். அதனால் தான் விட்டு விட்டேன்.
உங்களுக்கு எப்படி தெரியும்?
ஸ்வேதா தான் கூறினாள். அதனால் அவளை தவறாக எண்ணி விடாதீர்கள். பிரச்சனை நேரத்தில் உதவுவேன் என்று தான் கூறி இருப்பாள்.
எனக்கு ஸ்வேதாவை பற்றி நன்றாகவே தெரியும். காரணமில்லாமல் அவள் எதையும் செய்ய மாட்டாள். ரேணுவை நினைத்தால் தான் கவலையாக உள்ளது. அவள் எப்பொழுது தான் சரியாவாலோ?
கவலைப்படாதீர்கள் ஆன்ட்டி. அவளுக்கு ஆண்கள் மீதுள்ள வெறுப்பு, பயத்தை நீக்கி விட்டால், பழைய நிலைக்கு வந்து விடுவாள்.
சரி, ரசம் ஊற்றவா?
ம்ம்…. என்றான்.
சாப்பிட்டு முடித்தவுடன் பாலா, நான் ரேணுவை பார்க்கலாமா?
பாருங்கள்.
ரேணுவின் அறைக்கு சென்றான். அங்கங்கு நட்சத்திரங்கள் கண்ணில் பட, சிறுகுழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்தாள். அவளருகே அமர்ந்து, அவளது தலையை கோதினான். ரேணு உன்னுடைய பிரச்சனை சரியாகும் வரை உன்னுடனே இருப்பேன். என்னுடைய காதல் மொட்டாகவே உள்ளது. அதனை மலராக விரித்து அழகான மணத்தை பரப்புவேன் என்று அவளை பார்த்துக் கொண்டே மனதில் நினைத்தான்.
“மொட்டாகி
மலராகி
காதல் மணம்
எங்கும் பரவி
கிடக்க
மனமெங்கும்
பூஞ்சோலையாக
என் காதல் வலையில்
பின்னிபிணைந்து இருக்க
நீயும்
காதல் செய்வாயாக
என்னை!”
பின் அறைக்கு வெளியே வந்து, டெடி அக்காவை நன்றாக பார்த்துக் கொள் கூறி விட்டு அகன்றான்.