7.1:
அடுத்த நாள் விடிந்தவுடன், இன்று எப்படியாவது ஷிவானியை பார்க்கணும் தோன்றியவுடனே அவசரமாக திட்டம் போட்டான்.
ஷிவேந்தர் குணாவை அழைத்து “டேய் குணா ! ரெண்டு மணி போல நாம சந்திக்கணும். அர்ஜெண்ட் ” .
“ஆஹா , வேலை நேரத்தில் எங்க டா அழைக்கிறாய் ! முக்கியமான பேஷன்ட் வர சொல்லி இருக்கேனே ! நான் வருவதே கஷ்டம். இதில் அர்ஜெண்ட் ! ஆர்டினரி வேற “
” நீ பிடுங்கிறது தான் தெரியுமே ! அந்த பேஷேன்ட் நாளைக்கு வந்து பல்லை பிடுங்கிக்க சொல்லு! ” என்று பல் மருத்துவரான குணாவை வாரினவுடன் “உனக்கே நியாயமா நண்பா! மாலை எட்டு மணி போல நான் ப்ரீ ! லல்லி கூட ஊரில் இல்லை” .
“அதுக்கு நான் என்ன டா செய்ய ! வேற ஏற்பாடு செய்யலாமா?? எதற்கும் லல்லி சிச்டரிடம் கேட்டுக் கொள்ளலாம். எனக்கு எதுவா இருந்தாலும் ஓகே .. “
குணா “சீ சீ , நீ பட் பாய் . நல்ல பையனையும் கெடுக்கற . உனக்கு இத்தனை நல்ல எண்ணம் ஆகாது மச்சி . நல்லா இருக்கும் குடும்பத்தில் கும்மி அடிக்காத டா! உனக்கு புண்ணியமா போகும் . டேய், எங்க போறோம் என்று சொல்லி தொலை”
குணா கேள்விக்கு பதில் சொல்லமால் ” நல்ல பையனாம் ..கலி முத்தி போச்சு ! நீ ரெடியா இரு .வந்து அழைத்துக் கொண்டு போறேன்” என்று முடித்துக் கொண்டான் .
மருத்துவ கல்லூரிக்குள் வண்டி நுழையும் போதே , குணா சந்தேகமாக “இங்க எதுக்கு டா ! உனக்கு எதாவது வேலையா ? கல்டுரல்ஸ் நடக்கும் போல”
குணா கண்கள் சுழலுவதை கண்டு “சுற்றியும் என்ன பார்வை ! போதும் சைட் அடிச்சது” என்று சிவா சொன்னவுடன் இவனை… என்று பல்லைக் கடித்து “எத்தனை கலர்ஸ் . நான் ஜாலியா சைட் அடிப்பது உனக்கு பொறாமை சொல்லு டா” .
“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு நண்பா! “என்றவுடன் குணா முதுகில் ரெண்டு அடி கொடுத்து “டேய் எருமை ,உன்னிடம் யாரவது கேட்டாங்களா ?”
சிவா சத்தமாக “ஏன் டா, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொல்ல கூடாது சொல்லறியா?”
“சு ,சு. சத்தம் ,சத்தம் . மெதுவா பேசு டா . உன் அருகிலே தான இருக்கேன். விட்டா மைக் வைத்து, ஊரை கூட்டி அழைத்து சொல்லுவ போல. அதை ஏன் டா அப்பப்ப நியாபகப்படுத்தி இம்சை செய்யற ? நீ மட்டும் இப்படி 360 டிகிரி கோணத்தில் கண்களை சுழற்றலாமா?” என்று கண்களை எல்லா பக்கமும் சுழலவிட்டான் .
அதை பார்த்து சிரித்து “நான் பார்ப்பதில் தப்பு இல்லை மச்சி .இதுக்கு தான் சொன்னேன் . ரெண்டு பேரும் ஒன்றாக கல்யாணம் செய்து கொண்டு இருக்கலாம் என்று … நீ கேட்டால் தான ? என் bachelor life சுதந்திரமா என்ஜாய் செய்ய விடு ” என்று ஷிவேந்தர் குணாவை வெருபேற்றினான் .
“ஏன் டா, என் கழுத்தில் தாலி இருக்கா, இல்லை மெட்டி தான் இருக்கா ? எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்று லைசென்ஸ் மாட்டிக் கொண்டா அலைகிறேன் .. யாருக்கு தெரிய போகுது .. நானும் என்ஜாய் செய்யறேன்” என்று பக்கத்தில் வண்டி பார்க் செய்த பெண்ணிடம் தலையை கோதிய படி ஸ்டைலாக “ஹாய்” என்றான் .
அந்த பெண் குணாவை கண்டு கொள்ளாமல் ஷிவேந்தரை பார்த்து சிரித்து ஹாய் சொல்லி வைத்தாள்…
“ஏன் டா, நான் ஹாய் சொன்னா முறைக்கிறா! நீ சொல்லாமலே வழியறா” என்று கடுப்பானான்.
வழி எல்லாம் அவன் எரியும் கடலை, கல்லாக மாறி அவனை தாக்கியது .
“என்னாடா வருத்த கடலை எல்லாம் தீயுது போல” என்று ஷிவேந்தர் கிண்டல் செய்தான்
குணாவை பார்த்து ஒரு பெண் “ சார், உங்க wife ரொம்ப intelligent போல! lucky fellow”. அந்த பெண் அருகில் இருந்த மற்றொரு பெண் குணாவை முறைத்து கடுப்பாக “அப்படியே இருந்தாலும் , அதை நீங்க இப்படி விளம்பரபடுத்தனும் அவசியம் இல்லை” என்று திட்டிவிட்டு நகர்ந்தாள்.
குணா “நான் என்ன டா செய்தேன் ! அந்த பெண்ணிற்கு என் மீது என்ன கோபம் டா! முன்ன பின்ன அவளை நான் பார்த்தது கூட இல்லையே” பாவமாக கூறியவுடன் “விடு டா, அவ புருஷன் உன்னை மாதிரி பெருந்தன்மையா இல்லை போல ! இருந்தாலும் அவங்க சொன்னது போல இது கொஞ்சம் ஓவர் தான் மச்சி ..எனக்கே கோபம் வருது ! அவங்களுக்கு வராம இருக்குமா?”
குணா அழுவது போல “எனக்கு புரியும் படி பேசு டா ! சிவா, என்று பேர் வைத்ததால அடி முடி இல்லாம பேசணுமா என்ன? என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லு ! எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்ற விவரம் அவளுக்கு எப்படி தெரியும் ! நீயும் சொல்லவில்லை . அந்த காலம் மாதிரி எனக்கு தெரியாமல் என் பெண்டாட்டி மெட்டி எதாவது அணிவித்து விட்டாளா” என்று காலை ஆராய்ந்தான் .
“சூ உள்ளே இருந்தாலும் தெரியாதே ! எப்படி டா ?” என்று மண்டை பிய்த்துக் கொண்டு இருந்த போது சிவா புன்னகை மன்னனாய் “உன் டி ஷர்ட் குனிந்து பாரு !” அதில் “I don’t need google, my wife knows everything” இருந்தது ..

அதை பார்த்து, அதிர்ச்சியில் “அடே கிராதகா ..முதலிலே சொல்வதற்கு என்ன டா ..இதை கூட பார்க்காமல் அவசரத்தில் வந்துட்டேனே ! இதை பார்த்து தான் அந்த பெண் காண்டானால.. எல்லாம் உன்னால் தான்… முதலிலே இங்க வரோம் சொல்லி இருக்கலாம் ல ! அதற்கு ஏத்தது போல டிரஸ் செய்து வந்து இருப்பேனே”
“அசிங்கபட்டான் குணா நண்பன்” என்று சிரித்தபடி “இது எல்லாம் கல்யாண வாழ்க்கையில் சகஜம் மச்சி ! நோ பீலிங்க்ஸ்” என்று இல்லாத கண்ணீரை துடைத்து விட்டான்.
குணா நைசாக “டேய் மச்சி, என் ஷர்ட் போட்டுக்கோ டா ! உனக்கு பிடித்த வைட் கலர் டா ! என் செல்லம் ல”
“ஹா, அஸ்கு ,புஸ்கு …உனக்கு எத்தனை நல்ல எண்ணம் மாப்பிள்ளை! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல! ஆனாலும்… இப்படி எல்லாம் போட்டு அலையை மாட்டேன் ! பீதிக்க மாட்டேன்! பெண்களிடம் அசிங்கமா திட்டும் வாங்க மாட்டேன்” .
“எனக்கு மட்டும் ஆசையா ! ஏதோ லல்லியே டிசைன் செய்தேன் பெருமையா சொல்லி போட்டு விட்டா டா ! அவ ஆசையா கொடுக்கும் போது எப்படி தட்ட முடியும் சொல்லு !” என்று வசனம் பேசியவுடன்
“அப்ப அனுபவி. இப்ப வா போகலாம்” ..
“டேய் ,கோட் எதாவது இருக்கா பாரு ! இல்லை பக்கத்தில் போய் எதாவது சர்ட் வாங்கிட்டு வந்திடறேன்” என்று கெஞ்சிய குணாவிடம் “ஒன்றும் வேண்டாம், ஒழுங்கா வா” என்று மிரட்டி அழைத்து சென்றான்.
ஈவென்ட் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு அவனுக்கு வேண்டியதை தெரிந்து கொண்டு சிரித்த படி ஆடிடோரியதிற்குள் நுழைந்தான் .
மருத்துவக் கல்லூரி ஆடிடோரியம் அதிர கர கோஷம் கேட்டுக் கொண்டு இருந்தது . “டேய் நம்ம சச்சி பாடரானா? சொல்லவே இல்லை …”
“சச்சியா? அவன் இங்க எங்க வந்தான் …”
“பின்ன எதுக்கு டா வேலை எல்லாம் விட்டு வந்து இருக்கோம். நம்ம கல்லூரி படிக்கும் போதே இதுக்கு எல்லாம் போனது இல்லை” .
ஷிவேந்தர் முறைத்து “நீ போனது இல்லை சொல்லு டா ! நான், என் கிடார் இல்லாத கச்சேரியா ..! என்னை உன்னுடன் கூட்டு சேர்க்காத!”
“யார் டா பாட போறா”
பொறுத்து இருந்து பார் மகனே ! சிவா மனதில் சரியான நேரத்துக்கு தான் வந்து இருக்கேன் சொல்லி, அடடே, முட்டை தக்காளி எல்லாம் எடுத்துக் கொண்டு வரலையே ! தோணாமல் போச்சே !
பத்து நிமிடத்தில் குணா “சிவா, எனக்கு முக்கியமான கால் வருது ! போயிடு வந்திடறேன் ! இப்பவாது என்ன சொல்லு டா ! கிளம்பறேன்”
“ஹே, கொஞ்சம் பொறு டா ! நம்ம ஷிவானி பாட போறா …ஸ்டேஜ் ஏறிட்டா” .. அதிர்ந்த கரகோஷத்தில் ஷிவேந்தர் கூறியது குணாக்கு கேட்கவில்லை.

யாருக்கு இந்த வரவேற்பு …. ஸ்டேஜில் ஷிவானியை பார்த்து “டேய் இவங்களா ? என்ன டா ! என்ன நடக்குது …” அப்போது பார்த்து மறுபடியும் அவன் போன் அலறியது .. இது ஒன்னு, சரியான நேரத்தில் உயிரை வாங்குது என்று திட்டி ‘நான் உன்னை வந்து கவனிக்கிறேன்’ வெளியேறினான் ..
“உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்துமே மறுபடி விழுகிறேன்
உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்
ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால்
போர்களத்தை உணர்வேன் உயிரில்
என் ஆசை எல்லாம் சேர்த்து
ஓர் கடிதம் வரைகிறேன் !! அன்பே !!
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்
எழுந்துமே மறுபடி விழுகிறேன் ……..”
ஷிவானி டார்லிங் பட பாடலை கண்ணை மூடி பாடும் போது ஹெல்மெட்குள் ஷிவேந்தர் சிரித்த கண்கள் தோன்றி ஒரு நொடி அவளை தடுமாற செய்தது . இது என்ன எண்ணம் என்று வியந்தாள்.
ஒன்ஸ் மோர் ! ஒன்ஸ் மோர் ! என்ற சத்தம் காதை துளைத்தது . அவர்கள் விருப்பத்தை பொய்யாக்காமல் ஷிவானி மறுபடி அனைவரையும் அவ தேன் குரலில் நனையவைத்தாள்.
“நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்- இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலது கைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
அப்பறமாக் குனியலையே! குனியலையே!
கொடக்கம்பி போல மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ள
ஒம்ம முடிஞ்சிருக்கேன்-இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?”
இந்த பாட்டு பாடும் போது ஷிவானி நினைவலையில் ஷிவேந்தர் நடு ரோட்டில் “ I Love you propose “ செய்தது மீண்டும் மீண்டும் வந்து சென்றது. இது என்ன புது இம்சை…

பாடல் பாடி இறங்கி வந்த ஷிவானியை அவள் நண்பர்கள் சுவாதி ,சந்தீப் ,ஹரிஷ் ,ப்ரீதம், ஹரிணி, தனிஷா சூழ்ந்து கொண்டார்கள் . கலக்கிட்ட வனி . உன் பாடலை கேட்ட அந்த காலேஜ் பசங்க முகத்தை பார்க்கணுமே ! கண்டிப்பா பரிசு உனக்கு தான் .
மற்ற கல்லூரி மாணவனும் நல்ல தான் பாடினான் ஹரி .பரிசு யாருக்கு கிடைத்தாலும் சரி. அடுத்து உன்னோட டான்ஸ் பர்பாமான்ஸ் இருக்கு, போகலாம் வா .மணி ஆச்சு .உன்னை காணாமல் உன் சகாக்கள் என்னை திட்டிக் கொண்டு இருப்பாங்க . சுவாதி ,நீயும் ஹரிணியும் ரங்கோலி போட்டிக்கு தேவையானதை செட் செய்திடுங்க .நான் இவன் டான்ஸ் ப்ரோக்ராம் முடிந்தவுடன் வந்திடறேன் .நான் தான் இவன் ஆட்டத்துக்கு ஜட்ஜ் போல என்னை கண்டிப்பா அங்க இருக்கணும் சொல்லறான் .நான் ஜட்ஜா இருந்த கண்டிப்பா இவனுக்கு பரிசு…………………… என்று இழுத்த போது
ஹரி வேகமாக ‘எதாவது எக்கு தப்பா சொன்ன அப்புறம் என் ஜோடியா நீ ஆடினா தான் மேடை ஏறிடுவேன் சொல்லிடுவேன் .எப்படி வசதி’ ..
இல்லை ,இல்லை நான் உனக்கு தான் முதல் பரிசு தருவேன் சொல்ல வந்தேன் என்று ஷிவானி வேகமாக முடித்தாள்.
இவர்கள் எல்லாரும் செய்யும் சேட்டையை நோட்டம் விட்டுக் கொண்டு இருந்த ஷிவேந்தர் சரியான அருந்த வாலுங்க தான் என்று சிரித்துக் கொண்டான் . ஷிவானி பாடின பாடலை மட்டும் அல்லாமல் அந்த ஒரு மணி நேரத்தில் அவள் ஜாதகத்தையே சேகரித்துவிட்டான்.
ஷிவேந்தரை கண்டவுடன் சச்சின், என்ன அண்ணா அதிசயமா வந்துட்ட! நிஜமா என்னால் நம்ப முடியவில்லை ! என்ன விஷயம்? என்று சந்தேகமா கேட்டவுடன் வேளைக்கு ஆள் எடுக்க போறேன் அதுக்காக தான்.
சச்சின், நம்பிட்டேன் போல லுக் விட்டதை கண்டுக்காமல் கிளம்பினான் .
ஏன் வனி, நான்கு வருஷம் முந்தி வரை நீ கலந்து கொள்ளாத டான்ஸ் ப்ரோக்ராம் இல்லை ..இப்ப டான்ஸ் கண்டாலே அலர்ஜி ஆகர என்று தனிஷா கேட்கவும் ஷிவானி முகம் மாறியது ..எதை மறக்கணும் நினைக்கிறேனோ அதையே நியாபக படுத்தறாங்களே என்று வேதனையுறும் போது ..
“டேய் , ஆளாளுக்கு அவளை ஏன் டா மூட் ஆப் செய்யற ..” என்று ஹரி சண்டை போட தொடங்கினான்.
ஓகே ,ஓகே, நோ சண்டை என்று சந்தீப் அனைவரையும் சமாதானபடுத்தி அவர்கள் இடத்துக்கு அழைத்து சென்றான் . ஆல் த பெஸ்ட் நண்பா…வெற்றியுடன் திரும்பி வா …
வீர திலகம் இடு தோழியே என்று நாடக பாணியில் கலாய்த்துக் கொண்டு இருந்தார்கள் .
இவர்கள் குழு கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் எதாவது ஒரு பரிசை தட்டி சென்றார்கள்.
நண்பர்கள் அனைவரும் பக்கத்தில் இருக்கும் உணவகத்திற்கு சென்று தேவையானதை ஆர்டர் செய்து அரட்டை அடிக்க தொடங்கினார்கள் .
சுவாதி அவள் விருப்பப்படி ஈ என் டி, தனிஷா குழந்தைகள் நல மருத்துவம் ,சந்தீப், ப்ரீதம் எலும்பு முறிவு , ஹரி நரம்பியல் படிப்பதாக முடிவு செய்து இருந்தனர் . எல்லாரும் என்ட்ரன்ஸ் பரிட்சைக்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள் .
அனைவரும் சென்னையிலே படிப்பை தொடர்ந்தால் மாதம் ஒருமுறை ஒரு இடத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர்
வனி , நீ மட்டும் உன் முடிவு சொல்லவில்லை. முடிவு செய்தாச்சா ? உனக்கு தான் குழந்தைகள் என்றால் இஷ்டம் ஆச்சே ! என்னுடன் குழந்தைகள் மருத்துவம் சேர்ந்துவிடு என்ற தனிஷாவிடம்
அவளுக்கு என்ன கவலை ! அவங்க அப்பா டாக்டர் ..கடைசி நிமிடத்தில் சீட் கேட்டால் கூட அவளுக்கு கிடைத்துவிடும் .அவ அப்பா கண்டிப்பா கைனகோலோஜி தான் எடுக்க சொல்லுவார் அப்படி தான என்று ஹரிணி கேட்டவுடன்
“சரியா சொன்ன .அவரும் அதே தான் சொன்னார்” கூலாக ஜூஸ் குடித்த படி “ஆனா நான் மீடியா சயின்ஸ் தான் செய்ய போறேன் !”
அனைவரும் அதிர்ந்து “என்ன சொன்ன மீடியாவா? விளையாடாத வனி ! நம்ம படிப்புக்கும் மீடியாக்கும் என்ன சம்மந்தம்.”
நான் முடிவு செய்தால் செய்தது தான் என்று பிடிவாதவமாக கூறும் ஷிவானியை பார்த்து ஹரி, “ போதும் பிரெண்ட்ஸ் . ஷிவானி ,உன் வாழக்கை உன் இஷ்டம் தாயே ! நீ அந்த மேடியை கல்யாணம் செய்தாலும் எங்களுக்கு சரி…”
“என்னது மேடியா ..” என்று ஷிவானி முறைத்தாள்.
சந்தீப் “ ஹரி ,யாரு மேடி? என்ன புதுசா சொல்லற?”
அலைபாயுதே ஹீரோவை சொன்னேன் என்று ஹரி அனைவரிடமும் மழுப்பி இப்ப எனக்கு பசிக்குது ..சாப்பிடலாமா என்று பேச்சை மாற்றினான் .
ஹரி, ஸ்வாதியையும் அடக்கினான் .பேசும் போது ஹரி அழுந்த கூறினால் அந்த டாபிக் முற்று வைக்கணும் என்று அர்த்தம் . அனைவருக்கும் அது புரிந்ததால் அமைதியாக வேற பேச்சை தொடர்ந்தனர் .
ஹரியும், ஷிவானியும் சிறு வயது முதல் ஒன்றாக படிக்கிறார்கள். மற்ற எல்லாரையும் விட அவனுக்கு ஷிவானியை பற்றி நன்கு தெரியும் .ஷிவானியும் எதா இருந்தாலும் முதலில் ஹரியிடம் தான் ஷேர் செய்வாள் . ஷிவானியிடம் அதிக அக்கறை உள்ளவன் ..