துளிர் 2:
ஷிவானியை இதற்கு முன்பு எங்கு பார்த்தேன். பல நாள் யோசித்து கடைசியில் ஆஹா! அக்கா ரஞ்சனி ஊரிலே பார்த்தேனே. மேடம் அப்ப சின்ன பெண்ணா இருந்தாங்களே!
ஐந்து வருடம் முன்பு கோவை அருகே தேனியூர் கிராமத்தில் இருக்கும் கார்த்திக் என்பவருக்கு அவன் அக்கா ரஞ்சனியை திருமணம் முடித்து வைத்தார்கள். அப்போது ஷிவேந்தர் கல்லூரி இறுதி வருடம் படித்துக் கொண்டு இருந்தான். அவன் அக்காவை பார்க்க சென்று இருந்த சமயம் முருகன் கோவிலில் கொடுத்த சிறப்பு பூஜைக்காக அவன் மாமா கார்த்திக்குடன் சென்றான்.
முருகன் சந்நிதியில் ஷிவானி அருகில் நின்று கொண்டு இருந்த அவள் பாட்டி கோமதியிடம் “பாட்டி, மணி ஆச்சு … ஒரு அர்ச்சனை செய்து தர சொல்லுங்க. நானும் எத்தனை நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்..” அவள் கூறுவதை அந்த ஐயர் கேட்ட பாடு இல்லை .
இவள் நச்சு தாங்காமல் அப்படியும் அவர் “ கொஞ்சம் பொறுமையா இரு குழந்தை.. இந்த ஊர் தர்மகத்தா பூஜை முடித்தவுடன் நல்லா வேண்டி அர்ச்சனை செய்து தரேன் ….”
“என்ன பாட்டி. இவர் சொல்லற தர்மகர்த்தா எப்ப வந்து, நான் எப்ப போய் எக்ஸாம் எழுதுவது. இதிலும் எங்க அப்பா எதாவது சதி செய்தாலும் செய்து இருப்பாரு … உங்க மகனிடம் நான் இந்த எக்ஸாம் எழுத போவதை பற்றி சொன்னீர்களா? இருக்கும். இருக்கும். அப்படி தான? நீங்க இல்லை என்றால் அவர் தர்ம பத்தினி சொல்லி இருப்பாங்க . ஆளாளுக்கு என் வாழ்க்கையில் விளையாடுவதே வேலையா போச்சு “
“உனக்கு மட்டும் எப்படி இப்படி கோணல் மானலாகவே தோணுது கண்ணா ! கொஞ்சம் நேரா யோசித்து தான் பாரேன்” என்று கோமதி பாட்டி ஷிவானியை முறைத்தார் ….
“என்னை முறைக்காத! இன்னும் பழைய காலம் மாதிரியே செய்தால் என்ன செய்ய …சாமியை காக்க வைக்க கூடாது என்று இவர் தர்மருக்கு தெரியாதா?”
கோமதி பாட்டி பேத்தி கையை பிடித்து “ சும்மா இரு வனி. அடங்கவே மாட்டியா.. உனக்கு எப்படியும் பத்து மணிக்கு தான எக்ஸாம் .. போய் கோவிலை சுத்திக்கிட்டு வா .. அதற்குள் அவர் பூஜை முடித்து அர்ச்சனை செய்து தருவார்” என்று பொறுமையாக கூறினார்.
ஷிவானி வெளியேறும் போது ‘அந்த தர்மகர்த்தா மட்டும் என் கண்ணில் பட்டான் தொலைந்தான் … இன்று அவனாச்சு, நான் ஆச்சு .. பெரியவங்க என்று மரியாதை கொடுத்து எத்தனை நேரம் காத்து கொண்டு இருக்கிறது ..
‘இவன்’ ச இல்லை தப்பு . தப்பு. இவர்ர் பெண்டாட்டி நகை அடுக்கி கொண்டு வீதி உலா கிளம்ப லேட் ஆகி இருக்கும் .. அதுக்காக மற்ற எல்லாரையும் காக்க வைக்கலாமா?’ என்று தானே புலம்பி கொண்டு சென்றதை இரு ஜோடி கேட்டு, விநோதமாக சிரித்துக் கொண்டதை ஷிவானி அறிய வாய்ப்பு இல்லை..
ஷிவேந்தர் அவன் அக்கா கணவர் கார்த்திக்கிடம் “யாரு மாமா இந்த பட்டாசு, இப்படி வெடிச்சிட்டு போகுது. எங்க அக்காவை எப்படி பேசலாம் . உங்க ஊர் என்பதால் பேசாமல் இருக்கேன். இல்லை என்றால் நடப்பதே வேறே”
“பார்க்கவில்லையே டா ! ஊருக்கு புதுசு போல இருக்கு. இல்லை என்றால் நம்மளை பேச யாருக்கு தைரியம் வரும் . என் பெண்டாட்டி கூட என்னை இப்படி பேசினது இல்லை .. இந்த சின்ன பெண் பேசுவதை கேட்டையா?” என்று கார்த்திக் போலியாக புலம்பி “உங்க அக்கா கூட வந்து இருந்தால் கூட இந்த அர்ச்சனை தேவை சொல்லலாம். என் செல்லம் ரஞ்சு முகம் போன போக்கை பார்த்து சந்தோஷ பட்டு இருப்பேன்.”
ஷிவேந்தர் கையில் போனை எடுத்து “இருங்க, இப்பவே அக்காவிடம் சொல்லறேன் !”
கார்த்திக் அலறியபடி “வேண்டாம் டா! நான் நிம்மதியா சாப்பிடுவது உனக்கு பொறுக்கலையா! ப்ளீஸ் சிவா, தெரியாம சொல்லிட்டேன்! இனி வாயை திறந்தேனா கேளு !”
கார்த்திக் எதேர்ச்சையாக திரும்பின போது சுற்றி வளம் வரும் ஷிவானியை கண்டு “புதுசு எல்லாம் இல்லை டா, நீ இப்ப தான் பார்க்கிற.”
ஷிவேந்தர் பாவமாக “நான் எங்க மாமா பார்த்தேன்” என்றவுடனே கார்த்திக் அவன் முதுகில் வைத்து “ நம்ம கோமதி பாட்டி பேத்தி தான். ரொம்ப நல்ல பெண் .கொஞ்சம் துறுதுறுப்பு. அவளை பற்றி அப்புறம் சொல்லறேன்.”
ஷிவானி பிரகாரம் சுற்றி வந்தவுடன் முருகரை பார்க்க விடாமல் இரு உருவங்கள் மறைத்து நின்று கொண்டு இருந்தது. பல கோணத்தில் நகர்ந்து பார்த்தாள். இவங்க மட்டும் பார்த்தால் போதுமா …. நாங்க எல்லாம் பார்க்க வேண்டாமா … பொறுமை இழந்து “ஹலோ ! சார்s கொஞ்சம் நகருங்க .. உங்களுக்கு மட்டும் வரம் கிடைத்தால் போதுமா. எங்களுக்கும் கொஞ்சம் அருள் கிடைக்கட்டும். கொஞ்சம் நகர்ந்தும் சாமி கும்பிடலாம்.”
அவள் சொல்வதை கேட்டு ஷிவேந்தர் கோபமானான். கண்களை மூடிய படியே சொல்லும் ஷஷ்டி கவசத்தை நிருத்தி கண் திறவாமல் ‘மாமா’ என்று பல்லைக் கடித்தான் . கார்த்திக், ஷிவேந்தர் கைகளை பிடித்து, மென் குரலில் “அமைதியாக இரு சிவா . சின்ன பெண் தான . அவங்க குடும்பம் நமக்கு தெரிந்த குடும்பம் தான் ”
தர்மகர்த்தா என்றவுடன் வயதானவர்களா தான் இருக்கணும் முடிவு செய்து “ என்ன சாமி, உங்க தர்மகர்த்தா வர இன்னும் எத்தனை நேரம் ஆகும் …பாட்டி எங்க போனாங்க . இப்ப அர்ச்சனை செய்து தர போறீங்களா இல்லையா?” என்று அவள் குரல் பொறுமையில்லாமல் ஒலித்தது .
சாமியை கூட நிம்மதியா கும்பிட விடாம இது என்ன ரோதனை மாமா என்று அலுத்துக் கொண்ட ஷிவேந்தர் ஐயரிடம் “அவங்களுக்கு என்ன வேண்டுமாம்”
“அந்த பெண் ஏதோ பரீட்சைக்கு போகுதாம் ராசா… அர்ச்சனை செய்து கொடுக்கணுமாம் ” என்று பவ்யமாக சொன்னவுடன் “முதலில் அதை கவனிங்க . சும்மா வந்ததில் இருந்து பாத்திர கடையில் யானை புகுந்தது போல சத்தம்.” பக்கத்தில் நின்று இருந்த கார்த்திக் சிரிப்பதை பார்த்த ஷிவேந்தர் “இப்ப எதுக்கு மாமா சிரிப்பு. இங்க என்ன காமடி ஷோவா நடத்தறாங்க”.
“ அவங்க எத்தனை ஒல்லியான உடல் வாகுடன் அழகா இருக்காங்க … நீ என்ன என்றால் யானை சொல்லற ? இதை மட்டும் அந்த பெண் கேட்கணும். நீ தொலைந்தாய் மகனே”
அவர் வாங்கி அர்ச்சனை செய்து கொடுத்தவுடன் சின்ன குழந்தை போல ஷிவானி அத்தனை சந்தோஷ பட்டாள்..
“சிவா, அவங்களை பாரு, அவங்க முகம் எத்தனை சந்தோஷமா இருக்கு?”
ஷிவேந்தர் கண்கள் அவளையே தொடர்ந்தது .சின்ன விஷயம் தான். ஆனா அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி. பாவம் சின்ன பெண். எதோ எக்ஸாம் போற டென்ஷன் போல. அவள் பாட்டியுடன் சுவாரசியமா கதை அளந்த படி கோவிலில் இருந்து வெளியேறும் வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அந்த முகத்தை மறக்க முடியுமா?
அன்று பார்த்தது போல அதே வாய் . அதே திமிர். அதே பேச்சு .இத்தனை வருடத்தில் கொஞ்சம் கூட குறையவில்லை . அப்படியே தான் இருக்கா? அப்படியேவா என்ற மனசாட்சியிடம் இல்லை இன்னும் கொஞ்சம் அழகா இருக்கா என்று வர்ணித்தான்.
திடீர் என்று ‘அந்த ஷிவானி கண்ணன்’ .
கண்ணன்? சின்ன பெண்ணா தான் இருக்கா? கண்டிப்பா அவங்க அப்பா பெயரா தான் இருக்கணும் . அன்று என்னமா பேசினா? அவள் மீது வண்டியை ஏத்தினது போல குதிச்சா ? மறுபடியும் திரும்பி போன போது அவள் மீது வண்டியை ஏத்திவிட்டு வந்து இருக்கணும், அப்ப என்னை பற்றி தெரிந்து இருக்கும் ….
அவள் கண்டிப்பா அந்த மருத்துவ கல்லூரியில் தான் படிக்கணும். அவளை மறுபடி எப்படி காண ? கண்டுபிடிக்கிறேன் . அப்ப நான் யார் என்று காட்டறேன். வெயிட் அண்ட் சி ஷிவானி ..
நம்ம சச்சி கூட அங்க தான படிக்கிறான். அவனை கேட்டால் ? சரி வருமா என்று ஒற்றையா ரெட்டையா போட்டு பார்த்து, காற்றில் கணக்கு போட்டுக் கொண்டு இருந்தான்.
இதை பார்த்த அவன் அண்ணி, அச்சோ, இவன் லூசுகளோட பழகி உண்மையா லூசாகிட்டானா ?
“யாரை கண்டு பிடிக்க போற சிவா! நீ தனியா புலம்புவதை பார்த்தா பயமா இருக்கு? எப்ப உன் தொழிலை விட்டு சி ஐ டி வேலை பார்க்க ஆரம்பித்த ? சொல்லவே இல்லை ” என்ற குரலில் திடுகிட்டான் .
அவன் திருட்டு முழி முழிப்பதை பார்த்து “ are u ok? ”
எதிரிலே அவன் பெரிய அண்ணி சரண்யா நின்று கொண்டு “என்ன விஷயம் சார்” என்று புருவம் உயர்த்தி கிண்டல் பார்வையில் கேட்டவுடன் அச்சோ ! சத்தமா உளறிவிட்டேனா? சமாளி சிவா ,சமாளி ..
“yeah ,yeah , I am perfectly ok …”
“நிஜமாவா ?”
இனி கேள்வி கேட்டு துளைத்து விடுவார்களே ! “அண்ணி, அது ஒன்றும் இல்லை , போன வாரத்தில் சந்தித்த ஒரு கேஸ் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தேன்” என்று மழுப்புவதை கேட்டு ‘நம்பிட்டேன் கொழுந்தனாரே !நம்பிட்டேன்” என்று ராகம் பாடினாள்.
“நம்பினால் நம்புங்கள்! இல்லை என்றால் போங்க அண்ணி!”
“சரி, சரி நம்பிட்டேன்” என்று நம்பாமல் கூறினாள்..
“அப்புறம் சிவா நான் கேட்டது, சொன்னது நியாபகம் இருக்கா ? நீ சொன்ன மூன்று மாத கெடு முடிந்து ஒரு வாரம் ஆச்சு . என் தங்கை ப்ரியாவை கல்யாணம் செய்வதை பற்றி யோசித்தாயா? என்ன முடிவு செய்து இருக்க? எதா இருந்தாலும் சொல்லு ..”
ஷிவேந்தர் பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்தும் அவனே சொல்லட்டும் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
கொஞ்சம் தயங்கி, யோசித்த படி “ அண்ணி நான், எனக்கு ……..ப்ரியாவை என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. சாரி, தப்பா நினைக்காதீங்க ! எத்தனை தடவை யோசித்தாலும் சரி வரல அண்ணி . ப்ளீஸ்! புரிந்துகோங்க அண்ணி”
மூத்த அண்ணி சரண்யா அப்பா ரங்கராஜன் ஐ எ எஸ் ஆபிசர் . அவர் ரெண்டாவது பெண் ப்ரியாவை ஷிவேந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க ஒற்றைக் காலில் நிற்கிறார். சிவா சரி சொல்லணும் தவம் இருக்கிறார் .
அண்ணி பாவம் தான். எத்தனை ஆர்வமா இருந்தாங்க! இப்படி சொல்ல எனக்கே கவலையா இருக்கு! அம்மாவிடம் சொல்லி சொல்லலாம் நினைத்தால் அதற்குள் அண்ணியே கேட்டாங்களே என்று வருந்திக் கொண்டு இருக்கும் போது
“இதில் என்ன இருக்கு இந்தர். அவளும் வெளிநாடு போகணும் சொல்லற! பிரியா படிப்புக்கு அங்க தான் ஸ்கோப் இருக்கு. உன் நிலைமைக்கு அங்க போக முடியாது தெரியும் .
இருந்தாலும், என் சின்ன கொழுந்தனார் ரொம்ப, ரொம்ப நல்ல பையனாம். எங்க அப்பா, அம்மாக்கு அவனை விட மனசு இல்லை! அது தான் முகமத் கஜினி போல விடாம போர் தொடுக்கறாங்க? அவங்க நினைக்கும் அளவுக்கு இங்க சரக்கு இல்லை எனக்கு தான தெரியும் . நான் சொல்வது சரி தான! நீயே உண்மை சொல்லு இந்தர்? ” என்று கண்களில் குறும்பு மின்ன கேட்டவுடன்
“என் மீது உங்களுக்கு இத்தனை நல்ல……… எண்ணம் கூடாது அண்ணி” நல்ல அழுந்த கூறி சிரித்துவிட்டான்.
“அண்ணி, உங்களுக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே! என்னை புரிந்து கொண்டதுக்கு தங்க யு சோ மச் அண்ணி .
அண்ணி, ரஞ்சு அக்கா, மாமா வீட்டில், எனக்கு பெண் கேட்டதாக பாட்டி சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதற்கும் அதே பதில் தான். ஆனா அக்கா கோபித்துக் கொள்வாளே ! சண்டை போடுவாளே.”
“விடு இந்தர். அதுக்கு எல்லாம் பார்க்க முடியுமா? உன் வாழ்க்கை உனக்கு பிடித்த படி தான் அமையனும். உன் முடிவு எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லிவிடு, யாரும் யாரையும் கட்டாய படுத்த முடியாது, கூடவும் கூடாது” .
அப்போது அங்கே வந்த அவன் சின்ன அண்ணி நித்யா இவர்கள் பேசி சிரிப்பதை பார்த்து உள்ளே செல்ல முயன்றாள்.
“அண்ணி, ஒன்றும் ரகசியம் பேசவில்லை . நீங்களும் எங்க ஜோதியில் வந்து ஐக்கியமாகிக்கோங்க.”
நித்யா அப்பா துபாயில் தொழில் செய்து வருகிறார். சென்னை படிக்க வந்த காலத்தில் மகள் காதலிக்கிறாள் என்று கோபமான மோகனசுந்தரம், மணிவாசகத்தின் ஒற்றுமையான குடும்பத்தை பார்த்து படிப்பு முடித்த உடனே நித்யா -சுரேன் திருமணத்தை முடித்து வைத்தார் .
நித்யா, சிறந்த பாடகியும் கூட! அவள் பாட்டாலே, மயக்கும் இனிய குரலாலே ஷிவேந்தர் சின்ன அண்ணா சுரேனை அவள் பக்கம் இழுத்தவள். பல கச்சேரிகளிலும், திரை படங்களிலும் பாடி இருக்கிறாள் . பிறந்ததில் இருந்து துபாயில் வளர்ந்தவள், சிறந்த பாடகி, கொஞ்சம் கூட பந்தா இல்லமால் இவர்கள் குடும்பத்தில் இயல்பாக பொருந்தி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி .
“நித்யா அண்ணி, நீங்களே சொல்லுங்க! இது சின்ன மலை, ஈசியா தாண்டிவிட்டேன் .! அடுத்த மலை, ஒரு மலைக்குள் ஏழு மலை வைத்து இருக்குமே! அதை எப்படி தாண்ட !” என்று சோகமாக கூறினவுடன்
“அடபாவி என்னை மலை என்றா சொல்லற ?உன்னை” என்று சரண்யா துரத்த ஆரம்பித்தாள் .
இவர்கள் குரலை எல்லாம் கேட்டு வெளியே வந்த அவன் அன்னை விசாலம் ஷிவேந்தரிடம் “ஆரம்பிச்சுட்டியா? கொஞ்ச நேரம் அமைதியா வாலை சுருட்டிகிட்டு இருந்தாயே பார்த்தேன். மறுபடியும் தாவ ஆரம்பித்து விட்டாயா.”
“மம்மி செல்லம் நீ பேசுவது டூ மச் .என்னை பார்த்தால் எப்படி தெரியுது!”
“அதை தான இப்ப சொன்னேன்! காது கேட்கலையா சிவா கண்ணா ?”விசாலம் சொன்னதைக் கேட்ட நித்யாவும் ,சரண்யாவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்தனர் .
எல்லாரும் இப்படி சந்தோஷமாக ஒற்றுமையாக இருப்பதைக் கண்ட ஷிவேந்தர் எனக்கு வர போறவ எப்படி இருப்பாளோ என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை . இவங்களோட ஒத்து போவாளோ, இல்லை குடுமி சண்டை போடுவாளோ !
“அத்தை அவன் என்ன சொன்னான் தெரியுமா ?”
விசாலம் அவன் காதை பிடித்து திருகி “ கேட்டுக் கொண்டு தான் வரேன் சரண். என் மருமகளை மலை என்று சொன்னதும் இல்லாமல் என் மகளை ஏழு மலை என்றா சொல்லற?” சந்தடி சாக்கில் அப்பாவியாக “அப்படி குண்டாவா இருக்காங்க ?”
குதிபோட்டு “ஐயோ, நான் சொன்னதை சரியா கண்டுபிடித்து விட்டீர்களே! எப்படி? மம்மி! ப்ரில்லியன்ட். சோ ச்வீட் விசால்.”
“அத்தை நீங்களுமா? அவனை சும்மாவே கேட்க வேண்டாம், இதில் நீங்களே எடுத்துக் கொடுக்கறீங்க” என்று சரண்யா சிணுங்கி “ ஏன் இந்தர் , இத்தனை விவரமான எங்களையே இந்த பாடு படுதரையே? உன்னிடம் வரும் அரை குறை கேஸ் எல்லாம் நினைத்தால் பாவமா இருக்கு டா! விளையாட்டுக்கு குண்டு சொன்ன நினைத்தால் நிஜமாவா சொன்ன?”
ஷிவேந்தர் இல்லை, ஆமாம் என்று தலை ஆட்டிக் கொண்டு இருந்தான் .
“லொள்ளா செய்யற ! நைட் கஞ்சி தான் டீ மகனே! இன்றைக்கு சமையல் என் டர்ன் தான் ! இப்ப என்ன பண்ணுவ” என்று பழிப்பு காட்டி சமைக்கும் மெனுவை நித்யாவிடம் அடுக்கினாள் .
சரண்யா சிறந்த மருத்துவமனையில் டயடிஷியனாக பணி புரிகிறாள். அதையே வீட்டிலும் முடிந்த அளவு கடை பிடிக்க முயல்பவள்.
ஷிவேந்தர் குதிக்காத குறையாக “ஹை, நல்ல வேலை நான் தப்பிச்சேன் ! உங்க சோதனைக்கு நான் எலியா ?அதை சாப்பிடுவதற்கு, தெரு முனையில் இருக்கும் ஆண்டியப்பன் தள்ளு வண்டி சாப்பாடே தேவல ! உப்பும் இல்லாமல் காரமும் இல்லாமல் டயட் உணவு என்கிற பேரில் இலையும், தழையும் தான் அதில் இருக்கும் . நீங்க நியுற்றிஷன் படித்தீர்கள் என்றால் பாடத்துடன் நிறுத்திக் கொள்ளனும் அண்ணியாரே!”
“என் சமையலையா குறை சொல்லற ? உன்னை இன்று என்ன செய்யறேன் பாரு ! நித்யா அவனை பிடி”
“பாட்டி, பாட்டி காப்பாத்து” என்று ஊரை கூட்டினான். அப்போது தான் தூங்கி எழுந்த வைதேகி என்னமோ ஏதோ என்று வெளியே வந்தாள்.
“தேகி காப்பாத்து!” என்று அவளை தள்ளி அவள் அறைக்குள் புகுந்துவிட்டான்.
“பாட்டி, வழி விடுங்க ! உங்க பேரன் செய்யும் அலம்பல் தாங்கல!! இப்ப கொடுப்பதில் தப்பி தவறி கூட வாழ்க்கையில் என் சமையலை குறை சொல்ல கூடாது, ஆண்டியப்பன் சாப்பாட்டை சாப்பிட வாய் இல்லாமல் செய்திடலாம் . அப்புறம் கஞ்சி தான குடித்து ஆகணும்” என்று சரண்யா வேகமாக துரத்தினாள்.
கையில் கிடைத்த தலையணையை வைத்து நன்றாக மொத்திவிட்டு
” என்னிடம் வெச்சுக்காத ! நான் பொல்லாதவ ! ஜாக்கிராதை, பிச்சுபுடுவேன் ,பிச்சு ” என்று மிரட்டினாள். இவர்கள் சத்தத்தை கேட்டு அங்கே வந்த அவன் அண்ணன் நரேனை பார்த்து “ஆமாம் அண்ணி, அண்ணா கூட அப்படி தான் சொன்னார்”
சாப்பாடு சரி இல்லை சொன்னேனா? இல்லை குண்டு சொன்னேனா? எப்ப சொன்னேன்? எதை பற்றி பேசறாங்க என்று நரேன் குழம்பினான். நாமளே வாய் திறந்து மாட்டிக் கொள்ள கூடாது. அமைதியா இருந்திடு நரேன் உன் தம்பி அழகா கோர்த்து விட்டிடுவான்.
சரண்யா நம்பாமல் “அப்படியா? எப்போது எதுக்கு சொன்னார் …”
ஷிவேந்தர், அவன் வாயை திறக்கும் முன், நரேன் அவளிடம் வேகமாக சென்று “சரண் செல்லம், அப்படி எல்லாம் நான் சொன்னதே கிடையாது! இவன் சும்மா சொல்லறான்! நான் போய் உன்னை அப்படி எல்லாம் சொல்வேனா?”
அப்பாவியாக ஷிவேந்தர் ” இல்லை அண்ணா, நீ தான் சொன்ன! நானும் நீயும் சினிமா போயிடு வந்தோமே! அப்ப “
சரண்யா கேள்வியாக “எனக்கு தெரியாம ரெண்டு பேரும் எப்ப போனீங்க?”
அவளை யோசிக்க விடாமல் ” நம்ம கல்யாணம் முந்தி செல்லம் …”
“சரியா சொன்ன அண்ணா! அப்ப கூட உன்னுடன் ……”
நரேன் சிவா வாயை அடைத்து ” அடே கிராதகா, உனக்கு புண்ணியமா போகட்டும் . உன் நாரதர் வேலை இங்கு வேண்டாம் டா” என்று கெஞ்சினான் .
“நீ வா சரண். அவனுக்கு இன்று எந்த கேசும் கிடைக்கவில்லை போல .நம்மை பார்த்து அவனுக்கு பொறாமை! அது தான் ….”
“இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே”
என்று ராஜா ராணி படப்பாடலை வேண்டும் என்றே ஷிவேந்தர் உரக்க பாடினான் .
நரேன், ஷிவேந்திரடம் கண்களாலே வேண்டாம், மீ பாவம் கெஞ்சினான். எனக்கு ஒரு காலம் வராமளா போகும் மகனே! அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்று பல்லைக் கடித்தான் .
சரண்யா அப்பாவியாக ” நிஜமா நீங்க என்னை அப்படி சொல்லவில்லை தான?”
அவளிடம் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக ” நிஜமா இல்லை செல்லம்” என்று வெளியேறினர் .
நரேன்-சரண்யா கல்யாணம் முடிவு செய்த பிறகு அவன் நண்பர்களுக்கு எல்லாம் பார்ட்டி கொடுப்பதாக இருந்தது. அப்போது தோழி காவியா வர முடியாத காரணத்தால் காவியா விருப்பப்படி அவளை சினிமாவிற்கு அழைத்து சென்றான் . முதலில் அவர்களுடன் மூன்று நண்பர்கள் வருவதாக தான் இருந்தது. கடைசி நிமிடத்தில் அவர்கள் வராத காரணத்தால் நரேன் தயங்கினான் .
காவியா அடுத்த வாரம் அமெரிக்கா செல்வதால் கண்டிப்பா படம் பார்த்துவிட்டு தான் போகணும் பிடிவாதம் பிடித்தாள். இருவர் மட்டும் படம் பார்க்க சென்றனர்.
ஷிவேந்தர் நண்பர்களுடன் அதே படத்துக்கு சென்று இருந்தான். அதுவும் அப்போது ஹிட் ஆனா காதல் படம், ராஜா- ராணி . அதில் ஆர்யா ஜோடி அடிபட்டு இறந்த காட்சியை கண்டு நரேன் கலங்கி அமர்ந்து இருந்தான் . காவியவும் அதே போல ! ஒரே பீலிங்க்ஸ்.
இடைவேளை போது எதேர்ச்சியாக இவர்களை பார்த்த ஷிவேந்தர் அதிர்ந்தான். சும்மா என்றால் கூட சரி என்று போய் இருப்பான். அடுத்த வாரத்தில் கல்யாணம் வைத்துக் கொண்டு இப்படி செய்தால் ? அதுவும் கலங்கிய கண்களுடன்.
படம் முடிந்தவுடன் நரேன், ஷிவேந்தரிடம் புளி போட்டு விளக்காத குறையாக எல்லாத்தையும் விளக்கி ” உங்க அண்ணியிடம் சொல்லிடாத! கல்யாணம் முடிந்தவுடன் அவளுடன் தான் இந்த படம் பார்க்கணும் சொல்லி இருக்கா! உங்க அண்ணி பொல்லாதவ? ஜாக்கிரதை, வாயை திறக்காத ! சொல்லிடாதா! நீ என்னை இங்கு பார்க்கவே இல்லை .சரியா! அதுவும் இந்த படத்தில். உன் மெமரியில் இருந்து அழித்து விடு ” என்று அப்போது தெரியாம சொல்லிவிட்டான்.
அன்றில் இருந்து சமயம் கிடைக்கும் போது எல்லாம் ஷிவேந்தர் நரேனை ஒரு வழி செய்திடுவான் ….அந்த படமோ, பாடலோ கேட்டாலே நரேன் டென்ஷன் ஆகிவிடுவான் ……
சிவா சொல்ல மாட்டான் என்று நரேனுக்கு நூறு சதவீதம் தெரிந்தாலும் மனைவியிடம் பொய் சொல்ல நேர்ந்ததே என்று தான் அவனுக்கு வருத்தம்.