14:
ஜீவா, சென்னை வந்து இறங்கியவுடன் ஷிவானியை காண துடித்தான். அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அவளை வர சொன்னான்.
தூரத்திலே ஷிவானி, ஜீவாவை கண்டு கொண்டாள் . ஆளே மாறி இருந்தான். வேலை தந்த முதிர்ச்சியோ, இல்லை அறிவின் முதிர்ச்சியோ ஜீவா அழகனாக இருந்தான் .
அவள் அருகில் வர ஜீவாவும் ஷிவானியை எடை போட்டுக் கொண்டு தான் இருந்தான். இவள் மருத்துவரா? அவனால் நம்ப கூட முடியவில்லை ..அதே போல தான் இருக்கா ? குறும்பு விழிகள் ,சிரிக்கும் உதடுகள், முத்து பல் வரிசை என்று அவன் பார்வையை அவனால் திருப்ப முடியவில்லை .
இத்தனை நாள் இவளை விட்டு எப்படி பிரிந்து இருந்தேனோ என்று பெருமூச்சு விட்டான் ….
“ ஹாய் ஜீவா எப்படி இருக்க?” என்று ஆர்பரித்து கை குலுக்கினாள்.
“அப்ப, என்ன உற்சாகம் ..என் சோர்வு எல்லாம் ஒரு நொடியில் பிளைட் பிடித்து அமேரிக்கா பறந்து போச்சு” என்று குலுக்கின கைகளை விடாமல் பற்றிக் கொண்டான் .
“அப்புறம் எப்படி இருக்க? ஆதி ,நிகில் வரலையா ? நீ ரொம்ப அழகா இருக்க ஜீவா” …
ஜீவா கண்கள் ஒளிர்ந்ததை கண்டு குறும்பாக “ இருந்தாலும்…. என் இந்தர் போல இல்லை” என்று கொட்டும் வைத்தாள்.
“உன் சிரிப்பால் மலையின் உச்சிக்கு அழைத்து சென்றாய் ! உடனே உன் பேச்சால் அங்கு இருந்து தள்ளிவிட்டாயே” என்று முறைத்தான். அழகிய சிரிப்பில் தடுமாறித்தான் போனான்.
இருவரும் பேச ஆரம்பித்ததில் இருந்து ஷிவேந்தர் புராணம் தான் பாடினாள். கண் முன்னே இல்லாத சிவாவை எண்ணி பொறாமை கொண்டான். ஷிவானி இனி எனக்கு இல்லையா ? எத்தனை நேசத்தை நெஞ்சில் சுமந்து வந்தேன் . என்ன தான் ஷிவானி அவள் காதலை போனில் சொல்லி இருந்தாலும் அப்படி இருக்காது என்று தான் மனம் சிணுங்கியது .. ஷிவானி அவனுக்கு இல்லை என்பதை நினைக்கவே உலகமே வெறுமையாக இருப்பது போல உணர்ந்தான். ஷிவேந்தர் பெருமையை பேசவே அவளுக்கு நேரம் போதாவில்லை…
ஷிவானி என்னை இப்படி தான உயிருக்கு உயிரா காதலிக்கனும் நினைத்தேன் என்று ஜீவாவால் எண்ணாமல் இருக்க முடியவில்லை . அதை சொல்லி அவள் மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம் என்று அமைதியாக அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் .
ஜீவா தங்கி இருந்த ஹோட்டலுக்குள் ஷிவேந்தரும், அவன் நண்பனும் நுழைந்தார்கள் . அப்போது தான் பிரான்ஸ் இருந்து திரும்பி இருந்தான் . நண்பனை ஹோட்டலில் விட்டு, வீட்டுக்கு செல்வதாக இருந்தான். முதலில் ஷிவானியை கண்டு சந்தோஷமாக அவள் அருகே முன்னேறினான். ஷிவானி யாருடனோ சிரித்து பேசுவது அவன் கண்ணில் பட்டது.
யாரு இது ! இது வரை இவரை பார்த்தது போல இல்லையே! ஆளும் செம அழகா இருக்கான். ஏனோ லேசா பொறாமை உணர்வு தலை தூக்கியது.ஷிவானியே யார் எற்று சொல்லட்டும் என்று நகர்ந்தான் .
ஷிவானி பல முறை அழுத்திக் கேட்ட பிறகு தான் ஜீவாவும் அவன் நண்பர்களும் எதனால் சொல்லாமல் கொள்ளாமல் விலகி சென்றார்கள் என்று கூறினான். ஷிவானிக்கு ஏற்கனவே யூகம் இருந்ததால் அவள் அப்பாக்காக மன்னிப்பு வேண்டினாள். இருந்தாலும் இப்படி போய் இருக்க கூடாது என்று சண்டையும் போட்டாள்.
ஷிவானி நகர்ந்த சமயம் உணவகத்திற்குள் நுழைந்த ஷிவேந்தர் “நான் ஷிவானி லவர், நீங்க…. நைஸ் டு மீட் யு” என்றவுடன் ஜீவா கூலாக “ நான் மட்டும் ..நானும் லவர் தான் . glad டு மீட் யு” என்று சிரித்து கை குலுக்கிய ஜீவா பல்லை உடைக்க வேண்டும் என்று சிவா ஆத்திரம் கொண்டான்.
ஜீவா “நான் அவளை ஆறு வருடமாக காதலிக்கிறேன் . கண்டிப்பா அதற்கு பிறகு தான் நீ நுழைந்து இருப்ப ! சோ, எனக்கு தான் முதல் உரிமை” என்றவுடன் ச என்று கையை உதறி ஷிவேந்தர் கோபமாக வெளியேறினான் .
ஷிவானி சொன்னதை வைத்து அவன் தான் ஷிவேந்தர் என்று தெரிந்தது.
டேபிள் மீது இருக்கும் ஷிவானி போனில் இந்தர் காலிங் என்று சிரிக்கும் சிவா முகம் மின்னியது . ஆஹா, சரியா தான் கண்டு பிடித்து இருக்கேன். மண்டை காயிந்து இருப்பான் ! அப்படியே இருக்கட்டும் என்று சிரித்துக் கொண்டான் .
“உன் சிவா என்ன செய்யறாரு ஷிவானி?” .
அது ..அது ..அவர் பிசினஸ் செய்யறாரு என்று அவள் சொன்னாலும் இதுவரை அவள் சிவா என்ன செய்யறாரு என்று கேட்டதே இல்லை. அவனுக்கு பிடித்த தொழில் இருக்கு என்று சொன்னானே ! என்ன என்று கேட்கணும் எண்ணிக் கொண்டாள்.
ஷிவானி ஜீவாவிடம், கண்ணன் அவளுக்கு பார்த்து இருக்கும் தேவா பற்றியும் ,ஷிவேந்தர் காதல், மணிவாசகம் பற்றி ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டாள். ஏற்கனவே போனிலே பல தடவை சொன்னது தான் . ஜீவாவை ரொம்ப நாள் கழித்து பார்க்கிறோம் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு துளி கூட இல்லை.
ஷிவானி அவனுக்கு இல்லை என்று ஜீவாவிற்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது . ஷிவானி சந்தோசம் தான் முக்கியம் இருந்தாலும் அப்போதைக்கு அவனால் என்ன செய்ய முடியும் என்று கேள்வி .
அதற்கும் ஷிவானியே விடை வைத்து இருந்தாள். இது ஒத்து வருமா என்றதுக்கு “ பல நாள் யோசித்தது தான் ஜீவா! ஆதியும் உன்னால் முடியும் சொன்னானே! இதற்கு தான சென்னை வந்தாய்… “
“ஹே, நான் உன்னை பார்க்க தான் வந்தேன்” என்றதும் நம்பிட்டேன் ஜீவா என்று சரித்தாள்..
“ ப்ளீஸ் ஜீவா! உனக்கும் வேலை ஆச்சு, எனக்கும் வேலை ஆச்சு .இதில் மறுக்க என்ன இருக்கு .என்னால் வெளியே எல்லாம் அலைய முடியாது ஜீவா . எங்க அப்பாவிற்கு தெரிந்தால் எல்லாம் பாழாகிவிடும் . ப்ளீஸ் ஜீவா” என்று ஷிவானி கேட்பதிற்கு அவனால் மறுக்க முடியவில்லை .
இன்னும் மூன்று நாளில் சொல்வதாக தெரிவித்தான். அவள் முறைப்பை கண்டு, “அம்மா ,தாயே ! நான் தான் எல்லாம் முடிவு செய்வேன், இருந்தாலும் சம்பளம் கொடுக்கும் முதலாளியை ஒரு வார்த்தை கேட்கணும் இல்லையா? எப்படி இருந்தாலும் உனக்கு உதவி செய்வேன்” என்று வாக்கு கொடுத்தான் .
வீட்டுக்கு கிளம்பும் போது ஷிவானி தடுமாறிய படி “ஜீவா! இன்னும் நீங்க… என்னை…” என்று மேலும் பேச முடியாமல் திணறினாள். அத்தனை நேரம் தடையில்லாமல் வந்த பேச்சு திக்கியது.
“ ஷிவானி, உண்மையை சொல்லணும் என்றால் இங்கே உன்னை பார்க்கும் வரை அந்த எண்ணம் இருந்தது . இத்தனை காலம் ஆகியும் உன் மீதுள்ள காதல் அப்படியே தான் இருக்கு . இதுவரை எந்த பெண்ணாலும் அதை மாற்ற முடியவில்லை” .
பேச்சற்று நின்ற ஷிவானியை கண்டு மேலும் “ நீ ,சிவா மீது வைத்து இருக்கும் பாசத்தை, காதலை கண்டு என் மனம் பொறாமை கொள்ளுது ! உன் நினைப்பை உடனே எல்லாம் அழிக்க முடியாது ! கொஞ்சம் கொஞ்சமா மாற்ற முயற்சி செய்யறேன்” என்று வாக்கு கொடுத்தான் .
“சாரி ஜீவா ! என் சிவாவை தவிர என்னால் யாரையும் அப்படி நினைக்க முடியவில்லை” .
“ உன் காதலை அடைய ஷிவேந்தர் மிகவும் கொடுத்து வைத்தவன் ..”
“யாரிடம்! பஜன் லால் சேட்டிடமா ?” என்று குறும்பாக வினவிய ஷிவானியிடம் “அப்படியே இருக்க வனி. கொஞ்சம் கூட உன் துடுக்குத்தனம் மாறவில்லை” .
“ஜீவா, ஆரம்பம் முதல், எனக்காக அக்கறை கொள்ளும் உங்களிடம் எல்லாம் தோழியா தான் பழகினேன்!என்னை தப்பா…..!”
“கண்டிப்பா எடுத்துக்க மாட்டேன் வனி. போகும் போது உன்னை போலவே ஒரு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு தான் ஊருக்கு போகணும் உறுதியா இருக்கேன். கல்யாணம் செய்தும் காதலிக்கலாம் தானே ” என்று அவன் வெளிப்படையா பேசியது அவள் குற்ற உணர்ச்சியை போக்கியது .
ஷிவானியை பார்க்க போகலாம் என்று ஷிவேந்தர் கிளம்பிய போது தீபன் வந்தான் . மணிவாசகம் அங்கு இல்லாததால் “ சிவா அண்ணா, மறுபடியும் கேட்கிறேன் ! உனக்கும் அந்த ஷிவானிக்கும் என்ன சம்மந்தம் . அவங்க போனில் உங்க புகை படம் இருந்ததா சொன்னாங்க.. நீ எதற்கு அவங்களை அழைத்தாய் ? உன் தோழியா? ”
“ நீ எப்ப டா? உனக்கு எப்படி ?” என்று ஆச்சிரியமாக கேட்டவுடன் அன்று கண்ணன் வீட்டுக்கு ரைட் சென்று வந்தது , கண்ணன் மிரட்டியது எல்லாம் கூறினான்.
ஷிவேந்தருக்கு அவன் காதுகளையே நம்ப முடியவில்லை . இது எப்படி? எப்போது? அவள் , அவன் வீட்டிற்கு வந்த தினமா தான் இருக்கணும் என்ற யூகத்தில் கேட்ட போது அதே நாள் தான் அறிந்து கொண்டான் .
கிளம்பும் போது அவன் அப்பா புகை படத்தை பார்த்ததில் இருந்து தான் மேடம் மூட் அவுட் ஆனதா ? இது தெரியாமல் ? ச பாவம், என் செல்லம் என்று அவளுக்காக வருந்தினாள். அன்றே தீபன் பேச வந்த போது என்ன என்று கேட்டு இருக்கலாமே ? இந்த வாரத்தில் ,ரெண்டு மூன்று தடவை மணிவாசகத்தை சந்திக்க ஷிவானி யாரோ பெரியவருடன் வந்ததை கூறினான்.
அவள் எதுக்கு அப்பாவை சந்திக்கணும் ? அவருக்கும், அவளுக்கும் என்ன ? ஒரு வேலை அவள் தாத்தாவுடன் சென்று இருப்பாளோ !
கண்ணன் பிடிவாதம், பல கோடி வரி கட்ட வேண்டும் என்று தீபன் மூலம் அறிந்து கொண்டான். சின்ன பிரச்சினை என்று எண்ணி இருந்த சிவாவிற்கு இப்ப தோன்றி இருக்கும் பிரச்சினை பூதாகரமா தோன்றியது. அவனுக்குமே அவன் அப்பாவை பற்றி தெரியுமே !
ஷிவானி கோபம், சாதாரண கோபம் எப்படியாவது சரி செய்திடலாம் நினைத்தால் இது எங்கயோ தொடருதே?
பாவம் என்னிடம் சொல்ல முடியாமல் எத்தனை கஷ்டபட்டா என்று ஷிவானிக்காக மனம் உருகியது . இதனால் தான் அந்த அழுகையா ? உங்க வீட்டுக்கு ஏற்ற மருமகள் இல்லை என்ற வசனமா?
தீபன் மூலம், ஆபிஸ் வந்த ஷிவானியிடம் கோபமாக பேசிய மணிவாசகத்தை எண்ணி கோபம் வந்தது . அவள் என்ன செய்வாள் பாவம் . அந்த கண்ணனை பிடித்து உள்ளே வைக்க வேண்டியது தான ?
மணிவாசகம், நேர்மை ,நாணயம், குடும்பம், மானம் ,கௌரவம் பார்த்தால்???? என் காதல் ,கல்யாணம் ! நினைக்கவே அவனுக்கு பயமாக இருந்தது . அவன் ஷிவானி, அவனுக்கு எட்ட கனியாகிவிடுவாலோ பயந்தான் . அவன் அப்பாவிடம் நேரடியாக விஷயத்தை பேசினான் .
அவர் “ஒரு போதும் இது ஒத்து வராது! அந்த பெண் இந்த வீட்டு மருமகளா வரவே முடியாது . என் நண்பன் மகள் தான் இந்த வீட்டு மருமகள் நான் முடிவு செய்து விட்டேன் !”
“அப்பா ப்ளீஸ் பா” என்று கெஞ்சியவுடன் “ எப்படி டா சரி சொல்ல சொல்லற ? இப்படி நான் நேர்மையா இருக்கும் போது, அவன் வீட்டிலே பெண் எடுத்தால் என்னை தப்ப பேச மாட்டார்களா ? அந்த கண்ணனிடம் பணம் வாங்கிக் கொண்டதாக தான் பேசுவார்கள்” .
“ ஊருக்காக பார்க்கிறீங்களா அப்பா? ”
“ஊர் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டும் சிவா, எனக்கு கவலை இல்லை . இன்று நம்மளை பேசுவாங்க , நாளை வேறு ஆள் கிடைத்தால் அவர்களை பேசுவார்கள் .கல்யாணம் என்பது பெண் , மாப்பிளை மட்டும் சேர்த்து வைப்பது இல்லை சிவா ! இரு குடும்பங்களும் ஒன்று சேர்வது .
நாளைக்கு குடும்பத்தில் எதாவது நல்லது கெட்டது நடந்தால் நாம் போக, அவர் வர என்று இருப்போம் . அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சங்கட பட கூடாது சிவா . நடந்த கசப்பை எண்ணினால் உதட்டளவில் கூட சிரிப்பு வராது . உன் மனைவிக்காக நடித்தாலும் அது எத்தனை நாளைக்கு சொல்லு .
இப்ப சொல்லறேன் , என்னால் எப்போதும் கண்ணனிடம், அவன் மகனிடமும் இயல்பா பேசவே முடியாது . என்ன தான் டாக்டர் என்றாலும், அவர்களை குற்றவாளியா தான் பார்க்க தோன்றும் .
இதனால் உனக்கும் உன் மனைவிக்கும் தான் சங்கடம் . தேவை இல்லாத சண்டை வரும் . சண்டை போடவா கல்யாணம் செய்து வைக்கிறோம் . ஒருத்தருக்கு ஒருத்தர் சந்தோஷமாக இருக்க தானே சிவா ! வாழ்நாள் முழுதும் சண்டை வந்தால் நரகம் அல்லவா?”
வருத்தமான ஷிவேந்தர் முகத்தைக் கண்டு “ அவங்க பணம் கட்டினால் யோசிக்கலாம் . அதுவும் உனக்காக ! உனக்காக என்பதை விட அந்த பெண்ணுக்காக தான் . ஆனா….. அது நடக்காத காரியம் சிவா! அவனிடம் இருந்து ஒரு பைசா வாங்க முடியாது ! அந்த பெண்ணும் போராடறா, அவள் தாத்தாவிடம் ரெண்டு முறை ஆபிஸ் வந்தாள்” என்றவுடன் ஷிவானி பக்கம் அவன் மனம் உருகியது .
அவனுக்கு கிடைத்த காதலி போல உலகில் யாருக்கும் கிடைக்காது, மிகவும் அதிர்ஷ்டசாலி என்று பூரித்தான். அவளை அழைத்தாலும் அவள் எடுக்கவில்லை . இதை எல்லாம் ஏன் முன்பே என்னிடம் இவளுக்கு சொல்லணும் என்று தோன்றவில்லை . வீட்டை எதிர்த்தாவது கல்யாணம் செய்து இருக்கலாமே ! நானும் இவளை தப்பா நினைத்துக் கொள்வேன் எண்ணிக் கொண்டாளா ? இல்லை, இவளை வேண்டாம் சொல்வேன் நினைத்தாளா ? அவளை பார்த்தே ஆகணும் முடிவு செய்தான் .எப்படி என்று தான் புரியவில்லை .எதற்காக என்னை தவிர்க்கிறாள்.
என்னை போல என் காதலையும் வேண்டாம் என்று ?
புதிதா முளைத்த அந்த ஜீவாவினால் ?
இல்லை…. அப்படி இல்லை … என் ஷிவானி எனக்கு தான் . அப்படி அந்த ஜீவா முக்கியம் என்றால் அப்பாவிடம் வந்து பேச காரணமே இல்லையே?
அவள் அப்பாக்காகவும் இருக்கலாம் என்று மனதராசு உடனே அடுத்த பக்கம் சரிந்தது . அவன் இனியவளின் மனதில் இருப்பதை அறிய முடியாமல் குழம்பினான்.
எப்போதும் சிரித்து, வீட்டில் எல்லாரையும் சீண்டி விளையாடும் ஷிவேந்தர், உயிர்ப்பே இல்லாமல் வளைய வருவதை கண்டு, மணிவாசகம் “ இன்று மாலை ,உனக்கு பெண் பார்க்க போறோம்! கிளம்பு!” என்றவுடன்
“என்னது? பெண் பார்க்கவா ? விளையாடாதீங்க ! என்னால் முடியாது ! நான் வரவில்லை. நீங்கள் வேண்டும் என்றால் போங்க ”
மணிவாசகம் பலமா சிரித்து, “எனக்கா பெண் பார்க்க போறேன். சத்தமா பேசாத ? உங்க அம்மா அடிக்க வந்திடுவா!”
ஜோக் சொல்லிட்டாராம் ! சிரிக்கணுமா திட்டிக் கொண்டான் .
“ என்ன யோசனை! உனக்காக தான் போறோம். நீ தான் வரணும் ” என்று அழுந்த சொல்லி கிளம்பிவிட்டார் .
அவன் அம்மா விசாலம் “ நான் சொல்லும் பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்வாய் என்று வாக்கு கொடுத்து இருக்க ? உனக்கு கொடுத்த டைம் முடிந்தது . நான் பார்த்து இருக்கும் பெண் தான் உனக்கு மனைவி .பேசாமல் கிளம்பு” .
அண்ணி, பாட்டி நீங்களுமா? எல்லாம் தெரிந்து இப்படி செய்தால் ?
“ உங்க அப்பாவை எதிர்த்து நாங்க ஒன்றும் செய்ய முடியாது. கிளம்பும் வழியை பாரு” என்று பாட்டி விரட்டினாள்.
ஒன்றும் செய்ய முடியாமல், கோபத்தில் அந்த பெண்ணிடமே பேசிக்கிறேன்! அவளே வேண்டாம் சொல்லட்டும் ! கிளம்பும் வேளையில் குணா வந்தான் .
“ என்னடா இப்படி அழுது வடியற ? உன்னை பார்த்தால் சிஸ்டர் இந்த பையனே வேண்டாம் ஓடி போய்ட போறாங்க !”
“அது தான எனக்கு வேண்டும்” .
“போய்ட்டு வந்து இதை சொல்லு பார்க்கலாம் . பெண் அத்தனை அழகு தெரியுமா ?”
“அந்த ரம்பை, ஊர்வசியே நேரில் வந்தாலும் என் ஷிவானி அழகுக்கு ஈடாகுமா ?”
“டைலாக் எல்லாம் பலமா தான் இருக்கு சிவா” .
“ என் ஷிவானி எனக்காக கஷ்டப்படும் போது நான் அவளுக்கு எதையும் செய்ய முடியவில்லை டா! அவ பாட்டி முதலில் பேசுவதாக தெரிவித்தார்கள். இப்போது அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை . அவள் கஷ்டப்படும் போது நான் பெண் பார்க்க கிளம்பினால்! அவள் இதை கேட்டாலே என் குடலை உருவி மாலையா போட்டிடுவா ? ”
ஷிவானி அவனுக்கு ஆசையாக பரிசளித்த சட்டையை மாட்ட சொன்ன குணாவிடம் “ நீயும் ஏன் டா படுத்தற ? அவளை பார்த்து, பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? நான் அப்படி என்ன தவறு செய்தேன் குணா ! எதிலேயும் கவனம் செலுத்த முடியல டா !
பித்து பிடிக்க வெச்சுட்டா! விட்டா நான் கவுன்சிலிங் போகணும் நினைக்கிறேன் ! அவ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது ! இவர்கள் தான் படுத்தறாங்க என்றால் அவளும் படுத்தறா?” என்று கண்கள் கலங்கியது .
அவனை அனைத்து “ டேய், வந்து பேசிக்கலாம் ! அப்பா இன்னும் ஒரே வாரத்தில் கல்யாணம் சொன்னாங்க. அதற்கு பிறகு என்னிடம் எல்லாம் பேச எங்க நேரம் இருக்க போகுது ! வெற்றியை கொண்டாட பெரிய ட்ரீட் வேண்டும். எல்லாருக்கும் இப்படி அமையுமா ?”
கல்யாணம் என்றது மட்டும் தான் அவன் மனதில் நின்றது. என்னது? என்று சிவா அதிர்ந்தான். அதற்கு பிறகு அவனை ஒருவரும் பேசவே விடவில்லை .