12.2:
என்ன தான் சண்டை போட்டாலும் அவள் கால்கள் தானா சிவாவை நோக்கி சென்றது . “சிவா நான் உங்களிடம் பேசணும் ..”
அவன் சிரித்த படி பொக்கே நீட்டி “முதலில் வாழ்த்துக்கள் செல்லம் .எத்தனை பெருமையா இருக்கு தெரியுமா ? ஒரே புகழ் மாலை தான் போங்க !”
ஷிவானி ஆச்சிரியமாக “நீங்க வந்து இருந்தீங்களா சிவா ?”
அவளை முறைத்து “அதற்கு தான உன்னுடன் வந்தேன்” .
மறுபடி ஷிவானி எங்கயாவது மயங்கிடுவாளோ என்று பயந்து தான் சிவா உள்ளே சென்றது! அதை சொல்லாமல் “நான் வராமலா ? வந்து என் பெண்டாட்டி பரிசு வாங்குவதை, அவள் மின்னும் அழகை ஆசை தீர ரசித்துக் கொண்டு இருந்தேனே? என் ஹனி எத்தனை அழகு தெரியுமா ?கண்ணை பிரித்து எடுக்க முடியவில்லை ” என்று செல் போனில் எடுத்த புகை படத்தை பார்த்துக் கொண்டு இருந்தான் .
சிவா உரிமையாக பெண்டாட்டி சொல்வதை கேட்க கஷ்டமா இருந்தது…
“வனி , என்னுடைய சின்ன பரிசு” என்று பிளட்டினத்தால் செய்த செயின், டாலரில் ரெண்டு எஸ் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருப்பதை பரிசளித்தான்.
உடனே “எனக்கு வேண்டாம் சிவா !”
“இன்னமும் கோபமா வனி ! அதற்கு தான் அப்போதே சாரி சொல்லிட்டேனே டா!” அவள் எதிர் பார்க்காத நேரத்தில் அவள் சங்கு கழுத்தில் அந்த சங்கிலியை அணிவித்தான் .
“சிவா என்னதிது !” என்று காத்து தான் வந்தது.
“எப்படியும் நான் தான் இதை அணிவிக்க போறேன்! அது இன்றா இருந்தால் என்ன கியுட் பெண்டாட்டி ?” மறுபடியும் பெண்டாட்டி சொன்னதை கேட்டு அவள் மனம் வலித்தது.
கோபமாக “வார்த்தைக்கு வாரத்தை என்னை அப்படி கூப்பிட வேண்டாம் .என் பெயர் ஷிவானி ! ”
சிவா குரலில் அழுத்தம் கொடுத்து “எப்படி கூப்பிட வேண்டாம் சொல்லற!”
பதில் பேச முடியாமல் சோர்ந்தாள் .உடல் சோர்வோ , மன சோர்வோ , இல்லை திக்கு முக்காட வைக்கும் சிவா அன்போ !எது என்று அறிய முடியாமல் அவள் கண்கள் கலங்கியது. அதை அவனிடம் காட்டாமல் வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டாள்.
சிவா, பக்கத்தில் இருக்கும் காபி டேக்கு போங்க என்று கண் மூடி சாயிந்து கொண்டாள். எதா இருந்தாலும் இவனிடம் இன்றே பேசி விடுவது நல்லது எண்ணி சிவாவிடம் என்ன பேச என்று மனதில் ஒத்திகை செய்து பார்த்தாள்.
**********
சிவா, கடையில் அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து, அவள் பேச காத்துக் கொண்டு இருந்தான் . “சிவா, நான் பேசுவதை கேட்டு கோபம் கொள்ள கூடாது” .
“சொல்லுங்க மேடம் ! நான் கோபப்படாத மாதிரி பேசுங்க பார்க்கலாம்” .அவள் முறைப்பை கண்டு “ஓகே ஓகே பேசு ! உன் மனதை அரிக்கும் பிரச்சினை தான் என்ன ?”
“சிவா , நம்ம காதல்” என்று திக்கும் போது ,மேலே பேசு என்று செய்கை செய்தான்.
“எனக்கு உங்களை கல்யாணம் செய்ய இஷ்டம் இல்லை. இப்படியே பிரிந்து விடலாம்” வறண்ட தொண்டையை தண்ணீர் குடித்து ஈரபடுத்தி “எனக்கு…உங்களுக்கு ஏற்ற பெண்ணை, யாரை வேண்டும் என்றாலும் கல்யாணம் செய்துக் கொள்ளுங்கள்” .
கண்களில் கண்ணீர் பளபளக்க “உங்கள் வீட்டுக்கு ஏற்ற மருமகள் நான் இல்லை . கொஞ்சம் கூட ஒத்து வராது . ஒத்து வரும் பெண்ணா பார்த்து …… நான் மேல் படிப்பு படிக்க போறேன் ! அங்கேயே செட்டில் ஆக போறேன்” .
அவன் பார்வையை கண்டு “கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக்கலாம் என்று இப்ப தான் முடிவு செய்தேன் ! எல்லாரையும் போல சாதாரணமாக குழந்தை குட்டி என்று இல்லாமல் எதையாவது சாதிக்கணும் ஆசையா இருக்கு .. எங்க அப்பா உங்களை கல்யாணம் செய்ய ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்” .
இவளுக்கே இவள் பேசுவது முன்னுக்கு பின்னா தெரியலையா? ரெண்டு வாரம் முன்பு கூட குறைந்து ஐந்து குழந்தையாவது வேண்டும் என்று எத்தனை ஆசையாக பேசினாள். இவள் கண்ணில் இப்போது கூட ஏக்கத்தை காண்கிறேனே. வலி தெரியுதே ! வேண்டாம் என்றால் சந்தோஷமாக பேசி விடை கொடுக்கலாமே … சந்தோஷமா இருப்பது போல நடிக்க கூட வரல ..இவளை எல்லாம் …
“நான் பேசறேன் கண்ணம்மா ! கண்டிப்பா சம்மதம் வாங்கிடலாம்” என்று உறுதியாக பேசினான்.
ஷிவானி கண்கள் கலங்கி கண்ணீர் முத்துக்கள் இப்ப விழுகவா அப்ப விழுகவா ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தது .. “எனக்கே இஷ்டம் இல்லாத போது என்ன பேசுவீங்க ! தேவை இல்லாத சண்டை வேண்டாம் .ஒத்து வராது ! இதோட முடித்துக் கொள்ளலாம்”.
ஷிவேந்தர் காட்டமாக “இத்தனை நாள் பழகியது”
முதலில் திணறிய ஷிவானி பின்னர் இயல்பாக “அது எங்க அப்பாவை எதிர்க்கணும் , எனக்கு பிடிக்காத இடத்தில் சம்மந்தம் செய்தார் என்ற காரணத்துக்காக கூட என் மனம் உங்களை விரும்பி இருக்கலாம் . நான் அவரை பழி வாங்க கூட அமைந்த சந்தர்ப்பமா எண்ணி இருக்கலாம் . உங்களை பகடைக்கையாக எண்ணி தான்…….” அவன் கண்களை கண்டு அவளால் மேலே பேச முடியவில்லை.
சிவாவை இதுவரை அவள் ஒருபோதும் அப்படி நினைத்தது இல்லை . அவள் உயிரே அவன் தான! அவள் பேச்சை வைத்தே பொய் சொல்லுகிறாள் என்று கண்டு கொண்டான் . அவள் வருத்தப்படுவது பொறுக்காமல்
“அப்படி நீ நினைத்தால் எனக்கு ஒன்றும் இல்லை. ஆனா நீ சொன்ன காரணம் இப்போதும் அப்படியே தான் இருக்கு .என்னை கல்யாணம் செய்தால் தான் உங்க அப்பாவை பழி வாங்கினது போல ஆகும்.. அது எல்லாம் விடு… உங்க அப்பா பழி எல்லாம் எனக்கு தேவை இல்லாதது..
இப்பவும் சொல்லறேன் நான் உன்னை உயிரா தான் காதலிக்கிறேன் ! காதலிப்பேன் ! நீயும் அப்படி தான் என்று எனக்கு உறுதியாக தெரியும். அப்படி இல்லை என்றாலும் உன்னை மாற்றிவிட முடியும் நம்பிக்கை இருக்கு கண்ணம்மா ! ஏதேதோ எண்ணி குழம்பிக் கொள்கிறாய் !”
“உங்களுக்கு ஏன் புரிய மாடீங்குது! ஒத்து வராது என்றால் விட வேண்டியது தான ?” கண்ணீர் முத்துக்கள் அருவியா பொழிந்தது… இவன் முன்பு இப்படி அழுது வேற வைத்தால்? அவசரமாக துடைத்துக் கொண்டாள்.
கோபத்தை கட்டுபடுத்தி அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஷிவேந்தர் “எல்லாம் முடிந்ததா ? ப்ராக்டிஸ் செய்தது, மனதில் ஒத்திகை பார்த்ததை எல்லாம் சொல்லி முடிச்சுட்டியா ?”
அவள் முழிப்பதை கண்டு மனதில் சிரித்து “குட் ! இனி நீ , நான் பேசும் போது குறுக்கே பேச கூடாது . மூன்று மணி நேரம் முன்பு பிடித்த என்னை, இப்ப பிடிக்காமல் போக காரணம் என்ன? தெரிந்து கொள்ளலாமா?”
அவனே “நீங்க பேசினதால் தான் கோபம் என்று சொல்லி மேலும் வெறுப்பேற்றாதே! அப்பா ,ஆத்தா பழி வாங்குவது என்று பிதற்றாதே ! உப்பு சப்பு இல்லாத காரணத்தை அடுக்காதே வனி ! உருப்படியான காரணத்தை சொல்லு ! இப்பவே விலகிக்கொள்ளலாம்”
அவனிடம் சொல்ல முடியாத எதோ ஒன்று ஷிவானியை டிஸ்டர்ப் செய்யுது என்று கண்டு கொண்டான். அது என்ன என்று யோசிக்க முடியாமல் மண்டையை பிய்த்துக் கொண்டு இருந்தான் . கிளம்பும் வரை நல்லா தான இருந்தா?
“ இந்த உலகில் நான் மட்டும் தான் பெண்ணா ? வேற பெண் ….”
எத்தனை பெண்கள் இருந்தால் என்ன ? நீ மட்டும் தான் என் மனைவி ! உனக்கு மட்டுமே அந்த தகுதி என்று மனதில் சொல்லிக் கொண்டாலும் வெளியே
வீராப்பா “ நீ சொன்னாலும், இல்லை என்றாலும் எனக்கு ஏற்ற பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்வேன்”
அவள் சோர்ந்த முகத்தைக் கண்டு “ஏன் கண்ணம்மா ,எதற்கு இந்த குழப்பம் .யார் என்ன சொன்னாலும் உன்னை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று உனக்கே தெரியுமே ! காதலிக்கும் போது உன் எண்ணத்தில் வராத என் அப்பா, உன் அப்பா இப்ப எங்க வந்தாங்க ! எங்க வீட்டுக்கு ஏற்ற மருமக நீ இல்லை எப்படி கண்டு கொண்டாய் ! எங்க வீட்டில் எதாவது அளவு கோள், மீட்டர் இருந்துதா? அப்படி எதுவும் இருந்ததா தெரியலையே?”
அவள் குழப்பமான முகத்தைக் கண்டு “வனி , உன்னை நான் படிக்க வேண்டாம் ஒரு போதும் சொன்னது இல்லையே ! நீ எங்கே வேண்டும் என்றாலும் போய் படி .நானும் உன்னுடன் சந்தோஷமாக வருகிறேன்” .
“எனக்கு தான் இஷ்டம் இல்லை சொல்கிறேனே !”
லூசு இன்று என்னை படுத்தவே இப்படி செய்யணும் பிளான் போட்டு வந்துட்டாளா ? சோதனை டா சிவா ! அவள் மேனியில் தழுவி இருக்கும் அவன் கொடுத்த சேலையை பார்த்துக் கொடுத்து வெச்ச புடவை என்று பெருமூச்சு விட்டான் .
ஒரு கட்டத்துக்கு மேல் , இவ ஒத்து வர மாட்டா , இவளுக்கு கண்டிப்பா வைத்தியம் செய்து ஆகணும் எண்ணி “சரி வனி, நீ இத்தனை பேசின பிறகு ,நீ சொன்ன படியே நாம் பிரிந்திடலாம். எனக்கு ஒன்றும் இல்லை. உனக்கு இஷ்டம் இல்லாத போது நான் உன்னை கம்பெல் செய்வது சரி வராது. அப்படி செய்தாலும் எத்தனை நாள் அது நிலைக்கும் சொல்லு .
என்ன முன்பே சொல்லி இருக்கலாம் . இனி எங்கள் வீட்டில் கேட்டால் ? thats ok .அது ஒரு பிரச்சினை இல்லை .பிடிக்கவில்லை .பிரிந்துவிட்டோம் சொல்லிடறேன்!” கூலாக “வேற ஒன்றும் இல்லையே !”
ஷிவானி பேச மறந்து நின்று கொண்டு இருந்தாள். இவன் பேசுவது எல்லாம் …அப்ப காதல் என்றது …
அவள் பார்வையை கண்டு “என்ன ?முழிக்கிற ? அப்ப உன் காதல் கேட்கிறியா? உனக்கே அது பெரிதா தோன்றாத போது… எனக்கும் இல்லை” என்று உதட்டை பிதுக்கினான்.
“ Lets part as good friends !” என்று அவள் கண்களை பார்த்தபடி குலுக்கிய கைகளை விடவில்லை .. அவள் சயினை காட்டி , ‘இந்த செயின்’ என்பதற்குள்…
“எனக்கு இந்த டிசைன் பிடித்து இருக்கு. அதற்கு பதிலா இந்த செயின் வெச்சுக்கோங்க” என்று அவசரமாக அவள் பையில் இருந்த செயின் எடுத்துக் கொடுத்தாள்.
“ நான் என்ன வட்டி கடையா நடத்தறேன்” என்று முறைத்தவுடன் இன்று வெள்ளி கிழமை, நகை கழட்ட கூடாது . நாளை உங்களை செயின் தேடி வரும் என்று கெட்டியாக அதை பிடித்துக் கொண்டாள் .
சிவா உள்ளுக்குள் சிரித்து “சரி, உன் இஷ்டம் . நீ தரும் வரை உன் நகை என்னிடம் இருக்கட்டும் .உனக்கு நான் ஏன் செலவு செய்யணும்” என்றவுடன் அவளை யாரை அறைந்தது போல துடித்தாள் .
“எந்த உதவி தேவை என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். என் கார்ட் !” அதை படிக்காமல் அப்படியே பர்ஸ் வைத்துக் கொண்டாள்.
“கடைசி கேள்வி , மருத்துவ தொழிலே வேண்டாம் என்ற நீ , உடனே அதில் மேல் படிப்பு படிக்க போற சொன்ன காரணம் என்ன ஷிவானி ! என் மீது புதிதா தோன்றிய கோபத்தினால் தான?”
“அது என் சொந்த விஷயம் !”
தோள்களை குலுக்கி ‘ உன் இஷ்டம்’ .அதற்குள் அவனுக்கு போன் அழைப்பு ! குணா தான் பேசியது . எடுத்தவுடன் “சொல்லு அம்மா ! அக்கா எப்படி இருக்கா ?டாக்டர் என்ன சொன்னங்க !”
அந்த பக்கத்தில் குணா, “டேய் நான் உன் நண்பன் டா!”
“தெரியும் ! சொல்லு மா!”
இவனுக்கு என்ன ஆச்சு !
“நீ சொல்லும் பெண்ணே ஓகே! இங்க எதுவும் ஒத்து வரல ! எப்ப கல்யாணம் வைக்கலாம் கேட்டு வா !அந்த பெண் மிது நம்பரை வாங்கி கொடு!”
அந்த பக்கம் குணா “டேய் !என்ன டா சொல்லற ! எந்த பெண் . யாரு மிது.”
“மிருதுளா பேருக்கு ஏற்றது போல மிருதுவா தான் இருப்பா! ஷிவானியை பார்த்து இங்க இருப்பவர்களை போல முள்ளா தைக்க மாட்டாள்.”
………
“நாளைக்கு நான் வரணுமா ?”
அந்த பக்கம் குணா, “டேய் லூசு ! யாரோட பேசுவதா நினைத்து பேசற!”
ஷிவானியை பார்த்த படி “இன்றே நாள் வேஸ்ட் ஆகிடுச்சு மா! நாளைக்கு வேலை இருக்கு .……..
நாளை மறுநாள் கிளம்பி வரேன் . ஒரு நாள் அக்காவுடன் இருந்துவிட்டு அடுத்தநாள் மிதுவை பார்த்து திரும்பிடலாம்! ச்வீட் மம்மி, ஐ லவ் யு” என்று முத்தம் கொடுத்தவுடன் அந்த பக்கம் குணா ,”சீ பைத்தியகாரா ?என்ன டா செய்யற ? காலையில் பேசும் போது கூட நல்லா தான இருந்த?”
ஷிவானி பொறுமை பறந்தது . எங்கே அவன் முன்னால் மறுபடியும் அழுதிடுவாளோ பயந்து.. நான் கிளம்பறேன்
அவள் கையை பிடித்து ஒரு நிமிஷம்….
வேற வழி இல்லாமல் அமர்ந்து கொண்டாள்.
“போட்டோ வேண்டாம் ! நான் தான் நேரிலே பார்த்து விட்டேனே ! செம பிகர் !நல்ல கலர் ! அழகு !எனக்கு ஏற்ற உயரம் ! முக்கியமா மூளை இருக்கு .தெளிவா பேசுவா! முதலிலே சரி சொல்லி இருக்கனும். அதற்குள் கொஞ்சம் தடுமாற்றம். அக்காவை பார்க்க வந்து இருக்காளா? நீ ஆசை பட்டது போல உனக்கு ஏற்ற மருமகள் வர போறா ..சந்தோசம் தான!”
குணா ,கோபத்தில் திட்டி, கடைசியில் போனை முயுட் போட்டு விட்டான். ரெண்டு நிமிடம் கழித்து ஆன் செய்தவுடன் அதே போல தான் பேசிக்கிட்டு இருந்தான் .
“டேய் எருமை ,என்ன தான் டா நினைத்துக் கொண்டு இருக்க !லூசு ! லூசுகளோடு சேர்ந்து லூசாகிட்டயா ! பரதேசி ! கையில் கிடைத்த கைமா தான் ! உன்னை ஒரு வழி செய்யாம விடமாட்டேன் ! எங்க இருக்க சொல்லு ! பேசிக்கிட்டு இருக்கேன் ! சின்ன பிள்ளை தனமா விளையாடிக்கிட்டு இருக்க ! உன் போதைக்கு நான் தான் ஊறுகாயா .. வேற யாரும் கிடைக்கலையா? வரேன் ! இப்ப கிளம்பி வரேன் !உன்னை கும்மிர கும்மில்… ”
சிவா “இப்பவே வா !எனக்கு வெட்கமா இருக்கு”
குணா அலறியபடி, என்னது வெட்கமா ? ஐயோ! நான் என்ன சொல்லறேன் இவன் என்ன பேசறான் ! படுத்தாத டி சிவா செல்லம் !ஒழுங்கா பேசு.
“நான் இப்ப காபி டே இருக்கேன். அப்புறமா தனிமையில் தனியா அழைத்து பேசறேன். எனக்கு அவளை பார்க்கணும் ..முடிந்தால் வீடியோ சட் செய்யறேன் சொல்லு ” என்று ஷிவேந்தர் வெட்கத்தால் டேபிளில் கோலம் போட்டான் .
அதை பார்க்க ஷிவானிக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. கோலம் போடும் கையை உடைத்தால் என்ன என்று கைகளையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
குணா கடைசியாக ஒரு வழியா கண்டு பிடித்தான். ஆஹா! “டேய் சிவா, பக்கத்தில் ஷிவானி இருக்காங்களா!”
வேகமாக “ஆமாம் அம்மா !”
“அடப்பாவி! முதலிலே சொல்வதற்கு என்ன ? கொஞ்ச நேரத்தில் முடி எல்லாம் பிய்த்துக் கொண்டது தான் மிச்சம்.”
“இங்க என் நிலைமை அதை விட மோசம் ! சரி அம்மா ! அப்ப காரிலே வந்திடறேன் !அக்கா ரஞ்சியையும் பார்த்தது போல ஆச்சு ..கூடவே வெட்கப்பட்டு “மிதுவை பார்த்தது போல ஆச்சு ! அவளை கேட்டதா சொல்லு” ஏதோ மெசேஜ் வந்ததை பார்த்து ” மெசேஜ் அனுப்பிட்டயா ! செம ஸ்பீட் அம்மா !அதற்குள் நம்பர் அனுபிட்ட ! நான் பேசிக்கிறேன் ! இப்ப இல்லை ! அவளிடம் ஒன்பது மணிக்கு சொல்லு! இனி அந்த நேரத்தில் ப்ரீ தான்! நீ கவலை படாத! உனக்கு பிடித்தால் எனக்கு பிடித்தது போல தான்” வைத்தான் .
என்ன பாடு படுத்தறான் ! நீ காரிலே போ ! இல்லை பறந்து போ !இப்ப என்னை ஆளை விடு என்று குணா போனை தூக்கி போட்டான்.
எதிரிலே வசீகரிக்கும் சிரிப்பில் மயக்கும் ஷிவேந்தரை கண்டு, மிதுவாம் மித்து. இப்ப இவனை ரெண்டு குத்து குத்தினால் என்ன ? என்று கூட ஷிவானிக்கு தோன்றியது .
வேண்டும் என்றே பேசி கடுப்பேத்தறான் ! அவன் மண்டையில் ஓங்கி குட்டினால்? என்னுடன் பேசும் நேரத்தில் அந்த மிதுவுடன் பேசரானாம். எங்கே அங்க இருந்தால் வீண் சண்டை வருமோ நான் கிளம்பறேன் நகரும் போது
அவள் கைகளை பிடித்து “சரி ஷிவானி , ஆள் த பெஸ்ட் ! உன் எதிர் காலம் நல்லா அமைய வாழ்த்துக்கள் . நீ என்னை வாழ்த்தாம போற !” என்று நகர விடாமல் தடுத்து நிறுத்தினான்.
ரொம்பா முக்கியம் முனங்கி அவனை போலவே சொல்லி வைத்தாள்.
“ நல்ல கணவனா அமையட்டும் . என் வாழ்க்கையில் வந்த முதல் காதல், முதல் முத்தம் எனக்கு எப்போதும் மறக்காது .. என் கல்யாணத்துக்கு கண்டிப்பா நீ வரணும் ! அப்புறமா மிது போட்டோ அனுப்பறேன் !”
நான் இவனை விட்டு பிரிவதை பற்றி இவனுக்கு துளி கூட வருத்தம் இல்லையா ? இத்தனை கூலா இருக்கான் என்று அவளால் மனதில் பொறியாமல் இருக்க முடியவில்லை .
சிரித்து, ‘குட் பாய் ஷிவானி, ஒரு ஹக்’ என்றதும் முறைத்துக் கொண்டு சென்றாள்.
****
வீட்டிற்குள் ஷிவானி நுழையும் போதே கண்ணன் எத்தனை தடவை அழைக்க ? ராஜ், அவன் மனைவியும் வந்து இருந்தார்கள் .உன்னை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தான் .தேவா வர இன்னும் ஆறு மாத காலம் ஆகுமாம் .
ரொம்ப முக்கியம். அவன் வந்தால் என்ன? அப்படியே போனா என்ன ?என் உயிரை எதுக்கு வாங்கிறான் .
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லணும் தெரியாது என்று கண்ணன் உறுமலாக கேட்டவுடன் “நான் கல்லூரியில் இருந்தேன்” என்று பட்டும் படாமல் பதில் அளித்தாள்.
ஆடிட்டர் பாண்டு, எத்தனை கணக்கு, வரி கட்ட வேண்டும் என்று விளக்கிக் கொண்டு இருந்தார் . கண்ணன் முடியவே முடியாது. அந்த மணிவாசகம் மனது வைத்து இருந்தால், அவன் பையில் பணம் போட்டு பேசாமல் போய் இருக்கலாம். எல்லாம் அவனால் தான் என்றது அவள் காதில் தெளிவாக விழுந்தது .
இது முடிவே இல்லாத சண்டை? இதனால் அவள் வாழ்க்கை?
இரவு ஒன்பது மணிக்கு வழக்கம் போல சிவா கால் செய்வான், பேசுவான் எதிர் பார்த்தாள். எனக்கு எதுக்கு அழைக்க போறான். அந்த மிருதுளாவுடன் பேசிக் கொண்டு இருப்பான் . அதுவும் வீடியோ சட்! என்று பொறாமையில் பொங்கிக் கொண்டு இருந்தாள்.
அவள் செய்தது சரியா தவறா என்று யோசிக்க முடியாமல் குழம்பி, போனை வெறித்த வண்ணம் அமர்ந்து கொண்டு இருந்தாள். அவள் மனதில் ஒரே கேள்வி தான் !
ஷிவேந்தர் இல்லாமல் இருக்க முடியுமா ?
வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்திலே சிவாக்கு அழைக்க எண்ணி கைகள் துடித்துக் கொண்டு இருக்கிறதே ! சலித்தபடி போனை எடுப்பதும் வைப்பதுமாக இருக்கிறாள் . வாழ்நாள் முழுதும் அவளால் இப்படி இருக்க சாத்தியமா ?
இதற்கு வேற வழியே இல்லையா?
என் காதல் ? இப்போது தான் துளிர் விட்டுக் கொண்டு இருக்கிறது .துளிர்த்த காதலை எப்படி பாதுகாக்க ! என்னால் முடியுமா ? ஏனோ அந்த நிலை அவளுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது .