மருது தன் தங்கையை பார்க்க, பரிதி அவனை பார்த்து, பாப்பாவுக்கு இனி பிரச்சனை இருக்காது. அவனை பிடிக்கும் வேலையை மாப்பிள்ள பசங்க பார்த்துக்கிறாங்கல்லப்பா. நீ உன் வாழ்க்கையை பாரு.
“இப்படி சொல்றீங்க?” அவள் என்னுடன் பிறந்தவள். என்ன தான் வாய் பேசிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் பசங்க யாரும் அதிகமாக சீண்டியது கூட இல்லை. அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். அந்த பொண்ணுக்கு பதில் இவள் மாட்டி இருந்தால்..என மருது கண்கலங்க, துளசிக்கு தான் குற்றவுணர்வாகிப் போனது.
அவள் விடுதியில் இருந்ததால் தான அவ்வளவு ஈசியாக உள்ளே வந்திருக்காங்க. மருது வீட்டில் அவனுடன் இருந்திருந்தால் அவளுக்கு இந்த பிரச்சனை வந்திருக்காது. எல்லாம் என்னால் தான் என அவள் மனம் அடித்துக் கொண்டது.
வற்றிய தொண்டையுடன் அழ கூட முடியாமல் கண்ணீருடன் தலை கவிழ்ந்து அமர்ந்தாள் துளசி. அன்னம் அவளது கையை தொட, அவர் தோளில் சாய்ந்து கொண்டாள். இதை பார்த்த ரம்யா, ப்ளீஸ் பழைய விசயத்தை விட்றலாமே! எனக் கேட்டாள்.
அனைவரும் துளசியை பார்த்து விட்டு அமைதியானார்கள்.
தனியே சென்ற மகிழன் திலீப்பிடம் விசயத்தை கேட்க, டீன் அவனை பற்றி பேசியதை கூறினான்.
உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. நம் எதிரிக்கு சிறிய துரும்பு கிடைத்தாலே ஆயுதமாக்கிடுவாங்க. அந்த துரும்பாக என்னையும் பயன்படுத்தினால்..அவங்க வழிக்கு போனால் நான் நம்ம குடும்பத்தில் இருக்க முடியாது. அவங்களுக்கு எதிராக செயல்பட்டாலும் நம் குடும்பம் தானே பாதிக்கப்படும். அதனால் தான் வேலையை விடுவதாக சொன்னேன்.
ம்ம்..சரிதான். ஆனால் நீ சேர்ந்து ஒன்றரை வருடம் தான் ஆகுது. வெளியே வந்தால் இங்கே போல் வேலை இருக்காது. ரொம்ப கஷ்டப்படணும்.
ம்ம்..நான் தயாராக தான் இருக்கேன். அதுக்காக என்னால சுருதியையோ எனக்கு கிடைத்த குடும்பத்தையோ விட முடியாது என மகிழன் கூற, அவனை அணைத்துக் கொண்ட திலீப்..ரம்யா விசயத்தை நான் பார்த்துக்கிறேன். நாம் சேர்ந்து ரிசைன் செய்தால் அவனுக வில்லங்கம் பண்ணுவானுக. அது உனக்கு பிரச்சனையாகும். அதனால நீ முதல்ல ரிசைன் பண்ணு.
“காரணத்திற்கு என்ன செய்வது?” மகிழன் கேட்க, சிரித்த திலீப்..ஸ்பரோவ யூஸ் பண்ணிக்கோ..
“என்னது? அவளையா?”
ஆமா, அவ ரொம்ப தொந்தரவு செய்வதாக சொல்லு..
ஆனால் அவளை வேலையை விட்டு நிறுத்தீட்டாங்கன்னா? மகிழன் கேட்க, அது முடியாது. அவ உனக்காக தான் இந்த ஹாஸ்பிட்டலுக்கே வேலைக்கு வந்திருக்கா. அவளுக்கு சொந்த ஹாஸ்பிட்டலே இருக்கு.
“என்ன?” மகிழன் அதிர்ந்தான்.
ம்ம்..
எந்த ஹாஸ்பிட்டல்?
அப்சரா ஹாஸ்பிட்டல் ஃசீஃப்போட பொண்ணு அப்சரா அவ தான்.
“அப்சராவா?” அப்ப ஆகாஷவாணி..
டூப் பண்ணி இருக்கா. சனா அப்பாவுக்கே தெரியாது.
“அவள வச்சா?”
ஆமா, அவங்க ஹாஸ்பிட்டல் தான நாம சேரணும்.
“என்னது?” சுருதிக்கு தெரிஞ்சது என்னை கொன்றுவா என மகிழன் சொன்ன விதத்தில் திலீப் சிரித்தான்.
அவள் நாளை நம்ம ரம்யா வீட்ல தான் இருப்பா. அவள் முன் வைத்தே நாம பேசுவோம். அப்புறம் சுருதிக்கு அவளை அறிமுகப்படுத்திரு என சொல்ல, வேற வினையே வேணாம் எனக்கு என தலையில் கை வைத்தான்.
மகிழ் கையை எடுத்து விட்டு, அப்சராவுக்கு உன் மேல க்ரெஷ். அவ்வளவு தான். மத்தபடி காதலெல்லாம் இருக்காது. அதனால சுருதிக்கிட்ட இன்று இரவே அவளை பற்றிய விசயத்தை மறைக்காமல் பேசி சம்மதிக்க வச்சிரு.
“அவ என்னை கைம்மா பண்ணப் போறா?” அவங்க மீட் பண்ணட்டும் அப்புறம் பார்க்கலாம்.
“எதை பார்க்க போறீங்க?” என மகிழன் கேட்க, அப்சரா உனக்காக மட்டும் வரலை. வேறேதோ விசயமும் இருக்கு என்றான்.
என்னமோ சுருதிக்கிட்ட வசமா மாட்ட போறேன் என இருவரும் வந்தனர்.
“என்னப்பா பேசிட்டீங்களா?”
ம்ம்..பேசியாச்சே..என மகிழன் சுருதியை பார்த்தான். அவள் புருவம் உயர்த்த, அவன் ஒன்றுமில்லை என கண்ணசைத்தான். திலீப் சிரிப்பதையும் பார்த்து சுருதி அவளாகவே மகிழனிடம் வந்தாள்.
மச்சான்..கொஞ்சம் அவளுடன் பேசும் போது கூட இருங்களேன்.
“காதலர்களுக்குள் நான் எதற்கு?” என திலீப் நகர்ந்தான்.
“என்னாச்சு?” சுருதி கேட்க, மாப்பிள்ள..நாளைக்கு பேசிக்கலாம் என சுருதி அம்மா சொல்ல, அன்னம் புன்னகையுடன் “போகலாமாப்பா?” என அவர்களிடம் வந்தார்.
அம்மா, நான் சுருதிகிட்ட முக்கியமான விசயம் பேசணும்.
சரி பேசிட்டு சீக்கிரம் வந்திருப்பா என பரிதி சொல்ல, சரிப்பா என மகிழன் எச்சிலை விழுங்கிக் கொண்டு அவளை பார்த்தான்.
“அக்காவுக்கு தான் எல்லாம் நல்ல படியா செஞ்சுட்டீங்க? நெக்லஸூக்கு கூட என்னிடம் கொடுத்துட்டீங்களே! இதுக்கு மேல பயப்பட என்ன இருக்கு?”
சுருதி, நான் சொல்வதை நம்பு. நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன். இதை எப்போதும் மனசுல வச்சுக்கோ..
“அதான் தெரியுமே!” என காலை ஆட்டிக் கொண்டே அவனை பார்த்தாள்.
அது வந்து சுருதி என மகிழன் அப்சரா பற்றி சொல்ல, ஓ..அப்படியா? சாருக்கு அந்த பொண்ணு மேல விருப்பம் இல்லைன்னா ஓ.கே தான்.
பிளான் இன்னும் போடலை. அதை உன்னோட திலீப் மாமா தான் சொல்லப் போறாங்க. எனக்கு ஐடியா இல்லை.
மீனை போட்டு திமிங்கலத்தை பிடிக்க பாக்குறீங்க? ம்ம்..ஆல் தி பெஸ்ட்.
நீயும் வரணும்.
நான் வந்து என்ன செய்றது? எனக்கு வேலை இருக்கே! இந்த டிசைனிங் கம்பெனி ஆரம்பித்ததிலிருந்து ஒரே பிஸி தான். ஆர்டர்ஸ் நிறைய இருக்கு. கிளைண்ட் மீட் பண்ணனும். இப்ப முதல்ல மாதிரி இல்லை. எல்லா இடத்திலும் எங்களுடைய ஆடை தான் பேமஸ்..
புரியுதும்மா..ப்ளீஸ் எனக்காக வாவேன். மாமா பிளான் சொல்லட்டும். அப்புறம் நீ உன் வேலையை பாரேன். எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. அன்னம்மா, பரிதிப்பா எங்களை பிள்ளைங்க போல நல்லா பார்த்துக்கிறாங்க. என்னோட சொந்த அம்மா, அப்பாவை இழந்த மாதிரி உன்னை இழந்திடக் கூடாது. அதனால தான்..
“என்ன பேசுறீங்க?”
அப்சரா எப்படின்னு எனக்கு முழுசா தெரியாது. எனக்கு எப்போதும் நீ மட்டும் தான். இதை மட்டும் மறக்காத. அவ ஏதாவது சொன்னான்னு என்னை விட்டு போயிட மாட்டேல்ல என மகிழன் கண்கலங்க, சின்னப்பையன் போல அழுறீங்க? என்ன நடந்தாலும் நான் போக மாட்டேன். நீங்களும் போகக் கூடாது.
ம்ம்..என்று மகிழன் குரல் வாட்டமாக வர, சுருதி அவனை அணைத்து, “எனக்கு இந்த மகிழ் தான் என் வாழ்க்கை” என்றாள். அவனும் அணைத்தான்.
சரி, போய் தூங்கு என இருவரும் சென்றனர்.
விகாஸ் படுத்தவுடன் அவனை கீர்த்தனா நினைவு வந்து வாட்டியது. கோவிலில் வைத்து இருவரின் சண்டையும், விகாஸின் சீண்டலிலும் கீர்த்தனாவிற்கு அவனை பிடித்திருக்கும்.
கதிரவன் தன் போர்வை சுருட்டி மேக மனைவியிடம் மறைந்து கொண்டிருந்த நேரம் கம்பெனி வேலைகளை முடித்து விட்டு காரில் பாடலை ஒலிக்க விட்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் விகாஸ்.
திடீரென ஒரு பொண்ணு அவன் காரின் முன் வர, சடாரென பிரேக்கிட்டு அவளை இடிக்காமல் நிறுத்தினான். விகாஸ் திட்ட கார்க்கண்ணாடியை இறக்க, கீர்த்தனாவை பார்த்து அதிர்ந்தான்.
பயமும் பதட்டமுமாய் வியர்த்து ஒழுக காரின் முன் நின்றாள். படாரென கதவை திறந்து விகாஸ் வெளியே வந்தான். ஒருவன் கையில் ரோஜாவுடன் நின்றிருந்தான். “இவனை பார்த்து எதுக்கு பயப்படுகிறாள்?” என விகாஸ் பார்க்க, அவள் திரும்பி நின்றதால் விகாஸை பார்க்கவில்லை.
ரோஜாவை அவன் கீர்த்தனா மீது கவிழ்த்த அவன் முயன்ற போது அவனை தள்ளி விட்டு திரும்பியவள் விகாஸை பார்த்து, மாமா..அவன் என்னை தொந்தரவு செய்கிறான் என பயத்தில் அவனை அணைத்தாள்.
விகாஸ் அதிர்ந்து நிற்க, அவனோ மீண்டும் ரோஜாவை அவள் கையில் கவிழ்க்க முயல..அவளை இழுத்து பின் நிற்க வைத்தான் விகாஸ்.
ஹேய், “யாருடா நீ?” போ..என விகாஸ் சொல்ல, பாஸ் அந்த பொண்ணை விடுங்க. அவளோட விளையாட எனக்கு பிடிச்சிருக்கு.
“வாட்?” என அவன் கையிலிருந்த ரோஜாவை ஆழ்ந்து பார்த்தான். அது ரோஜாவே இல்லை. டெஸ்ட்டியூப் போல் இருந்திருக்கும் போல..ஏதோ லிக்விடால் அதனை பூவாக்கி அதில் எதையோ வைத்திருந்தான்.
“என்னடா அது?” என விகாஸ் அதனை பிடுங்க எண்ணினான்.
வேண்டாம் வேண்டாம் என அவன் முன் வந்து கீர்த்தனா அவளை தடுத்தான்.
இது மெக்னீசிய எரிபொருள். அந்த வினை நம் கையில் பட்டால் தீ பிடிக்கும் என கீர்த்தனா விளக்க, அவன் அவள் கையில் ஊற்ற வந்தான். கீர்த்தனா கை மீது விகாஸ் கையை வைக்க, கையில் அந்த வினை படவும் தீயாக மாற உடனே கீர்த்தனா தன் கையால் அவன் கை மீது கையை வைத்தாள்.
ஹே பப்ளி, “என்ன பண்ணீட்ட?” விகாஸ் பதற, அவள் வலி பொறுக்க முடியாமல் அழுதாள். விகாஸிற்கும் வலி உயிர் போனது.
“இவ்வளவு வீரியமானது இவனுக்கு எப்படி? பள்ளியில் உன்னுடன் படிப்பவன் தான?”
ஆமா என அழுது கொண்டே அவள் தலையசைக்க, ராஸ்கல் என அவனை அடித்து நொறுக்கினான்.
பப்ளி, வா..போகலாம் என காரை எடுக்க முயல அவனால் முடியவில்லை. இவளாலும் முடியவில்லை. அவளோ வலி பொறுக்காது அழுதாள். அவன் ஸ்டியரிங்கை குத்தினான். அவளை இழுத்து வெளியே வந்து அவனை மீண்டும் மிதித்து தள்ளி விட்டு அருகே இருந்த கிளீனிக் சென்று அதற்கான மருந்தை போட்டுக் கொண்டனர்.
கீர்த்தனா அழுது அழுது சோர்ந்து விட, அவளை தூக்கி வந்து காரில் விட்டு, “நீ மட்டும் எப்படி இவனிடம் மாட்டுன?” என கடிந்தான். அவள் பதில் சொல்லும் நிலையிலே இல்லை.
கீர்த்தனாவை தமிழினியன் வீட்டில் விசயத்தை சொல்லி விட்டு அவன் வீட்டிற்கு வந்தான். அன்று இரவு முழுவதும் அவனை மீறி அவள் தான் அவனை ஆக்கிரமித்திருந்தாள். நெஞ்சு கனக்க நடந்ததை எண்ணிக் கொண்டிருந்தான் விகாஸ்.
ரோஹித் அவன் அறைலிருந்து வெளியே வந்தான்.
“என்ன அதிசயம்?” அண்ணா இன்னும் நேரம் இருக்கு. “அதுக்குள்ள எழுந்துட்ட?” முக்தா ரோஹித் பின்னே ஓடினாள்.
நின்று அவளை பார்த்து முறைத்து விட்டு, கீழே காபி பருகிக் கொண்டிருந்த வினித்திடம் சென்று, நான் உங்களிடம் தனியாக பேசணும் என்றான்.
எல்லாரும் அங்கே தான் கூடி இருந்தனர். யுக்தாவும் அங்கே தான் இருந்தாள்.
“என்னிடமா?” வினித் கேட்க, “ஆம்” என தலையசைத்தான் ரோஹித்.
வினித் அவன் அறைக்கு ரோஹித்தை அழைத்து சென்றான். அங்கே கண்ட கிதாரை பார்த்து, “நீங்க ப்ளே பண்ணுவீங்களா?” எனக் கேட்டான்.
“உங்களோட ப்ரெண்டு கார்த்திக்கேயனும் என் அக்காவும் காதலிச்சாங்களா?”
ம்ம்..எதுக்கு பிரிஞ்சாங்கன்னு தான கேட்க போற? என்று வினித் கேட்க, ம்ம்..சொல்லுங்க?
எனக்கு தெரியாது.
தெரியாதா?
ஆமா, தெரியாது. அவங்க பிரிந்த அன்று தான் யுக்தாவை கடைசியா பார்த்தோம். இருவரும் அதற்கு முன் இரண்டு நாட்களாக சரியாக பேசவில்லை. சும்மா தான் கோபமா இருக்கும்ன்னு எண்ணினோம். யுக்தா சென்ற பின் தான் அவங்க உண்மையிலே பிரிஞ்சுட்டாங்கன்னு தெரிஞ்சது..
“எதுக்குன்னு ஏதாவது காரணம் தெரியுமா?”
எதுக்கு? கார்த்திக்கிற்கு அவன் வீட்ல பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க. முடிவாகும் நிலையில இருக்கு என வினித் சொல்லிக் கொண்டிருக்க தியா கதவை தட்டினாள்.
வினித் அவளை பார்த்து, வா தியா.. அழைத்தான். அஜய்யின் கண்கள் ஊடுருவலாக தியாவை தீண்டியது.
கதவை சாத்தி விட்டு அவள் உள்ளே செல்ல, உடம்பெல்லாம் திமிரு..என மனதினுள் தியாவை திட்டினான் அஜய்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க?” என சோபாவில் அமர்ந்தாள்.
யுக்தா பற்றி தான் வினித் சொல்ல, தியா ரோஹித்தையும் வினித்தையும் பார்த்து.. கார்த்திக் பற்றி தான? எனக் கேட்டாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, ஆம் என்றனர்.
“நானும் ஒன்று சொல்லணும்” என தியா தயங்கியவாறு ரோஹித்தை பார்த்து, யுக்தா திருமணம் பற்றி நம்ம வீட்ல பேசத் தொடங்கும் போதே யுக்தா அவள் காதல் கார்த்திக் தான்னு சொல்லீட்டா. உங்களுடைய பெற்றோருக்கும் ராணியம்மாவுக்கும் தெரியும்.
யுக்தா பெற்றோர் இதை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ராணியம்மா கூட பேசி பார்த்தார். ஆனால் அவங்க ஒத்துக்கவேயில்லை. வேற வழியில்லாமல் யுக்தா வீட்ல பார்த்தவங்கல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டா.
ப்ளீஸ், ரோஹித் சார். அமைதியா இருங்க தியா சொல்ல, ரோஹித்துன்னே அழைக்கலாம் என்ற அவன் நான் இப்பவே கிளம்புகிறேன்.
சொல்றதை முழுசா கேட்டுட்டு போ என்ற தியா கோபத்தில் நின்றவன் அவளை பார்த்தான்.
யுக்தாவிற்கு திருமணம் முடிவாகவும் கஷ்டப்பட்டு கார்த்திக் நம்பரை தேடி கண்டறிந்து அழைத்தாள். அவன் முதலில் எடுத்தான். யுக்தா பேசவும் சட்டென அலைபேசியை அணைத்து வைத்து விட்டான்.
அடுத்தடுத்து..அவளது திருமண நாளன்று கூட அழைத்தாள். அவன் எடுக்கவேயில்லை.
ரோஹித் அவனை விட்ரு. அவன் நம்ம யுக்தாவிற்கு சரியாக இருக்க மாட்டான்.
இப்பவா? அவளோட கணவன் இறந்து ஒரு நாள் தான் முடிஞ்சிருக்கு. இப்ப இதையும் பேசி அவளை கஷ்டப்படுத்தணுமா? அவளுக்கு நேரம் தேவைப்படும். நான் கேட்கிறேன்..நீயும் விசாரித்துப்பார் என தியா கூறி விட்டு கதவை திறந்து, அவகிட்ட இப்ப இதை பற்றி பேச வேண்டாம் என சொல்லி விட்டு, உங்க வீட்லயும் இதை பற்றி பேச வேண்டாம் ரோஹித்..ப்ளீஸ்..மறுபடியும் அவள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது என வெளியேறினாள்.
வருத்தமாக யோசனையுடன் வெளியே வந்த தியாவை அஜய் கவனிக்காதது போல் கவனித்தான். யுக்தாவும் ராகவீரனும் அவளிடம், “என்னாச்சு? ஏதும் பிரச்சனையா?” எனக் கேட்டனர்.
இல்ல அங்கிள், முகி எங்க? ரது அவளுடன் இருக்காலா? என்று பேச்சை மாற்ற, நாங்க வந்துட்டோம் என முகி பாப்பாவின் இரு கைகளையும் பிடித்து அவளுக்கு விளையாட்டு காட்டியவாறு வந்தாள் முக்தா.
தியாவை பார்த்து, ம்மா..என ரது கையை தூக்க, ரதுக்குட்டி..வாங்க வாங்க என பின்னே நடந்து கொண்டே பாப்பாவை நடக்க வைக்க முயன்றாள். பிள்ளை சிரித்துக் கொண்டே பொத்து பொத்து என அமர்ந்து அமர்ந்து எழ முயற்சித்துக் கொண்டிருந்தது.
அஜய் பாப்பாவை தூக்கி மடியில் அமர்த்தி அவளுடன் பேச, அது..ஊ..ஊ..என கேட்டுக் கொண்டிருந்தது சிரிப்புடன். அனைவரும் அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.
தியா வினித்திடம் வந்து, “வினு எனக்கு லேப் வாங்கித் தர முடியுமா?” எனக் கேட்டாள். அவன் அஜய்யை பார்க்க, அஜய்யின் புன்னகை மறைந்து அவளை ஆராய்ந்தான்.
வினு..தியா அழுத்தி அழைக்க, எதுக்கு தியா?
ஆன் லைன் வொர்க் பார்க்க தான்.
நீ எதுக்கும்மா வொர்க் பண்ணனும்? அதான் நாங்க இருக்கோம்ல்ல. அஜய் இருக்கான் ராகவீரன் கூற, அங்கிள் நான் யார்கிட்டையும் எதையும் எதிர்பார்க்க விரும்பல. எனக்கு பிடிக்கல. எப்பொழுதும் போல் வெளியே சென்று வேலை செய்ய முடியாது. பாப்பாவை கவனிக்கணும். அதனால எனக்கு லேப் வேணும்?
அப்ப வொர்க்? வினித் கேட்டான்.
கொஞ்சமாக அனுபவம் உள்ளதால்..அப்ளே செய்திருக்கேன். பார்க்கலாம்..
நம்ம கம்பெனி இருக்குல்லம்மா? ராகவீரன் கேட்க, இல்ல அங்கிள்.. இங்கிருக்கும் எதுவும் எனக்கு சொந்தம் போல தெரியல ரதுவை தவிர..என தியா கோபமாக எழுந்தாள்.
தியா..வினித் அழைக்க, நான் உன்னிடம் ஓசியா கேட்கலை. நான் இன்ஸ்டால்மென்ட்டில் அடைத்துக் கொள்வேன்.
அம்மாடி..தியா..பிள்ள பெத்த உடம்பு தாங்காதும்மா.. கண்ணம்மா சொல்ல, என்னோட உடம்பு தாங்கலைன்னாலும் ஓசியில சாப்பிட முடியாதுல்ல கண்ணம்மாக்கா. மாதா மாதாம் எனக்கு செலவிற்காகும் பணத்தை சேர்க்கணும்ல்ல. எனக்கு என்னை விட என் தன்மானம் தான் பெரிது.
அஜய் கோபமாக அவளிடம் பேச வந்தான்.
நீங்க எதுவும் பேச வேண்டாம். பேச வேண்டியதை ஒருநாள் முன்பே பேசியாச்சு. யார் தயவையும் நான் நம்பி இருக்க மாட்டேன். “நீங்க தான சொன்னீங்க?” உங்களை பயன்படுத்தக் கூடாதுன்னு.
உங்களுக்கு நானே தேவையில்லை என்னும் போது எனக்கான செலவை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று தியா ரதுவை தூக்கிக் கொண்டு வேகமாக படியேறினாள். அனைவரும் அதிர்ந்து அஜய்யை பார்த்தனர்.
ராகவீரன் கோபமாக அஜய்யிடம் வந்து, அவ என்ன வேணும்ன்னாலும் செய்திருக்கட்டும். “திருமணம் பண்ணீட்டு வந்துட்டு இப்படியா பேசுன?” அவன் உன்னிடமிருந்து அவளுக்கு கிடைக்கும் பயன்பாடில்லை..அது கணவன் என்ற உரிமை, அன்பு, காதல்.
“காதலா?” என அஜய் விரக்தியாக சிரிக்க, யுக்தா அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு, இதுக்கு தான்..நான் முன்னமே சிந்தித்தேன். உங்க எல்லாருக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கை சாதாரணமா போச்சுல்ல. அதே உங்களை விட்டு அந்த பொண்ணு போனால் நம்பிக்கை துரோகம்..
“இப்ப நீங்க செய்றது என்னவாம்?” என யுக்தாவின் கோபம் அடங்காது கார்த்திகேயனின் செயலும் சேர்ந்து அவளை தாக்க, அங்கிருந்த கண்ணாடி டீப்பாயை ஓங்கி அடித்தாள்.
“அக்கா” என முக்தா அவளிடம் ஓடி வர, அனைவரும் அதிர்ந்து நின்றனர்.
ஏய், “எதுக்கு சீன் போடுற? அவள சொன்னா உனக்கென்ன கோபம் வருது?” அஜய் கேட்க, வினித் அவனிடம்..உன்னை விட பொண்ணுங்க பின் சுற்றும் எங்கள் அஜய் தான் பெஸ்ட் என சீறினான். அஜய் கோபமாக நிற்க, அண்ணா அக்காவுக்கு இரத்தம் வருது முக்தா பதற, அஜய் திரும்பி யுக்தாவை பார்த்தான்.
“ஏன் இப்படி பண்ண?” என ரோஹித் அவளை தூக்க வந்தான்.
தேவையில்லை. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும். எனக்காக யாரும் வேண்டாம் என்ற யுக்தாவின் வார்த்தையில் ரோஹித் அதிர்ந்து நின்றான்.
அக்கா…”நில்லு” என முக்தா யுக்தாவின் பின்னே ஓடினாள்.
ரோஹித் தலையை பிடித்து அமர்ந்தான். வினித் கண்ணம்மாவை பார்க்க, “நான் பார்த்துக்கிறேன்” அவர் சென்றார். அஜய்க்கும் ராகவீரனுக்கும் யுக்தாவின் செயலை புரிந்து கொள்ள முடியவில்லை. யுக்தா சென்ற பின் அவர்கள் ரோஹித்தை பார்க்க,..”என்னோட வா” என வினித் ரோஹித்தை இழுத்து வீட்டு வாசலருகே செல்ல, “வினித் எங்கப்பா போற?” அவன் அப்பா கேட்டார்.
நாங்க எங்க ப்ரெண்ட்ஸ பார்த்துட்டு வாரோம் என நகர்ந்தான்.
“எங்க ப்ரெண்ட்ஸா? இவனுகளோட ரோஹித் எப்படி சேர்ந்தான்? யுக்தா எதுக்கு கோபப்பட்டா?” என அஜய் புலம்ப, அதே யோசனையுடன் தான் ராகவீரனும் இருந்தார்.
வினித் அவன் காரில் ஏறி ரோஹித்தையும் ஏற்றிக் கொண்டு காரை கிளப்பினான்.
“எங்க போறோம்?”
சொல்றேன் என வினித் அலைபேசியை எடுத்து, கார்த்திக்கிடம் ஏதும் சொல்லாமல் நாம சந்திக்கும் இடத்துக்கு வாங்கடா என அலைபேசியை துண்டித்தான்.
“என்ன செய்யப் போறீங்க?” ரோஹித் கேட்க, அவனை பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் காரை ஓரிடத்தில் நிறுத்தி, “இறங்கி வா” என்று வினித் முன் சென்றான்.
அங்கிருந்த வீட்டிற்குள் இருவரும் நுழைய, அண்ணா..வாங்க வாங்க என அழைத்தான் ஒருவன்.
வாங்க என ரோஹித்தை அழைத்து, உட்காரு என வினித்தும் சோபாவில் அமர்ந்தான்.
அண்ணா..இந்தாங்க என ஜூஸை நீட்டினான்.
“அவன எங்க?” என வினித் கேட்க, அண்ணா வந்திருவாங்க என்றான் அவன்.
“சந்தோஷ் இன்னும் என்னடா பண்ற?” வினித் சத்தம் கொடுக்க, இதோ வாரேன்டா என கண்ணில் கூலருடன் வந்தவனை பார்த்து வினித் முறைத்தான்.
“என்னடா இவனை அழைச்சிட்டு வந்திருக்க?” என சந்தோஷ் கேட்டான்.
கரணும் விஜய்யும் வந்து விட, “என்ன விசயம்டா?” என கேட்டுக் கொண்டே ரோஹித்தை பார்த்த வண்ணம் உள்ளே நுழைந்தனர்.
ரஞ்சா, “வினித்துக்கும் புது அண்ணாவுக்கும் தான் ஜூஸா?” கரண் கேட்க, எடுத்துட்டு வாரேன் அண்ணா என அவன் நகர, சும்மா தான்டா கேட்டேன் என கரண் அவன் தோளில் கையை போட்டான்.
“கார்த்திக் அண்ணா எங்க?” என ரஞ்சன் வாசல் பக்கம் பார்த்தான்.
அவன் வரலை. நாங்க தனியா சந்திந்தது அவனுக்கு தெரிய வேண்டாம் என்றான் வினித்.
சரிண்ணா, “இவங்க யாரு?”
ரஞ்சா, “உனக்கு பிராஜெக்ட் இருக்குன்னு சொன்ன?” போய் பாரு.
அண்ணா நீ சொன்னாலும் நானும் உங்கள் அனைவரையும் போல டிடெக்டிவ்வாக தான் ஆவேன்.
“நீங்க எல்லாரும் சி ஐ டியா?” அப்ப கார்த்திக்? என அனைவரையும் பார்த்து வினித்திடம் கேட்டான் ரோஹித்.
அவனும் டிடெக்டிவ் தான்.
“ரஞ்சா உள்ளே போ” என்ற வினித் அவன் செல்லவும், சொல்லுங்கடா யுக்தாவிற்கும் கார்த்திக்கிற்கும் என்ன பிரச்சனை? எனக் கேட்டான். மூவரும் ரோஹித்தை பார்த்தனர்.
அவனும் உள்ளே தான் இருப்பான். அவன் அக்கா விசயம் தான சொல்லுங்க? வினித் சொன்னான்.
“அவங்க காதல் தெரியுமா?” விஜய் ரோஹித்திடம் கேட்டான்.
ம்ம்..தெரியும் என்ற ரோஹித் எல்லாரையும் பார்த்து கார்த்திக் பற்றி எனக்கு எல்லாமே தெரியணும் என்றான்.
கார்த்திக் வீட்டிற்கு ஒரே பையன். அவன் பெற்றோர் நன்றாக பழகும் குணம் கொண்டவர்கள். சிறுவயதிலிருந்து நாங்க ஒன்றாக தான் வளர்ந்தோம். நாங்க படிப்பு வேலையை ஒரே துறையை தேர்ந்தெடுத்தோம். வினித் மட்டும் தனியா சென்றான். ஆனாலும் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம்.
பள்ளியில் யுக்தா, தியா, புழலரசன் எப்பொழுதும் ஒன்றாகவே நண்பர்களாக சுற்றுவார்கள். வினித்தும் தியாவும் பழக்கம் என்பதால் எங்களுக்கும் அவர்களுடன் பழக்கம் வந்தது.
அதில் தான் கார்த்திக்கும் யுக்தாவும் பேசத் தொடங்கி காதலாக மலர்ந்தது. பள்ளியில் சிலருக்கும் இது தெரியும் என்பதால் அஜய்க்கும் தெரியும். எங்களுக்கும் அஜக்கும் ஆகவே ஆகாது. ஆனால் வினித்துடன் நாங்கள் பழகுவதை அஜய் ஏதும் சொன்னதில்லை. அவனுக்கு ஜாலியாக எஞ்சாய் பண்ணனும்.
அவனுக்கு அப்படியே எதிர்மாறு கார்த்திக். அமைதியின் சிகரம். ஆனால் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிப்பான். வகுப்பில் யாரும் ஏதும் தொலைத்தாலும் அவர்களிடம் பேசி எளிதாக கண்டறிந்து அவர்களிடம் சேர்த்து விடுவான். அவனுக்கு உதவும் நாங்களும் இந்த துறையில் சேர்ந்து விட்டோம்.
அப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு. வகுப்பிற்கு புது பொண்ணு வந்தாள். அவள் கேத்ரின். எல்லாரிடமும் கலகலப்பாக பேசும் அவளுக்கு நாங்களும் நண்பர்களானோம். எல்லாரிடமும் நன்றாக பேசினாள்.
நாட்கள் கழிந்தது. யுக்தா, கார்த்திக்கும் சரியாக பேசவில்லை. இரு நாட்களுக்குள் விரிசல் அதிகமாகி யுக்தா டெல்லி சென்று விட்டாள் என அனைத்தையும் சொன்ன விஜய் வினித்திடம், நம்ம கார்த்திக் ஒரு பொண்ணு பேச்சை நம்பி ஏமாந்துட்டான் டா.
“யாரை சொல்ற?” வினித் கேட்க, கேத்ரின்.
கேத்ரினா?
ஒரு கவரை வினித் முன் வைத்த கரண்..எல்லாவற்றையும் கண்டறியும் கார்த்திக் கண்ணில் கேத்ரீனின் உண்மை முகம் மட்டும் தெரியாமல் போச்சுடா.
அவள் நம்மை விட கார்த்திக்கை பயன்படுத்த எண்ணி தான் அவனுடன் நெருக்கமாக இருப்பது போல் யுக்தா முன் நடந்து கொண்டாள். அதை தெரியாத யுக்தாவும் கோபப்பட்டு போயிட்டா.
இல்ல, என்னோட அக்கா அப்படி செஞ்சிருக்க மாட்டா. ஏதோ நடந்துருக்கு. உங்க ப்ரெண்டு மேல நம்பிக்கை இல்லாமல் இருந்தால் இப்பொழுதும் அவரை எண்ணிக் கொண்டிருந்திருக்க மாட்டாள் என ரோஹித் சொல்வதை கேட்டு நண்பர்கள் அதிர்ந்து அவனை பார்த்தனர்.
வினு, “அவன் சொல்வது உண்மையா?” என சந்தோஷ் கேட்க, “ஆமாடா” என யுக்தா பேசியதையும் இன்று அவள் நடந்து கொண்டதையும் கூறினான் வினித். மேலும் திகைத்தனர்.
“என்ன?” அவன் பார்க்க, இதை பாரு. நீ சொன்னது சரிதான். இப்ப தான் வீடியோ வந்தது. என்னோட ஆள் ஒருவனிடம் முன் நடந்ததை விசாரிக்க சொன்னேன்.
யுக்தா இல்லை அந்த இடத்தில் எந்த பொண்ணு இருந்தாலும் அப்படி தான் செய்திருப்பாள். என்ன? இவன் நம்பாமல் இருந்ததற்கு இன்னும் காதலித்துக் கொண்டிருக்க மாட்டாள்.
ரோஹித்துடன் சேர்ந்து அனைவரும் வீடியோவை பார்த்தனர். கொஞ்சம் தொலைவில் இருந்த சிசிடிவியில் படம் பிடிக்கப்பட்டிருந்தது.
முதல் வீடியோவில் கேத்ரின் கார்த்திக்கை இதழ் முத்தம் கொடுப்பது போல் இருந்தது. ரோஹித் சினமுடன் அதை பார்க்க, இரு..என்று சந்தோஷ் அடுத்த பதிவில் அதே காட்சி சைடாக இருந்ததை காட்டினான். பின்னே இருக்கும் யுக்தாவை பார்த்த கேத்ரின் வேண்டுமென்றே தலையை இடப்புறமாக சாய்ந்து கண்ணை சிமிட்டி சிமிட்டி பேசி இருந்தாள்.
கார்த்திக்கிற்கு அவள் கொஞ்சலாக பேசி அவனை சீண்டுவதை போல இருக்க, அவளை கோபமாக நகர்த்த முயன்றான். ஆனால் யுக்தாவிற்கு அவள் முத்தமிடுவது போலவும் கார்த்திக் அதை தடுப்பது போலவும் இருந்தது.
அடுத்த இரண்டையும் பாருங்க. பள்ளியில் இடைவேளையின் போது யாருமில்லாததை அறிந்த கேத்ரீன் கார்த்திக் கன்னத்தில் முத்தமிட்டு ஓடுவதையும் நேரில் கண்ட யுக்தாவிற்கும் கார்த்திக்கிற்கும் பிரச்சனை ஆரம்பித்து இருக்கும். அதன் பின் இரு நாட்கள் அவர்கள் பேசாமலிருக்க அதை கேத்ரின் பயன்படுத்திக் கொண்டாள்.
யுக்தா கண்ணில் படுமாறு அவன் பின்னே சுத்துவதும், அவன் கையை கோர்க்க முயல்வதுமாக இருக்க..ஒரு நாள் கார்த்திக் தனியாக செல்லும் போது அவனிடம் கேத்ரின் காதலை சொல்ல, அவன் முடியாது என்று சென்று விட்டான். அதை யுக்தாவின் வகுப்பு தோழி சொல்லி..அங்க பாரு பேசுறாங்க என சந்தோஷ் காட்டினான். யுக்தா அழுது கொண்டே வகுப்பிற்கு செல்வது வீடியோவில் பதிவாகி இருந்தது.
இதன் பின் தான் முத்தமிடும் காட்சியை யுக்தா பார்த்து, அக்காட்சியில் பயந்து உடைந்த மனதுடன் அவனிடம் பேசுகிறாள். பாருங்க என அந்த பதிவையும் காட்டினான்.
யுக்தா ஏதோ கேட்க, கார்த்திக் முகம் கடுகடுத்தது. அவள் கோபமாக அவனிடம் ஏதோ பேச..அவனோ சட்டென அவளை அடித்து விட்டு ஏதோ சொன்னான். அதை கேட்டு அவளும் ஏதோ சொல்லி விட்டு அழுது கொண்டே யுக்தா செல்ல தியா அவர்களுக்கு எதிராக நடந்து வந்தவள் யுக்தாவை கார்த்திக் அடிக்கவும் அவளிடம் வரும் முன் யுக்தா வெளியே சென்று விட்டாள்.
கார்த்திக்கிடம் தியா ஏதோ பேசுவதும் தெரிந்தது. அதற்கும் அவன் கோபமாக தான் முகத்தை வைத்திருந்தான்.
அந்த வீடியோவில் அவங்க பேசுறதை ஜூம் பண்ணுங்க. எனக்கு லிப் ரீடிங் தெரியும் என்றான் ரோஹித்.
அவ இப்ப உன்னை என்ன செஞ்சா? யுக்தா கேட்க, அவன் முகம் கடுகடுத்தது. சொல்லு..அவள் உன்னிடம் தப்பா நடந்துகிட்டா அவளிடம் பேசாம இருக்க மாட்டாயா? என யுக்தா கேட்க, அவனோ அவளை அடித்து விட்டு, என் மேல நம்பிக்கையில்லாதவள் எனக்கு வேண்டாம் என்று அவன் கூறியதை கேட்டு, நம்பாமல் இருந்தால் இது போல் உன்னிடம் கேள்வி கேட்டிருக்க மாட்டேன். வேறு மாதிரி பேசி இருப்பேன் என அழுது கொண்டே யுக்தா சென்று விட்டாள்.
தியா அவனிடம் வந்து, அந்த கேத்ரின் சரியில்லை. நானும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன் என்ற அவளையும் கோபமாக பார்த்திருப்பான். இதையெல்லாம் தூரமிருந்து புன்னகையுடன் பார்த்த கேத்ரின் வீடியோவில் தெளிவாக அனைவர் கண்ணிலும் பட்டாள்.
இவர்களுக்கு தெரியாதாது. அந்த கேத்ரினை கார்த்திக் வேண்டாம் என்றதும் அவனிடம் இனி காதல் என்று உன் முன் வர மாட்டேன் என்றதும் தான் பேசி இருப்பாள் கேத்ரின். அவள் நல்லவலாகவும் யுக்தா சந்தேகப் பேர்வழியாகவும் கார்த்திக் கண்களுக்கு தெரிய வைத்து இருவரையும் பிரித்திருக்கிறாள்.
“இதெல்லாம் எதுக்காக செஞ்சா? கார்த்திக்கை காதலிக்கணும்ன்னா படிப்பு முடியவும் எதுக்கு அமெரிக்கா போகணும்?” கரண் கேட்க, கார்த்திக்கின் திறமை. அவனது ஃபேம் என்றான் சந்தோஷ்.
யுக்தா சென்ற பின் எந்த பொண்ணாவது கார்த்திக் பக்கம் நெருங்க முடிந்ததா? யோசித்து பார். எப்போதும் அவனுடனே திரிந்தாள். கார்த்திக் நம்மிடம் ஏதும் மறைத்து விட்டானோன்னு தோணுது என்றான் கரண்.
“என்னத்த மறைக்க போறான்?” வினித் கேட்க, அதே கேத்ரின் பள்ளி முடியவும் கிளம்பி விட்டாள். இப்பொழுது அவளை நான் இடையே பார்த்தேன்னு சொன்னேன்ல்ல அதை கார்த்திக்கிடமும் சொன்னேன். அவனோ என்னை எறித்து விடுவது போல் பார்த்து, எவள பத்தியும் என்னிடம் பேசாதே! என்றான்.
“ஒரு வேளை நம்ம கார்த்திக் பிராஜெக்ட்டை அவள் திருடி இருப்பாளோ? அவன் கடைசி நேரத்தில் பண்ணலைன்னு விலகினான் உனக்கு நினைவிருக்கா?” விஜய் வினித்திடம் கேட்க, ஆமாடா..நம்ம சொட்ட தல சார்கிட்ட கேட்டா தெரியும் என்றான் சந்தோஷ்.
“இன்னுமா டா அவரை வருத்தெடுக்குறீங்க? அவர் என்னடா பாவம் செய்தார்?” வினித் கேட்க, நான் அவரை பார்த்துட்டு வாரேன் என சந்தோஷ் நகர, நில்லு இதுக்காக மட்டும் நான் வரல என்றான் வினித்.
“அப்புறம்?”
யுக்தா மனசை மாத்தணும்.
டேய், “அதுக்கு நாங்க என்ன பண்றது?” விஜய் கேட்டான்.
அவன் உங்களுக்காக எவ்வளவு உதவி செய்திருப்பான். அவனுக்காக நீங்க யுக்தா அவன் வாழ்வில் வரும் படி செய்யலாம்ல்ல?
அதான் இந்த வீடியோஸ் இருக்கே! இதை காட்டுங்க. தன்னால சேர்ந்துடுவாங்க.
நோ..என்றான் ரோஹித்.
“உனக்கு என்னப்பா?”
அவங்க இருவரும் அவங்க காதலை உணரணும். நாம தான் உணர வைக்கணும்.
காதலா? அவனா? அவனிடம் சொல்லீறாத..அவ்வளவு தான். கொலையே பண்ணிடுவான். அவனுக்கு பொண்ணுங்க மேல நம்பிக்கையே இல்லை. அதனால் தான் கல்யாணம் கூட இன்னும் பண்ணிக்கலை. அவன் கையால சாக என்னால முடியாது. நான் கிளம்புகிறேன் என கரண் நகர, கண்ணாடி தம்ளரை தரையில் சீற்றமுடன் எறிந்தான் வினித்.
கரணும் மற்றவர்களும் அதிர்ந்து வினித்தை பார்க்க, எல்லாரும் நம்பிக்கை இல்லை..இல்லைன்னே பேசுறீங்க. அவங்க நிலையில இருந்தா தான் தெரியும். நம்ம கார்த்திக் மாறல. அவன் இன்னும் யுக்தா மேலுள்ள காதலை விட முடியாமல் தான் கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கான். அவனுக்கு அவனே சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
“உங்களுக்கு உங்க நண்பனின் கோபம் பெரியதா? அவன் வாழ்க்கையா?” முடிவெடுங்க. விருப்பமிருந்தால் உதவுங்க. இல்லைன்னா போயிட்டே இருங்க. நான் பார்த்துக்கிறேன் என்றான் வினித். ரோஹித் வாயை பிளந்து அவனை பார்த்தான்.
சரிடா..கோபப்படாத விஜய் வினித்தை சமாதனப்படுத்த, அவன் தான் யுக்தா மீது காதலிருப்பதை ஒத்துக்க மாட்டேங்கிறானே!
இந்த வீடியோ அவனுக்கு தெரிய வேண்டாம். இது தெரியாமலே ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கணும். என்னிடம் ஒரு திட்டம் இருக்கு என வினித் சொல்ல, சூப்பர்டா என வினித்தை அனைவரும் மெச்சினர்.
ரோஹித் இது யாருக்கும் தெரியக் கூடாது வினித் சொல்ல, ஓ.கே என எழுந்தான் அவன்.