உன்னை காப்பாற்றி அழைத்து வரும் போது அவளுக்கு விபத்துன்னு அந்த பையன் பரணி தான் அழைச்சிட்டு வந்தான். அன்று நீ என்ன செஞ்ச சொல்லு? தாத்தா விகாஸிடம் கத்தினார்.
அவளுக்கு விபத்து அன்று நடக்கலை என சத்யா எழுந்தான். அவளுக்கு அன்று இதயத்தில் வலி வந்திருக்கு. பரணி தான் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். அதான் வீட்டிற்கு வர நேரமாகிடுச்சு..
அவளுக்கு முதல்ல இந்த பிரச்சனை வந்தது. அவளது முதல் காதல் என விகாஸை பார்த்தான். அவள் காதலிப்பவன் வேற பொண்ணுடன் நெருக்கமாக இருந்ததை பார்த்த விளைவு தான். அன்று மோனூ அக்கா தான் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தாங்க.
இரண்டாவது முறை பப்ல்ல வச்சி.
மூன்றாவது முறை. அவள் காதலிப்பவனிடம் காதலை கூறிய போது நடந்த ஏச்சு பேச்சு தான்.
பின் தான் எங்க எல்லாருக்கும் தெரியும் என விக்ரமை பார்த்தான்.
ஆனால் அவளுக்கு மாரடைப்பு வரும் அளவு ஒரு பெரிய சம்பவம் ஒன்று நடந்தது என மீண்டும் விக்ரமை பார்த்தான்.
ம்ம்..நடந்தது. அவள் சரியாகட்டும். நானே சொல்கிறேன் என சுவாதியை பார்த்து, என்னால உன்னை மறக்க முடியாது பேபி. அதுக்காக மேரேஜ் பண்ணிக்க முடியாது..ப்ளீஸ்..
ரகசியன் கோபமாக அவனை அடிக்க வந்தான்.
அண்ணா, ப்ளீஸ்..சுவாதி நிறுத்தினாள்.
ஓ.கே விக்ரம், நாம காதலித்துக் கொண்டே இருப்போம். எனக்கு அது போதும்.
அது எப்படி போதும்?
செட் அப்…எந்த நிலையில என்ன பேசிட்டு இருக்கீங்க? நேகன் சினமுடன் கத்தினான். அனைவரும் அமைதியானார்கள்.
விகாஸோ நடப்பது கனவா? நானும் கீர்த்துவும் கோவில்ல வச்சு மட்டும் தான் நெருக்கமா இருந்தோம் என சிந்தனையுடன் அமர்ந்திருந்தான்.
விகாஸ் அம்மா சுவாதியிடம் வந்து, “வாடி இதுக்கு மேல என்ன பேச்சு வாங்கணும்?” என அவளை இழுத்தான்.
“போ பேபி” என விக்ரம் கண்களை மூடிக் கொண்டே செல்ல, “விக்ரம்” என சுவாதி அவன் கையை பிடித்தாள். அவள் கையை எடுத்து விட்ட விக்ரம், போ..என்னால உன்னோட வாழ்க்கை கெட வேண்டாம்.
விக்ரம், “இப்ப என்ன கெட்டுப் போச்சு?” பரிதி கோபமாக கேட்டார்.
இப்ப என்னிடம் ஏதும் கேட்காதீங்க..ப்ளீஸ் என விக்ரம் கண்ணீர் வடிந்தது.
அஜய்யும் அவன் நண்பர்களும் வந்தனர்.
“விக்ரம்” என அஜய் அவனிடம் வந்து ஏதோ சொல்ல, விக்ரமோ இனி எவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன? விரக்தியுடன் பேசினான்.
“விக்ரம்” கோபமாக அழைத்த அஜய், உன்னோட நிலைமை புரியுது. இப்ப இந்த கேஸ் உங்க கைக்கு வரணும். இல்ல மான் குட்டி உயிரோட வந்தாலும் காப்பாற்ற முடியாது எனக் கத்தினான்.
“என்ன சொல்ற?” தாத்தா சினமுடன் கேட்க, அஜய் அவரை தவிர்க்க சிம்மாவை பார்த்தான்.
“நான் பேசிட்டு வாரேன்” என சிம்மா சொல்ல, தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன் என அஜய்யையும் அவன் நண்பர்களையும் தனியே பேச அழைத்தான்.
சரி, அதுக்கு என விக்ரம் கேட்க, அவனை தனியே அழைத்து கார்த்திக், அவன் கையில் ஒன்றை கொடுத்தான்.
என்ன ரிப்போர்ட்? விக்ரம் பிரித்து பார்த்து, ப்ளூபெரி கேக்கா? உனக்கு எப்படி தெரியும்? என கார்த்திக்கிடம் சீறினான்.
கால்தடம்..கேக்..அப்புறம்…பேனா? என ஒன்றை கொடுத்தான். தூரமிருந்து பார்த்த ரோஸ் வேகமாக அவர்களிடம் ஓடினாள்.
இது..இது..என அவள் சொல்லும் முன் விஜய் அவள் வாயை அடைத்து சுற்றி பார்த்துக் கொண்டு நகர்ந்து சென்று, யாரிடமும் இதை பற்றி சொன்ன வாழ்க்கையே மொத்தமும் பாழா போயிரும்.
விக்ரம் எல்லாத்தையும் வச்சி யாருன்னு கண்டறிய டி. என். ஏ செக் பண்ணோம். அதுல கன்பார்ம் ஆகி இருக்கு. பார்த்துக்கோ..என மானசா இருக்கும் அறையை பார்த்த கார்த்திக். அவ கவனமா இருக்கணும். இனியும் ஒருவன் இருக்கான். அவன் தந்தைக்கும் ரத்தன் ஷெட்டிக்கும் சம்பந்தம் இருக்கு..பார்த்து அவன் கண்ணுல பட்றாம..
விக்ரமோ உடைந்து அமர்ந்தான்.
“சாரிடா” என்ற அஜய், கவலைப்படாத…நாம பார்த்துக்கலாம். ஆனால் இப்ப நீ வந்தே ஆகணும்..
ம்ம்..என கண்ணை துடைத்து எழுந்த விக்ரம் சிம்மாவை பார்த்தான். அவன் புருவம் சுருக்கி இவர்கள் அனைவரையும் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த டானோட ஆளுங்க எல்லார் பற்றியும் உங்களிடம் இருக்குல்ல.
இருக்கு சார் என்ற விதார்த்..அதுல சிலர் உயிரோட இல்லை. ஆனாலும் ஷெட்டி அமைதியாக இருக்கான். கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு.
ம்ம்..என விக்ரம் சிம்மாவிடம் சென்று, அவன் கையை பிடித்து கண்ணீருடன் எதையோ கூறி முடிக்க, “என்னடா சொல்ற?” சிம்மா விக்ரம் சட்டையை பிடித்தான். விக்ரம் அமைதியாக நின்றான்.
நான் பார்த்துக்கிறேன். முதல்ல இவளை பாரு என சிம்மா அவர்களுடன் சென்றான்.
“சிம்மா” என விக்ரம் அவன் பின்னே ஓடி வந்து, ரிப்போர்ட் இது உண்மையானதில்லை. கண்டுபிடிச்சு அழிச்சிடு.
நீ போ..நாங்க பார்த்துக்கிறோம் என்ற அஜய், நான் மாலை வந்து உன்னை பார்க்கிறேன் என கிளம்பினான்.
வினு, நீ இன்னும் அந்த ஷெட்டி ஆளுங்க எத்தனை பேர் இருக்காங்கன்னு பாரு. அவனுக்கு எதிரான எல்லா சாட்சியையும் சந்தோஷ் எடுத்து வச்சிருக்கான்.
அந்த ராமை நாமலே போட்றலாம் சிம்மா சொல்ல, ம்ம்..அவனை எங்க போய் தேடுறது?
அதை தற்பொழுது நடத்துபவர்கள் ரோஹித்தும் யுக்தாவும்.
பழக்கப்படுத்தீட்டீங்க போல..
ம்ம்..
விக்ரம் ஹாஸ்பிட்டலுக்குள் வரவும், விகாஸ் அந்த நியூஸ்ஸை காட்டி, “மாம்ஸ் யாரு செஞ்சிருப்பா?” ஏற்கனவே ஒருவனை யாரோ கொன்னுட்டாங்க..
“யாரை பத்தி பேசுறீங்க?” திலீப் தந்தை கேட்க, விக்ரம் ஏதும் பேசாமல் சென்று அமர்ந்தான்.
டாட், இவனுக தான் நம்ம கீர்த்து வாழ்க்கையை அழிச்சவனுக. இருவரையும் யாரோ கொலை செஞ்சிருக்காங்க.
நேகன் விக்ரம் அருகே வந்து அமர்ந்து, ஏதும் கெல்ப் வேணும்ன்னா செய்ய தயாரா இருக்கேன். அவனை பார்த்த விக்ரம், உங்க குடும்பத்துல்ல எல்லாரையும் பத்திரமா பார்த்துக்கோங்க..
“உங்க குடும்பமா?” நேகன் கேட்க, “ஆமா..உங்க குடும்பம்” என்ற விக்ரம் சுவாதியை பார்த்தான்.
அன்னம் அவனிடம் வந்து, சரிப்பா..அந்த பொண்ணு சரியான பின் நம்ம ஊருக்கு நான் அழைச்சிட்டு போறேன்.
நோ..என தலையசைத்த விக்ரம் அமைதியாக இருந்தான்.
“இனி அந்த பொண்ணு இங்க இருப்பது சரியாக இருக்காது” அன்னம் சொல்ல, பாட்டிக்கு கோபம் வந்தது.
எங்களுக்கு மானசா மேல நம்பிக்கை இருக்கு. அவ எங்க வீட்லயே இருக்கட்டும்.
சற்று நேரத்தில் அப்சரா, திலீப், மற்ற மருத்துவர்கள் வெளியே வந்தனர்.
நடப்பதை கவனித்து மட்டும் கொண்டிருந்த மற்றவர்கள் எழுந்து அவர்களிடம் ஓடினர். ஆப்ரேசன் நல்லபடியாக நடந்தது. ஒரு நிமிடம் தாமதமாகி இருந்தலும் கஷ்டம். முன்னதாகவே ஏற்பாடு செய்ததும் கை கொடுக்க, எங்களால் காப்பாற்ற முடிந்தது என மானசாவின் மருத்துவர் கூறினார்.
மறைந்து நின்ற பரணியின் தாத்தா நிம்மதியுடன் நகர்ந்தார்.
விக்ரம் எல்லாருக்கும் முன் வந்து, “இப்ப அவளை பார்க்கலாமா?” என கேட்டவன் கண்களில் பரிதவிப்பு. தெளிவாக அனைவரும் பார்த்தனர்.
“இப்ப வேண்டாம்” என்ற திலீப், நாம அவகிட்ட எதையும் நினைவுபடுத்தி கேட்கக் கூடாது. அதனால இரு நாட்களுக்கு யாரும் அவளை பார்க்க வேண்டாம். கிளம்புங்க என்றான்.
டாக்டர்..திலீப்பை பார்த்து மற்ற மருத்துவர்கள் அதிர்ந்தனர்.
எல்லாரும் என்னோட குடும்பம் தான். பிரச்சனை செய்ய மாட்டாங்க..என்று விக்ரமை பார்த்தான்.
“நான் இங்க தான் இருப்பேன். போக மாட்டேன்” விக்ரம் சொல்ல, “பிடிவாதம் பண்ணாம போங்க” திலீப் சொல்ல, “முடியவே முடியாது. என்னோட பவர் இருக்கும் இடத்துல்ல தான் இருப்பேன்”.
“என்னமும் செய்யுங்க” என அவர்கள் நகர, விகாஸ் விக்ரமை பார்த்து விட்டு சென்றான்.
“விக்ரம்” திலீப் அழைக்க, “அவ நல்லா தான இருக்கா திலீப்? பெயின் ரொம்ப இருக்குமா? மருந்து ஏதும் வாங்கணுமா?” என மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான். எல்லாரும் அவனை பார்த்துக் கொண்டே சென்றனர்.
திலீப் அவனை இழுத்து அணைத்து, அவ நல்லா இருக்கா. சாப்பிட வீட்ல இருந்து கொண்டு வருவாங்க. இரவு தான் விழிப்பாள். இங்கிருந்து அவளிடம் எதையும் கேட்டு தொந்தரவு செய்து ஏதும் ஆகி விடாமல் பார்த்துக்கோங்க என அவன் அமர்ந்தான். ரம்யா அவனருகே வந்து அமர்ந்தாள்.
நீ கிளம்பு.
“நான் போகமாட்டேன்” என ரம்யா பிடிவாதமாக திலீப், விக்ரமுடன் இருந்தாள். மானசா நண்பர்களுக்கு கை கொடுத்து நன்றி கூறி அவர்களை கிளப்பினான் விக்ரம். திலீப், விக்ரம், ரம்யா மட்டும் இருந்தனர்.
அஜய், அவன் நண்பர்கள், சிம்மா மாலை ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.
இருவரின் கேஸையும் திசை திருப்பீட்டோம். இப்பொழுதைக்கு பிரச்சனையில்லை விக்ரம். ஆனால் முழுதாக முடியவில்லை. மானு குட்டி..கண் விழித்தாளா? அஜய் கேட்டான்.
என்ன கேஸ்? ஆர்வமாக திலீப் அவர்களை பார்த்தான்.
அப்சராவும் நேகனும் வந்தனர்.
“அது எங்களோட கேஸ் விசயம்” என கார்த்திக் திலீப்பை பார்க்க, அவன் விதார்த்தை பார்த்தான்.
“நீங்க பக்கத்து வீட்டுக்காரவங்க தான?” விஜய் கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ரம்யா திலீப்பை பார்த்தாள்.
நேகன் விக்ரமிடம் வந்து, கண்விழித்தாளா? என விசாரித்தான்.
“இல்லை” என்று விக்ரம் தலையை மட்டும் ஆட்டினான்.
நாங்க வாரோம் என அஜய்யும் மற்றவர்களும் கிளம்பினார்கள். சிம்மாவும் ஹாஸ்பிட்டலில் அமர்ந்திருந்தான். அவ்வப்போது சிம்மா விக்ரமையே பார்த்தான்.
இரவானது.
திலீப் நீங்க கிளம்புங்க. நான் விக்ரமுடன் இருக்கேன் சிம்மா சொல்ல, இருவரையும் பார்த்துக் கொண்டே திலீப் எழுந்தான்.
அண்ணா, அவள பார்த்துக்கோங்க என அவர்கள் நகர்ந்தனர்.
சற்று நேரத்தில் பாட்டி, தாத்தா, சுஜித்ரா பெற்றோர், தமிழ் மனைவியுடனும் பெற்றோருடனும் வந்தான்.
பாட்டி மானசா சாப்பிட ஏற்றவாறு உணவை கொண்டு வந்திருந்தார்.
செவிலியர் அடிக்கடி அவள் அறைக்கு செல்லவதும் வருவதுமாக இருந்தார். அப்சராவும் அவள் அப்பாவும் வந்தனர்.
சற்று நேரத்தில் செவிலியர் வெளியே வந்து, “சார் இங்க விக்ரம் யாரு?” எனக் கேட்டார்.
“நான் தான்” அடித்து பிடித்து எழுந்தான் விக்ரம்.
“அந்த பொண்ணு உங்களை பார்க்கணும்ன்னு சொல்றா?”
விக்ரம் அப்சராவை பார்க்க, போங்க..ஆனால் அதிகமாக கேள்வி கேட்பதோ..அவ அதிர்ச்சியாகுமாறு ஏதும் பேசாதீங்க.
போங்க. அதிகம் பேச விடாதீங்க என அப்சரா அப்பா அறிவுறுத்தினார்.
விக்ரம் கைகள் நடுங்க கதவில் கையை வைத்தான். சிம்மா அவன் கையை பிடிக்க, “அண்ணா” என கண்ணீருடன் அவனை பார்த்தான்.
வா..என அழைத்து சென்றான்.
சோர்ந்து தோய்ந்து வாடிய கொடியாக இருக்கும் மானசாவை பார்த்து விக்ரம் உயிர் உருகியது. கதற தோன்றிய மனதை அமைதிபடுத்தி..”பவர்” அழைத்தான்.
அண்ணா..
வேகமாக அவளிடம் ஓடி அவளது கையை பிடித்து, சாரிடா..சாரி..சாரி..உன்னை கவனிக்காமல் விட்டுட்டேன். அவளுக்கு நடந்த பிரச்சனையில் உன்னை விட்டுட்டேன். உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் நானும் என விக்ரம் கதறி அழுதான்.
சிம்மாவை பார்த்து, “அண்ணா தாத்தா இருக்காங்களா? பார்க்கணும் போல இருக்கு”.
“அவங்க யாரையும் நீ பார்க்க வேண்டாம்” என விக்ரம் சொல்ல, “விக்ரம்” சிம்மா சினமுடன் அழைத்தான்.
கூல் அண்ணா..இவன் இப்படி தான். யார் என்னை பார்க்க வந்திருக்காங்களோ எல்லாரையும் அழையுங்கள்.
நீ அதிகமா பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.
ஓ.கே அண்ணா. அவங்கள வரச் சொல்லுங்க.
விக்ரம் மானசா கையை பிடித்துக் கொண்டு விடாமல் அமர்ந்திருந்தான்.
எல்லாரும் உள்ளே வந்தனர்.
தாத்தாவிற்கு முன் பாட்டியும் வேல்விழியும் மானசாவிடம் வந்தனர். அவள் யார் இருக்கிறார்கள் என பார்த்தாள். மனம் சோர்ந்தது அவளுக்கு. விகாஸ் குடும்பத்தில் யாருமே வரவில்லை.
“ரொம்ப வலி இருக்காம்மா? வேற எதுவும் செய்யுதா? பாட்டி உன்னோடவே இருக்கவா?” என அவர் கேள்விகளை அடுக்கினார்.
மானசா கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது.
“வேண்டாம்” என தலையசைத்து, நீங்க எனக்காக இருக்கிறேன்னு சொன்னதே போதும் பாட்டி. “நான் உங்க எல்லாரிடமும் ஒன்று மட்டும் கேட்கணும்?”
“கேளும்மா” என தாத்தா அவளருகே படுக்கையில் அமர்ந்தார்.
தாத்தா, மாமா சொன்ன மாதிரி எதுவுமே நடக்கலை. நான் யாரிடமும் அப்படி நடந்துக்கல. நீங்க இந்த விசயத்துல்ல என்னை நம்புறீங்கல்ல?
தமிழை பார்த்து “மாமா, மத்தவங்க என்னை நம்பலையா? என்னை தப்பான பொண்ணா நினைச்சுட்டாங்களா?” என கண்ணீருடன் கேட்டாள்.
யாரு சொன்னா உன்னை நம்பலைன்னு? திலீப் தான் உன்னை இரு நாள் கழித்து பார்க்க வர சொன்னார். அதனால தான் எல்லாருமாக வரலை. உனக்கு ப்ரெஷ்ஷர் கொடுக்கக் கூடாதாம். நீ பேசாமல் அமைதியாக இரு மிருளாலினி கண்டிப்புடன் கூற, அவள் கையை பிடித்துக் கொண்டு புன்னகைத்தாள்.
எல்லாரும் விக்ரமை தான் பார்த்தனர்.
“சாப்பிட எடுத்து வந்திருக்கேன்” என விக்ரமை பார்த்து பாட்டி சொல்ல, அவன் வெளியேறுவதற்காக எழுந்தான்.
“எங்க போறீங்க மாப்பிள்ள? உங்களுக்கும் சேர்த்து தான் எடுத்துட்டு வந்திருக்கேன்”.
நின்று அவரை பார்த்த விக்ரம், பசிக்கலை என வெளியேற, ஹாஸ்பிட்டல் வந்ததிலிருந்து நீங்க சாப்பிடலை. சாப்பிடுங்க மாப்பிள்ள என கிருபாகரன் கூறினார்.
பசிக்கலை மாமா.
அண்ணா, “நானும் சாப்பிட மாட்டேன்” மானசா சொல்ல, விக்ரம் கண்கள் கலங்கியது.
“உட்காருங்க” என மானசா சொல்ல, எல்லாரும் அங்கேயே அமர்ந்தனர்.
விக்ரம் ஸ்பூன் வைத்து ஊட்டி விட மெதுமெதுவாக நீராகாரத்தை பருகினாள். முடித்து விட்டு விக்ரம் எழ, குடுங்க அண்ணா என மிருளாலினி அவனிடமிருந்து பாத்திரத்தை வாங்கி விட்டு, அவனுக்கு கொண்டு வந்ததை கொடுத்தாள்.
அண்ணா..சாப்பிடு.
நான் வெளிய போய் சாப்பிட்டு வாரேன் என எழுந்தான். அவன் கையை பிடித்த மானசா இங்கேயே சாப்பிடு என்றாள்.
வாங்க நாம வெளிய இருப்போம்..என மற்றவர்கள் எழுந்தனர்.
மானுகுட்டி, மத்தவங்க நம்மை பேசும் விமர்சனத்தை எண்ணி எப்போதும் கவலைப்படக் கூடாது என தாத்தா அறிவுறுத்தி விட்டு சென்றனர்.
சிம்மா..நீ கிளம்பு. அண்ணியும் அம்மாவும் கஷ்டப்படுவாங்க.. விக்ரம் சொல்ல, சாப்பிட்டு வாரேன் என எழுந்து அவன் மற்றவர்களிடம் கூறி சென்றான்.
அண்ணா, நான் நல்லா இருக்கேன். நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா என்றாள்.
“முடியாது” என விக்ரம் சாப்பிட்டு எழுந்து வெளியே வந்து பாத்திரத்தை கொடுத்து விட்டு மற்றவர்களை கிளம்ப சொன்னான்.
“தனியா எப்படிப்பா சமாளிப்ப?”
நான் பார்த்துக்கிறேன். ஏற்கனவே நிறைய பிரச்சனை ஓடிட்டு இருக்கு. அதனால யாரும் இங்க தங்க வேண்டாம். பத்திரமா எல்லாரையும் அழைச்சிட்டு போங்க மாமா என தமிழினியனிடம் விக்ரம் சொன்னான்.
“நீங்க கவனமா இருங்க மாப்பிள்ள” என தாத்தாவும் மற்றவர்களும் மானசாவிடம் சொல்லி விட்டு சென்றனர். பத்து மணியளவில் சிம்மா வந்தான். அவனுடன் விகாஸ் பெற்றோரும் சுவாதியும் வந்தனர்.
அவர்களை பார்க்கவும் மானசா மனதில் மகிழ்ச்சி. “ஆன்ட்டி” என எழ போனவளை விக்ரம் நிறுத்தி, “படுத்துக்கோ..ஸ்ட்ரெயின் பண்ணாத” என மானசாவிடமிருந்து நகர்ந்து அமர்ந்தான்.
விகாஸ் அம்மா விக்ரமை முறைத்தாலும் மானசாவிடம் நன்றாக பேசினார். நான் உடனிருக்கிறேன் என்று அவர் சொல்ல, இங்க பாதுகாப்பு சொல்ல முடியாது விக்ரம் சொன்னான்.
நீங்க போலீஸ் தான? இருவருக்கு பாதுகாப்பு தர முடியாதா?
இல்ல ஆன்ட்டி, அதுக்கில்லை. இங்க ரூல் இருக்கு ஆன்ட்டி. அதுக்கு தான் அண்ணா சொல்றாங்க என்றவளுக்கு தொண்டை வறண்டது. மறு நிமிடம் தண்ணீரை எடுத்து வந்து அவளுக்கு புகட்டினான் விக்ரம். மூவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுவாதிக்கோ..விக்ரம் தனியா கஷ்டப்படுகிறானே என கவலையாக இருந்தது. அவனை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
விகாஸ் அம்மா மானசாவுடன் இருக்க, மற்றவர்கள் அவளிடம் பேசி விட்டு கிளம்பினார்கள். விக்ரமோ அவங்க இருப்பதை கூட கண்டு கொள்ளாமல் மானசாவையே பார்த்துக் கொண்டும், அவள் தேவைகளை கவனித்துக் கொண்டும் இருந்தான். சிம்மாவையும் வீட்டிற்கு அனுப்பி விட்டான் விக்ரம்.
காலை அனைவரும் வந்து மானசாவை பார்த்து விட்டு சென்றனர். இதே போல் இரவும் பகலுமாய் அவளருகே இருந்து விக்ரம் நன்றாக மானசாவை கவனித்துக் கொண்டான்.
இரவு விகாஸ் அம்மாவும், காலையில் ரம்யா, சுருதி, அம்மாக்கள் என மாறி மாறி அவளை பார்த்துக் கொள்ள விக்ரமோ இவர்களை தவிர்க்க எண்ணினாலும் யாரும் கேட்கவில்லை. விகாஸ் மட்டும் எட்டி கூட பார்க்கவில்லை. அதுவே மானசா மனதை பெரிதும் பாதித்தது.
நம்மை விரும்புபவர்கள் நம்மை நம்பவில்லை என்றால் எப்படி வலிக்கும்? அவளது கஷ்டநேரத்தில் எட்டி கூட அவன் பார்க்கவில்லை. பரணி கூட நடக்க ஆரம்பிக்கவும் அவளை பார்த்து சென்றான். இவளும் அவனை பார்க்க செல்வாள். அவன் குடும்பத்தில் யாரும் அவளை இந்நிலையில் தடுக்கவும் இல்லை. ஏதும் தவறாக பேசவும் இல்லை.
மானசாவை டிஸ்சார்ஜ் செய்யும் நாளும் வந்தது. அன்று தான் விகாஸ் தன் அண்ணன்களுடன் வந்தான். அவளுடன் ஏதும் பேசவில்லை என்றாலும் பாட்டி வீட்டில் அவளை அனைவரும் விட்டு செல்ல, நேகன், விக்ரம், மானசா அங்கு தான் இருந்தனர்.
ஒரு மாதம் கவனமாக இருக்க சொல்லி மருத்துவர்கள் அனுப்பினார்கள். அவளும் சாதாரணமாக கொஞ்சம் கொஞ்சமாக நடந்து கொண்டாள்.
அன்றைய பொழுதில் பாட்டி வீட்டில் அனைவரும் குழுமி இருக்க, விக்ரமும் மானசாவும் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அண்ணா..நாங்க சொல்லணும். இது எங்க நிம்மதிக்காக என மானசா சொல்ல, “மானு குட்டி” தாத்தா அழைத்தார்.
“இல்ல தாத்தா” என கண்ணீருடன் அவள் எல்லாரையும் பார்த்தாள்.
விக்ரம் மானசா கண்ணீரை துடைத்து விட்டு, “எழுந்திரு பவர்” என விக்ரம் மானசாவை ஓரிடத்தில் அமர வைத்து விட்டு அவன் அவளருகே நின்று கொண்டான்.
மானசா எழுந்து மாலையிடப்பட்ட கீர்த்தனா புகைப்படம் முன் வந்து, சாரி கீது..நான் சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன். உன்னோட இரண்டு பிராமிஸ்ஸை காப்பாற்ற என்னால முடியல.
உன்னை பற்றியும், எங்களை பற்றியும் இவங்க எல்லாரும் தெரிஞ்சுக்கணும். என்னால பொய்யாக நடிக்க முடியாது என அழுதாள்.
விக்ரம் அவளது தோளில் கை வைக்க, கீது இறக்கும் போது அருகே தான் அண்ணா நானும் இருந்தேன்.
“கீதுவா?” ரம்யா கேட்க, ஆமாக்கா..இவள் கீர்த்தனா இல்லை. இவளுடைய உண்மையான பெயர் கீதாஞ்சலி.
வாட்? வாட்? என அனைவரும் கூறிக் கொண்டே ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“போதும் பவர். என்ன பிராமிஸ்?” விக்ரம் மானசாவிடம் கேட்டான்.
எல்லாவற்றையும் நான் சொல்ல மாட்டேன் என மானசா கீர்த்தனாவாக வாழ்ந்த கீதாஞ்சலியின் புகைப்படத்தை பார்த்தாள்.
இந்த உண்மை யாருக்கு தெரியக்கூடாதுன்னு கீது சொன்னாளோ அவங்க எல்லாரிடமும் நீ சொல்றீயோ இல்லையோ நான் சொல்லணும்.. உனக்காக.. உனக்காக மட்டும் என விக்ரமை பார்த்தாள்.
ம்ம்..என விக்ரம் சொல்லி விட்டு, மானசாவை தன் தோளோடு சாய்த்து, நான் அன்று சொன்னேனே! என் கைக்கு ஒரு குழந்தை கிடைத்தது. என்னால வளர்க்க முடியவில்லை என ஆசிரமத்தில் சேர்த்தேன்னு என விக்ரம் ஒவ்வொருவரையும் பார்த்தனர். சினமுடன் பெரியவர்களும் குழப்பமுடன் சிறியவர்களும் பார்த்தனர்.
இல்லை. நான் துக்கி வளர்த்த பொண்ணு கீர்த்தனா தான். ஆனால் கீதாஞ்சலி இல்லை.
“அண்ணா, தெளிவா சொல்றீங்களா?” நேகன் கேட்டான்.
ம்ம்..நான் பார்த்து பார்த்து வளர்த்த பொண்ணு என புகைப்படத்தை பார்த்து அவள் இல்லை. “இவள்..இவள் தான் என்னோட கீர்த்து. இவள் தான் கீர்த்தனா என மானசாவை காட்டினான் விக்ரம்”.
அதிர்ந்து எல்லாரும் இருவரையும் பார்த்தனர்.
மானசா கண்ணீருடன் தலைகவிழ்ந்து நின்றாள்.
“விக்ரம், என்ன சொல்ற?” அன்னம் விக்ரமை அடிக்க கையை ஓங்கினார். மானசா அவன் முன் வர, சிம்மா அவர் கையை பிடித்தான்.
நீங்க கீர்த்தனாவாக நினைக்கும் இவள் கீதாஞ்சலி. கீதுவும், கீர்த்துவும் ஒன்றாக ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தாங்க. நன்றாக விவரம் தெரிய தொடங்கும் போது கீதுவிற்கு எல்லா விசயத்திலும் கீர்த்து மேல கோபம், பொறாமை..காரணம் நான்.
அங்கிருக்கும் மற்ற பிள்ளைகளுக்கு நான் பேசி புரிய வைத்தேன். ஆனால் கீது மட்டும் புரிஞ்சுக்கவேயில்லை. அதிலிருந்து அவளுள் பிடிவாத குணம் வளர்ந்தது.
நான் என்னோட கீர்த்துவை எப்போதும் ஸ்பெசலாக தான் பார்ப்பேன். அவளை வெளியே அழைச்சிட்டு போவேன். அவளுக்கு ஆடைகள் வாங்கி தருவேன். இது ஆசிரமத்தில் யாருக்கும் பிடிக்காது என்றாலும் நான் அன்றைய பொழுதில் யாருமில்லாத அநாதையாக தான இருந்தேன். கீர்த்துவை எப்பொழுது கையில் தூக்கினேனோ அன்றிலிருந்து அவள் என் பொறுப்பு என்ற எண்ணம் வந்ததால் அவளை தனியே கவனிப்பேன்.
லட்சுமி அக்கா கூட கீர்த்துவை என்னோட அழைச்சிட்டு போக சொன்னாங்க. ஆனால் என்னால அவளை பார்த்துக்க முடியாது. பார்ட் டைம் வொர்க், ஸ்டடிஸ் என்ற கவனத்தில் அவளை தவற விட்டு விடுவேனோ? என்ற பயத்தில் அவளை ஆசிரமத்தில் தங்க வைத்தேன். அது பிரச்சனையில் முடியும்ன்னு நான் நினைக்கவேயில்லை.
எல்லாரும் ஆசிரமப் பிள்ளைகளுக்கு ஆடை, உணவு கொடுத்தால் போதும்ன்னு நினைக்கிறோம். ஆனால் அவங்களுக்கு குடும்பம் வேணும்ன்னு ஏக்கம் எப்போதும் இருக்கும். அதே எண்ணம் கீதுவிற்கும் இருந்தது.
கீதுவை பார்த்தும் யாருமே தத்து எடுத்து செல்லவில்லை. அவளோட கோபம் என்னோட கீர்த்து மீது பாய்ந்தது.
தினமும் அவளை பார்த்து செல்லும் என்னையும், என்னுடன் விளையாடி உரிமையாக பழகும் அவளையும் முதலில் பிரிக்க எண்ணினான்.
கீர்த்து அது செய்தால்..இது செய்தால் என நிறைய கம்பிளைண்ட் கீது போட்டாள். அதனால் அங்கிருப்பவர்களால் சமாளிக்க முடியாமல் என்னிடம் கூறினார்கள். அதுவரை கீர்த்து கூட கீது செய்யும் எதையும் சொல்லவில்லை.
நான் என் கீர்த்துவுக்காக வாங்கித் தரும் அனைத்தையும் கீது பறித்துக் கொள்வாள். அதுவும் எனக்கு தெரிய வர அவளிடம் கோபப்பட்டு திட்டினேன். அவளுக்கு வன்மம் அதிகமானதே தவிர தணியவில்லை.
மேலும் தொந்தரவு செய்தாள். ஒரு முறை கீர்த்துவை ஓர் இருட்டு அறையில் பூட்டி விட்டாள். எல்லாரும் தேடினோம். கீது சொல்லவேயில்லை. கீர்த்துவை ரொம்ப கஷ்டப்பட்டு தான் கண்டுபிடித்தோம்.
அன்றிலிருந்து என்னோட கீர்த்து என்னிடமிருந்து விலக ஆரம்பித்தாள். நான் பேசினால் பதில் கூட சொல்ல மாட்டாள். ரொம்பவே அமைதியாக இருந்தாள்.
என்னாலும் இரு நாட்களுக்கு மேல் பொறுக்க முடியாமல் என்னோட அழைத்து செல்ல முடிவெடுத்தேன். அவள் ஒத்துக் கொள்ளாமல் அதற்கு பதில் வேறொன்று கேட்டாள் என விக்ரம் மானசாவாக இருக்கும் கீர்த்தனாவை கண்கலங்க பார்த்தான்.
“என்ன சொன்னா? ஹரிணி கேட்க, அவளை ஆசிரமத்திலே விட்டு கீதுவை அழைச்சிட்டு போக சொன்னா” என கண்ணீருடன் விக்ரம் மண்டியிட்டான் மானசா முன்பு.
மானசாவும் அழுது கொண்டே அவனை பார்த்து மண்டியிட்டாள்.
அண்ணா..ப்ளீஸ்..
ம்ம்..என கண்ணை துடைத்து விட்டு, எல்லாம் இந்த கீதுவால் தான். அவள் கீர்த்துவை அறைக்குள் அடைக்கும் முன்…சத்தம் போட்டால் கையை அறுத்துப்பேன்னு மிரட்டி இருக்கா.
முதல்ல எனக்கும் தெரியாது. பின் தான் தெரிந்து கொண்டேன். அன்றிலிருந்தே அவளை நன்கு கவனித்தேன். என் படிப்பு முடிந்து எக்ஸாம், டிரைனிங் முடித்து வந்து பார்த்த போது என் கீர்த்து அவளாகவே இல்லை. அவள் முழுதாக கீதாஞ்சலியின் தங்கையாகவே மாறி இருந்தாள். என்னை விட்டு மொத்தமாக விலகினாள். ஆனால் அவளுக்கு என்ன விட முக்கியமாக ஒருவன் தெரிந்தான் என விக்ரம் விகாஸை பார்த்தான்.
அப்பொழுது என்னோட கீர்த்து ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். கீது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
விகாஸை பார்த்த விக்ரம், உன்னை பார்த்த நாளிலிருந்து மானசாவாக உன் முன் நிற்கும் என் கீர்த்தனா உன்னை பற்றி மட்டும் தான் பேசிக் கொண்டிருந்தாள் நீ காதலித்த கீர்த்தனாவாக நடித்த கீதாஞ்சலியிடம்.
உன்னை பற்றி கேட்க கேட்க கீதாஞ்சலிக்கு ஆர்வம் வந்து விட்டது. வீ உன் மேல் இல்லை உன் குடும்பத்தின் மீது. என்னோட கீர்த்துவுக்கும் தெரியாமல் உன்னையும் உன் குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள்.
கீது அடிக்கடி வெளிய போறான்னு லட்சுமிம்மா சொல்லும் போது..எனக்கு சந்தேகமானது. ஆனால் நான் அவளை பின் தொடரவில்லை. அவளை பின் தொடர எனக்கு பிடிக்கவில்லை. அதை விட்டுட்டேன். முன்பே பார்த்து இருந்திருக்கலாம்.
கீர்த்து தினமும் உன்னை சந்திக்க, உன் வீட்டுப்பக்கம் வருவாள். அவளது கிளாஸ்மேட் உன்னோட வீட்டு பக்கம் தான். முதல்ல உன்னை என் கீர்த்து பார்த்தது சுவாதியுடன்.
அண்ணனும் தங்கையும் ஜாலியாக சண்டையிட்டு பார்த்து ஏக்கம் பிறந்தது அவளுக்கு. ஆனால் நான் அவளருகே வந்தால் கூட கீது ஏதும் செய்திடுவாளோன்னு பயந்து விலகிடுவாள். தூரமிருந்து தான் என்னையும் பார்ப்பாள். உங்களையும் பார்ப்பாள் என சொல்லிக் கொண்டே விக்ரம் மானசாவான கீர்த்தனாவை பார்த்தான்.
இதெல்லாம் நம்ப நான் என்ன முட்டாள்ன்னு நினைச்சீங்களா? அவ என்னோட கீர்த்து. என்னோட பப்ளிம்மா..அவ இப்படியெல்லாம் செய்ய மாட்டாள்.
நான் இன்னும் முழுசா முடிக்கலை. யாரையும் கெட்டவங்களா காட்ட நாங்க நினைக்கலை. என்னிடம் ஆதாரம் இருக்கு என விக்ரம் கத்தினான். விகாஸ் அமைதியாக தலையை பிடித்து அமர்ந்தான்.
உன்னோட பப்ளிம்மா உன்னை காதலிக்கவேயில்லை. குடும்பத்துக்காக தான் உன்னை காதலிப்பது போல நடிச்சா. என்ன தான் உன்னை பற்றி என்னோட கீர்த்து பேசினாலும் உன்னோட அண்ணனுக எல்லாரையும் கவனிச்சு இருந்திருக்கா.
அதுல சிங்கிளா இருந்தது யாரு? என விக்ரம் கேட்க, எல்லாரும் முழித்துக் கொண்டிருந்தனர்.
ரகசியன் அடிக்கடி ரசிகாவை மீட் பண்ணி இருக்கான். ராஜா பார்வையிலே ஹரிணியை காதலிப்பதை கண்டு கொண்டாள். மீதி இருப்பது யாரு? என விக்ரம் கேட்க, “அண்ணா” திலீப்பா? என ரம்யா கேட்டாள்.
ஆமா, உன்னோட திலீப் தான்.
அனைவரும் அதிர்ந்து விக்ரமை பார்த்தனர்.
விகாஸ் கோபமாக, “இருக்கவே இருக்காது” என கத்தினான்.
சொல்றதை நான் சொல்லீட்டு அதற்கான ஆதாரத்தையும் கொடுத்துட்டு போறேன் என்ற விக்ரம், ரம்யா அப்பொழுது உனக்கு திலீப்பை தெரியாது. அவருக்கு உன்னை தெரியாது. அதனால் அவர் பின் யாரும் சுற்றவில்லை. சனாவிற்கு திலீப்பை பிடிக்கும்ன்னு தெரியும். ஆனால் சனாவை திலீப் காதலிக்க மாட்டாருன்னு உறுதியா நம்புனா..
ஆசிரமம் எறிந்து அனைவரும் இறந்த அன்று என்னோட கீர்த்து உள்ள தான் இருந்தா. அவள் அப்பொழுது தான் பின் பக்கம் வெளியே வந்தாள். வெடித்ததில் பயந்து மயங்கீட்டா. அன்று யாரும் அவளை கவனிக்கவில்லை. இரவு தான் பார்த்திருக்காங்க.
நான் உங்கள் வீட்டிற்கு எதார்த்தமாக மதுவந்தினி கேஸிற்காக தான் வந்தேன். அப்பொழுது உங்கள் யாரை பற்றியும் தெரியாது. ஆனால் என்னையும் கீது கவனிப்பான்னு நான் நினைக்கவேயில்லை. நான் உங்கள் வீட்டுக்கு வரவும் அவளுக்கு ஆசிரமம் எறிந்தது தோதாகிப் போனது. என்னுடன் ஒட்டிக் கொண்டாள். அவள் மாற்றம் பார்த்து நானே அதிர்ந்து தான் போனேன்.
ரகு தான் என்னோட கீர்த்துவை அவ்விடத்தில் பார்த்து ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். கீதுவிடம் நான் கீர்த்து உயிரோட இருப்பதை காட்டிக் கொள்ளவில்லை.
அன்று உங்க எல்லார் முன்னும் அணைத்தாளே அப்பொழுதே அவள் ஏதோ டிராமா கிரியேட் பண்ணப் போறான்னு நினைச்சேன். அதே போல அவள் என்னை அணைத்துக் கொண்டே, இனி நான் கீர்த்தனா. ஏதாவது வெளிய சொன்ன..அந்த நிமிசமே செத்துருவேன்னு சொன்னா..
கீது பற்றி சொல்லணும்ன்னா. நல்ல பொண்ணு தான். ஆனால் பிடிவாதம். அவள் வளர வளர தான் இந்த பிடிவாதத்தால் அனைத்தையும் அடைந்தாள். அதே போல உங்க குடும்பத்துக்குள்ளேயும் வந்தாள்.
முதலில் திலீப்பிடம் தான் நெருங்கினாள். அவர் நன்றாக பேசினாரே தவிர அவள் மீது கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை.
அதற்கு பதில் ரம்யாவை அவர் கவனிப்பதை பார்த்து ரம்யாவை தன் பக்கம் இழுத்தாள். ரம்யா பற்றி நாம் அறியாததா? அவள் குடும்ப விவரம் அனைவருக்கும் தெரிந்தாலும் யாரிடமும் அவள் அண்ணா, அண்ணியை யாரிடமும் விட்டுக் கொடுக்கலை. அவங்களுக்காக அவளே தன்னை தனிமை படுத்திக்கிட்டா..
அன்று கீது ரம்யாவிற்கு ஆதரவாக பேசவில்லை. ரம்யா இடத்தில் அவளை எண்ணி அவளே பேசி இருக்கா. ஒவ்வொருவரையும் தனித்தனியாக அமைதியாக கவனித்துக் கொண்டிருந்திருக்காள்.
அன்னம்மா வீட்ல வச்சு உனக்கும் உன்னோட தேவா மாமாவுக்கும் பிரச்சனை வந்ததே! என்று விகாஸை பார்த்து விக்ரம், என்னை உன்னுடன் அழைத்து வந்த காரணம். என்னை மிரட்ட தான்.
அவளுக்கு கீர்த்தனா உயிரோட இல்லை என எண்ணியதால்.. அவள் எறிந்து செத்ததை நீ பார்க்கலைல்ல. அதான் நெருப்புக்குள் போனேன். அந்த முட்டாள் வந்து என்னோட திட்டத்தையே கெடுத்துட்டான்னு உன்னை திட்டினாள்.
அவளை கீர்த்துவாக நான் ஏத்துக்காமல் இருக்க பழி வாங்குறேன்னு சொன்னா..
ம்ம்..என்ன தான் கீதுவின் செயல்கள் பிடிக்கலைன்னாலும் அவளும் என் கஷ்டக்காலத்தில் இருந்த பொண்ணு தான? என் கண்ணு முன்னாடி அவ செத்தா என்னால என்னை மன்னிக்கவே முடியாது. கடைசியில அவள் போட்ட பிளான் நடந்துருச்சி என விக்ரம் தொண்டை அடைக்க கண்கலங்கினான்.
உண்மையான கீர்த்தனா விக்ரமை அணைத்து கதறி அழுதாள். அவள் தோளில் தட்டிய விக்ரம், திலீப்பை அசைக்க முடியாது என எண்ணிய கீதுவிற்கு நீ தான் தெரிந்த..
வீட்டின் செல்லப்பிள்ளை. பெரியவர்களின் கடைசி பேரன் என உன்னை முடிவெடுத்து வேண்டுமென்றே உன்னிடமிருந்து விலகி, உன்னை பார்க்க வைத்தாள். நன்றாக நடித்து அவள் நினைச்சதை சாதித்தாள்.
சிம்மா திருமணத்தோட கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன் என்னோட கீர்த்து கீது கண்ணில் பட்டு விட்டாள். கீது வருத்தமெல்லாம் படலை. கீர்த்தனா உயிரோட இருந்ததில் அவளுக்கும் சந்தோசம் தான். ஆனால் அவள் தான் கீர்த்தனாவாக இருப்பேன்னு பேசி இருக்கா..
அதுக்கு என்னோட கீர்த்து என அவளை பார்த்தான் விக்ரம்.
ம்ம்..என்னை அண்ணாவோட ப்ரெண்டு காப்பாற்றிய போது ஹாஸ்பிட்டலில் சேர்த்தாங்க. இரு நாளில் விழித்து விட்டேன். விக்ரம் அண்ணாவும் இல்லை அதனால நான் ரசிகா அக்கா வீட்ல அவங்க அம்மா வனஜாம்மா கூட தான் இருந்தேன். அண்ணாவை ஏற்கனவே அவங்க பேசியது தெரியும் என்பதால் அதிகமாக நான் வீட்டில் இருக்க மாட்டேன். என்னோட நண்பர்களுடன் வெளியே சென்று விடுவேன்.
அப்படி ஒரு நாள் தான் என் அக்கா மோனிஷாவையும் அப்பாவையும் பார்த்தேன். நாங்க இருவரும் ஒரே மாதிரி இருந்ததில் எனக்கும் என் நண்பர்களுக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர்களை பின் தொடர்ந்து வீட்டை தெரிந்து கொண்டேன்.