நீ நான் 21

கீர்த்தனா இருக்கும் ஆசிரமம் வந்தனர்.

மகிழனை பார்த்த குருஜி ஒருவர் மகிழ்வுடன் வந்து, “அந்த பொண்ணுகிட்ட அசைவு தெரியுதுப்பா” என்றார். அவன் முன் செல்ல மற்ற அனைவரும் அவன் பின் சென்றனர்.

கீர்த்தனா இருக்கும் அறைக்கு சென்று அவளை பார்த்து மனமுடைந்து போனார்கள். காய்ந்த சருகாய் கண்ணிமைகள் அசைய படுத்திருந்தாள்.

“கீர்த்து” என ஆளாலுக்கு அழுது கொண்டே அவர்கள் உள்ளே நுழைய, கீர்த்துவை பார்த்துக் கொள்ளும் பெண்மணியோ, “ஷ் அழாதீங்க. பேசுங்க”.

“பொண்ணு உடல்நிலை முன்னேறிக் கொண்டே வருது” என சொல்ல, சுவாதியும் ரம்யாவும் அவள் காதருகே சென்று, “கீர்த்து” சுவாதி வந்திருக்கேன். ரம்யா வந்திருக்கேன் என மனதை தேற்றி பேசத் தொடங்கினார்கள். திலீப்பும் நேகனும் கீர்த்துவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

கீர்த்துவின் அசைந்த கண்ணிமைகளோ மெதுவாக திறக்க, “கீர்த்து” என திலீப் அவளிடம் செல்ல, “சார் நில்லுங்க. அவங்க விழித்து எப்படி ரியாக்ட் பண்ணுறாங்கன்னு பார்க்கணும்?” என்றார் அந்த பெண்.

அவன் நின்று விட, சுருதியோ அவளது படுக்கையில் அவள் காலடியில் அமர்ந்து அவள் பாதத்தை வருடினாள். முகம் சுருங்க, மெது மெதுவாக கண்களை திறந்தாள் கீர்த்தனா.

கீர்த்து..கீர்த்து..உனக்கு ஒன்றுமில்லை. நீ நல்லா இருக்க..என சுவாதி மகிழ்வுடன்..மாமா..கீர்த்து விழிச்சுட்டா, அண்ணா, மகிழ் பாருங்க. கீர்த்து நல்லாகிட்டா என மகிழ்ச்சி கூச்சல் போட்டாள்.

“கீர்த்து” என கண்ணீருடன் ரம்யா கீர்த்தனா நெற்றியில் முத்தமிட, கையை அசைத்து சுவாதியை கை காட்டினாள் கீர்த்தனா.

பேச முயற்சி செய்தாள் கீர்த்தனா.

சுவாதியும் சுருதியும் அவள் கையை பிடிக்க, அ…அ..என கண்ணீர் வழிய வெளியே பார்த்தாள்.

“விக்ரம் அண்ணா வரலை கீர்த்து” என மகிழன் சொல்ல, கண்களை மூடி திறந்து.. அ..அ,..அ…அ….அ… அண்ணி.. அ…அ….அ….அண்ணா..அண்ணா அண்ணா..அண்ணா உங்கள தப்பா நினைச்சுட்டு இருக்காங்க.  மெதுவாக உமிழ்நீரை விழுங்கி விட்டு..”சாரி அண்ணி” என மகிழனை பார்த்து, “அண்ணாவுக்கு கால் பண்ணுங்க. நான் பேசணும்” என்றாள் மெதுவாக.

நீ ஓய்வெடு கீர்த்து. அதை அப்புறம் பார்த்துக்கலாம் சுவாதி சொல்ல, ப்ளீஸ் அண்ணி என மகிழனை பார்த்தாள்.

இதோ..

“நீ பேசுறன்னு சொன்னா. அண்ணா சந்தோசப்படுவார்” என மகிழன் அழைக்க, விக்ரம் எடுக்கவில்லை. விகாஸ் சிம்மாவிற்கு அழைப்பு விடுக்க, அவர்களும் எடுக்கவில்லை.

இவர்கள் கிளம்பவும் விக்ரமை கோபமாக சிம்மா அடித்தான். விகாஸ் அவனை தடுக்க, தொங்கிக் கொண்டிருந்தவனை கிங் சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.

மாமா, ”மாம்ஸ்ஸை அடிக்காதீங்க” விகாஸ் தடுத்து சிம்மாவை தள்ளினான். மூவரும் சில மணி நேரம் அமைதியாக இருந்தனர். சிம்மா எழுந்து கிங்கை அடைத்து வைக்கச் சொல்லி விட்டு, நேராக ஒரு அறைக்கு சென்றான். அங்கே மல்லேஸ்வர் இருந்தான். அவன் கிங்கையும் பார்த்தான். அவன் தொங்கிக் கொண்டிருந்தவனை கிங் கடித்து குதறுவதையும், இவர்களை டார்ச்சரையும் பார்த்து வியந்து போனான்.

சிம்மா அவனிடம், அலி பற்றி விசாரிக்க, “அவன் தெரியாது” என சாதித்தான்.

நீ சொல்லீட்டேன்னா நல்லது இல்லை நீயும் என்னோட கிங்கிற்கு உணவாக மாறிடுவாய் என சிம்மா மிரட்ட, அவன் சிம்மாவிடம் புன்னகையுடன், நீ என்னை கொல்ல மாட்டாய். “உனக்கு அலி பற்றி வேண்டுமா இல்லை ரத்தன் ஷெட்டி பற்றி வேண்டுமா?” என கேட்க, சிம்மா அட்டகாசமாக சிரித்து..உன்னை விட விவரம் தெரிந்த ஒருவனையும் பிடித்து வைக்க என்னால் முடியும். அதனால் நீ இருக்க வேண்டிய அவசியமில்லை..

டேய், “நம்ம கிங்கிற்கு அடுத்த உணவை தயார் செய்யுங்கடா” என சிம்மா சத்தமிட, விக்ரம் விகாஸ் உள்ளே வந்தனர்.

“என்ன பயமுறுத்துறியா?” அவன் கேட்க, “பயமுறுத்த நான் டான்னு சொல்லீட்டு திரியும் நாயின்னு நினைச்சியாடா” என சிம்மா கர்ஜித்தான். அவ்விடத்தில் அஜய்யை பார்த்து மூவரும் அதிர்ந்தனர். கதவை திறந்து அவனும் உள்ளே வந்தான்.

“அஜய்” சிம்மா பதற, உன்னிடம் தான் இருக்கான்னு தெரிந்து தான் வந்தேன் சிம்மா. நான் இவனிடம் பேசணும் என்றான்.

நீங்க எப்படி வந்தீங்க? விகாஸ் கேட்க, அவனை ஒரு பார்வை பார்த்து உங்க பிரச்சனை நடந்த போதே வந்துட்டேன். சம்பவம் செய்யும் போதும் நம்ம உறவுகளிடம் பேசும் போதும் கவனித்து பேசணும். அதை நான் இப்பொழுது தான் உணர்ந்தேன். நீங்களும் புரிஞ்சுக்கிட்டா பிரச்சனை சரியாகும் என்றான் அஜய்.

விக்ரம், கீர்த்து விசயத்தை குடும்பத்தினரிடம் சொல்லும் நேரம் வந்துவிட்டது.

முடியாது. எல்லாரும் உடைஞ்சு போவாங்க.

சொல்லி தான் ஆகணும். மகிழ் இப்ப நம்மை பார்த்தவர்களை கீர்த்துவை பார்க்க தான் அழைத்து போயிருப்பான். அவங்க வீட்ல விசயத்தை சொல்லும் முன் நீங்க தான் சொல்லணும். இல்லை இனி வாழ்நாளில் நம் குடும்பம் உங்களை எந்த விசயத்திலும் நம்ப மாட்டாங்க. கீர்த்து குணமாக அவங்களும் உதவுவாங்க. அவன் இங்கே வரவும் அவனை பிடிக்கவும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் சிம்மா சொல்ல, விக்ரம் வீட்டிற்கும் விகாஸ் பொள்ளாச்சிக்கும் கிளம்பினர்கள்.

அஜய் தனியாக மெது மெதுவாக அவன் காதல் கதை கூறி அவனை எமோஸ்னல் செய்யப் பார்த்தான் முடியவில்லை.

பின் அதிரடியாக.. சிம்மா.. கிங்கை அழைச்சிட்டு வா. இவன் எதுவும் பேசலைன்னா நமக்கு தேவையில்லை. இவனை அவனுடன் விட்டு வா. நாம பேசணும் என அஜய் அழைக்க, சிம்மா கிங்கை அழைக்க செல்ல கதவை திறந்தான். பயந்த மல்லேஸ்வர் இவர்கள் விசயத்தில் ரத்தன் ஷெட்டியின் திட்டத்தை கூற, இருவரும் ஆடிப் போனார்கள்.

“இன்றேவா?” அஜய் கேட்க, அவனிடம் பதிலில்லை.

சிம்மா..இவன் பத்திரம்..நான் பார்த்துக்கிறேன். நீ விக்ரமோட போ. அவனுக்கு நீ இப்பொழுது தேவை.

“நீ தனியாக எப்படி சமாளிப்ப?” சிம்மா கேட்க, “நான் பார்த்துக்கிறேன்” என அஜய் வேகமாக வெளியே ஓடினான்.

மகிழ்..மீண்டும் மீண்டும் முயற்சிக்க..கடைசியாக விக்ரம் அலைபேசியை எடுத்தான். தமிழின் வீட்டிற்கு அனைவரையும் வர சொல்லி கிளம்பும் போதே சொல்லி விட்டு, வீட்டிற்கு வரவும் அவன் அனைத்தையும் சொல்லி கதறி துடித்தனர்.

அந்நேரம் மகிழ் அழைப்பதை பார்த்து எடுத்த விக்ரம் பொத்தென சோபாவில் அமர்ந்து, “நிஜமாக தான் சொல்றீயா? அவ நல்லா இருக்காளா? பேசுறாளா? அவகிட்ட கொடு” என சொல்ல, மகிழன் அலைபேசியுடன் உள்ளே சென்றான்.

சுவாதியும் ரம்யாவும் காமெடியாக பேசி கீர்த்தனாவை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.

கீர்த்து, “விக்ரம் அண்ணா” என அலைபேசியை கொடுத்தான்.

மகிழ், “நீங்க வெளிய போங்க” என அவனை சுருதி வெளியே துரத்தினாள்.

திலீப், நேகன் அருகே வந்து அமர்ந்தான் மகிழன்.

அண்ணா..கீர்த்து அழைக்க, கீர்த்தும்மா..நீ நல்லா இருக்கேல்ல. நான் இப்பவே வாரேன்.

“ம்ம் நான் உன்னிடம் முக்கியமான விசயத்தை சொல்லணும்” என கீர்த்து சொல்ல, “இப்ப வந்துருவேன்ம்மா” என காரை எடுக்க, அனைவரும் அவனுடன் சென்றனர். ஏதும் கூறாமல் அவர்களையும் அழைத்து சென்றான் விக்ரம்.

“வந்து பேசலாம்” என அவன் குரலில் மகிழ்ச்சி தெளிவாக தெரிந்தது. கீர்த்து புன்னகையுடன் இருக்க, சுவாதி முகம் வாடி இருந்தது. விக்ரம் பேசியதை சுவாதியும் மற்றவர்களும் மறைத்திருந்தனர்.

அண்ணி, “அண்ணா வாராங்க” என கீர்த்தனா சொல்ல, சுவாதி அவள் கவலையை மறந்து புன்னகை பூத்தாள்.

இவர்கள் மேலும் பேசிக் கொண்டிருந்தனர். கீர்த்தனா கவனித்துக் கொண்டிருந்தாள். பசங்க வெளியே இருந்தனர்.

திடீரென ஒருவன் உள்ளே வந்து கத்தியால் கீர்த்தனாவை குத்த வந்தான். ரம்யா அவன் கையை பிடித்து தடுக்க மற்ற பொண்ணுங்க அவனை பிடித்தனர். அவன் சுவாதி, சுருதியை தள்ள, சுருதி அங்கிருந்த மேசையில் முட்டி மயங்கினாள்.

கீர்த்தனா பதற, சுவாதி அவனை கடித்தாள். அவன் கோபமாக கத்தியை சுவாதி பக்கம் கொண்டு செல்ல, ரம்யா அவன் கையை பிடிக்க, மூவரின் சண்டைக்கு இடையே மெதுவாக கீர்த்து இறங்க, அதை பார்த்து கொலை செய்ய வந்தவன் ரம்யாவை சுவற்றில் முட்ட வைக்க, நெற்றியில் இரத்தம் வழிய அவள் அப்படியே அமர்ந்தாள்.

சுவாதியை கத்தியால் அவன் குத்த வர, கீர்த்தனா அவன் கையை பிடித்தாள். கீர்த்தனாவை அவன் குத்த கத்தியை அவளிடம் கொண்டு சென்றான் அவன்.

அவன் கத்தி வைத்திருந்த கையை சுவாதி பிடிக்க, அவன் அவளை தள்ளி அவளது முதுகில் குத்த எண்ணியவை அவள் தள்ளியதால் கத்தியை அவன் நீட்டிய படி விழ பெரிய கீறலாக சுவாதி முதுகில் பட்டது. அவள் கீர்த்தனாவிற்கு தெரியாமல் மறைத்து, மாமா..அண்ணா..என கத்தினாள்.

அதற்குள் அவன் கத்தியை கீர்த்தனா வயிற்றில் இறக்கினான். கீர்த்தனா கீழே விழ, ரம்யா தவழ்ந்து அவளிடம் வந்தாள். சுவாதி கட்டிலின் பின் நின்றவள் மயங்கி அங்கேயே விழுந்தாள்.

“ரம்யா” அவனை சீற்றமுடன் வெளியே தள்ளி, “திலீப் திலீப்” என கத்திக் கொண்டு அவனை இழுக்க, அவன் தப்பி வெளியே ஓடினான்.

“அவனை பிடிங்க” என அவளும் அவன் பின் ஓட, நேகன், திலீப், மகிழன் அவளை பார்த்து, ஏய் ரம்யா, “என்னாச்சு” அடிபட்ருக்கு? எதுக்கு அவனை விரட்டுற?”

அய்யோ..திலீப் என அவள் ஆரம்பிக்க காரிலிருந்து விகாஸ் புன்னகையுடன் ஓடி வந்து கொண்டிருந்தான்.

“திலீப்” என ரம்யா அழுது கொண்டே, “அவன் நம்ம கீர்த்துவை கத்தியால் குத்திட்டான்” என அழ, கீர்த்து என அவ்விடம் அலறும் வண்ணம் கத்திக் கொண்டே அவ்வறைக்கு சென்றான் விகாஸ்.

கீர்த்து உயிருக்கு போராடும் நிலையில் கீழே கிடந்தாள். அங்கே சுவாதி, சுருதி  இல்லை.

பப்ளிம்மா, “இங்க பாரு” என விகாஸ் அழ, “மாமா..என்னை மன்னிச்சிருங்க”. “நான் உங்களோட” என வயிற்றில் குத்திய இடத்தை பிடித்துக் கொண்டு, “நாம காதலிக்க ஆரம்பித்ததிலிருந்து உங்களை நான் கிஸ் பண்ணவே விடலை. நீங்க கேட்டும் நான் பண்ணலை..மாமா” என எக்கி விகாஸ் இதழ்களில் முத்தமிட்டு, “லவ் யூ மாமா”.

என்னை எண்ணி உன் வாழ்க்கையை அழிச்சிறாத. உனக்கு பொருத்தமானவ உன்னை தேடி கண்டிப்பா வருவா. அவளோட நீ சந்தோசமா இருக்கணும். மை பிரின்ஸ் சார்ம்..என சொல்லிக் கொண்டே இறந்து விட்டாள் கீர்த்தனா.

அவளது கையொன்று படுக்கையின் அடியில் ஒருவர் கையுடன் பிணைந்தும் அவள் பார்வை அவளது இறுதி மூச்சு நிற்கும் போது படுக்கைக்கு அடியில் மறைந்திருந்தவரை பார்த்தவாரே இறந்திருந்தாள். படுக்கை முழுவதும் போர்வையால் சூழப்பட்டு இருந்ததால் விகாஸ் கண்ணிற்கு யாரும் தெரியவில்லை.

அதே நேரம் உள்ளே மகிழ்வுடன் வந்த விக்ரமும் குடும்பத்தினர்களும் பதறி உள்ளே சென்று பார்த்தது விகாஸ் மடியில் கிடந்த கீர்த்துவின் சடலத்தை.

“கீர்த்து” என விக்ரம் கத்த அனைவரும் கதறி துடித்தனர். ரசிகா தவிர அனைவரும் வந்திருந்தனர்.

அய்யோ, “என்னோட பிள்ளை” என அன்னமும் நட்சத்திராவும் அவளை பிடித்து கதறி விட்டனர்.

சற்று நேரத்தில் சுவாதியும், சுருதியும் வந்தனர். சுவாதிக்கு முதுகில் கட்டிடப்பட்டிருந்தது. அவள் அதை யாரிடமும் சொல்லவில்லை. வைத்தியம் செய்தவர்களிடம் யாருக்கும் சொல்ல வேண்டாம் என கெஞ்சியதால் சுருதிக்கும் விசயம் தெரியாது.

விக்ரம் அவளை பார்க்கவும் கோபம் அதிகமானது. அவன் வேகமாக எழுந்து சுவாதி கழுத்தை பிடிக்க, அவள் கீர்த்தனா இறந்த செய்தியில் மரத்து போய் நின்றிருந்தாள்.

விக்ரமை பிடித்து இழுத்து அனைவரும் அவனை தடுத்தனர்.  சிம்மாவின் அழைப்பு வந்தது.

“குடும்பத்தை கொல்ல ஆட்கள் வருகிறார்கள். அவர்களை பத்திரமாக பார்த்துக்கோ” என்றவனிடம் கீர்த்தனா இறந்ததை சொல்ல, சிம்மாவின் கைகள் நடுங்கியது.

உடனே கீர்த்துவின் உடலோடு அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பி விட்டான் விக்ரம். அவர்கள் சென்றவுடன் கீர்த்து இருந்த அறையிலிருந்து “கீது” என்ற அலறல் கதறலுடன் உன்னை கொலை செய்தவனை உன் உடலை அடக்கம் செய்வதற்குள் கொல்லுவேன். “இது என் கீது மேல பிராமிஸ்” என சீற்றமுடன் குரல் ஒலித்தது.

வீட்டிற்கு வரும் முன்னே அஜய் வினித், கார்த்திக் நண்பர்களை வீட்டிற்கு வரவைத்து இருந்தான். வீட்டிற்கு வந்த அஜய் அனைவரும் அவனுக்காக காத்திருப்பதை பார்த்து விட்டு, “ரோஹித் எங்கடா? எனக் கேட்டான். அவனை நீ அழைச்சிட்டு வருவன்னு நான் கம்பெனிக்கே போகலை” என வினித் சொல்ல, அனைவருக்கும் மனம் பதறியது.

ரோஹித்- மனீஷா திருமணத்தின் பின் இருவருடன் தான் சோட்டு தங்கினான். அதனால் இருவரும் பேசும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அவரவர் வேலையில் பிஸியாக இருந்தனர். ரோஹித் மட்டும் அவள் சோட்டுவுடன் மகிழ்வுடன் பேசுவதும் நடந்து கொள்வதையும் பார்த்து அவள் மீதான காதல் அவனுக்கு கூடி இருந்தது.

“வேலா” அஜய்யின் சத்தத்தில் ஓடி வந்தான் வேலன்.

“எமிலிக்கு கால் பண்ணி ரோஹித்தை வெளியே வர விடாமல் என் அறைக்கு அழைத்து சென்று பார்த்துக்க சொல்லு” என ராணியம்மாவிடம் “டெல்லியில நம்ம குடும்பத்துல்ல பாதுகாப்பு டைட்டாக தான இருக்கு?” எனக் கேட்டான்.

யாரும் உள்ளே நுழைய முடியாது. பாதுகாப்பாக இருப்பாங்க. ரோஹித்தை முதல்ல அழைச்சிட்டு வாப்பா..என ராணியம்மா அஜய்யிடம் சொல்ல, தியா ஓடி வந்து அஜய்யை அணைத்துக் கொண்டாள்.

“பார்த்து போயிட்டு வாங்க அஜூ” என அவள் கண்ணீருடன் சொல்ல, இவர்களை பார்த்து பயந்து கொண்டிருந்த மனீஷாவிற்கு மேலும் பயம் அதிகமானது.

அஜய் முன் மனீஷா வந்து நின்றாள். எல்லாரும் அவளை பார்க்க, “மாமா, அவரை பார்த்து கூட்டிட்டு வாங்க” என சொல்லும் போதே மனீஷாவிற்கு கண்ணீர் வந்து விட்டது.

அவள் தலையை தடவிய அஜய், “கண்டிப்பாக. அவனுக்கு ஏதும் ஆக விட மாட்டேன்” என்ற அஜய் “வீட்டை சுற்றிலும் செக்யூரிட்டீஸ் இருக்காங்க. எதற்கும் கவனமா இருங்க” என அஜய் கிளம்ப, “நானும் வாரேன் அஜய். அங்க வச்சு பிரச்சனைன்னா” என கார்த்திக் அவனிடம் வந்தான்.

வேலா இருக்கான் கார்த்திக்.

இல்ல, “நானும் வாரேன்” என அவனும் கிளம்ப, யுக்தா ஏற்கனவே ரோஹித்தை எண்ணி கவலையுடன் இருந்தவள் கார்த்திக் கிளம்புகிறான் எனவும் பயத்துடன் அவர்களை பார்த்தாள்.

முக்தா அவள் கையை அழுந்தப்பற்ற, கண்ணீர் வந்தே விட்டது யுக்தாவிற்கும். கார்த்திக் அவளை பார்த்தான்.

ராணியம்மா ரோஹித்தை அழைத்து விசயத்தை சொல்ல, அவன் வெளியே வந்ததாக சொல்ல, சீக்கிரம் கிளம்புங்க. ரோஹித் வெளியே இருக்கானாம் என ராணியம்மா சொல்ல, மனீஷா இதயம் படபடவென அடித்தது.

அலைபேசியை வாங்கிய கார்த்திக், அவன் இருக்கும் இடத்தை விசாரித்து கிளம்பினார்கள் கார்த்திக்கின் பைக்கில்.

வேலன் காரில் அவர்களை பின் தொடர்ந்தான்.

பாட்டி, “மாமாவும் அப்பா மாதிரி விட்டு போயிருவாங்களா?” என கேட்ட சோட்டுவின் கேள்வியில் கண்டதையும் சிந்தித்து மனீஷா மயங்கி விட்டாள்.

வினித் அவளை சோபாவில் படுக்க வைத்து நீரை தெளிக்க, விழித்த மனீஷாவும், “சோட்டுவை போல அலா மாதிரி அவருக்கும் ஏதும் ஆகிடுமா?” என அழுதாள்.

“என்னடி பேசுற? ரோஹித்துக்கு ஏதும் ஆகாது” தியா மனீஷாவை திட்டி அணைத்துக் கொண்டாள்.

சோட்டு அவளிடம் வந்து, “மை சூப்பர் ஹூரோஸ் வாராங்க மனு. எனக்கு ஏதும் ஆகாது” என ரோஹித்தை போல் கேலியாக பேசியவன் கண்ணீருடன் நின்றான்.

மனீஷாவோ அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். முகி, யுகி அவர்களை அணைத்துக் கொண்டனர்.

வெளியே துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டினரை சுற்றி நின்றனர் துப்பாக்கியுடன் வினு, விஜய், கரண், சந்தோஷ் அவர்களுடன் ரஞ்சனும் இருந்தான்.

உள்ளே நுழைந்தவர்களை சிறிதும் யோசிக்காமல் நம்ம டீம் ஆட்கள் “டப் டப்” என சுட்டுத் தள்ளினர்.

வினித்தும் சந்தோஷூம் மெதுவாக வெளியே வந்தனர். வீட்டை சுற்றி பார்க்க அனைவரும் சுட்டு இறந்து கிடந்தனர். உள்ளே வந்தவர்கள் பெருமூச்சுடன் அமர்ந்தனர்.

சிம்மா போலீஸ் ஆட்களை பாதுகாப்பிற்கு அழைக்க எண்ணினான். ரகசியன் அதை தடுத்து ஒரு பிளானை சொன்னான். பிரஸ் ஆட்களை வீட்டிற்கு முன் நிறுத்தினார்கள். ஆசிரமத்திலிருந்த தப்பித்த ஒரே பொண்ணும் இறந்ததாக கீர்த்துவை பற்றி நியூஸ் கொடுக்க, “வெளியே வந்திருந்த அமைச்சராக இருக்குமோ?” என பேச்சை மாற்றி இருந்தனர் பிரஸ் ஆட்கள்.

அங்கே யாரும் நுழைய முடியாத படி ஆட்களை சிம்மா அவனது இன்புளூயன்சால் ஏற்படுத்தி இருந்தான். நம்ம சி.ஐ. டி பசங்க வீட்டிற்கு மொத்தமாக விதார்த் பாதுகாப்பாக அவன் வீட்டில் வைத்திருந்தான்.

ரோஹித்தை பின் தொடர்ந்து வந்து எமிலி அவனுடன் காரில் ஏறினாள்.

“சீக்கிரம் வீட்டுக்கு போ” என அவள் சொல்லும் போது தான் ராணியம்மா ரோஹித்திற்கு அழைத்தது. இவர்கள் சென்று கொண்டிருக்க, பைக்கில் சிலர் காரின் இரு பக்கமும் கையில் துப்பாக்கியால் இவர்களை சுட, ரோஹித் காரை வேகமாக ஓட்டினான்.

பார்த்து ஓட்டு. நான் என் ஆளோட வாழணும். நீயே சாவடிச்சிடாதடா எமிலி சொல்ல, “இவனுக கொல்ல பாக்குறாங்களா? நான் உங்களை கொல்லப் பார்க்கிறேனா?” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே துப்பாக்கியிலிருந்து வந்த தோட்டா எமிலி கையை உரசி செல்ல, அவள் வலியால் கத்தினாள்.

ரோஹித் பதட்டமாக காரை ஓட்ட இடையிடையே பைக்காரர்கள் வந்து பைக்கை விட, அவன் தடுமாறி திருப்ப, கார் பள்ளத்தில் விழுந்தது..

ரோஹித்திற்கு தலையில் பலமான அடி. இரத்தம் வழிய குப்புற கிடந்த காரிலிருந்து வெளியே வந்து எமிலியை இழுத்தான். அவர்களை பைக் ஆட்கள் சுற்றி வளைக்க, ஒவ்வொருவர் நெற்றியிலும் தோட்டாக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்தது.

அஜய், கார்த்திக், வேலன் வந்திருந்தனர். எமிலிக்கு வந்த இரத்தத்தை பார்த்து துடித்து போன வேலன் ஒரே நேரத்தில் அனைவர் நெற்றியிலும் தோட்டாவை இறக்கி அஜய், கார்த்திக்கிற்கு முன் எமிலியிடம் வந்து அவளை தூக்கினான்.

“கார்டு பாய்..லவ் யூ” என அவள் கண்ணை மூட, “சார்” என வேலன் அஜய்யை பார்க்க, “கார்ல்ல ஏறுங்க” என ரோஹித்தையும் சேர்த்து காரில் ஏற்றி வீட்டிற்கு விரைந்தனர்.

வீட்டிற்கு இரத்தமுடன் வந்த ரோஹித்தை பார்த்து பதறி மனீஷா அவளையும் மீறி அவனை ஓடி வந்து அணைத்து அழுதாள். அவனுக்கோ இனிய அதிர்ச்சி.

“கார்த்திக்கை பார்த்து யுக்தா அவனுக்கு ஏதும் அடிபட்டிருக்கா?” என கண்களால் ஆராய்ந்தாள். ஏதுமில்லை என்றவுடன் அவளிடம் நீண்ட பெருமூச்சு.

எமிலியை வேலனும் அஜய்யும் ஹாஸ்பிட்டலில் சேர்த்து அங்கேயே இருந்தனர். தியா அவர்களை பற்றி விசாரித்து விட்டு எமிலிக்காக வருந்தி அஜய்யை அழைத்து அவனிடம் பேசினாள்.

ராணியம்மா, அவர் அறைக்கு சென்று அடிக்கான மருந்தை எடுக்க செல்ல, அவனிடமிருந்து பிரிந்த மனீஷா கொஞ்சமும் தாமதிக்காது, அவளது துப்பட்டாவை கிழித்து அவன் தலையில் கட்டி விட்டு, அவன் கையை பிடித்து அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.

இருவரும் போவதை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார் ராணியம்மா.

ரோஹித்திடம் ஏதும் கேட்காமல் அவன் அலமாரியை திறந்து அவனுக்கு தேவையான பொருட்களை எடுத்து வந்து அவன் முன் மண்டியிட்டு அமர்ந்து, காயத்தை துடைத்து, கண்ணீர் அவளுக்கு நிற்கவேயில்லை. காயம் ஆழமாக இருந்தது.

அறையை விட்டு வெளியே மேலிருந்தே..”வினித் சீனியர், டாக்டர்ஸ் யாரையாவது அழையுங்க” என சொல்லி விட்டு உள்ளே சென்று அவளுக்கு தெரிந்த முறையில் கட்டிட்டாள். பின் அவன் கை, கால் என அவனிடம் கேட்டு, அவளும் ஆராய்ந்து மருந்திட்டாள். அவனோ அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“பயந்துட்டியா?” ரோஹித் கேட்க, அவள் ஆச்சர்யமாக அவனை பார்த்தாள்.

“நான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன் உனக்காக” என்றான் ரோஹித்.

“ம்ம் ரொம்ப பயந்துட்டேன். எனக்கு இப்ப நீங்க தான இருக்கீங்க” என அவனை அணைத்தாள். அவனும் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான்..

“ஒரு நிமிசம்” என அஜய்க்கு கால் செய்து எமிலியை பற்றி விசாரித்தான்.  மருத்துவர் ரோஹித்திற்கு மருத்துவம் பார்த்து விட்டு, ஓய்வெடுக்கட்டும். காயம் ரொம்ப ஆழமில்லை. பயப்பட வேண்டாம் என்றார்.

“நேரமாகுது. எல்லாரும் படுக்க போங்க” என ராகவீரன் சொல்ல, அனைவரும் களைந்து செல்ல, கார்த்திக் அவனாகவே யுக்தாவிடம் சென்று, “எனக்கு எந்த அடியும் இல்லை” என சொல்லி விட்டு நண்பர்கள் அனைவரும் விதார்த் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

அங்கே சீனியர் டிடெக்டிவ்ஸூம் இவர்களுக்கு உதவிக்கு வந்திருந்தனர். அனைவருக்கும் நிம்மதி. அந்த சிலரை தவிர ரத்தன் ஷெட்டி குடும்பம், ஆட்களை தவிர.

சோட்டு, “நீ என்னோட வா” என ராணியம்மா அவனை அழைத்துக் கொள்ள, ரோஹித் மனீஷாவை பார்த்தான். அவள் ஏதும் சொல்லாமல் அறைக்கு சென்று விட்டாள்.

படுக்கையில் அமர்ந்திருந்தவளிடம் வந்தான் ரோஹித். “பயப்படாத எனக்கு ஒன்றும் ஆகாது. உன்னோட அலா போல உன்னை விட்டு போக மாட்டேன்” என சொல்லி விட்டு சட்டையை கழற்றி விட்டு சோபா அருகே அவன் செல்ல, “இங்க படுத்துக்கோங்க” என்றாள் மனீஷா தரையை பார்த்துக் கொண்டே.

பரவாயில்லை.

ப்ளீஸ்..என மனீஷா சொல்ல, அவளருகே சென்று “செத்துருவேன்னோன்னு நீ எனக்கு ஆஃபர் கொடுக்கிற மாதிரி இருக்கு” என்றான்.

“வலிக்கும்ல்ல?”

“மனசுல்ல இருக்கிற வலிக்கு இது பரவாயில்லை” என சொல்லி விட்டு அவன் சோபா அருகே செல்ல, ஓடிச் சென்று மனீஷா சோபாவில் படுத்துக் கொண்டாள்.

மனூ..எழுந்திரு..

ப்ளீஸ். முதல்ல உங்களுக்கு சரியாகட்டும்.

அப்புறம்..

அப்புறமும் நீங்க படுக்கையிலே படுத்துக்கோங்க.

அவன் இதழ்கள் வளைந்தது. சரி போ. நீ படு. நானும் படுத்துக்கிறேன் என அவன் சொல்லி நகர்ந்தான்.

அவள் படுத்து விட்டு அவனுக்காக காத்திருந்தாள். அவன் வரவில்லை.

“என்ன செய்கிறான்?” என பால்கனியை எட்டிப் பார்த்தாள். அவன் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

“தூங்கலையா?” அவனிடம் சென்றாள்.

தூங்க முடியல. மருந்தும் நீங்க சாப்பிடலை என கையிலிருந்த மருந்தை நீட்டினாள். அவளை பார்த்து வாங்கி விட்டு அவன் நீரை எடுக்க சென்றான். ஓடிச் சென்று அவள் எடுத்துக் கொடுத்தாள்.

“உனக்கு எதுவும் வேணுமா?” அவன் கேட்க, நீங்க தூங்கணும்..

ரோஹித் சென்று படுத்துக் கொண்டான். அவளும் அடுத்தபக்கம் திரும்பி படுத்துக் கொண்டாள். அவன் மருந்தின் வீரியத்தில் உடனே தூங்கி விட்டான். அவன் உறங்கியது தெரிந்ததும் அவனருகே வந்து படுத்துக் கொண்டு அவனது காயத்தை பார்த்து கண்ணீருடன் திரும்பி படுத்துக் கொண்டாள். அவளும் உறங்கி விட்டாள்.

யுக்தா அறையில் உறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அலைபேசியை எடுத்து கார்த்திக் எண்ணை பார்த்து சிந்தனையுடன் அவனுக்கு அழைத்தாள்.

நேரம் கழித்தே அலைபேசியை எடுத்தான் அவன்.

ஹலோ..கார்த்திக் அழைக்க, யுக்தாவிடம் பதிலில்லை.

“யாரு இந்த நேரத்துல்ல?” என்று எண்ணை புருவம் சுருக்கி பார்த்து, “புஜ்ஜிம்மா” என அழைத்தான். அவன் அழைப்பில் அவள் அலைபேசியை துண்டித்து விட்டாள்.

கார்த்திக் புன்னகையுடன் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான்.

மறுபடியும் அவனை அழைக்க, அவன் புன்னகை பெரிதாகியது. அலைபேசியை காதில் வைத்து அமைதியாக இருந்தான்.

கார்த்திக்..

அவன் அமைதியாக இருந்தான்.

“நிஜமாகவே உங்களுக்கு அடி ஏதும் படலைல்ல?” அவள் கேட்க, இல்லைன்னு அப்பொழுதே சொன்னதாக நியாபம்.

“ம்ம்..சும்மா தான் கேட்டேன்” என அவள் சொல்ல, உடனே வீடியோ கால் செய்தான் கார்த்திக்.

யுக்தா அதிர்வுடன், “இப்ப என்ன பண்றது?” என வைத்துக் கொண்டிருந்தாள்.

கால் கட் ஆகவும் பெருமூச்சு விட்டாள். ஆனால் கார்த்திக் மீண்டும் அழைத்தான்.

எடுத்த யுக்தா கார்த்திக்கை பார்த்தாள். அவனும் படுக்கையில் படுத்திருந்தான். இவள் வேகமாக படுக்கையில் அமர்ந்தாள்.

“சொல்லு? ஏதும் பேசணுமா?” என கார்த்திக் அவளை பார்த்தான்.

இல்லையே. சும்மா தான்..அடிபட்டுருக்கோன்னு கால் பண்ணேன்.

“அப்படியா?” நம்பாமல் கார்த்திக் கேட்க, என்னோட தம்பிக்கு உதவியதற்கு நன்றி என்றாள்.

ஓ.கே. “நான் கொஞ்சம் பேசலாமா?” கார்த்திக் கேட்டான்.

இல்ல, “எனக்கு தூக்கம் வருது” என அவனை தவிர்க்க எண்ணினாள்.

“பேசலாம்” என கார்த்திக் எழுந்து சாய்ந்து அமர்ந்தான். அவள் புருவம் சுருக்கி பார்த்தாள்.

“என்ன?”

“அது..உங்க பின்னாடி என்ன புகைப்படம்?” எனக் கேட்டாள்.

அது வொர்க் சம்பந்தப்பட்டது.

ஓ..என அவள் அமைதியானாள்.

“சாரி” என்றான் வெறுமனே கார்த்திக்.

“எதுக்கு சாரி?”

உன்னை நான் நம்பாமல் இல்லை. அவளை போய் என்னோட சேர்த்து பேசிட்டியேன்னு கோபம். நீ கால் பண்ண போது கோபமாக பேசியதற்கு சாரி..

போன வாரம் நான் ஒரு அர்ஜென்ட் வொர்க்ல்ல பிஸியா இருந்தேன். அதான் கால் எடுக்கலை. உன்னோட மேரேஜ் விசயம் உன் திருமண நாளன்னு காலையில தான் எனக்கு தெரியும். அதான் கோபத்துல்ல எடுக்கலை என அவன் சொல்ல, அலைபேசியை கையால் மறைத்து விட்டு யுக்தா அழுதாள்.

அவனால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவள் அழும் சத்தம் கேட்டு, “சாரி புஜ்ஜிம்மா..என்னோட கோபம் தான் நாம பிரிய காரணம். உன்னை நான் நம்பாமல் இருப்பேனா? என்னால நீ வேறொருவனை திருமணம் செஞ்சுக்கப் போறன்னு தான் கோபம். என்னை மன்னிக்க மாட்டாயா?” இனி நம் விசயத்தில் கோபப்படவே மாட்டேன்.

அழுகையை நிறுத்தி கையை எடுக்காமலே, நாம பேசிக்கலாம். போதும் என்றாள்.

யுகி, “நீ நினைக்கிற மாதிரி அம்மா இல்லைன்னு இப்ப புரிஞ்சிருப்பேல்ல?” அவங்களுக்கு நான் திருமணம் செய்யலைன்னு கோபம். இதுல நான் காதலிக்கும் பொண்ணு நீ என்பதால் கோபம் இல்லை. திருமணம் ஆனவள் என்று தான். உன்னிடம் அம்மா ஏதும் இதை பற்றி பேசுனாங்களா? அவன் கேட்க, ஊஹூம்..என்றாள்.

சரி, “அம்மா என்னிடம் ஓ.கேன்னு சொல்லீட்டாங்க”. நீ சம்மதித்தால் மேரேஜ் பண்ணிக்கலாம்.

நோ..எனக்கு மேரேஜ் வேண்டாம். நீங்க அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி நல்ல பொண்ணா மேரேஜ் பண்ணிக்கோங்க.

“முதல்ல என்னை பாரு” என கார்த்திக் சொல்ல, ஊஹூம் என்றாள்.

இப்ப நீ வீடியோல்ல வரலைன்னா நான் வீட்டுக்கு வந்துருவேன்.

முகத்தை துடைத்து விட்டு அவனை பார்த்தாள்.

“எதுக்கு தேவையில்லாமல் அழுற? உனக்கு மேரேஜ் பண்ணிக்க விருப்பமில்லை. அவ்வளவு தான? எத்தனை வருசமானாலும் நான் காத்திருப்பேன். உனக்கு தோன்றினால் சொல்லு?” என அவளை கூர்ந்து பார்த்தான்.

கார்த்திக், எனக்கு நம்பிக்கை இல்லாமல் போச்சு. அதனால நீங்க வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க.

சொன்னதையே சொல்லாத யுகி. எதையும் கடந்து வர வேண்டாமா? இப்படியே நின்று விட்டால் உனக்கென யாருமே இல்லாமல் போயிடுவாங்க.

போகட்டும். நான் யாரையும் எதிர்பார்க்க மாட்டேன்.

சரி, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ என்னமும் செய்.

யுக்தா கண்ணீர் வழிந்தது.

“இப்ப எதுக்கு அழுற?”

அவள் கண்ணீரை தொட்டு பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் அலைபேசியை அணைத்து விட்டாள். கார்த்திக் மீண்டும் மீண்டும் அழைத்தும் அவள் எடுக்கவேயில்லை.

கொஞ்சமும் யோசிக்காது பைக்கை எடுத்து யுக்தாவை பார்க்க கிளம்பி விட்டான். இவனது பைக் சத்தம் கேட்டு அவன் அப்பா அவனை பார்த்தார். ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார்.

வீட்டிற்கு வந்த கார்த்திக், “யுக்தாவை மாட்டி விட வேண்டாம்” என எண்ணி, அவளிருக்கும் அறை பால்கனியில் ஏறி குதித்தான்.

சத்தம் கேட்டு படுக்கையிலிருந்து கண்ணை துடைத்துக் கொண்டே வந்த யுக்தா கார்த்திக்கை பார்த்து அதிர்ந்தாள்.

கார்த்திக், “இங்க எதுக்கு வந்தீங்க? எப்படி வந்தீங்க?” என பால்கனிக்கு கீழே எட்டி பார்த்து விட்டு அவனை பார்த்தாள்.

அவன் மார்புக்கு இடையே கையை கட்டிக் கொண்டு அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

கார்த்திக், போங்க. யாராவது பார்த்தால் தப்பா எடுத்துப்பாங்க..

“போகணுமா?” எனக்கு நீ முதல்ல பதில் சொல்லு. “யாரோ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சொல்ற? என்னால முடியும்ன்னு நினைக்கிறியா?”

யுக்தா தலைகவிழ்ந்து நின்றாள்.

அவளது இருபக்க தோள்களையும் அழுந்த பற்றி, “சொல்லு? நான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு சொல்ற? கோபமிருந்தாலும் இத்தனை வருசமாக உன்னையே நினைச்சிட்டு இருக்கேன். என்னால முடியுமா?”

யுக்தா அவனை பார்க்க முடியாமல் முகத்தை திருப்ப, அவளை தள்ளி சுவற்றில் சாய்த்து அவளை அவன் நேராக பார்க்க வைத்தான்.

“சொல்லு? நான் பண்ண முடியுமா?” அவன் கேட்க, யுக்தா அழுதாள். கையை எடுத்துக் கொண்ட கார்த்திக் அவளை அணைத்தான்.

“என்ன நினைக்கிறேன்னு சொல்லேன்?” என அவன் கேட்க, கார்த்திக்..நான் உங்களுக்கு சரியாக இருக்க மாட்டேன். நான் ஏற்கனவே திருமணமானவள். அதுவும் அன்றே கணவனை இழந்தவள். என்னால் உங்களுக்கு ஏதாவது ஆகி விட்டால்..என அவனை அணைத்து அவளும் அழுதாள்.

இதெல்லாம் பிரச்சனையில்லைம்மா. அவன் உன்னை திருமணம் செய்து விட்டு சென்றதால் தான் நீ இங்க வந்த. நாம மீட் பண்ண முடிந்தது. இல்லைன்னா நாம பிரச்சனையை நான் இழுத்துக் கொண்டிருந்திருப்பேன்.

உன்னை திருமணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கேன். நீ தான் சொல்லணும்.

“என்னால முடியாது கார்த்திக்” என அவனிடமிருந்து பிரிந்து திரும்பி நின்றாள் யுக்தா.

“நான் மட்டுமல்ல என் குடும்பமே உனக்காக காத்திருக்கோம்” என அவளை இழுத்து அவள் இதழ்களில் முத்தமிட்டு, “உன்னை தவிர வேற வாழ்க்கை எனக்கில்லை” என கோபமாக சொல்லி விட்டு வெளியேறினான் கார்த்திக். யுக்தா கண்ணீருடன் நின்றாள்.

“எத்தனை நாளாக இது நடக்குது?” என்ற குரலில் பதறி பார்த்தாள் யுக்தா.

“சொல்லு?” அஜய் கேட்க, அவள் நடந்ததை சொல்ல, அவளை அமர வைத்து, கடந்த கால நினைவுகள் வலியாக இருந்தாலும் அதை தவிர்த்து உன் வாழ்க்கையை தொடங்கு. உனக்கு கார்த்திக்கை இன்றா தெரியும். முன்பிருந்தே தெரியும் தான? அவன் உனக்காக தான இத்தனை வருசமா காத்திருக்கான். “அவன் வாழ்க்கை நீ தான்னு புரிஞ்சுக்கோ யுகி” என அஜய் அறி வுரை சொல்ல, அவன் தோளில் சாய்ந்து கண்ணீருடன், நான் அவரை திருமணம் செய்து ஏதாவது ஆகிட்டா.

ஆகாது. “எப்படி அவனுக்கு நீ தான்” என அவன் உறுதியா சொல்றான்னோ அதே போல “உனக்கும் அவன் தான்”. அதான் உனக்கு பிடிக்காமல் நடந்த திருமணம் நின்று கார்த்திக்கை சந்தித்து உங்க பிரச்சனை முடிஞ்சிருக்கு.

ம்ம்..

என்ன ம்ம்? ரொம்ப நாளாக்காதம்மா..அவனுக்கு வயசு ஏறிட்டே போகுது. நீ திருமணம் செய்தால் வினித்தும் பண்ணுவேன்னு நிக்கிறான்.

“யோசிக்கிறேன்” என அஜய்யிடமிருந்து நகர்ந்து அவனை பார்க்க, “நல்லா தூங்கு” என அவன் கிளம்ப, யுக்தா யோசனையுடன் துயில் கொண்டாள்.