கல்லூரி முடிந்து திலீப்பை பார்க்க ரம்யாவும் நேகனும் ஹாஸ்பிட்டல் வந்திருந்தனர்.
ஹே, “வாட் எ சர்பிரைஸ்?” என அப்சரா அவர்களிடம் வந்தாள்.
“டிராமா ஏதும் நடக்குதா? புட்டி போட்டுருக்கீங்க” என ரம்யா அப்சராவிடம் கேட்டாள்.
நீ தான அழகா இருக்குன்னு சொன்ன. அதான் போட்டுகிட்டேன். “நல்லா இல்லையையா?” என அவள் கேட்க, “க்யூட்டா இருக்கு” என்றாள் ரம்யா.
வக்கீல் சார், வாங்க.. “பிளான் எப்படி போயிட்டு இருக்கு?” என அப்சரா கேட்க, ரம்யா நேகனை பார்த்தாள்.
நல்லா தான் போகுது. ஆனால் எனக்கு தான் கல்யாணம் பற்றி பேசணுமான்னு யோசனையா இருக்கு.
“யோசனையா?” அச்சோ..சார், யோசிச்சீங்க கதை முடிஞ்சிரும். விக்ரம் சாரை வழிக்கு கொண்டு வர இது தான் சரி.
“உங்க ஐடியாவா இது?” என ரம்யா நேகனையும் அப்சராவை பார்த்தாள்.
“யா, எங்களோட பிளான் தான். நாங்க சேர்ந்து தான் பிளான் பண்ணோம்” என அப்சரா ரம்யாவிடம் சொல்லி விட்டு, “சார் உங்களுக்கு பிடிச்ச பொண்ணு தான? ட்ரை பண்ற மாதிரி நினைச்சுக்கோங்க”.
ஹலோ..அண்ணாவுக்கும் சுவாதி அண்ணிக்கும் ஏதோ பிரச்சனை தான். அதுக்காக ட்ரைல்லாம் அண்ணா..நீ இதெல்லாம் பண்றதா இருந்தா.. நோ..என்றாள் ரம்யா.
திலீப் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அப்சராவோ..சும்மா தான் சொன்னேன். விட்டா அடிச்சிருவ போல..உன்னோட விக்ரம் அண்ணாவை முடிந்தால் நாங்க சொல்ற இடத்துக்கு அழைச்சிட்டு வரணும்.
ரம்யா எழுந்து கோபமாக, “அண்ணா, இவங்க என்ன செய்ய சொல்றாங்க? நீ என்ன பிளான் வச்சிருக்க?” நேகனிடம் உரிமையுடன் கோபமாக கேட்டாள் ரம்யா.
“ரம்யா” என திலீப் அழைக்க, அவனிடம் ஓடிச் சென்று ரம்யா பேசத் தொடங்க, “சீக்ரட் சீக்ரட்டாக தான் இருக்கணும். வெளியே சொல்லக் கூடாது. உனக்கு தெரியாதுன்னு தெரிஞ்சுக்கோ” என அப்சரா ரம்யாவை அவள் பக்கம் இழுத்தாள்
ரம்யா யோசனையுடன் அவனை பார்த்தாள். இதோ பாரு சாரே சொல்லீட்டார். அவருக்கும் பார்ட்னருக்கும் இடையில் சீக்ரெட் இருக்காது. சொல்லுங்க சார் என்று கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்தாள்.
திலீப் வந்து விட இருவருக்கும் பதிலளிக்காமல் நேகன் அவனிடம் சென்றான். அப்சராவும் அவனையே பார்த்தாள். ஆனால் அவள் நேராகவே, “சாருக்கு என்னாச்சு? மூடு அப்சட்டா இருக்காங்களோ!” எனக் கேட்டாள்.
“தெரியலையே!” என ரம்யா உதட்டை பிதுக்கிக் கொண்டே திலீப்பிடம் வந்தாள்.
ஆமா..வாங்க என இருவரையும் அழைக்க, “ஹேய்..நானும் வாரேன்ப்பா” என அவர்கள் பின் ஓடினாள்.
மாமா..என நேகன் பேசத் தொடங்க, அவனருகே வந்து அமர்ந்த அப்சரா “அவன் என்ன சொல்லப் போகிறான்?” என அவன் தோளில் கை போட்டு அவள் உற்று பார்க்க, நேகன் பேச முடியாமல் அவளை பார்த்தான்.
எல்லாரும் அப்சராவை பார்த்தனர்.
“சார் சொல்லுங்க? என்ன விசயம்? நானும் கெல்ப் பண்றேன்”.
“கையை மட்டும் எடுங்க போதும்” என்றான் நேகன் அவள் முகத்தை பார்க்காமல். அவள் அவனை பார்த்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கையை எடுத்தாள்.
மாமா, நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன். அதை தெளிவு படுத்த தான் வந்தேன்.
“என்ன?” திலீப் கேட்க, “கீர்த்தனா ஊருக்கு சென்ற அன்று விக்ரம் அண்ணா ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்களாமே! ஒரு வாரம் கழித்து தான் உங்க எல்லாரையும் பார்க்க வந்தாங்களாமே!”
ஆமா, கீர்த்துவை பிளைட்டில் ஏற்றி விட்டு வரும் போது விக்ரம் மச்சானுக்கு விபத்தாகிடுச்சாம்.
“விபத்தா? யாருமே என்னிடம் சொல்லவில்லை” என சொல்லி விட்டு நாக்கை கடித்து ரம்யா திலீப்பை பார்த்தாள்.
அவளை முறைத்து விட்டு, “எதுக்கு இதை கேக்குற?” நேகனிடம் திலீப் கேட்டான்.
“இல்லையே! வீ யும் ஒரு வாரம் அவருடன் துணைக்கு இருந்து தான் வந்தான். உங்களுக்கு தெரியாதா?” திலீப் கேட்டான்.
அவன் எப்படி? ரம்யா கேட்க, அவனுக்கு கேரளாவில் ஒரு பிசினஸ் மீட் இருந்தது. அதை முடிச்சிட்டு கீர்த்துவை பிளைட் ஏற்றி விடுவதாக இருந்தது. ஆனால் அவனுக்கு நேரமானதால் நேரம் கழித்து கிளம்பி சென்னை வந்து கொண்டிருந்தான். அப்பொழுது தான் விக்ரமை ஆட்கள் தூக்கி செல்வதை பார்த்து பதறி அழைத்து போயிருக்கான்.
சரி, “வீட்டுக்கு ஏன் கால் பண்ணி சொல்லலைன்னு யாருக்கும் கேட்க தோணலையா?” நேகன் கேட்க, “நேகா, நீ என்ன நினைக்கிற? நேரடியாகவே பேசு” திலீப் கோபமாக கேட்க, விக்ரம் அண்ணாவும், வீயும் சரியில்லை. அவங்க அவங்களாக இல்லை. “யாருமே கவனிக்கலையா?” ரம்யாவும் கோபமாக கேட்டாள்.
“என்ன சொல்ல வர்ற?” திலீப் மேலும் கோபமாக கேட்டான்.
“நமக்கு தெரியாம இருவருமே பெரிய விசயம் எதையோ மறைக்கிறாங்க” என நேகன் எழுந்து கோபமாக கூறினான்.
திலீப் யோசனையுடன் இருவரையும் பார்த்தான். அப்சரா மூவரையும் அவதானித்துக் கொண்டிருந்தாள்.
“நமக்கு தெரியாமலா?”
சென்னையில தான விக்ரம் அண்ணாவை சேர்த்திருப்பான். எங்கன்னு எனக்கு பார்த்து சொல்லுங்க. போதும். நான் என்ன விசயம்ன்னு பார்த்துக்கிறேன் என நேகன் சொல்லி திலீப்பை பார்த்தான்.
ஆமா..சென்னையில தான் இருக்கும். ஆனால் எனக்கு..என திலீப் மூவரையும் பார்த்தான்.
“புரியுது” என ரம்யா திலீப்பை முறைத்துக் கொண்டே கீர்த்தனா பாரின் சென்ற தேதி, நேரத்தை சொன்னாள்.
“எந்த ஹாஸ்பிட்டல்ன்னு நான் கண்டுபிடித்து சொல்றேன்” என அப்சரா அலைபேசியை எடுத்தாள் சீரியசான முகத்துடன்.
“வேறேன்ன பண்ணனும்?” திலீப் இருவரையும் பார்க்க, “தேவையில்லை” என ரம்யா கோபமாக, அண்ணா..கீர்த்தனா சென்ற பிளைட் பற்றி விசாரிக்கணும்.
“அதை பற்றி எதுக்கு?” திலீப் புரியாமல் கேட்க, அப்சரா அவன் முன் வந்து, மருத்துவராக இருந்தாலும் முதல்ல வீட்ல என்ன நடக்குதுன்னு பார்க்கணும். எனக்குமே இவங்க சொல்றதை வச்சு பார்த்தால் சரியாக படல.
“அப்புறம் உங்க தம்பி டென்சன்ல்ல விபத்தானதை சொல்ல மறந்துட்டேன், மீட்டை மீண்டும் வச்சாங்கன்னு சொன்னாரா?” அப்சரா கேட்க, “ஆமா” என திலீப் விழிவிரித்து அவளை பார்த்துக் கொண்டே எழுந்தான்.
“ஏர்போர்ட்ல்ல விசாரிக்கணும்ன்னா கீர்த்துவுக்கு ஏதுமா?” என திலீப் பதறி கேட்டான்.
எனக்கும் அதான் சந்தேகம். அவள் பாரின் கிளம்பும் முன் என்னிடம் சொல்லீட்டு தான போனாள். போயிட்டு கால் பண்றேன்னு சொன்னா. இந்த இரண்டு வருசமா கால் பண்ணவேயில்லை.
திலீப் உங்களுக்கே தெரியும். என்னை அவள் தோழியாக தான் பார்த்தாள். பள்ளி படிக்கும் போது கூட வீட்டில் நடக்கும் அனைத்தையுமே என்னிடம் சொல்வா. ஆனால் பாரின் சென்ற பின் நான் கால் பண்ணி எடுக்கவே இல்லை. நிறைய முறை ட்ரை பண்ணேன். எடுக்கலை.
அப்புறம்..இன்னொரு விசயம். நான் ஊர்ல பேசும் போது கீர்த்துவை பார்க்கணும்ன்னு ஆசையில தான் அவளை பற்றி கேட்டேன். விக்ரம் அண்ணா, வீ முகம் சோர்ந்தது போல தெரிந்தது. கண்டிப்பா பிரச்சனை. என்னோட கீர்த்துவுக்கு ஏதும் ஆகி இருக்கக் கூடாது என ரம்யா அழுதாள்.
அப்சரா அவளை பார்க்க, திலீப் அவளை அணைத்துக் கொண்டான்.
“இதுக்கும் சுவாதிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என நேகன் சொல்ல, சுவாக்கு எப்படி?
இருக்கலாம். விக்ரம் அண்ணா மட்டுமல்ல விகாஸ் இதற்கு முன் நம்ம சுவாவிடம் இப்படி காயப்படுத்தும் படி பேசி நான் பார்த்ததேயில்லை. இருவரும் செல்லமா அடிச்சுப்பாங்க. ஆனால் இந்த அளவு போகாது என கண்கலங்கினான் நேகன்.
அப்சரா அவனருகே அவனாகவே நகர்ந்து, கண்ணை துடைத்துக் கொண்டு இந்த ரெண்டு விசயத்துல்ல தான் நம்முடைய முதல் படி இருக்கு.
மாமா..இதை பற்றி யாருக்குமே தெரியக் கூடாது. நீங்க எல்லாரிடமும் எப்பொழுதும் போல் நடந்துக்கோங்க. இல்லை நம்மால கண்டுபிடிக்க முடியாது. நமக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவங்க நாம அந்த விசயத்தை கண்டறிய எண்ணுவது தெரிந்தால் தடுக்க பார்ப்பாங்க. எல்லாருமே கவனமா இருங்க என்றான்.
ம்ம்..என திலீப், “நான் ஏர்ப்போட் விசயத்தை பார்த்துக்கிறேன்” என அங்கே பணிபுரியும் அவன் நண்பனை அழைத்து பேச, அப்சராவும் யாரிடமோ பேசி விட்டு அவர்களருகே வந்தாள்.
பேசி வந்த திலீப் குழப்பமுடன், நேகன் கீர்த்து பாரின் போகலைன்னு நினைக்கிறேன். அவளோட பேர் இருக்கு. ஆனால் அவள் அன்று போகலையாம்.
“நினைச்சேன்” என்றாள் அப்சரா.
கண்டிப்பாக அந்த பொண்ணு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக தான் இருக்கும். “சார் நீங்க உங்க சுவாதியிடம் பேசுவது போல் இதை பற்றி கேட்டுப் பாருங்களேன்” என்ற அப்சராவிடம், “வாய மூடு..என்னோட பர்சனல் விசயத்துல்ல தலையிடாத” என கத்தினான் நேகன். திலீப்பும் ரம்யாவும் அவனை அதிர்ந்து பார்க்க, அப்சரா பயந்து பின்னே நகர்ந்தாள்.
தலையை அழுந்த கோதிய நேகன், “நான் கிளம்புகிறேன்” என அவன் செல்ல, அப்சராவிற்கு அழுகை வந்து விட்டது.
ரம்யூ, “நான் என்ன பண்ணேன்? ஐடியா தான குடுத்தேன். நான் இனிமேல் அவனை பார்க்கவே மாட்டேன்” என அழுது கொண்டே காரை எடுத்தாள் அப்சரா.
நில்லுங்க..நில்லுங்க..ரம்யாவும், அப்சரா..நில்லு என திலீப்பின் அழைப்பும் அவள் காதை எட்டவில்லை.
“என்னாச்சு இவனுக்கு?” திலீப் கேட்க, இவளை பார்த்ததிலிருந்து சரியில்லை. ஆனாலும் நல்லா தானே பேசினார் என சிந்தனையுடன், “நான் கிளம்புகிறேன் திலீப்” என்று ரம்யா சோகமாக சொல்ல, “இரு. நானும் வாரேன்” என்றான் அவன்.
“உங்களுக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்க?”
இருக்கு. நான் யாரிடமாவது சொல்லீட்டு வாரேன் என திலீப் ஹாஸ்பிட்டல் விட்டு வெளியே வந்தான்.
திலீப் புன்னகையுடன், “என்ன செய்ற?” என கேட்டுக் கொண்டே அதனை அவளது கையிலிருந்து பறித்தான்.
“எனக்கு பயமா இருக்கு திலீப். கீர்த்துவுக்கு ஒன்றும் இருக்காதுல்ல?” என கண்ணீருடன் கேட்டாள் ரம்யா. அவள் கண்ணீரை துடைத்து விட்டு, “நம்ம கீர்த்து நல்லா இருப்பா. வா” என அவளை வெளியே அழைத்து சென்றான். இருவரும் முதல் முறையாக தனியே நேரம் செலவழித்தனர்.
அன்றிரவு ரம்யாவிற்கு கால் செய்த அப்சரா சொன்ன விசயத்தில் அதிர்ந்தாள் ரம்யா.
விக்ரம் சென்னை ஹாஸ்பிட்டல்ல டிரீட்மென்ட் பார்க்கலை. எந்த ஹாஸ்பிட்டலிலும் அவர் பெயரில்லை என்றதும் ரம்யா அதிர்ந்தாள்.
“எங்க பார்த்திருப்பாங்க?”
அது தெரியல ரம்யா. ஆனால் கண்டிப்பா தவறா தான் இருக்கு. அவரே கூட ஹாஸ்பிட்டலில் இருந்து பெயரை அழிக்கவும் வாய்ப்பிருக்கு. அதை கூட செய்திருக்கலாம்.
“இது சாத்தியமா?”
ம்ம்..சாத்தியம் தான். அவர் போலீஸ் என்பதால் கூட செய்திருக்கலாம்..
சாரி..அண்ணாவுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சுன்னு தெரியல.
சரி, “ஏதும் கெல்ப் வேணும்ன்னா சொல்லு?” என அப்சரா மேலும் பேசாமல் அலைபேசியை வைத்து விட்டாள்.
இரு நாட்களுக்கு பின் “ரம்யா..ரம்யா..” என கூவிக் கொண்டே சுருதி தமிழினியன் வீட்டிற்கு வந்தாள். அவளுடன் நேகனும் திலீப், சுவாதியும் வந்திருந்தனர்.
“எல்லாரும் வந்துருக்கீங்க? என்ன விசயம்? ஏதாவது மேட்டரா?” கண்ணடித்தாள் குறும்புடன் ரம்யா.
“என்ன மேட்டரை நீ எதிர்பார்த்த?” என சுருதியும் கேலியுடன் திலீப்பை பார்த்தாள்.
“என்னோட மானம் தான் போகுது” என அவன் தலையில் அடித்தான்.
“இப்பவே அடிச்சுக்கிட்டா எப்படி? இனி தான ஆரம்பமே என ரம்யா தோளில் கை போட்டு நின்றாள்” மிருளாலினி.
“அண்ணி சும்மா இருங்க” என திலீப் வெட்க முகத்துடன் சென்று அமர்ந்தான்.
“ரம்யா, நீ வெட்கப்பட தேவையே இல்லை” என மிருளாலினி புன்னகைத்தாள்.
இதெல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்..வெளிய போகணும். தயாராகி வா என சுருதி சொல்ல, ரம்யா சுவாதியை பார்த்தாள். அவள் அமைதியாக திலீப் அருகே சென்று அமர, நேகனும் அமைதியாக அமர்ந்தான்.
“இவனுக இன்னும் சரியாகலையா? இந்த அப்சரா பொண்ணும் கால் பண்ணவே இல்லை” என ரம்யா சிந்தனையுடன் “எங்க போறோம்?” எனக் கேட்டாள்.
“ஷாப்பிங்” என திலீப் சொல்ல, அவனிடம் மற்ற இருவரையும் கண்களால் காட்டினாள் ரம்யா. அவன் கண்ணை மூடி திறந்தான்.
வாவ், “சூப்பரா இருக்கா” என மிருளாலினி சொல்லிக் கொண்டே திலீப் ரம்யாவை பார்க்க விடாமல் தடுத்தாள்.
அண்ணி..என அவன் முறைக்க, அவள் நகரவும் ரம்யாவை பார்த்து சிறு புன்னகை அவன் இதழோரம்.
“அவ்வளவு தானா அண்ணா ரியாக்சன்?”
“ம்ம் என்ன செய்தாலும் ரம்யா அழகா தான் இருப்பா” என திலீப் சொல்ல, ரம்யாவின் கன்னம் சிவந்தது. அவள் வெட்கமுடன் சுருதி பின் மறைந்து நின்றாள்.
“போதும்ப்பா போதும் முடியல. வாங்க போகலாம்” என சுருதி அழைக்க, அவர்கள் சென்றனர்.
“சாப்பிட்டு போகலாம்ல்ல?” வேல்விழி சத்தம் கொடுக்க, “அத்தை போயிட்டு வந்து சாப்பிடுறோம்” என ரம்யா சொல்லி சென்றாள்.
ஷாப்பிங் முடிந்து அனைவரும் திரும்ப, அவர்கள் சென்ற யாருமில்லா மரங்கள் அடர்ந்த காடடர்ந்த சூழலில் யாரோ செல்வது போல் இருக்க, சுருதியின் சத்தத்தில் தள்ளிச் சென்று கார் நின்றது.
“என்னாச்சு சுருதி?”
“அண்ணா, மகிழ் போறது போல இருக்கு” அவள் சொல்ல, “இருக்காதும்மா” என்றான் திலீப்.
“வாங்க பார்க்கலாம்” என நேகன் இறங்க, மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்தனர்.
மகிழன் தான் சுருதி. “அவன் இங்கே எங்கே போகிறான்?” திலீப் கேட்க, சுருதி அவர்கள் முன் செல்ல, அவளை பிடித்து தடுத்தான் நேகன்.
“பொறுமையா நட. அவனை பின் தொடர மட்டும் செய்” என்று நேகன் திலீப், ரம்யாவை பார்த்தான். சுவாதியோ கடனுக்கே என அவர்களுடன் நடந்து வந்தாள்.
குறைந்தது ஒரு மணி நேரமாவது நடந்து இருப்பார்கள். “காட்டுக்குள்ள இவர் மட்டும் எங்க போறார்?” சுருதி கேட்க, “தயவு செய்து அமைதியாக இருங்க. என் மனதில் இருக்கும் கேள்விக்கான விடை கிடைக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்” என நேகன் சொல்ல, ரம்யாவும் திலீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்து, “கீர்த்து இங்கே இருக்கிறாளோ!” என எண்ணினர்.
ப்ரெண்ட்ஸ்.. வாங்க நாமும் அந்த காட்டுக்குள்ள என்ன தான் செய்கிறான்னு பார்க்கலாம்.
யாரும் பயன்படுத்தாது போல செடி கொடிகளால் சூழ்ந்து தனி பங்களா ஒன்று பெரியதாக இருந்தது. மகிழன் அதனுள் சென்றான். எல்லாரும் வாயிலை அடையவும் மலைத்து பயத்துடன் நின்றிருந்தனர்.
அவன் உள்ளே செல்லவும் கேட்டை தாண்டி உள்ளே வந்து வாயிலருகே நின்று வரிசையாக உள்ளே நடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
மகிழனுக்கு முன்னதாகவே சிம்மா, விக்ரம், விகாஸ் உள்ளே ஒருவனை தலைகீழாக தொங்க போட்டு, சோபா, நாற்காலி என அமர்ந்து அவனை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அண்ணா” என்ற மகிழனின் சத்தத்தில் மூவரும் அவனை பார்த்தனர்.
மாம்ஸ், “இவனை என்ன செய்யலாம்?” என விகாஸ் கேட்டுக் கொண்டே தொங்கிக் கொண்டிருந்தவனை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.
“மாப்பிள்ள, இவனை கொல்லக் கூடாது. அதற்கு மேல இவனுக்கு வலிக்கணும்” என்ற சிம்மா வேங்கையென அவனிடம் வந்து கத்தியை அவனது உள்ளங்கையில் குத்தி குத்தி எடுக்க, தொங்கிக் கொண்டிருந்தவன் வலியில் அலறினான். அனைவரும் பதறி நகர்ந்தனர்.
“அண்ணா, இவங்க என்ன பண்றாங்க? நம்ம வீயுமா? மகிழும் என்னால நம்பவே முடியல” என சுருதி பதறினாள். அவன் சத்தம் அதிகமாக கேட்கவும் எல்லாரும் பதறி எட்டி பார்த்தனர்.
யாரும் நம்பமுடியாத செயல் அங்கு நடந்தது. தொங்கிக் கொண்டிருந்தவன் கால்களை விரிந்த நிலையில் அவனது பிறப்புருப்பை கட் செய்து கொண்டிருந்தான் விக்ரம். அவனுக்கு உதவியாக விகாஸ் நிற்க, சுவாதி வெளியே ஓடி சென்று வாமிட் செய்தாள்.
சுவா, ”ஒன்றுமில்லை” என திலீப் அவளிடம் ஓடினான்.
அண்ணா, “இவங்க” என ரம்யா இதயம் படபடவென அடித்தது.
மகிழ், “இவன் இன்னும் சாகலை பாரேன்” என விகாஸ் சிரித்து விட்டு..வலிக்குதா..வலிக்குதா..
இப்படி தான் வலிக்கும்.
“என்னை கொல்லுங்க” என அவன் முணங்கினான்.
“கண்டிப்பா சாவடா. அதுக்கு தான உன்னை தூக்கி இருக்கோம்..சொல்லு அவன் எங்க இருக்கான்?” விக்ரம் கேட்க, அவன் “தெரியாது” என தலையசைத்தான்.
போதும்டா விக்ரம். கிங் பசியோட இருப்பான். வாங்க என அனைவரையும் சிம்மா நகர்த்தி அழைத்து சென்றான்.
மகிழன் கையிலிருந்த வாளை அவன் வயிற்றில் சொருகி, சாவுடா என அவன் கொண்டு வந்த பையிலிருந்து பக்கெட்டை எடுத்து பிரித்தான்.
மகிழ், வா..சிம்மா அழைக்க, ம்ம்..அண்ணா என சொல்லிக் கொண்டே கொண்டு வந்த பக்கெட்டிலிருந்து ஆட்டுஇரத்தத்தை அவன் மீது மொத்தமாக கொட்டி விட்டு நகர்ந்து அவர்களிடம் சென்றான் மகிழன்.
அவனோ சாவின் விளிம்பில் இருக்க, “கிங் வாடா” என சிம்மா கத்த, கர்ஜனை சத்தம் பலமாக கேட்க, அவ்விடமிருந்த பறவைகள் கீச்சுக் குரலோடு படபடவென சிறகடித்து அங்கிருந்து ஓடியது.
நான்கு கால் பாய்ச்சலில் பருத்த உடலோடு அங்கே வந்து நின்றது சிங்கமொன்று. ரம்யாவும் சுவாதியும் அரண்டு வாயில் கை வைக்க, திலீப்பும் நேகனும் திகைத்து விழித்து அவர்களை பார்த்தனர்.
கிங் நேராக சிம்மாவிடம் வந்தது. அதனோட இரு ஆட்கள் வந்தனர். அவன் அதன் பிடரி முடியை தடவ, அதன் பார்வை வெளியே செல்வதை பார்த்து விக்ரம் புருவம் சுருங்கியது.
அண்ணா, “இங்க யாரோ புதுசா வந்திருக்காங்க” என விக்ரம் சொல்ல, மறுநிமிடம் கிங் வெளியே பாய்ந்து வர, வெளியே இருந்தவர்கள் அரண்டு விட்டனர்.
ரம்யா திலீப் கையை இறுக பற்ற, சுவாதியும் சுருதியும் பயத்தில் நடுங்க நேகன் அவர்கள் முன் வந்து நின்று கொண்டான்.
“கிங்” என்ற சிம்மாவின் அழைப்பில் நின்றது. கண்களை மூடி நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு சுவாதியும், நேகனை ஒட்டிக் கொண்டு சுருதியும், திலீப் கையை இறுக பற்றியவாறு ரம்யா முன் நின்றிருந்தனர். நம் நாயகர்கள் வெளியே வர, சிங்கமோ நேகன் முன் நின்று பயங்கரமாக கர்ஜிக்க, அவன் அசையாமல் நின்றான். சுருதி அவனை இறுக பிடிக்க, கண்களை திறந்து அருகே சிங்கத்தை பார்த்த சுவாதி மயங்கி விழுந்தாள்.
“சுவா” என நேகன் சத்தமாக அழைக்க, கிங் அதன் கால்களை பின்னே நகர்த்தியது. அவனது அழைப்பில் நாயகர்களின் கால்கள் நின்றது. சிம்மா வேகமாக சிங்கமிருக்கும் இடத்திற்கு ஓடினான்.
அங்கிருந்த எல்லாரையும் பார்க்க, அனைவர் கண்ணிலும் மரணபயம் தெரிந்தது.
சுவாதி கீழே மயங்கி கிடந்தாள்.
“சுவாதி” என சிம்மா அவளிடம் வந்து கொண்டே, “கிங் உள்ள போ” என்று கத்தினான். மற்றவர்களும் அவ்விடம் வந்தனர். சிங்கம் நகர்ந்து நின்று “உர் உர்” என இவர்களை பார்த்துக் கொண்டே நின்றது.
சிங்கம் விலகியது நேகனோ தரையில் அமர்ந்து நெஞ்சை அழுத்தி சரி செய்து விட்டு, “சுவா” என அவளை தன்னிடம் இழுத்து அவள் கன்னத்தில் தட்டினான்.
“சுவாதி” என சிம்மா அவளை தூக்க வர, “வேண்டாம்” என கையை உயர்த்தி காட்டிய நேகன், அவளை சுருதியிடம் விட்டு, “என்னடா பண்றீங்க?” எனக் கத்தினான்.
“உங்களுக்கு தேவையில்லை. போங்க” என விக்ரமும் கத்தினான்.
“ஆமா, இப்ப நாங்க போறது தான முக்கியம். உன் அண்ணாவுக்கு சுவா மேல இருக்கிற அக்கறை கூட உன்னிடம் இல்லை” என நேகன் கோபமாக, அவ செத்தா கூட உனக்கு கவலையேயில்லைல்ல என சொல்ல, திலீப் அவனை திட்டினான்.
ஆமா, “எனக்கு அவள பிடிக்கலை. எனக்கு கவலையிருக்காது” என விக்ரம் சொல்ல, சுருதி அவனை அதிர்ந்து பார்த்தாள்.
ரம்யா கோபமாக விக்ரமிடம் வந்து அவன் சட்டையை பிடித்து, “என்ன சொன்ன? அவ செத்தா உனக்கு கவலையில்லையா? என்ன சொல்றன்னு புரிஞ்சு தான் சொல்றீயா?” என கைகள் நடுங்க கத்தினாள்.
ஆமா, “எனக்கு கவலையில்லை” என்று விக்ரமும் கத்தினான்.
திலீப் விக்ரம் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
“அவ உன்னை எந்த இடத்துல்ல வச்சிருக்கா?” என திலீப் மேலும் கோபமாக, “மாமா..விடுங்க” என்று திலீப்பை தடுத்த நேகன், “சரி அவள விட்ரு. இனி அவள நீ பார்க்க கூட வேண்டாம்”.
ஆமா, “இவ பெரிய இவ. இவள பார்க்காம இருக்க முடியாது பாரு” என்ற விகாஸ், “எல்லாமே இவளால தான ஆரம்பிச்சது” என்றான்.
டேய், “அவ உன்னோட தங்கை” என திலீப் சொல்ல, “அதான் அன்றே சொல்லீட்டேன்ல்ல இவ என்னோட தங்கச்சியே இல்லை” என விகாஸ் சொல்வது சுவாதி காதுகளில் தெளிவாக விழ, அவள் கண்ணீருடன் இமைகள் அசைந்தது. மெதுவாக விழித்தாள்.
“சுவா” என சுருதி அவளை அணைக்க, அவளை நகர்த்தி விட்டு கண்ணீருடன் மெதுவாக எழுந்தாள்.
“உனக்கு என்ன பிரச்சனை?” சுவாதி மெதுவாக கேட்க, விகாஸ் அவளது கழுத்தை பிடித்து ஏதும் சொல்ல முடியாமல் வேதனையுடன் கண்ணீர் உதிர்த்து அவளை விடுவித்தான்.
“சொல்லு? கீர்த்துவுக்கு என்ன? அவ எங்க இருக்கா? இங்க தான் இருக்காலா? என ரம்யா கேள்விகளை அடுக்கினாள்.
ரம்யா, “கீர்த்து பாரின்ல்ல இருக்கா” என சுவாதி சொல்லிக் கொண்டே விகாஸ், விக்ரம், சிம்மா, மகிழனை பார்த்தாள்.
அவள் மனதில் பயம் பரவ, “மாமா” என சிம்மாவிடம் வந்து, “மாமா கீர்த்து பாரின்ல்ல தான இருக்கா?” என சுவாதி கேட்க,
“இல்ல இல்ல இல்ல..எல்லாமே உன்னால தான். நீ தான அவளை பாரின்ல்ல போய் படிக்க சொன்ன?” என விக்ரம் சுவாதியை தள்ளி விட்டான்.
“நா..நான் என்ன சொன்னேன்?”
நீ சொன்னதால் தான் அவ போக ஏற்பாடு நடந்தது..
விக்ரம், நான்.. என சுவாதி சொல்ல வருவதை கூட கேட்காமல். “உன்னால தான் என்னோட கீர்த்து உயிரோட வருவாளான்னு தெரியல” என கோபம், ஆற்றாமை, வலி, வேதனை அனைத்தையும் ஒருங்கே சுவாதியிடம் காட்ட எண்ணி அவளது கழுத்தை பிடித்து உயர தூக்கினான். அவள் தொண்டை இறுக, மூச்சு விட போராடினாள்.
ஏய்..என நேகனும் அவனுடன் திலீப், மகிழன், சிம்மா..எல்லாரும் விக்ரமை பிடித்து இழுக்க, விக்ரம் சுவாதியை விட்டான். அவள் கண்கள் சிவந்து இறுமியவாறு விக்ரமை வேதனையுடன் பார்த்தாள்.
“இவளால தான் என்னோட கீர்த்து போராடிட்டு இருக்கா. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை கொல்லாமல் விட மாட்டேன்” என கத்தினான் விக்ரம்.
சுவாதிக்கு அவன் வார்த்தைகளை கேட்பதற்கு பதில் நெருப்பில் எரிந்து விடுவோம்மா என தான் இருந்தது. துடித்து அங்கிருந்து வேகமாக ஓடினாள்.
“நில்லுடி” என சுருதியும் அவள் பின்னே ஓட, சிம்மாவும் அவளை பிடிக்க சென்றனர்.
“சுவா யார் உயிரும் போக காரணமா இருக்க மாட்டாள். எனக்கு நன்றாக தெரியும்” என்று நேகன் பேச, “இங்க பாரு. எனக்கு இருக்கும் கோபத்துல்ல மச்சான்னு பார்க்க மாட்டேன்” என விகாஸ் கோபமாக கூறினான்.
விரக்தியுடன் அவனை பார்த்து விட்டு நேகன் விக்ரமை பார்த்தான்.
“என்ன சொன்ன? என்னோட சுவாவ கொல்லப் போறீயா? முடிந்தால் ட்ரை பண்ணு. இனி நீங்க யாரோ..நாங்க யாரோ” என்ற நேகன் “சுவாதி இனி தனியா இருக்க மாட்டா. நான் இருப்பேன்” என விக்ரமிடம் வந்து, “அவள் கணவனாக நான் என்றும் இருப்பேன்” என சொல்ல, விகாஸ் கோபமாக நேகனை அடிக்க கையை ஓங்க, “உன்னை அண்ணன்னு என்னோட சுவா எண்ணியது தப்பு தான். அவளுக்கு இனி நான் இருப்பேன்” என கோபமாக அவன் நகர, அவன் கையை மகிழன் பிடித்தான்.
அவன் கையை உதறிய நேகன், “நீயும் சுவா தான் கொன்னான்னு சொல்றேல்ல?”
இல்ல, சுவாதி எதுவும் செய்யலைன்னு எனக்கு தெரியும். கீர்த்து மேலிருக்கும் பாசத்தில் சுவாதியை தப்பா நினைச்சிட்டு இருக்காங்க..
சிம்மாவும் சுருதியும் அங்கே வந்தனர். சிம்மா சுவாதியை தோளில் போட்டு நடந்து வந்தான்.
சிம்மா சுவாதியை இறக்கி விட, “போதும்..இதுக்கு மேல எதையும் கேட்க என்னால முடியாது” என சுவாதி அழ,” நீ எதுவும் கேட்கவும் வேண்டாம். பேசவும் வேண்டாம். சுவா…நாம கிளம்பலாம்” என அவளை நேகன் இழுக்க, அவள் காலில் இரத்தம் வந்தது.
ஏய், “என்னாச்சு?” நேகன், திலீப் பதறி கேட்க, ஏதாவது கூரான பொருள் காலை கிழித்திருக்கும்ன்னு நினைக்கிறேன். அதான் நானும் அவளை தூக்கிட்டு வந்தேன் என்றான் சிம்மா.
“இருங்க. ஏதாவது கட்டுவதற்கு இருக்கான்னு பார்க்குறேன்” என சிம்மா சொல்ல, “ஆமா..இவள தாங்குங்க” என முகத்தை வெறுப்புடன் சுளித்தான் விக்ரம்.
தேவையில்லை மாமா. நானே போயிடுவேன் என சுவாதி காலில் இரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் நடக்க, அவளை பிடித்து நேகன் அமர வைத்து, அவன் சட்டையை கிழித்து, அவளது காலில் சுத்த சென்றான்.
அப்படியே சுத்தாத. சுவா, “அண்ணா இருக்கேன்” என்ற திலீப் அவளது கால்களை பார்க்க, “அண்ணா வேண்டாம்” என அவள் எழ முயலும் நேரம் நேகன் சுவாதியை கைகளில் ஏந்தினான்.
“இப்படியே போய் வீட்ல நில்லுங்க. உங்களுக்கு கல்யாணமே செய்து வச்சிருவாங்க” என விகாஸ் விக்ரம் மனமறியாது சொன்னான்.
நேகன் அவர்களை பார்த்து திரும்பி, “ஆமாடா நான் என்னோட சுவாவை கல்யாணம் தான் பண்ணிக்கப் போறேன். எவன் வந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன். என்னோட சுவாவை காப்பாற்ற எவனையும் கொல்லுவேன்” என்று நேகன் கூறிச் செல்ல, விகாஸ் அதிர்ந்து நேகனை பார்த்தான்.
மாமா, “என்ன பேச்சு இது?” என நேகனை கன்னத்தில் சுவாதி அடித்தாள். அவனுக்கு அதெல்லாம் வலியாக தெரியவில்லை.
சிறுவயதிலிருந்து நெருக்கமாக நண்பன் போல பழகிய விகாஸ், தங்கையென்றும் பாராமல் சுவாதியை என்ன வார்த்தை சொல்லீட்டான்.. ச்சே..என்றிருந்தது நேகனுக்கு.
“உறவுகளின் அருமை தனியே வாழ்ந்த அவனுக்கு தெரியுமல்லவா?”
மகிழன் அவர்களுடன் செல்ல, “மகிழ்” விக்ரம் சத்தமிட, “நான் கிளம்புகிறேன்” என அவன் அவர்களுடன் ஏறி காரை ஓட்ட, கார் போகும் திசை மாறியது.
“கீர்த்து எங்க மகிழ்? அவளுக்கு என்ன ஆச்சு?” ரம்யா கேட்க, அனைவருக்கும் பதில் தேவையாக இருக்க மகிழனை நோக்கினர்.
மகிழன் கண்ணீரை துடைத்து விட்டு, கீர்த்தனா பாரின் செல்வதாக இருந்த அன்று என நடந்ததை கூற ஆரம்பித்தான்.
வீட்டிலிருந்து மகிழ்ச்சியுடன் கீர்த்தனா கிளம்ப, விக்ரம் அவளை அழைத்து சென்றான். அவர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னே வந்த கார் மோத, இருவரும் வண்டியிலிருந்து கீழே விழுந்தனர். இருவரும் ஹெல்மேட் போட்டதால் தலையில் அடி பலமில்லை. கை, கால்களில் அடி இருந்தது.
விக்ரம் பதறி, ஹெல்மேட்டை கழற்ற, நடந்த ஏதும் அவருக்கு தெரியவில்லை. விக்ரம் மயங்கிட்டார். அவரை பின்னிருந்து ஆட்கள் அடித்திருந்தனர்.
ஆனால் கீர்த்தனா ஹெல்மேட்டை கழற்றி வந்தவர்களை பார்த்து அதிர்ந்து விட்டாள். பின் நடந்த அனைத்தும் என காரை நிறுத்திய மகிழன் ஸ்டியரிங்கில் முகத்தை புதைத்து அழுதான்.
“என்னாச்சு கீர்த்துவுக்கு?” சுவாதி அழுகையுடன் கேட்க, அவளை அந்த பசங்க தூக்கிட்டு போனாங்க. “இதே இடம் தான்” என மகிழன் முகத்தை அழுந்த துடைத்தான்.
“விக்ரம் அண்ணா” ரம்யா கேட்க, விக்ரம் அண்ணாவிற்கு மயக்க ஊசி போட்டு கட்டி வைத்து ஆள் அடையாளமே தெரியாதது போல அடித்திருந்தார்கள். அவர் சுயத்திலே இல்லை. அவர் முன் வைத்தே நம்ம கீர்த்துவை அந்த பசங்க கற்பழிச்சிட்டுட்டாங்க. விக்ரம் அண்ணா மயக்க நிலையிலும் விகாஸிற்கு அழைத்ததால் அவர் அலைபேசியில் அந்த பசங்க பேசுவதை கேட்டு அவ்விடம் வந்து பார்த்த போது “கீர்த்துவை அவர் முன் ஒருவன்..” என சொல்ல முடியாமல் ஸ்டியரிங்கை குத்தினான்.
விகாஸ் பதறிக் கொண்டு, “டேய்..” என கத்திக் கொண்டே கீர்த்தனாவிடம் வந்தார். அவள் ஆடையில்லாது உடலில் இரத்தமும் வேதனையுடன் முணங்குவதை பார்த்து அவர் உயிரே போனது போல் உணர்ந்து கத்தி கதறி அவர் அழுதார்.
கீர்த்து அப்பொழுது அவரிடம் சொன்னது என மகிழன் கைகள் இறுக, “வலிக்குது மாமா. என்னால வலி தாங்க முடியலன்னு அழுதிருக்கா” என இவனும் அழ, அனைவரும் அழுதனர்.
கீர்த்து, “என்னடி இது?” ரம்யா கதறி அழ, சுவாதிக்கு விக்ரமும் விகாஸூம் அவளை குற்றம் சாட்டியது நினைவு வந்து, என்னாலவா இதெல்லாம் என மனதில் எண்ணி வேதனையுடன் கைகளை இறுக்கி முகத்தை மூடிக் கொண்டாள். நேகன் அவளை அவன் புறம் சாய்க்க., “மாமா, கீர்த்து..அவளுக்கு எதுக்கு இப்படி நடக்கணும்? அவளுக்கு இதை பற்றிய விவரம் கூட தெரியாது” என கதறி அழுதாள்.
திலீப் கண்கள் சிவக்க, “இதுக்கு காரணம் யாரு?” என கேட்டான்.
மாமா…அவன்..அந்த ராம். அவனும் அவன் நண்பர்களும் என்றவுடன் மகிழனிடம் “பள்ளி படிக்கும் பையன் இவ்வளவு தூரம் செய்திருக்கானா?” என அதிர்ந்தனர்.
“யாரு அந்த ராம்?” நேகன் கேட்க, தமிழினியன் வீட்டில் நடந்ததை கூறி, விகாஸூம் மற்றவர்களும் அவனை விரட்டி அடித்ததை கூறினான் மகிழன்.
“ச்சே..அவனுகளுக்கு இதெல்லாம் பத்தாது” என ரம்யா கோபமாக சொல்ல, சுருதியிடமிருந்து சத்தமே இல்லை. மகிழன் அவளை பார்க்க, அவள் கண்ணீருடன் சீட்டில் சாய்ந்திருந்தாள் கீர்த்தனாவுடனான பழகிய நினைவுகளுடன்.
இப்ப அங்க இருந்தவன்?
ஆமா, நம்ம கீர்த்துவை சீரழித்தவன். ஏற்கனவே இருவரை போட்டாச்சு. இன்று இவன்..நாளை மூவராவார்கள்.
சும்மா விட்றாதீங்க பிக் சீனியர் என்றாள் ரம்யா.
மகிழ், இப்ப கீர்த்து? சுவாதி கேட்க, அவ பொள்ளாச்சியில தான் இருக்கா. ஆனால் அவள் உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு. காப்பாற்றுவது கஷ்டம். அவள் விழித்தால் தான் தெரியும்ன்னு சொல்லீட்டாங்க. ஹாஸ்பிட்டல்ல அவளை சேர்க்கலை. ஒரு ஆசிரம குருஜிக்கள் தான் அவளை பார்த்துக்கிறாங்க. பெண்கள் மட்டும் தான் அவளருகே இருப்பாங்க.
“கோமால்ல இருக்காலா?” திலீப் கேட்க, இல்ல மாமா, அவள் நடுநிலையில் இருக்கா.
“என்ன?” ரம்யா கேட்க, கோமாவில் அவள் முழுதாக செல்லவில்லை. நம்மை பார்த்து பேச முடியாது, உணர முடியாது. எப்பவாது கையை மட்டும் அசைப்பாள்.