நீ நான் 17

“கார்த்திக்” என கத்திய யுக்தாவை பார்த்தனர் அனைவரும்.

கார்த்திக் பதறி அவளிடம் வந்தான். கார்த்திக்…நீங்க அவளோட போனீங்க. நான் கையை கட் பண்ணிப்பேன் என கத்தியை மணிக்கட்டில் வைத்து யுக்தா கார்த்திக்கை மிரட்டினாள் வேறு வழியில்லாமல்.

கார்த்திக், நீங்க வரலைன்னா அவளோட மானம் போயிடும். “என்ன செய்யப் போற?” என கேத்ரினா அவள் ஆட்களை அழைத்தாள்.

கார்த்திக்கோ..சாரி யுகி என கேத்ரினாவின் முன் செல்ல, யுக்தா சிறிதும் யோசிக்காமல் மணிக்கட்டை கத்தியால் வெட்டி விட்டு, கார்த்திக்..நான் செத்த பின் தான் நீங்க அவளோட போகணும் என முணுமுணுத்தவாறு அவள் வெட்டிய இடத்தை பார்க்க, இரத்தம் வரத் தொடங்கியது. கார்த்திக் அவளை பார்க்கவே இல்லை. மாறாக கேத்ரின் முன் அவன் செல்ல, “அக்கா” என்ற கதறலில் கார்த்திக் திரும்பினான்.

ரோஹித், வினித், அவன் நண்பர்கள் வந்திருந்தனர். கார்த்திக் அம்மாவோ யுக்தாவின் செயலில் பதறிப் போனார்.

யுக்தா கையிலிருந்து வரும் இரத்தத்தை பார்த்து கார்த்திக் கேத்ரினை தள்ளி விட்டு அவளிடம் வந்தாள்.

ரோஹித் கதறி அழ, யுக்தா புன்னகையுடன் கார்த்திக்கை பார்த்து, “நான் அவளுடன் உங்களை போக விடலை” என சொல்லிக் கொண்டே மயங்கினாள்.

அவ்வறையை கார்த்திக் திறக்க, ரோஹித்தும் அவனுடன் யுக்தாவிடம் சென்றான். மற்றவர்கள் கேத்ரின் ஆட்களுடன் சண்டை போட, சிம்மா அன்ட் டீம் வந்தனர். கேத்ரினையும் அவள் ஆட்களையும் கைது செய்தனர்.

கார்த்திக் யுக்தாவை தூக்கிக் கொண்டு காரில் ஏற, சந்தோஷ் அவன் அம்மாவை அவன் காரில் ஏற்றினான். அனைவரும் மருத்துவனைக்கு சென்று யுக்தாவை சேர்த்தனர். அவளுக்கு சிகிச்சை நடந்து ஆபத்து கட்டத்தை தாண்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

ரோஹித் கார்த்திக்கை விடாமல் அடித்துக் கொண்டே இருந்தான். கார்த்திக் அம்மா தடுக்க வந்தும் தடுக்க முடியவில்லை. அஜய்யும் வினித்தும் அவனை தடுத்து அமைதி படுத்தினார்கள்.

தியா, முக்தா, ராணியம்மா, ராக வீரன் ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.

மாமா, “அக்காவுக்கு என்னாச்சு?” என முக்தா நேராக வினித்தை வந்து அணைத்தாள். அவன் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

தியா அனைவரையும் பார்த்து விட்டு யுக்தா இருக்கும் அறையின் வெளியே இருந்து அவளை பார்த்தாள். ராணியம்மாவோ கார்த்திக் அம்மாவை முறைத்துக் கொண்டே ரதுவுடன் தியா அருகே சென்றார்.

யாரும் பயப்பட வேண்டாம். யுகி நல்லா இருக்கான்னு டாக்டர்ஸ் சொல்லீட்டாங்க. அவள் ஓய்வெடுக்கட்டும். அவளாக விழித்த பின் அவளை பார்க்க உள்ளே செல்லலாம் என்றான் அஜய்.

கார்த்திக் முக்தா அருகே வந்து, சாரி அம்மு..என்னோட தப்பு தான் என அவளது கையை இழுத்து கார்த்திக் அவனை அவனே அடிக்க, அவள் அவனை முறைத்து பார்த்துக் கொண்டு..விடுங்க மாமா. உங்க தப்பில்லை. அவளுக்கு நீங்க யாரோ என்ற போது உங்க மேல தப்பிருக்க வாய்ப்பில்லை. எல்லா தப்பும் அவ மேல தான் என கார்த்திக்கிடமிருந்து படாரென கையை உருவிக் கொண்டு அஜய்யிடம் வந்து நின்று கொண்டாள்.

அம்மு, நான் தான் அவளை புரிஞ்சுக்கல என கார்த்திக் மீண்டும் முக்தாவிடம் வந்து, என் மேல தான் தப்பு. அவள் நிலையில் யார் இருந்தாலும் எனக்காக இத்தனை வருடங்கள் காத்திருக்க மாட்டாங்க. அந்த கேத்ரின் இப்படி தான் என அன்றே எனக்கு தெரிந்திருந்தால் நான் யுகியை விட்டிருக்க மாட்டேன். இன்றும் அந்த கேத்ரின் இந்த அளவு போவான்னு நான் எண்ணவில்லை. யுகிக்கு விருப்பமிருந்தால் நாங்க கல்யாணம் பண்ணிக்கிறோம்.

முக்தா அவனை வெறுமையுடன் பார்த்து, “உங்களது வீட்டை எதிர்த்து உங்களால் கல்யாணம் பண்ண முடியுமா?” ஏன்னா..அக்கா அவளோட திருமணத்துக்கு முன் அம்மா, அப்பாகிட்ட உங்களது காதலை பற்றி சொல்லி இருக்கா. அவங்க ஒத்துக்கலை. ஆனால் இப்ப மறுக்க மாட்டாங்கன்னு தோணுது. உங்க வீட்ல அக்காவை மறுத்துட்டாங்களே! என கார்த்திக்கையும் அவன் அம்மாவையும் பார்த்தாள்.

ம்ம்..அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னா என்ன? என்னால யுகியை மறக்க முடியாம தான் என் திருமணத்தை தள்ளிப் போட்டேன். அதான் யுகி வந்துட்டால்ல…அவளுக்கு என்னை திருமணம் செய்ய விருப்பமிருந்தால் எங்களது திருமணத்தை யாரும் தடுக்கமுடியாது. கண்டிப்பாக திருமணம் நடந்தே தீரும்.

“முடியாது இதை ஏத்துக்க என்னால முடியாது” என்ற ரோஹித் கார்த்திக் அருகே வந்து, உங்க வீட்ல வந்து என்னோட அக்கா கஷ்டம் தான் படணும். அதுக்கு அவள் எங்களோடவே இருக்கட்டும்.

இப்பொழுது நடந்ததை வைத்து பார்த்தால் கண்டிப்பாக என்னோட அக்கா கார்த்திக் மாமாவை தவிர யாரையும் திருமணம் செய்ய மாட்டாள் என்று சந்தோஷை பார்த்து, “சாரி மாமா” என்றான்.

நாங்க நேற்றே பேசிட்டோம் என்ற சந்தோஷ், கார்த்திக் வாழ்க்கையை நண்பனாக நான் என்று பாழாக்க விரும்பமாட்டேன். இருவரின் செய்கையிலும் நான் வந்த முதல் நாளே இருவரும் இன்னும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதான் வினித் திருமணம் பற்றி பேசும்  போது சிந்தித்தேன்.

நேற்று பீச்சில் வைத்து பேசிய போது யுக்தா நேரடியாக என்னை திருமணம் செய்து கொள்ள முடியாதுன்னு சொல்லீட்டா. கார்த்திக்கை தவிர என் மனதில் யாருக்கும் இடமில்லைன்னு சொன்னா என்று சந்தோஷ் கார்த்திக்கை பார்த்து,

கார்த்திக், அதுக்காக அவள் உன்னை திருமணம் செய்ய முடியாதுன்னு சொல்லீட்டா. அவளுக்கு பயம் இருக்கு. அவளோட அக்கா சீமா, தியா வாழ்க்கை, அவளை நீ பிரேக் அப் செய்தது; இப்பொழுது அவள் கணவன் இறந்தது; அவன் காதல் என அனைத்தும் அவளை பாதித்து உள்ளது. அவளை உன்னுடன் சேர்த்து வைப்பது கூட கஷ்டம் தான். ஆனால் நீ நினைத்தால் முயற்சி செய்யலாம் என கூறி முடித்தான்.

ராணியம்மாவோ கோபமாக கார்த்திக் அம்மா முன் வந்து அவரிடம்,  “உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து எங்க யுகி நிலை வந்தா..இப்படி தான் பேசுவீங்களா? ஒரு பொண்ணா இருந்து அவ மனசு புரியாமல் இப்படி பண்ணீட்டீங்களே!” என அவரை எறித்தவாறு பேச, கார்த்திக் அம்மா உள்ளம் குமுறியது.

அம்மா. “நீங்க எப்படி கேத்ரின் கிட்ட மாட்டுனீங்க? உங்களுக்கு அவளை தெரியுமா?” என யோசனையுடன் கார்த்திக் அவன் அம்மாவிடம் வந்தான்.

அது வந்து..என அவர் தயங்க, “நீங்களும் அவளுக்கு உடந்தையா?” என ரோஹித் சினமுடன் கேட்டான்.

ரோஹித்..என்ற யுக்தாவின் குரலில் அனைவரும் அவளை பார்த்தனர்.

யுகி, “நீ விழிச்சிட்டியா?” என ராணியம்மா அவளிடம் செல்ல, தியா யுக்தாவை தாங்கியவாறு நிற்க, முக்தா அவளிடம் வந்து தியா அண்ணி, நீங்களும் சோர்வா இருக்கீங்க. அக்காவை நான் பார்த்துக் கொள்கிறேன் என அவளை தாங்கி நின்றாள்.

பாட்டி, அவங்க மேல தப்பில்லை. எந்த அம்மாவும் யோசிப்பது போல தான் அவங்களும் யோசித்து இருக்காங்க. அவங்கள திட்டாதீங்க என யுக்தா சொல்ல, “அம்மா நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்க?” என கார்த்திக் அவன் அம்மாவிடம் சினமுடன் கேட்டான். அவர் பயத்துடன் அவனை பார்த்தார்.

“நான் சொல்றேன் கார்த்திக் சார்” என்றாள் யுக்தா.

அவளது “சார்” என்ற அழைப்பில் உடைந்து அவளை பார்த்தான்.

கார்த்திக் சார் அம்மா பொண்ணு பார்ப்பது தெரிந்து அவளாகவே அவளை பற்றி ஒருவர் மூலம் கேத்ரின் இவருக்கு அறிமுகமாகி இருக்கா. இவரும் அவளை பற்றி அறியாது என கார்த்திக் அம்மா அன்று தனியே அழைத்து சென்று சொன்னதை சொல்லி, அவ உங்க அம்மாவையும் ஏமாத்தி இருக்கா கார்த்திக் சார்.

ஆன்ட்டி..அப்பாவி. அவங்களுக்கு எதுவும் தெரியாது. அவள் அவங்களையும் காயப்படுத்த தான் செய்தாள்.

ரோஹித், ஒருவர் நம்மை பற்றி தப்பா பேசுனாங்கன்னா அவங்க தவறானவங்களா இருக்க மாட்டாங்க. ஒவ்வொருவர் கண்ணோட்டமும் ஒவ்வொன்றாக இருக்கும். அதே போல் தான் அவங்க என முக்தாவுடன் வந்த யுக்தா..”ஆன்ட்டி உங்களுக்கு ஏதும் அடிபடலைல்ல?” என அவரை ஆராய்ந்தாள். அவர் கண்கள் கலங்கியது. அவர் அவளை அணைத்து சாரிம்மா. நான் என் மகனை பற்றி மட்டுமே சுயநலமா சிந்திச்சுட்டேன். நீ என்னோட மருமகளா வர்றதுல்ல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கார்த்திக் அம்மா கூறினார்.

யுக்தா நகர்ந்து, ஆன்ட்டி உங்க கையில அடிபட்டிருக்கு. அங்கிள்..பாருங்க என கார்த்திக் அப்பாவை அழைத்தாள். அவர் சற்று தள்ளி நின்று இவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆன்ட்டி, எனக்கு திருமணத்தில் விருப்பமும் இல்லை. நம்பிக்கையும் இல்லை. அதனால் இப்படி பேச வேண்டாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் நாம தோழிகளாக மட்டும் இருக்கலாம் என்றாள் யுக்தா.

“சரிம்மா” என கண்ணை துடைத்து, இதை விட பெரிய வலியை நீ அனுபவிச்சுட்டடா. இது சாதாரணம் தான். அதுவாகவே சரியாகிடும் என கார்த்திக் அம்மா கையை பார்த்தார்.

மற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தாலும் “திருமணம் வேண்டாம்ன்னு சொல்றாளே!” என யோசனையுடன் நின்றிருந்தனர்.

கார்த்திக் அவன் அப்பாவை பார்க்க, அவன் அம்மாவை அவர் அழைத்து செல்ல, நான் இப்ப வந்திடுறேன்ம்மா என அவர் சென்றார்.

“என்னையும் உன்னோட தோழனாகவாது ஏற்றுக் கொள்வாயா? என கார்த்திக் யுக்தாவிடம் கேட்க, யுக்தா அமைதியாக முக்தாவை பார்த்து, எனக்கு டயர்டா இருக்கு முகி. நான் ஓய்வெடுக்கணும் என அவள் நகர, கார்த்திக் அவளது கையை பற்றி அவளது காயத்தை கண்கலங்க பார்த்தான்.

கார்த்திக் சார், “நான் ஓய்வெடுக்க போகலாமா?” என யுக்தா கேட்க, சார் வேண்டாம். கார்த்திக்ன்னு சொல்லு என அவன் சொல்ல, அவள் ஏதும் சொல்லாமல் அவனை பார்த்தாள்.

முகி, அவளை விடு என கார்த்திக் சொல்ல, மாமா..என அவள் தயங்கினாள். அவன் கண்ணசைக்க, அவள் விடவும்..யுக்தாவை தூக்கி அறைக்கு சென்று படுக்கையில் போட்டு, நீ ஓய்வெடு. இத்தனை வருடம் மட்டுமல்ல இன்னும் எத்தனை வருடமானாலும் உனக்காக நான் காத்திருக்கிறேன். உனக்கு எப்பொழுது என்னை திருமணம் செய்ய விருப்பம் வருதோ உடனே அழைத்து விடு என விசிட்டிங் கார்ட்டை அவளிடம் கொடுத்து விட்டு, ராணியம்மாவிடம் சென்றான்.

“யுகி கல்யாணம் பண்ண ஒத்துக் கொண்டால் முதல்ல என்னை அழைப்பீங்கல்ல?” எனக் கேட்டான்.

அவர் புன்னகையுடன் “கண்டிப்பாக” என சொல்ல, அவன் முக்தா, ரோஹித்தை பார்க்க, இருவரும் அவனிடம் வந்து கட்டிக் கொண்டனர். அனைவருக்கும் மகிழ்ச்சியானது. இதனை யுக்தா மட்டும் பார்வையாளர் போல பார்த்தாள் எவ்வித உணர்வுமில்லாமல்.

ரம்யா தமிழினியன் வீட்டில் இருநாட்கள் விடுப்பில் அவன் புத்திரன் சுபிகண்ணனுடன் நேரத்தை செலவழித்தாள்.

ரம்யா கல்லூரிக்கு கிளம்பிய அன்று தயாராகி கீழே வந்தாள். விகாஸ் கிருபாகரனுடன் பேசிக் கொண்டிருந்தான்.

ஹே, ப்ரெண்டு எப்ப வந்த? என்று புன்னகையுடன் அவனிடம் ஓடி வந்தாள் ரம்யா.

“கிளம்பிட்டியா?” சாப்பிட்டு வா. நான் உன்னை கல்லூரியில் விட்டு செல்கிறேன் என்று விகாஸ் கூற, அதெல்லாம் வேண்டாம். நான் ரம்யாவை பார்த்துக்கிறேன் என்று விக்ரம் உள்ளே வந்தான்.

மாம்ஸ், “நான் பார்த்துக்கிறேன்” விகாஸ் சொல்ல, நீங்க ஆபிஸீக்கு போங்க. நான் பார்த்துக்கிறேன் மாப்பிள்ள.

யாருமே வேண்டாம். நானே போயிடுவேன் என ரம்யா சொல்ல, விகாஸூம் விக்ரமும் “முடியாது” என ஒன்று போல் சொன்னார்கள். கிருபாகரன் புன்னகைத்தார். ரம்யா இருவரையும் வித்தியாசமாக பார்த்தாள்.

ஆமா, “இருவருக்கும் ரம்யா மட்டும் தான் கண்ணில் தெரியுறா? வேற யாருமே கண்ணுக்கு தெரியாது” என விகாஸ் விக்ரமை முறைத்துக் கொண்டு உள்ளே வந்தான் நேகன்.

நேகனை ரம்யா யோசனையுடன் பார்த்து அவனிடம் சென்று, “நான் உங்களுடன் வரட்டுமா?” என்று கேட்டாள்.

சுயர். வித் பிளசர் என்று கையை விரித்து புன்னகையுடன் விகாஸ், விக்ரமை பார்த்தான்.

வா..நேகா, “சாப்பிடு” என தமிழின் அன்னை அவனை உபசரிக்க, மற்ற இருவருக்கும் பற்றிக் கொண்டு வந்தது.

மச்சான், “நீங்க இங்க என்ன பண்றீங்க?” விகாஸ் நேகனிடம் வினவ, நான் கேட்க வேண்டியதை நீங்க கேக்குறீங்களே மச்சான் என கண்ணடித்தான்.

அப்பொழுது சட்டையை மடித்து விட்டுக் கொண்டே மிருளா, ரம்யா கிளம்பிட்டால்லா? நான் அவளை டிராப் பண்ணீட்டு போறேன் என படியிலிருந்து இறங்கி பசங்க கூடியிருப்பதை பார்த்து மிருளாவை தேடினான்.

இனியா, உன்னோட பொண்டாட்டி பையனோட கார்டன்ல்ல இருக்கா என்று வேல்விழி சொல்லிக் கொண்டே அனைவரையும் பார்த்தார்.

“என்ன எல்லாரும் காலையிலே வந்திருக்கீங்க?” தமிழ் கேட்டுக் கொண்டே அவர்களருகே வந்தான்.

மாமா, “எல்லாரும் என்னை கல்லூரில் டிராப் பண்றேன்னு வந்திருக்காங்க” என ரம்யா சொல்லிக் கொண்டிருக்க,

“மாமா என்னை மட்டும் தனியா விட்டுட்டு வந்துட்ட? பாரு ஆடையெல்லாம் சேறா போச்சு அந்த லூசுப்பய கார்க்காரனோட நீ போட்டி போட்ட. அவன் என்னை பழி வாங்கிட்டான்” என சிணுங்கியவாறு சுவாதி நேகனிடம் வந்தாள்.

பின் தான் அனைவரையும் பார்த்து, விக்ரமையும் பார்த்தாள்.

“இவர் இங்கே என்ன செய்கிறார்?” என யோசனையுடன் நின்று விட்டாள்.

“என்னம்மா ஆச்சு? அடி ஏதும் பட்டிருக்கா?” கிருபாகரன் அவளிடம் ஓடி வந்தார்.

எனக்கு ஒன்றுமில்லை பெரியப்பா. எல்லாம் இவனால் தான் என நேகனை அடிக்க சுவாதி கையை ஓங்கிக் கொண்டு அவனிடம் செல்ல,..ஓ..டர்ட்டி கெர்ல் என அவன் அவளை கிண்டல் செய்து கொண்டே ஓட, நேகன் கால் இடறி கீழே விழ, அவனை விரட்டி வந்த சுவாதி நிலை தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.

அது மட்டுமல்லாமல்.. என்னையா வுரண்டிழுக்கிற? இப்ப பாரு என அவள் மேலுள்ள சேற்றை அவன் மேலே தடவும் ஆர்வத்தில் அவளது ஆடையுடன் இருந்த சேற்றை கைகளால் எடுக்க முடியாமல் உடலாலே அவனது ஆடையில் படுமாடு அவள் தேய்க்க, விக்ரமோ சினமுடன் எழுந்தான்.

ரம்யாவோ பதறி, சுவாதியிடம் ஓடி வந்து அண்ணி, “எழுந்திருங்க” என இருவரையும் விலக்கி விட்டாள்.

நேகன் எழுந்து அமர்ந்து, ஏதும் நடவாதது போல, “ஏய்..டர்ட்டி கெர்ல் என்னை டர்ட்டி பண்ணீட்டேல்ல?” இரு வாரேன் என எழுந்தான்.

சுவாதிக்கு சிலநொடி தாமதத்தின் பின்னே தான் என்ன செய்தோம்? என புத்தியில் உரைக்க விக்ரமை பார்க்க, அவனோ அவளை சீற்றமுடன் எறித்து விடுவது போல் பார்த்து விட்டு கோபமாக வெளியேற, நேகனை தவிர்த்து விக்ரமின் பின் ஓடினாள்.

விக்ரம்..நான் சும்மா முன்பு போல் விளையாட்டுக்கு தான்..என சுவாதி சொல்ல, எப்படி என்னிடம் கிடைக்காதது. அவனிடம் கிடைத்ததாலா? என பட்டென கேட்டு விட்டான் விக்ரம். சுவாதி கண்ணீருடன் நின்று விட, விகாஸ் சுவாதியிடம் வந்து அவளை ஓங்கி அறைந்தான்.

அண்ணா..நான் என அவள் சொல்வதை கூட கண்டுகொள்ளாமல் அவனும் விக்ரம் பின்னே ஓடினான். சுவாதி அழுது கொண்டு அங்கேயே அமர்ந்தாள்.

நேகன் அவளிடம் வந்து கையை நீட்ட, அழுது கொண்டே அவனை பார்த்து கண்ணீரை துடைத்து விட்டு, “சாரி மாமா” என்று அவன் கையை பிடிக்காமல் எழுந்தாள்.

நேகன் வேகமாக விக்ரம் பைக்கின் முன் வந்து அவனது சாவியை எடுத்து, “உங்களுக்கு தப்பா தெரிஞ்சு போச்சா?” இது..இது..தான் எங்க சுவா. அவ இப்படி தான் எதை பற்றியும் சிந்திக்காமல் சந்தோசமா இருந்தா. நாங்க சிறு வயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்தவங்க. இப்படி தான் விளையாண்டு இருக்கோம். ஆனால் எங்க சுவா தொலைஞ்சு போயிட்டா. யாருக்காகவும் இப்படி அழ மாட்டா என்ற நேகன் விகாஸை பார்த்தான்.

உனக்கு இத்தனை நாள் அவ உன்னோட தங்கைன்னு தெரியல. அவ என்ன செய்றான்னு தெரியல? என கோபமாக பேச, ஏற்கனவே சினத்தில் இருந்த இருவரும் வார்த்தைகளை உதிர்ந்தனர்.

“இப்படி தான் விளையாடுவீங்கன்னா? தாராளமாக விளையாடுங்க. எங்களுக்கு பார்க்க அசிங்கமா இருக்கு. இனி அவ என்ன செஞ்சா எனக்கென்ன? எவளும் எப்படியும் போகட்டும்” என்று விக்ரம் சொல்ல, விகாஸோ அவள என்னோட தங்கைன்னு சொல்லும் தகுதியை இழந்துட்டா. அவ இப்படி இருப்பான்னு நினைக்கவேயில்லை என்று முகத்தை சுளித்து பேச, சுவாதியோ உடைந்து போனாள்.

ரம்யாவும் மற்றவர்களும் இவர்களது பேச்சில் செய்வதறியாது நின்றனர்.

ஏற்கனவே நேகனும், சுவாதியும் சேர்ந்து ஊர் சுற்றியதை பார்த்த விக்ரமிற்கு இவர்களின் செயல் விளையாட்டாக இல்லாமல் பொறாமையில் வார்த்தைகளை விட்டு சுவாதியை ஆட்டம் காண வைத்தான்.

நேகன் அதிர்ந்து இருவரையும் பார்க்க, சுவாதி கண்ணீருடன் நேகனிடம் வந்து அவனது கையிலிருந்த விக்ரமின் பைக் சாவியை அவனது வண்டியில் மாட்டி விட்டு அவனை பார்த்தாள் ஒரு பார்வை.

“என்னை இவ்வளவு கேவலமா நினைச்சுட்டீயா?” என்ற பார்வை அது. விக்ரம் அவளை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் பைக்கை எடுத்து சென்று விட்டான்.

தமிழிடம் வந்த சுவாதி, அண்ணா..”நான் வீட்டுக்கு போகணும்” என அழ, அவளை அணைத்து விட்டு, “போகலாம்டா” என சுவாதியை நகர்த்த, “எல்லாம் சரியாகிடும்” என்று வேல்விழி அவளை அணைத்தார். ரம்யாவோ ஆறுதலாக சுவாதி கையை பிடிக்க, அழுகையை நிறுத்த முடியாமல் தமிழுடன் சுவாதி அழுது கொண்டே சென்று விட்டாள்.

நேகனோ தலையை பிடித்துக் கொண்டு அமர, ரம்யாவும் அவனருகே வந்து அமர்ந்தாள்.

நேகா, “எதையும் நினைச்சு குழப்பிக்காதடா” கிருபாகரன் சொல்ல, “எல்லாமே என்னால தான் மாமா” என அவனும் கண்ணீருடன் அவரை அணைத்துக் கொண்டான்.

“ரம்யாவுக்கு கல்லூரிக்கு நேரமாகுது. நீ அழைச்சிட்டு போறீயாப்பா?” என வேல்விழி கேட்க, நேகனுடன் பைக்கில் கிளம்பினாள் ரம்யா.

கல்லூரிக்கு வந்ததும்..கிளாஸ் ஆரம்பிக்க பத்து நிமிடம் இருக்கு. “நாம பேசலாமா?” ரம்யா கேட்க, ம்ம்..என்று அவளுடன் காஃபி ஷாப் சென்றனர் இருவரும்.

“நான் கீர்த்து பற்றி பேசணும்” என்றாள் ரம்யா.

“அவள பத்தி எனக்கு தெரியாதே!” நீங்க தான ப்ரெண்ட்ஸ்.

பாரின்ல்ல கல்லூரிக்கு போறேன்னு போனவள் தான். அவள் எனக்கு கால் பண்ணவேயில்லை. கீர்த்துவும் வீயும் காதலிக்கிறாங்க. அவள் படிப்பு முடியவும் இருவரும் திருமணம்ன்னு எல்லாரும் பேசினாங்க. நான் யாரிடம் கேட்டாலும் அவ தான் கால் பண்ணுவா. நாம கால் பண்ற நேரம் அவளுக்கு வேலை..பிஸின்னு இருப்பான்னு சொல்றாங்க.

“பாரின்ல்ல படிக்க தான போனா?” பிராஜெக் பண்ணாலும் ஐந்து நிமிடம் பேச கூடவா நேரமில்லை அவளுக்கு. ஏதோ தப்பா இருக்கு. வீ, விக்ரம் அண்ணா இருவருமே சரியில்லை. விக்ரம் அண்ணா சுவாதி அண்ணியை ரொம்பவே காதலிச்சாங்க. அண்ணா இப்ப கூட பொறாமையில தான் பேசிட்டு போறாங்க.

ம்ம்..அவரோட பொறாமையை தூண்டி அவர் காதலை வர வைக்க நான் எடுத்த முயற்சி மொத்தமும் பாழா போச்சு.

“பிளானா?”

ஆமா, சுவா அழுது நான் பார்த்ததேயில்லை. அவளை விட பாசிட்டிவ்வா பேசுறவங்க யாரும் இருக்க முடியாது. ஆனால் அவளே இப்ப உடஞ்சு போயிட்டா.

முதல்ல அந்த கீர்த்து பத்தி தெரிஞ்சுக்கணும். ஏன்னா..இருவரும் அவளுக்கு முக்கியமானவங்க. இருவரின் மாற்றமும் ஏதோ பெரியதாக நடந்து அதில் மனம் உடைந்தவர்கள் போல தான் இருக்கிறார்கள். வீயோட சிரிப்பே இப்பொழுது இல்லை. அப்படி அவன் சிரித்தாலும் உதட்டோடு நின்று விடுகிறது.

நான் கண்டுபிடித்தே ஆகணும் என நேகன் சொல்ல, நானுன்னு சொல்லாதீங்கண்ணா..நாமன்னு சொல்லுங்க. நாம சேர்ந்து கண்டிபிடிக்கணும்.

ம்ம்..முதல்ல இந்த விக்ரம், விகாஸிற்கு சில விசயங்களை புரிய வைக்கணும். நடந்தது தெரிந்தால் விக்ரமை எங்க வீட்ல எல்லாரும் அவரை ஒதுக்க ஆரம்பிச்சிடுவாங்க. அதனால என நேகன் ரம்யாவை பார்த்து ஏதோ கூற, அண்ணா..என்றாள் அவள் திகைப்புடன்.

வேண்டாம். இதனால அவங்க நிரந்தரமா பிரிஞ்சிட்டா.

மாட்டாங்க. அவங்க காதல் அவ்வளவு வீக்கா இருக்காதுன்னு நினைக்கிறேன். இவங்க ஒன்றும் மற்ற காதலர்கள் போல சாதாரண சுவாதி விக்ரம் இல்லை.

சிரநாத்கலியின் ராஜா ராணி..சம்பூ- மித்தலையார். அந்த அரக்ககுலத்தவர்களாச்சே. அந்த சாவானை கொன்று தன் மானத்தை காப்பாற்றிக் கொண்ட சம்பூ தான சுவாதி. இருவரின் காதலும் மானூடக் காதலல்ல. பத்தாயிரம் வருடக் காதல்..காதல் சாகாதும்மா. பார்க்க தானப் போற.

இருந்தாலும் நல்லா யோசிச்சுக்கோங்க அண்ணா.

ம்ம்..நீ கிளாசுக்கு போம்மா. நான் கிளம்புகிறேன் என்று நேகன் கிளம்பினான்.

“கீர்த்து நீ எங்க இருக்க? என்ன செய்றடி?” பாரு உன் அண்ணாவும் வீயும் சுவாதி அண்ணியை ரொம்ப கஷ்டப்படுத்துறாங்க. சீக்கிரம் வந்துரு கீர்த்து. நீ வந்தால் தான் எல்லாம் சரியாகும் என ரம்யா வகுப்பிற்கு சென்றாள்.

அஜய்யும் தியாவும் அவர்களது பிரச்சனையை தவிர்த்து கணவன்- மனைவியாக வாழ ஆரம்பித்து விட்டார்கள். யுக்தா வினித்துடன் சேர்ந்து அவனது கம்பெனி வேலைகளுக்கு உதவியாக இருந்தாள். அவள் கார்த்திக் அம்மாவுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

ரோஹித் அஜய்க்கு முன்னாதவே ஆபிஸ் சென்று பொறுப்பாக அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருந்தான்.

அன்றும் அதுபோல் தயாராகி படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் வந்த பெண்ணொருத்தி அஜய் சார்..அஜய் சார்..என கத்திக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து உறைந்து நின்றான் ரோஹித்.

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணின் அழகு அவனை மிகவும் கவர்ந்தது.

அந்த பெண்ணின் குரலை கேட்டு அஜய் தந்தையின் அறையிலிருந்த ராகவீரனும் முக்தாவும் வெளியே வந்தனர். கண்ணம்மா..மற்ற நபர்களும் வெளியே வந்தனர்.

“என்னாச்சும்மா?” ராக வீரன் பதறி அவளிடம் வந்தார்.

முக்தாவோ அந்த பெண்ணை பார்த்து ரோஹித்தை போல் உறைந்து நின்றாள். பின் சுயம் வந்து மனு அண்ணி, தனியா வந்திருக்கீங்க? என முன்பு நம் தியாவுடன் வேலை செய்து கொண்டிருந்த மனீஷாவை அழைத்து வாயிலை பார்த்துக் கொண்டே வந்தாள்.

ஹே..நீ..நீ..

“அம்மு அண்ணி” என்றாள் முக்தா.

“நீ எப்ப?” என மனீஷா அவளுடன் பேசிக் கொண்டிருக்க, “மனு” என்று தியா ஓடி வந்தாள்.

தியா..என கண்ணீருடன் மனீஷா அவளை அணைத்து அழுதாள்.

“என்னடி கல்யாண கோலத்துல்ல வந்திருக்க?” தியா கேட்க, மனீஷாவை பார்த்த அஜய் கோபமாக அவளிடம் வந்தான்.

“என்ன அவசரம் உங்களுக்கு?” நாங்க தான் வெயிட் பண்ணச் சொன்னோம்ல்ல என அவளை தியாவிடமிருந்து பிடித்து இழுத்தான்.

நாங்க எதுவும் பண்ணலை அஜய் சார். அவரை காணோம். பாட்டி வீட்டுக்கு என்னை அனுப்பீட்டு எனக்கு தெரியாம எங்க வீட்ல நிஹ்ஹாவுக்கு தயார் செஞ்சுட்டு இருந்திருக்காங்க. இன்று காலை வந்தவுடன் தான் எனக்கே தெரியும். நான் கால் பண்ணா அலா எடுக்கவே இல்லை. எனக்கு என்ன செய்யண்ணே தெரியல.

தயாராகிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு இங்க வந்துட்டேன். சிம்மா சாருக்கு கால் பண்ணேன். அவர் எடுக்கலை. அதனால நட்சத்திரா மேமுக்கு கால் பண்ணேன். சார் ஊருக்கு போயிருக்கிறதா சொன்னாங்க. அவங்களும் இங்க தான் வந்துட்டு இருக்காங்க என்றாள் அழுது கொண்டே.

ஓ..கே..ரிலாக்ஸ்..இரு நான் பார்க்கிறேன் என்று அஜய் புழலரசனுக்கு அழைக்க, அவன் எடுக்கவேயில்லை. வினித் அவளை பார்த்து, “என்ன நடக்குது மனீஷா?” எனக் கேட்டான். ரோஹித்தோ படியிலிருந்து இறங்காமல் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.

யுக்தா ரோஹித்தை பார்த்துக் கொண்டே மனீஷா அருகே வந்து, “அவன் எங்கேயும் போயிருக்க மாட்டான். பயப்படாத மனு” என ஆறுதலாக மனீஷா கையை பிடித்தாள். நட்சத்திரா பதட்டமாக உள்ளே வந்தாள்.

மேம்..தியா அழைக்க, அஜய்..எனக்கு சந்தேகமா இருக்கு. அரசனுக்கு நேற்று கால் பண்ணேன். அவன் எடுக்கவில்லை. எனக்கு பயமா இருக்கு என அவள் சொல்லிக் கொண்டிருக்க, சின்னய்யா என வாட்ச்மேன் ஓடி வந்தார்.

என்னாச்சு? என வினித் நகர, உடல் முழுவதும் இரத்தக்களறியுடன் வந்தான் புழலரசன்.

“அலா” என அழுது கொண்டே மனீஷா அவனிடம் ஓடிச் சென்றாள். வந்த அவனுக்கோ முகத்திலும் நிறைய காயங்கள்..”அண்ணா” என்று முக்தாவும், “அரசா”..என மற்றவர்களும் அவனிடம் ஓடினர்.

“என்னடா இது?” என நட்சத்திரா தலையில் அடிக்க, புழலரசன் மனீஷாவை அணைத்து முடியாமல் சரிந்து விழுந்தான்.

“அலா” என அவள் கதறி அழுது கொண்டே கீழே அமர்ந்து, அவனை அவளது மடியில் போட்டு, “அலா..நான் கால் பண்ணேன்ல்ல எடுத்திருக்கலாம்ல்ல?” எனக் கேட்டாள்.

அவளை பார்த்து விட்டு அனைவரையும் பார்த்தான். அவன் பார்வை ரோஹித்தை தீண்டியது. கோவிலுக்கு சென்று உள்ளே வந்த ராணியம்மா பதறி அவர்களிடம் வந்து, “யாரு இவங்க?” எனக் கேட்க, “பா..பாட்டி” என புழலரசன் அழைக்க, என்னையா? அவர் கேட்டார்.

ம்ம்..என கையை நீட்டி ரோஹித்தை அழைத்தான்.

“உனக்கு ஒன்றுமில்லை” வினித் அவனை தூக்க எத்தனிக்க, “நான் பிழைக்க மாட்டேன் சீனியர்” என்ற புழலரசன். மனு வீட்ல அவளை கொல்ல வந்துட்டு இருக்காங்க. அவளை காப்பாற்ற தான் வந்தேன். என்னால அவளோட வாழ முடியாது என சொல்ல, மீண்டும் அவனை பிடித்துக் கொண்டு கதறி அழுதாள் மனீஷா.

மனு, என்னை பேச விடு..என்று அவளது கன்னத்தை பிடித்த புழலரசன், எனக்கு வேற வழி தெரியலடா..என ரோஹித்தை பார்த்து, “இவர் யாரு?” என கேட்டான்.

அரசா, என்னோட தம்பி தான். “ரோஹித்” யுக்தா சொல்ல, அவளது கையை பிடித்த புழலரசன், ரோஹித்தை பார்த்து விட்டு வாயிலை பார்த்தான்.

“என்னப்பா?” ராணியம்மா கேட்க, புழலரசன் கண்ணீர் பெருகியது. ராணியம்மா கையை பிடித்து மனீஷா கையை அவர் கையில் வைத்து, உங்க பேரன் ரோஹித்தை என்னோட மனுவிற்கு திருமணம் செய்து வையுங்க. அவங்க வந்தா அவளை கொன்றுவாங்க என்றான்.

மனீஷா திகைப்புடன், “அலா..என்ன பேசுறீங்க?” என்னால முடியாது. “நீங்க என்னை விட்டு போக நான் விட மாட்டேன்” என அவள் அழ, சொன்னா புரிஞ்சுக்கோ மனு. என்னால பிழைக்க முடியாது மனு.

உன்னோட வாப்பாவும், அண்ணாவும் உன்னை கொல்ல வந்துட்டு இருக்காங்க.

சரி..வரட்டும். நானும் சாகிறேன். “நீங்க இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்றது?” என கதறினாள்.

நான் வாழ முடியாத உலகில் நீ வாழணும். சந்தோஷமா வாழணும். எனக்கும் சேர்த்து வாழணும்.

“நான் வேறொருவருடன் எப்படி அலா?”

அவர் நம்ம யுகி தம்பி தான? உன் வயது தான் அவருக்கும் இருக்கும்? என்ன யுகி?” அவன் கேட்க, ம்ம்..என்றாள்.

ரோஹித்தை பார்த்து, “என்னோட மனுவை நீங்க பத்திரமா பார்த்துப்பீங்கன்னு நம்புகிறேன்” என ரோஹித் கையை அவன் பிடிக்க, வெளியே சத்தம் கேட்டது.

அரசன் அவனிடமிருந்த தாலிக்கயிற்றை எடுத்து ரோஹித் கையில் கொடுத்து, “மனுவை திருமணம் செஞ்சுக்கோங்க” என சொல்ல, ரோஹித் தயங்கி மனீஷாவையும் ராணியம்மாவையும் பார்த்தான்.

ம்ம்..கட்டுப்பா என ராணியம்மா சொல்ல, மனீஷா கழுத்தில் ரோஹித் தாலிக்கயிற்றை கட்டினான். அதே நேரம் உள்ளே நுழைந்தனர் மனீஷாவின் சொந்தங்கள்.

அஜய்யும் வினித்தும் அனைவர் முன்னும் வந்து நிற்க, கீழே விழுந்து கிடந்த புழலரசன் வெற்றிப் புன்னகையுடன் அவர்களை பார்த்தான்.

“மனூ” அவள் வாப்பா கத்த, புழலரசன் ரோஹித் மனீஷா கையை பிணைத்து வைத்திருந்தான். அதை பார்த்த அவள் அண்ணன், “வாப்பா..அவன் சொன்னது போல மனூவை வேற ஒருவனுக்கு நிஹ்ஹா பண்ணீ வச்சுட்டான்” என கத்தினான்.

“அதனால என்ன? அவள இழுத்துட்டு வாங்கடா” மனீஷா வாப்பா கத்த, ராணியம்மா சுவற்றில் மாட்டி இருந்த வாளை உருவி மனீஷா வாப்பாவின் கழுத்தில் வைத்தார்.

அவ இப்ப எங்க வீட்டு பொண்ணு. அவ மேல கைய வச்ச? என கணீர் குரல் கத்தினார். ரோஹித் எழுந்து நின்றான்.

இனி அவள் சுராஜ் கட் குடும்பத்து மருமகளாகிட்டா. இதுக்கு மேல உங்களால முடிந்தால் கையை வையுங்கடா என ராணியம்மா சத்தமிட, “இது தான் இனி உன் குடும்பம் மனு” என கண்ணை மூடினான் புழலரசன். மனீஷா கதறி அழுதாள்.

“எழுந்திரும்மா” என ராணியம்மா கத்த, மனீஷா நிமிர்ந்து அவர்களை பார்த்தாள். அவள் அண்ணனை பார்த்து, “ஏன்டா, என்னோட அலாவ கொன்ன?” என அவனை அடித்தாள்.

அவளது வாப்பாவின் கழுத்தில் ராணியம்மா வைத்திருந்த கத்தியை நகர்த்திய மனீஷா, வாப்பா..என் செல்லப்பொண்ணு.. பொண்ணுன்னு சொல்லி வளர்த்தீங்க. “இப்ப என் உயிரையே கொன்னுட்டீங்களே!” அவள் ஆதங்கமுடன் பேச, அவள் வாப்பா வைத்திருந்த கத்தி அவள் வயிற்றில் பாயும் முன் கத்தியின் கூரான முனையை பிடித்து தடுத்தான் ரோஹித். அவன் கையில் இரத்தம் சொட்ட அனைவரும் பதறினர்.

அஜய்யும் வினித்தும் அவரை தள்ளி விட, கையை உதறிக் கொண்டு, மனீஷாவின் கையை பிடித்து, “ஷி இஸ் மைன்”. முடிந்தால் நீங்க தொடலாம் என அவன் கூற, அழுது கொண்டிருந்தவர்கள் அவனை பார்த்தனர்.

மனீஷா அவன் கையை விடுவிக்க பார்க்க, ரோஹித் அவள் கையை அழுத்தமாக பிடித்திருந்தான்.

இங்க பாருங்க. இனி உங்களுக்கும் என் மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால வந்த வழியே போயிருங்க. இல்ல பிரச்சனையை நாங்க உங்களுக்கு தரும்படி ஆகிடும்.

அவர்கள் புரியாமல் விழிக்க, ரோஹித் கூறியதை வினித் தமிழில் மொழி பெயர்த்தான்.

மனீஷாவின் வாப்பா..சிரித்துக் கொண்டு, “எங்களுக்கு பிரச்சனையா?” என நக்கலாக ரோஹித்தை பார்க்க, கார்ட்ஸ்..என அலைபேசியில் அஜய் அழைத்தான். மனீஷாவின் சொந்தபந்தங்களை சுற்றி கார்ட்ஸ் துப்பாக்கியுடன் நின்றனர்.

இங்க இருக்கிற வரை தான இந்த அஜய் பாதுகாப்பு கொடுப்பான். வெளிய வருவீங்கல்ல என மிரட்டுவது போல அவர் பேச, ரோஹித் மனீஷாவை கையை விடுவித்து, கையை தட்டிக் கொண்டு சிரித்தான்.

“லூசு பிடிச்சிருச்சாடா?” என ரோஹித் சட்டையை அவள் அண்ணா பிடிக்க, அவன் கையை தட்டி விட்டு, “யாருடா லூசு? எங்கள பத்தி என்னடா தெரியும் உங்களுக்கு? எங்க வீட்டுக்கு நினச்சவுடனே எவனும் வர முடியாது. வந்தால் உயிரோட போகவும் முடியாது. உங்க ரேஞ்சுக்கு எங்கள மிரட்டுறீங்க?” என ரோஹித் மனீஷாவின் வாப்பாவிடம் வந்து மனீஷாவை நிற்க வைத்து, “அப்பொழுது பேசும் போது பாதிலே நிறுத்திட்ட..இப்ப மீதிய பேசு” என்றான்.

அவளோ ஏதும் பேசாமல் அவர்களிடமிருந்து இறந்த புழலரசனிடம் வந்து அமர்ந்து அழுதாள்.

பெரு மூச்சுடன் ஓ.கே அங்கிள், நீங்க தயாரா இருங்க. ஜெயிலுக்கு போகணும்.

காதலித்த தன் மகளின் காதலனை கொன்று மகளை கொலை செய்ய வந்த தகப்பன் என நாளை நியூஸ்ஸில் போடணும்ல்ல என அவன் ஹிந்தியில் பேச, அவர்கள் புரியாமல் அவனை பார்த்தனர்.

அவன் உங்களை உள்ளே தள்ளப் போறானாம் என முக்தா வினித் சொல்லி விட்டு, ரோஹித் போதும். இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் என அவனை அவர்களிடமிருந்து நகர்த்தினான்.

நீங்களே டெல்லி சுராஜ் கட் குடும்பம்ன்னு இணையதளத்தில் போடுங்க. இவங்கள பத்தி தெரியும். பாட்டி நீங்க இவங்க பக்கமெல்லாம் வரவே வேண்டாம். அதற்கான தகுதி இவர்களுக்கில்லை என்று வாயிலை பார்த்தான்.

விக்ரம் கையில் கைவிலங்குடன் அவர்கள் முன் வந்தான்.

“நீ நல்லாவே இருக்க மாட்டடி” என மனீஷாவின் அண்ணன் உறும, “அத நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க” என ரோஹித் விக்ரம் பக்கம் கையை காட்டினான்.

வாப்பா மட்டும் அமைதியாக அழும் மனீஷாவையும் ரோஹித்தையும் பார்த்து விட்டு அவராகவே சரணடைந்தார்.

நினைவு வந்தவளாக..அஜய் சார்..”அலாவின் பெற்றோர்?” எனக் கேட்டாள் மனீஷா.

சாரிம்மா..என்று விக்ரம்..அவர்கள் சடல புகைப்படத்தை அவளிடம் காட்ட, உடைந்து போனாள்.

எல்லாமே என்னால தான அலா. எனக்காக நீங்க மட்டுமல்லாமல் ஆன்ட்டி, அங்கிளும் உயிரையே கொடுத்திருக்கீங்க? லவ் யூ என அவன் மேல் சாய்ந்து அழுதாள்.

“மனூ” தியா கண்ணீருடன் அழைக்க, தியா..அவர் குடும்பமே எனக்காக..என அவளை அணைத்து அழுதாள்.

போலீஸார் வந்து புழலரசனின் உடலை எடுத்து செல்ல, பின்னே சென்ற மனீஷாவை தடுத்தார் ராணியம்மா.

மனீஷா அழுது கொண்டே நிற்க, முக்தா அவளறைக்கு மனீஷாவை அழைத்து சென்றாள். பெண்கள் அவளுக்கு துணையாக உடன் சென்றனர்.

ரோஹித் பாட்டியிடம் வந்து, “அப்பாவும், மாவும் ஏத்துப்பாங்களா?” பிரச்சனையாகப் போகுது என்றான்.

“நான் பேசிக்கிறேன்” என்றார் அவர். அவர் மடியில் அவன் படுத்துக் கொண்டான். வினித், அஜய், ராக வீரன் புழலரசன் சடலத்தின் பின் சென்றனர்.