நீ நான் 15

தியாவை ஆழ்ந்து பார்த்து, “உன்னால எப்படி முடிந்தது பேப்?” என அஜய் தலைகவிழ்ந்து கேட்டான். தியா புரியாமல் விழித்தாள்.

பொய் சொல்லீட்ட பேப். அன்றே என்னிடம் நேரடியாக எப்படியாவது சொல்ல முயன்றிருந்தால் நீ இந்த அளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேல்ல. போதையில அந்த ஆளு உன்னை ஏதாவது செய்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என நெஞ்சில் கை வைத்தான் அஜய் கண்ணீருடன்.

அஜூ..அ..அ..அ..ஜூ..உங்க..உங்க..உங்களுக்கு எப்படி தெரியும்? என கேட்டு முடிக்க அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வர, தியாவை இழுத்து அணைத்து அஜய்யும் அழுதான்.

பாப்பாவும் அழ, தியாவிடமிருந்து விலகி கண்ணை துடைத்து, பேபிம்மா..நீங்க பாட்டிகிட்ட இருங்க. அப்பா வந்து உங்களை தூக்குவேனாம் என ரதுவை வெளியே இருந்த ராணியம்மாவிடம் கொடுத்து விட்டு முகத்தை கூட அவர்களிடம் காட்டாமல் தியாவிடம் சென்றான்.

அஜய் உள்ளே வரவும், அஜூ என அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டு கதறி தீர்த்தாள் தியா.

“அழாத பேப்” என படுக்கையில் அவளை கிடத்தி அவனும் படுத்து அவன் மார்பில் அவளை புதைத்து கொண்டு, நான் அன்று நன்றாக இருந்திருந்தால் உன்னை விட்ருக்க மாட்டேன் பேப். என்னை மன்னிச்சிரு பேப். நான் உன்னை அதிகமாக பேசி காயப்படுத்திட்டேன் என மழலை போல் அழுதான்.

அஜூ..ப்ளீஸ். இதுக்காக தான் உங்களிடம் எதையும் நான் கூறவில்லை என அவனை நிமிர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சாரி பேப்..சாரி…சாரி..உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என அவன் மீண்டும் தொடங்க, அஜூ..அதை விட்ருங்க.

நோ பேப். விட மாட்டேன். ஒருத்தனையும் விட மாட்டேன் என அஜய் சொல்ல, அஜூ பயமா இருக்கு. நீங்க கவனமா இருங்க. அவங்க ரொம்ப மோசமானவங்க என அவனை அணைத்துக் கொண்டாள்.

இதுக்கு முன் அவங்க தான பிளான் போட்டாங்க. இனி நம்ம ஆட்டத்தை ஆரம்பிப்போம். நீ எதை பற்றியும் கவலைப்படாமல் உன்னையும் நம்ம பேபியையும் பாரு.

அஜூ, “கொஞ்ச நேரம் கூடவே இருக்கீங்களா?” தியா கேட்க, அஜய் அவளை அணைத்தவாறு படுத்தான். களைப்பில் தியா உறங்கி விட்டாள். அஜய் வெளியே வந்து ரதுவுடன் நேரம் செலவழித்தான். அன்று முழுவதும் தியாவும் அஜய்யும் சேர்ந்தே இருந்தனர்.

ரம்யாவை கிருபாகரன் வீட்டில் விட்டு அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்பினார்கள். ரம்யா வேகமாக வெளியே ஓடி வந்தாள்.

திலீப்பை அனைவரும் பார்க்க, அவள் அவனை கண்டுகொள்ளவேயில்லை. திலீப் அப்பாவிடம் சென்று அவரது காதில், மாமா..இரவு திலீப் தூங்கிய பின் அவரை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்புங்க என அவள் சொல்ல, “எதுக்குமா?” என அவரும் அவள் காதில் கேட்டார்.

லவ் பண்ண மாமா. இது சீக்ரட். யாருக்கும் தெரியக்கூடாது என கண்ணடிக்க, திலீப் கையை கட்டிக் கொண்டு இருவரையும் பார்த்தான்.

ஷ்..அங்க பாரும்மா என அவர் சொல்ல, திலீப்பை பார்த்து, மாம்ஸ் நல்லா தூங்குங்க “பை பை” என உள்ளே ஓடினாள்.

மாம்ஸா என திலீப் அவளை பார்த்தான்.

அண்ணா, முதல் முறை உன்னை மாமான்னு சொல்லீட்டு போறா. வேடிக்கை பாக்குற? ராஜா கேட்க, ம்மா..இதோ வாரேன் என புன்னகையுடன் ரம்யா பின்னே சென்றான்.

பார்த்துடா அண்ணா. பர்ஸ்ட் கிஸ் பண்ணீடாத ரகசியன் சொல்ல, ஏற்கனவே அதெல்லாம் முடிஞ்சது என திலீப் சொல்ல, அனைவரும் அதிர்ந்து அவனை பார்க்க, அவன் அப்பா புன்னகைத்தார்.

காரில் ஏற இருந்த தாத்தாவின் கால்கள் பின் சென்று ஓடும் ரம்யாவை பார்த்தார். அவள் திலீப் வருகிறானா என பார்த்துக் கொண்டே செல்வது போல இருந்தது அவருக்கு.

ராஜா, ரகசியன் கிண்டல் செய்ய, அதில் கலந்து கொள்ளாமல் காரில் ஏறி அமர்ந்த விகாஸை சந்தேகமுடன் பார்த்தான் நேகன். விக்ரமும் சென்று விட்டான். சிம்மாவும் மகிழும் பாட்டியிடம் பேசி விட்டு கிளம்பினார்கள்.

விக்ரம் அண்ணாவும் சரியில்லை. நம்ம வீயும் சரியில்லையே! என்னவென்று கண்டுபிடிக்கணுமே! என நேகன் சிந்திக்க, தாத்தா திலீப் பின்னே செல்ல, அப்பா..ரகசியன் அப்பா அழைக்க, பிள்ளை சரியில்லைடா என அவர் அனைவரையும் பார்த்து விட்டு உள்ளே சென்றார். எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு அவர் பின்னே சென்றனர்.

உள்ளே சென்ற ரம்யா ஓர் அறைக்குள் ஓடினாள். திலீப்பும் பின்னே வந்தான். அவன் அறைக்குள் வரவும் அவனிடம் ஓடி வந்து அணைத்துக் கொண்டு தேம்ப ஆரம்பித்தாள்.

ரம்யா, “என்னாச்சு?” திலீப் பதற, “எனக்கு மாமா வேணும்” என அவனை மேலும் இறுக்கிக் கொண்டு அழுதாள். அவன் ஏதும் பேசாமல் அவளை கட்டிக் கொண்டான்.

ஐ அம் சாரி திலீப். நீங்க கிளம்புங்க என அவனிடமிருந்து விலகி அவனை பார்த்தாள். திலீப் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, எனக்காக இவ்வளவு பெரிய உதவி செய்வன்னு நான் நினைக்கலை. “நீ யாரை வைத்து வீடியோவை எடுத்த?”

என்னோட கல்லூரி ப்ரெண்ட்ஸ்.

ஓ..மேடம் இங்கேயும் வாண்டுகளை ப்ரெண்ட்ஸாக்கிட்டீங்களா?

இல்லை, என்னுடன் படிப்பவர்கள். கல்லூரி ப்ரெண்ட்ஸ்ன்னு சொன்னேன்ல்ல. உன்னை பார்க்க அவங்க வரலை.

நான் தான் வரவேண்டாம்ன்னு சொல்லீட்டேன். எக்ஸாம் வருதுல்ல. என்னால அவங்க ஸ்டட்டீஸ் கட் ஆகிடும்ல்ல?

ஓ..என்று அவளை பார்த்து அறையில் இருந்த சோபாவில் அமர வைத்து அவளருகே அமர்ந்தான். எல்லாரும் வெளியே இருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உன்னோட அத்தை, மாமா கூட பேசணும்ன்னா இந்த அலைபேசியை வச்சுக்கோ. இதில் ஒரு எண் மட்டும் தான் இருக்கும். அதை அழுத்தி நீ பேசலாம் என்றான்.

ரம்யா புரியாமல் விழிக்க, இந்தா ட்ரை பண்ணு என சோபாவில் சாய்ந்து அமர்ந்தான். அவனை பார்த்துக் கொண்டே அலைபேசி எண்ணை அழுத்தினாள்.

திலீப் அலைபேசி அலறியது. அதை எடுத்து காதில் வைத்தவாறு எழுந்து படுக்கையில் சென்று அமர்ந்தான்.

ஹலோ..ரம்யா பேசிக் கொண்டே திலீப்பை பார்த்தாள்.

ஹலோ பாப்பா, “எதுக்கு அழுதுகிட்டே இருக்க? மாமாவுக்கு கஷ்டமா இருக்குல்ல. அழாத” என குரல் மாற்றி திலீப் ரம்யா மாமா போல் பேச, அவள் கண்ணீர் பெருக..மாமா..நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என அழுதாள்.

“எதுக்குடா மிஸ் பண்ற?” எங்களால உன் முன் தான் வர முடியாது. ஆனால் நாம பேசலாம். நாங்க எங்கேயும் போகலைடா என அவன் பேச, மாமா..நான் திலீப்பை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

ரொம்ப சந்தோசமா இருடா. மாமாவே அதை தான் எதிர்பார்த்தேன். உன்னை அவர் நல்லா பார்த்துப்பார். அதனால எதையும் யோசிக்காம நல்லா படிக்கணும். பழைய ரம்யாவாக வலம் வரணும் என திலீப் அவள் மாமா, அத்தை குரலில் கூறி சமாதானப்படுத்தினான்.

பேசி அலைபேசியை வைத்து விட்டு திலீப் அவளை பார்க்க, மனநிம்மதியுடன் ஓடி வந்து அவன் மீது பொத்தென விழுந்து அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.

அய்யோ…ச்சீ..ச்சீ…என சுருதி சத்தம் போட, ரம்யாவும் திலீப்பும் அவர்களை பார்த்தனர். ரம்யா வெட்கமுடன் எழுந்து திலீப்பின் பின் மறைந்து நின்றாள்.

அவன் சாதாரணமாக ரம்யாவை அவனை பார்க்குமாறு திருப்பி, உனக்கு மாமா, அத்தையுடன் பேச நினைக்கும் போதெல்லாம் இந்த அலைபேசியில் அழை. அவங்க பேசுவாங்க. நாங்க கிளம்புகிறோம்.

அப்புறம் என அவன் மற்றவர்கள் பக்கம் திரும்ப, எல்லாரும் ஓடினர். தாத்தா..நானும் மகிழும் அதே ஹாஸ்பிட்டலில் தான் வொர்க் பண்ணப் போறோம். நாளை ஹாஸ்பிட்டலில் சிலவற்றை மாற்றி ஓபன் செய்யப் போறாங்க. அதுக்கு உங்க எல்லாரையும் அழைக்கணும்ன்னு சொன்னாங்க.

சரிப்பா வரட்டும். “அங்க வேலை செய்றவங்கல்ல என்ன செய்யப் போறாங்க?” அவர் கேட்க, திலீப் புன்னகையுடன் ரம்யாவை பார்த்து விட்டு நேகனை பார்த்தான்.

என்னப்பா?

அவங்க சுட்டிப் பொண்ணு தான் ஹாஸ்பிட்டல வேவு பார்த்தால. அவளுக்கு எல்லாரையும் தெரியும். அவளும் நானும் சேர்ந்து தான் முடிவு செய்யணுமாம். இது அப்சரா தந்தையின் ஆர்டர் என்றான்.

பார்த்துப்பா. உன்னோட பழைய டீனோட ஆளுங்கல்ல எப்படியாவது தவிர்த்து விடு. அதே போல் அவங்க வேலையை இங்கிருந்து தூக்கினாலும் பேசும் போது பார்த்து பேசு என்றார்.

பார்த்துக்கிறேன் தாத்தா என ரம்யாவை பார்த்து, வாரேன். முதல்ல ஓய்வெடு. ரொம்ப சோர்வா தெரியுற? எல்லாரிடமும் மனது வலிக்காதது போல நடிக்க வேண்டாம். உன்னால யாரிடமும் சொல்ல முடியலைன்னா கால் பண்ணு. வந்துருவேன் என திலீப் சொல்லி செல்ல, சுவாதிக்கு விக்ரம் நினைவு வந்தது. அவன் அவளிடம் பேச கூட இல்லை.

எப்படியோ எல்லாரும் சுவாதியை சமாதானப்படுத்தினாலும் விக்ரம் மட்டும் பேசவேயில்லை. சுவாதி பெற்றோர் சிந்தனையுடன் சுவாதியை எண்ணி கவலைப்பட்டனர். ஆனால் விகாஸ் அதையும் கண்டுகொள்ளவில்லை.

என்னாச்சு விக்ரம் விகாஸிற்கு? காத்திருங்கள் பார்க்கலாம்.

கார்த்திக் அவனது ஆபிஸிற்குள் நுழைய அவனை தாண்டி சென்ற மூவரில் ஒருவன்..அந்த பொண்ணு செம்ம அழகுடா. சந்தோஷ் சாரை மேரேஜ் பண்ணிக்கப் போறாங்களாம். அதான் அவர் தம்பி கூட வந்திருக்கான். இல்லைன்னா இந்த பக்கம் வருவானா? என பேசிக் கொண்டே சென்றனர்.

கார்த்திக் கால்கள் நின்றது. நம் வேலையை முடிக்கணும் என உள்ளே சென்றான். நண்பர்கள் அனைவரும் ஒரே அறையிலே இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதனால் அதிலே அவர்களுக்கு தனி அறை அமைக்கப்பட்டிருந்தது. இது அவர்களின் விருப்பம். அறை மிகவும் பெரியதாக தான் இருக்கும். எல்லா வசதியும் அதிலே இருக்கும்.

வினித், ரோஹித், யுக்தாவும் சந்தோஷ் அறையில் அமர்ந்திருந்தனர். விஜய், கரண் இவர்களை பார்த்து அவர்களிடம் சென்ற நேரம் தான் கார்த்திக் உள்ளே நுழைந்தான். வந்தவன் அதிர்ந்து போனான். அவன் அம்மா அவனறையில் இவர்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

அம்மா, “இங்க எதுக்கு வந்தீங்க?” கார்த்திக் கோபமாக கேட்டான்.

நேற்று முழுவதும் நீ வீட்டுக்கு வரவேயில்லை. அதான் நான் உன்னை பார்க்க வந்துட்டேன். விஜய்யும் கரணும் என்னை பார்த்தும் பார்க்காதது போல போயிட்டாங்கடா கார்த்திக் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டே வருத்தமாக சொல்ல, ஆமா உங்க பேச்சுக்கு அவங்க என்னை அடித்ததே போதும் என்றான்.

“அடிச்சானுகளா?” என கார்த்திக் அம்மா அதிர்ந்து கேட்டார்.

ஆமா..இப்ப என்ன உங்களுக்கு? முதல்ல கிளம்புங்க. நீங்க என்ன சொன்னாலும் அந்த பொண்ணை பார்க்க வர மாட்டேன் என அவன் அம்மா முகத்தை பார்க்காமல் அவனது டேபிளில் தேவையானதை எடுத்து போட்டுக் கொண்டே சொன்னான். சந்தோஷூம் ரஞ்சனும் உள்ளே வந்தனர்.

இருவரும் அவர்களை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றனர்.

சந்தோஷ் அவனறைக்குள் சென்று இவர்கள் இருப்பதை பார்த்து, “காலையிலே வந்துட்டீங்களாடா?” எனக் கேட்டான்.

ஆமா, “நீ தான வேலை இருக்குன்னு சொன்ன?” அதான் முன்னாடியே வந்துட்டோம்.

கார்த்திக் அம்மா யுக்தாவை ஆராய்ச்சி பார்வையுடனே பார்த்துக் கொண்டிருந்தார். வெள்ளை நிற டாப்பும் இளமஞ்சள் நிற கோர்ட்டும் அதே கோர்ட் நிறத்தில் லாங் ஸ்கர்ட்டும் கழுத்தை சுற்றி அதே நிற ஸ்கார்ப்பும் அணிந்திருந்தாள். கூந்தலை விரித்து ஒரு பக்கமாக போட்டு தலையை ஆட்டி ஆட்டி பொம்மை போல அமர்ந்திருந்தாள்.

பசங்க கேலி கிண்டலுடன் இருக்க, ரஞ்சன் ஓயாது யுக்தாவிடம் பேச அவளும் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அம்மா, “இங்கேயே இருங்க” என்று கார்த்திக் ஒரு கவரை எடுத்து அவர்கள் இருக்கும் அறைக்கு வந்தான். எல்லாரும் அவனை பார்க்க, கார்த்திக் வினு அருகே வந்து சேரை இழுத்து போட்டு கேசுவலாக அமர்ந்து, நீ கொடுத்த புகைப்படத்தில் இதோ இவன் மட்டும் தான் இப்பொழுதைக்கு கண்டறிய முடிந்தது.  ஒருவன் முகத்தையும் அவன் விவரத்தையும் கொடுத்தான்.

எனக்கு ஒரு வாரம் வேணும். இவன் டெல்லியில் மட்டுமல்ல என கவரை பிரித்து விவரம் கொடுத்தவன் புகைப்படத்தை காட்டி..பாரிஸ்ல்லயும், இன்னும் சில இடங்களையும் சொல்லி அங்கேயும் இருந்திருக்கான். இப்ப இவன் நம்ம தமிழ்நாட்டிற்கு வந்திருக்கான். திருச்சிக்கு போயிருக்கான். காரணம் தெரியலை என விஜய்யை பார்த்து விட்டு, வினித்தை அழுத்தமாக பார்த்த கார்த்திக், “தனியா பேசலாமா?” எனக் கேட்டான்.

யாரை கேக்குற? வினித் கேட்க, “இது யாருக்கு தேவையிருக்கோ அவங்களை தான்” என வினித்தை பார்த்து விட்டு, விஜய் நீயும் வா என கார்த்திக் அழைத்து விட்டு எழுந்தான்.

ரோஹித் முந்திக் கொண்டு வர, உன்னை யாரும் கூப்பிடலை என அவனை நகர்த்தி விட்டு..சந்தோஷ், ரஞ்சன், யுக்தாவை பார்த்து விட்டு கதவில் கையை வைத்து, அவன் அம்மா அவனறையில் இருப்பதை பார்த்து, வினித் கொஞ்ச நேரம் இருவரும் வெயிட் பண்ணுங்க. நான் அழைக்கிறேன் வாங்க என அவனறைக்கு சென்றான்.

“என்னதுடா இதெல்லாம்?” யுக்தா கேட்க, “எது கார்த்திக்கா?” விஜய் கேட்க, அவனை முறைக்க, சந்தோஷ் அவன் வேலையை கையில் எடுக்க, “டேய் இதுக்காகவா வந்தோம்?” என வினித் அவன் கையிலிருப்பதை பிடுங்கி யுகி ஈவ்னிங் எங்க போகலாம்ன்னு பாருங்க என அனைவரையும் விஜய் அறைக்கு அனுப்பி இருவருக்கும் தனிமையை ஏற்படுத்தினான் வினித்.

கார்த்திக் கோபமாக அவன் அம்மாவிடம் பேசுவதை விஜய் பார்த்து விட்டு, டேய் ரொம்ப திட்டுறான் போலடா. அம்மா அழுற மாதிரி இருக்காங்க என அவன் சொல்ல, வினித் கண்டுகொள்ளாமல் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

கார்த்திக் அம்மா அவனிடம், யுக்தாவிடம் தனியே பேசணும்ன்னு சொல்ல, சும்மா இருப்பானா கார்த்திக்..நன்றாக சினத்தை வெளிப்படுத்தியவன்.. போதும்மா. நீங்க எதுவுமே செய்ய வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டான். அவன் அம்மா கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

கார்த்திக்கின் தந்தை அவசரமாக வந்தார். வந்தவர் கார்த்திக் அம்மாவை பார்த்து கோபமாக அறைய, கார்த்திக்கின் மனமோ சத்தமில்லாமல் கதறியது.

“இங்க எதுக்குடி வந்த?” வா..என அவன் அம்மாவை அவர் இழுத்து செல்ல, சிலையாகி கண்ணீருடன் தன் அம்மாவை பார்த்தான் கார்த்திக்.

சந்தோஷ் யுக்தாவிடம் பேச, அவள் கவனமெல்லாம் கார்த்திக்கின் மீதும் அவன் அம்மா மீதும் இருந்தது. சந்தோஷூம் கவனித்தான்.

கார்த்திக் அப்பாவின் செய்கையில் வினித் அவர் பின் சென்று அவரை நிறுத்தினான். கார்த்திக்கும் அவன் பின் செல்ல அனைவரும் அவர்களை தான் பார்த்தனர். யுக்தாவும் சேர்ந்து வெளியே வந்தாள்.

யுக்தாவை பார்த்ததும் கார்த்திக் அப்பா கையை உதறி விட்டு அவன் அம்மா அவளிடம் சென்று, அவளிடம் தனியாக பேச கேட்க, “அம்மா” என கார்த்திக் சத்தமிட்டுக் கொண்டே அவர்களிடம் வந்தான்.

அக்கா, “நீ போகாத” என ரோஹித்தும் பதறினான்.

பேச தான செய்யணும். வாங்க ஆன்ட்டி என யுக்தா செல்ல, கார்த்திக் அவள் கையை பிடித்தான். சந்தோஷ் கார்த்திக் கையை தட்டி விட்டு, “பேசிட்டு வா யுகி”. நாம ஈவ்னிங் வெளிய போக முடிவு செய்யணும் என்றான் கார்த்திக்கை முறைத்துக் கொண்டு.

ம்ம்..என்று சந்தோஷை பார்த்து விட்டு யுக்தா கார்த்திக் அம்மாவுடன் சென்றாள்.

என்னை மன்னிச்சிரும்மா. நான் கார்த்திக்கை பற்றி யோசித்தேன். அவன் காதலை பற்றி யோசிக்கலை.

ஆன்ட்டி, அதெல்லாம் இப்ப ஒன்றுமில்லை.

இருக்கும்மா அவர் சொல்ல, ப்ளீஸ் ஆன்ட்டி வேற பேசுறதா இருந்தா பேசுங்க என்றாள்.

கண்ணை முந்தானையால் துடைத்து விட்டு, எனக்கு உன்னால ஒரு உதவி வேணும். கார்த்திக்கிற்கு ஒரு பொண்ணு பார்த்தேன். வெளிநாட்டு பொண்ணும்மா அது. உங்க காதலை சொல்லி அவன் வேண்டாம்ன்னு சொல்லீட்டான்.

“நான் அந்த பொண்ணிடம் பேசி பழகிட்டேனா?” இப்ப என் மகன் காதலிக்கிறான்னு சொன்னா நம்பவே மாட்டேங்குது. உங்க பையன் காதலிக்கும் பொண்ணை அழைச்சிட்டு வாங்கன்னு நிக்குதும்மா. எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. இதை கார்த்திக் அப்பாவிடமோ அவனிடமோ சொன்னால் என் மீது ரொம்ப கோபப்படுவாங்க. ஒரே ஒரு முறை நீ தான் அந்த பொண்ணுன்னு சொல்லும்மா அது போதும்.

இல்ல ஆன்ட்டி, நான் என்னோட சீனியரை டேட் பண்ணப் போறேன்.

நீ பண்ணும்மா. நான் தடுக்கலை. கார்த்திக்கின் முன் அந்த பொண்ணு வந்து எங்க பழக்கத்தை சொன்னால் கோபப்படுவானோன்னு பயமா இருக்கு. ஒரே ஒரு முறை எனக்காக வந்துட்டு போம்மா. ஏற்கனவே பிரச்சனையில வீட்டுக்கு அவன் வரலை. சாப்பிட்டானான்னு கூட தெரியல. ப்ளீஸ்ம்மா..என்றார்.

சரிங்க ஆன்ட்டி. “எப்ப எங்க வரணும்?”

உன் எண்ணை கொடும்மா. நானே சொல்கிறேன். இன்று மாலை உன்னால முடியுமாம்மா?

இல்ல ஆன்ட்டி, எங்க பர்ஸ்ட் டேட் என்றாள் யுக்தா.

சரிம்மா. நாளை காலை பார்க்கலாம். நேரம் இடத்தை அலைபேசியில் சொல்கிறேன். “யாரிடமும் சொல்லாதமா” என சொல்லி விட்டு அவராக தன் கணவன் அருகே வந்து நின்று கொண்டார். அனைவரும் யுக்தாவை ஆராய, அவள் சாதாரணமாக வந்து நின்றாள்.

கார்த்திக்கோ தன் அம்மாவை முறைத்துக் கொண்டே அப்பா, அம்மாவை அழைச்சிட்டு போங்க என்றான். அவர் கையிலிருந்த பார்சலை தன் மகனிடம் கொடுத்து சாப்பிட சொல்ல, அவன் அம்மா உதடு பிதுக்கி மகனை பாவமாக பார்த்தார். யுக்தாவிற்கு அவரை பார்க்க பாவமாக இருந்தது. கார்த்திக் உள்ளே சென்று விட்டான்.

வினித்தும் விஜய்யும் அவன் பின் செல்ல, அவர்களை அமர வைத்து.. வினு..அந்த டான் தான் இவங்க எல்லாரையும் கண்காணித்து இருக்கிறான்.

“அவனா? என்னை பின் தொடர்ந்து வந்திருப்பானோ!” வினித் கேட்க, எனக்கு அப்படி தோணலை என்றான் கார்த்திக்.

“எப்படி சொல்ற?” விஜய் கேட்டான்.

புகைப்படத்தில் இருந்த ஒருவனை கண்டறிந்தானே கார்த்திக் அவன் பெயர் அலி என்று டானும் அவனும் கை குலுக்கும் புகைப்படத்தை வைத்தான்.

விதார்த்தை இப்பொழுது பார்க்க முடியாது. அவன் வேலை விசயமா வெளிய இருக்கான். இரு வாரம் கழித்து பார்க்கலாம்.

அவன் வீட்டிற்கு சென்றேன். அவங்க வீடு மாத்திட்டாங்களாம். அதன் முகவரியை பார்த்து சென்றேன்.

உனக்கு விக்ரமின் மச்சானை தெரியுமா? ரகசியன்..நம்ம அஜய் கூட அவனிடம் பிரச்சனை செய்தானே!

ம்ம்..ஆமா..

அவர் தம்பி திலீப். டாக்டர். அவர் வீட்டுக்கு எதிர்வீட்டை வாங்கி அங்கே சென்று விட்டாங்க. விதார்த்தை ஆபிஸில் விட வீட்டில் பார்க்கலாம். ஆனால் காத்திருக்கணும் என்றான் கார்த்திக்.

ம்ம்..பார்க்கலாம் என வினித் கார்த்திக்கை பார்த்தான்.

இந்த டான் விசயம் யாருக்கும் தெரியக் கூடாது என வினித் சொல்ல, அஜய்யிடம் சொல்லலாமே! என கார்த்திக் கேட்டான்.

ம்ம்..நான் சொல்லிக்கிறேன். ரோஹித்தும் இந்த விசயத்துல்ல தலையிட வேண்டாம்ன்னு நினைக்கிறேன். உங்களிடம் அவன் ஏதாவது கேட்டால் எதையாவது சொல்லி அவன் சிந்தனையை மாத்திருங்க என வினித் கூறினான்.

ம்ம்..மத்தவங்கல்ல கண்டுபிடித்தாலும் போலீஸ் உதவி இருந்தால் நன்றாக இருக்கும் என கார்த்திக் வினித்தையும், விஜய்யையும் பார்த்தான்.

சிம்மாவிடம் பேசலாம் என்றான் விஜய்.

“உனக்கு அந்த காயம் ஆறிடுச்சுல்ல?” கார்த்திக் வினித்திடம் கேட்டான்.

ம்ம்..எனக்கு வேலை இருக்கு என வினித் நகர்ந்தான்.

விஜய்யும் கார்த்திக்கும் மேலும் புகைப்படத்தை பற்றி பேசினார்கள். இருவரும் வெளியே வந்தனர். வினித் அங்கே இல்லை.

யுக்தாவும் சந்தோஷூம் அலைபேசியில் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். ரோஹித் கார்த்திக் விஜய்யை பார்த்து விட்டு, மாமா ஈவ்னிங் நீங்க அக்காவை பீச்சிற்கு அழைச்சிட்டு போறீங்கல்ல. நான் வர நேரமாகும் என ரோஹித் கேட்க, ம்ம்..நாங்க போயிட்டு வாரோம்டா என்ற யுக்தா கார்த்திக்கை பார்த்து விட்டு அமைதியானாள்.

விரக்தி புன்னகையுடன் இவர்களை பார்த்த கார்த்திக்கை அவன் ஜூனியர் ஒருவன் அழைக்க, யுக்தாவை பார்த்துக் கொண்டே வெளியேறினான். அவளுக்கு பேச்சே வரவில்லை. சந்தோஷ் மனதினுள் ஏதோ முடிவுடன் இவர்களை பார்த்தான்.

ரஞ்சனோ..கார்த்திக்கால் அவன் அண்ணன் திருமணப் பேச்சு நின்று விடுமோன்னு யோசனை பிறக்க, அவன் யோசனையை பார்த்தவுடன் புரிந்து கொண்ட அவன் அண்ணன் சந்தோஷ், அவன் கையை அழுத்தி..ரஞ்சா நீ தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது. படிப்பில் கவனத்தை செலுத்து இப்ப கிளம்பு என சொல்ல, அவன் சந்தோஷை உற்றுப்பார்த்தான்.

நீ நினைப்பது சரி தான். கிளம்பு நாம பேசலாம் என சொல்ல, ரஞ்சன் கோபமாக எழுந்தான். யுகி, ரோஹித், கரணிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவன் கார்த்திக் அறையில் இல்லாததை பார்த்து யாரும் பார்க்கிறார்களா? என பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்து தவண்டு அவனது நோட் பேடு இருக்கும் இடத்தை அடைந்தான்.

பேச தான கூடாது. யுகி அண்ணி பக்கத்துல்ல வரக் கூடாதுன்னு எழுதி வச்சிட்டு போயிடலாம் என அதை எடுக்க, அடியிலிருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது. அதை எடுத்து பார்த்த ரஞ்சன் வருத்தமாக அதை எடுத்த இடத்திலே வைத்து விட்டு எழுந்தான்.

கார்த்திக் கையை கட்டிக் கொண்டு அவனை பார்த்தான்.

அண்ணா, நான் என ரஞ்சன் அவனை பார்த்தான். கார்த்திக் அறையில் ரஞ்சனை பார்த்தவுடன் சந்தோஷ் வேகமாக எழுந்து, “இவன் அவனோட அறைக்கு எதுக்கு போனான்?” என கோபமாக நடந்தான். யுக்தாவும் ரோஹித்தும் அவன் பின் சென்றனர்.

“நீ எதுக்கு வந்தன்னு தெரியும் ரஞ்சா?” பிரச்சனையில்லை நீ உட்காரு என அவனது சேரில் அவனை அமர வைத்த கார்த்திக், “காலையில கோவிலுக்கு போனீயா?” எனக் கேட்டான்.

ரஞ்சன் புரியாமல் அவனை பார்த்தான்.

கார்த்திக் அவனது அலமாரியை திறந்து இரண்டு பாக்ஸை எடுத்து ரஞ்சன் அருகே புன்னகையுடன் வந்து மண்டியிட்டு அதை கொடுத்து, “விஸ் யூ ஹாப்பி பர்த்டே” என சொல்லிக் கொண்டிருக்கும் போது கதவை பட்டென திறந்த சந்தோஷ் அதிர்ந்து நின்றான். ரஞ்சன் கண்கள் கலங்கி இருந்தது.

மனக்குழப்பத்தில் தன் தம்பியின் பிறந்த நாளையே மறந்து விட்டான் சந்தோஷ்.

“தேங்க்ஸ் அண்ணா” என ரஞ்சன் கார்த்திக்கை அணைக்க, கிளம்பு. காலேஜூக்கு நேரமாகுது என்றான் கார்த்திக்.

அண்ணா, இது எனக்கு. இது என மற்ற பாக்ஸை காட்டி அவன் கேட்க, கார்த்திக் சந்தோஷை பார்த்துக் கொண்டே, “உன்னோட கெர்ல் ப்ரெண்டுக்கு” என கார்த்திக் சிரிக்க, “கெர்ல் ப்ரெண்டா?” சந்தோஷ் தன் தம்பி அருகே வர, “அண்ணா” என கார்த்திக் பின் மறைந்தான் ரஞ்சன்.

டேய், நில்லு..என கார்த்திக் சந்தோஷை நிறுத்தி, இந்த வயசுல கெர்ல் ப்ரெண்டு இல்லைன்னா அவன் மனுசன் இல்லைடா என ரஞ்சித்திற்கு வக்காளத்து வாங்கினான்.

படிப்பை விட..

“சந்தோஷ்” என கார்த்திக் அழுத்தமாக அழைக்க, அவன் நின்று விட்டான்.

நல்லா படிக்கிறான். ஒழுக்கமா இருக்கான். “இதை விட என்ன வேணும்? லவ் தான பண்ணட்டுமே!” கார்த்திக் சொல்ல, அண்ணா..வேண்டாம். வீட்ல போய் மொத்தி எடுத்திருவான் என ரஞ்சன் கார்த்திக் காதில் கிசுகிசுத்தான்.

உடனே எனக்கு கால் பண்ணு வந்திடுறேன்.

“உங்களுக்கு வேலை இருக்குமே!”

இல்ல..இல்ல..கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்க, சந்தோஷ் ரஞ்சன் காதை பிடித்து அவனை இழுத்தான்

“என்னடா? இருவரும் ரகசியம் பேசுறீங்க?”

அண்ணா, நீ பொறாமைப்படுறேல்ல ரஞ்சன் சந்தோஷிடம் கேட்டுக் கொண்டே கார்த்திக்கை பார்த்து கண்ணடித்தான்.

ஆமா..பொறாமைப்பிடிச்சவன் என டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து கார்த்திக் சந்தோஷ் மீது ஊற்றி, ரஞ்சா நீ கிளம்பிடு என சொல்ல, “லவ் யூ அண்ணா” என கார்த்திக், சந்தோஷ் இருவருக்கும் முத்தம் கொடுத்து விட்டு மற்றவர்களை பார்த்து புன்னகைத்துக் கொண்டே ஓடினான்.

முகத்தில் இருந்த தண்ணீரை வழித்த சந்தோஷ் கார்த்திக்கை முறைத்தான்.

சந்தோஷ் அருகே வந்து கார்த்திக் துவாலையை நீட்ட, அதை தட்டி விட்டு “எதுலடா இருவரும் விளையாடுறீங்க?” சத்தம் போட்டான்.

“இன்னும் எத்தனை நாள் அவன உன் கன்ட்ரோல்ல வச்சிருப்ப?” அவன் சின்னப்பையன் இல்லை. இந்த வருடத்தோட அவன் படிப்பு முடியுது. அவனுக்கு நீ என்ன வேணும்ன்னு முடிவு பண்ணாத. அவனுக்கு பிடித்ததை செய்ய கத்துக்கோ.

நீ அவனிடம் மனசு விட்டு பேசி இருந்தால் அவனுக்கு கெர்ல் ப்ரெண்டு இருப்பதை அவனே உன்னிடம் சொல்லி இருப்பான். நான் தற்செயலாக தான் இருவரையும் பார்த்தேன். உன்னிடம் சொன்னா அவனை வெளியவே விட மாட்ட. அவனுக்கு எல்லா பிரச்சனையும் சமாளிக்க கத்துக் கொடுக்கணும். அதை விட்டு அவனை பொம்பள பிள்ள மாதிரி பொத்தி பொத்தி பார்த்துட்டு இருக்க.

சந்தோஷை அமர வைத்து கார்த்திக் அவனருகே அமர்ந்து, உன்னோட பிரச்சனை புரியுது. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கடா. புரிஞ்சுக்கோ. அவனையும் எஞ்சாய் பண்ண விடு என பேச, யுக்தா மெய் மறந்து அவனை பார்த்தாள்.

ரோஹித்திற்கு கார்த்திக் மீது நல்ல அபிப்ராயம் வர ஆரம்பித்தது.

ஆனால் அவனும் ஏமாந்து விட்டால்..சந்தோஷ் கார்த்திக்கிடம் அமைதியாக கேட்டான்.

அதுக்கு தான் நீ இருக்கேல்ல. அந்த பொண்ணை பாரு. நீயும் பேசு. நீ பார்த்து பேசினாலே கண்டுபிடிச்சிடுவ. படிப்பும் முடியப் போகுது. அடுத்து வாழ்க்கையில் என்ன? என அந்த பொண்ணிடம் பேசு. ஒரு வேலை அந்த பொண்ணால் உனக்கும் ரஞ்சாவுக்கும் நல்ல குடும்பம் கிடைக்க வாய்ப்புள்ளது தான? எனக் கேட்டாள்.

ம்ம்..பேசுகிறேன் என சந்தோஷ் யுக்தா ரோஹித்தை பார்த்து விட்டு கார்த்திக்கை பார்த்தான்.

கார்த்திக், யுகி..சந்தோஷ் ஏதோ பேசத் தொடங்க, நான் பேச வேண்டியதையும், சொல்ல வேண்டியதையும் சொல்லீட்டேன். அப்புறம் அவங்க விருப்பம் என யுக்தாவை பார்த்து விட்டு, “நீ இங்க தான இருப்ப?” நான் சொன்னேன்ன்னு ஒருவன் வருவான் அவன் தருவதை வாங்கி வை. பிரிக்கக்கூடாது என கண்டிப்புடன் கூறிய கார்த்திக் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் என அங்கிருந்த பொருட்களை பார்த்து விட்டு சந்தோஷை பார்த்துக் கொண்டே அலைபேசியை எடுத்து சிம்மாவிற்கு அழைத்தான்.

ஹலோ என்ற குரலில் புருவத்தை சுருக்கினான் கார்த்திக்.

யுக்தாவும் ரோஹித்தும் நின்று கொண்டிருப்பதை பார்த்து, “எதுக்கு நிக்குறீங்க?” உட்காருங்க என சைகை செய்து கொண்டே, “ஹலோ” என மென்மையான குரலில் அழைக்க, ரோஹித் கண் சிமிட்டாமல் அவனை பார்த்தான்.

“யாருடா?” என்னோட அப்பா போலீஸ். என்னிடம் விளையாண்டீங்க சூட் பண்ணிடுவேன் என அர்சலனின் குரலில் சிரிப்புடன், ஹே..சார்ம்..நான் உங்க அப்பாகிட்ட பேசணும். எதுக்கு உங்களுக்கு இவ்வளவு டென்சன் கூல்..கூல்..என கார்த்திக் சிரிக்க, “யாரு நீங்க?” அர்சலன் கேட்டான்.

நான் உன் அப்பாவோட ஸ்கூல் ப்ரெண்டு கார்த்திக்.

டேய்..சந்தோஷ் சத்தமிட்டான்.

ஷ்…

உங்க அப்பாவை கூப்பிடுங்க.

இல்லையே. நீ கார்த்திக் அங்கிள் இல்லை. “யாருடா நீ?” என்னை உன்னால ஏமாத்த முடியாது என அர்சலன் உறுதியாக சொன்னான்.

ம்ம்..கிரேட்..உன்னோட அப்பா உனக்கு நல்லா டிரைனிங் குடுத்திருக்காங்க.

ஹலோ, என்னை பற்றி நீங்க புகழ தேவையில்லை. “நீங்க யாரு?” எனக்கு வேலை இருக்கு. என் தம்பியை பார்க்கணும்.

வாரே வா..சூப்பர்டா சார்ம்..எனக்கே டஃப் கொடுக்கிற. அன்று நாம உன்னோட ஸ்கூல்ல மீட் பண்ணோம்ல்ல. உன்னோட படிக்கிற பையனை ஒருவன் கடத்தினான்ல்ல. நான் கூட அவனை கண்டுபிடிச்சு கொடுத்தேன்னே ரோபோ கார்த்திக் என சொல்ல..

ஓ..ரோபோ கார்த்திக். ரொம்ப நாளா ஆளவே காணோம். சந்துரூ உன்னை தேடினான்.

பார்த்துட்டா போச்சு. டேய் ராசா எனக்கு உன்னிடம் பேச நேரமில்லை. நாம இந்த வீக் என்டுல சந்திப்போம். அவனை பார்க்க வாரேன்னு சொல்லு. இப்ப உன் அப்பாகிட்ட கொடுடா கெஞ்சாத குறையாக கேட்டான் கார்த்திக்.

தாரேன்..தாரேன்..வீக் என்ட் எங்க பார்க்கலாம்? அர்சு கேட்க, பெரிய மனுசன் மாதிரி நீ பேசுற. ஆனால் இங்க சில பேர் தன் தம்பியை பயந்து பயந்து வளர்க்குறாங்க என கார்த்திக் சந்தோஷை பார்த்தான்.

“யாரு? என்ன சொல்ற?”

அதை விடு. நாம எங்க மீட் பண்லாம். சந்தீப் வோட விடுதியில் பார்க்கலாமா?

நோ..நோ..அவனை நீ வெளிய எங்காவது கூட்டிட்டு வரணும்.

“நானா? என்னுடன் எப்படி வெளிய விடுவாங்க?”

“நீயும் அப்பாவை மாதிரி நல்லது தான பண்ற?”

“நல்லது பண்ணா விடுவாங்கன்னு யாரு சொன்னா உனக்கு?” அவனை பார்த்தான்.

அவனோட விடுதியில அவன் மட்டும் தான் வெளியே எங்கேயும் போக முடியல. எல்லாருக்கும் யாராவது ஒருவராவது இருப்பாங்க. நான் அப்பாவிடம் கேட்டேன். அவர் சொன்னார். ஆனால் அவருக்கு நேரமில்லை. நீ கூட்டிட்டு வர்றீயா?

ம்ம்..ஓ.கே. எங்க போகலாம்?

அப்பாகிட்ட பேசிட்டு சொல்லவா?

அட நீ பப்பாஸ் பாயா? என கேட்டான்.

நோ..நான் மம்பப் பாய் என அர்சலன் சொல்ல, கார்த்திக் சிரித்து விட்டான்.

“அம்மா, அப்பாவை விட்டு கொடுக்காம சொல்றீங்களா?”

ஆமா..எனக்கு ரெண்டு பேருமே ரொம்ப பிடிக்கும்.

“உன்னோட தம்பி என்ன பண்றான்?”

ஷ்..அவன் தூங்குறான். இப்ப எழுந்திடுவான். நான் அவன் பக்கத்துல இல்லைன்னா அழுவான்.

நீ ஸ்கூலுக்கு போகலையா?

போகலை. எனக்கு பீவர் என்றான் அர்சு.

டேய், பாருடா காய்ச்சலாக இருக்கும் போதே சிம்மா சார் மகன் என்ன போடு போடுறான். நீயும் இருக்கப் பாரு என கார்த்திக் கோபமாக சந்தோஷை பார்த்தான்.

“யாரை திட்டுற?”

அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்பாகிட்ட கொடு என்றான்.

சிம்மாவிடம் ஓடிச் சென்று அவனை எழுப்பினான் அர்சலன்.

அர்சு..அப்பாவை தொந்தரவு செய்யாத நட்சத்திரா சொல்ல, அம்மா..ரோபோ கார்த்திக் கால்ல இருக்காரு.

“யாருடா அது?” நட்சத்திரா கேட்க, குடு என சிம்மா எழுந்து கார்த்திக்கிடம் பேச, “சார் ரொம்ப பிஸியோ?”

காலை தான் ஊர்ல்ல இருந்து வந்தோம். “தியாவ பார்த்தீங்களா?”

ம்ம்..அஜய்யுடன் நானும் ஹாஸ்பிட்டல் வந்தேன். நாம பேசணும். இப்ப நீங்க ப்ரீயா?

பேசலாம். இப்பவேவா?

நான் வீட்டுக்கு போயிட்டு வாரேன் என கைக்கடிகாரத்தை பார்த்து, டூ ஓ கிளாக் ஓ.கேவா?

ம்ம்..ஓ.கே பார்க்கலாம் என சிம்மா வைத்தான்.

கார்த்திக் அலைபேசியை வைத்து விட்டு யுக்தா, ரோஹித்தை பார்த்தான். இருவரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“உங்களுக்கு என்ன வேணும்?” கார்த்திக் கேட்க, யுக்தா சந்தோஷை பார்த்தாள்.

“நாங்க வெளிய இருக்கோம்” என சந்தோஷ் இருவரையும் அழைத்து சென்றான்.

பெருமூச்சுடன் கார்த்திக் எழுந்து அவன் சில கோப்புகளை எடுத்துக் கொண்டு, வெளியே வந்தான்.

கார்த்திக், “இவங்களை டிராப் பண்ணீட்டு போ” என சந்தோஷ் சொல்ல, அவங்களுக்கு ஓ.கேன்னா வரச் சொல்லு என முன்னே நடக்க, போங்க என யுக்தா, ரோஹித்தை கார்த்திக்குடன் அனுப்பி வைத்தான் சந்தோஷ்.

மாமா, ஈவ்னிங் அக்காவை மறக்காமல் கூட்டிட்டு போங்க என சொல்லி விட்டு பைக்கின் முன் வந்தனர்.

யுக்தா தயக்கமுடன் தன் தம்பியை பார்க்க, “சந்தோஷ் உன்னோட காரை எடுத்துக்கவா?” என கார்த்திக் கேட்க, அவன் தன்னுடைய கார்ச்சாவியை கார்த்திக்கிடம் கொடுத்து, “தேங்க்ஸ்டா” என்றான்.

கார்த்திக் ஏதும் சொல்லாமல் ஏற, ரோஹித் அவனருகே முன்னே அமர்ந்து கொண்டான். யுக்தா பின்னே அமர்ந்து கொண்டாள்.