நீ நான் 12

மாமா, “எல்லாரும் என்ன செய்றீங்க ? இத்தனை பேர் இருந்தும் தனியா இருக்குற மாதிரி இருக்குன்னு அழுறா? நம்ம சுவா அழுறாளா?” என நேகன் குரலில் வேதனை தெரிந்தது.

நேகா, “சுவாக்கு விக்ரமை மாமாவை உடனே மேரேஜ் பண்ணிக்க நினைக்கிறா?” ஆனால் அவர் ஒத்துக்கலை. வீட்ல எல்லாரும் அவர்கிட்ட பேசியும் கேட்க மாட்டேங்கிறார். ஆனால் சுவாவை காதலிக்கிறேன்னு சொல்றாரு..

அன்னம் ஆன்ட்டியெல்லாம் அவரிடம் பேசாமல் இருந்தும் பார்த்துட்டார். அவர் அவர் பிடியிலே நிற்கிறார். அதிலிருந்து தான் இருவருக்கும் இடையே இடைவெளி வந்து விட்டது. ஆனால் இவங்க காதல் மட்டும் செய்றாங்க.

நம்ம ரகா, ராஜா மேரேஜ்ல்ல கூட சுவாதி அமைதியாக தான் இருந்தா. தாத்தா சொல்லியுமே அவர் கேட்கலை என்றான் வருத்தமாக திலீப்.

இருவரும் பேசுறதில்லைன்னு எல்லாருக்கும் தெரியும். அவங்க காதலிக்கும் போது இருந்ததற்கு மொத்தமாக மாறிட்டாங்க. யாரும் இதுக்கு மேல ஃபோர்ஸ் பண்ண வேண்டாம்ன்னு விட்டுட்டோம்.

“விட்டுட்டீங்களா?”

ஆமா, அவர் சொல்ல ஏதோ காரணம் இருக்கு.

“என்ன காரணம்? அப்புறம் எதுக்கு காதலித்தார்?” என கோபமாக நேகன் திலீப்பை பார்த்தான்.

யாரும் ஏதும் செய்ய வேண்டாம். இதை நானே பார்த்துக்கிறேன். நம்ம சுவாவை பழைய மாதிரி மாத்தி காட்டுறேன்.

முடிந்தால் செய். ஆனால் நேகா, “நீ இன்னும் சுவாவை காதலிக்கிறியா?”

இல்லை..இல்லை..இவங்க காதல் ஆரம்பித்த பின் தான் என் காதல் மண்ணுக்குள் போய் விட்டதே! அதை எப்படி தோண்டி எடுப்பது? முடியாத காரியம்..

ஆனால் அந்த காதலை வைத்து தான் நான் என் ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறேன்றேன். விக்ரமே நம்ம சுவாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்வாரு.

“என்ன பண்ணப் போற?” திலீப் கேட்டான்.

“வெயிட் அன்ட் வாட்ச்” என புன்னகைத்தான் நேகன்.

வாவ்..சூப்பர்..வக்கீல் சார் நீங்களும் விக்ரம் சார் காதலிக்கிற பொண்ணை காதலிக்கிறீங்களா? ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. இப்ப நீங்க உங்க காதல் இருக்குன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா? புரியலையே? என்ன செய்யப் போறீங்க? என்னோட உதவி வேணும்ன்னா சொல்லுங்க நானும் கெல்ப் பண்றேன்.

“ஆனால் எனக்கொரு சந்தேகம்? இப்ப நாம விக்ரம் சாரோட அந்த பொண்ணை சேர்த்து வைக்கணுமா? உங்க பக்கம் வர வைக்கணுமா?” என புருவத்தை சுருக்கி தீவிரமாக அப்சரா யோசனையுடன் கேட்டாள்.

நேகனும் சிந்தனையுடன் அவளை பார்க்க, ஹலோ சார்..உங்ககிட்ட தான் கேட்டேன்? என அப்சரா கையை அவன் முன் ஆட்டினாள்.

ம்ம்..நானே பார்த்துக்கிறேன். அப்சரஸ் நீங்க உங்க பேரண்ட்ஸோட பாதுகாப்பா இருங்க. அது போதும் என்றான்.

ஓய்..நான் இருப்பேன். “நீங்க சொல்லுங்க?” என கேள்வியுடன் அவனை பார்த்தாள் அப்சரா.

எனக்கு சுவாவை மாமா பொண்ணாக பிடிக்கும். காதலித்தேன். ஆனால் இப்பொழுது அதுக்கான ஐடியா இல்லை பட் நான் சுவாதி விக்ரமை சேர்க்க எனக்கு அவள் மீதிருக்கும் பாசத்தை காதல் போல விக்ரம் அண்ணா முன் நடிக்கப் போகிறேன். எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் யோசனையா இருக்கு என நேகன் அப்சராவையும் திலீப்பையும் பார்த்தான். அப்சராவின் பெற்றோரும் அவனை தான் பார்த்தனர்.

சார், தொடங்கத்தில் மெதுவாக போங்க. நாம அடிக்கிற அடியில விக்ரம் சார் சரண்டர் ஆகணும் அப்சரா சொல்ல, “என்னம்மா?” என அவள் அப்பா கேட்க, நோ..டாட் சும்மா..ஐடியா தான் என்று அப்சரா அவள் அப்பாவை பார்த்து சிரித்தாள். அவர் தன் மகளை பாசமாக முறைத்தார்.

“எதுக்கு டாட் முறைக்கிறீங்க?” நான் படிக்கும் போது எத்தனை பேரை சேர்த்து வைச்சிருக்கேன்னு நீங்க தான் வக்கீல் சாருக்கு எடுத்து சொல்லணும். அப்ப தான என்னையும் பார்ட்னராக சேர்த்துப்பார் என்றாள்.

“பார்ட்னரா?” என திலீப் வாயை பிளந்து நேகனை பார்க்க, அவள் அப்பா வேகமாக அவளருகே வந்து அவள் காதை பிடித்து திருகினார்.

டாட்..விடுங்க..ஷ்..ஆ..வலிக்குது. மாம்..மாம்..காப்பாத்து..என கத்தினாள்.

பிள்ளைய விடுங்க. அந்த பையனுக்கு உதவ தான பார்ட்னரா இருக்க சொல்லி கேட்டாள். அதுக்காகவா பிள்ளை காதை திருகுவீங்க? காது செவந்து போச்சு..வலிக்குதா சரா என அவளது தாய் தன் கணவனின் கையை தட்டி விட்டு அவள் காதை வருடினார்.

கல்யாண வயசு வந்த பிள்ளைய இப்படியே கொஞ்சிட்டு இருந்த போற இடத்துல்ல இவ கொட்டு வாங்குறதும் இல்லாமல் நமக்கும் பிரச்சனையை இழுத்து விட்ருவா என்ற அப்சராவின் தந்தை நேகன் அருகே வந்து அமர்ந்தார்.

இவ பேச்ச கேட்காதீங்கப்பா. லவ்வ சேர்த்து வக்கிறேன்னு என்னையும் சேர்த்து ஓட விட்டுட்டா என அவர் தலையில் அடிக்க திலீப்பும் நேகனும் அப்சராவை பார்த்து சிரித்தனர்.

ஹேய், உங்களுக்கு மரியாதை வேணும்ன்னா சிரிக்கிறத நிறுத்துங்கடா என அப்சரா கோபமாக கூறினாள்.

சரி சரி என சிரிப்பை அடக்கிய நேகன், அங்கிள் உங்க பொண்ணு சின்னப்பிள்ளை தனமா பேசினாலும் அவங்க பிரசன்ஸ் ஆஃப் மைன்டு நல்லா இருக்கு.

எங்களை பிடித்தவன் கேட்டது போல் உண்மையான பென்டிரைவ்வை கொடுக்காமல் போலி பென்டிரைவ்வை கொடுத்து அவனை ஏமாற்றி எனக்கு உதவி இருக்காங்க. எனக்கு உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக கூப்பிடுறேன் என அப்சராவிடம் கூற, அவள் காலரை தூக்கி விட்டு அவளது தந்தையை பார்த்தாள்.

அவர் அவளை முறைக்க, ஆமா சார், உங்க பொண்ணுக்கு தைரியமும் அதிகம் தான் இல்லைன்னா உங்களது எதிராளி இடத்திற்கே சென்று அவர்களை பிடிக்க முடியுமா? அதே போல் உங்க மேல பாசமும் அதிகம். உயிர் போகும் நிலையில் கூட உங்களுக்காக அந்த பென்டிரைவ்வை விடவில்லை என திலீப்பும் அவளை பாராட்டினான்.

அப்சராவை பார்த்து திலீப், “உங்களுக்கு எதுக்கு மகிழனை பிடித்தது?” எனக் கேட்க, “வாட்?” என நேகன் அவளை பார்த்தான்.

“ஏற்கனவே சொன்னேன்னே!” என அப்சரா திலீப்பை பார்த்தாள்.

“சுருதிக்கும் மகிழுக்கும் பிரச்சனை வரக் கூடாதுன்னு பொய் தான சொன்னீங்க?” என திலீப் கேட்க, அவள் அப்பாவோ யாருமா அது? எனக் கேட்டார். பதில் வந்தது அப்சராவின் அன்னையிடமிருந்து.

மகிழன் படிப்பு, அவனது குடும்பம், வேலை என சொல்லிய அப்சராவின் அன்னை அந்த போலீஸ்காரவங்களோட போனார்ல்ல அவர் தான் என்றாள்.

என்னம்மா இது? எனக்கு மட்டும் எதுவுமே நீ சொல்லலை. உனக்கு அந்த பையனை பிடிச்சிருக்கா? அப்சராவின் தந்தை கேட்க, நோ..டாட். எனக்கு கிரஷ் மட்டும் தான். லவ் இல்லை. சுருதி அவன் வாழ்க்கையில் இல்லைன்னா நான் கன்சிடர் செய்திருப்பேன். எல்லா பொண்ணுகளுக்கு தனக்கானவன் இப்படி தான் இருக்கணும்ன்னு ஆசை இருக்கும். எனக்கானவனுக்கான ஒரு உதாரணம் மகிழன். அவ்வளவு தான்.

“உதாரணமா?” திலீப் கேட்க, ம்ம்..எனக்கு இது மட்டுமல்ல. மகிழன் பற்றி அம்மாவிடம் சொல்லாத விசயங்களும் இருக்கு. இரண்டு வருசத்துக்கு முன்னாடி அவனோட பெற்றோர் இறந்த பின் அவன் அக்காவுக்காக அவன் மனதில் இருக்கும் கஷ்டத்தை மறைத்து அவங்க திருமணத்தின் போது சந்தோசமாக இருந்தது போல நடித்தான்.

என்ன தான் பெரியம்மா, பெரியப்பா சொன்னாலும் கேட்காமல் இதுவரை அவன் சம்பளப்பணம் முழுவதும் அவன் அக்காவின் புகுந்த வீட்டிற்கு செய்யவென சேர்த்து வைத்தது. காதலிக்கும் பொண்ணிடம் கூட சரியாக பணம் செட்டில் செய்தது என அனைத்தும் தெரியும்.

எனக்கு அவன் கஷ்டத்தை மறைத்து மத்தவங்களுக்காக வாழும் அவன் மனசு ரொம்ப பிடித்தது. அக்கா மீது உள்ள பாசமும், இப்பொழுது கூட நான் அவனை சுற்றி வந்ததால் எங்கே சுருதி தப்பா எடுத்துக்கப் போறான்னு உங்களோட அவளையும் அழைச்சிட்டு வந்து பேசினானே அது கூட பிடிச்சிருக்கு.

என்னோட டாட் எனக்கு எப்படி ஹூரோவோ அது போல தான் அவன் தெரிந்தான். சண்டை போடுறவன் மட்டும் ஹூரோவாக மாட்டான். உண்மையான பாசம் இருக்கிறவனும் ஹூரோ தான்.

“ஆர் யூ கரெட்க் டாட்?” என அப்சரா அவள் தந்தையின் கழுத்தை கட்டிக் கொண்டாள். அவர் கண்கள் கலங்கியது.

அப்சும்மா..அவர் அழைக்க, டாட் எனக்கு தெரியும். ஒரு முறை என் மீதுள்ள கோபத்தில் இந்த ஹாஸ்பிட்டல் விசயத்தை உங்களை அறியாமலே சொல்லீட்டீங்க. அதன் பின் உங்கள் பின் வந்து உங்களது கஷ்டத்தை தெரிசுக்கிட்டேன்.

டாட், நான் டாக்டருக்கு படித்தது உங்களை போல சேவை செய்ய அல்ல. என் அப்பாவின் உயிரான இந்த ஹாஸ்பிட்டலை மீட்டுக் கொடுக்க தான். இது நான் இப்பொழுது எண்ணிய விசயமில்லை. முடிவு செய்து தான் உள்ளே வந்தேன். என்னுடைய கனவே இது தான். இது உங்களோட உழைப்பு டாட். அதெப்படி அடுத்தவன் திருடுவான். ஆனால் இவங்க எல்லாரும் உதவுவாங்கன்னு நான் எதிர்பார்க்கலை. “நாளை நம் வெற்றி தான்” என் கனவை நினவாகும் என்றாள்.

எல்லாரும் தன் தந்தை மீது அப்சரா வைத்துள்ள அன்பை பார்த்து பூரித்து போனார்கள். சிம்மா கை தட்டி புன்னகையுடன் உள்ளே வந்தான்.

சூப்பர்ம்மா..உன்னை மாதிரி கனவு எனக்கு கூட இல்லை என்றான் சிம்மா.

சார், “கிண்டல் பண்றீங்களா?”

இல்லம்மா. மனசு நிறைவா சொல்றேன். நாளை உன் கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்று சிம்மா சொல்ல, மகிழன் அவளை வியந்து பார்த்துக் கொண்டே வந்தான். விக்ரமும் அவளை ஆர்வமுடன் பார்த்தான்.

சாரி அப்சரா, நீ என்னை பின் தொடருரன்னு திட்டி இருக்கேன் என மகிழன் சொல்ல, நோ..பிராபிளம் மகிழ்..சுருதி..ஹாப்பியா? என அவள் கேட்க, மகிழன் புன்னகைத்தான்.

நான் உன்னை லவ் பண்ணல. முதல்ல உன்னோட ஆள் கிட்ட சொல்லிடு என்று திலீப்பை பார்த்து நினைவு வந்தவளாக..அய்யய்யோ மறந்தே போயிட்டேன். அந்த பொண்ணு..அதான் உங்களை கட்டுப்பிடிச்சு அழுதால்ல அந்த பொண்ணு என திலீப்பை பார்த்து, அவளை ஏற்கனவே இந்த லூசு சனாவோட பார்த்திருக்கேன் என்றாள்.

“வாட்?” என அனைவரும் அதிர்ந்தனர்.

என்ன பிரச்சனைன்னு தெரியல. முதல்ல அமைதியா இருந்த அந்த பொண்ணு சனாவை அடி வெளுத்துட்டா. எதுக்குன்னு தெரியாது..பட் ஏதோ பிராபிளம். அந்த பொண்ணு நல்லா தான இருக்கா? சனா கேட்க, ஆமா..சுவா பிரச்சனைன்னு தான சொன்னா? நேகன் கேட்டான்.

மாமா, உன்னோட ஆளு தான? நேகன் கேட்க, ஆமா..இருவரும் ஏற்கனவே மீட் பண்ணி இருக்காங்களா? என சிம்மா விக்ரமை திலீப் பார்த்தான்.

எங்களிடமும் அவள் சொல்லலை.

“எனக்கு தெரியாம நீங்களும் ரம்யா கூட கான்டாக்ட்ல தான இருந்தீங்க?” திலீப் கோபமாக கேட்டாள்.

பாருடா இவரை? அவ எங்களுக்கு தங்கை. நாங்க கான்டக்ட்ல்ல இல்லாம..மிரட்டுறீங்களா? இருங்க இப்பவே கால் பண்றேன் என சிம்மா திலீப்பை மிரட்ட, அண்ணா..விசயம் சீரியஸ் மாதிரி இருக்கு. விளையாடும் நேரமில்லை விக்ரம் சொல்ல, கால் பண்ணுங்க மாப்பிள்ள சார் என்றான் மகிழன்.

திலீப் சிந்தனையுடன் அலைபேசியை எடுக்க ரம்யாவே கால் செய்தாள்.

திலீப் அருகே வந்த அப்சரா அவன் அழைப்பை ஏற்கும் முன் அதை பிடுங்கி, இந்த விசயத்தை பற்றி அவளிடம் கேட்காதீங்க? அவ சொல்லணும்ன்னா ஏற்கனவே சொல்லி இருப்பா. அவ சொல்லலைன்னா ஏதோ கண்டிப்பா இருக்கு.

முதல்ல அந்த சனாவையும் அவளோட தந்தையையும் வெளிய வராத அளவிற்கு உள்ள பிடிச்சு போடணும். பின் நடந்த எல்லாமே நமக்கு தெரிய வரும்.

“அந்த சனா சொல்லுவான்னு நினைக்கிறியா?” திலீப் கேட்க, கண்டிப்பா அவ சொல்ல மாட்டா. அவங்கள பிடிச்சிட்டா அவங்க பொருட்கள் எல்லாம் போலீஸ் கஸ்டடிக்கு போயிடும். எல்லாம் தானாக நம்ம கைக்கு வரும். அப்பொழுது விசயத்தை தெரிஞ்சுக்கலாம். நாமாக இப்ப கேட்டா அவள் மேலும் கஷ்டப்பட வாய்ப்பிருக்கு என்ற அப்சரா, கண்டிப்பா அந்த சனா உங்கள பத்தி தான் ஏதோ பேசி இருக்கான்னு எனக்கு தோணுது என்றாள்.

“என்னை பற்றியா?” திலீப் கேட்க, ஆமா..சனாவை அவள் அடிக்கும் போது உங்களோட பெயரும் அடிபட்டது. ஆனால் என்னவென்று தெரியலை. “உங்களை அந்த பொண்ணுக்கு ரொம்ப பிடிக்குமோ?” திலீப்பிடம் அப்சரா கேட்டாள்.

அது..அது..என திலீப் சிந்திக்க, பிடிக்காமல் தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாளாக்கோம் என மகிழன் கேட்க, ஆமா..பிடிச்சதால தான் இந்த மாதிரி சாக்லெட் தண்டனை இல்லைன்னா அந்த பொண்ணு உங்களை கண்டுக்காமல் போயிருப்பா என அப்சராவும் கூறினாள்.

அலைபேசி சத்தம் நின்று மீண்டும் ஒலித்தது.

அண்ணா, சீக்கிரம் அலைபேசியை எடுங்க இல்ல காய்ச்சி எடுக்கப் போறா என்று மகிழன் சொல்ல, திலீப் அலைபேசியை எடுத்தான். அனைவரும் ஆர்வமாக அவனை பார்த்தனர்.

ஹலோ..திலீப் சொல்ல, அந்த பக்கம் பயங்கர அமைதி.

ரம்யா..திலீப் அழைக்க, திலீப்..நீங்க அந்த சனா விசயமா போயிருக்கீங்களா? வேண்டாம் வந்துருங்களேன் என்றாள் ரம்யா.

“எதுக்கு வரணும்?” எங்ககிட்ட ஆதாரம் இருக்கு. அதை வச்சி அவங்கள பிடிக்கலாம் என்றாள்.

“பிடிக்கப் போறீங்களா?” என ரம்யா பதட்டமாக, வேண்டாம் திலீப். அவங்க என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். விட்ருங்களேன்.

ரம்யா, “நீயா பேசுற?” அவங்க இந்த ஹாஸ்பிட்டல்லயே ஏமாத்தி ஒருவரிடமிருந்து பிடுங்கி இருக்காங்க.

தெரியும் திலீப். நீங்க மட்டும் இதில் சம்பந்தப்பட வேண்டாம். ப்ளீஸ் வந்துருங்களேன்..

“என்னாச்சு ரம்யா? சனா ஏதும் மிரட்டுறாளா?” என திலீப் கேட்க, கொஞ்சம் தள்ளி ஏதோ சத்தம் கேட்டது.

ஏய், “வெளிய வாடி” என சத்தம் கேட்டு அலைபேசியுடன் எட்டிப் பார்த்தாள் ரம்யா. திலீப் நான் அப்புறம் கால் பண்றேன் என வைத்த ரம்யா வெளியே சென்றாள்.

“இங்க வந்து என்ன செய்ற?” விகாஸ் சத்தமிட, சனா அங்கே நின்றாள். அவள் ரம்யாவை பார்த்து வேகமாக அவளை நெருங்கி ரம்யாவை சுவற்றில் சாய்த்து அவளது கழுத்தை ஆக்ரோசமாக பிடித்து துக்க, அனைவரும் துடித்து அவளிடம் சென்றார்கள்.

தமிழ், ரகசியன், ராஜா சனாவை பிடித்து தடுக்க, “என்னடி சொன்ன? இனி திலீப்பை பார்க்க மாட்டேன் பேச மாட்டேன்னு தான சொன்ன? கல்யாணம் வரை போயிருட்டு இருக்கு?” சனா கத்தினாள்.

ஏய், “என்ன பேசுற”? மருது சத்தமிட, அவனை முறைத்து விட்டு சனா ரம்யாவை பார்த்து “மறந்துட்டியாடி?” அந்த வீடியோ என்னிடம் தான் இருக்கு. திலீப் இப்பவே இங்க வரணும் இல்ல நான் அந்த வீடியோவை ரிலீஸ் பண்ண சொல்லிடுவேன். அவனோட இருக்கும் எல்லாரும் வரணும் என கத்தினாள்.

“வீடியோவா? என்ன வீடியோ?” விகாஸ் அம்மா ரம்யாவை பார்க்க, அவள் பயத்துடன் அனைவரையும் பார்த்து பட்டென சனாவின் காலில் விழ, அவள் ரம்யாவை எட்டி உதைத்தாள். அனைவரும் கொதித்தே விட்டனர்.

“ரம்யா அவ கால்ல எதுக்கு விழுற?” என விகாஸ் ஓடி வந்து அவளை தூக்கினான். அவன் கையிலிருந்த அலைபேசி வாயிலாக அனைத்தையும் திலீப்பும் மற்றவர்களும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“ரம்யா அந்த சனா கால்ல விழுறாளா?” மகிழன் சினமுடன் கேட்க, நான் சொன்னேன்ல்ல ஏதோ பெரிய விசயம் போல அப்சராவும் சொன்னாள்.

“என்னம்மா வீடியோ?” தாத்தா அவளருகே வர, அவள் கோபத்தில் அவரிடம் கையை ஓங்க அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ரம்யா.

ஏய், “யாரு மேல கைய வைக்கப் பாக்குற? உன்னோட கால்ல விழுந்தா நான் கோழைன்னு நினைப்பாடி உனக்கு?” அன்று என்னிடம் வாங்கிய அடி பத்தலைன்னு நினைக்கிறேன். எங்க குடும்பத்து மேல கையை வைக்க உனக்கு எந்த அருகதையும் இல்லை.

விகாஸ் கையிலிருந்த கைக்கடிகாரத்தை பார்த்த ரம்யா, தலையை பிடித்து..மீண்டும் அவன் கையை இழுத்து பார்க்க, “ஏய் யார மிரட்டுற?” சனா கோபமாக கேட்டாள்.

ம்ம்..தெரியும்டி. உன்னை மாதிரி கேவலமான பிறவி இந்த குடும்பத்துல்ல வர முடியாது என ரம்யா பேச, “என்னடி எல்லாரும் உன்னை ஏத்துக்கிட்டாகன்னு திமிறா? உன்னை உயிரோட விட்டால் தான?” இரு முதல்ல அந்த வீடியோவை சோஷியல் மீடியால்ல போடுறேன். அப்புறம் உன்னை முடிக்கிறேன்.

அவனும் என்னை வேண்டாம் வேண்டாம்ன்னு என்ன திமிறா பேசுறான். அவனையும் சும்மா விட மாட்டேன் என அலைபேசியை சனா எடுக்க, ரம்யா சனா அலைபேசியை தட்டி விட்டாள். அது கீழே விழுந்து சிதறியது.

ரம்யா அலைபேசிக்கு அழைப்பு வர, இருவரும் தலையை பிடித்து சண்டை போட..சனா ரம்யா அலைபேசியை பறிக்க எண்ணினாள்.

சனாவை திலீப்பின் குடும்பத்தினர் சேர்ந்து பிடித்தனர். அவள் கன்னத்தில் அறை விட்டாள் துளசி. அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தாள்.

“சொல்லுடி? என்ன வீடியோ? எதை வச்சு ரம்யாவை மிரட்டுற?” அதிரடியாக அவளது கழுத்தை துளசி பிடிக்க, மருதுவும் அன்னமும் அவளை தடுத்தனர்.

ரம்யா அலைபேசியில் பேசி விட்டு நெஞ்சை பிடித்து நிம்மதியுடன் அமர்ந்து, “அண்ணி அவள விடுங்க” என்றாள் துளசியிடம்.

ரம்யா, அது என்ன வீடியோ? ரகசியன் அம்மாவும் திலீப் அம்மாவும் கேட்க, அது இனி தேவையில்லை அத்தை. அது இப்ப இல்லை என நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“என்னது? இல்லையா?” சனா அதிர, “ஆமாடி டுபுக்கு..என்ன திமிறிருந்தால் இப்படி வீடியோ தயார் செஞ்சிருப்ப? உனக்கு தான் எல்லாமே தெரியும்ன்னு நினைப்பாடி?”

எனக்கு தெரிந்த ஆளும் உன்னோட ஹாஸ்பிட்டல்.. ச்சே..ச்சே..அது உங்களுடையது இல்லைல்ல. இருக்காங்க. அவங்க மூலமாக உன் அப்பாவை பிடிச்சு வச்சு அவர் கழுத்தில் கத்தியை வைத்தோமோ..அவரு உன்னை விட கேடி போல. பயப்படவே இல்லை. அதான் லேசான கீறலை அவர் வயிற்றில் போட்டு அவரது மெயின்பாயிண்டில் கையை வைக்க முயன்றோமா? அவரே அவரது லேப், அலைபேசியில் இருந்த பாஸ்வேர்ட்டை சொல்லிட்டார்.

உன்னோட வீடியோஸ் எல்லாமே சுவாகாவாகிடுத்து என ரம்யா சனா அருகே வந்து, நீ பொண்ணாடி எனக்கு சந்தேகமா இருக்கு. “செக் பண்ணிடலாமா?” என கேட்டாள்.

ரம்யா, என்ன பேசுற? ரகசியன் கேட்க, மாமா..இவ பொண்ணே இல்லை. இவள் சிறுவயதில் ஆணாக பிறந்து பெண்ணாக வளர்க்கப்பட்டவள். “இன்டர்செக்ஸ் கேள்விபட்டிருக்கிறீங்களா?” இவர்களுக்கு பெண்ணுருப்பு, ஆணுருப்பு இரண்டும் இருக்கும்.

இவளுக்கு திலீப்பை பிடித்ததால் தான் இப்படி நடந்துக்கிறான்னு நினைச்சேன். ஆனால் இவள்..ஆமா உன்னை இவன்னு சொல்லணுமா? இவள்ன்னு சொல்லணுமா? என கேலியாக ரம்யா கேட்க, ஏய்..என்று சனா கத்தினாள்.

நீ உடல் தேவைக்காக மட்டுமல்லாமல் திலீப்பை வைத்து உடலுறுப்புகளை திருடவும் முயன்றிருக்கிறாள். என்ன செய்து இவளாலும் இவள் தந்தையாலும் இதற்கு மேல் வேற ஹாஸ்பிட்டலை தொடங்க முடியலை. காரணம் திலீப்.

அவர் நேர்மையான வழியில் செல்பவர். அதான் காதல் என்ற போர்வையில் அவரை கவிழ்க்க பார்த்தாள். அது முடியவில்லை என்றவுடன் என்று ரம்யா நிறுத்தி சனாவை அடித்தாள்.

“சொல்லு? அந்த வீடியோவை சொல்லு?” சனா கேட்க, ரம்யா தயங்கி திலீப் பெற்றோரை பார்த்தாள்.

ஆன்ட்டி..இவ திலீப்..என சொல்ல முடியாமல் ரம்யா திரும்பி நின்றாள்.

ரம்யாவின் அலைபேசியை எடுத்த விகாஸ் கடைசி அழைப்பை ஏற்று விசாரிக்க, திலீப்பை ஆடையில்லாமல் இருப்பது போன்ற வீடியோவை இவள் எடுத்ததை பற்றி அழைப்பில் இருந்தவன் கூற, அனைவரும் பதறிப் போனார்கள்.

திலீப் அதிர்ந்து அலைபேசியை கீழே விட்டான்.

திலீப் பெற்றோர் செய்வதறியாது கண்ணீருடன் அமர, அனைவரும் அவர்களை தேற்றினார்கள். அனைவரையும் விலக்கி வந்த ரம்யா, அவன் பெற்றோருக்கு இடையே அமர்ந்து, “எதுக்கு அத்தை மாமா இப்ப வருத்தப்படுறீங்க?” அதான் எந்த வீடியோவும் இப்பொழுது இல்லை. இனி இவளை பிடிச்சி இங்கேயே கட்டிப் போடுங்க. காலையில முதல் வேலையாக இவளை நாம சென்னைக்கு அழைச்சிட்டு போகணும் என்றாள் ரம்யா.

திலீப் அம்மா அழ, அத்த..இப்ப ஒரு பிரச்சனையும் இல்லை ரம்யா சொல்ல, சனா சிரித்தாள்.

ஏய், அழிந்த வீடியோக்களை எடுப்பது இப்பொழுதெல்லாம் ரொம்ப சாதாரணம் என சனா மேலும் சிரிக்க, ரம்யாவும் சிரித்தாள்.

மேடம், “அதை எடுக்க இங்கிருந்து போனால் தான முடியும்?” ஏற்கனவே உங்க ஆளுங்க எல்லாரும் காலி. இப்ப நீயும் உன் அப்பாவும் “த்துத்து” என பாவமாக சொன்ன ரம்யாவை சனா முறைத்து, “உன்னை விட மாட்டேன்டி” எனக் கத்தினாள்.

புகழேந்தியின் ஆட்கள் அவளை கட்டிப் போட்டு காவலுக்கு அமர, அனைவரும் உள்ளே சென்றனர்.

திலீப்பை சமாதானப்படுத்திய சிம்மா, விக்ரம் நேகனை பார்க்க, கண்டிப்பாக இருவரும் எக்காலத்திலும் வெளியே வர முடியாது. அவள் பேசிய அனைத்தும் அலைபேசியிலும் பதிவாகி இருக்கு. வெளிய வரவே முடியாது. மாமா..உன்னோட ஆளு செம்ம சூப்பர் என்றான் நேகன்.

“இவள் உங்களை காதலிக்காமல் இவ்வளவும் செய்வாளா?” என அப்சரா கேட்க, திலீப் புன்னகைத்தான்.

அஜய் வீட்டிற்கு வரும் முன்னே வினித்தும் ரோஹித்தும் வந்து விட்டனர். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்தான் அஜய்.

சண்டையில் அவனுக்கு காயம் ஏற்பட்டு லேசான இரத்தப்போக்குடன் வந்திருந்தான். முக்தா அவனை பார்த்து, அஜய் அண்ணா கையில இரத்தம் வருது என பதறினாள். அனைவரும் அவனை பார்க்க, அவன் பார்வை தியாவை அலசியது. அவள் அங்கே இல்லை.

முக்தாவின் சத்தத்தில் சமையலறையிலிருந்து ஏற்றி சொருகி இருந்த புடவையை இறக்கிக் கொண்டே தியா வெளியே வந்து அஜய்யை பார்த்தாள்.

அஜய் கையில் இரத்தத்தை பார்க்கவும் அவள் கண்கள் கலங்கியது. ஆனால் அவனருகே செல்ல அவளுக்கு பயமா இருந்தது. அனைவரும் அவனை சூழ்ந்து இருக்க, கண்ணம்மா தியா கையில் மருந்தை கொடுத்தார்.

அனைவரும் இருக்கும் தைரியத்தில் அவனருகே சென்று அவனுக்கு மருந்திட்டு உணவுண்ண எடுத்து வைத்தாள்.

“எனக்கு பசிக்கலை” என அஜய் செல்ல முயல, “சாப்பிடாம எங்க போற?” என முக்தா அவனை மறித்து அமர வைத்தாள். அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான் அஜய்.

தியா எடுத்து வைக்க உணவை முடித்து விட்டு அறைக்கு சென்றான். ரதுவோ அறையில் சமத்தாக தூங்கிக் கொண்டிருந்தது. குளித்து வந்த அஜய் தன் மகள் அருகே படுத்து கண்ணுறங்கினான். சமையலறையில் கண்ணம்மாவிற்கு உதவிய பின் தங்கள் அறைக்கு மனதில் பயத்துடன் உள்ளே நுழைந்தாள் தியா.

வீட்டில் அனைவரும் உணவை முடித்து சென்ற பின் அறையிலிருந்து வெளியே வந்த வினித் முக்தா தனியறையில் தங்குவதை தெரிந்து அவளிடம் இன்று பேச வேண்டும் என அவளறை அருகே சென்று கதவை தட்ட யோசித்துக் கொண்டு நின்றிருந்தான்.

பின் தான் அறைக்கதவு திறந்திருப்பதை பார்த்து, சுற்றும் முற்றும் பார்த்து யாருமில்லை என்றவுடன் உள்ளே நுழைந்து கதவை தாழிட்டான்.

கதவு தாழிடும் அரவம் கேட்டு முக்தா படுக்கையிலிருந்து நிமிர்ந்து வினித்தை பார்த்து அதிர்ந்து கையிலிருந்த நோட்டை தலையணைக்கு அடியில் போட்டாள். வினித் அதனை கவனித்து விட்டான்.

ஹேய், “என்ன வச்சிருந்த?” வினித் முக்தா அருகே வந்தான்.

“இங்க எதுக்கு வந்தீங்க?” யாராவது பார்த்தால் தவறாக எண்ணப் போறாங்க. போங்க என சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

“யார் என்ன நினைத்தால் எனக்கென்ன? எதை மறைச்சு வச்ச?” அதை காட்டு வினித் தலையணையை நெருங்கினாள்.

முக்தா அதன் மேலே சாய்ந்து கொண்டு,

வராதீங்க..வராதீங்க..என கையை நீட்டினாள். அவளை லேசாக நகர்த்தி அந்த நோட்டை அவன் எடுத்து விட்டான். அதை பிடுங்க முக்தா அவனருகே வந்தாள்.

வினித் ஒரே கையால் அவளை பிடித்து மடக்க, அவளோ அவனை தள்ளுகிறேன் என தள்ளி இருவரும் படுக்கையில் சரிந்தனர். முக்தா தன் அழகான நீலவிழிகளை விரித்து வினித்தை பார்த்தாள்.

அவன் புன்னகையுடன் அவளை நகர விடாது படுக்கையில் லாக் செய்து, நோட்டை திறந்து பார்த்து வாவ்..அழகா வரைஞ்சிருக்க என அவளை விடாமல்..”என்ன இது?” என அவளிடம் நோட்டை காட்ட, முக்தா பேச முடியாமல் திணறினாள்.

ம்ம்..”சொல்லு? என்னை இவ்வளவு தத்ரூபமா வரைஞ்சு வச்சிருக்க? ஆனால் இது நாம பழகியது போல வரைந்த படம் இல்லையே!” என அவளது விழிகளை ஊடுருவினான்.

வந்து..நான்..இங்க வந்த பின் தான் வரைந்தேன். நீங்க கொஞ்சம் நகர்ந்தீங்கன்னா நல்லா இருக்கும் என அவள் சொல்ல, “ஏன் உன்னை நான் டிஸ்டர்ப் பண்றேனா?” எனக் கேட்டான் வினித்.

ஹம், இல்லையே! நான் சும்மா தான் வரைந்தேன் என முக்தா சொல்ல, “ஓ..அப்படியா? உனக்கு ஒரு விசயம் சொல்லவா?” உன் அண்ணன் ரோஹித் என்னிடம் ஒன்று கேட்டான். நான் உன்னிடம் கேட்க தான் வந்தேன் என்றான்.

“என்ன?” அவள் கேட்க, உன்னோட அக்கா யுகியை நான் கல்யாணம் பண்ணிக்கணுமாம். கேட்டான்..”என்ன சொல்லலாம் முகி?” என வினித் கேட்க, அவள் முகம் வாடியது.

ம்ம்..”விருப்பமிருந்தால் கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே! என்னிடம் எதற்கு கேட்கணும்?” முக்தா முகத்தை திருப்பினாள். அவளது செல்லமான முகத்திருப்பத்தை ரசித்த வினித், ஆனால் எனக்கு யுகியை அந்த எண்ணத்தில் பார்க்க முடியாது. நமக்கு பிடிக்கிறவங்கல்ல விட நம்மை பிடிப்பவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை அமோகமா இருக்குமாம் என்றான்.

அவள் அவனை பார்க்காது அமைதியாக இருக்க, வினித் முக்தா முகத்தை திருப்பி அவனை பார்க்க வைத்தான். அவள் இதயத்துடிப்பு வினித்தை அடைந்தது.

இல்லை. என்னை ஒரு பொண்ணுக்கு பிடிச்சிருக்காம். கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டா நான் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன். அவ கேட்டு நிறைய வருடங்கள் ஆயிற்று..என சொல்ல, முக்தா கண்கலங்க, “உங்களோட படிச்ச ராகவியா?” எனக் கேட்டாள்.

வினித் புன்னகையுடன் “இல்லை” என தலையசைத்தான்.

தியா அண்ணி அஜய் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. வேற யாரு ஜெனியா? என அவள் கேட்க, அஜய் புன்னகைத்தவாறு..நீ ரொம்ப யோசிக்கிற என்றான்.

சரி, நீங்க யார வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க. இப்ப கிளம்புங்க.

எப்ப என்னை பார்த்தாலும் “வினு” என ஓடி வந்து என் கையை பிடித்துக் கொள்ளும் என் அழகு குட்டிம்மா. “இந்த முறை என் அருகே வர கூட எதுக்கு பயப்படுறா?” எனக் கேட்டான்.

நான்..சின்னப் பொண்ணில்லை. நான் உங்களை பார்த்த போது எங்க உறவினர் அனைவரும் இருந்தாங்க என அவனை பார்த்து, “என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள்.

“நான் என்ன சொன்னேன்?” என அவளிடமிருந்து நகர்ந்து அவளது படுக்கையில் ஒய்யாரமாக படுத்து இரு கைகளையும் தலைக்கு பின் கட்டியவாறு கண்களை மூடினான்.

“ஏதோ சொன்னீங்க?” முக்தா கேட்க, கண்களை திறந்து அவளை இழுத்து அவன் மேல் போட்டுக் கொண்டு, தியா என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லீட்டா. அதனால என் அழகு குட்டிம்மா என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? எனக் கேட்க, அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் முக்தா. அவள் கண்ணிலிருந்து மணிகள் உருண்டோடியது.

அவளது கண்ணீரை சுட்டி விட்ட வினித், அவளிடம் முகி “ஐ லவ் யூ” என்றான். முக்தா அவன் மார்பில் ஒண்டிக் கொண்டு அழுதாள்.

“எதுக்குடா அழுற?” உன்னோட காதல் எனக்கு வருடங்கள் கழிந்து தற்பொழுது தான் தெரியும். சாரிடா..என்றான்.

அவனை நிமிர்ந்து பார்த்து, அம்மா, அப்பா யுகி காதலையே ஏத்துக்கலை. உங்களை ஏத்துக்க மாட்டாங்களே! முக்தா வருத்தமுடன் கூற, அவள் நெற்றியில் இதழ் பதித்து, அவங்க ஒத்துக்கிட்டாங்க. உன்னோட பாட்டியும் ஒத்துக்கிட்டாங்க என்றான்.

“என்ன?” என வினித்தை அவள் பார்க்க, ம்ம்..உன்னோட பாட்டிக்கு உன்னோட காதல் முன்னாடியே தெரிஞ்சிருக்கு. இது போல நிறைய வரைந்து வச்சிருக்க போல என சிரித்தான்.

“பாட்டி பார்த்துட்டாங்களா?” ஆனால் என்னிடம் கேட்கலை. “அம்மா, அப்பா எப்படி ஒத்துகிட்டாங்க?”

யுகி மாதிரி நீ கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சிருக்கலாம். ஆனால் பாட்டி என்னிடம் முதல்ல விசயத்தை சொல்லலை. உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தான் கேட்டாங்க. ஆனால் நீ என்னிடம் காட்டிய ஒதுக்கம் தான் எனக்கு சந்தேகமானது. அவங்களிடம் பேசினேன். உன் காதலை சொன்னாங்க.

“நிஜமா தான் சொல்றீங்களா?” முக்தா கேட்க, ம்ம்..என்றான்.

“கார்த்திக் மாமா மாதிரி மாறிடுவீங்களா?” என முக்தா கேட்க, வினித்திற்கு அவள் சந்தேகமாக கேட்டது போல தெரியலை. “சிறுவயதில் சாக்லெட் வாங்கித் தர மாட்டீயா?” என முக்தா கேட்டது நினைவில் வந்து சிரித்தான்.

கண்டிப்பாக இல்லை. எனக்கு நீ தான்..நீ மட்டும் தான் இனி நம் வாழ்வில் என்றான்.

சாரி மாமா..நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன். அக்காவோட ஊருக்கு போன பின் நான் நானாக இல்லை. அந்த வயதில் உங்க நினைவு அம்மா, அப்பாவை பிரிந்தது போல தான் இருந்தது. போக போக தான் அது காதல்ன்னு தெரிஞ்சது.

என்னோட நண்பர்களுக்கு கூட உங்களை பற்றி நான் ஏதும் சொல்லலை. ஆனால் நான் யாரையோ காதலிக்கிறேன்னு மட்டும் தெரியும். என்னால யாரிடமும் சொல்ல முடியல.

“சொல்லி என்ன தான் ஆகப் போகுது?” என் வாழ்வு டெல்லியில். நீங்க சென்னையில. நான் உங்களை சந்திப்பேன்னு நினைக்கவேயில்லை. இது கூட கனவு மாதிரி இருக்கு. “நிஜமா தான சொல்றீங்க? நாம கல்யாணம் பண்ணிப்போமா?” அவள் பாவமாக கேட்க, கண்டிப்பா..ஆனால் இப்ப இல்லை என அவளை பார்த்தான்.

“நான் உங்க கையை பிடிச்சுக்கவா?” முக்தா கேட்க, வினித் சிரித்துக் கொண்டு நாம எந்த நிலையில படுத்திருக்கோம். நீ கைய பிடிக்க கேட்குற என அவள் இதழ்களில் முத்தமிட்டான்.

மாமா, ப்ளீஸ்..”இதெல்லாம் இப்ப வேண்டாமா?” இங்க எதுவுமே சரியில்லை. என்னால தூங்கவே முடியல. முதல்ல யுகி, தியா அண்ணி பிரச்சனை முடியணும் என்றாள்.

“அய்யோ! என்னோட அழகு குட்டிம்மா எவ்வளவு பொறுப்பா மாறிட்டா?” வினித் வியந்து அவளை கேட்டவன் அவளது கால்களை பார்த்து, “காலையில அடிபடலைல்ல?”

“அப்ப கொஞ்சம் அடிபட்டால் பரவாயில்லையா?” முக்தா கேட்க, வினித் அவளை முறைத்தான்.

அவன் நெற்றி முட்டிய முக்தா, எனக்கு ஒன்றுமேயில்லை. உங்க அறைக்கு போங்க. “யாராவது ஏதாவது நினைச்சுப்பாங்க? உங்க அப்பாவுக்கு என்னை பிடிக்குமா?”

அவருக்கும் தெரியும். உன்னை எல்லாருக்கும் பிடிக்கும்டா என் அழகு குட்டிம்மா. நீ தூங்கு. “ஒரே ஒரு முறை மாமா சொல்லு?” வினித் ஆசையாக கேட்டான்.

போடா..மாமா என அவன் மீதே வெட்கமுடன் சாய்ந்தாள் முக்தா. அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து விட்டு வினித் அவனறைக்கு சென்றான்.