நீ நான் 11

“கார்த்திக்கின் புஜ்ஜி யாரு?” கார்த்திக் அம்மா என கேட்க, அனைவரும் கோரசாக, புஜ்ஜின்னா சொன்னான். “பாவி எல்லாத்தையும் மனசுலே வச்சிட்டு இருந்தானா?” விஜய் கோபமாக பேச, “தப்பு ஏதும் பண்ணீட்டானா?” என அவன் அம்மா பாவமாக கேட்டார்.

ஆமா ஆன்ட்டி..என இவர்களுக்குள் நடந்த அனைத்தையும் கூறி விட்டு, தயக்கமுடன் யுக்தாவின் திருமண வாழ்க்கையையும் அவள் இப்பொழுது இருக்கும் நிலை, நடத்தையையும் கூறினார்கள்.

பரவாயில்லையே! கல்லூரில்ல தான் காதலாக இருக்கும்ன்னு நினைச்சோம். ஆனால் பள்ளியிலேவா? அவன் அப்பா புன்னகைக்க, அவன் அம்மா முகமோ தொங்கிப் போனது.

“நாங்க கிளம்புகிறோம் அங்கிள்” என இதுக்கு மேல இங்க இருந்தால் எனக்கு கோபம் தான் வரும் என்ற விஜய் கார்த்தி அம்மாவின் பார்வையை அவன் அப்பாவிடம் காட்டி நகர்ந்தனர்.

“என்னம்மா? இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு தான பார்த்தோம்?” எத்தனை பொண்ணுங்கல்ல அவன் வேண்டாம்ன்னு சொன்னான். கொஞ்சம் அவனுக்காக யோசித்து பாரும்மா.

“நம்ம பிள்ளைய எப்படி இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொடுக்கிறது? அவனுக்கு குறை இருக்குன்னு பேச மாட்டாங்களா?” என கார்த்திக் அம்மா அழுதார்.

உனக்கு நம்ம பிள்ளை சந்தோசத்தை விட மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு பயப்படுற. புரியுது. இவன் காதலை கூட நம்ம கிட்ட மறைச்சு வச்சுருக்கான். இப்ப கூட அவனுக்கு அந்த பொண்ணை தான பிடிச்சிருக்கு.

இதுவரை குடிக்காத மகன் அந்த பொண்ணுக்கு நடந்ததை நினைத்து குடிச்சிருக்கான். “இது காதல் இல்லாமல் என்ன? இப்ப எப்படி பொண்ணு பார்க்க கூட்டிட்டு போறது?” அவன் அப்பா கேட்டார்.

காதல்ன்னா முன்னாடியே அவனுக்கு புரிஞ்சுருக்குமே! இது அவனால் என்று குற்றவுணர்ச்சியாக தான் இருக்கும். நீங்க அமைதியாக இருந்தாலே போதும். நாம பார்த்த பொண்ணை தான் நம்ம பையனுக்கு திருமணம் செய்து வைக்கணும். தேவையில்லாமல் எதையும் யோசிக்காதீங்க.

இப்ப காதல்ன்னு திருமணம் முடிந்த பின் வாழ்க்கை கலவரமாகிடும். அதை விட திருமணம் முடிந்து ஒரே நாளில் கணவனை பறி கொடுத்தப் பொண்ணு வேற. அவளால என் பிள்ளைக்கு ஏதும் ஆகிவிட்டால்..என வாயிலை பார்த்து நிறுத்தினார் கார்த்திக் அம்மா.

வினித்தை பார்த்து இருவரும் அதிர்ந்தனர்.

வினித், “வாப்பா” என கார்த்திக் அப்பா அழைக்க, சாரி அங்கிள்..இனி யுகி உங்க பையனை பார்க்க மாட்டாள். அது என்னோட பொறுப்பு.

ஏம்மா, “நீங்களும் பொண்ணு தான? அவளோட நிலையை யோசித்தீங்களா?” உங்க பையன் போனை எடுத்திருந்தால் இந்த அளவிற்கு அவள் வாழ்க்கையை தொலைச்சிருக்க மாட்டாள்.

“உங்களை சொல்லி என்ன?” அந்த பைத்தியக்காரியை தான் சொல்லணும். டெல்லி போனதிலிருந்து அவனையே நினைச்சிட்டு பார்க்காம பேசாம திருமணத்தின் கடைசி நிமிடம் கூட திருமணத்தை நிறுத்த வந்திர மாட்டானான்னு காத்திருந்திருக்கா..

வா..ரோஹித் போகலாம் என வினித் அவனை பார்க்க, இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ரோஹித் கண்ணீருடன் தலையை பிடித்திருந்தான்.

டேய், “நீ எதுக்குடா அழுற?”

மாமா, நான் அக்காவை முன்பே கவனித்து இருந்திருக்கலாம். ப்ரெண்ட்ஸ் கூட சுற்றி என் குடும்பத்தை பார்க்காமல் விட்டுட்டேன் என எழுந்து வினித்தை கட்டிக் கொண்டு அழுதான்.

அழாதடா, இனி தான் நம்ம யுகி வாழ்க்கை மொத்தமாக மாறப் போகுது. நாம மாத்துவோம்.

ஆனால் அக்கா..,

கஷ்டம் தான். திருமணத்தை ஏற்ற உன் அக்கா கண்டிப்பாக கார்த்திக்கை மறக்க வைப்போம். அதுக்கு அவளுக்கு தெரியாம யாராவது சாதாரணமாக பழக வைத்து கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்.

மா, அப்பா..

அவங்க கண்டிப்பா சம்மதிப்பாங்க. நம்ம சந்தோஷ் இருக்கான் டா ரோஹித். அவனுக்கு தம்பி மட்டும் தான். பிரச்சனை ஏதும் வராது. உனக்கு ஓ.கேவா? என வினித் கேட்டான்.

கார்த்திக்கின் அப்பா அதிர, அவன் அம்மாவுக்கு நிம்மதி பெருமூச்சு எழுந்தது.

“அவரா?” என கண்ணை துடைத்து விட்டு, பார்க்கலாம் என்றான்.

“தியாவை பார்க்க போகணும்” என இருவரும் கிளம்ப, ரோஹித் கார்த்திக் அம்மாவை பார்த்து, என்னோட அக்கா உங்க வீட்டுக்கு இப்ப இல்லை எப்பவுமே வர மாட்டா. நீங்களே அழைத்தாலும் இனி வர மாட்டா. நான் வர விட மாட்டேன் என சினமுடன் கூறி விட்டு சென்றான்.

தப்பு பண்ணீட்டம்மா. “நீ பேசியது உன் மகனுக்கு தெரிந்தால் என்ன செய்யப் போறானோ?” இதுல அந்த பொண்ணை சந்தோஷிற்கு கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா பேசுறாங்க.

அன்னக்காவடியெல்லாம் பெரியவங்க வீட்ல ஏத்துக்க மாட்டாங்க கார்த்திக் அம்மா சொல்ல, நீ தப்பா பேசுறம்மா. அந்த பையன் நம்ம மகனுக்கு செய்த உதவியை மறந்துட்டு பேசுற. நீ சரியில்லை.

கார்த்திக் முன் இது போல் பேசுன அவன் நம்மை விட்டே போயிடுவான் என அவர் சொல்ல, போவானா? இல்ல என் மகன் என்னை விட்டு போக மாட்டான் என கார்த்திக் அம்மா உறுதியாக பேச, அதை தன் மகன் உடைத்தால் அவர் என்ன செய்வார்? பார்க்கலாம்.

“ரோஹித்” வினித் அழைக்க, மாமா இவங்க வீட்ல இருந்தா என் அக்கா சந்தோசமா இருக்க மாட்டா. நீங்க சொன்ன மாதிரி சந்தோஷ் மாமா தான் சரியாக இருப்பார்.

இல்லடா வினித் பேச, வேண்டாம் மாமா. என் அக்காவுக்கு கார்த்திக் வேண்டாம் என ரோஹித் தெளிவாக கூறி விட்டான்.

தியாவை பார்த்துட்டு ஆபிஸ் போறேன். ஈவ்னிங் சந்தோஷ் மாமாவை பார்க்கணும். போகலாமா? என ரோஹித் வினித்தை பார்த்தான்.

“போகலாம்” என்ற வினித் மனதில் யுகியை மாற்ற சந்தோஷ் மட்டுமல்ல யாராலும் முடியாது. இவங்களுக்கு என் திட்டம் தான் சரியாக இருக்கும் என எண்ணினான்.

தியாவை பார்த்து திட்டிய வினித், “அஜய் வந்தானா?” எனக் கேட்டான்.

மாமா, அஜய் சார் மீட்டிங் போயிருக்கார். இரவு நேராக வீட்டிற்கு வருவார்.

அதான..தியா மீது அவனுக்கு அக்கறையே இல்லை. முதல்ல மாதிரி அவன் இல்லை என வினித் புலம்பிக் கொண்டே ரோஹித்தை அஜய் ஆபிஸில் விட்டு அவன் வேலையை கவனிக்க சென்று விட்டான்.

அல்லீநகரத்திலிருந்து கிளம்பிய அனைவரும் மாலை நேரம் சென்னை வந்து சேர்ந்தனர்.

சிம்மாவின் ஆள் மிளிரன் அவன் ஆட்களை வைத்து மினிஸ்டர் மகனை கடத்தி வந்தனர். சிம்மாவிற்கு தாத்தாவின் சமயோஜத சிந்தனை மிகவும் பிடித்தது. அவன் அதை தான் செய்யத் தொடங்கினான்.

அவ்வறை இருட்டில் குளித்திருக்க, மயங்கிய மினிஸ்டர் மகன் மீது போகஸ் லைட்டுடன் கட்டி வைக்கப்பட்டிருந்தான். “யாராவது இருக்கீங்களா?” என மயக்கம் தெளிந்து அவன் கத்தினான்.

இருக்கோம்..இருக்கோம்..என்ற ஆடியோ மட்டும் வந்தது.

“யாருடா அது?” தில்லிருந்தா முன்னாடி வாங்கடா என அவன் கத்த, நான் வந்துருவேன். என்னை பார்த்து பயந்து பொட்டுன்னு போயிட்டா என கனீரென குரல் வந்தது.

அவன் பயத்துடன்..”நீ யாரு? உனக்கு என்ன வேணும்?” எனக் கேட்டான்.

நான் சுரேகாவின் அண்ணன். உன்னால நாங்க எல்லாரும் அவமானத்தில் தூக்கு போட்டு செத்துட்டோம் என்றவுடன் அவனுக்கு அல்லு விட்டது.

“சுரேகாவா? யாரு?” அவன் கேட்க, “உன்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பொண்ணை கற்பழித்து கொன்றாயே?” குரல் கேட்டது.

“நீ செத்துட்டியா? பேயா நீ?”

ஆமா, “உன்னை சும்மா விட மாட்டேன்” என்றது குரல்.

நான் கொல்லலை. கொல்லலை. என் அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம். நான் அந்த பொண்ணை ஏதும் செய்யலை. அவள் என நினைத்து வேற பொண்ணை தெரியாம ரேப் செய்துட்டேன்.

நான் கொல்லலை. என்னை நம்பு. என்னை ஏதும் செஞ்சிறாத என அவன் அழ,  “எந்த பொண்ணுக்கு பதிலா வேற பொண்ணை கற்பழிச்ச?”

அது..அவ..அவ பேரு என சில நிமிடம் சிந்தித்து, ரம்யா..தேனீ மாவட்டம் அல்லீநகரப் பொண்ணு ரம்யா..என பயத்துடன் சொன்னான்.

டேய், நீ கற்பழித்தது என் தங்கை தான். உன்னை கொல்லாமல் விட மாட்டேன். “ஏன் செய்த? ஏன் செய்த? சொல்லு?” குரல் ஆக்ரோசமாக ஒலித்தது.

எனக்கு தெரியாது. நான் வேணும்ன்னே செய்யலை. ரம்யா பொண்ணு முன்னாடி வந்தா என் அப்பாவின் மவுசு குறைஞ்சிடும். அதனால தான் அப்பா சொல்ல, நான் செய்தேன். ஆனால் அது மாறிடுச்சு. எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

“என் தங்கையை கொலை யாரு செஞ்சாங்க?”

தெ..தெரியாது குரல் நடுக்கத்துடன் வந்தது.

“அந்த பொண்ணு ரம்யாவை எப்படி சம்மதிக்க வச்ச? பணம் கொடுத்தியா?”

இல்ல..இல்ல..நான் கற்பழித்த பொண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டினோம். அந்த ரம்யா பொண்ணு அவளாகவே இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டாள்.

என்னை மன்னிச்சிரு. நான் இனி இப்படி செய்ய மாட்டேன் என கதறினான்.

சத்தமில்லாது இருந்தது. அவ்வறையின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மொத்தமாக குறைந்து அவ்விடம் இருளானது.

அவனது கத்தல் அங்கே கேட்க, அனைத்தும் லைவ்வில் ஓடிக் கொண்டிருந்தது.

இருளில் சிம்மாவும் அவன் ஆட்களும் அவனை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தனர்.

இதை பார்த்த சுரேகா மனம் நிம்மதியடைந்தது. ரம்யாவும் மற்றவர்களும் இதை பார்த்து கமெண்ட்டை அள்ளிக் குவிக்க, அந்தோ பரிதாபம் மினிஸ்டருக்கு என்கொயரி நடந்தது. இதனால் அவர் பதவியும் பறி போனது. அவர் மகனின் மொத்த படிப்பிற்கான சான்றிதழும் போலியாகிப் போனதாக அறிவிக்கப்பட்டது. சுரேகாவின் வாழ்க்கையை போல பலமடங்கு நஷ்டமானது மினிஸ்டருக்கு.

“அந்த குரல் பேயா?” என பல குரல்கள் வினவ, இது அவர்களின் குற்றத்தை வெளிப்படுத்த போலீயாக ஏற்பாடு செய்யப்பட்ட குரல். ஆனால் நடந்த அனைத்தும் நிச்சயமான உண்மை என ஒரு ஐ. டியிலிருந்து வந்தது. அதுவும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஆன் இல் இருந்தது.

அதே நேரம் விக்ரம், திலீப், மகிழன் ஹாஸ்பிட்டல் வெளியே இருந்தனர். அப்சரா வரவும் அவளை அஜய், விஜய், சந்தோஷிடம் ஒப்படைத்து விட்டு, அவர்களின் திட்டத்தை செயல்படுத்த தயாரானார்கள்.

முதலில் மகிழன் எப்பொழுதும் மருத்துவமனை வருவது போல உள்ளே வந்தான். டீன்னை மீட் பண்ணனும் என அனுமதி கேட்டு நின்றான்.

சனாவும் அவள் அப்பாவும் ஹாஸ்பிட்டலில் சனா அறையில் இருந்தனர். அதை கேட்ட மகிழன் சரியான நேரம் என மாமா..உள்ள போங்க. அவர் இருக்க மாட்டார் என்றான்.

சரி என திலீப்பும் விக்ரமும் உள்ளே செல்ல, அப்சராவுடன் மற்றவர்கள் காரில் ஆதாரம் கிடைக்க காத்திருந்தனர்.

அந்நேரம் நேகன், சந்துரூவின் ஏற்பாட்டால் வந்த மெயிலை பார்த்து சனாவும் அவள் அப்பாவும் அதிர்ந்தனர். கோர்ட்டிலிருந்து அவர்களுக்கு சம்மன் வந்தது. அதை பிரித்தால், அதில் சனா அப்பா அப்சரா அப்பாவை ஏமாற்றி தான் ஹாஸ்பிட்டலை நடத்துக்கிறார் என இருந்தது. ஆதாரமும் இருப்பதாக இருந்தது.

மகிழன் அவரிடம் பேச காத்திருப்பதை செவிலியர் ஒருவர் கூற, இவன் வேற..என அவர் சலித்துக் கொண்டார்.

அப்பா, அமைதியா இருங்க. முதல்ல இவன் எதுக்கு வந்திருக்கான்னு தெரியணும் என்றாள் சனா.

ம்ம்..என்று அவர் அவனை வரச் சொல்ல, மகிழன் உள்ளே வந்து ரிசைனிங் லெட்டரை கொடுத்தான்.

“என்ன திடீர்ன்னு? திலீப் ஏதும் உன்னிடம் சொன்னாரா?” என அமைதியாக சனா அப்பா கேட்க, எனக்கு இங்கே வேலை செய்ய விருப்பமில்லை என்றான் மகிழன்.

“என்னப்பா இப்படி சொல்ற? நீ இங்க தான வேலை பார்ப்பேன்னு வந்த?” அவர் கேலியாக கேட்க, அடுத்தவங்க வயித்துல்ல அடிக்கிற பழக்கம் எனக்கில்லையே! என மகிழன் சாதாரணமாக சொல்ல, அவர் கோபமாக பேசினார்.

மகிழன் கண்கள் சன்னல் பக்கம் செல்ல, சனா பார்க்க அங்கே யாருமில்லை. ஆனால் அங்கே சிறிய வடிவிலான பூச்சி சுற்றிக் கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை. ரோபோ பூச்சு. நம்ம அல்லீநகர பிரசிடென்ட் புகழேந்தி மகன் உதிரன் தயாரித்தது.

விக்ரம் அதனை ஆப்ரேட் செய்து கொண்டிருந்தான்.

“நீ தான் கோர்ட்டுக்கு போயிருக்கியா? உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?”

“நல்லது செய்ய உறவுமுறை தேவையில்லை” என்றான் மகிழன்.

“என்ன ஆதாரம் வச்சிருக்க?” அவர் மகிழனை அடிக்க, “சொல்ல முடியாது” என்றான் திமிறாக மகிழன்.

இவனுக்கு என்ன திமிரு பாரும்மா என அவர் பொண்ணிடம் கேட்க, அவள் சந்தேகமாக மேலிருந்து கீழாக அவனை ஆராய்ந்தாள்.

அப்பா..அமைதியா இருங்க என மகிழன் கண்ணை உற்று பார்த்து, நீ தான் கண்ணுக்கு கண்ணாடியோ, லென்ஸோ யூஸ் பண்ண மாட்டாயே? கேட்டுக் கொண்டே அவனை நெருங்க, மகிழன் பயப்படுவது போல நடித்து பின்னே நகர்ந்தான்.

அப்பா, இவன் கண்ணில் போடும் லென்ஸ் கேமிரா வச்சிருக்கான் என சனா கோபமாக மகிழன் கண்ணிடம் கையை கொண்டு சென்றாள்.

வேண்டாம்..நானே தாரேன். என்னை ஏதும் செஞ்சுறாதீங்க என அலறியவாறு அவனாகவே கழற்றி கையில் வைத்து, நான் தர மாட்டேன் என்றான் மகிழன்.

“உன்னிடம் யாருடா பர்மிசன் கேட்டது?” என அவனை அடித்தார் சனாவின் தந்தை.

அதே நேரம் திலீப், அவரின் ஃபிங்கர் ட்ரேசிங் வைத்து அவர் அறைக்குள் சென்றான். அவர் திலீப்பிற்கு முன் கொடுத்த கிஃப்டை ஓபன் செய்யாமல் அலமாரியில் வைத்திருப்பான். அதை எடுத்து பிங்கர் ட்ரேசிங் தயார் செய்தனர்.

அவனுக்கு சந்தேகமாக இருக்கும் அனைத்து இடத்திலும் தேடி இருந்ததை இருந்தவாறே வைத்து விட்டு அவர் படிக்கும் புத்தக அலமாரிக்கு வந்து ஒவ்வொரு புத்தகமாக பார்த்தான். அவர் எடுக்காமல் வாங்கியவாறு இருந்த புத்தகத்தை எடுக்க, அதன் பின் சிறியதாக லாக் ஒன்று தெரிந்தது.

அந்த புத்தகத்தை திலீப் பிரிக்க அதில் இருந்த சிறிய அளவிலான சாவியை எடுத்து அந்த லாக் தடத்தில் நுழைத்தான். அது திறக்க பென்டிரைவ் இருந்தது. அதை எடுத்து அதில் ஆதாரம் உள்ளதா? என பார்க்க, அப்சராவிற்கு தேவையான அனைத்தும் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான் திலீப்.

மகிழன், விக்ரம், அப்சரா அலைபேசிக்கு திலீப்பிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.

மகிழன் வேகமாக அவ்வறையின் சன்னலருகே செல்ல, “என்னடா குதிக்கப் போறியா? குதிச்சா செத்துருவ” சனா சொல்ல, மகிழன் வாயில் வழிந்த இரத்தத்தை துடைத்து சன்னல் மீது ஏற, ஏய்..சனா கத்த, அவர்களை பார்த்து புன்னகையுடன் கீழே குதித்தான்.

பஞ்சு மூட்டையில் விழுந்து இறங்கியவன்..மேலிருந்து எட்டி பார்த்தவர்களிடம்..பை..பை அங்கிள் என சொல்ல, “மகிழ் சீக்கிரம் வா” அப்சரா குரல் கேட்க, அதை பார்த்து சனாவும் அவள் அப்பாவும் அவளை கூர்ந்து பார்த்து, அப்பா..இவ அந்த ஆளு பொண்ணு தான?

ஆமாம்மா, இத்தனை நாள் இதனை கவனிக்காமல் விட்டுட்டேன் என சொல்ல, அலைபேசியை எடுத்த சனா அப்பா யாரிடமோ பேச, காரில் செல்லும் அவர்களை மறித்து நின்றனர்.

இவனுக நிறைய பேர் இருக்கானுக. நம்மட்ட இருந்து கண்டிப்பா வாங்கிடுவாங்க என விக்ரம் அப்சராவிடம், நாங்க சண்டை போடும் நேரம் கீழ இறங்கி நேராக நான் சொல்ற இடத்துக்கு போ. அங்க நேகன்னு ஒருத்தன் வருவான். அவன் தானான்னு உறுதி செஞ்சுட்டு அவனோட போ. நாங்க வந்துடுறோம் என்றான்.

அப்சரா பயத்துடன், எல்லாரும் பார்த்து கவனமா இருங்க என அவள் சொல்ல, முதல்ல நீ கவனமா பத்திரமா போம்மா என்றான் திலீப்.

இந்தா, “இது நேகனோட எண்” என அவன் எண்ணை திலீப் கொடுத்து விட்டு கீழே இறங்கினான்.

இவர்கள் திட்டப்படி செய்தாலும் அப்சராவையும் சிலர் விரட்டினார்கள். அவள் நேகனுக்கு அழைப்பு விடுக்க, அவன் பைக்கில் வந்தான்.

அப்சரஸ்ஸா? அவன் கேட்க, நேகனா? அவள் கேட்டாள்.

ஆமா என இருவரும் பதிலளிக்க, ஏறு என அவளிடம் சொல்லி பைக்கை விரட்டினான். அவன் பின்னே சிலரும் காரில் விரட்டினார்கள்.

ஹே..கெர்ல், இங்க கூட்டமா இருக்கும். இடத்துக்கு வழிய சொல்லு நேகன் கேட்க, அவள் வழி சொல்ல, அவன் சென்றான். ஆட்கள் விரட்டியும் வந்தனர்.

சிக்னல் போட அவர்கள் நின்றனர். இருவரும் சென்று விட, மற்ற கும்பலுக்கு விசயத்தை சொல்ல தனியே சென்று கொண்டிருந்த அவர்களது பைக் முன் ஒருவன் வந்து துப்பாக்கியை நீட்ட, பைக்கை நிறுத்தி நேகன் அப்சரா கையை பிடித்து நின்று, அவள் காதருகே நெருங்கி..நான் த்ரீ சொல்லும் போது ஓடணும் என்றான்.

சாரி நீக்ரோ, என அவன் கையை தூக்க, ஆதாரம் எங்கே? அவன் கேட்க, ஹே..நோ..என அவன் பின் எட்டி பார்த்து நேகன் கத்த, அப்சரா புரியாமல் விழித்தாள்.

அவன் திரும்பி பார்க்க, த்ரீ என்று நேகன் சத்தத்தில் அவள் ஓட எத்தனிக்க, அவன் அவளுடன் அருகே இருந்த மரத்தின் பின் ஒளிந்தான்.

இதான் ஓடுறதா? அப்சரா கேட்க, அவள் வாயில் கை வைத்து..ஷ்..என்று மெதுவாக எட்டி பார்க்க, அவன் இவர்களை பார்த்து வர, நேகன் வேகமாக அவனை தள்ளி அவன் கையிலிருந்த துப்பாக்கியை இவன் கைக்கு கொண்டு வந்து அவன் காலிலே சுட்டான்.

அப்சரா அதிர்ந்து நிற்க, ஏய்..வா என அவளை இழுத்துக் கொண்டு இவன் ஓட,அவன் மற்றொரு துப்பாக்கியை எடுத்து நேகனை சுட, தோட்டா நேகன் காலை துளைத்தது.

அய்யோ..என அப்சரா பதற, நேரமில்லை நீ போ என அவளை தள்ளினான்.

நோ..நீயும் வா என அவளது தோளில் அவனது கையை போட்டு சீக்கிரம் வா என்று சொல்ல, அவர்களை விரட்டியவன் முன் வர, நேகன் அவனது துப்பாக்கியை நீட்ட..வேண்டாம். இப்ப என்ன ஆதாரம் தான வேணும்? இந்தா..போ என கொல்ல வந்தவனுக்கு அவள் உதவ, டென்சன் ஆனான் நேகன்.

அவனோ, இது உண்மை ஆதாரம் தானா? கேட்டான்.

டாடி..பிராமிஸ்..ரியல் ப்ரூஃப் என்றாள் அப்சரா பாவமாக.

சீக்கிரம் வாங்க. அப்புறம் பேசலாம் என அவள் நகர, நில்லு எதிராளியின் குரலில் அவள் கை நடுங்க,  நேகன் அவளை பார்த்து புரிந்து கொண்டு, ஹே..நான் வேணும்ன்னா இங்கே இருக்கேன் செக் பண்ணி சொல்லு என்றான் நேகன்.

என்னது? அப்சரா அதிர, ஷ்..என்ற நேகன், உங்களுக்கு ரொம்ப ப்ளீடாகுது. அதனால முதல்ல ஹாஸ்பிட்டல் போகலாம். எனக்கும் வலிக்குது. நாம சேர்ந்து தான போறோம். வீடியோ போலீன்னா என்னை கொன்னுறு என்றான் நேகன்.

அப்சரா அவனை சுரண்ட, ஷ்..பேசிட்டு இருக்கேன்ல்ல என அவன் சமாளித்து கண்ணை காட்டினான்.

அந்த பொண்ணும் வரணும் என்றான் அவன்.

சரிம்மா, வாங்க போகலாம் என ஒரு டாக்சியை பிடித்து அவர்கள் செல்ல, இடையே சிலர் வந்து நின்றனர். “யாருடா நீங்க?” அவன் இறங்கிய மறு நிமிடம் அவன் உயிர் சென்று விட்டது.

விக்ரமின் ஆள் ரகுதான். நேகனை பார்த்து, விக்ரம் சார் அனுப்பினார் என சொல்ல, மீண்டும் சிலர் வர, நானும் வாரேன் என அதே டாக்சியில் ஓரிடத்தில் இறங்கினார்கள்.

மேம், உங்க அப்பா இங்க தான் இருக்கார். நீங்க உள்ளே போங்க. நான் நேகன் சாரை அழைச்சிட்டு வாரேன் என்றான் ரகு.

அப்சராவிற்கு அவனை அப்படியே விட மனமில்லாமல் சீக்கிரம் வாங்க என சென்றாள்.

இருவரும் உள்ளே சென்று அதிர்ந்து பார்த்தனர்.

அப்சரா அப்பா அவளை அறைந்திருந்தார்.

டாடி..என கன்னத்தில் கை வைத்து அழுதாள் அவள்.

“என்ன வேலை இது? உனக்கு ஏதாவது ஆகி இருந்தால் உன் அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்றது?” என கேட்கும் போதே கார் சத்தம் ஒன்று கேட்க, ரகு கையில் துப்பாக்கியை எடுத்தான்.

அனைவரும் வெளியே பார்க்க, அப்சரா அம்மாவுடன் விக்ரம், மகிழன், திலீப் வந்திருந்தனர்.

சரா..என தன் மகளை கண்ணீருடன் அணைத்துக் கொண்டார்.

மாம், டாடி என்னை அடிச்சிட்டார் என உதட்டை பிதுக்கிய மகளை பார்த்து விட்டு, கணவனை எறிப்பது போல் பார்த்தவர், நீங்க செய்த தவறை பொண்ணு சரி செஞ்சுருக்கா. பாராட்டாம அடிச்சிருக்கீங்க என செல்லமாக கோபப்பட்டார்.

நேகன் நிற்க முடியாமல் அமர்ந்து, அவர்களின் பேச்சை ரசித்து பார்த்தான். அவனுக்கு தான் பெற்றோர், உடன் பிறப்புக்கள் இல்லையே! பெரியம்மா, சித்தி, மாமா பொண்ணுங்க, பசங்க தான இருக்காங்க.

திலீப் அவனுக்கு மச்சான் தான! திலீப்பும் விக்ரமும் அவனிடம் ஓடி வந்தனர்.

ஆமா, கொஞ்சுறேன் அவளை. அவன் எவ்வளவு மோசமானவன். அதான் விலகி இருந்தேன். அவனுடனே உன் பொண்ணு வேலை செஞ்சிருக்கா? நமக்கு என்ன சொத்தா இல்லை..

“அதுக்காக?”

அய்யோ நிறுத்துங்க. டாட், நீங்க முதல்ல கட்டிய ஹாஸ்பிட்டல் ஸ்பெசல்ன்னு நீங்க தான சொன்னீங்க. அதான் முயற்சிக்கலாம்ன்னு நினைச்சேன்.

“இது முயற்சியா?” விட்டால் அவன் உன்னை கொன்றுப்பான் என அவர் கண்கலங்க, அவள் அம்மாவை விட்டு அப்பாவை அணைத்துக் கொண்டாள்.

ஹலோ சார், “கொஞ்சம் இங்க பாருங்க” என ரகு அழைக்க, மூவரும் கீழே வலியுடன் அமர்ந்திருந்த நேகனை பார்த்தனர். திலீப் தான் எப்போதும் காரில் முதலுதவி பெட்டியை வைத்திருப்பானே! தோட்டாவை வெளியே எடுத்து அவன் கட்டிட, அப்சராவின் அப்பாவும் அவனுக்கு உதவினார்.

“அவனிடம் கொடுத்த பென்டிரைவ்ல்ல என்ன இருந்தது?” நேகன் அப்சராவிடம் கேட்க, அவள் அப்பாவை பார்த்துக் கொண்டு..அதுல என்னோட தலைவர் “சின்சான்” இருந்தார் என சொல்லி அவள் அப்பாவிடமிருந்து அம்மாவிடம் ஓடினாள்.

அவர் கோபமாக, “கார்ட்டூன் பாக்குற வயசா?” என அவர் மேலும் ஆரம்பிக்க, சார்..சார்..இதுவும் நல்லதுக்கு தான். “ஒரிஜினல் எங்க?” நேகன் கேட்டான்.

அப்சரா அதை கொடுக்க, நாளை நேராக இதை கோர்ட்டில் கொடுக்கணும். நேரம் பார்த்து கொடுக்கணும்.

நேகன் அப்சரா அப்பாவை பார்த்து, சார் நடந்ததை கோர்ட்ல்ல சொல்வீங்கல்ல? எனக் கேட்டான்.

அவர் தன் மகளை முறைக்க, சார் உங்களுக்காக உங்க பொண்ணு எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துருக்காங்க என மகிழன் சொல்ல,

ஹே..மகிழ்..சுருதியோட மகிழாகிட்டீங்களா? நேகன் கேட்டு புன்னகைக்க, ஆமா. நாம சந்தித்த போது பேச முடியல. பேச நினைக்கும் போது நீங்க பாரின் போயிட்டீங்க? மகிழனும் அவனும் பேசினார்கள்.

சரி, நான் கோர்ட்டுக்கு வாரேன் என்றார்.

நாங்களே உங்களை பாதுகாப்பா அழைச்சிட்டு போறோம். இன்று எல்லாரும் இங்கேயே தங்கிடுவோம் என்றான் விக்ரம்.

தேங்க்ஸ். எங்களுக்காக பெரிய ரிஸ்க் எடுத்திருக்கீங்க? அப்சரா அப்பா சொல்ல, சார் இப்படி சொல்லி முடிக்க பார்க்காதீங்க. நாங்க அங்க தான் வேலை பார்க்கிறோம். எங்களை கொஞ்சம் கவனிங்க என்றான் மகிழன்.

ஹாஸ்பிட்டல் கைக்கு வரட்டும் கண்டிப்பாக பார்க்கிறேன் குறும்புடன் அவரும் பேசினார். அனைவரும் புன்னகைத்தனர். சற்று நேரத்தில் சிம்மாவும் அவர்களுடன் கலந்து கொண்டான்.

அஜய், விஜய், சந்தோஷ் அவர்கள் வேலை முடியவும் வீட்டிற்கு கிளம்பி விட்டனர்.

அன்றிரவு துளசி வீட்டிலே அனைவரும் தங்கினர். நடு இரவில் ஏதோ சத்தம் கேட்க, மருது எழுந்து சன்னலை திறந்து பார்த்தான். ஆள் நடமாட்டம் இருப்பது போல் தெரிந்தது.

இந்த நேரத்தில் யாராக இருக்கும் என சிந்தனையுடன் கதவை திறக்க எண்ணி அருகே சென்றான். தமிழ் அவனை தடுத்து, ஷ்..என்றான்.

“என்ன?” புருவத்தை உயர்த்தினான்.

வீட்டை சுற்றி ஆளுங்க இருக்காங்க என்று அவன் கூற, அவன் பின்னே ரகசியன், விகாஸ், திலீப் அப்பா வந்தனர்.

பொண்ணுங்களும் குட்டீஸூம் ஓர் அறையிலும், பசங்க ஓர் அறையிலும் இருந்தனர். சிம்மா- நட்சத்திராவின் மகன் ஆரன் அழ, பொண்ணுங்க எல்லாருக்கும் விழிப்பு வந்தது.

செல்லம்மா..பிள்ளைக்கு பசிக்குது போலடா. நீ பசியாத்து. நான் பால் காய்ச்சி எடுத்து வாரேன் என அன்னம் வெளியே வர, ரகசியன் அம்மாவும், சுருதியும் வந்தனர்.

விகாஸ் அவர்களிடம் வந்து, “இங்க என்ன செய்யப் போறீங்க?” அறைக்கு போங்க என்றான்.

ஆரனுக்கு பசிக்குதுப்பா. பால் காய்ச்ச வந்தோம் என அன்னம் கூற, வீட்டை சுத்தி நம்மை போட ஆளுங்க வந்திருக்காங்க என அவன் சொல்ல, அய்யோ..என அன்னம் சத்தமிட்டார். தம்ளர் கீழே விழுந்தது.

அடுக்கலையை இருட்டாக்கி விகாஸ் மூவரையும் அறைக்கு இழுத்து சென்றான். அமைதியா இருங்க. பையனிடமிருந்து சத்தம் வராமல் பார்த்துக்கோங்க சொல்லி மருது அருகே வந்தான். சத்தம் கேட்டு மற்ற ஆண்களும் வந்தனர்.

அவன் அலைபேசியில் சில எண்களை தட்ட, விசயம் புகழேந்திக்கு சென்றது. ஆனால் ஆட்கள் வீட்டிற்குள் நுழையத் தொடங்கினர்.

ரம்யா கையில் சில கயிறுகளுடனும், சுவாதி ஓர் கட்டையுடன் காத்திருந்தனர்.

புகழேந்தி தன் மகனுடன் சில ஆட்களையும் அழைச்சிட்டு வந்திருந்தார். “எவன்டா அது?” வெளிய வாங்கடா என கத்தினார்.

தமிழ், கதவை திறக்க, பத்து பேர் வெளியேயும் ஆறு பேர் உள்ளேயும் நுழைந்தனர்.

தம்பி, “பிள்ளைங்க எங்க இருக்காங்க?” என கேட்ட போது சண்டை போடும் சத்தம் கேட்டது. வீட்டின் அனைத்து விளக்குகளும் ஒளிர்ந்தது. ரகசியன் ஒருவனுடன் சண்டையிட, விகாஸை அடிக்க வந்தனை தடுத்தான் மருது. ஆட்கள் அனைவரும் நேருக்கு நேராக மோத ஆரம்பித்தனர்.

ஊர்ப்பிரசிடன்ட்டும் சண்டை போட ஆரம்பித்தார். அதில் ஒருவன் மட்டும் பொண்ணுங்க அறைக்கதவை உடைக்க, உதிரன் அவன் சட்டையை பிடித்து அடித்தான். அனைவரும் பயத்தில் இருந்தனர்.

அவன் உதிரனை தள்ளி விட்டு கதவை உடைக்க, ரம்யா சுவாதி சத்தம் கொடுக்க, வந்தவன் கழுத்தில் கயிற்றை போட்டு ரம்யா இழுக்க, சுருதியும் அவளுடன் சேர்ந்து இழுத்தாள். தூரி போடும் கிளன்ட்டில் கயிற்றை மாற்றி இழுக்க அவன் தொங்கிக் கொண்டிருந்தான்.

ரம்யா..இன்னும் அவனை இழு சுவாதி சொல்ல, மற்றவர்களும் அவளுக்கு உதவினர். அவன் இடுப்பில் கயிறு கச்சிதமாக மாட்டி இருந்தது.

அம்மா..அந்த சன்னல் கம்பியில கயிற்றை இழுத்து கட்டுங்க என ரம்யா சொல்ல, சுருதி அம்மாவும், விகாஸ் அம்மாவும்..நீங்க நல்லா பிடிங்க. நாங்க கட்டுகிறோம் என கட்டினர்.

அவன் தொங்க, சுவாதி அவள் கையிலிருந்த கட்டையால் அவனை அடிக்க, மற்றவர்கள் தலையணையை எடுத்து அவனை மொத்தி எழுத்தனர். சோர்ந்து அவன் தொங்கிக் கொண்டிருந்தான்.

சில பல காயங்களுடன் ஆண்கள் வந்தனர். பெண்கள் அறைக்கதவை பார்த்த ஆண்களுக்கு நிம்மதி பெருமூச்சு.

“யாருடா உங்களை அனுப்பியது?” என புகழேந்தி சத்தமிட, பரிதியோ யோசனையுடன் ரம்யாவை பார்த்தார்.

சனா அப்பாவின் பெயரை அவன் கூற, அங்கிருந்த போலீஸில் அவனை அவனின் வாக்குமூலத்துடன் ஒப்படைத்தனர்.

நல்ல வேலை யாருக்கும் பலமான அடியில்லை என ரகசியன் அப்பா நிம்மதி பெரு மூச்சுடன் சொல்ல, ஆமா..ஆமா..எல்லாம் நல்லதுக்கு தான் என்றார் தாத்தா.

“இதுவா தாத்தா நல்லது?” தமிழ் கேட்க, நாளைக்கு தெரியும். பாருங்க.

நேரமாகிடுச்சு. இனி நிம்மதியா தூங்குங்க. நாங்க இருக்கோம் என புகழேந்தி தன் ஆட்களை துணைக்கு விட்டு சென்றார்.

சார், “எனக்கு ஒரு சந்தேகம்? உடனே எப்படி கோர்ட்டுக்கு இந்த விசயத்தை கொண்டு செல்ல முடியும்?” அப்சரா அப்பா விக்ரமிடம் கேட்க, பதில் நேகனிடமிருந்து வந்தது. எல்லாரும் ஒரே இடத்தில் தங்கியதால் சேர்ந்தே படுத்துக் கொண்டனர்.

அப்சராவும் அவள் அம்மாவும் மட்டும் தனியா இருந்தனர்.

காலையில எங்க தாத்தா என்னிடம் விசயத்தை சொன்னார். விக்ரம் அண்ணாவுக்கு சந்துரூன்னு வக்கீலை தெரியும்ன்னு சொன்னாங்க. அவரிடம் பேசி கோர்ட்டுக்கு இது விசயமாக தெரிய படுத்தினார் அவர்.

நான் வந்த பின் சந்துரூவை மீட் பண்ணேன். நாங்க நேரடியாக நீதிபதியை சந்தித்து நிலைமையை விளக்கி அவரை உடனே கேஸ் எடுக்க வைப்பதற்குள் போதும் போதும்..என்றானது.

பாரின்ல்ல இவ்வளவு கெடுபிடி இருக்காது. உடனே கூட கோர்ட்ல்ல ஆஜர் படுத்திடலாம். இங்கே ஏதோ கேஸ் ஆர்டர்ல்ல தான் வருமாமேமே! அதுக்குள்ள உங்க எதிராளி எல்லாரையும் போட்ருவான் என்ற நேகன், எப்படி சம்மதிக்க வச்சி போஸ்ட்டுக்கு பதில் மெயிலில் அனுப்பினோம். அவன் உசாராகிட்டான்.

இருந்தாலும் சார், உங்க பொண்ணு ரொம்ப க்ளவர் கூடவே தைரியம் அதிகம் தான். எதிராளி இடத்திற்கே சென்று வேவு பார்த்து ம்ம்..இதுவரை இப்படி ஒரு பொண்ணை நான் பார்த்ததில்லை என சிரித்தான் நேகன்.

“நீங்க போலீஸ் இல்லையா? தமிழ்நாடு இல்லையா?” அப்சரா அப்பா நேகனை விசாரிக்க, திலீப் பதில் கூறினான்.

எங்க சொந்த அத்தை மகன் தான் நேகன். அத்தையும் மாமாவும் அவனது சிறுவயதிலே இறந்துட்டாங்க. எங்க பாட்டி, தாத்தா தான் அவனை வளர்த்தாங்க. படிப்பு முடியவும் யாருக்கும் தொந்தரவா இருக்கக்கூடாதுன்னு வக்கீலாக பாரினுக்கு போனான். பின் தமிழ் அண்ணா மேரேஜ்க்கு வந்தான். பின் போனவன் தான் இரு வருடங்களுக்கு பின் இப்பொழுது தான் வந்திருக்கான். இன்னும் குடும்பத்துல்ல யாரையும் பார்க்கலை. நேராக நமக்கு உதவ வந்துட்டான்.

ஆமா மாமா, செம்ம டயர்டு. மாமா, நான் கேள்விப்பட்டேனே! உண்மையா? நேகன் கேட்க, என்ன? திலீப் கேட்டான்.

உங்களுக்கும் காதல் வியாதி வந்திருச்சாமே! என அவன் கேட்க, திலீப் புன்னகைத்தான்.

நேகா. சும்மா இல்லை. சாக்லெட் தண்டனை கேள்வி பட்ருக்கியா? விக்ரம் கிண்டலாக திலீப்பை பார்த்து கேட்க, சிம்மா புன்னகைத்தான்.

விக்ரம் திலீப் காதலின் ஆரம்பம் முதல் இறுதி வரை முடிக்க..வாவ் சூப்பர் லவ் ஸ்டோரி என்ற அப்சரா, “திலீப் சார் உங்க ஹூரோயினை நாங்க பார்க்கலாமா?”

இதோ..என ரம்யாவை அலைபேசியில் காட்ட, நேகன் அதை பிடுங்கினான். அப்சராவும் அவள் அம்மாவும் அவனருகே வந்து பார்த்தார்.

“இந்த பொண்ணா? அன்று ஹாஸ்பிட்டலில் அழுதாளே!” ம்ம்..என திலீப் வருந்தினான்.

“பக்கத்துல்ல இருக்கிற பொண்ணு யாரு?” நேகன் கேட்க, நம்ம “வீ ” கல்யாணம் பண்ணிக்கப் போகும் பொண்ணு. நம்ம விக்ரம் மச்சானோட தங்கை என்றான் திலீப். இருவர் முகமும் வாடியது. நேகன் அதனை கவனித்து திலீப்பை பார்த்தான்.

அவளும் பாரின்ல தான் இருக்கா. படிச்சிட்டு இருக்கா. அவளிடம் சரியாக பேசகூட முடியலை. அதான் வருத்தப்படுறாங்க.

சரி..சரி..என நேகன் மீண்டும் இருவரையும் பார்க்க, அவர்கள் முகத்தை புன்னகையுடன் மாற்றிக் கொண்டனர்.

சுவாதி சிம்மா எண்ணிற்கு அழைத்தாள்.

“என்னம்மா? அங்க ஏதும் பிரச்சனையா?” பதட்டமாக சிம்மா கேட்டான்.

எத்தனை தடவை கால் பண்றேன். யாருமே எடுக்கலை சுவாதி சத்தமிட்டாள்.

நானும் கால் பண்ணேன். நீங்க யாரும் எடுக்கலை என சிம்மாவும் கேட்டான்.

திலீப் அண்ணா அலைபேசி அணைத்து வச்சுட்டாங்க. நீங்களும் மகிழனும் எடுத்திருக்கலாம்ல்ல. எங்க அவன? வாய் மட்டும் பேசுறான் என அவனை திட்ட, அப்பொழுது தான் அவன் வந்தான்.

ஏய், “அவரை எதுக்கு திட்டுற?” சுருதி சுவாதியிடம் சண்டையிட, நேகன் ஸ்பீக்கரில் போட்டான்.

அப்படி தான்டி திட்டிவேன் என்று சுவாதி மகிழனை மீண்டும் திட்ட, திட்டுன அடிப்பேன்டி என சுருதி கையை ஓங்க அவர்களின் அம்மாக்கள் வந்து பிரித்து விட்டனர்.

“என்ன இது அதிசயம்? நண்பிகள் இப்படி சண்டை போடுறீங்க? என்ன மகிழ்? இருவரையும் கரெக்ட் பண்ணீட்டீங்களா?” நேகன் கேட்க, என்னது? என்று சுருதி..ஹே..நேகா அண்ணா..என சத்தமாக கூச்சலிட்டாள்.

ஏய் வாண்டு, நான் தான்.. வந்துடேன் என அவன் சொல்ல, மா..மா..நேகன் மாமா என சுவாதி அதிர்ச்சியுடன். தாத்தா சொன்னார் மாமா. வந்துட்டியா? அது என்ன பாரின் போல கால் கூட பேச முடியாதோ! அந்த கீர்த்துவும் இப்படி தான் பண்றா? நீயும் இப்படி தான் பண்ற? என்றவுடன் நேகனுக்கு சந்தேகமானது.

எனக்கு வேலை இருக்கு. அவ படிக்கிற பொண்ணு தான? என சிந்தித்தான்.

மாமா, “லையன்ல்ல இருக்கியா?”

ஹா..இருக்கேன்.

எல்லாரும் உன்னிடம் பேசணுமாம் என சுவாதி அலைபேசியை எல்லாரிடமும் கொடுக்க, அனைவரிடமும் புன்னகையுடன் பேசிய நேகனுக்கு மனநிம்மதி கிடைத்தது.

மீண்டும் சுவாதி அழைப்பில் வர, பாரு..பாரு..எங்களை விட உன்னை தான் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு அவள் சொல்ல, “என்ன சுவா? இப்படி சொல்ற? வீட்ல கடைக்குட்டி நீ? உன்னை கவனிக்காமல் யாரும் இருப்பாங்களா?” நேகன் சாதாரணமாக தான் கேட்டான். அவளிடம் பதிலில்லை. அமைதியாக இருக்க..

சுவா, “லையன்ல்ல இருக்கியா?”

ம்ம்..இருக்கேன். யாருக்கும் என்னிடம் பேச கூட நேரமில்லை தெரியுமா? முதல்ல அண்ணாவாது பேசுவான். தனியா இருக்குற மாதிரி இருக்கு. வீக் என்ட் மட்டும் தான் எல்லாரிடமும் பேசவே முடியுது என சுவாதி அழுதே விட்டாள்.

சுவா..திலீப் குரல் கேட்க, போ மாமா என்னோட பேசாத என அவள் குரல் அடுத்து ஒலிக்க வில்லை. சுவா..சுவா..சுவா..என பல குரல்கள் மட்டும் கேட்டு மறைந்தது.

அண்ணா, நாங்க அப்புறம் கால் பண்றோம் என ஹரா அலைபேசியை துண்டித்து விட்டாள்.

நேகனின் பார்வை விக்ரமை துளைக்க, சிம்மாவோ விக்ரமிடம் “என்னடா அழுறா?” எனக் கேட்டான். மகிழனும் திலீப்பும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

விக்ரமிடம் நேகன், “என்ன செஞ்சுட்டு இருக்கீங்க? சுவா அழுறா? எல்லாரிடமும் பேசினா உங்களிடம் மட்டும் பேசலை. உங்களுக்குள் சண்டையா?”

விக்ரம் முகம் வருத்தமாக எழுந்து வெளியே சென்றான். அவன் பின்னே சிம்மாவும் மகிழனும் சென்றனர்.