பாரதியை அலைபேசியில் அழைத்த ரகுராம் விக்ரமிடம் என்ன சொன்னாய் என்று கேட்டான்.
” நான் ஒன்னும் சொல்லல. ஹாஸ்பிடல்ல வச்சி விக்ரம் என்கிட்ட என்ன கேட்டான்னு அவன் சொல்லியிருப்பானே” ரகுராமும், விக்ரமும் பால்ய வயது நண்பர்கள். இருவரின் வாழ்க்கையில் எது நடந்தாலும் அது மற்றவருக்கு தெரியாமல் இருக்காது என்றெண்ணியே கூறினாள் பாரதி.
“அன்னைக்கு இல்ல. இன்னைக்கு என்ன சொன்ன?” கோபத்தை முயன்ற மட்டும் அடக்கியவாறுதான் கேட்டான்.
“இன்னைக்கா? இல்லையே நான் விக்ரம மீட் பண்ணலையே. என்னாச்சு? என்ன பிரச்சினை?” என்னதான் ரகுராம் கோபத்தை கட்டுப்படுத்த நினைத்தாலும், அவன் குரலில் இருந்த காரமே விக்ரமுக்கு எதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.
“என்ன நீ அவனை மீட் பண்ணலையா? அவன் உன்ன மீட் பண்ணத்தானே வந்தான். நீ அவனை மீட் பண்ணலைனா யாரு அவனை மீட் பண்ணது? அவன் மயங்கி விழுற அளவுக்கு உன்னத் தவிர யாராலயும் அவனை காயப்படுத்த முடியாது” விக்ரமுக்கும், பாரதிக்கும் இடையில் நடந்தவைகளை நன்கு அறிந்திருந்தமையால் மட்டும் ரகுராம் அவ்வாறு கூறவில்லை. நடந்தவைகளை பாரதி விக்ரமுக்கு ஞாபகப்படுத்தினால் தான் இவ்வாறு நடக்கும் என்று அறிந்திருந்தமையாலேயே பேசினான்.
“ராம் விக்ரமுக்கு என்னாச்சு? நான் இப்போவே அவனை பார்க்கணும்” பதட்டத்தோடு கேட்டாள் பாரதி.
விக்ரமின் நிலைமைக்கு பாரதி காரணமில்லையென்றால் அவள் வந்தால் அவன் கொஞ்சமாவது சரியாவான் என்று விக்ரம் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் பெயரை கூற பாரதி விக்ரமை காண விரைந்தாள்.
விக்ரமுக்கு ஒன்றென்றதும், தன் மனம் படும்பாட்டை பார்த்தே தான் விக்ரமின் மேல் வைத்திருக்கும் காதலை நன்கு புரிந்துக் கொண்டாள் பாரதி.
விக்ரம் பேசியதை மறந்து விட்டாயா? என்று அவள் மனம் கேள்வி எழுப்ப, அவன் என்னை திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதில் அவன் என் மேல் வைத்திருக்கும் காதல் தெரிகிறது. கார்த்திகேயன் மாமா சொன்னது போல் பழையதை பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் நிம்மதியாக வாழ முடியாது.
அவனே பழையதை மறந்து திருமணம் செய்து கொள்ளலாமென்று கேட்டும் தான் பழையதை மறக்காமல் பிடிவாதம் பிடிப்பதால் அவன் வாழ்க்கையும், என் வாழ்க்கையும் தேங்கிய குட்டை போன்று ஒரே இடத்தில் இருக்கின்றது. மெல்ல மெல்ல பாரதியின் மனம் விக்ரமை ஏற்றுக்கொள்ளும்படி காரணங்களை கூறலானது.
“முட்டாள். அவனை பார்த்ததும், அவன் பேசியதை மறந்து அவனை ஏற்றுக்கொள்ள துணிந்து விட்டாயே. இத்தனை வருடங்கள் அவனை பாராமல் இருந்தது, பார்த்தால் மீண்டும் காதலில் விழுவாய் என்று தானே” மறுமணம் கேலி செயலானது.
“இல்ல விக்ரம் அன்னைக்கு பேசினத்துக்கு ஏதாவது காரணம் இருக்கும். அதை அவன் சொல்ல விரும்பாமல் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டிருப்பான். அதில் என்ன தவறு?” பாரதியின் மனம் விக்ரமுக்காக சப்பைக்காட்டலானது.
விக்ரமை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்த பாரதி மருத்துவமனை கட்டிலில் சுயநினைவில்லாமல் கிடக்கும் விக்ரமை பார்த்ததும் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் வடிக்கலானாள். ரகுராம் என்ன பேசியும் அவள் வாயிலிருந்து பதில் வரவேயில்லை.
அவளை விக்ரமிடம் விட்டு விக்ரம் யாரை சந்தித்தான்? யாரால் விக்ரமுக்கு இந்த நிலைமையென்று அறிய வெளியேறினான் ரகுராம்.
விக்ரமின் அருகில் அழுது, அழுது ஓய்ந்த பாரதி அவள் அவனை எவ்வளவு நேசித்தாளென்று புலம்பலானாள்.
கார்த்திகேயனின் வேலை மாற்றத்தால் இடம் மாறியதால், பாரதி கல்லூரியை மாற்றலானாள். முதல் வருடம் படிக்கும் பாரதி கல்லூரி சேர்ந்தது ஆண்டின் இறுதி என்பதால் சீனியரின் ரேகிங்குக்கு உள்ளாகவில்லை. அதனாலயே விக்ரமை சந்திக்க முடியாமல் போனது.
கல்லூரி சுற்றுலா சீனியர், ஜுனியர் என்று வெவ்வேறாக பஸ்ஸில் பயணம் செய்ததாலும் விக்ரம் மற்றும் பாரதி சந்திப்பு நிகழவில்லை.
சுற்றுலாவின் பொழுது காலையிலையே விழிப்பு தட்டியதால் கொஞ்சம் நடக்கலாமென்று வெளியே வந்தவள் குளக்கரை பக்கமாக நடக்க, அப்பொழுதுதான் விக்ரம் அங்கிருந்த கல்லின் மேல் ஏறி அவன் பெயரை கத்தியிருந்தான்.
“விக்ரம்? அவனா?…” என்று இவள் யோசனையோடு அவனை நெருங்க, அவனோ குளத்தில் விழுந்து விட, இவள் சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்து அவனை காப்பாற்றியிருந்தாள்.
பாடசாலையில் தான் சந்தித்த விக்ரம் என்றதும் அவள் உடல் உதறியது, நெஞ்சம் அடித்தது. கண்களிலிருந்து கண்ணீர் பெருகலானது.
“விக்ரம், விக்ரம் கண்ணத்தொர” அவன் கன்னங்களை மாறி மாறி தட்டியவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டே இருந்தது.
செயற்கை சுவாசம் கொடுத்தும் அவன் கண் விழிக்காததால் யாரையாவது அழைத்து வரலாமென்று ஓடினாள்.
பாரதி வந்து பார்க்கும் பொழுது விக்ரம் அங்கில்லை. அவன் எழுந்து சென்றிருப்பானென்று எண்ணியவளுக்கு விக்ரம் தன் கல்லூரியில் படிப்பது தெரியவில்லை. தெரிந்திருந்தால் இவளே தேடிப் போய் பேசியிருப்பாள்.
அவனை எங்கே சென்று தேடுவது என்று இவள் முழிக்க, அவனோ இவளை தேடியலையலானான்.
தன்னை கடக்கும் பெண்களையெல்லாம் உத்து, உத்து பார்த்தவனை, சிலர் இவனை ஆர்வமாகப் பார்க்க, சிலர் இவனை முறைத்து விட்டுச் செல்லலாயினர். அதில் ஒருத்தி பாரதி.
தன்னை தான் அவன் தேடியலைகிறான் என்று அறியாமல் “என்ன இவன் பொண்ணுங்களையெல்லாம் இப்படி பார்த்து வைக்கிறான்? சரியான பிளேபாயாக இருப்பான் போல” என்று அவனை வஞ்சித்தாலும் அவனை பின் தொடர்ந்து, அவனை கவனிக்கலானாள். நண்பர்களின் பேச்சில் குளத்தில் விழுந்த பொழுது தன்னை காப்பாற்றிய பெண்ணுக்கு நன்றி சொல்ல தேடுவது புரிய, அது நான் என்று கூட இவனுக்குத் தெரியவில்லையா? இவன் என்னை மறந்து விட்டானா? என்று சோகமானாள்.
“எப்படிடா கண்டுபிடிக்கிற?” தெளிவாக தெரியாமல் நண்பன் கூற மாட்டான் என்று ரகுராமுக்கு விக்ரமின் மீது அவ்வளவு நம்பிக்கை.
“பின்ன நம்ம காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் தங்க தானே இந்த விலாவையே வாடகைக்கு எடுத்தாங்க. அப்போ எப்படி வெளியாட்கள் உள்ள வர முடியும்?”
“அது சரி வேலைக்கு வந்த யாராவதாக இருந்தா?” ரகுராமுக்குத்தான் ஏராளமான சந்தேகங்கள் வருமே. கேட்டுவிட்டான்.
“நீ கேட்க முன்னாடி விசாரிச்சுட்டேன். வயசானவங்கத்தான் வேலைக்கு இருக்காங்க”
“பார்டா…” நண்பனை கலைத்தவாறே, மெச்சினான்.
ஊருக்கு வந்த பின்னும் கல்லூரியில் பாரதியை தேடுவதை விக்ரம் விடவில்லை.
இவர்களின் பின்னால் சுற்றியவாறே இவர்களின் பேச்சை கேட்டு ரசிக்கும் பாரதியின் மனதுக்குள் விக்ரம் நிலையாக நின்றிருந்தான்.
விக்ரமை தான் காதலிப்பதை உணர்ந்தாலும், அவன் தன்னை தேடுவது நன்றி சொல்ல மட்டும் தான் என்றதில் சோகமானவள் அவன் முன்னால் சென்று நிற்கக் கூடாது என்று முடிவு செய்தாள்.
இருவரும் சந்தித்துக்கொள்ள வேண்டும் என்பது விதியானால், யாரால் அதை தடுக்க முடியும்?
அன்று கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்து விளையாட்டு நடைபெற்றுக் கொண்டிருக்க, ரகுராமும், விக்ரமும் மைதானத்தில் தான் இருப்பார்களென்று பாரதி நூலகத்தில் அமர்ந்து வளமை போல் சித்திரம் தீட்டலானாள்.
அன்று ரகுராமன் தந்தையின் இறந்த நாளென்பதனால் அவன் மைதானத்துக்கு வர நேரமாகுமென்று கூறியிருக்க, அவனுக்காக காத்துக்கொண்டிருந்த விக்ரமுக்கு கால்பந்து விளையாட்டை பார்க்கவே பிடிக்கவில்லை.
ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று கிளம்பியவன் நூலகத்தை கடக்கும் பொழுது பாரதியின் ஞாபகம் வரவே எல்லாவற்றையும் மறந்து உள்ளே சென்றான்.
காற்றில் ஆடும் கூந்தலை ஒதுக்கியவாறு சித்திரம் தீட்டுபவளை கண்களை அகல விரித்துப் பார்த்த விக்ரம் பாரதியை பார்த்த ஆனந்தத்தில் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான்.
அதிர்ச்சியில் உறைந்தவளோ பேசக் கூட தோணாமல் அவனையே பார்த்திருந்தாள்.
“ஏய் எப்படி இருக்க? நல்லா இருக்குறியா? ஆமா நீ இங்கதான் படிக்கிறியா? பார்த்துக்கவே இல்லையே” ஆனந்தத்தில் பேசிக் கொண்டு போனவன் “ஆமா… உன் பேரென்ன?” என்று கேட்டு தயக்கமாக வெக்கப்பட்டான்.
பாடசாலையில் பார்த்தவளிடம் பெயரைக் கூட கேட்கவில்லையே என்று அசிங்கமாக உணர்த்தாலும், அன்று அவளிடம் இருந்த நெருக்கம் இன்றும் மாறாமல் இருக்கவே பார்த்த உடனே உரிமையாக பேசியவன் பெயரையும் கேட்டுவிட்டான்.
விக்ரம் அணைத்துக் கொண்ட நொடி அதிர்ந்தாலும், அவன் மற்ற பெண்களை போல் தன்னை நினைத்தானா என்று “ஏய் தள்ளிப்போ” அவனை தள்ளி விட்டவள் “ஆமா… நீ யாரு? என் பெயர் கூட உனக்குத் தெரியல. அப்போ எனக்குத் உன்ன தெரியாது” அவனை கண்டு கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
“என்ன இவள் என்னை மறந்து விட்டாளா?” ஒருநொடி குழம்பிய விக்ரம் பாரதியின் பின்னால் சென்று தாங்கள் பாடசாலையில் சந்தித்துக்கொண்டதை ஞாபகப்படுத்த முயன்றான். அவளோ அவனை தெரியவே தெரியாது என்று நடிக்கலானாள்.
பாரதிக்கு தன்னை ஞாபகத்தில் இல்லையென்று ரகுராமிடம் புலம்பிய விக்ரம் அவனை அழைத்துக் கொண்டு அவன் முன் நிறுத்தி பேச வைத்தான். ஆனாலும் பாரதி தெரியாது என்று சாதித்தாள்.
“அதான் தெரியாது என்று சொல்லுறா இல்ல. வாடா…” என்று விக்ரமை இழுக்காத குறையாக அழைத்து சென்ற ரகுராம்? “ஆமா நீ உன்ன காப்பாத்தின பொண்ண தேடிப் போனப்போ அவ கிடைச்சாளா?” சந்தேகமாக கேட்பது போல் கிண்டல் செய்தான்.
“ஏன்டா நீ வேற படுத்துற?” நொந்தான் விக்ரம்.
“குளத்தில விழுந்தப்போ உன்ன காப்பாத்தினது அவதான் என்று உனக்குத் தெரியாதா?”
“நீ என்ன சொல்லுற?”
“உன்ன காப்பாத்தினது உதட்டோரம் மச்சம் இருக்குற பொண்ணு என்றா அது அவதான்”
“அட ஆமா…” பாரதியின் உதட்டோரம் இருந்த மச்சத்தை பார்த்தாலும், பாரதியை பார்த்த ஆனந்தத்தில் தன்னை காப்பாற்றியவளை மறந்து தான் போனான். “ஆமா என்ன காப்பாத்தினது அவ தான் என்றா அத சொல்லியிருப்பாளே! எதுக்கு அவ என்ன தெரியாது என்று சொன்னா?” புரியாமல் குழம்பி நின்றான் விக்ரம்.
“அவ… அவ… என்று சொல்லுற? பேர் கூட தெரியாதா?” விக்ரமை கலாய்த்த ரகுராம் “நான் அவளைப்பத்தி விசாரிக்கிறேன். அதுவரைக்கும் கொஞ்சம் அடங்கி இரு”
ரகுராம் சொன்னால் கேட்பானா விக்ரம்? பாரதியின் முன்னும், பின்னும் அலைந்து அவள் கவனத்தை ஈர்க்க முயன்றான்.
பெயர், என்ன படிக்கிறாள், எந்த வகுப்பு முதற்கொண்டு ரகுராம் கூறியிருந்தால் பாரதியை பின் தொடர்வது விக்ரமுக்கு சிரமமாக இருக்கவில்லை.
“நீயும் மூன்றாம்பிறை கமலஹாசன் போல பாரதி முன்ன போய் மூஞ்ச, மூஞ்ச காட்டுற. அவளும் ஸ்ரீதேவி போல தெரியாதது போல நடிக்கிறா? நீ காட்டுற கொரலி வித்தைக்கு அவ பிச்சை மட்டும் தான் போடல” விக்ரம் செய்யும் அளப்பறைகளை பார்த்து ரகுராம் வெளிப்படையாக சிரிக்க, பாரதி உள்ளுக்குள் சிரிக்கலானாள்.
விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம் எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்
இன்பத்தில்
இது என்ன வகை
இன்பமோ இன்பத்தில்
இது என்ன வகை இன்பமோ
நடந்து போகையில் பறக்குது மனது
துன்பத்தில் இது
என்ன வகை துன்பமோ
நெருப்பில் எரிவதை
உணருது வயது
இது வரை
எனக்கு இது போல்
இல்லை இருதய
அறையில் நடுக்கம்
கனவுகள்
அனைத்தும் உன்
போல் இல்லை
புதிதாய் இருக்குது
எனக்கும்
சொந்தத்தில்
இது என்ன வகை
சொந்தமோ இறைவன்
தந்த வரம் இணைந்தது
நெஞ்சம்
மொத்தத்தில்
இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை
புரிந்தது கொஞ்சம்
இது என்ன
கனவா நிஜமா இதற்கு
யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன
பகலா இரவா இரவின்
அருகினில் சூரியன்
வெளிச்சம்
உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம் எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்
“ஏம்மா எங்களை தெரியல்னு சொன்ன பொண்ணு கொஞ்சம் நில்லு” நூலகத்துக்கு சென்று கொண்டிருந்த பாரதியை தடுத்து நிறுத்தினான் ரகுராம்.
“என்ன ராம்?” என்று கேட்டு நாக்கை கடித்தாள் பாரதி.
“தெரியாது…. தெரியாமத்தான் என் பெயரை ஷாட்டா, உரிமையா சொன்னியா? சரி அதவிடு. எதுக்கு அவனை தெரியாதது போல நடிக்கிற? குளத்துல விழுந்தப்போ காப்பாத்தினது நீதான்னு தெரியாம உன்ன தேடி அலைஞ்சான். அது நீதான் என்று தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டான். நீ என்னடான்னா…”
“அவன் என்ன தேடுறது நன்றி சொல்லத்தானே. எனக்கு அவன் நன்றி வேணாம்” என்ற பாரதியை வினோதமாக பார்த்தான் ரகுராம்.
“நண்பர்களுக்குள் எதற்கு நன்றி என்று சொல்கிறாளா? அல்லது உயிரை காப்பாற்றியதற்கு வேறு எதையாவது எதிர்பார்க்கின்றாளா?” என்று யோசிக்கலானான்.
ரகுராம் யோசிக்கும் பொழுதே “ஓஹ்… அப்போ அவன் நான் தான் காப்பாத்தினது என்று தெரியாமத்தான் தேடினானா? நான் வேற அவனை தப்பா நினைச்சிட்டேனே” என்று தலையில் குட்டிக் கொண்டாள்.
“என்ன செய்கிறாள் இவள் என்று” அவனை ரகுராம் விநோதமாகப் பார்த்திருக்க, இவர்களை நெருங்கலானான் விக்ரம்.
அதேநேரம் “பாரு….” என்று பாரதியை அழைத்திருந்தான் கார்த்திகேயன்,
“மாமா…” என்று இன்முகமாக கார்த்திகேயனுக்கு கையசைத்தவள் ரகுராமிடம் விடைபெறாமலையே கிளம்பிவிட்டாள்.
“பாருவாம் பாரு… என்னை பாரு… பாரு… என்று கூவுறான். யார்டா… அவன்” ரகுராமன் தோளில் கைபோட்டிருந்தான் விக்ரம்.
“பொறாமை…” நண்பனை கிண்டல் செய்தவன் “அவளும் தான் மாமா… மாமான்னு கொஞ்சிகிட்டே போனா… அவளை ஒன்னும் சொல்லல” நண்பனை முறைத்தான்.
என்ன சொல்வது என்று விக்ரம் முழிக்க, “கோபடுறான். பொறாமைப் போடுறான். கேட்டா ஒண்ணுமில்லன்னு சொல்லுவான். லவ் பண்ணுறவனுங்க எல்லாம் லூசா? இல்லவே இல்ல. நம்மள லூசாக்கப் பாக்குறானுங்க” விக்ரமின் காதுபட முணுமுணுத்தான்.
இவர்களை இரண்டு கண்கள் கோபத்தில் முறைக்கலானது. அவை வைஷ்ணவியின் கண்கள்.
இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா
நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வையில்
உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தைதான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே
இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே
உன்னாலே உன்னாலே
உன்னாலே ஹே ஹேஹே
என்ன பேசினேன்
என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை
புதை மணலாய் போனாயே
இனி வசந்தம் ஏதடி
வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன்
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள்
பாயும் ரத்தம்
உறங்கும் போது ஏதேதோ
உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி
வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே
நீதான் அர்த்தம்
நாட்கள் நகர, நகர விக்ரம் மற்றும் ரகுராமோடு பாரதியின் உறவு நட்பாக தொடரலானது. விக்ரம் பாரதியின் மீது அதிக உரிமை எடுத்துக் கொண்டாலும், அது காதலால் தான் என்று உணராமல் இருந்தான்.
விக்ரம் காதலை உணராமல் இருப்பதும், பாரதி அவனை காதலாக பார்ப்பதையும் அவள் செய்கைகளின் மூலம் பாரதி விக்ரமை காதலிப்பதை கண்டு கொண்ட ரகுராம் முதலில் பாரதியிடம் பேசினான்.
“எனக்கு விக்ரம பிடிச்சிருக்கு. ஆமா நான் அவனை காதலிக்கிறேன். ஆனா… அவன் என்ன காதலிக்கலையே. என் லவ்வ சொல்லப் போய் அவன் என்ன வெறுத்துட்டான்னா, நான் அவன் கூட தோழியாகக் கூட இருக்க முடியாதே. அவன் கிடைக்கலைனாலும் பரவாயில்ல. அவன் சந்தோசமாக இருந்தா போதும். நான் அவன் கூட இருந்தா போதும்” புன்னகையோடு கூறினாலும், அந்த புன்னகையில் இருந்த வலியை ரகுராமால் நன்றாகவே உணர முடிந்தது.
விக்ரம் பாரதியை காதலிப்பதை உணராமல் இருக்கும் நிலையில் பாரதியிடம் விக்ரம் அவளை விரும்புவதாக கூற முடியுமா? அதுவும் அவன் காதலை அவன் தானே சொல்ல வேண்டும் என்று பாரதியிடம் எதுவும் பேசாமல் இருந்தவன் விக்ரமுக்கு அவன் மனதை உணர வைக்க முயன்றான்.
“டேய் அன்னைக்கி வந்தவன் யார் என்று பாரதியிடம் கேளு” என்று ரகுராம் விக்ரமை உசுப்பேத்தினான்.
“டேய் என்னத்தான் அவ நம்ம பிரென்ட் என்றாலும், அவ பெர்சனல் விஷயங்களை கிண்டிக் கெளரக் கூடாது” என்று ரகுராமின் மூக்கை உடைத்தான்.
ஆனால் ரகுராம் சொல்லும் முன்பே விக்ரம் பாரதியிடம் கேட்டிருந்தான். அதுவும் எப்படியென்றால்? “வீட்டில் யார், யாரெல்லாம் இருக்காங்க. யாரு ரொம்ப நெருக்கம்” கார்த்திகேயனை மாமா என்று பாரதி அழைத்ததால் இவ்வாறு கேட்டிருந்தான். பெயரை மட்டும் கூறியிருந்தால், நண்பரகளை பற்றி விசாரித்திருப்பான்.
விக்ரம் எதற்காக கேட்கின்றான் என்று புரியாமல் “நெருக்கமா? அப்படி யாருமில்ல” கூடவே பிறந்த பார்கவியோடு நெருக்கம் இல்லாத பொழுது கார்த்திகேயனை பற்றி என்னவென்று சொல்வாள்?
உள்ளுக்குள் நிம்மதியடைந்த விக்ரமோ வீட்டாரை பற்றி விசாரிக்கவில்லை. விசாரித்திருந்தால் பாரதியின் இரட்டை பார்கவி என்று அறிந்துக்கொண்டிருப்பான். விதி யாரை விட்டது?
கல்லூரியை முடித்த பின் எதிர்கால வாழ்க்கைக்காக என்ன செய்ய போகிறோம் என்ற பேச்சை ரகுராம் ஆரம்பித்து வைக்க, பாரதியோ தான் ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றாள்.
தான் எதோ யோசித்து வைத்திருக்க, இவளது ஆசை இதுவா? இவள் இந்த துறையில் சென்றால் இவளை சந்திக்க முடியாமலே போய்விடும் என்று உள்ளுக்குள் சோகமானவன் இறுதி வரை பாரதி தன்னோடு இருக்க வேண்டும் என்றெண்ணி தான் ஒரு விளம்பர நிறுவனம் ஒன்றை நிறுவ வேண்டும் என்றான் விக்ரம்.
“சொல்லவே இல்ல” நண்பனை வளமை போல் கிண்டல் செய்தான் ரகுராம்.
“அப்போ உன் கம்பனில எனக்கு வேலை கொடு” என்று சிரித்தாள் பாரதி.
சந்தோசமாக தலையசைத்தான் விக்ரம்.
பாரதியின் தலைமறைந்ததும் “என்ன பாரதிய பார்க்காம இருக்க முடியாது என்று தானே இந்த முடிவு. அவளை பார்த்தா என்ன? பார்க்காட்டி என்ன? அவளை பார்த்துகிட்டே இருக்கணும் என்று ஏன் தோணுது யோசீங்க விக்ரம் சார்” இப்பொழுதாவது விக்ரம் அவன் மனதை உணர வேண்டி பேசினான் ரகுராம்.
பாரதியுடனான தான் இருக்கும் பொழுது எல்லா கவலைகளையும், பிரச்சினைகளையும் மறந்து எவ்வளவு ஆனந்தமாக இருக்கின்றேன் என்பதை உணர்ந்த நொடி, தான் பாரதியை காதலிப்பதையும் உணர்ந்து கொண்ட விக்ரம் பாரதியிடம் தன் காதலை கூற முடிவு செய்தான்.
அவ்வாறு காதலை சொல்லப் போனவன் ஏன் அவளை திட்டித்தீர்த்தான் என்று ரகுராம் கேட்ட பொழுது விக்ரம் கூறாவிட்டாலும், அதை அறிந்துகொண்ட நொடி ரகுராம் அழுது கரையலானான்.