“எங்க மிஸ்டர் விக்ரம்? ஷூட்டிங் நடக்கும் போது அவர் இங்க என் கூட என் பக்கத்துல இருக்கணும் என்று தானே எக்ரிமண்ட் போட்டேன். அவர் வராம நான் நடிக்க மாட்டேன்” குயில் குரலில் மிரட்டலானாள் V.A நிறுவனத்தின் மாடல் அழகி மம்தா.
“என்ன இந்த பொண்ணு ஓவரா பண்ணுது. அவருக்கு இருக்குற வேலைல அவரால இவ கூட இருக்க முடியுமா? இவ வேற எதுக்கோ அடி போடுறது போல தெரியுது” விளம்பரத்தை இயக்கும் இயக்குரரான சதீஷ் மம்தாவை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.
அவன் பார்வையை சட்டென்று படித்த மம்தா “ஆமா ஆட்ட எடுக்க வேண்டியது, அப்பொறம் அந்த ஸீன்ல மூஞ்சி தெரியல. ஏங்கள் சரியில்லைன்னு நொட்டம் சொல்ல வேண்டியது. அதுக்கு அவரே இங்க இருந்தா ஒரே நாள்ல முடிச்சி கொடுத்துட்டு போய்கிட்டே இருப்பேனே” தனியாக புலம்புவது போல் சதீஷின் காதுபட பேசினாள்.
அவளை மேலும் கேவலமாக பார்த்தவன் “எத்தன எட்வடிஸ்ட்மன்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். விக்ரம் சார் எந்த குறையும் சொன்னதில்ல. என் வேலையில தலையிடவும் மாட்டாரு. “கருவாட்டு வாசனை ஊரே மணக்குது. இந்த பூனை அட இல்லப்பான்னு சொல்லுது” காதலோ, எழவோ வேலைல டிஸ்டப் இல்லாம இருந்தா சரி” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். அது வேறு அவள் காதில் விழுந்து, முகம் கோணி எடுக்கும் விளம்பரத்தில் அவள் மனதை அப்பட்டமாக தெறிவித்து விடக் கூடாதே என்ற எண்ணம் தான்.
அவனை கவனியாமல் தன் மேனேஜரிடம் திரும்பிய மம்தா “மிஸ்டர் விக்ரமுக்கு போன் போடுங்க” என்றாள்.
“மேம் ஒரு பிரச்சினை” என்று மென்று முழுங்கிய மேனேஜர் சதீஷை பார்த்தவாறே அலைபேசியை மம்தாவிடம் கொடுத்தாள்.
அதை கையில் வாங்கி ஆன்லைனில் உலவும் செய்தியை பார்த்து அதிர்ந்து வாய் பிளந்த மம்தா “என்ன இந்த செய்தி உண்மையா? அதான் அவர் என்ன சீண்டவே மாட்டேங்குறாரா?” வாய்விட்டே முணுமுணுத்தாள்.
அப்படி என்ன செய்தி என்று பார்த்த சதீஷ் வாய்விட்டு சிரிக்கலானான்.
“32 வயதான பிரபல விளம்பர நிறுவன உரிமையாளர் இதுவரை திருமணம் செய்யாததன் இரகசியம் உடைந்தது. அவருக்கும் பிரபல நடிகர் ரகுராமுக்கும் இடையில் காதல்” என்று சேதி வந்திருந்தது மட்டுமல்லாது விக்ரம் மற்றும், ரகுராம் புகைப்படத்தில் கட்டியணைத்து சிரித்துக் கொண்டிருந்தனர்.
“எங்கடா அவன்? வீட்டுக்கே வர்றதில்ல. கல்யாணம் பண்ண சொன்னா பாக்குற எல்லா பொண்ணையும் பிடிக்கலன்னு சொல்லுறான். உடனே அவனுக்கு கல்யாணம் நடக்ககும்” செய்தியை பார்த்து இரத்தக் கொதிப்பு எகிற கத்தினாள் விக்ரமின் அப்பத்தா சாந்தி தேவி.
“பெயர் தான் சாந்தி தேவி. சாந்தி மட்டும் இந்த வீட்டுல இல்ல” செய்தி பொய்யென்று அறிந்தமையால் புலம்பியவாறே அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்த விக்ரமின் தந்தை ஆளவந்தான் “அம்மா அவன் விசயத்துல நிதானமாகத்தான் முடிவெடுக்கணும். எனக்கென்னமோ இந்த செய்தியை அவன் தான் பரப்பியிருப்பான்னு தோணுது” தன் மகனை நன்கு அறிந்து வைத்திருந்தமையால் கண்களை சுருக்கி யோசனையாகவே கூறினான் ஆளவந்தான்.
“என்ன பேசுற நீ அவனே அவனுக்கு இப்படி ஒரு அவமானத்தை தேடிக்குவானா?” மகனை முறைத்த சாந்தி தேவி “என் பேரனை பத்தி ஊரே தப்பா பேசலாமா? பேசுறவன் நாக்கை அறுக்க மாட்டேன். எத்தன பேர் நாக்கை அறுக்க முடியும்? முதல்ல இந்த செய்தியை ஆன்லைன்ல இருந்து எடுக்குற வழியப்பாரு. எவன் எழுதின்னான்னு அப்பொறம் கண்டு பிடிக்கலாம். முதல்ல இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். இந்த செய்தி உண்மையென்று நம்பி நான் பேசுறேன்னு நீ நினைக்கிறியா? அவனுக்கு கல்யாணம் நடந்தா இந்த செய்தியெல்லாம் காத்தோட போய்டும். கருப்போ, சிவப்போ, குட்டையோ நெட்டையோ, ஏழை, பணம் எதையும் பார்க்காதே அவனுக்கு பிடிச்சிருக்கான்னு மட்டும் பாரு” கறாராக கூறினாள் சாந்தி தேவி.
சாந்தி தேவிக்கு பிறந்த ஒரே மகன் தான் ஆளவந்தான். தந்தை சம்பாதித்ததை பெருக்கி இன்று நகரத்தில் பணக்காரர்களின் வரிசையில் பத்துக்குள் இருக்கும் தொழிலதிபர். விக்ரம் மற்றும் மோகனா ஆளவந்தாரின் வாரிசுகள். தான் தன் தந்தையின் வழியில் சென்றது போல் தன் மகனும் இருக்க வேண்டும் என்பதற்காக விக்ரமை கண்டிப்போடும், தனது கண்காப்பிலும் வளர்த்திருந்தார்.
விக்ரமுக்கு ரகுராமோடு சேர்ந்து விளம்பர நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் கல்லூரி படிக்கும் பொழுதே இருந்தது. ஆனால் அதை தந்தையிடமோ, பாட்டியிடமோ கூற விருப்பமில்லை. அவர்களின் தயவில் தனது நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என்று எண்ணுகையில் கசந்தது.
வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து பணத்தை ஈட்டி நிறுவனத்தை ஆரம்பிக்கலாம் என்று எண்ணியவனை உணர்வுபூர்வமாக பேசியே தடுத்திருந்தாள் சாந்தி தேவி.
“எங்கயோ போய் வேல பாக்குறதுக்கு உன் அப்பா கம்பனிலையே வேல பாரேன். அது உன் கம்பனி தானே” ரகுராம் வேறு பேசியே நண்பனை சம்மதிக்க வைத்திருக்க, தந்தையிடம் பேசி ரகுராமையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு வேலை பார்கலானான்.
நிறுவனத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையை தீர்க்க, ரகுராமை பலியாடாக்க ஆளவந்தான் நினைக்க, நண்பனை விட்டுக் கொடுக்காமல் அவனையும் அழைத்துக் கொண்டு தந்தையிடமிருந்து விலகிய விக்ரம் தனது 27வது வயதில் V.A என்ற விளம்பர நிறுவனத்தை தொடக்கி ஐந்து வருடங்களாக வெற்றிகரமாக நடாத்தி வருகின்றான்.
மகனிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பின் சாந்தி தேவி எந்த கேள்விகளையும் கேட்பதில்லை. நிறுவனத்தில் என்ன பிரச்சினை நடந்தது? அதை எவ்வாறு மகன் சரி செய்யப்போகிறான் என்ற எந்த கவலையுமில்லாமல் சாந்தி தேவி தங்களது நிறுவனத்தை விட்டு வெளியேறினால் பேரனின் எதிர்காலம் என்னாவது என்று கவலை கொண்டாள்.
அப்பத்தாவின் கவலையை போக்க விக்ரம் தனது பலநாள் ஆசையையும், திட்டங்களையும் கூற, இந்த துறையில் சென்றால் அதிகமாக பெண்களை சந்திக்கவும், பழகவும் நேரிடும் என்று சாந்தி தேவிக்கு இஷ்டமில்லை என்பதை விக்ரமின் முகத்தில் அடித்தது போல் கூறிவிட,
“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு” ஒற்றை வரியில் பதில் சொன்னவன் வீட்டை விட்டும் சென்றிருந்தான்.
தனக்குப் பின் தங்களது நிறுவனத்தை தன் மகன் பொறுப்பேற்பான் என்ற நிம்மதியிலும், மமதையில் இருந்த ஆளவந்தானுக்கு தலையில் இடி விழுந்த நிலைதான்.
“அவன் யார்கிட்ட போய் பணத்துக்காக நிக்கிறான்னு நானும் பாக்குறேன். நயா பைசா கொடுக்க ஒருத்தனையும் விட மாட்டேன்” என்ற ஆளவந்தானை முறைத்த சாந்தி தேவி
“உன் அப்பா யார் தயவில்லாமலையும் தான் தொழில் தொடங்கினாரு. அவர் பேரன் மட்டும் எம்மாத்திரம். அவனை அவன் போக்குல விடு. உன் குறுக்கு புத்திய காட்ட நினச்சா சொத்தெல்லாம் நான் செத்த பிறகு அனாதை ஆசிரமத்துக்கு சேர்க்கும்படி உயில் எழுதிடுவேன். அவன் தொழில் தொடுங்குறானோ, தோட்டம் வைக்கிறானோ என்ன வேணா பண்ணட்டும். எதுக்கு வீட்டை விட்டு போனான்? அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற வழிய பாரு” பேரனிடம் மறுமுகம் காட்டியவள் மகனை மிரட்டி வைத்தாள்.
“நீ ஊருக்கு அம்மா, எனக்கு வில்லி” முணுமுணுத்த ஆளவந்தான் மகனின் தொழிலில் குறுக்கிடவில்லை.
நிறுவனத்தை தொடங்க தந்தையிடம் கூட பணம் வாங்கவில்லை. ஆளவந்தானின் மகன் என்றால் நகரில் உள்ள பல பேர் முதலீடு செய்திருப்பார்கள். தந்தையின் பெயரை உபயோகிக்கக் கூடாது என்ற முடிவில் இருந்த விக்ரம் நிறுவனத்தை தொடங்க பணம் சேர்ந்த பின் தான் வீட்டில் விஷயத்தை கூறியிருந்தான். வீட்டில் இருந்தால் தந்தையின் தலையீடு அதிகம் என்று தனது உயிர் நண்பனோடு சென்று தங்கிக் கொண்டான்.
ஐந்து வருடங்களாக ஆளவந்தானும் மகனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு தான் இருக்கின்றான். விக்ரம் வீடு வந்த பாடில்லை.
அவனுக்கு திருமணம் நிகழ்ந்தால், மருமகள் என்ற ஒருத்தி வீட்டுக்கு வந்தால், மகனும் வீடு வந்து சேர்ந்திடுவான் என்பது ஆளவந்தானின் எண்ணம் மட்டுமல்ல, சாந்தி தேவியின் நம்பிக்கையும் கூட.
சாந்தி தேவி திருமணம் செய்துகொள்ளும்படி நச்சரித்துக் கொண்டிருக்க, ஆளவந்தானோ ஒருபடி மேல் போய் அவனுக்கு வரன் பார்த்து பெண்களை அவன் காரியாலயத்துக் அனுப்பலானான்.
தொழிலில் சாதித்த பின் தான் திருமணம் என்றிருப்பவனுக்கு தந்தையின் செயல் எரிச்சலை உண்டாக்க, தந்தையோடு பேசுவதையே நிறுத்தியிருந்ததோடு ஆளவந்தானுக்கு குடைச்சல் கொடுக்கலானான்.
ஒரு பிரபல தொழிலதிபரின் மகளை விக்கிரமிடம் அனுப்பி வைத்திருக்க விக்ரமை கோர்ட் சூட்டில் பார்த்து மயங்கியவள் அவனிடம் திருமணத்தை பற்றியும், திருமண வாழ்க்கையை பற்றியும் பேச ஆரம்பித்தாள்.
அவள் உளறுவதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் “உன் மூக்கு ஷார்ப்பா இருக்கு” என்று சம்பந்தமே இல்லாமல் கூற
விக்ரம் தன்னை புகழ்வதாக நினைத்தவள் நாணி சிவந்து தலை கவிழ, அடுத்து அவன் கேட்டதில் அவனை ஏகத்துக்கும் முறைக்கலானாள்.
அவள் முறைப்பதை பொருட்படுத்தாமல் “எந்த ஹாஸ்பிடல்ல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ண? மூக்கை மட்டுமா?” எதோ அவன் கேட்டது அவள் காதில் விழவில்லை என்பது போல் மீண்டும் கேட்டவாறே அவள் மேனியை கண்களால் மேயலானான்.
அவன் பார்வை செல்லுமிடத்தை பார்த்தவள் கோபத்தில் எழுந்து “நல்லவன், வல்லவன் என்று உன் அப்பா சொல்லும் போதே நான் யோசிச்சி இருக்கணும். நீ இருக்குற இண்டஸ்ரில உத்தம்மனுக்கு என்ன வேல? என்ன விலை என்று தானே கேட்பீங்க. பொண்ணுங்க மனச பார்க்காதீங்க. உடம்ப மட்டும் பாருங்க” இன்னும் என்னவெல்லாம் கூறினாளோ எதுவும் பேசாமல் அவளை விக்ரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, மேசையின் மீதிருந்த தண்ணீர் கிளாஸை கையில் எடுத்தவள் அவன் முகத்தில் தண்ணீரை விசிரியடித்தது மட்டுமல்லாது கிளாஸையும் கீழே போட்டு உடைத்து விட்டு கோபம் தணியாமல் அவனை திட்டித் தீர்த்தவாறே வெளியேறினாள்.
ரகுராம் அருகில் இருந்திருந்தால் “இந்த அவமானம் உனக்குத் தேவையா?” என்று கேலியாக புன்னகைப்பான்.
விளம்பர படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த நண்பனை எண்ணியவாறே “என் மூஞ்ச கழுவிட்டுத்தான் இந்த பொண்ணுங்க போகணும் என்பது விதி” என்று புன்னகைத்தவாறே கைக்குட்டையால் முகத்தை துடைப்பவன் தந்தை இன்னொரு பெண்ணை அனுப்பும் வரை அடுத்த வேலையில் ஈடுபடுவான்.
ஆளவந்தான் பெண்களை அனுப்புவதும். அவர்களை துரத்துவதுமாக இருக்கும் விக்ரமை பார்த்து “ஏன்டா நம்ம கம்பனிக்கு மடலா கூட இத்தனை பொண்ணுங்க வந்திருக்க மாட்டாங்க. உங்கப்பா அத்தனை பொண்ணுங்கள அனுப்பியிருக்காரு. ஒன்னு கூடவா பிடிக்கல. பேசாம கல்யாணம் பண்ணிக்க. உங்கப்பா உன்ன தொந்தரவு பண்ண மாட்டாருல்ல” ஆதங்கமாகவே கேட்டான் ரகுராம்.
“என் கனவுல வந்த பொண்ண தேட சொல்லி சொன்னேனே. அவள தேடி கண்டு பிடி அப்போ பண்ணிக்கிறேன். கல்யாணம்” நண்பனை முறைத்தான் விக்ரம்.
“இது உனக்கே நியாயமா இருக்கா? உன் கனவுல வந்த பொண்ணு மூஞ்சி எனக்கு எப்படிடா தெரியும்?” பதிலுக்கு ரகுராம் முறைக்க,
“உயிர் நண்பன் என்று சொல்லுறல்ல. அப்போ கண்டுபிடி” சிரித்தவாறே கூறினான் விக்ரம்.
“போடா” விக்ரமை வசைபாடியவாறு ஆஸ்திரேலியா கிளம்பி சென்று விளம்பர படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டு ஊர் திரும்பிய ரகுராம் அலைபேசியை உயிர்பித்ததும் கிடைத்த செய்தியை பார்த்து விக்ரமின் மீது கொலைவெறியோடு அவனை தேடி வந்தான்.
“என்னடா பண்ணி வச்சிருக்க?”
“என்ன பண்ணேன்?” அறியா பிள்ளை போல் முகத்தை வைத்தவாறே கேட்டான் விக்ரம்.
“நடிக்காத. உங்கப்பா டாச்சர் தாங்களனு இப்படி ஒரு செய்தியை பரப்பி விட்டிருக்க? அறிவிருக்கா?”
“எனக்கு அறிவு இருக்கா? இல்லையானு தான் உனக்கு பிரச்சினையா? அறிவில்லாமலையா இப்படி ஒரு கம்பனியை உருவாக்கி நடத்திக்கிட்டு இருக்கேன். இதுல உனக்கு பத்து பெசன்ட் ஷேர்ஸ் வேற கொடுத்திருக்கேன். அத நெனச்சா எனக்கு அறிவில்லனு தான் சொல்லத் தோணும். நீ என்ன நினைக்கிற?”
தான் என்ன கேட்டால் இவன் எதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றான் என்று நண்பனை முறைத்த ரகுராம் “பேச்ச மாத்தாதே. ஆன்லைன்ல பரப்பி விட்டிருக்கியே அதுக்கு பதில் சொல்லு. என் ரெபியூடேஷன் என்னாகும்? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?”
“உனக்கு உன் கவலை” என்று நண்பனை முறைத்தான் விக்ரம்.
விக்ரம் முறைப்பதையும் பொருட்படுத்தாமல் “உனக்கென்ன உன் அப்பா வாரம் தோறும் ஒரு பொண்ண அனுப்பிகிட்டே இருப்பாரு. எனக்கு யாரு பொண்ணு கொடுப்பா? குடும்ப குத்து விளக்கா ஒரு பொண்ண பார்த்து கட்டணும் என்று இருந்தேன். போச்சு போச்சு எல்லாம் போச்சு” நண்பனை பற்றி பேசினால் இறங்கி வரமாட்டான் என்று தன்னை எண்ணி நோவதாக புலம்பினான் ரகுராம்.
“டேய் சிரிக்கிற மாதிரி காமடி பண்ணுனு உனக்கு எத்தனை தடவ சொல்லுறது? குடும்ப குத்து விளக்காம். நம்ம ஆபிஸ்லயும் தான் ஆறடி உயரத்துக்கு ஒரு குத்து விளக்கு மூலைல நிக்குது அத கட்டிக்க. அதையும் நீ எனக்கு கல்யாணம் நடந்த பிறகு கட்டிக்க” தன் நண்பன் தன்னை பற்றி பேசாமல் அவன் நிலையை எண்ணி புலம்பும் பொழுதே அவன் எண்ணத்தை கணித்த விக்ரம் கிண்டல் செய்யலானான்.
ரகுராமுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் தனக்காக தன் தந்தையையே எதிர்க்கும் நண்பனிடம் கோபம் கொள்ள முடியவில்லை. சட்டென்று யோசித்தவன் “மோகனாவை பத்தி யோசிக்க மாட்டியா? உனக்கு கல்யாணமாகாம அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நிக்கிறாளே. இப்படி ஒரு செய்தி வந்தா அவளுக்கு கல்யாணம் நடக்குமா?”
“நீ எதுக்கு அவள பத்தி கவலை படுற? நீ உன்ன பத்தி மட்டும் யோசி. நாளைக்கு மம்தா கூட அட் ஷூட்டிங் இருக்கு. மீடியா உன்னைத் தேடி வந்து கேள்வி கேட்டே குடைவாங்க. பிளைட்டுல வந்தது ரொம்ப டயடா இருக்குனு உன் மூஞ்சே சொல்லுது. போ போய் ரெஸ்ட் எடு. அப்பொறம் நாளைக்கு ஷூட்டிங்கில் முகம் தொங்கிப் போய்டும்” நண்பனை கலாய்த்தவாறே துரத்தியடிக்கலானான் விக்ரம்.
“நீ எக்கேடும் கேட்டுது தொலை. என்ன உன் கேம்ல இழுக்காதே” இவனிடம் இனி பேசிப் பிரயோஜனமில்லை என்று விக்ரமை திட்டியவாறு அறைக்குள் நுழைந்து கதவை அடித்து சாத்தினான்.
விக்ரமை பற்றி ஆன்லைனில் வந்த செய்தியை பார்த்து கோபம் கொண்ட இன்னொரு ஜீவன் மோகனா.
விக்ரமை அலைபேசியில் பிடிக்க முயன்று தோற்றவள் ரகுராமை அழைத்தாள்.
அலைபேசி சிணுங்கவும் “ஆப் பண்ணி வச்ச போன் எப்படி அடிக்குது?” என்று திடுக்கிட்டவன் தன்னிடம் இருக்கும் மற்றுமொரு அலைபேசி அடிப்பதை பார்த்து “இது வேற” என்ற முணுப்போடு கையில் எடுத்தவன் அதில் மோகனாவின் பெயர் மின்னவும் அறைக்கதவை பட்டென்று திறந்து விக்ரமிடம் ஓடியவன் “டேய் மோகினி காலிங்” என்று கத்த விக்ரம் அலைபேசியை ரகுராமிடமிருந்து வாங்காமலே அலைபேசியை இயக்கியிருந்தான்.
மோகனா “ஹலோ, ஹலோ” என்று கத்த
“எனக்கு இந்த பிசாசுகிட்ட பேச முடியாது” என்று ரகுராம் கத்த, விக்ரம் அலைபேசியை ஸ்பீக்கர் மூடில் போட்டிருந்தான்.
“நான் பிசாசா? ஆமாடா நான் பிசாசு தான். தினமும் ஒரு மாடல் அழகியோட கூத்தடிக்கிறவனுக்கு, என்ன போல சாதாரணமான பொண்ணு உன் கண்ணுக்கு பிசாசா தான் தெரியும்”
“டேய் என்னடா சொல்லுறா இவ? இவ கூட பேசினா எனக்கு பைத்தியம் புடிக்கும். நீயே பேசு” ரகுராம் விக்ரமை பார்க்க, வளமை போல் தங்கைக்கும், நண்பனுக்கும் சண்டையை மூட்டி விட்டு தனது அறைக்குள் சென்று மறைந்தான் விக்ரம்.
“டேய் நல்லவனே” விக்ரமை பார்த்து ரகுராம் கத்த
“டேய் அங்க என்ன பேச்சு? என்கிட்ட பேசு” மறுமுனையில் மோகனா கத்தலானாள்.
“இவளுக்கு என் மேல அப்படி என்ன கோபம் என்று புரியல. எப்போ பார்த்தாலும் கறிச்சி கொட்டிக்கிட்டே இருக்கா. அண்ணனோட பிரெண்டு இவனையும் அண்ணான்னு கூப்டு என்று ஆளவந்தான் சார் சொன்னப்போ. “எனக்கு இருக்குறது ஒரே அண்ணா. அது விக்ரம் மட்டும் தான். கண்டவனையெல்லாம் அண்ணான்னு கூப்பிட முடியாது” என்று மூக்கை ஒடச்சா. அண்ணான்னு கூப்பிடலைனாலும் பரவால்ல மனுஷனா மதிக்கிறாளா? வாடா, போடான்னு மரியாதையே இல்லாம பேசுறா. இவங்கப்பா ஆளவந்த்தான் என்ன தத்தெடுக்காத குறையாக இவ அண்ணனுக்கு பாடிகார்ட் வேல பார்க்க வச்சாரு. இப்பதான் நான் சொந்த கால்ல நிக்கிறேனே இப்ப கூட மதிக்க மாட்டேங்கிறாளே” அலைபேசியை வெறித்தவன் “என்ன சொல்லு?” கடுமையான குரலில் கேட்கலானான்.
“என்ன குரலை உயர்த்துற? நான் என்ன உன் பொண்டாட்டியா? அடக்கமா பேசு?” பதிலுக்கு எகிறினாள் மோகனா.
ரகுராம் கோபத்தில் பேசவும் தான் மோகனாவுக்கு தான் எதற்காக அலைபேசி அழைப்பு விடுத்தோம் என்பதே ஞாபகத்தில் வந்தது. ஆனாலும் ரகுராமிடம் இறங்கி வர விரும்பாமல் “ஆன்லைன்ல இப்படி ஒரு செய்தியை பரப்பி என் அண்ணனுக்கு இப்படி ஒரு அசிங்கத்து தேடித்தந்தது நீதானே. உனக்கு என் அண்ணன் மேல பொறாம. பொறாம புடிச்சவன்” சம்பந்தமே இல்லாமல் ரகுராமை சாடினாள் மோகனா.
“ஐயோ கடவுளே இந்த அண்ணனும் தங்கச்சிக்கும் நடுவுல என்ன நல்லா சிக்க விட்டுட்டியே. ரெண்டும் சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி என் மண்டைய காய விடுதுங்க” தனக்குள் புலம்பினான் ரகுராம்.
“என் அண்ணனை வச்சி கேமா ஆடுற? நான் அடுத்த வாரம் ஊருக்கு வரேன். வந்து வச்சிக்கிறேன் உன்ன”
மோகனா கோபமாக அலைபேசியை அணைத்ததும் “வச்சிக்கிறாளாம். அவளும் அவ மூஞ்சியும். ரெட்டை ஜாடையில் எப்போ பார்த்தாலும் கண்ண கசக்கிக்கிட்டு, மூக்கை சிந்திக்கிட்டு இருப்பா. எதுக்கு அழுறேன்னே சொல்ல மாட்டா. கோபம் மட்டும் வரும்” மோகனா எதுக்கு அழுகிறாள்? எதுக்கு கோபப்படுகிறாள்? எதுக்கு தன்னை அடிக்கிறாள்? என்று புரியாமல், அவளிடம் நெருங்கள் முடியாமல் ரகுராம் புலம்புவது வளமை தான்.
ஆன்லைனில் யாரையோ காதலித்தவள் ஏமார்ந்ததால் கோபம் கொள்வதாக விக்ரம் கூறியிருக்க, அவளிடமும் அவனுக்கு கோபப்பட முடியவில்லை. அவள் மனம் திறந்து பேசுவது விக்ரம் மற்றும் தன்னிடம் தான் என்பதால் அவள் திட்டும் பொழுது வாங்கிக் கட்டிக்கொள்வான்.
நீ கோவபட்டால்
நானும் கோவபடுவேன்
நீ பார்க்காவிட்டால்
நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்
நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும்
சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்
நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால்
மட்டும் உயிரை
விடுவேன்
நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
மோகனா காதலிப்பதே தன்னை தான் என்று ரகுராம் என்று உணர்வானோ?