Advertisement

ஆர்த்திக்கு இடைப்பட்ட நாட்களில் ஆனந்தனை பிடித்தும் போக, இதோ இருவரும் மலர்ந்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தனர். “கடைசில பிடிச்சு தான் போட்டீங்க இல்லை” ஜீவிதா இதுதான் வாய்ப்பென்று ஆனந்தனை வைத்து செய்தாள்.

“நீ மட்டும் என்னவாம். என் நண்பனை பிடிச்சு தான் போட்ட” என்று அவனும் விடாமல் வாயடித்தான்.

அஜய் சிரிக்க, “அஜு” என்றாள் மனைவி. “இப்போ நீங்க எதுக்கு சிரிக்கிறீங்க. அப்படி இல்லைன்னு எனக்கு நீங்க சப்போர்ட் பண்ணனும்” என்றாள்.

“இது வேறயா? அவன் பண்ணிட்டா மட்டும் எனக்கு தெரியாதாக்கும். இதோ உன் மகன் வந்துட்டான் பாரு. அவன்கிட்ட ஓடு, என் நண்பனை என்கிட்ட விடு” என்றான் ஆனந்தன்.

ஜீவிதா கடுப்பாகி மகனை அஜய் கையில் கொடுத்து செல்ல, “மேடம்க்கு இப்போவும் அப்படியே தான் இருக்காங்க” என்றான் ஆனந்தன் சிரிப்புடன்.

ஜீவிதாவிற்கு அவளின் அஜு தான் முதலில். அவனுக்கும் அவள் தான் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அவளே அந்த முதல் இடத்தில் வம்பாக அமர்ந்து கொள்வாள். அது தானே ஜீவிதா!

குறித்த நேரத்தில் ஆர்த்தி கழுத்தில் மாங்கல்யம் சூடினான் ஆனந்தன். இருவரும் கோர்த்த கையை பிரிக்கவில்லை.

பெரியவர்கள் மனதார ஆசீர்வாதம் செய்தனர். காமாட்சிக்கு மகனின் குணத்தில் மகிழ்ச்சியே. இளைய மருமகளை அணைத்து கொண்டார்.

தொடர்ந்த நாட்களின் சடங்குகள் முடிந்து, புது மணமக்கள் தேனிலவு சென்று வந்தனர். அஜய் பொறுமையாக அவர்களை தங்கள் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்தான்.

ஆர்த்தி, ஆனந்தனுடன் மொத்த குடும்பமும் கிளம்பி வந்தது. இங்கு அஜய் வீட்டிலும் அவ்வளவு ஆட்கள்.

ஆர்த்தி கொஞ்சம் மிரண்டு தான் போனாள். “பயப்படாத அஜய் வீட்ல எப்போவும் இப்படி தான்” என்றான் கணவன்.

மணமக்களுக்கான ஸ்பெஷல் விருந்து முடிய, மாலை போல் எல்லாம் கிளம்ப, இவர்களின் மூன்று வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தனர். அங்கேயே இரவு தங்க வேண்டும் என்று சகுந்தலா கேட்டுக்கொண்டார்.

ஆண்கள் அஜய்யின் அலுவலக கட்டிடம் சென்றனர். இடைப்பட்ட மூன்று வருடங்களில், கல்யாணும் வேலையை விட்டு வந்து ஊரிலே செட்டில் ஆகிவிட்டதுடன் தொழிலும் ஆரம்பித்திருந்தான்.

இப்போது சில மாதங்களாக வருமானம் பார்த்து கொண்டிருந்தான். அதுபற்றி அஜயிடம் பேச, அவன் கல்யாண்க்கு இன்னும் சில விஷயங்களை சொன்னான்.

சிறிய பையன் என்றெல்லாம் கல்யாண் நினைப்பதே இல்லை. அஜய் சொல்வதை அப்படியே கேட்டு கொள்வான்.

சேனாதிபதி தொழிலுக்கு முழு பணம் கொடுக்க தயாரன நேரம், அஜய் தான் உறுதியாக மறுத்தான். லோன் போகணும் என்றான். சேனாதிபதிக்கு அவன் சொல்வது புரியாமல் இல்லை. ஆனால் மகனுக்காக யோசித்தவர், பாதி பணம் மட்டும் கொடுத்தார்.

கல்யாண்க்கு அதில் வருத்தமா என்று பெண்கள் தான் பயம் கொள்ள, அவனோ சாதாரணமாக அதை ஏற்று கொண்டதுடன், “லோன் என் பொறுப்பு. வருமானத்துல கட்டி முடிப்பேன்” என்றான் உறுதியாக.

அஜய்க்கு அவன் குணம் இப்போதெல்லாம் பிடிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் நெருங்கி வருகிறான்.

பலராம்க்கு இரு மருமகன்களும் தொழிலில் நன்றாக முன்னேறியிருக்க, அளவில்லா பெருமை. நிச்சயம் தான் பார்த்திருந்தாலும் இந்தளவு மாப்பிள்ளைகள் இருந்திருக்க மாட்டார்கள் என்பதை முழுமையாகவே உணர்ந்து கொண்டார் மனிதர்.

தொடர்ந்து இரவு உணவு முடிந்து பேச்சு நீண்டு கொண்டே சென்றது. சங்கருக்கு ஓய்வு தேவைப்படவே எல்லாம் தூங்க சென்றனர்.

ஜீவிதா செல்லும் கணவனுக்கு கண் காட்டியவள், வீட்டாளாய் எல்லாம் சரி பார்த்து அறைக்கு சென்றாள்.

அங்கு தூங்கி கொண்டிருந்த கணவனை பார்த்ததும் மூச்சின் சூடி ஏறியது. கதவை லாக் செய்தவள், கணவன் முன் கோவமாக நின்றாள்.

மகன் தொட்டிலில் இருக்க, அஜய் குறுக்காக கட்டிலில் விழுந்திருந்தான். தூங்கவில்லை. அவனின் ஆட்டக்காரி ஆடும் ஆட்டத்தை பார்க்கும் ஆவல் அவனுக்கு.

ஜீவிதாவோ கடுப்பில் அவன் பக்கம் இடித்து கொண்டு அமர்ந்தாள். அஜய், அசைய வேண்டுமே.

“அஜு” என்று அவன் தோள் தட்டினாள்.

“ம்ப்ச் என்னடி” என்றான் கண்களை திறக்காமல்.

“நான் உங்களுக்கு கண் காட்டினேன் இல்லை. ஏன் தூங்குனீங்க?” என்று கேட்டாள்.

“என்ன கண் காட்டின?” அஜய் அப்படியே கேட்க,

“அஜு கண்ணை திறங்க” என்று அவன் இமைகளை பிரித்தாள்.

“ஜீவிதா” கணவன் அதட்டி அவளை முறைத்தான்.

“தூங்கிட்டிருக்கிறவனை எழுப்பி என்ன விளையாண்டுட்டு இருக்க”

“எனக்கு பலாப்பழம் வேணும் அஜு” என்றாள் மனைவி.

அஜய் உள்ளுக்குள் சிரித்தவன், “இந்த நடுராத்திரியிலவா. பேசாம போய் படு” என்றான்.

“முடியாது. நீங்க என்னை பாருங்க முதல்ல. எனக்கு பழம் வேணும் தான்”

“ஜீவிதா இந்த நேரத்துக்கு நான் போய் பழம் எடுக்கவா?”

“நான் எடுத்து வைச்சுட்டேன்” என்று பாக்ஸுடன் அவனருகில் வந்தாள்.

“அப்போ சாப்பிட வேண்டியது தானே” அஜய் மறுபக்கம் திரும்பி படுக்க,

மனைவி கடுப்பாகி அவன் வெற்று தோளில் கடித்து வைத்தாள். “ஸ்ஸ் என்னடி” அஜய் கேட்க,

“நீங்க தான் பழம் அஜு. எனக்கு பலாப்பழம் ஒன்னும் வேணாம் போங்க” என்றாள்.

“சரி போய் படு”

“அஜு” என்று அவன் மேல் நன்றாகவே வெய்ட் கொடுத்து படுத்து கொண்டாள்.

அஜய் அவளை பாதுகாப்பாக வளைத்து கொண்டவன், “ஆட்டக்காரிக்கு ஆடாம இருக்க முடியாதா?” என்று கேட்டான்.

“நீங்க என்னோட சேர்ந்து பழம் சாப்பிடுவீங்களாம், நான் ஆடாம இருந்துப்பேனாம்” என்றாள் சமர்த்தாய்.

“இப்படி சொல்லி தான் அபிஜித் வந்ததா எனக்கு ஞாபகம்” அஜய் சொல்ல,

“அப்படியா எனக்கு தெரியாதே அஜு” என்றாள் மனைவி நல்லவளாக.

“இப்போ தெரிஞ்சிடுச்சு இல்லை. கீழே இறங்கி படு” என்று அவளை விலக்க பார்க்க,

“நோ என் அஜு என் உரிமை” என்று இன்னும் இறுக்கமாக படுத்து கொண்டவள், “ஒரு பழத்துக்காக ஓவரா பண்ணாதீங்க அஜு” என்றாள்.

“அது பழமா மட்டும் இருந்தா நான் ஏண்டி வேணாம்ன்னு சொல்ல போறேன்” என்று அஜய் சொல்ல,

போங்க என்று மனைவி விலகி படுத்து கொள்ள போக, அஜய் அவளை பிடித்து கொண்டவன், “சரி எடு” என்றவனின் பார்வை மாறித்தான் போயிருந்தது.

ஜீவிதா உற்சாகமாக எழ போக, அஜய் எட்டி அவளை எடுக்க வைத்தவன், “இப்படியே சாப்பிடுவோம்” என்றான்.

ஜீவிதா கண்கள் விரிக்க, ஒரு பழத்தையே இருவரும் சாப்பிட்டனர். நான்கு உதடுகளும் அதில் கலந்து கொண்டது.

 பழம் தீர தீர உதடுகள் நெருங்கியது. ஒட்டிக்கொண்டது. இணைந்து கொண்டது.

உதடுகள் போலவே அவர்களின் உடலும் ஒருவருக்குள் ஒருவர் இணைந்து போக, ஜீவிதாவின்  தான் அஜு தான் அறை எல்லாம்.

“ஷ்ஷ் மகன்டி” கணவன் அவள் வாய் மூட,

“நீங்க தான். உங்களை பாருங்க” என்று மனைவி அவனை தவிக்க வைத்தாள்.

நேரம் அன்று வழக்கத்தை விட நீண்டு போக, மகன் விழித்துவிட்டான். இருவரும் பெற்றவரின் கடமை முடித்து, திரும்ப கட்டிலில் இணைந்தனர்.

அணைப்பில் நெருக்கம் கண்டு ஒருவர் முகம் ஒருவர் பார்த்திருக்க, ஜீவிதா கணவன் உதடுகளில் உதடு பதித்தாள்.

நிமிடம் விட்டு திரும்ப உதடுகள் இணைத்தாள். இணைத்து கொண்டே இருந்தாள். அவளுக்கான பிடித்தம் அது.

அடிக்கடி அவள் இப்படி செய்வதுண்டு என்பதால் அஜய் ரசித்து கொண்டிருந்தான்.

“என் அஜு நீங்க” என்றாள் மனைவி.

அஜய் அப்படியா என்று எப்போதும் போல் வம்பு செய்தான். “ஆமா தான்” என்று வலுவாக முத்தம் வைத்து கடித்தாள்.

“ஸ்ஸ்ஸ் உன் ஆட்டத்தை என் உதட்டுல ஆடாதடி ஆட்டக்காரி. தாங்காது” என்றான் கணவன்.

“அப்போ என் அஜு நீங்கன்னு சொல்லுங்க” என்றாள்.

“உன் அஜுன்னா நீ தாண்டி சொல்லணும். நான் ஏன்?” என்றவன் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

மனைவி உடனே உதடு சுளிக்க, “இன்னமும் இங்க முத்தம் கொடுத்தா அவ்வளவு தான். இப்போவே லைட்டா வீங்கி இருக்குடி” என்று அவளின் உதடுகளை வருடி கொடுத்தான்.

“அதுக்கு மருந்து போடுறேன்னு கொடுக்கணும்”

“மருந்து போட்டதனால தான் காயமே”

“அப்போ மருந்து சரியில்லையோ” மனைவி குறும்பாக கேட்டாள்.

“தூண்டிவிடுறேன்னு தெரியுதுடி கேடி” என்றவன், அவளின் உதடுகளை அடுத்து நெருங்கவே இல்லை.

ஜீவிதாவிற்கு அஜு இன்னும் இன்னும் அவளை கவர்ந்திழுப்பவன்.  “என் அஜு நீங்க” என்று சொல்லி கொண்டே இருந்தாள்.

அஜய்க்கு அவளின் அந்த வார்த்தைகள் நதியின் ஜதியாக ஒலித்தது.

பிறந்ததில் இருந்து இப்போது வரை, இனியும் கூட இறுதி வரையிலும் அவளின் ஜதி அவன் மட்டுமே!

ஜீவிதா எனும் நதியின் ஒரே ஜதி அஜய் என்பவன் மட்டுமே!

மாற்றம் என்பது எப்போதும் இல்லை.

மாற்றமே தேவையில்லாதது.

ஜீவிதாவிற்கு அவளின் அஜு போதும்.

Advertisement