நதியின் ஜதி ஒன்றே! 24 15759 நதியின் ஜதி ஒன்றே! 24 அஜய், ஜீவிதா இருவரும் விமான நிலையத்தில் இருந்தார்கள். தேனிலவிற்கான பயணம் இது. மணாலி செல்கின்றனர். வழியனுப்ப தயாரான இருவீட்டினரையும் மறுத்துவிட்டனர். கல்யாண் மட்டும் வந்து டிராப் செய்துவிட்டு சென்றான். “ஹனிமூன் போற போல. உன் வயசு தான்டா எனக்கும்” ஆனந்தன் கடுப்பில் போன் செய்து பெரு மூச்சுவிட்டான். “மாமாகிட்ட பேச சொல்லுங்க. உடனே அவரும் ஹனிமூன் போலாம்” ஜீவிதா பக்கத்தில் இருந்து சொன்னாள். “அவர்கிட்ட பேசுறதுக்கு நான் சும்மாவே இருக்கலாம். உனக்கு தெரியாதுடா மச்சான் இப்போ எல்லாம் அவர் எந்த கல்யாணத்துக்கு போனாலும் அந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னு நான் தான் அதிகம் வேண்டுறேன்” என்றான் ஆனந்தன். “ஹாஹா” அஜய் சிரித்துவிட்டான். “நீ ஏண்டா சிரிக்க மாட்ட. கல்யாணம் கட்டிக்கிட்ட, ஹனிமூன் வேற போக போற. சிரிடா, இன்னும் நல்லா சிரி” ஆனந்தன் பொங்கி கொண்டிருக்க, “மாமா அவர்கிட்ட பேசணுமாம். உடனே பேச சொல்லுங்க” என்றாள் ஜீவிதா பக்கத்தில். “அப்பா எதுக்கு என்கிட்ட பேசணுமாம். டேய் இன்னைக்கு அவர் எங்கேயாவது வெளியே போனாரா என்ன? ஆத்தி நான் இல்லை” என்று வைத்து ஓடிவிட்டான் அவன். “ஆட்டக்காரி அவனை எதுக்கு பயமுறுத்தின?” அஜய் மனைவியை கேட்க, “பின்ன சும்மா புலம்பிக்கிட்டே இருந்தா, மாமாகிட்ட சொன்னா நாளைக்கே கல்யாணம் பண்ணி வைக்க போறார். அதுக்கு போய் என்னமோ” என்றாள் ஜீவிதா. “உனக்கு நான் அவன்கிட்ட பேசுறது காண்டு” அஜய் சரியாக கேட்க, “ஆமா தான்” என்றாள் மனைவி. “ஒரு அஞ்சு நிமிஷத்துல என்ன ஆகிடும். அவனே எப்போவாது கூப்பிடுவான்” என்ற அஜய் திரும்ப ஆனந்தனுக்கு அழைத்து பேசினான். ஜீவிதா கணவனை முறைத்து தள்ளி சென்றமர்ந்தாள். எல்லா பார்மாலிட்டி முடிந்துவிட்டதால், ஓய்வாக அமர்ந்திருந்தனர். ஜீவிதாவிற்கு சில நிமிடங்களிலே போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அஜய் பேசி முடித்தும் இவளை கண்டுகொள்ளாமல் போனிலே இருந்தான். திரும்ப கணவனிடம் செல்ல கௌரவ பிரச்சனை. “எங்க திரும்பி வந்துட்ட?” என்று கேட்டுவிட்டால் ரோஷத்துக்கு பங்கம் வந்துவிடும். என்ன செய்வது என்று சுற்றி பார்த்து கொண்டிருக்க, ஒரு பெண் அஜயிடம் சென்றாள். ‘யார் அது?’ என்று மனைவி பார்த்திருக்க, அஜயும் அந்த பெண்ணும் ஒரு நட்பு அணைப்புடன் பேச ஆரம்பித்தனர். இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி தான். அந்த பெண் கையை ஆட்டி ஏதேதோ பேசி கொண்டிருந்தாள். இடையிடையே அஜய் தோளிலும் தட்டினாள். மனைவிக்கு பொங்க ஆரம்பித்தது. ‘கண்ட்ரோல் ஜீவி‘ தனக்கு தானே சொல்லி கொண்டாள். கிட்ட போலாமா? நம்மளை கூப்பிட்டு அறிமுகமும் பண்ண மாட்டேங்கிறாரே? பேட் அஜு! சில நிமிட பேச்சிற்கு பின் அந்த பெண் திரும்ப அஜயை அணைத்து செல்ல, மனைவி இங்கு உர்ரென்ரானாள். அஜய் திரும்ப அவன் போனில் பிசியாக, ஜீவிதா அதற்கு மேல் முடியாமல் கணவன் பக்கம் சென்றமர்ந்தபடி, “யார் அது அஜு” என்று கேட்டாள். அஜய் அவளை திரும்பி ஒரு மாதிரி பார்த்தவன், “உனக்கு அவளை தெரியலையா?” என்று கேட்டான். “தெரியாம தானே கேட்கிறேன் அஜு“ “என்னோட எக்ஸ்” என்றான் கணவன். “ஆஹ்ன்” மனைவி அந்த பெண் சென்ற இடத்தை பார்த்து, கணவனை பார்த்தாள். “அன்னைக்கு ஏதோ எங்களை பார்த்துட்டு அழுத சொன்ன” அஜய் கேட்க, “எனக்கு அவங்க பேஸ் ஞாபகம் இல்லை. உங்க கை பிடிச்சது மட்டும் தான் ஞாபகம் இருக்கு” என்றாள் இப்போதும் பொறுமலாக. அஜய் உதட்டுக்குள் சிரிக்க, “அதென்ன உங்க தோள் தட்டி தான் பேசுவாங்களா? போகும் போதும் ஹக் பண்ணனுமா?” ஜீவிதா மனைவி ரூபம் எடுத்தாள். “அதெல்லாம் இப்போ சாதாரணம் ஆகிடுச்சு” அஜய் சொல்ல, “அதுக்காக நீங்களும் பண்ணனும்ன்னு இல்லை அஜு. என் வைஃப்க்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு கை கொடுங்க அஜு“ “பொண்டாட்டி அதிகாரமா மேடம்? கை கொடுத்தாலும் டச் ஆகுமே? பேசாம வணக்கம் வைச்சிடவா?” “அஜு“ “கொட்டிடுவேன். ஏர்போர்ட்ல இருக்கேன்னு பார்க்கிறேன்” “அஜு நான் தான் கோவப்படணும்“ “எதுக்கு கோவப்படணும்? ப்ரெண்ட்லி ஹக்குக்கா? பொஸசிவ் இருக்கலாம். ஆனா நீ பொஸசிவ் வைக்கிற அளவு இங்க எதுவும் நடக்கலை. கட்டிப்பிடிக்கிறதுக்கு கூட ஒரு வரைமுறை இருக்கு. நீயும் நானும் கட்டிபிடிக்கிறது வேற. நம்மளோட ஹக் ரொம்ப டீப். மீதி எல்லாம் லைட். இதுக்கு மேல எப்படி சொல்லன்னு எனக்கு தெரியல. நான் இப்படி தான் இருப்பேன். பொஸசிவ்ன்னு என்கிட்ட பஞ்சாயத்து தூக்கிட்டு வந்த பொண்டாட்டின்னு கூட பார்க்க மாட்டேன் பார்த்துக்கோ” என்றான் மிரட்டலாக. ஜீவிதா அமைதியாக இருக்க, “ஆமா இதென்ன பழக்கம் தள்ளி இருந்து பார்க்கிறது? ஆஹ்?” அஜய் கேட்க, “நீங்க கூப்பிட வேண்டியது தானே?” மனைவியும் கேட்டாள். “உனக்கு அவளை தெரியும். பேச விருப்பம் இல்லைன்னு நினைச்சேன்“ “இப்போவும் விருப்பம் இல்லை தான் அஜு. நீங்க என்னை ரொம்ப மிரட்டுறீங்க, நான் உங்கிட்ட பேசமாட்டேன். போங்க” என்று திரும்ப தள்ளி சென்றுவிட்டாள். விமானத்திற்கும் அழைப்பு வந்துவிட்டது. இருவருக்கும் அருகருகே தான் இருக்கை. மனைவி ரோஷத்துடன் பேசாமலே பயணத்தை தொடர்ந்தாள். அஜய் இடையிடையே குடிக்க, சாப்பிட கேட்க எல்லாவற்றுக்கும் மறுப்பு தான். “ரூம்க்கு வாடி உன்னை வைச்சுக்கிறேன்” என்றான். “நானும் தான்” மனைவியும் சொன்னாள். “ஆட்டக்காரி ஆட ஆரம்பிச்சுட்டா” மனைவிக்கு கேட்க முணுமுணுத்தான். “நீங்களும் சேர்ந்து தானே ஆடுறீங்க அஜு. என்னை மட்டும் சொல்றீங்க?” இருவரும் வெகு அருகே முகம் வைத்து சண்டை. “பேசாத. உதட்டை கடிச்சிடுவேன்” அஜய் சொல்ல, “நானும் தான் கடிப்பேன்” என்றாள் மனைவி. அஜய்க்கு மனைவியின் ஈர இதழ்களை இப்போதே கடிக்கும் வேகம். இருக்கும் இடம் உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன், “ரூம்ல போய் வைச்சுக்கிறேன் கச்சேரி” என்றுவிட்டான். ஜீவிதாவிற்கு கணவனின் மாற்றம் கோவத்தில் இனம் காண முடியவில்லை. உதட்டை சுளித்து தன் சீட்டில் சாய்ந்து கொண்டாள். பயணம் இரவு முடிவுக்கு வந்து அறைக்கு வந்தார்கள். ஜீவிதா குளிருக்கு உடை அணிய, அஜய் டீஷர்ட்டை கழட்டி விசிறிவிட்டு, கட்டிலில் குப்புற விழுந்தான். ஜீவிதா கண்கள் கணவனின் வெற்று முதுகில் படிந்தது. ஜீன்ஸ் மட்டும் அணிந்து படுத்திருக்க, தானும் அவன் மேல் படுத்து விடுவோமா என்று பார்த்தாள். ‘நோ. சண்டை ஜீவி‘ என்று ரோஷம் அவளை தடுத்தது. ஆனாலும் ஆசை இருக்க இருக்க கூடி போனது. கணவனையே பார்த்திருக்க, அஜய் உதடுகளில் குறுஞ்சிரிப்பு. “எதுக்குடி என்னை இப்படி பார்க்கிற. நமக்குள்ள தான் சண்டை ஆச்சே” என்றான் கிண்டலாக. “ஆஹ்.. நான் எங்க பார்த்தேன்” மனைவி உடனே பல்டி அடித்தாள். “பார்க்கலை சொல்லி இன்னும் என்னை தான் பார்த்திட்டிருக்க ஆட்டக்காரி” அஜய் அவள் பக்கம் திரும்பி படுத்தான். “சரி பார்த்தேன். என் அஜு. நான் பார்ப்பேன்” என்றாள் மனைவி. அஜய் நன்றாகவே சிரிக்க, “அஜு சிரிச்சு என்னை இன்சல்ட் பண்ண கூடாது” என்ற மனைவி அவன் மேல் வேகமாக வந்து படுத்து கொண்டாள். அப்படி ஒரு மகிழ்ச்சி பெண்ணுக்கு. நன்றாக ஒட்டி, இறுக்கி கொண்டாள். “ரொம்ப வெய்ட் கொடுக்காதடி” அஜய் சொல்ல, “நீங்க மட்டும் அப்போ கொடுக்கிறீங்க” என்றாள் மனைவி கண்ணடித்து. “அடிக்கேடி. அது. அது. ஆட்டக்காரி உன்னை” என்றவனின் காது, கன்னம் எல்லாம் வெட்கத்தில் சிவந்து போனது. ஜீவிதா சிவந்த இடங்களில் எல்லாம் இதழ் பதித்து இன்னும் சிவக்க வைத்தாள். “கோவம் போச்சு போல” அஜய் திரும்ப பார்க்க, “நோ அஜு இப்படியே இருக்கலாம்” என்றாள் மனைவி. “சரி இருக்கலாம். ஆனா செகண்டுக்கு ஒரு முத்தம் கொடுக்கணும்” கணவன் டீல் பேசினான். “டபுள் ஓகே” மனைவி சொல்ல, அஜய்க்கு அவளை கட்டி கொள்ளும் வேகம். அவள் தான் விட மாட்டேங்கிறாளே? “உங்களுக்கும் கோவம் போச்சு தானே அஜு” மனைவி கேட்க, “இது கோவம் எல்லாம் இல்லை” என்றவன், “உண்மையிலே உனக்கு அவளை ஞாபகம் இல்லையா?” என்று கேட்டான். “இல்லை அஜு. நீங்க அவங்க கை பிடிச்சது மட்டும் தான் இப்போவும் ஞாபகம் இருக்கு” என்றவள் முத்தத்திற்கு பதில் கடியை பரிசளித்தாள். “ஸ்ஸ்ஸ் ஏண்டி“ “அன்னைக்கு நான் அழுதேன் இல்லை. அதுக்கு தான்“ “இத்தனை வருஷம் கழிச்சாடி பழி வாங்குவ?” “இன்னும் முடிக்கல. ஞாபகம் வரும் போதெல்லாம் இது தொடரும்“ “ரொம்ப நல்லது” என்றவன், “அவ பேர் ரம்யா” என்றான். “அஜு. ப்ளீஸ் நீங்க அவங்களை இப்படி அட்ரஸ் பண்ணாதீங்க. வாங்க, போங்க பேசுங்க. அவங்க மட்டுமில்லை வேறெந்த பொண்ணையும் தான்” என்றாள் மனைவி இடையிட்டு. தன் மீதான அவளின் விருப்பத்தின் தீவிரம் அஜய்க்கு தீரா ஆச்சரியம்! ஆனால் அவள் சொல்வதிலும் நியாயம் இருக்க ஏற்று கொண்டான். எல்லா பெண்களும் மரியாதைக்கு உரியவர்கள் தானே! “சரி அவங்க ரம்யா. ஒரு வருஷம் என்னோட டீம்ல ஒர்க் பண்ணாங்க. இரண்டு பேருக்குள்ளும் ஒரு நல்ல புரிதல். பிடிச்சது. ஆஅஹ்“ மனைவி கடித்துவிட்டாள். “ஆட்டக்காரி இப்படி பண்ணா எப்படி சொல்றது” அவன் கடிந்தான். “நீங்க சொல்லுங்க அஜு. எனக்கு பிடிக்கலைன்னா இப்படி தான் பண்ணுவேன்” என்றவளுக்கு கோவம் தான். “வயசு பையன்டி நான். எனக்கு ஒரு பொண்ணை பிடிக்கிறது அவ்வளவு பெரிய க்ரைம் இல்லை” “உங்களுக்கு நான் இருக்கேன், என்னை தானே உங்களுக்கு பிடிக்கணும்“ “இந்த ஆட்டக்காரிக்கு இப்படி ஒரு கிறுக்கு இருக்கும்ன்னு எனக்கெப்படி தெரியும்“ “அது எல்லாம் எனக்கு தெரியாது. நீங்க மேல சொல்லுங்க“ “மேல சொல்ல எல்லாம் ஒன்னுமில்லை. பிடிச்சதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகலாம்ன்னு நினைச்சோம். அன்னைக்கு மீட் பண்ணி அதை தான் பேசினோம். என்னோட ஊர்ல செட்டில் ஆகிற பிளான் நான் சொல்ல, அவளோட சிட்டில செட்டில் ஆகிற பிளானை அவ. சாரி அவங்க சொன்னாங்க“ “அங்கேயே எல்லாம் பிரேக் ஆகிடுச்சு. அவங்களுக்காக என்னோட பிளானை விட்டு கொடுக்க எனக்கு தோணலை. பீலிங் இருந்தது. ஸ்ஸ்ஸ். ஜீவிதா. இனி கடிச்சா கொன்னுடுவேன் பார்த்துக்கோ. பிடிச்சது சொல்றேன், பீலிங் இல்லாம இருக்குமாடி. சொல்றதை சரியா சொல்லணும்“ “ரம்யா அப்புறமும் பிளான் மாத்திக்க சொல்லி ரொம்ப கேட்டு பார்த்தாங்க. எனக்கு பேமிலி பார்க்கணும். என்னோட கமிட்மெண்ட்ஸ் அவங்களை விட மேலா தெரிஞ்சது. அதிலே என்னை நான் புரிஞ்சுக்கிட்டேன். உறுதியா சொல்லி வேலையை விட்டு ஊருக்கு வந்துட்டேன்“ “இப்போவும் சோஷியல் மீடியால டச் உண்டு, என்னோட லிமிட் எனக்கு தெரியும். அவங்களுக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. இரண்டு பேரும் கொஞ்சம் ஈஸியாவே மூவ் பண்ணிட்டோம். இவ்வளவு தான் விஷயம்” என்று முடித்தான் அஜய். ஜீவிதாவிடம் பேச்சில்லை. முத்தமும் இல்லை. பெண் அவன் மேலே அமைதியாக படுத்திருந்தாள். அஜயும் நேரம் கொடுத்து அப்படியே படுத்திருந்தான். “ஆனாலும் கொஞ்சம் கோவம் இருக்கு அஜு” என்றாள் மனைவி மௌனத்தை உடைத்து. “ கோவம் போக ஒன்னும் பண்ண முடியாது” என்றான் கணவன். “அஜு“ “ஜீவிதா. நம்ம ரிலேஷன்ஷிப் எல்லோரதும் போல இல்லை. ரம்யாக்கு மட்டுமில்லை எனக்கும் அவங்களை பிடிச்சது. ஆனாலும் அவங்களுக்காக என்னோட பிளானை மாத்திக்க நான் தயாரா இல்லை. ஆனா உன் விஷயத்துல உனக்கு என்னை பிடிச்சது. என்னால உன்னை மறுக்க முடியாது. மறுக்கவும் மாட்டேன்“ “நீ நான் பார்த்து வளர்ந்த ஜீவிதா. எனக்கு நீ எப்போவும் ஸ்பெஷல். உன்னை மீறி நான் இன்னொரு பொண்ணை கட்டுறது எல்லாம் கஷ்டமான விஷயம். அப்பாவும் அதை தான் சொன்னார்“ “மாமாவா“ “ஆமா. இத்தனைக்கும் அவருக்கு நீ கத்துறது ரொம்பவே பயம் தெரியுமா?” என்றான் சிரிப்புடன். “அஜு அது அப்போ சின்ன பிள்ளையில” மனைவி சிணுங்கினாள். “ஹாஹா. அவருக்குமே உன்னை விட்டு வேற பொண்ணை கட்ட மனசில்லை. ஒருவேளை அவர் உறுதியா மறுத்திருந்தா நாம என்ன பண்ணி இருக்க முடியும்ன்னு எனக்கு தெரியல“ “அக்கா கல்யாணத்துல அப்பா பண்ணதுக்கு மாமா என்னை வேணாம்ன்னு சொல்லியிருந்தாலும் சரியா தான் இருந்திருக்கும் அஜு” மனைவி இப்போதும் வருத்தம் கொண்டாள். “உன் அப்பாக்கும் அவர் பக்க நியாயம் இருக்கு ஜீவிதா. நமக்கே பிள்ளைங்க பிறந்து, அவங்க கல்யாண விஷயத்துல பக்கத்து வீட்டுக்காரங்க முடிவு எடுத்தா நமக்கும் இதை விட அதிகமா கோவம் வரும்“ “அதென்ன நமக்கே?” “மக்கு வேறெப்படி சொல்றது? பேசுற விஷயத்தை கவனிடின்னா எங்கேயோ போறா?” கணவன் கடிந்தான். “நாம ஓயாம வேலை பார்க்கிறதுக்கு சீக்கிரம் பாப்பா வந்திடும் அஜு. கொஞ்சம் குறைச்சுக்கலாமா?” என்று கவலையாக கேட்டாள் மனைவி. “அடிப்பாவி” அஜய் திரும்பி அவளை தன் முகத்திற்கு கொண்டு வந்தான். “சும்மா இருக்கிறதுக்கு எதுக்குடி ஹனிமூன் வரணும். கேடி நீயே அதுக்கு தானே முதல்ல ஹனிமூன் கேட்டதுக்கு வேணாம்ன்னு சொன்ன?” என்று குறுகுறு பார்வையுடன் கேட்டான். “அஜு” பெண் வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் வைத்து கொண்டவள், “பின்ன சும்மா இருக்க எதுக்கு ஹனிமூன் வரணும். அதுக்கான மீனிங் கொஞ்சமாவது வேணும் இல்லை” என்றாள். “கொஞ்சம் எல்லாம் இல்லை. நிறையவே வேணும். பாப்பா வரட்டும்“ “அஜு. பாப்பா வந்தா நமக்கு கேப் வந்திடும்“ “ஜீவிதா“ “நோ அஜு. நமக்கு இப்போ வேணாம். எனக்கு உங்களோட நிறைய இருக்கணும்“ “இனி என்ன பண்ண முடியும். ஆல்ரெடி பாப்பா வந்திருந்தா?” “அஜு” “சரி சரி அழுகாத. எல்லாம் சரியா நடக்கும், நீ இதை எல்லாம் விட்டுட்டு, எனக்கு கடிக்க இடம் கொடு” என்றான் கணவனாக காரியத்தில் கண்ணாக. “கொடுக்க மாட்டேன் போங்க“ “ஆட்டக்காரி நீயே கொடுத்தா சீக்கிரம் விட்டுடுவேன். டேமேஜும் அதிகமா இருக்காது. பார்த்துக்கோ” என்றவன், அவள் டீஷர்ட்டிற்குள் கைகளை நுழைத்தான். “அஜு” பெண் சிலிர்த்து அவன் கைகளை தடுக்க, “அப்போ நீயே கொடு. கிட்ட வா” என்று அவளை அப்படியே இழுத்து தன் உதட்டுக்கருகில் அவள் உதடுகளை கொண்டு வந்தான். “பிளைட்டிலே இது என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணிடுச்சு” என்று அவன் உதடுகளை ஈரம் செய்தவன், அடுத்து மனைவி உதடுகளையும் ஈரம் செய்ய ஆரம்பித்தான். தேனிலவு வந்ததற்கான நியாயத்தை தொடர்ந்த நாட்களில் செய்தனர்.