நதியின் ஜதி ஒன்றே! 23 2 14643 “புரியுது அத்தை” மருமகள் கேட்டு கொண்டாள். பேச்சு அதனோடு முடிந்து, இரவு உணவையும் உண்டு, அறைக்கு வந்தனர். அஜய் ஓய்வறை சென்று வர, “உங்களுக்கு என்னோட சர்ப்ரைஸ் பிடிக்கலையா அஜு?” என்று கேட்டாள் மனைவி. “இன்னமும் இதை சர்ப்ரைஸ்ன்னு நினைச்சிட்டு இருக்கியா மக்கு” அவள் தலை பிடித்து ஆட்டினான் கணவன். “அப்போ நான் வருவேன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? அக்கா சொல்லிட்டாளா?” என்று கேட்டாள். “அவ ஏன் சொல்லணும். ஜீவி பொண்ணை எனக்கு தெரியாதா?” என்றபடி அவளை தன் நெஞ்சோடு அணைத்து படுத்து கொண்டான். “எப்படி தெரியும்?” மனைவி கேட்க, “இப்படி” என்று அவள் உதடுகளோடு இணைந்தான். ஆழ்ந்த தொடர் முத்தம். கைகளும், கால்களும் பிணைய, உடல்கள் நெருக்கம் கூடிய முத்தம். “இதுக்கப்புறமும் ஆட்டக்காரிகிட்ட எந்த கிறுக்குத்தனமும் இருக்காதுன்னு எனக்கு தெரியும்” என்றான். ஜீவிதா புருவம் தூக்கி பார்க்க, “என் முத்தம் என் மனசை உனக்கு சொல்லிச்சு தானே? அப்பறம் என்ன பார்வை?” என்று அவள் உதடுகளை வருடினான். ஜீவிதா அதை ஏற்று கொண்டாள். அஜுக்கும் என்னை பிடிக்கும். என்னை போல அவருக்கும் என் மேல் விருப்பம் இருக்கு என்பதை அவனின் முத்தத்தை வைத்து தானே மனைவி உணர்ந்து கொண்டாள். அடுத்து வந்த நாட்களில் அவளின் உறுத்தல், சஞ்சலம் எல்லாம் அவளை தடுக்கவில்லை. அஜுவை இனியும் பிரிந்திருக்க முடியாது என்று தோன்றி, வேலையை ஒரேடியாக விட்டுவிட்டாள். அஜய்க்கு இவளின் குணங்கள் எல்லாம் பழகியது தான். ஆனாலும் பணம் கட்டி வெளியே வந்ததை அவன் ஆதரிக்கவில்லை. “மூணு மாசத்துல என்ன ஆகிடும்ன்னு பணம் கட்டி வெளியே வந்த?” என்று வருடிய உதடுகளை லேசாக நிமிட்டி கேட்டான். “நான் அம்மா கூட ஆகலாம் அஜு” பெண் பட்டென சொல்லிவிட்டாள். அஜய் தான் அதிர்ந்து, அவள் தலையில் கொட்டி வைத்தான். “ஸ்ஸ்ஸ். அஜு“ “வலிக்கட்டும். நீ மட்டும் என் பொண்டாட்டியா இல்லாம போயிருந்தா உன்னை தொலைச்சிருப்பேன்” என்றான் மிரட்டலாக. “இப்போவும் என்ன பண்ண வேண்டியது தானே” மனைவி மூக்கை சுருக்கினாள். “பண்ணா நான் அப்பா ஆக முடியாதே. அதனால பார்க்கிறேன்” என்றான் கணவன். “அஜு நீங்க தான் கேடி. போங்க” பெண் சிணுங்கி அவன் நெஞ்சில் முகத்தை வைத்து கொண்டாள். அஜய் சிரித்தவன், மனைவி தலையை வருடி கொடுக்க, அந்த இரவு அவர்கள் தூக்கத்தில் முடிந்தது. மறுநாளில் இருந்து ஜீவிதா மாமியார் வீட்டில் செட்டில் ஆக ஆரம்பித்தாள். சகுந்தலா, சங்கரிடம் பெரிதான கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும், அவளுக்கான பொறுப்பை பெண் எடுத்து செய்தாள். சகுந்தலா மருமகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி கொடுத்தார். ஜீவிதா தினமும் முந்திரி காட்டுக்கு சென்றாள். அங்கு நடக்கும் வேலைகளை மாமியாருடன் சேர்ந்து மேற்பார்வை பார்த்தாள். அஜய் மனைவிக்காக ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்தான். சகுந்தலா காரை தவிர்த்து மருமகள் வண்டியில் ஏறி கொண்டவர், “மாமியார்ன்னு கீழே தள்ளி விட்டுடாத” என்றார். “ஐடியா சொல்லி கொடுத்ததுக்கு நன்றி மாமியாரே” என்று மருமகள் வேகத்தை கூட்ட, சகுந்தலா திட்டினாரோ இல்லையோ அஜயிடம் நன்றாகவே திட்டு வாங்கினாள். இடையில் கல்பனா, பலராம் இருவரும் மகளை பார்க்க ஊருக்கு வந்தனர். சங்கர் வீட்டிலே இருந்து அவர்களை உபசரித்தார். அஜய் மாமனாரை தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான். அபிப்ராயம் கேட்டான். பலராம்க்கு அதில் பெருமை. தனக்கு தெரிந்ததை எல்லாம் சொன்னார். சகுந்தலா, கல்பனா இருவரும் அறையில் அமர்ந்து பேச, “என்ன பேசுறீங்க” என்று வந்தாள் ஜீவிதா. “அவ மருமக கொடுமையை அவ சொல்றா, வேறென்ன?” என்றார் கல்பனா. “ஓஹ்” என்றுவிட்டவள், புரிந்த பின், “ஆஹ்ன்” என்றாள். சகுந்தலா சிரிக்க, “ம்மா” என்றவள், “அத்தை நீங்க அவங்க பேச்சை கேட்காதீங்க” என்றாள் மாமியாரிடம். “நான் கேட்பேன். அவ என் நலத்துக்கு தான் சொல்வா” என்றார் சகுந்தலா. ஜீவிதா இருவரையும் பார்த்து நொடித்து சென்றாள். அன்றிரவு அங்கேயே இருந்துவிட்டு மறுநாள் தான் இருவரும் கிளம்பினர். கல்பனா மகளை அணைத்து கொண்டவர், “சீக்கிரம் நம்ம வீட்டுக்கு வாங்க” என்று அழைத்து சென்றார். அந்த வாரமே சகுந்தலா சொன்ன கோவில் வேண்டுதலை முடித்து வந்தனர். “மாமாக்கு உடம்பு முடியாதப்போ வேண்டினது” என்றார் மருமகளிடம். ஜீவிதாவிற்கும் அந்த நேரம் கணவன் பட்ட கஷ்டம் நினைவிற்கு வந்தது. வேலை விட்டு, ஊர் வந்து, கல்லூரி மாற்றம் என, பாவம் அஜு என்று நினைத்து கொண்டாள். அஜய் இரவு அறைக்கு வந்தவன், “என்னாச்சு” என்று கேட்டான். ஜீவிதா நினைத்ததை சொல்லி, “எப்படி சமாளிச்சீங்க அஜு” என்று கேட்டாள். “சமாளிச்சு தானே ஆகணும். உண்மையிலே இப்போ நினைச்சா மலைப்பா இருக்கு. எப்படியோ நல்ல முறையில கடந்து வந்துட்டோம். MP பெரியப்பா, நம்ம பங்காளிங்க அதுக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க. நீ பார்க்கிற இல்லை இத்தனை சொத்தும் அவங்ககிட்ட தான் குத்தகைக்கு இருந்தது. திரும்பி வந்து கேட்டப்போ ஒருத்தர் தவிர வேற யாரும் பெருசா பிரச்சனை பண்ணலை. கொடுத்தபடியே ஒப்படைச்சுட்டாங்க” என்றான். “அவர் ஏன் பிரச்சனை பண்ணார்?” “நாம திரும்பி இங்க வரவே மாட்டோம்ன்னு நினைச்சுகிட்டு நம்ம நிலத்துல தென்னை போட்டுட்டார்“ “தென்னை போட கூடாதா“ “போட விட மாட்டோம். என்னைக்கு இருந்தாலும் அது நம்ம சொத்து, அது வளர்ந்து தோப்பாகும் போது தான் நமக்கு தான் பிரச்சனை“ “ஓஹ். எல்லாம் கஷ்டமா இருந்திருக்கும் இல்லை அஜு“ “அப்போ என்மேல ரொம்ப கோவமாச்சே உனக்கு” அஜய் கிண்டலாக கேட்டான். “அக்கா சொன்னாளா? நீங்க எனக்கு பர்ஸ்ட் டே காலேஜ்க்கு விஷ் பண்ணலை தானே” என்றாள் இப்போதும். “சண்டை போடதான் அந்த பேச்செடுத்தியா?” அஜய் முறைப்பாய் கேட்க. “இல்லை இல்லை அஜு, நான் உண்மையா உங்களுக்கு பீல் பண்ணேன்” என்றாள் மனைவி. “பீல் பண்ணி முடிச்சுட்டியா?” அஜய் கேட்க, “அஜு” என்றாள் மனைவி. “பின்ன என்னடி உனக்கு பீல் பண்ண வேற நேரமே கிடைக்கலையா?” “ஏன் இப்போ என்ன?” “மக்கு உன் புருஷனுக்கு இன்னைக்கு வேற பிளான் இருக்காம்” என்றான் அவள் முடியை கோதியபடி. “என்ன” மனைவிக்கு வார்த்தைகள் திக்க ஆரம்பித்தது. “என் பொண்டாட்டி அவளை அம்மா ஆக்க கேட்டா, அதை செய்யலாம்ன்னு“ “அஜு” குரல் கிசுகிசுத்தது. “கோவிலுக்கு போய்ட்டு வந்திருக்கோம், இன்னைக்கு ஒரு நல்ல வைப் இருக்கு. என்ன சொல்ற?” என்று கேட்டான். ஜீவிதா பதில் இல்லாமல் அவனுள் ஒளிந்து கொண்டாள். “என்ன ஆரம்பிக்கலாமா?” என்று அவள் காதில் முத்தமிட்டான். மனைவி அவன் இடையோடு கட்டிக்கொள்ள, முகம் நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன், “சொல்லு ஆட்டக்காரி” என்று கேட்டான். ஜீவிதா கணவனை பார்த்தே இருந்தவள், எட்டி அவன் இதழில் இதழ் பதித்தாள். அஜய் பதித்ததை தனக்குள் புதைத்து கொண்டான். முத்தத்தோடு அவர்களின் உடல்களும் இன்று சங்கமிக்க ஆரம்பித்தது. ஜீவிதா அந்த நொடிகளை தனக்குள் உள்வாங்கி ரசிக்க, அஜய்க்கோ மனைவி மீதான விருப்பம், ஆழ்மனதின் தொடுதலாக மாறியது. இருவரும் மற்றவருக்கான விருப்பத்தை, ஏக்கத்தை, ஆசையை தயக்கமின்றி வெளிப்படுத்த, இணையருக்கு அந்த புது உலகம் சொர்க்கமே. அதிலும் ஜீவிதா கணவனின் ஒவ்வொரு உணர்வுகளையும், அவன் முத்தங்களையும், தேடல்களையும், லயிப்பையும், மெலிதான வன்மையையும் மிகவும் விரும்பி ஏற்றாள். ஒரு நொடிகூட பெண் கண் மூடவே இல்லை. கணவனை பார்த்தே இருக்க, அஜய் தான் ஒரு நேரம் வெட்கம் கொண்டான். “பார்க்காதடி” என்றான். “பார்ப்பேன். இந்த அஜுவை என்னால மட்டும் தான் பார்க்க முடியும். நான் பார்த்துட்டே தான் இருப்பேன்” என்ற பெண் அவன் கன்னங்களை பற்றி முத்தமிட்டாள். முகத்தோடு முகம் உரசினாள். அவன் வேர்வைகளை தனக்குள் எடுத்து கொண்டாள். அஜய் அவளின் செயலிலே இன்னும் வேகம் கொண்டான். ஜீவிதாவோ நிதானமாக அவனை ரசித்து கொண்டாடினாள். அஜய்க்கு தன் மீதான அவளின் பிடித்தம் மூச்சைடைக்க வைத்தது. என்ன செய்து அவளின் பிடித்ததை ஈடுகட்டுவது என்று இன்னும் அவளோடு முட்டினான். முத்தங்களை கூட்டினான். காயங்களை கொடுத்தான். ஜீவிதா அவனை முழுதும் தன்னோடு பிணைத்து கொண்டாள். இடைவெளிகளை இருவரும் விரும்பவில்லை. இரவு முடிவதையும் தான்.