முதலில் இருந்த ஒரு தடுமாற்றமும் அஜய் கொண்டே.

இத்தனை வருடங்களில் அஜய் மீதான தன் உரிமையை சொல்ல ஒரு போராட்டம். சொல்லியபின் உரிமையை கைப்பற்ற மற்றுமொரு போராட்டம்

இதற்கிடையில் பெண்ணுக்கான ரகசிய கனவுகள் அவளுக்கும் உண்டு.

அதிலும் எல்லாம் கை கூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில் பல முறை தனக்குள் கண்ட காட்சி இது. தான் அப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் பெண் நிறைய யோசித்து வைத்திருந்தாள்.

ஆனால் அஜய்க்கு இப்படி எல்லாம் இருக்குமா, முதல் இரவு பற்றி யோசித்திருப்பாரா, என்னுடனான தனிமையை அவர் எப்படி எதிர் கொள்வார் என்றெல்லாம் பல கேள்வி. மெல்லிய அச்சமும் கூட.

அவளின் கேள்விகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு, அஜய் முதல் இரவில் மிக சாதாரணமாக அவளை எதிர் கொண்டிருக்க, ஆசுவாசத்துடன், ஏமாற்றமும் தான்.

காட்டிக்கொள்ள பெண்ணின் நுண்ணிய உணர்வுகள் இடம் கொடுக்கவில்லை. தூங்கும் கணவனையே கண்ணார கண்டிருந்தாள்.

நிமிடங்கள் நீடித்து நள்ளிரவே ஆகிவிட்டது. அப்போதும் பெண்ணுக்கு சலிக்கவில்லை

படுத்து, எழுத்தமர்ந்து என்று பார்த்திருக்க, அஜய் ஒரு நேரமாக விழித்தான்.

மனைவி தன்னையே பார்த்திருக்க, எரிந்த கண்களை தேய்த்து கொண்டான்.

தூங்கலையா ஜீவிதா?” என்று கேட்டான்.

தூங்குறேன் அஜு. நீங்க தூங்குங்கஎன்றாள்.

ஏன் புது இடம்ன்னு தூக்கம் வரலையா?” என்று அவள் பக்கம் திரும்பி படுத்தான்.

அதில் அவளை லேசாக நெருங்கியிருந்தான். அவனின் வாசம் இவளுக்கு வெகு அருகில் வீச, பெண் ஆழ்ந்து சுவாசித்தாள்.

என்ன ஜீவிதா?” அவன் திரும்ப கேட்டான்.

ஆமா.. ஆமா தூக்கம் வரலை அஜுஎன்றாள்.

என்னை எழுப்பியிருக்க வேண்டியது தானேஎன்று அவன் எழுந்து கட்டிலில் சாய்ந்தமர்ந்தான்.

அச்சோ நான் பார்த்தே இவர் தூக்கத்தை கெடுத்துட்டேனா? அவன் கண்களின் சிவப்பு பற்றா குறையான தூக்கத்தை சொன்னது.

நான் தூங்கிடுவேன். நீங்களும் படுங்க அஜுஎன்றாள்.

நீ நல்லா ப்ரெஷா தெரியுற? தூங்க மாட்ட, இரு வரேன்என்று ஓய்வறை சென்று வந்தான்.

முகம் கழுவிய தண்ணீரின் மிச்சம் சட்டையில் இருக்க, துண்டு எடுத்து  துடைத்தான். “பால் குடிக்கலாமா?” என்று கேட்டு பிளாஸ்க் எடுத்தான்.

ஜீவிதா சரி என்று கட்டிலை விட்டு இறங்கி வர, இருவருக்கும் ஊற்றினான். மிதமான சூட்டில் குடிக்க  நன்றாக இருந்தது.

அஜய் வேஷ்டியை மடித்து கட்டி கொண்டு கட்டிலுக்கு சென்று மொபைல் எடுத்து நேரம் பார்த்தவன், “இராக்கோழிங்க நாமஎன்றான்.

ஜீவிதா அவனையே பார்த்திருந்தவள், டக்கென பார்வையை திருப்ப, “என்ன ஆட்டக்காரி?” என்று கேட்டு இவளிடம் வந்தான்.

புதுப்பெண் ஒன்னுமில்லை என்று தலையசைக்க, “சொல்லாம விட மாட்டேனே. என்ன சொல்லுஎன்று கேட்டான்.

நீங்க என் ஹஸ்பண்ட் ஆகவும் இன்னும் அழகா ஆகிட்டீங்க அஜுஎன்றாள் மனைவி.

அஜய் நொடி அதிர்ந்து, நன்றாக சிரித்துவிட்டவன், “அப்போ இதுக்கு முன்னாடி நான் அழகு இல்லையா?” என்று கேட்டான்

ம்ஹூம். இவ்வளவு இல்லை. இப்போ நீங்க என்ன பண்ணாலும், எப்படி இருந்தாலும் எனக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கீங்களேஎன்றாள்.

அஜய் அங்கிருந்து எட்டி பெரிய கண்ணாடி பார்க்க, அவனுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.

தூங்கி வழிந்து, சட்டை எல்லாம் கசங்கி, தலை எல்லாம் களைந்து, சோர்ந்து  தான் காணப்பட்டான்.

எனக்கு தெரியறது உங்களுக்கு தெரியாது அஜுஎன்றாள் மனைவி.

அப்படி உனக்கென்ன தெரியும் சொல்லுஅஜய் கேட்க,

இப்போ சொல்ல மாட்டேன். ஒரு நாள் சொல்வேன். நிறைய சொல்வேன்என்றாள்.

அப்படி என்ன நாள் அது?” அஜய் புருவம் தூக்கி கேட்க

எனக்கும் தெரியாது அஜு. ஆனா கண்டிப்பா சொல்வேன்என்றாள் பெண்.

அஜய் அவளை புருவம் சுருக்கி பார்க்க, “என்னை நம்பலை நீங்க. பாருங்க. இப்போ கூட நீங்க புருவம் சுருக்கும் போது, இந்த இடத்துல இரண்டு புருவமும் இணையறது, உங்க கண்ணு லேசா சிரிக்கிறது, கீழ் உதடு மடக்கி உள்ளுக்குள் வைச்சிருக்கிறதுன்னு எல்லாம் செம அழகுஎன்றாள் ரசித்து.

அஜய் அதை எல்லாம் உடனே மாற்றி கொண்டவன், “என்ன பண்ற நீ?” என்று கேட்டான்.

இனி நீங்க எனக்கு கிளாஸ் எடுக்க முடியாது அஜு. எனக்கு புல் ரைட்ஸ் இருக்குஎன்றாள் உஷாராய், உரிமையாய்.

அந்த ரைட்ஸ் கொடுத்ததே நான் தான்அஜய் சொல்ல,

சரி நீங்க சொல்லுங்க, நான் அழகா இருக்கேனா?” என்று கேட்டாள்.

இதென்ன கேள்வி, ஜீவி எப்போவும் அழகுஎன்றான் உடனே.

க்கும்என்றாள் மனைவி கடுப்புடன்.

ஹோய் என்ன

பின்ன குழந்தையில நீங்க என்னை கொஞ்சின மாதிரி தான் இப்போவும் சொல்றீங்க, இது செல்லாது” 

வேறெப்படி சொல்லணும்?”

ரசிக்கணும் அஜு

ரசிக்கணுமா?” கணவனாக தன் பார்வையை மாற்றி அவளை மேலிருந்து கீழ் பார்த்தான். சில இடங்களில் பார்வையில் தடுமாற்றம் வர, நிறுத்தி கொண்டவன், “அது எல்லாம் பின்னால் பார்த்துக்கலாம்என்றுவிட்டான்.

பின்னாடி பார்ப்பீங்களா?” புது மனைவி கேட்டுவிட, அஜய் கொட்டியே விட்டான்.

அஜுஎன்று பெண் தேய்த்தாள்.

நீ எந்த மீனிங்ல பேசுறேன்னே புரிய மாட்டேங்குது. கேட்டா கண்டிப்பா ஒத்துக்க மாட்ட, அதுக்கு தான்என்றான் அவன்.

நம்ம மேரேஜ்க்கு நல்ல கிப்ட். போங்கஎன்றாள் பெண் கோவமாக.

கிப்ட். கரெக்ட். நீ முதல்ல எனக்கு கிப்ட் கொடுத்தியா. கட்டிட திறப்பு விழாக்கு கிப்ட் எங்க?” என்று கேட்டான்.

கூடவே தான் வைச்சிருக்கேன்என்று உடனே அவள் உடைமையில் இருந்து எடுத்து வந்தாள்.

பிராண்டட் வாட்ச். “என்னோட சேவிங்ஸ்என்று அவன் கையில் தானே கட்டினாள்.

இதை அன்னைக்கே ஏன் கொடுக்கலை?”

இப்படி உங்க கையில உரிமையா அன்னைக்கு கட்ட முடியாது இல்லை. பிடிச்சிருக்கா அஜுஎன்று ஆர்வமாக கேட்டாள்.

அஜய் அப்படி இப்படி திரும்பி பார்த்தவன், “என் கைக்கு நல்லா சூட் ஆகுது. நல்லா இருக்குஎன்றான்.

உங்களுக்கு எது போட்டா சூட் ஆகும்ன்னு எனக்கு தெரியாதா?” என்றாள்.

என்னை மேடம்க்கு ரொம்ப தெரியுமோ?” அஜய் கேட்க,

தெரியுமேஎன்றவள், அவன் வாட்ச் கட்டிய கையுடன் தன் கை கோர்த்து பிடித்து போட்டோ எடுத்து கொண்டாள்.

பார்த்திருந்த அஜய்க்கு அந்த புகைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அவளின் வளையல் கையும், இவனின் புது வாட்ச் அணிந்த கையும் ஜோடியாக நன்றாகவே இருந்தது.

இரு நானும் எடுத்துகிறேன்என,

நானே உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் அஜுஎன்று உடனே அனுப்பியும் வைத்துவிட்டவள், ஸ்டேட்டஸ் வைக்க போக,

ஹேய் மக்குஎன்று மொபைலை பறித்து கொண்டான்.

அஜு

என்ன நொஜு? டைம் பார்த்தியா? இப்போ போய் ஸ்டேட்டஸ் வைக்கிற. நம்ம பேமிலில பார்த்தாங்க நாம காலி

கரெக்ட் தான்பெண் விட்டுவிட்டவள், கட்டிலுக்கு செல்ல அஜயும் அவளுடன் வந்தான்.

இருவரும் கட்டிலில் சாய்ந்தமர, “உங்க பிஸ்னஸ் பத்தி சொல்லுங்க அஜு, எனக்கு எதுவும் தெரியாது” என்று கேட்டாள்.

“நீ யார்கிட்டேயும் கேட்டு தெரிஞ்சுக்கலை சொல்லு” 

“உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க தான் யார்கிட்டேயும் கேட்கலை. நீங்க சொல்லுங்க”

“இப்போ அதை எல்லாம் பேசுற நேரமா? ஒரு வாரம் போகட்டும். நாம ப்ரீயாகவும் டீட்டையிலா சொல்றேன்” என்றவன், கால்களை வசதியாக நீட்டி அமர, ஜீவிதா காலை உரச நேரிட்டது.  

அஜய் உடனே, “சாரிஎன்றபடி விலக்கி கொள்ள, ஜீவிதாவின் குணம் விழித்து கொண்டது.

பெண் டக்கென அவன் காலோடு தன் காலை இணைத்து கோர்த்து கொண்டாள்.

அஜய் அவளை கண்களை விரித்து பார்த்தவன், “ஜீவிதாஎன்றான்.

நான் உங்க வைஃப் தானே, சாரி சொல்றீங்க, பட்டுன்னு காலை எடுக்கிறீங்க?” என்றாள் குற்ற சாட்டாக.

சரி ஓகே. இனி பண்ணலை. இப்போ விடுஎன்றான்.

தான் விலக்க போய் இவள் இன்னும் ஏதாவது செய்து வைத்தால்?

கொஞ்ச நேரம் இருக்கட்டும் அஜு. இது தான் உங்களுக்கு பனிஷ்மென்ட்என்றவளுக்கு ரகசிய சிரிப்பு.

அஜய் அமைதியாக இருவரின் கால்களையும் பார்த்திருக்க, ஜீவிதா கொஞ்சம் தயங்கி அவன் தோளில் சாய்ந்தாள்

அஜய்க்கு அவளின் உணர்வுகள் புரிந்திருக்க வேண்டும். நான் தான் வேண்டும் என்று ஆசைப்பட்டு கட்டி கொண்டவள் ஆயிற்றே!

அவளின் புதிதான அருகாமைக்கு தன் மனதின், உடலின் பதில் என்னவாக இருக்கிறது என்று அவனும் கவனித்தான்

சிலிர்ப்பு, ரசிப்பு இல்லை தான். ஆனாலும் அவன் உடல், மனம் இரண்டும் மனைவி பால் நன்றாகவே இளகி நின்றது

ஜீவிதா வார்த்தைகளின்றி அவன் நெருக்கத்தை அனுபவிக்க, இவன் அவள் விரல்களை ஆதுரமாக வருடி கொண்டான்

மிக அருகில் மலரும் மல்லியின் வாசத்தை சுவாசித்தவன், தன்னை போல்  அவள் உச்சியில் முத்தம் வைத்தவன்,  தானே திகைத்துவிட்டான்.  

முதல் முத்தம். இருவருக்குமான முதல் முத்தம்!

ஜீவிதா இதை எதிர்பார்க்காமல் அதிர்ந்து, ஆச்சரியம் கொண்டு, உணர்ச்சி வசப்பட்டு போனாள். அஜய் நெஞ்சில் நன்றாக முகம் புதைத்து கொண்டாள்.

கணவனுக்கு தான் அவளின் கூடிய நெருக்கத்தில், ஏதோ போலான தடுமாற்றம், திணறல், குழப்பம். 

விலக்க முடியாது. ஜீவிதா பற்றி தெரியுமே. மனைவியின்  நெருக்கத்தை  கணவனாக ஏற்று அப்படியே அமர்ந்திருந்தான்.