நதியின் ஜதி ஒன்றே! 20 1 12808 நதியின் ஜதி ஒன்றே! 20 அஜய், ஜீவிதா திருமணத்தை தொடர்ந்து, சடங்குகள் நடந்து கொண்டிருந்தது. ஜீவிதா புகுந்த வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து நுழைந்தாள். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டாள். தம்பதிகள் வீட்டின் பெரியவர்களிடம் ஆசீ வாங்கி கொண்டனர். விருந்தினர் வருகை மதிய உணவோடு குறைய ஆரம்பித்தது. மாலை போல் ஜீவிதா உறவுகளும் விடைபெற்றனர். அம்மா வீட்டை பிரிய போகும் நேரம் பெண்ணுக்கு அவ்வளவு அழுகை. பலராம் அதுவரையிலும் கூட பெரிதாக அஜயிடம் பேசாதவர், கிளம்பும் நேரம் அவனை அணைத்து கொண்டார். மகளை நன்றாக பார்த்துக்கொள்ள சொன்னார். “உனக்கு.. உங்களுக்கு இவளை பத்தி தெரியாதது இல்லை. இருந்தாலும் அப்பாவா சொல்றது என் கடமை” என்றார் கை பிடித்து. மகளின் வருங்கால.. நெடுங்கால வாழ்க்கை எனும் இடத்தில், அவரின் சொந்த கௌரவம், ஈகோ எல்லாம் முழுதும் கரைந்து தான் போயிற்று. அஜய் மாமனாரின் இரு கைகளையும் பிடித்து கொண்டவன், “எப்போவும் போலவே கூப்பிடுங்க மாமா. அதே அஜய் தான் நான். ஜீவிதா சந்தோஷமா இருப்பா” என்று விடை கொடுத்தான். கல்பனா மகளிடம், “உனக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அஜயை நல்லா பார்த்துக்கோ. அவன் நல்லவன், பாவம்” என்றார். ஜீவிதா அழுகை அப்படியே நின்று போக, அம்மாவை கோவமாக பார்த்தாள். “எனக்கு உன்னையும் தெரியும், என் சின்ன மாப்பிள்ளையையும் தெரியும்” என்று கல்பனா விடைபெற்றார். சகுந்தலா அதில் மெலிதாக சிரிக்க, “எல்லாம் கூட்டு. ப்ரெண்ட்ஸ்ல்ல பேச்சும் அப்படி தான் இருக்கு. விஷம், விஷம்” என்று முகம் திருப்பி கொண்டு சென்றாள் புதுப்பெண். தாரணி தங்கையிடம் கண்ணீருடன் விடைபெற, கல்யாண், “ஹாப்பியா ஜீவிம்மா” என்று கேட்டான். “ரொம்ப. தேங்க்ஸ் சீனியர்” என்றாள் நெகிழ்ச்சியுடன். “இனி உன் ஆள் எனக்கு சகலையா. ஜுனியரா இருந்தப்போவே என்னை காலி பண்ணுவான். இப்போ ஒரே வீட்ல வேற வாக்கபட்டிருக்கேன். என்னை நினைச்சு நானே பரிதாப பட்டுக்கிறேன்” என்ற புலம்பலுடன் கிளம்பினான். ஜீவிதா சிரிக்க, “என் நண்பன் பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுதுன்னு ஹிண்ட் கொடுக்கிறியா பியூட்டி” என்று கேட்டான் ஆனந்தன். “அஜுவை விடுங்க. இங்க மாமா உங்களுக்காக ஒரு பொண்ணை பிடிச்சிருக்கார், முடிஞ்சா தப்பிச்சு ஓடிடுங்க” என்றாள் ஜீவிதா கிண்டலாக. ஆனந்தனுக்கு ஜெர்க் ஆனாலும், “ஆஹ். நான் நம்ப மாட்டேன். அவர் பிசியா இல்லை சுத்திட்டிருந்தார்” என்றான். அந்நேரம், “மகனே” என்று சேனாதிபதி ஒரு பெண்ணுடன் வர, “யம்மா” என்று தெறித்து ஓடினான் ஆனந்தன். “என்னவாம் அவனுக்கு?” என்று சேனாதிபதி புரியாமல் கேட்க, “இவங்க யாரு மாமா?” என்று உடன் இருந்த பெண்ணை கேட்டாள் ஜீவிதா. “இந்த பொண்ணும் டாக்டருக்கு படிக்க தான் நினைச்சிட்டிருக்குன்னு அவங்க அப்பா சொன்னார். அதான் அதுக்கு எப்படி, என்னன்னு என் மகன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோம்மான்னு கூட்டிட்டு வந்தேன்” என்றார் சேனாதிபதி. அந்த பெண்ணோ ஜீவிதாவை பார்த்து அழுகையுடன் மறுப்பாக தலையசைத்தாள். “சரிம்மா. அவனுக்கு என்ன வேலையோ ஓடிட்டான். இது தான் அவன் நம்பர், போன் பண்ணி பேசு. அதெல்லாம் சரியா சொல்லுவான்” என்று அனுப்பி வைத்தார். “என்ன மாமா சோஷியல் சர்வீஸ் எல்லாம் பயங்கரமா நடக்குது?” ஜீவிதா கேட்க, “படிக்காத தற்குறிக்கு தான்ம்மா அதோட அருமை தெரியும்” என்றவர், “சந்தோஷமா மருமகளே?” என்று கேட்டார். ஜீவிதா மலர்ந்து சிரித்தவள், “சந்தோஷம் தான் மாமா” என்றாள். “வேற யார்ன்னா நான் இங்கேயே கூட ஒரு வாரத்துக்கு ஹால்ட் போட்டிருப்பேன். நம்ம அஜய் தானே. பார்த்துப்பான். நீயும் அவனை நல்லா பார்த்துக்கணும் சரியா?” என்றார். ஜீவிதா தலையசைக்க, தலை வருடி சென்றார். உறவுகள் கிளம்ப காரில் ஏற, அஜய் கைகள் மனைவியுடன் பிணைந்து ஆறுதல் தந்தது. சங்கரின் பங்காளிகள் அங்கேயே இருக்க, இரவு உணவும் பந்தி தான். ஜீவிதாவை அழைத்து சென்று குளிக்க வைத்து, மெலிதாக அலங்கரித்து அழைத்து வந்தனர். அஜய்யும் குளித்து வந்திருக்க, இரவு உணவுக்கு ஒன்றாக அமர வைக்கப்பட்டனர். ஜீவிதாவிற்கு இரண்டு இட்லியே சாப்பிட முடியவில்லை. அஜு என்பனை கணவனாக தனியே சந்திக்கும் பதட்டம். அஜய் கவனித்தாலும் கேட்டு கொள்ளவில்லை. நல்ல நேரம் பார்த்து ஜீவிதாவை அஜய் அறைக்குள் அனுப்பினர். பெண்ணுக்கு கால்களில் ஒரு நடுக்கம். நடை தேய்ந்து மெல்ல மெல்ல தான் அஜய் முன் சென்று நின்றாள். அஜய் அவளையே பார்த்திருந்தவன், “குறிஞ்சு பூ பூக்கிறதை கூட பார்த்துடலாம். ஆனா இப்போ என் முன்னாடி நடந்திட்டிருக்கிற அதிசயத்தை இனி எப்போவும், யாரும் பார்க்க முடியாது” என்றான். ஜீவிதா அவனை நேராக காண முடியாமல் அங்கங்கு பார்த்திருந்தவள், கணவனின் வார்த்தைகளில் அவனை கேள்வியாக பார்த்தாள். “உன்னோட இந்த அமைதியான நடை, நல்லப்பிள்ளை முகம் தான்” என்றான் சிரிப்புடன். “அஜு” புது மனைவி சிணுங்கினாள். “உனக்கு இது செட் ஆகலை ஆட்டக்காரி” என்று அவள் கை பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டான். “பால் அஜு” பெண் கேட்டமர, “குடிப்போம். வேணும்ன்னா இந்த கால்ல விழுறதை வேணும்ன்னா விழேன்” என்று தன் இரு கால்களையும் தூக்கி காட்டினான். ஜீவிதா, “மாட்டேன். உங்களால நான் அப்பா காலுல எல்லாம் விழுந்தேன். கணக்கு சரியா போச்சு. போங்க” என்றாள். “என்னால விழுந்தியா? உனக்காக விழுந்தியா கேடி” அஜய் கேட்க, “ஆஹ்ன். நம்ம இரண்டு பேருக்காகவும் தான்” என்றாள் மனைவி தன் கௌரவத்தை காப்பற்றும் பொருட்டு. “ம்ம். அப்பா கால்ல விழுறது புண்ணியம் தான்” என்றவன், கால்களை தொங்கவிட்டு அப்படியே பின்னால் கட்டிலில் சாய்ந்தான். “டையர்டா இருக்கீங்களா அஜு” “கொஞ்சம். நீ சொல்லு” என்றான். “என்ன சொல்ல?” “எதாவது சொல்லு. உனக்கா பேச சொல்லி தரணும்“ “இப்போ கைவசம் ஒன்னும் இல்லை“ “இது வேறயா? சரி புடவை மாத்திட்டு வா. தூங்கலாம்” என்றான். ஜீவிதாவிற்கு இது தான் நடக்கும் என்று தெரியுமாதலால், “இது லைட் வெய்ட் தான் அஜு. இப்படியே இருக்கேன்” என்றாள். அஜய் புருவம் சுருங்க யோசனை. மனைவி என்னவென்று கேட்க, “இல்லை கூடவே வளர்ந்து இருந்தாலும் எனக்கு உன்னோட விஷயங்கள் டீப்பா தெரியாது இல்லை. அதான்” என்றான். “என்ன. என்ன டீப்பா தெரியணும்?” ஜீவிதா குரலில் தடுமாற்றம். அஜய் கண்டு கொண்டவன், மனைவியை திரும்பி ஒரு முறை. “நீ ரொம்ப கெட்டு போயிருக்க, யார் கூட அப்படி சேர்ந்த? உன் ப்ரெண்ட்ஸ் பேர் எல்லாம் சொல்லு” என்றான். “இதெல்லாம் நேச்சுரல்” பெண் முனக, “நான் கேட்ட டீப் உன்னோட ஹாபிட்ஸ் பத்தி. புடவையோட தூங்குறேன்னு சொன்னியே. ட்ரெஸ் விலகுமான்னு“ “அப்படி இருந்தா நானே மாத்தியிருப்பேன் அஜு” என்றாள் மனைவி வேகமாக. “ம்ஹ்ம். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான்” என்றவன், நன்றாக அவன் இடத்தில் படுத்தான். ஜீவிதா நொடி திகைத்து, கணவனின் மறுபக்கம் படுக்க, சில நிமிடம் பேச்சே இல்லை. அஜய் அசதியில் தூங்கியும்விட்டான். புதுப்பெண்ணுக்கு தூக்கம் வருவேனா என்றது. இப்படி, இந்த நொடி, அஜய் கணவனாக, அருகருகே, ஒரே கட்டிலில் எல்லாம் அவளின் பல வருட கனவு, ஏக்கம், ஆசை, எதிர்பார்ப்பு. பதட்டம் கடலளவு இருந்தாலும், அவன் அருகாமையை அனுபவிக்கவும் செய்தாள்,