நதியின் ஜதி ஒன்றே 14

அஜய் கிளம்பிய பின்னும் ஜீவிதா அறையை விட்டு வெளியவே வரவில்லை. கல்யாண் வந்தவன் நேரே அவளிடம் சென்றான்.

தாரணிக்கு அப்போது தான் தெரிந்தது தங்கை இவ்வளவு நேரம் உள்ளே இருந்ததே. இருக்கும் கோவம் இன்னும் உச்சிக்கு வந்துவிட்டது.

ஏன் ஜீவிம்மா. வெளியே வந்து அவன்கிட்ட பேசியிருக்கலாம் இல்லைகல்யாண் கேட்க,

இவ ஏன் அஜய்கிட்ட பேசணும்?” என்று தாரணி கேட்டாள்.

தாரு ப்ளீஸ்கல்யாண் மனைவியிடம் சொல்ல,

போதும் நீங்க இவளுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணது போதும். அஜய் என்ன பண்ணான்னு இவ அவனை இந்தளவு கஷ்டப்படுத்துறா

ஜீவிதா பதில் இல்லாமல் இருக்க, “உன்கிட்ட தான் கேட்கிறேன் ஜீவிதா. எனக்கு பதில் சொல்லியே ஆகணும் நீஎன்று தங்கை தோள் பிடித்து உலுக்கினாள்.

தாரு அவளை விடுகல்யாண் மனைவியை விலக்கினான்.

அப்போ நீங்க சொல்லுங்க. நோ, தெரியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க. உங்களுக்கு எல்லாம் தெரியும்ன்னு எனக்கு தெரியும். அஜய்கிட்ட இவளோட பிஹேவியர்க்கு என்ன காரணம்ன்னு எனக்கு இப்போ நீங்க சொல்லியே ஆகணும்என்று நின்றாள்.

அஜய் அவளின் மிக நெருங்கிய நண்பன். அவனின் வருத்தம் இவளை அதிகம் பாதித்துவிட்டது. தங்கையை விட கூடாது என்று நின்றாள்.

தாரு ப்ளீஸ். அவளுக்கு டைம் கொடு. நிச்சயம் ஒரு நாள் உன்கிட்ட சொல்லுவாகல்யாண் மனைவியை சமாதானம் செய்தான்.

தாரணி அமைதியாக இருக்கும் தங்கையை உறுத்து பார்த்தாள். “அஜய் சொல்றது சரி. நீ நீயா இல்லை. எங்க ஜீவிதா இல்லை நீஎன்றாள்.

அவன் அவ்வளவு பீல் பண்ணி பேசுறதை கேட்டும் நீ வெளியே வரலைன்னா, ச்சு. நீயெல்லாம். போடிஎன்று வெளியே வந்துவிட்டாள்.

ஏன் ஜீவிம்மாகல்யாண் அவள் கை பிடித்து ஆதரவாக கேட்டான்.

என்னால அஜு முன்னாடி போக முடியலை சீனியர்என்றாள் குன்றலாக.

புரியுது. சரி விடு. இப்போ நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு. அப்புறம் பேசுவோம்என்றவன் அவளை சாப்பிட வைத்தே விட்டான்.

தொடர்ந்த நாட்கள் ஓட ஆரம்பித்தது. தாரணிக்கு தங்கை மேல் இருந்த கோவம் குறையவில்லை. ஆனாலும் அவளை சென்று பார்ப்பதை விடவில்லை.

சாப்பிட்டியா. வேலை ஓகேவா. தூங்குனியாசம்பிரதாய கேள்விகள்.

ஒரு கட்டத்தில் ஜீவிதாவிற்கு அது பிடிக்கவில்லை. “கடமைக்காக எல்லாம் என்னை பார்க்க வராதஎன்று ரோஷத்துடன் சொன்னாள்.

அப்படித்தான் வருவேன். நீ எங்ககிட்ட இப்படி தானே இருக்கஎன்று தாரணியும் பதிலும் சண்டையிட்டு சென்றாள்.

கல்பனா சின்ன மகளை பார்க்க கேட்க, இடையில் ஒரு முறை ஊருக்கு சென்று வந்தாள். பலராம் அப்போது அவளின் திருமண பேச்சை ஆரம்பித்தார்.

இதுக்கு தான் வர சொன்னியாம்மாஎன்று அம்மாவிடம் கடுப்படித்தாள்.

எனக்குமே இப்போ தான் தெரியும் ஜீவிதாஎன்ற கல்பனா, “நீ அப்பா சொல்றதை கேட்கலாம். இதுதான் ரைட் டைம் கல்யாணம் பண்ணிக்கஎன்றார்.

ஜீவிதா மௌனம் காத்தாள். பலராம் விடவில்லை. “உன் அக்கா தான் நம்ம ஆளுங்களை விட்டு  வெளியே போயிட்டா. உன்னையாவது  நம்ம சொந்தத்துக்குள்ள கட்டி கொடுத்தா தான் நாளை பின்ன நமக்கு எல்லாம் வந்து நிப்பாங்கஎன்றார்.

தொடர்ந்து அவர் பார்த்த வரன்களின் போட்டோவை எல்லாம் மகளுக்கு அனுப்பி வைத்தார். ஜீவிதாவிற்கு தலை இடித்தது.

அடுத்த நாளே சென்னை கிளம்பிவிட்டாள். பலராம் விடாமல் போன் செய்தார். பெரிய மகள், பெரிய மருமகன் மூலமும் மகளிடம் பேசினார்.

சேனாதிபதிக்கு வருத்தம் தான். “ஆனந்தனுக்கு ஜீவிதாவை கட்டலாம்னு ஆசை வைச்சேன். நீயும் கல்யாணும் தான் நடக்காது. விடுங்கன்னு என்னை தடுத்திட்டீங்கஎன்றார் காமாட்சியிடம் குறையாக.

காமாட்சிக்கு  ஜீவிதா மனது தெரியும். கல்யாண் அம்மாவிடம் சொல்லிவிட்டான். அவரும் சின்ன மகனிடம் சொல்லிவிட்டார்.

அடிக்கடி மகன் ஜீவிதாவை வம்பிழுப்பதை அவரும் கவனித்து கொண்டு தானே இருந்தார். தேவையில்லாமல் அவன் ஆசை வளர்த்து கொள்ள கூடாதே என்ற முன்னெச்சரிக்கை.

ஆனந்தனுக்கு மெல்லிய ஏமாற்றம். “ஏன் நடக்காது சொல்றீங்கம்மா?” என்று கேட்டும்விட்டான்.

எனக்கும் காரணம் தெரியாது. உன் அண்ணா தான் சொன்னான். அவன்கிட்ட போய் கேட்காத. நிச்சயம் சொல்ல மாட்டான்என்று முடித்து கொண்டர் காமாட்சி.

சேனாதிபதி விடாமல் முதல் சில நாட்கள் மல்லு கட்டினார். “கண்ணு நான் ஜீவி பொண்ணுகிட்ட பேசுறேன்என்றார்.

சின்ன பொண்ணுகிட்ட போய் என்ன பேச போறீங்க? அவ உங்க பெரிய மருமக இல்லை. அவளுக்கு கல்யாண் பிடிச்சது. நீங்க பேசினதும் ஓகே சொன்னா. ஜீவிதா அப்படி இல்லை பார்த்துக்கோங்கஎன்றார் கண்டிப்புடன்.

உனக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை கண்ணு. நம்ம முன்னாடியே நல்ல பொண்ணை வைச்சுக்கிட்டு மகனுக்கு வெளியே தேட போறியாக்கும். பேசி பார்ப்போம். நடந்தா நல்லது தானேஎன்றார்.

மாமா. வேணாம்ன்னு சொன்னா விட்டுடணும். இதென்ன?” என்று காமாட்சி கோவம் கொள்ள, சேனாதிபதி முனங்கி கொண்டே பின் வாங்கி கொண்டார்.

சின்ன மகளின் திருமண பேச்சை எடுக்கும் போதே பலராம்க்கு பக்கு பக்கென்று தான் இருந்தது. எப்போது சேனாதிபதி தட்டை தூக்கிட்டு வந்து நிற்பாரோ என்று. அவர் வரவே இல்லை

அதோடுமாப்பிள்ளை முடிவு பண்ணதுக்கு அப்புறம் சொல்லுங்க. என் பங்குக்கு நானும் விசாரிச்சுகிறேன்என்றதில் அளவில்லா நிம்மதி.

ரொம்ப  ரொம்ப சந்தோசம் சம்மந்தி. உங்களுக்கு சொல்லாம எதுவும் பண்ண போறதில்லை. நீங்க எல்லாம் தான் முன்ன நின்னு செஞ்சு வைக்கணும்என்று அவர் கை பிடித்து பெரு மகிழ்ச்சி கொண்டார்.

சேனாதிபதிக்கு கடுப்பு தான். “கண்ணு நம்ம சம்மந்திக்கு நான் பொண்ணு கேட்டு வர மாட்டேன்னு தெரிஞ்சு எவ்வளவு சந்தோசம் தெரியுமா? அப்படியா நாம இருக்கோம். என்ன தான் நல்ல படியா இருந்தாலும் அவர் சொந்தத்துக்குள்ள பொண்ணு கொடுக்கிற ஆசையை விடுறாரா பாரேன்என்று மனைவியிடம் பேசி கொண்டார்.

காமாட்சிக்கு உள்ளுக்குள் புன்னகை தான். ‘போங்க இரண்டு பேருக்கும் சேர்த்து ஜீவிதா பெருசா வைக்க போறாஎன்று நினைத்து கொண்டார்

பலராம் கேட்டு கொண்டதிற்காக தாரணி தங்கையிடம் திருமணம் பற்றி பேச, அவளோ பிடி கொடுக்கவே இல்லை. “ரொம்ப பண்றா. நீங்களே அவகிட்ட பேசிட்டு சொல்லுங்கஎன்று கல்யாணிடம் சொன்னாள்.

கல்யாண் பேசவே இல்லை. ஒன்று மட்டும் சொன்னான். “டைம் இருக்கிற மாதிரி எனக்கு தெரியல ஜீவிம்மா. சீக்கிரம் முடிவெடு. அஜய்கிட்ட பேசுஎன்றான்.

ஜீவிதாவிற்கு கேட்கும் போதே பயம். அஜய் பற்றி பயம். “நான் வேணா பேசவா?” என்று அவளின் பயம் புரிந்து கேட்டான்.

வேணாம் வேணாம். அஜுக்கு ரொம்ப கோவம் வரும்என்றாள்.

அப்பறம் இதுக்கு  என்னதான் வழி ஜீவிம்மா. உன் அப்பா விட்டா மாப்பிள்ளைகளை கூட்டிட்டு இங்கேயே வந்து நிற்பார் போலஎன்றான்.

ஜீவிதாவிற்கும் புரிய தான் செய்தது. பலராம் மகளிடம் திருமணம் பற்றி கேட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. அவரின் நச்சரிப்பு கூடிவிட்டது.

இனியும் பொறுப்பார் போல தெரியவில்லை. அஜயிடம் பேசியே ஆக வேண்டும். கணக்கில்லாமல் அவன் நம்பரை எடுத்து பார்த்து வைத்து விடுவாள்.

அழைக்க தைரியம் கிட்டவில்லை. அவனும் சொன்னது போல அவளிடம் பேசவே இல்லை. அவனின் அழைப்புகள் சுத்தமாக நின்று விட்டிருந்தது.

சென்னைக்கு வந்தாலும், தாரணி, ஜியாவை மட்டும் பார்த்து சென்றுவிட்டான். ஜீவிதாவிற்கு எப்படி பேச முடியும்?

மிகவும் தவித்திருக்க, அவளுக்கான நாளும் வந்தது.

அஜய்யின் தொழில் கட்டிடம் திறப்பு விழா. கடலூரிலே நிறுவியிருந்தான். மிக பெரிதாக எடுத்து கட்டியிருந்தான். எல்லோருக்கும் அழைப்பு.

பலராம், கல்பனா சென்னை வரும் நேரம் பார்த்து நேரில் வந்து இரு குடும்பத்துக்கும் சேர்த்து அழைப்பு விடுத்தான்.

பலராம் இப்போது தான் அஜயை மீண்டும் பார்க்கிறார். அவன் தோரணையில் முன் போல அவனிடம் நடந்து கொள்ள முடியவில்லை.

அஜய் அதற்கு இடம் கொடுக்கவும் இல்லை. மிக மரியாதையாக பேசினான். அதே நேரம் தள்ளி வைத்தும் பேசினான்.

வயதில் மட்டுமில்லை, முதிர்ச்சி, வசதி வாய்ப்பிலும் உயர்ந்து விட்டான் என்பதை அவன் தோற்றம், பேச்சு காட்டி கொடுத்தது.   

கை குலுக்கினான். “நல்லா இருக்கீங்களா அங்கிள்என்று கேட்டான்

கல்பனாவிடம் நன்றாக பேசினான். இருவருக்கும் இன்விடேஷன் கொடுத்தான். கல்பனா பக்கம் கைகள் நீள, அவர் வாங்கி கொண்டார்.

பலராம்க்கு புரிந்தது கோவத்தை கொடுத்தது. முறுக்கி கொண்டு அமர்ந்துவிட்டார். அவரை அவன் கண்டு கொள்ளவும் இல்லை. மற்ற எல்லோரிடமும் நன்றாக பேசி விடைபெற்றான்.

தாரணி குடும்பம் அப்போதே கிளம்ப முன்னேற்பாடு செய்துவிட்டனர். சேனாதிபதிக்கும் அழைப்பு வைத்திருந்தான். அவர்களும் இணைந்து கொள்வதாய் முடிவானது.

பலராம்க்கு அதில் தலையிட முடியவில்லை. ஆனால் மனைவி, சின்ன மகளை கட்டுப்படுத்தினார். தாரணி அம்மா, தங்கைக்கும் சேர்த்து கார் ஏற்பாடு செய்ய, “அவங்க வர மாட்டாங்கஎன்றார் பலராம்.

ஏன்ப்பா?” தாரணி கேட்க,

ஏன்னா வர மாட்டாங்க. அவ்வளவு தான்என்றார் கோவமாக.

அஜய் நேர்ல வந்து கூப்பிட்டான் தானேப்பா” 

இங்க பாரு தாரணி உனக்கு வேணும்ன்னா நீங்க போங்க. நீ போகாம இருக்கவும் மாட்ட. எனக்கு தெரியும். உங்களுக்கு தான் அவன் சொந்தம், உங்களுக்கு வேண்டி தானே அவன் என் மூக்கை உடைச்சான்” 

தாரணி அதிர்ந்து போனாள். இப்போதும் இப்படி பேசுவாரா என்று. நல்லவேளை கல்யாண் இல்லை

ஏங்கஎன்று கல்பனா ஆட்சேபிக்க,

நீ பேசாத. உங்களுக்கு எல்லாம் நான் முக்கியம் இல்லை. எப்போ பார்த்தாலும் அவனுக்கு தான் உங்க சப்போர்ட். எனக்கு தெரியும்

சின்ன பையன்கிட்ட போய் என்னங்க

அவனா சின்ன பையன். சாதாரணமா பெரிய வேலை எல்லாம் பார்த்துட்டு போயிட்டான்என்று கருவினார்.

கல்பனா, தாரணி அவரை சமாதானம் செய்ய முயல, அவர் காது கொடுத்து கேட்கவே தயாராக இல்லை. “நீயும், ஜீவிதாவும் போக கூடாது. அவ்வளவு தான். இது தான் என் முடிவுஎன்றுவிட்டார் பலராம்.

சகுந்தலாவை பார்க்க மிகவும் ஆசையுடன் இருந்தார் கல்பனா. அஜய்யின் வளர்ச்சியிலும் பங்கு கொள்ள நினைத்து எல்லாம் போச்சு எனும் நிலை

ஜீவிதாவிற்கு அஜய் வந்து சென்றது தெரிந்தது. ‘என்னை பார்க்க வரலயே. என்னை கூப்பிடலையேஉள்ளுக்குள் மறுகினாள் பெண்

என்னை அவர் கேட்கவே இல்லையா சீனியர்?” திரும்ப திரும்ப கல்யாணிடம் கேட்டாள்.

ஜீவிம்மா. நீ அதை விட்டு நான் சொல்றதை கொஞ்சம் கவனிஎன்றான் கல்யாண்.

நாம அஜய் ஊருக்கு போலாம்” 

நானுமா? அவர் என்னை கூப்பிடவே இல்லையே” 

அவன் கூப்பிடணும்ன்னும் உனக்கு அவசியம் இல்லை ஜீவிம்மாஎன்றான்.

ஜீவிதா யோசிக்கும் முன்னே பலராம் மகளுக்கு போன் செய்துவிட்டார். “நீ அஜய் ஊருக்கு போக கூடாதுஎன்று.

சின்னவளின் குணம் விழித்து கொண்டது. “ஏன் போக கூடாது? அவர் நம்மளை கூப்பிட்டார் தானேப்பா?” என்று உடனே கேட்கவும் செய்தாள்.

கூப்பிட்டா உடனே போகணும்ன்னு இல்லை. நாம போக போறதில்லைஎன்றார் கண்டிப்புடன்.

அஜு பெரிய ஸ்டெப் எடுத்து வைக்க போறார். நாம அவர்கூட இருந்தாகணும்பெண் முடிவெடுத்து கொண்டாள்

பிறகென்ன அப்பாவிற்கும், மகளுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது. ஜீவிதா அவளின் பிடியில் நிற்க, பலராம் அவரின் பிடியில் நின்றார்.

நீ எப்போ பார்த்தாலும் அவனுக்கு சப்போர்ட்டா வந்து நிக்கிற ஜீவிதா. சரியில்லை பார்த்துக்கோ. அப்புறம் நான் வேற மாதிரி முடிவெடுத்துடுவேன்என்றார் மிரட்டலாக.

மிரட்டுறீங்கப்பாஎன்றாள் மகள்.

அப்பாவா நான் சொல்றேன். நீ கேட்டுத்தான் ஆகணும்என்றார்.

இல்லைப்பா. நீங்க போக கூடாதுன்னு சொல்றதுல அஜு மேல இருக்கிற ஈகோ தான் தெரியுது

அப்படியே இருந்தாலும் என்ன? நான் சொல்றதை தானே நீ கேட்டாகணும்என்று பேச, மகளும் பேச, நீண்டு கொண்டே சென்றது.

ஜீவிதாவிற்கு ஆதரவாக வீட்டினர் எல்லாம் சேர்ந்து கொண்டனர். சேனாதிபதி வேறு, “நம்ம எல்லோருக்கும் கார் ஏற்பாடு பண்ணிட்டேன். நாம இங்கிருந்தே போகலாம்என்று போன் செய்தார்.

பலராம் அவரிடமும் மறுக்க, சேனாதிபதி ஏன் என்று தோண்டி துருவ, பலராம்க்கு தலை வலி.

பெண் அவர்கள் வீட்டில் வாழுகிறாள். இப்போது போய் பழசை பேச முடியாதே. அது மட்டும் தானே காரணம் மறுக்க.

ஏதேதோ சொல்லி பார்த்தவர், இறுதியாக மகளுக்கு ஒரு செக் வைத்தார். “சரி போய்ட்டு வா. வந்ததும் பொண்ணு பார்க்க ரெடியா இருக்கணும்” என்றார். 

ஜீவிதா கூலாக தலையாட்டிவிட்டாள். தந்தை அவளை நம்பாமல் பார்த்தார்., ஜீவிதா, கல்பனா இருவரும் கிளம்புவது முடிவானது. கல்யாண் தனியாக அப்பாவிற்கு நன்றி சொன்னான்.

அஜய் ஊருக்கு செல்லும் நாளும் நெருங்கியது. ஆனால் இன்னமும் அஜய் ஜீவிதாவை  அழைக்கவில்லை

எப்போ கிளம்புற, என்ன பிளான்னாவது மெசேஜ் பண்ணலாம் இல்லைபெண் மிகவும் எதிர்பார்த்தாள்.  

நடக்கவே இல்லை. தாரணி தங்கையிடம் ஷாப்பிங் பற்றி கேட்க, “உன் ப்ரெண்ட் என்னை கூப்பிடவே இல்லை. நீ போ பேசாதஎன்று அவளிடம் மல்லுக்கு நின்றாள்.

தாரணி, “நீ பண்ணதுக்கு அவன் உன்னை கூப்பிட வேற செய்யணுமா? போடிஎன்று நண்பனை விட்டு கொடுக்காமல் பேசினாலும், மெல்ல அஜயிடம் தங்கை எதிர்பார்ப்பை பற்றி சொன்னாள்

ஓஹ் நான் கூப்பிட்டு வர அளவு அவ பெரிய ஆள் ஆயிட்டாளா?” அஜய் கேட்டு வைத்துவிட்டான்

அவளின் மேல் இன்னமும் தீராத கோவமும், வருத்தமும்

ஆட்டக்காரி என்னை நேர்ல பார்த்தும் என்கிட்ட பேசலை! அடிக்கடி அவளை நினைத்து கொண்டான்.

மேசேஜ் பண்ணலாம் என்று நினைத்திருந்தவன், அதையும் கை விட்டான்

சகுந்தலா அவளிடம் பேசினார். “உங்களுக்காக மட்டும் தான் வரேன் அத்தைஎன்று தன் கௌரவத்தை காப்பாற்றி  கொண்டாள் பெண்.

அஜய் காதுக்கு இந்த விஷயம் செல்ல, “அடேங்கப்பா. ரொம்ப பெரிய ஆள் தான் மேடம். அவங்களை வரவேற்க கட் அவுட் ஏதும் வைக்கணுமான்னு கேட்டு சொல்லுங்கஎன்றான்.

சகுந்தலா மகன் தோள் தட்டி சிரித்து கொண்டார். 

நேர்ல வரட்டும். இந்த முறை எப்படி என்கிட்ட பேசாம கிளம்புறான்னு நானும் பார்க்கிறேன்!