Advertisement

இப்போது கிருபா அந்த வக்கீல் எண்ணுக்கு அழைத்து பேசினாள் “வரீங்களா.. தாத்தா பாட்டி எல்லாம் கொஞ்சம்.. அவரை பார்க்கனும்ம்ன்னு நினைக்கிறாங்க.. வந்துட்டு போங்களேன்” என்றாள்.

ஆனால், அந்த வக்கீல் “இல்லங்க.. நாளைக்கு அவங்க அப்பாக்கு முக்கியமான டெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கு.. கண்டிப்பா இவர் இருக்கணும், அதான் மூணு மணிக்கே கிளம்பிட்டோம்.” என்றார்.

கிருபா “ஓ.. இப்போது எப்படி இருக்கார்.. சங்கர் மாமா” என்றாள்.

வக்கீல் ட்ரிவிங்கில் இருந்தார். அதனால், ஸ்பீக்கர்ரில் போட்டார் அழைப்பை.

வக்கீல் “இப்போ சொல்லுங்க” என்றார்.

கிருபா “இல்லங்க சர், பாட்டிக்கு வருத்தம்.. இப்போ மாமா எப்படி இருக்காங்க.. யார் பார்த்துக்கிராங்கன்னு கேட்க்கிறாங்க” என்றாள்.

ஈசன் அருகில் அமர்ந்திருந்தவன், இந்த வயதானவரை பார்த்தும் கூட மனம் வரவில்லை ஈசனுக்கு.. இன்னமும் எதோ வஞ்சம் அவனின் மனதில் இருக்கிறது போல, அதனால் அந்த இறுகிய தோன்றம்.. கண்கள்.. வெறித்து எதிரே பார்த்திருந்தது.. இப்போது ஒரு பெண்ணின் மென்மையான குரல் கூட அவனை பாதிக்கவில்லை.. எதையோ தூண்டிவிட்டது போல.. சட்டென “எப்படி இருந்தால் என்ன பண்ண போறீங்க” என்றான், காட்டமான குரலில். 

கிருபா அதிர்ந்து “ஹலோ சர்.. ” என்றாள் யார் பேசுகிறார்கள் என தெரியாமல்.

ஈசன் அமைதியானான்.

கிருபா “இப்போதானேங்க, தாத்தாக்கு, மாமா பற்றி.. தெரியும். என்னதான் இருந்தாலும் சங்கடமாக இருக்காதா.. கொஞ்சம் பொறுமையாக பேசுங்க” என்றாள். வக்கீல்தான் பேசுகிறார் என.

மறுபக்கம் அமைதியானார்.

கிருபா “தாத்தாவும் பாட்டியும், மாமாவை நினைத்து கஷ்ட்டபடுறாங்க. மாமாவை பார்க்கனும்னு நினைக்கிறாங்க.” என சொல்லி நிறுத்தினாள்.

வக்கீல் இப்போது ஈசனை பார்த்தார் ‘பதில் சொல்லு’ என்பது போல.. ஈசன் “க்கும்..” என தொண்டையை சரிசெய்துக் கொண்டு “என்ன திடீர் அக்கறையா” என்றான்.

கிருபா “சர்.. எங்க தாத்தாவை பற்றி என்ன தெரியும். எங்க அந்த ஈசன் கிட்ட கொடுங்க.. நான் அவர்கிட்டவே கேட்டுக்கிறேன்” என்றாள்.

ஈசன் நிமிர்ந்து அமர்ந்தான் “என்னங்க வேணும், நான்தான் பேசுறேன். எங்க அப்பாவை நீங்க பார்ப்பதை நான் விரும்பலை. எதுக்கு பார்க்கணும் முதலில்.” என்றான்.

கிருபா போன் எடுத்துக் கொண்டே பெரியவர்களிடமிருந்து சற்று தள்ளி வந்தாள் “ஈசன்.. இங்க பாருங்க, தாத்தாக்கும் பாட்டிக்கும் அவங்க பையனை பற்றி இப்போதான் தெரிந்திருக்கு. இத்தனைநாள் எங்க வீட்டை பற்றி தெரிந்து எங்களுக்கு தகவல் சொல்லாமல்.. நீங்கதான் நேராக கேஸ் போட்டிருக்கீங்க. சொல்ல போனால் நாங்கள்தான் கோவபடனும். தாத்தாவும் பாட்டியும் ரொம்ப வருத்தபடுறாங்க.” என பேச பேச..

ஈசன் “இங்க பாருங்க.. அந்த ஷண்முகத்திற்கு தெரியும். நான் சொல்லியிருந்தேன். அப்பா உங்களை பார்க்கனும்ன்னு நினைக்கிறார்ன்னு சொன்னேன். சும்மா தெரியாதுன்னு சொல்லாதீங்க.” என்றான் கடுப்பாக.

கிருபாவிற்கு மாமாவை விட்டு கொடுக்க முடியவில்லை.. எதிர்த்தும் பேச முடியவில்லை. அமைதியானாள்.

அவளின் அமைதி பார்த்து, ஈசன் “எங்களுக்கும் போலியான பாசம் வேண்டாம். எங்க அப்பா கடைசி காலத்தில் அந்த வீட்டில் இருக்கணும்.. எங்களுக்கு வீடு வேண்டும். அதுமட்டும் போதும். நான் நம்ப வைச்சிக்கிறேன் என் அப்பாவை. நீங்க வீட்டை கொடுத்திடுங்க. ம்.. நேரம் நிறைய இல்லைங்க..” என்றவன் ஒரு பெருமூச்சு விட்டான். பின் “நீங்க யாரு.. அவரோட பொண்ணா” என்றான்.

கிருபா “யாரோட பொண்ணு” என்றாள் அவன் பேசியதை க்ரகிக்க முடியாமல்.

ஈசன் “சண்முகம் பொண்ணா” என்றான்.

கிருபா “இல்லைங்க.. அவங்க தங்கை பொண்ணு. ஒருநிமிஷம்.. நீங்க சொத்தைத்தான் கேட்க்கிறீங்க. உங்களுக்கு தாத்தா பாட்டியை.. பற்றி கவலையில்லை.. ம்.. அப்படிதானே” என்றாள்.

ஈசன் “நான் ஏன் கவலை படனும்.. எனக்கு எங்க அப்பா பற்றிதான் கவலை. மற்றவர்களை பற்றி நினைக்ககூட எனக்கு நேரமில்லை.. அவசியமும் இல்லை” என்றவன்.. அழைப்பை துண்டித்துவிட்டான்.

சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் கிருபா. அவளுள் பல யோசனை. பாட்டி, மாமாவை பார்க்கவில்லை என்றால்.. என்ன ஆவார் என தோன்றியது. உண்ணமாட்டார்.. உறங்கமாட்டார்.. அவரால் முடியாது. அதனால், மீண்டும் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

அங்கே, காரில் சென்றுக் கொண்டிருந்த ஈசனின் மனதில்.. அதற்கு எதிர்மறையான எண்ணம்.. ‘திடீர்ன்னு பார்க்கனும்ன்னு சொல்லுவாங்க.. எங்க அப்பாவையும் எங்களையும் ஒதுக்கி வைச்சவங்க.. எதுக்கு பார்க்கணும்..’ எனத்தான் எண்ணம். ஆனாலும், இதற்குதான் நான் கேஸ் கொடுத்தது.. என மனதில் உண்மையும் வந்து நின்றது. 

ஆனால், அந்த ஷண்முகம்.. அவரை நினைத்தால்.. கோவமாக வந்தது. பெரிய குழப்பத்தில் இருந்தான் ஈசன். காலையில் அப்பாவிற்கு.. அந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் என மனதில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனாலும், அந்த டெஸ்ட் எடுக்க.. அப்பாவின் மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் என மருத்துவர்கள் சொன்னதும் நினைவில் வந்தது. 

அப்பா இப்போதெல்லாம் அடிக்கடி சுயநினைவை இழக்கிறார் என புரிகிறது அவனுக்கு. என்னமோ ஆவேசம் என் அப்பாவை எப்படி வருந்த வைக்கலாம் என. அதனால் தாத்தாவின் பேரில் கேஸ் கொடுத்துவிட்டான். இப்போது, அவர்கள் பாசமாக கேட்கவும்.. இது பொய்யோ என ஒரு எண்ணம். அவனிற்கு, இப்படி இவர்கள் வந்து நிற்க வேண்டும்.. அப்பாவை பார்க்க வேண்டும்.. என்றுதான் எண்ணம். அதற்குதான் அவன் முயன்றான். அதில் சண்முகம் பேசிய பேச்சில்.. கொஞ்சம் வஞ்சம் வந்துவிட்டது.. அதனால், வீடு மட்டும் போதும்.. என கேஸ் கொடுத்து விட்டான். புரியவில்லை எதுவும்.. இப்போது  கண்களை மூடி அப்படியே சாய்ந்துக் கொண்டான் தியாகீசன். 

சங்கர் நன்றாகத்தான் இருந்தார். மனையாள் ரேவதி இறந்தது முதல் எதோ கொஞ்சம் மனதளவில் பாதித்திருந்தார். உண்டால் சரியாக செரிப்பதில்லை.. அடிக்கடி வாமிட்.. உறக்கம் கொடுவது.. என இருந்தார். 

அப்போதெல்லாம் அடிக்கடி பிள்ளைகளிடம் சொல்லுவதுண்டு ‘உன் அம்மாவுக்கு நான் உரிய அங்கீகாரம் கொடுக்கலை.. அதை அவளும் வாய்விட்டு கேட்க்கலை. ஆனால், என்றாவது, எங்க வீடு என்னை ஏத்துக்குவாங்கன்னு நினைச்சிருந்தேன். ஆனால், அப்படி இல்லாமலே போய் சேர்ந்துட்டா அவள். நான்தான் எல்லாத்துக்கும் காராணம். அப்பாவும் மன்னிக்கலை. என் மனைவிக்கும் அங்கீகாரம் கிடைக்கலை.’ என ஏதேதோ பேசுவார். ‘தப்பு செய்துட்டேன்.. என்னை மன்னிச்சிடு ரேவதி.. அப்பா மன்னிச்சிடுங்க’ என புலம்புவார். அதையெல்லாம் கண்டு கேட்டிருக்கின்றனர் பிள்ளைகளான ஈசனும் சஹானாவும்.

மனது இந்த காதல் திருமணத்தால் பாதித்திருக்கிறது என எண்ணி.. கோவிலுக்கு கூட்டி செல்லுவது.. சரியான உணவு கொடுப்பது என அப்பாவை பார்த்துக் கொண்டனர் பிள்ளைகள். ஆனாலும், ஆறுமாதம் முன்பு அதிக வயிற்று போக்கு என மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போதுமுதல், சங்கருக்கு பயம் அதிகமாக.. இன்னும் அதிகமாக வாய்விட்டு தனியாக பேச தொடங்கினார் சங்கர்.

அப்போதுதான் ஈசன், தெரிந்த அரசு அலுவலர்கள் மூலம்.. ஷண்முகம் பற்றி விசாரித்து போன் நம்பர் வாங்கி.. பெரியப்பாவை அழைத்து பேசினான். ஷண்முகம் சொல்லுவது போல ஹார்ஷ்ஷாக இல்லை.. நீங்கள் அப்பாவை பார்த்திருக்கலாமே.. அப்படி என்ன தவறு செய்வ்துவிட்டார்.. நீங்க ஒருமுறை பேசுங்கள் என வேண்டுதலாகதான் பேசினான்.

ஆனால், ஷண்முகம் அந்த உறவை அப்போதே துண்டிக்க எண்ணினார். அதனால், பதில் சரியாக சொல்லவில்லை. திட்டிவிட்டுவிட்டார்.

இந்த நினைவோடு.. ஈசனின் பயணம் தொடர்ந்தது.

வழியில் உண்பதற்காக நிறுத்தினார் வக்கீல். ஈசனுக்கு உறக்கமில்லை இந்த பத்துநாட்களாக. என்ன செய்வது.. என்ன செய்வது.. என யோசனை. அப்பாவிற்கும் இந்த பத்துநாட்களுக்கு முன்தான் தெரியும் கேசர் என. அதுவும் நன்றாக பரவிவிட்டதென. தனியார் மருத்துவமனையில்.. அனுமதித்திருந்தனர்.

தங்கைக்கு சரியாக விவரம் சொல்லவில்லை ஈசன். சஹானா வேலைக்கு செல்லுகிறாள். அவளும் பாதிக்கபடுவாள் என ஏதும் சொல்லவில்லை. பத்துநாட்களாக உறக்கமில்லை. சரியான உணவில்லை. ஒருவாரமாக அலுவலகத்திற்கு விடுமுறையும் எடுத்துவிட்டான். எந்நேரமும் அப்பாவை கவனிப்பதே வேலை. 

சங்கர், பத்துநாட்களாக அடிக்கடி மூச்சு விட சிரம்மபடுகிறார்.. நிறைய உடல் உபாதைகள். அவரோடு பேச.. மருந்து உட்கொள்ள வைக்க.. என ஈசனுக்கு ஒவ்வொருநாளும் போராட்டம்தான். 

இந்த வக்கீல், அவனின் கல்லூரி சீனியரின் தம்பி அதனால், இவனின் நிலை தெரியும். எனவே, கார் ஒட்டி வந்துக் கொண்டிருந்தான்.

இப்போது இரவு உண்பதற்காக நிறுத்தினான்.

இருவரும் உண்டனர்.

வக்கீல் “ஈஷா.. ஏன் காம்ப்ளிகேட் செய்துக்கிற.. அப்பாவுக்கு நிம்மதி வேண்டும்ன்னுதானே கேஸ். அந்த தாத்தா பாட்டி வந்து பார்த்தாலே.. அது நடக்கும். அந்த பொண்ணு.. அவங்க சார்ப்பாக.. பேசி கேட்க்கிறாங்க.. உங்க அப்பாவை பார்க்க. அதனால், வர சொல்லுடா.. அவங்களை. நீ சொல்ல வேண்டாம். நான் சொல்லிடுறேன். அங்கிள் நிலை உனக்கே தெரியும். அதனால், சீக்கிரம் எல்லாம் நடந்தால்.. ஒகேவாக இருக்கும்” என்றான்.

ஈசனுக்கு.. அதற்குமேல் தொண்டையில் உணவு இறங்கவில்லை. சரி என்பதாக தலையசைத்தான்.

வக்கீல் “சாப்பிடு..” என்றான்.

ஈசன் ஏதும் பேசமால அப்படியே அமர்ந்துக் கொண்டான்.

“எங்கே செல்லும் இந்த பாதை..

யாரோ யாரோ அறிவாரோ..

காலம் காலம் சொல்ல வேண்டும்..

யாரோ உண்மை அறிவாரோ”

வக்கீல் ஒரு ஜூஸ் ஆர்டர் செய்தான் நண்பனுக்கு.

இருவரும் உண்டு முடித்து வெளியே வந்தனர்.

வக்கீல் இரண்டு மணி நேரத்திற்கு முன் வந்த எண்ணுக்கு அழைத்தான்.

கிருபா எடுத்து “ஹலோ” என்றாள்.

வக்கீல் “நான் ஈசன் அட்வகேட் பேசறேன்ங்க.. சங்கர் அங்கிள்.. இந்த ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கார்.. வாங்க வந்து பாருங்க, அவருக்கு ஆறுதால இருக்கும். ஈசன் பேசினதை மனதில் வைக்காதீங்க. இது என் நம்பர்.. சென்னை வந்துட்டு கூப்பிடுங்க.” என்றான் தன்மையாக.

கிருபா “நன்றிங்க.. பாட்டி சாப்பிடவேயில்லை இன்னும் அழுதுட்டு தான் இருக்காங்க.. நாங்க வந்து பார்க்கிறோம்.” என்றாள்.

பின் அவளே “சர்.. ஈசன், அவரோட போன் நம்பர் அனுப்புங்க.. தாத்தா பேசுவாங்க. அதான்” என்றாள்.

வக்கீல் “கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

Advertisement